5838. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ ابْنِ عَازِبٍ، قَالَ نَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمَيَاثِرِ الْحُمْرِ وَالْقَسِّيِّ.
பாடம்: 28 ‘கஸ்’ வகைப் பட்டு அணிவது54 அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘ ‘கஸ்’ வகைத் துணி என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது ஷாம் (சிரியா) நாட்டிலிருந்தோ எகிப்திலிருந்தோ எங்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்பு களைப் போன்று வரிவரியாகக் கோடுகள் இருக்கும்; அதில் பட்டும் கலந்திருக்கும். நாரத்தையைப் போன்ற (தடித்த வளைந்த) கோடுகள் அதில் இருக்கும். ‘மீஸரா’ என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக மென்பட்டுத் திண்டுகளைப் போன்று தயாரித்துவந்த விரிப்புகளாகும்” என்று பதிலளித்தார்கள். ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்கள் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸில் (பின்வருமாறு) காணப்படுகிறது: ‘கஸ்’ வகைத் துணி என்பது விலா எலும்புகளைப் போன்று வரிவரியாகக் கோடுகள் போடப்பட்ட எகிப்திலிருந்து கொண்டுவரப்படுகின்ற ஒரு வகைத் துணியாகும். அதில் பட்டு கலந்திருக்கும். ‘மீஸரா’ என்பது விலங்குகளின் தோல்களாகும். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்: ‘மீஸரா’ தொடர்பாக ஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) கருத்தே அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளதாகும்; (யஸீத் அவர்கள் கூறியுள்ள விலங்குகளின் தோல் என்பதை விடச்) சரியானதும் ஆகும்.
5838. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும் (‘மீஸரா), ‘கஸ்’ வகைப் பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 77
5839. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ وَعَبْدِ الرَّحْمَنِ فِي لُبْسِ الْحَرِيرِ لِحِكَّةٍ بِهِمَا.
பாடம்: 29 சொறிசிரங்குக்காக ஆண்கள் பட்டு அணிய அனுமதிக்கப்படுவர்.
5839. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறிசிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.55

அத்தியாயம் : 77
5840. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كَسَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم حُلَّةً سِيَرَاءَ، فَخَرَجْتُ فِيهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَّقْتُهَا بَيْنَ نِسَائِي.
பாடம்: 30 பெண்களுக்குப் பட்டாடை (அனுமதிக்கப்படும்).56
5840. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக்குறியை நான் கண்டேன். ஆகவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.57

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 77
5841. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ ابْتَعْتَهَا، تَلْبَسُهَا لِلْوَفْدِ إِذَا أَتَوْكَ وَالْجُمُعَةِ. قَالَ "" إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ بَعْدَ ذَلِكَ إِلَى عُمَرَ حُلَّةَ سِيَرَاءَ حَرِيرٍ، كَسَاهَا إِيَّاهُ فَقَالَ عُمَرُ كَسَوْتَنِيهَا وَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ فَقَالَ "" إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَبِيعَهَا أَوْ تَكْسُوَهَا "".
பாடம்: 30 பெண்களுக்குப் பட்டாடை (அனுமதிக்கப்படும்).56
5841. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக் கிழமையின்போதும் அணிந்துகொள்ள லாமே” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மறுமையில்) எந்தப் பேறும் இல்லாதவர்தான் இதை (இம்மையில்) அணிவார்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர் (ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஏற்றாற்போன்று கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!” என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தது அதை நீங்கள் விற்றுக்கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத்தரவோதான்” என்று பதிலளித்தார்கள்.58


அத்தியாயம் : 77
5842. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّهُ رَأَى عَلَى أُمِّ كُلْثُومٍ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُرْدَ حَرِيرٍ سِيَرَاءَ.
பாடம்: 30 பெண்களுக்குப் பட்டாடை (அனுமதிக்கப்படும்).56
5842. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள்59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை நான் கண்டேன்.

அத்தியாயம் : 77
5843. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَبِثْتُ سَنَةً وَأَنَا أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ عَنِ الْمَرْأَتَيْنِ اللَّتَيْنِ تَظَاهَرَتَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَعَلْتُ أَهَابُهُ، فَنَزَلَ يَوْمًا مَنْزِلاً فَدَخَلَ الأَرَاكَ، فَلَمَّا خَرَجَ سَأَلْتُهُ فَقَالَ عَائِشَةُ وَحَفْصَةُ ـ ثُمَّ قَالَ ـ كُنَّا فِي الْجَاهِلِيَّةِ لاَ نَعُدُّ النِّسَاءَ شَيْئًا، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ وَذَكَرَهُنَّ اللَّهُ، رَأَيْنَا لَهُنَّ بِذَلِكَ عَلَيْنَا حَقًّا، مِنْ غَيْرِ أَنْ نُدْخِلَهُنَّ فِي شَىْءٍ مِنْ أُمُورِنَا، وَكَانَ بَيْنِي وَبَيْنَ امْرَأَتِي كَلاَمٌ فَأَغْلَظَتْ لِي فَقُلْتُ لَهَا وَإِنَّكِ لَهُنَاكِ. قَالَتْ تَقُولُ هَذَا لِي وَابْنَتُكَ تُؤْذِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَتَيْتُ حَفْصَةَ فَقُلْتُ لَهَا إِنِّي أُحَذِّرُكِ أَنْ تَعْصِي اللَّهَ وَرَسُولَهُ. وَتَقَدَّمْتُ إِلَيْهَا فِي أَذَاهُ، فَأَتَيْتُ أُمَّ سَلَمَةَ فَقُلْتُ لَهَا. فَقَالَتْ أَعْجَبُ مِنْكَ يَا عُمَرُ قَدْ دَخَلْتَ فِي أُمُورِنَا، فَلَمْ يَبْقَ إِلاَّ أَنْ تَدْخُلَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَزْوَاجِهِ، فَرَدَّدَتْ، وَكَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِذَا غَابَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَشَهِدْتُهُ أَتَيْتُهُ بِمَا يَكُونُ، وَإِذَا غِبْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَشَهِدَ أَتَانِي بِمَا يَكُونُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ مَنْ حَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَدِ اسْتَقَامَ لَهُ، فَلَمْ يَبْقَ إِلاَّ مَلِكُ غَسَّانَ بِالشَّأْمِ، كُنَّا نَخَافُ أَنْ يَأْتِيَنَا، فَمَا شَعَرْتُ إِلاَّ بِالأَنْصَارِيِّ وَهْوَ يَقُولُ إِنَّهُ قَدْ حَدَثَ أَمْرٌ. قُلْتُ لَهُ وَمَا هُوَ أَجَاءَ الْغَسَّانِيُّ قَالَ أَعْظَمُ مِنْ ذَاكَ، طَلَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ. فَجِئْتُ فَإِذَا الْبُكَاءُ مِنْ حُجَرِهَا كُلِّهَا، وَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ صَعِدَ فِي مَشْرُبَةٍ لَهُ، وَعَلَى باب الْمَشْرُبَةِ وَصِيفٌ فَأَتَيْتُهُ فَقُلْتُ اسْتَأْذِنْ لِي. فَدَخَلْتُ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، وَتَحْتَ رَأْسِهِ مِرْفَقَةٌ مِنْ أَدَمٍ، حَشْوُهَا لِيفٌ، وَإِذَا أُهُبٌ مُعَلَّقَةٌ وَقَرَظٌ، فَذَكَرْتُ الَّذِي قُلْتُ لِحَفْصَةَ وَأُمِّ سَلَمَةَ، وَالَّذِي رَدَّتْ عَلَىَّ أُمُّ سَلَمَةَ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَبِثَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً، ثُمَّ نَزَلَ.
பாடம்: 31 நபி (ஸல்) அவர்கள் தமது வசதிக்கேற்பப் பயன்படுத்தி வந்த ஆடைகளும் விரிப்புகளும்60
5843. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘நபி (ஸல்) அவர்களுக்கெதிராக (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகை யில்) கூடிப்பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்?” என உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டுமென ஓராண்டு காலமாக நான் (நினைத்துக் கொண்டு) இருந்தேன். ஆயினும், உமர் (ரலி) அவர்கள்மேல் (மரியாதை கலந்த) அச்சம் கொள்ளலானேன்.

இவ்வாறிருக்கையில் (ஹஜ்ஜுக்கு வந்த) உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் (‘மர்ருழ் ழஹ்ரான்’ எனும்) ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது (தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தடிக்குச் சென்றார்கள். அவர்கள் (தமது தேவையை முடித்துக்கொண்டு) வந்தபோது அவர்களிடம் நான் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவுமே (அந்த இரு துணைவியர்)” என்று பதிலளித்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே மதித்த தில்லை. இஸ்லாம் வந்து, அல்லாஹ் பெண்களைக் குறித்து (அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் பேணுமாறு தனது வேதத்தில்) குறிப்பிட்ட போதுதான் பெண்களுக்கு எங்கள்மீதுள்ள உரிமையை அறிந்துகொண்டோம். ஆயினும், எங்கள் விவகாரங்கள் எதிலும் தலையிட பெண்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

(இந்நிலையில் ஒருநாள்) எனக்கும் என் மனைவிக்குமிடையே (காரசாரமான) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னைக் கடுமையாகப் பேசிவிட்டார். உடனே நான், ‘‘நீ அங்கேயே (உன் இடத்திலேயே) இரு! (என் விஷயத்தில் தலையிடாதே)” என அவரிடம் சொன் னேன். அவர் ‘‘என்னிடம்தான் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். (ஆனால்,) உங்கள் புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) நபி (ஸல்) அவர்களை (எதிர்த்துப் பேசி) மன வேதனைக்குள்ளாக்கியுள்ளார்” என்றார்.

உடனே நான் (என் புதல்வி) ஹஃப்ஸா விடம் சென்று, ‘‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்ய வேண்டாமென உன்னை நான் எச்சரிக்கி றேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களை மன வேதனைக்குள்ளாக்கிய விஷயத்தில் முதலில் நேராக ஹஃப்ஸா விடமே சென்றேன். அடுத்து (நபி (ஸல்) அவர்களின் இன்னொரு துணைவியாரும் என் உறவினருமான) உம்மு சலமாவிடம் சென்று (ஹஃப்ஸாவிடம் சொன்னதைப் போன்றே) கூறினேன். உடனே அவர், ‘‘உமரே! உம்மைக் கண்டு நான் வியப்புறுகிறேன். எங்கள் விவகாரங்கள் அனைத்திலும் நீங்கள் தலையிட்டுவிட்டு, இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையிலான விவகாரத்தையும்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை” என்று கூறி (என்னை) மடக்கிவிட்டார்.

மேலும், அன்சாரிகளில் (எனக்கு நண்பர்) ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அவர் இல்லாமல்போய் நான் அங்கு இருந்தால், அங்கு நடப்பதை நான் அவருக்குத் தெரிவிப்பேன். (இதைப் போன்றே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் நான் இல்லாமல் அவர் இருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அவர் எனக்குத் தெரிவிப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றியிருந்த (அரசர்கள் மற்றும் குலத் தலை)வர்கள் அனைவரும் அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். (அன்றைய) ஷாம் நாட்டின் ‘ஃகஸ்ஸான்’ அரசன் ஒரு வனைத் தவிர வேறு யாரும் (பகைமை கொண்டு) இருக்கவில்லை. அவன் (எங்கள்மீது போர் தொடுக்க) வரலாம் என நாங்கள் அச்சம் கொண்டிருந்தோம்.

(இந்நிலையில் ஒருநாள்) அந்த அன்சாரி (நண்பர்) திடீரென்று வந்து ‘‘ஒரு சம்பவம் நடந்துவிட்டது” என்றார். நான் ‘‘என்ன அது? ஃகஸ்ஸானிய(மன்ன)ன் (படையெடுத்து)வந்துவிட் டானா?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘‘அதைவிட மிகப் பெரிய சம்பவம் நடந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்றார்.

உடனே நான் (புறப்பட்டு) வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரின் அறைகளி லிருந்தும் அழுகைச் சத்தம் வந்துகொண்டி ருந்தது. நபி (ஸல்) அவர்களோ தமது மாடியறைக்கு ஏறிவிட்டிருந்தார்கள். மாடியின் தலைவாசலில் பணியாளர் (ரபாஹ்) அமர்ந்துகொண்டிருந்தார்.

நான் அவரிடம் வந்து, ‘‘எனக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் செல்ல) அனுமதி கேள்” என்றேன். (அவரும் உள்ளே சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் (படியிலேறி அறைக்குள்) சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் (ஈச்சம்) பாயில் (படுத்து) இருந்தார்கள். அந்தப் பாய் அவர்களின் விலாவில் சுவடு பதித்திருந்தது.

அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அங்கு (அவர்களது தலைமாட்டில்) பதனிடப்படாத தோல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. (கால்மாட்டில்) கருவேல இலைகள் இருந்தன. அப்போது ஹஃப்ஸா, உம்மு சலமா ஆகியோரிடம் நான் கூறியதையும், உம்மு சலமா என்னிடம் கூறிய பதிலையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச்சொன்னேன்.

அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (அந்த மாடியறையில்) நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் (தங்கி) இருந்தார்கள். பிறகு (அங்கிருந்து) இறங்கினார்கள்.61


அத்தியாயம் : 77
5844. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ وَهْوَ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الْخَزَائِنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ، كَمْ مِنْ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ يَوْمَ الْقِيَامَةِ "". قَالَ الزُّهْرِيُّ وَكَانَتْ هِنْدٌ لَهَا أَزْرَارٌ فِي كُمَّيْهَا بَيْنَ أَصَابِعِهَا.
பாடம்: 31 நபி (ஸல்) அவர்கள் தமது வசதிக்கேற்பப் பயன்படுத்தி வந்த ஆடைகளும் விரிப்புகளும்60
5844. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனை கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட கருவூலங்கள்தான் என்ன! (என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக்கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகின்றவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்து ணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.62

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் சட்டைக்கைகளில் (அவை விசாலமானவையாக இருந்ததால் கை வெளியே தெரிந்துவிடுமோ என அஞ்சி) தம் விரல்களுக்கிடையே பொத்தான்கள் வைத்திருப்பார்கள்.

அத்தியாயம் : 77
5845. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَتْنِي أُمُّ خَالِدٍ بِنْتُ خَالِدٍ، قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ قَالَ "" مَنْ تَرَوْنَ نَكْسُوهَا هَذِهِ الْخَمِيصَةَ "". فَأُسْكِتَ الْقَوْمُ. قَالَ "" ائْتُونِي بِأُمِّ خَالِدٍ "". فَأُتِيَ بِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَلْبَسَهَا بِيَدِهِ وَقَالَ "" أَبْلِي وَأَخْلِقِي "". مَرَّتَيْنِ فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَلَمِ الْخَمِيصَةِ، وَيُشِيرُ بِيَدِهِ إِلَىَّ وَيَقُولُ "" يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَا "". وَالسَّنَا بِلِسَانِ الْحَبَشِيَّةِ الْحَسَنُ. قَالَ إِسْحَاقُ حَدَّثَتْنِي امْرَأَةٌ مِنْ أَهْلِي أَنَّهَا رَأَتْهُ عَلَى أُمِّ خَالِدٍ.
பாடம்: 32 புத்தாடை அணிந்தவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை63
5845. உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப் பட்டன. அவற்றில் கறுப்புநிறக் கம்பளி ஆடை ஒன்றும் இருந்தது. அவர்கள், ‘‘இந்த ஆடையை நாம் யாருக்கு அணி விப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மு காலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று உத்தர விட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்.

உடனே அவர்கள் அந்த ஆடையைத் தமது கையால் எனக்கு அணிவித்து, ‘‘(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு” என்று இருமுறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலானார்கள். பிறகு என் பக்கம் தமது கையால் சைகை காட்டி, ‘‘உம்மு காóதே! இது ‘சனா’ (அழகாயிருக்கிறது)” என்று சொல்லலானார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ‘சனா’ எனும் அபிசீனியச் சொல்லுக்கு ‘அழகு’ என்பது பொருள்.

அறிவிப்பாளர் இஸ்ஹாக் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஆடையை உம்மு காலித் (ரலி) அவர்கள் அணிந்திருந்ததைப் பார்த்ததாக எங்கள் குடும்பப் பெண் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.64

அத்தியாயம் : 77
5846. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ.
பாடம்: 33 ஆண்கள் (தமது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள் வது தடை செய்யப்பட்டதாகும்.
5846. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆண்கள் (தமது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65

அத்தியாயம் : 77
5847. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْبَسَ الْمُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِوَرْسٍ أَوْ بِزَعْفَرَانٍ.
பாடம்: 34 குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடை
5847. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘இஹ்ராம்’ கட்டியவர் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.66

அத்தியாயம் : 77
5848. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعَ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرْبُوعًا، وَقَدْ رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْهُ.
பாடம்: 35 சிவப்பாடை
5848. பராஉ ர) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவுமில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தார்கள். சிவப்புநிற அங்கி ஒன்றில் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். (அந்த ஆடையில்) நபி (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.67

அத்தியாயம் : 77
5849. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ عِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجَنَائِزِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَنَهَانَا عَنْ لُبْسِ الْحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالْقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ، وَمَيَاثِرِ الْحُمْرِ.
பாடம்: 36 சிவப்புநிற மென்பட்டுத் திண்டு (மீஸரா)
5849. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோயாளியை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்கமுகல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, ‘கஸ்’ எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை, தடித்த பட்டு, மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட் களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.68

அத்தியாயம் : 77
5850. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ أَبِي مَسْلَمَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ.
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5850. சயீத் அபூமஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘ஆம் (தொழுதுவந்தார்கள்)” என்று சொன்னார்கள்.69


அத்தியாயம் : 77
5851. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا. قَالَ مَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ، وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمَ التَّرْوِيَةِ. فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَمَّا الأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا وَأَمَّا الإِهْلاَلُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ.
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5851. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த் தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்க வில்லை” என்று கூறினேன். அவர்கள் ‘‘அவை யாவை? இப்னு ஜுரைஜே!” எனக் கேட்டார்கள்.

நான் ‘‘(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகளில் ‘ஹஜருல் அஸ்வத்’ மற்றும் ‘ருக்னுல் யமானி’ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹிஜ்ஜா மாத) பிறை பார்த்தவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹிஜ்ஜா) எட்டாவது நாள் வரும்வரை இஹ்ராம் கட்டாமருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)” என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன். (அதனால் தான் நானும் அப்படிச் செய்கிறேன்.) (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கத் தூய்மை (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன்.

மஞ்சள் நிறமோ, அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (என் ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹிஜ்ஜா எட்டாம் நாள்) இஹ்ராம் கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் (துல்ஹிஜ்ஜா எட்டாம் நாள்) பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை இஹ்ராம் கட்டி நான் பார்த்ததில்லை.70


அத்தியாயம் : 77
5852. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَلْبَسَ الْمُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ أَوْ وَرْسٍ، وَقَالَ "" مَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ "".
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5852. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

மேலும், ‘‘(இஹ்ராம் கட்டியிருக்கும் போது) காலணிகள் கிடைக்காதவர், (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால் களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.71


அத்தியாயம் : 77
5853. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ لَمْ يَكُنْ لَهُ إِزَارٌ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَكُنْ لَهُ نَعْلاَنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ "".
பாடம்: 37 (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகள் உள்ளிட்டவை
5853. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(இஹ்ராமின்போது) கீழங்கி இல்லாத வர் முழுக்கால் சட்டை அணிந்துகொள் ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்துகொள்ளட்டும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.72

அத்தியாயம் : 77
5854. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ.
பாடம்: 38 முதலில் வலது கால் காலணியை அணிய வேண்டும்.
5854. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தாம் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும், தலைவாரிக் கொள்ளும்போதும், காலணி அணிந்துகொள்ளும்போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.73

அத்தியாயம் : 77
5855. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِتَكُنِ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ "".
பாடம்: 39 முதலில் இடது கால் காலணியைக் கழற்ற வேண்டும்.
5855. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது கால் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதல் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 77
5856. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا، أَوْ لِيَنْعَلْهُمَا جَمِيعًا "".
பாடம்: 40 ஒரேயொரு காலணியில் நடக்க லாகாது.
5856. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம் : 77
5857. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ أَنَّ نَعْلَ، النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ لَهَا قِبَالاَنِ.
பாடம்: 41 ஒரு காலணியில் இரண்டு வார் களும் இருக்கலாம்; ஒரே வாரும் இருக்கலாம்.
5857. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன.


அத்தியாயம் : 77