5858. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ خَرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ بِنَعْلَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَقَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ هَذِهِ نَعْلُ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 41 ஒரு காலணியில் இரண்டு வார் களும் இருக்கலாம்; ஒரே வாரும் இருக்கலாம்.
5858. ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணி களை எங்களுக்குக் காட்டினார்கள்.

(பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘இதுதான் நபி (ஸல்) அவர்களின் காலணியாகும்” என்று சொன்னார்கள்.74

அத்தியாயம் : 77
5859.
பாடம்: 42 பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்புநிறக் கூடாரம்
5859. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத் தில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன். மக்கள் அந்தத் தண்ணீருக்காகப் போட்டியிட்டனர்.

அதில் சிறிது கிடைக்கப்பெற்றவர் அதைத் (தமது மேனியில்) தடவிக் கொண்டார். அதிலிருந்து சிறிதும் கிடைக் கப் பெறாதவர் தம் தோழர் கையிலிருந்த ஈரத்தை எடுத்து (தடவி)க்கொண்டார்.75


அத்தியாயம் :
5860. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الأَنْصَارِ، وَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ.
பாடம்: 42 பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்புநிறக் கூடாரம்
5860. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப் பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டி னார்கள்.76

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5861. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَحْتَجِرُ حَصِيرًا بِاللَّيْلِ فَيُصَلِّي، وَيَبْسُطُهُ بِالنَّهَارِ فَيَجْلِسُ عَلَيْهِ، فَجَعَلَ النَّاسُ يَثُوبُونَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُصَلُّونَ بِصَلاَتِهِ حَتَّى كَثُرُوا فَأَقْبَلَ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ خُذُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دَامَ وَإِنْ قَلَّ "".
பாடம்: 43 பாய் போன்றவற்றின் மீது அமர் வது
5861. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத் தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழு வார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக்கொண்டு அதன்மீது அமர் வார்கள்.

மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகிவிடவே, நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படையமாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்” என்று சொன்னார்கள்.77

அத்தியாயம் : 77
5862. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ أَبَاهُ، مَخْرَمَةَ قَالَ لَهُ يَا بُنَىَّ إِنَّهُ بَلَغَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ فَهْوَ يَقْسِمُهَا، فَاذْهَبْ بِنَا إِلَيْهِ، فَذَهَبْنَا فَوَجَدْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَنْزِلِهِ، فَقَالَ لِي يَا بُنَىَّ ادْعُ لِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَعْظَمْتُ ذَلِكَ. فَقُلْتُ أَدْعُو لَكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا بُنَىَّ إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ. فَدَعَوْتُهُ فَخَرَجَ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرٌ بِالذَّهَبِ، فَقَالَ "" يَا مَخْرَمَةُ هَذَا خَبَأْنَاهُ لَكَ "". فَأَعْطَاهُ إِيَّاهُ.
பாடம்: 44 பொன் பித்தான் பொருத்தப்பட்ட ஆடை
5862. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டி ருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டி யுள்ளது. ஆகவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று சொன்னார்கள்.

அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘‘உங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘என் அன்பு மகனே! (நபி -ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்” என்று சொல்ல, நான் நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் பொன் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப் பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டுவந்து, ‘‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்” என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள்.78

அத்தியாயம் : 77
5863. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ سَبْعٍ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ ـ أَوْ قَالَ حَلْقَةِ الذَّهَبِ ـ وَعَنِ الْحَرِيرِ، وَالإِسْتَبْرَقِ، وَالدِّيبَاجِ، وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ، وَالْقَسِّيِّ، وَآنِيَةِ الْفِضَّةِ، وَأَمَرَنَا بِسَبْعٍ بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجَنَائِزِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَرَدِّ السَّلاَمِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِبْرَارِ الْمُقْسِمِ، وَنَصْرِ الْمَظْلُومِ.
பாடம்: 45 பொன் மோதிரங்கள்
5863. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பொன் மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்க ளுக்குத் தடை விதித்தார்கள்.

மேலும், நோயாளிகளை நலம் விசாரிப் பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் உங்க ளுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்குப் பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவி புரிவது ஆகிய ஏழு (நற்)செயல் களைக் கடைப்பிடிக்குமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.79


அத்தியாயம் : 77
5864. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ. وَقَالَ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ سَمِعَ النَّضْرَ سَمِعَ بَشِيرًا مِثْلَهُ.
பாடம்: 45 பொன் மோதிரங்கள்
5864. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரத்தை அணிய வேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 77
5865. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، فَاتَّخَذَهُ النَّاسُ، فَرَمَى بِهِ، وَاتَّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ أَوْ فِضَّةٍ.
பாடம்: 45 பொன் மோதிரங்கள்
5865. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து)கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் தமது பொன் மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள்.80

அத்தியாயம் : 77
5866. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَاتَّخَذَ النَّاسُ مِثْلَهُ، فَلَمَّا رَآهُمْ قَدِ اتَّخَذُوهَا رَمَى بِهِ، وَقَالَ "" لاَ أَلْبَسُهُ أَبَدًا "". ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ الْفِضَّةِ. قَالَ ابْنُ عُمَرَ فَلَبِسَ الْخَاتَمَ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ ثُمَّ عُثْمَانُ، حَتَّى وَقَعَ مِنْ عُثْمَانَ فِي بِئْرِ أَرِيسَ.
பாடம்: 46 வெள்ளி மோதிரம்
5866. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பொன் மோதிரம்’ அல்லது ‘வெள்ளி மோதிரம்’ ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை) பொறித்தார்கள். மக்களும் அதைப் போன்று மோதிரத்தைத் தயாரித்து (அணிந்து)கொண்டனர்.

மக்கள் அதைத் தயாரித்து (அணிந்து)கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது தமது மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டார்கள். பிறகு (அதை) உமர் (ரலி) அவர்களும், பிறகு உஸ்மான் (ரலி) அவர்களும் அணிந்துகொண்டார்கள். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.81

அத்தியாயம் : 77
5867. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَنَبَذَهُ فَقَالَ "" لاَ أَلْبَسُهُ أَبَدًا "". فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 47
5867. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். மக்களும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.


அத்தியாயம் : 77
5868. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا، ثُمَّ إِنَّ النَّاسَ اصْطَنَعُوا الْخَوَاتِيمَ مِنْ وَرِقٍ وَلَبِسُوهَا، فَطَرَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمَهُ، فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ وَزِيَادٌ وَشُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ ابْنُ مُسَافِرٍ عَنِ الزُّهْرِيِّ أَرَى خَاتَمًا مِنْ وَرِقٍ.
பாடம்: 47
5868. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டனர்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5869. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حُمَيْدٌ، قَالَ سُئِلَ أَنَسٌ هَلِ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا قَالَ أَخَّرَ لَيْلَةً صَلاَةَ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ. قَالَ "" إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا "".
பாடம்: 48 மோதிர(க்கல் பதிக்கும்) குமிழ்
5869. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.82


அத்தியாயம் : 77
5870. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ حُمَيْدًا، يُحَدِّثُ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ خَاتَمُهُ مِنْ فِضَّةٍ وَكَانَ فَصُّهُ مِنْهُ. وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 48 மோதிர(க்கல் பதிக்கும்) குமிழ்
5870. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5871. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلاً، يَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ جِئْتُ أَهَبُ نَفْسِي. فَقَامَتْ طَوِيلاً فَنَظَرَ وَصَوَّبَ، فَلَمَّا طَالَ مُقَامُهَا فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا، إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ. قَالَ "" عِنْدَكَ شَىْءٌ تُصْدِقُهَا "". قَالَ لاَ. قَالَ "" انْظُرْ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ وَاللَّهِ إِنْ وَجَدْتُ شَيْئًا. قَالَ "" اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ قَالَ لاَ وَاللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ. وَعَلَيْهِ إِزَارٌ مَا عَلَيْهِ رِدَاءٌ. فَقَالَ أُصْدِقُهَا إِزَارِي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِزَارُكَ إِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَىْءٌ، وَإِنْ لَبِسْتَهُ لَمَ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَىْءٌ "". فَتَنَحَّى الرَّجُلُ فَجَلَسَ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَقَالَ "" مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "". قَالَ سُورَةُ كَذَا وَكَذَا لِسُوَرٍ عَدَّدَهَا. قَالَ "" قَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 49 இரும்பு மோதிரம்
5871. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள)வே வந்துள்ளேன்” என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள்.

அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டி ருப்பதைக் கண்ட ஒரு மனிதர் ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத்தாருங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இவருக்கு மணக்கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘ஏதுமில்லை” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்” என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, ‘‘இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை” என்றார்.

அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டுகூட இருக்கவில்லை. அந்த மனிதர், ‘‘எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக்கொடையாக வழங்குகிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியா? அதை இவள் அணிந்துகொண்டால், உனக்கு அதில் ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால், இவளுக்கு அதில் ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார்.

பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல, அவரும் அழைத்துவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனனமாக) உள்ளது?” என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்துவைத்தேன்” என்று சொன்னார்கள்.83

அத்தியாயம் : 77
5872. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى رَهْطٍ أَوْ أُنَاسٍ مِنَ الأَعَاجِمِ، فَقِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلاَّ عَلَيْهِ خَاتَمٌ، فَاتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَكَأَنِّي بِوَبِيصِ أَوْ بِبَصِيصِ الْخَاتَمِ فِي إِصْبَعِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ فِي كَفِّهِ.
பாடம்: 50 மோதிரத்தில் இலச்சினை (சின்னம்) பதித்தல்
5872. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (கிழக்கு ரோம் நாட்டைச் சேர்ந்த) ‘ஒரு குழுவினருக்கு’ அல்லது ‘மக்களில் சிலருக்கு’க் கடிதம் எழுத விரும்பினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லப்பட்டது.

உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்) என்று இலச் சினை பொறித்தார்கள். இப்போதும் நான் ‘நபி (ஸல்) அவர்களின் விரலில்’ அல்லது ‘அவர்களின் கையில்’ அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.


அத்தியாயம் : 77
5873. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ، وَكَانَ فِي يَدِهِ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ أَبِي بَكْرٍ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُمَرَ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُثْمَانَ، حَتَّى وَقَعَ بَعْدُ فِي بِئْرِ أَرِيسَ، نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
பாடம்: 50 மோதிரத்தில் இலச்சினை (சின்னம்) பதித்தல்
5873. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அது (அவர் களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களது கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது.

இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்) என்றிருந்தது.84

அத்தியாயம் : 77
5874. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا قَالَ "" إِنَّا اتَّخَذْنَا خَاتَمًا، وَنَقَشْنَا فِيهِ نَقْشًا، فَلاَ يَنْقُشْ عَلَيْهِ أَحَدٌ "". قَالَ فَإِنِّي لأَرَى بَرِيقَهُ فِي خِنْصَرِهِ.
பாடம்: 51 சுண்டுவிரலில் மோதிரம் அணிதல்
5874. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். ஆகவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கின்றேன்.85

அத்தியாயம் : 77
5875. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ قِيلَ لَهُ إِنَّهُمْ لَنْ يَقْرَءُوا كِتَابَكَ إِذَا لَمْ يَكُنْ مَخْتُومًا. فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ.
பாடம்: 52 முத்திரை பதிப்பதற்காக, அல்லது வேதக்காரர்கள் உள்ளிட்டோருக்கு மடல் வரைவதற்காக மோதிரம் தயாரித்(து அணி)தல்86
5875. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) கிழக்கு ரோமானியருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமானியர் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களது கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது.87

அத்தியாயம் : 77
5876. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، جَعَلَ فَصَّهُ فِي بَطْنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ، فَاصْطَنَعَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ، فَرَقِيَ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ "" إِنِّي كُنْتُ اصْطَنَعْتُهُ، وَإِنِّي لاَ أَلْبَسُهُ "". فَنَبَذَهُ فَنَبَذَ النَّاسُ. قَالَ جُوَيْرِيَةُ وَلاَ أَحْسِبُهُ إِلاَّ قَالَ فِي يَدِهِ الْيُمْنَى.
பாடம்: 53 மோதிரக் குமிழை உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்து கொள்வது
5876. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) பொன் மோதிரங்களைச் செய்தனர்.

(இதற்கிடையில் ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘நான் அதைச் செய்திருந்தேன். ஆனால், அதை நான் இனி அணியமாட்டேன்” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.88

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘‘(நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தமது வலக் கையில் அணிந்துகொண்டார்கள்” என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன்.

அத்தியாயம் : 77
5877. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقَشَ فِيهِ، مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. وَقَالَ "" إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ وَرِقٍ، وَنَقَشْتُ فِيهِ، مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَلاَ يَنْقُشَنَّ أَحَدٌ عَلَى نَقْشِهِ "".
பாடம்: 54 ‘‘எனது மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
5877. அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறித்தார்கள்.

மேலும், ‘‘நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என இலச்சினை பொறித் துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.89

அத்தியாயம் : 77