5820. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ، نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ فِي الْبَيْعِ، وَالْمُلاَمَسَةُ لَمْسُ الرَّجُلِ ثَوْبَ الآخَرِ بِيَدِهِ بِاللَّيْلِ أَوْ بِالنَّهَارِ، وَلاَ يُقَلِّبُهُ إِلاَّ بِذَلِكَ، وَالْمُنَابَذَةُ أَنْ يَنْبِذَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ بِثَوْبِهِ، وَيَنْبِذَ الآخَرُ ثَوْبَهُ، وَيَكُونَ ذَلِكَ بَيْعَهُمَا، عَنْ غَيْرِ نَظَرٍ وَلاَ تَرَاضٍ، وَاللِّبْسَتَيْنِ اشْتِمَالُ الصَّمَّاءِ، وَالصَّمَّاءُ أَنْ يَجْعَلَ ثَوْبَهُ عَلَى أَحَدِ عَاتِقَيْهِ، فَيَبْدُو أَحَدُ شِقَّيْهِ لَيْسَ عَلَيْهِ ثَوْبٌ، وَاللِّبْسَةُ الأُخْرَى احْتِبَاؤُهُ بِثَوْبِهِ وَهْوَ جَالِسٌ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ.
பாடம்: 20
ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ).
5820. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள்.
வியாபாரத்தில் ‘முலாமசா’ மற்றும் ‘முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். ‘முலாமசா’ என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொரு வரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டு விட்டாலே வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையின்பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக்கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும்.
‘முனாபதா’ என்பது, ஒருவர் மற் றொருவரை நோக்கித் தமது துணியை எறிய, அந்த மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.
ஆடை அணியும் முறைகள் இரண்டும் வருமாறு:
1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. அதாவது ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள அவருடைய உடன் இரு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவதாகும்.
2. இஹ்திபா. அதாவது ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய (அதைத் துணியால் மறைக்காமல்) அமர்ந்திருப்பதாகும்.
அத்தியாயம் : 77

5821. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ، وَأَنْ يَشْتَمِلَ بِالثَّوْبِ الْوَاحِدِ، لَيْسَ عَلَى أَحَدِ شِقَّيْهِ، وَعَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
பாடம்: 21
ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு (முழங்கால்களைக் கட்டியபடி) அமர்வது (இஹ்திபா)39
5821. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு விதமாக ஆடை அணிவதைத் தடை செய்தார்கள். மர்ம உறுப்பு வெளியே தெரியும்படி ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த் திக்கொண்டு அமர்ந்திருப்பதையும் (இஹ்திபா), ஒரே துணியை (இரு தோள் களில் ஒன்றில்) சுற்றிக்கொண்டு ஒரு பக்கம் துணியில்லாமல் இருப்பதையும் (இஷ்திமால்) தடை செய்தார்கள். (வியாபார முறைகளில்) முலாமசாவையும், முனாபதா வையும் தடை செய்தார்கள்.40

5822. حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنِي مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ.
பாடம்: 21
ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு (முழங்கால்களைக் கட்டியபடி) அமர்வது (இஹ்திபா)39
5822. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டு விடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங் கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக் காலிட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.41

5823. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، سَعِيدِ بْنِ فُلاَنٍ ـ هُوَ عَمْرُو بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ ـ عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ، أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ فَقَالَ "" مَنْ تَرَوْنَ نَكْسُو هَذِهِ "". فَسَكَتَ الْقَوْمُ قَالَ "" ائْتُونِي بِأُمِّ خَالِدٍ "". فَأُتِيَ بِهَا تُحْمَلُ فَأَخَذَ الْخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا وَقَالَ "" أَبْلِي وَأَخْلِقِي "". وَكَانَ فِيهَا عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ فَقَالَ "" يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَاهْ "". وَسَنَاهْ بِالْحَبَشِيَّةِ حَسَنٌ.
பாடம்: 22
கறுப்புநிறக் கம்பளி ஆடை
5823. உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்புநிறக் கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நாம் யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முகாலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள்.
மேலும், ‘‘(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு” என்று கூறிவிட்டு, ‘‘உம்மு காலிதே! இது ‘சனாஹ்’ (அழகாயிருக்கிறது)” என்று சொன்னார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் கூறிய) ‘சனாஹ்’ எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும்.
அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.42

5824. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا وَلَدَتْ أُمُّ سُلَيْمٍ قَالَتْ لِي يَا أَنَسُ انْظُرْ هَذَا الْغُلاَمَ فَلاَ يُصِيبَنَّ شَيْئًا حَتَّى تَغْدُوَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُحَنِّكُهُ. فَغَدَوْتُ بِهِ، فَإِذَا هُوَ فِي حَائِطٍ وَعَلَيْهِ خَمِيصَةٌ حُرَيْثِيَّةٌ، وَهْوَ يَسِمُ الظَّهْرَ الَّذِي قَدِمَ عَلَيْهِ فِي الْفَتْحِ.
பாடம்: 22
கறுப்புநிறக் கம்பளி ஆடை
5824. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், ‘‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டு விட வேண்டாம்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச்சென்றேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ‘ஹுரைஸ்’ (அல்லது ‘ஜவ்ன்’) குலத்தார் தயாரித்த கறுப்புநிறக் கம்பளி மேலங்கியை அணிந்துகொண்டு மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த தமது ஊர்தி ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.43

5825. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ رِفَاعَةَ، طَلَّقَ امْرَأَتَهُ، فَتَزَوَّجَهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ الْقُرَظِيُّ، قَالَتْ عَائِشَةُ وَعَلَيْهَا خِمَارٌ أَخْضَرُ. فَشَكَتْ إِلَيْهَا، وَأَرَتْهَا خُضْرَةً بِجِلْدِهَا، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالنِّسَاءُ يَنْصُرُ بَعْضُهُنَّ بَعْضًا قَالَتْ عَائِشَةُ مَا رَأَيْتُ مِثْلَ مَا يَلْقَى الْمُؤْمِنَاتُ، لَجِلْدُهَا أَشَدُّ خُضْرَةً مِنْ ثَوْبِهَا. قَالَ وَسَمِعَ أَنَّهَا قَدْ أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ وَمَعَهُ ابْنَانِ لَهُ مِنْ غَيْرِهَا. قَالَتْ وَاللَّهِ مَا لِي إِلَيْهِ مِنْ ذَنْبٍ، إِلاَّ أَنَّ مَا مَعَهُ لَيْسَ بِأَغْنَى عَنِّي مِنْ هَذِهِ. وَأَخَذَتْ هُدْبَةً مِنْ ثَوْبِهَا، فَقَالَ كَذَبَتْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لأَنْفُضُهَا نَفْضَ الأَدِيمِ، وَلَكِنَّهَا نَاشِزٌ تُرِيدُ رِفَاعَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَإِنْ كَانَ ذَلِكَ لَمْ تَحِلِّي لَهُ ـ أَوْ لَمْ تَصْلُحِي لَهُ ـ حَتَّى يَذُوقَ مِنْ عُسَيْلَتِكِ "". قَالَ وَأَبْصَرَ مَعَهُ ابْنَيْنِ فَقَالَ "" بَنُوكَ هَؤُلاَءِ "". قَالَ نَعَمْ. قَالَ "" هَذَا الَّذِي تَزْعُمِينَ مَا تَزْعُمِينَ، فَوَاللَّهِ لَهُمْ أَشْبَهُ بِهِ مِنَ الْغُرَابِ بِالْغُرَابِ "".
பாடம்: 23
பச்சைநிற ஆடைகள்44
5825. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒருமுறை) அந்தப் பெண்மணி பச்சைநிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சைநிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி-
(நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சைநிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது” என்று சொன்னேன்.
(இதற்கிடையில்) -அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்துவந்தார்.
அப்பெண்மணி, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.
அப்துர் ரஹ்மான் பின் ஸபீர், ‘‘பொய் சொல்கிறாள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்” என்று சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படி (ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்துகொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ ‘அனுமதிக்கப்பட்டவள்’ அல்லது ‘ஏற்றவள்’ அல்லள்” என்று சொன்னார்கள்.
அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களுடைய இரு மகன்களை யும் நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ‘‘இவர்கள் உங்கள் புதல்வர்களா?” என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், ‘‘ஆம்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதைவிடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்” என்று சொன்னார்கள்.45

5826. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ رَأَيْتُ بِشِمَالِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِيَمِينِهِ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يَوْمَ أُحُدٍ، مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ.
பாடம்: 24
வெண்ணிற ஆடைகள்46
5826. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது நான் நபி (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.47

5827. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، حَدَّثَهُ أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ حَدَّثَهُ أَنَّ أَبَا ذَرٍّ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ وَهْوَ نَائِمٌ، ثُمَّ أَتَيْتُهُ وَقَدِ اسْتَيْقَظَ فَقَالَ "" مَا مِنْ عَبْدٍ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ، إِلاَّ دَخَلَ الْجَنَّةَ "". قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ "" وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ "". قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ "" وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ "". قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ "" وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ عَلَى رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ "". وَكَانَ أَبُو ذَرٍّ إِذَا حَدَّثَ بِهَذَا قَالَ وَإِنْ رَغِمَ أَنْفُ أَبِي ذَرٍّ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا عِنْدَ الْمَوْتِ أَوْ قَبْلَهُ، إِذَا تَابَ وَنَدِمَ وَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. غُفِرَ لَهُ.
பாடம்: 24
வெண்ணிற ஆடைகள்46
5827. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டி ருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள்.
நான் (மீண்டும்) ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘‘அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே” என்று கூறிவந்தார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த) ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம்வருந்தி பாவமன்னிப்புக் கோரி, ‘‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை)” என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும்.48

5828. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، أَتَانَا كِتَابُ عُمَرَ وَنَحْنُ مَعَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ بِأَذْرَبِيجَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَرِيرِ، إِلاَّ هَكَذَا، وَأَشَارَ بِإِصْبَعَيْهِ اللَّتَيْنِ تَلِيَانِ الإِبْهَامَ قَالَ فِيمَا عَلِمْنَا أَنَّهُ يَعْنِي الأَعْلاَمَ.
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5828. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர.
(இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் அறிந்த வரை (அவர்கள் குறிப்பிட்ட ‘இந்த அளவு’ என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது.

5829. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ كَتَبَ إِلَيْنَا عُمَرُ وَنَحْنُ بِأَذْرَبِيجَانَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلاَّ هَكَذَا، وَصَفَّ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم إِصْبَعَيْهِ. وَرَفَعَ زُهَيْرٌ الْوُسْطَى وَالسَّبَّابَةَ.
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5829. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆதர் பைஜானில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு, ‘‘நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. மேலும், (அந்த அளவை விவரிக்கும் வகையில்) தம் இரு விரல்களை வரிசைப்படுத்திக் காட்டினார்கள்” என்று கடிதம் எழுதினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் (இதை அறிவிக்கையில்) நடுவிரலையும் சுட்டு விரலையும் உயர்த்திக்காட்டினார்கள்.

5830. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ كُنَّا مَعَ عُتْبَةَ فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُلْبَسُ الْحَرِيرُ فِي الدُّنْيَا، إِلاَّ لَمْ يُلْبَسْ فِي الآخِرَةِ مِنْهُ "".
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ،، وَأَشَارَ أَبُو عُثْمَانَ، بِإِصْبَعَيْهِ الْمُسَبِّحَةِ وَالْوُسْطَى.
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5830. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந் தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று சொன்னார்கள்.
...மற்றோர் அறிவிப்பில், ‘‘அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்” என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.

5831. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ كَانَ حُذَيْفَةُ بِالْمَدَايِنِ فَاسْتَسْقَى، فَأَتَاهُ دِهْقَانٌ بِمَاءٍ فِي إِنَاءٍ مِنْ فِضَّةٍ فَرَمَاهُ بِهِ وَقَالَ إِنِّي لَمْ أَرْمِهِ إِلاَّ أَنِّي نَهَيْتُهُ فَلَمْ يَنْتَهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الذَّهَبُ وَالْفِضَّةُ وَالْحَرِيرُ وَالدِّيبَاجُ هِيَ لَهُمْ فِي الدُّنْيَا، وَلَكُمْ فِي الآخِرَةِ "".
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5831. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (அக்னி ஆராதனையாளரான) ஊர்த் தலைவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘‘நான் இவரை(ப் பலமுறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்க்காத காரணத்தால்தான் நான் இதை அவர்மீது வீசியெறிந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘தங்கம், வெள்ளி, சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு ஆகிய இவையெல்லாம் இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.50

5832. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ قَالَ شُعْبَةُ فَقُلْتُ أَعَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ شَدِيدًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ فَقَالَ "" مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا فَلَنْ يَلْبَسَهُ فِي الآخِرَةِ "".
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5832. ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்க லானார்கள்.
உடனே நான், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்தா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், ‘‘(ஆம்) நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான்” என்று கூறிவிட்டு, ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்கள்.

5833. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، يَخْطُبُ يَقُولُ قَالَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم "" مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ "".
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5833. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘(ஆண் களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார்’ என்று சொன்னார்கள்” எனக் கூறக் கேட்டேன்.

5834. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي ذُبْيَانَ، خَلِيفَةَ بْنِ كَعْبٍ قَالَ سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ "". وَقَالَ لَنَا أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ يَزِيدَ، قَالَتْ مُعَاذَةُ أَخْبَرَتْنِي أُمُّ عَمْرٍو بِنْتُ عَبْدِ اللَّهِ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، سَمِعَ عُمَرَ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5834. அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்” என்று கூறியதாக உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

5835. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْحَرِيرِ، فَقَالَتِ ائْتِ ابْنَ عَبَّاسٍ فَسَلْهُ. قَالَ فَسَأَلْتُهُ فَقَالَ سَلِ ابْنَ عُمَرَ. قَالَ فَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ أَخْبَرَنِي أَبُو حَفْصٍ ـ يَعْنِي عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ فِي الدُّنْيَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ "". فَقُلْتُ صَدَقَ وَمَا كَذَبَ أَبُو حَفْصٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا حَرْبٌ عَنْ يَحْيَى حَدَّثَنِي عِمْرَانُ. وَقَصَّ الْحَدِيثَ.
பாடம்: 25
ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட அளவும்49
5835. இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) கேட்டேன். அவர்கள், ‘‘இப்னு உமர் (ரலி) அவர்களைக் கேளுங்கள்” என்று கூற நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூஹஃப்ஸ், அதாவது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், ‘மறுமையில் யாருக்கு எந்தப் பங்குமில்லையோ அவர் தான் இம்மையில் பட்(டா)டை அணிவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.
(இதைக் கேட்ட) நான், ‘‘உண்மையே சொன்னார்; அபூஹஃப்ஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கவில்லை” என்று சொன் னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5836. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم ثَوْبُ حَرِيرٍ، فَجَعَلْنَا نَلْمُسُهُ، وَنَتَعَجَّبُ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَتَعْجَبُونَ مِنْ هَذَا "". قُلْنَا نَعَمْ. قَالَ "" مَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْ هَذَا "".
பாடம்: 26
பட்டாடையை அணியாமல் தொட்டுப்பார்ப்பது
இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பொன்று உள்ளது.51
5836. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டாடை யொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைக் கண்டு நீங்கள் வியக் கின்றீர்களா?” என்று கேட்க நாங்கள், ‘‘ஆம்” என்றோம்.
நபி (ஸல்) அவர்கள் ‘‘சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை ஆகும்” என்று சொன்னார்கள்.52

5837. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ ابْنَ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَأَنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ، وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ.
பாடம்: 27
பட்டுத் துணியை விரிப்பாகப் பயன்படுத்துதல்
அபீதா பின் அம்ர் அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பட்டை விரிப்பாகப் பயன்படுத்துவது, அதை அணிவதைப் போன்று (தடை செய்யப் பட்டது)தான்.
5837. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்காரப் பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53

5838. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ ابْنِ عَازِبٍ، قَالَ نَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمَيَاثِرِ الْحُمْرِ وَالْقَسِّيِّ.
பாடம்: 28
‘கஸ்’ வகைப் பட்டு அணிவது54
அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘ ‘கஸ்’ வகைத் துணி என்றால் என்ன?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘‘அது ஷாம் (சிரியா) நாட்டிலிருந்தோ எகிப்திலிருந்தோ எங்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்பு களைப் போன்று வரிவரியாகக் கோடுகள் இருக்கும்; அதில் பட்டும் கலந்திருக்கும். நாரத்தையைப் போன்ற (தடித்த வளைந்த) கோடுகள் அதில் இருக்கும். ‘மீஸரா’ என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக மென்பட்டுத் திண்டுகளைப் போன்று தயாரித்துவந்த விரிப்புகளாகும்” என்று பதிலளித்தார்கள்.
ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்கள் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸில் (பின்வருமாறு) காணப்படுகிறது: ‘கஸ்’ வகைத் துணி என்பது விலா எலும்புகளைப் போன்று வரிவரியாகக் கோடுகள் போடப்பட்ட எகிப்திலிருந்து கொண்டுவரப்படுகின்ற ஒரு வகைத் துணியாகும். அதில் பட்டு கலந்திருக்கும். ‘மீஸரா’ என்பது விலங்குகளின் தோல்களாகும்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்:
‘மீஸரா’ தொடர்பாக ஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) கருத்தே அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளதாகும்; (யஸீத் அவர்கள் கூறியுள்ள விலங்குகளின் தோல் என்பதை விடச்) சரியானதும் ஆகும்.
5838. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும் (‘மீஸரா), ‘கஸ்’ வகைப் பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.

5839. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ وَعَبْدِ الرَّحْمَنِ فِي لُبْسِ الْحَرِيرِ لِحِكَّةٍ بِهِمَا.
பாடம்: 29
சொறிசிரங்குக்காக ஆண்கள் பட்டு அணிய அனுமதிக்கப்படுவர்.
5839. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறிசிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.55