5800. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبِيَةً، وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَىَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَانْطَلَقْتُ مَعَهُ فَقَالَ ادْخُلْ فَادْعُهُ لِي. قَالَ فَدَعَوْتُهُ لَهُ، فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا فَقَالَ "" خَبَأْتُ هَذَا لَكَ "". قَالَ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ رَضِيَ مَخْرَمَةُ.
பாடம்: 12 (‘கபா’ எனும்) வெளிப்புற மேலங்கியும் (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பும் இந்தப் பட்டு உடுப்பே ‘கபா’ ஆகும். பின்பக்கம் திறப்பு உள்ள அங்கிக்கே ‘ஃபர்ரூஜ்’ என்று சொல்லப்படுவதுண்டு.
5800. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), ‘‘அன்பு மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் செல்” என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துச் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) ‘‘நீ உள்ளே போய் நபி (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா” என்று சொன்னார்கள்.

நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. மேலும், நபியவர்கள் ‘‘உங்களுக்காக இதை எடுத்துவைத்தேன்” என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘‘மக்ரமா திருப்தி அடைந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.19


அத்தியாயம் : 77
5801. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ، ثُمَّ صَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ ثُمَّ قَالَ "" لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ "". تَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ عَنِ اللَّيْثِ، وَقَالَ غَيْرُهُ فَرُّوجٌ حَرِيرٌ.
பாடம்: 12 (‘கபா’ எனும்) வெளிப்புற மேலங்கியும் (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பும் இந்தப் பட்டு உடுப்பே ‘கபா’ ஆகும். பின்பக்கம் திறப்பு உள்ள அங்கிக்கே ‘ஃபர்ரூஜ்’ என்று சொல்லப்படுவதுண்டு.
5801. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்துகொண்டார்கள். பிறகு அதை அணிந்தவாறே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள்.

பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, ‘‘இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்த தன்று” எனக் கூறினார்கள்.20

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5802. وَقَالَ لِي مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ، سَمِعْتُ أَبِي قَالَ، رَأَيْتُ عَلَى أَنَسٍ بُرْنُسًا أَصْفَرَ مِنْ خَزٍّ.
பாடம் : 13 முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்)21
5802. சுலைமான் பின் தர்கான் அத்- தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள்மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.


அத்தியாயம் : 77
5803. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَلْبَسُوا الْقُمُصَ، وَلاَ الْعَمَائِمَ، وَلاَ السَّرَاوِيلاَتِ، وَلاَ الْبَرَانِسَ، وَلاَ الْخِفَافَ، إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ النَّعْلَيْنِ، فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ زَعْفَرَانٌ وَلاَ الْوَرْسُ "".
பாடம் : 13 முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்)21
5803. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(முழுநீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸாக்கள்) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் (மோஸாக்கள்) அணிந்துகொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர் கள்” என்று சொன்னார்கள்.22

அத்தியாயம் : 77
5804. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ لَمْ يَجِدْ إِزَارًا فَلْيَلْبَسْ سَرَاوِيلَ، وَمَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ "".
பாடம் : 14 முழுக்கால் சட்டை
5804. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஹ்ராம் கட்டியவர்களில்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்துகொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக் களை) அணிந்துகொள்ளட்டும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 77
5805. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا تَأْمُرُنَا أَنْ نَلْبَسَ إِذَا أَحْرَمْنَا. قَالَ "" لاَ تَلْبَسُوا الْقَمِيصَ، وَالسَّرَاوِيلَ، وَالْعَمَائِمَ وَالْبَرَانِسَ، وَالْخِفَافَ، إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ لَيْسَ لَهُ نَعْلاَنِ، فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ زَعْفَرَانٌ وَلاَ وَرْسٌ "".
பாடம் : 14 முழுக்கால் சட்டை
5805. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது எந்த ஆடையை அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, தலைப் பாகைகள், முக்காடுள்ள மேலங்கிகள், (‘மோஸா’ எனும்) காலுறைகள் ஆகிய வற்றை அணியாதீர்கள். ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால் அவர் மட்டும் காலுறைகளை (மோஸாக்களை) கணுக்கால்களுக்குக் கீழ் இருக்குமாறு அணிந்துகொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்” என்று சொன்னார்கள்.23

அத்தியாயம் : 77
5806. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَلْبَسُ الْمُحْرِمُ الْقَمِيصَ، وَلاَ الْعِمَامَةَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ الْبُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ زَعْفَرَانٌ، وَلاَ وَرْسٌ، وَلاَ الْخُفَّيْنِ، إِلاَّ لِمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ، فَإِنْ لَمْ يَجِدْهُمَا فَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ "".
பாடம் : 15 தலைப்பாகைகள்24
5806. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியமாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும் முக்காடுள்ள மேலங்கியையும் அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையையும் (மோஸாக்கள் எனும்) காலுறைகளையும் அணியமாட்டார்; காலணிகள் கிடைக்காதவரைத் தவிர. காலணிகள் கிடைக்கவில்லையெனில் அவர் (மேலிருந்து) கணுக்கால்களுக்குக் கீழே காலுறை (மோஸா) இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25

அத்தியாயம் : 77
5807. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هَاجَرَ إِلَى الْحَبَشَةِ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي "". فَقَالَ أَبُو بَكْرٍ أَوَ تَرْجُوهُ بِأَبِي أَنْتَ قَالَ "" نَعَمْ "". فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لِصُحْبَتِهِ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ أَرْبَعَةَ أَشْهُرٍ. قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَبَيْنَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِنَا فِي نَحْرِ الظَّهِيرَةِ فَقَالَ قَائِلٌ لأَبِي بَكْرٍ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُقْبِلاً مُتَقَنِّعًا، فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا. قَالَ أَبُو بَكْرٍ فِدًا لَهُ بِأَبِي وَأُمِّي، وَاللَّهِ إِنْ جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ لأَمْرٍ. فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَ، فَأَذِنَ لَهُ فَدَخَلَ، فَقَالَ حِينَ دَخَلَ لأَبِي بَكْرٍ "" أَخْرِجْ مَنْ عِنْدَكَ "". قَالَ إِنَّمَا هُمْ أَهْلُكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ "". قَالَ فَالصُّحْبَةُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" نَعَمْ "". قَالَ فَخُذْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ إِحْدَى رَاحِلَتَىَّ هَاتَيْنِ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِالثَّمَنِ "". قَالَتْ فَجَهَّزْنَاهُمَا أَحَثَّ الْجِهَازِ، وَضَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ، فَقَطَعَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مِنْ نِطَاقِهَا، فَأَوْكَتْ بِهِ الْجِرَابَ، وَلِذَلِكَ كَانَتْ تُسَمَّى ذَاتَ النِّطَاقِ، ثُمَّ لَحِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلٍ يُقَالُ لَهُ ثَوْرٌ، فَمَكُثَ فِيهِ ثَلاَثَ لَيَالٍ يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، وَهْوَ غُلاَمٌ شَابٌّ لَقِنٌ ثَقِفٌ، فَيَرْحَلُ مِنْ عِنْدِهِمَا سَحَرًا، فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ بِمَكَّةَ كَبَائِتٍ، فَلاَ يَسْمَعُ أَمْرًا يُكَادَانِ بِهِ إِلاَّ وَعَاهُ، حَتَّى يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ يَخْتَلِطُ الظَّلاَمُ، وَيَرْعَى عَلَيْهِمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ، فَيُرِيحُهَا عَلَيْهِمَا حِينَ تَذْهَبُ سَاعَةٌ مِنَ الْعِشَاءِ، فَيَبِيتَانِ فِي رِسْلِهَا حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ، يَفْعَلُ ذَلِكَ كُلَّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلاَثِ.
பாடம் : 16 (தலையையும் முகத்தின் பெரும் பகுதியையும் மறைக்கும்) முக்காடு அணிதல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப் பட்டிருந்தபோது வீட்டிலிருந்து பள்ளி வாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள்மீது ஒரு கறுப்புக் கட்டு (தலையில்) இருந்தது.26 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது தலை யில் ஒரு சால்வையின் ஓரத்தைக் கட்டி யிருந்தார்கள்.27
5807. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலிருந்த) முஸ்லிம்களில் சிலர் அபிசீனியாவுக்குப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று பொறுங்கள். ஏனெனில், எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கின்றீர்களா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள்.

ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்காகத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். மேலும், (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரு ஊர்தி ஒட்டகங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தழையைத் தீனியாகப் போட்டு (வளர்த்து) வந்தார் கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஒருமுறை நண்பகல் நேரத்தின் மத்தியில் எங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டிந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையில் முக்காடிட்டபடி நம்மை நோக்கி-நம்மிடம் வருகை தந்திராத நேரத்தில்-வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஒருவர் கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை ஏதோ ஒரு (முக்கியமான) விஷயம்தான் இந்த நேரத்தில் இங்கே வரச்செய்திருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள்.

அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்க அவர்களும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழையும்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களிடம் இருப்பவர்களை வெளியே அனுப்புங்கள்” என்று சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இங்கிருப்பவர்கள் உங்கள் (துணைவி யாருடைய) குடும்பத்தார்தான். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு (ஹிஜ்ரத்) புறப்பட அனுமதியளிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களுடன் நானும் வர விரும்புகிறேன். என் தந்தை தங்களுக்கு அர்ப்பண மாகட்டும்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி” என்று சொன்னார்கள்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட் டும். இந்த என் இரு ஊர்தி ஒட்டகங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக்கொள்ளுங் கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீபக்ர் தன் இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல்பையின் வாயில் வைத்துக் கட்டினார். இதனால்தான் ‘இரு கச்சுடையாள்’ (‘தாத்துந் நிதாக்கைன்’) என்று அவர் பெயர் சூட்டப்பட்டார்.

பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ‘ஸவ்ர்’ எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் தங்கியிருப்பார்.

அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த, புத்திக்கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) ‘ஸஹர்’ நேரத்தில் (விடைபெற்றுப்) புறப்பட்டுவிடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்தவரைப் போன்று குறைஷியருடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குறைஷியரின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக்கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்களிடம் அதைக் கொண்டுசெல்வார்.

அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பளிப்பாகக் கறந்துகொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூபக்ர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா அவர்கள் மேய்த்துவந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதை அவர்கள் இருவரிடமும் ஓட்டிவருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்றுவிடுவார்.

இவ்வாறு (அவ்விருவரும் அக்குகையில் தங்கியிருந்த) மூன்று இரவு களில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.28

அத்தியாயம் : 77
5808. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ.
பாடம்: 17 இரும்புத் தொப்பி
5808. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தவாறு மக்கா வினுள் நுழைந்தார்கள்.29

அத்தியாயம் : 77
5809. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً، حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ، ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ. فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.
பாடம்: 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30
5809. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்களைக் கிராமவாசி யொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன்.

பிறகு அந்தக் கிராமவாசி, ‘‘முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத் திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட் டார்கள்.31


அத்தியாயம் : 77
5810. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ بِبُرْدَةٍ ـ قَالَ سَهْلٌ هَلْ تَدْرِي مَا الْبُرْدَةُ قَالَ نَعَمْ هِيَ الشَّمْلَةُ، مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا ـ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا. فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا لإِزَارُهُ، فَجَسَّهَا رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اكْسُنِيهَا. قَالَ "" نَعَمْ "". فَجَلَسَ مَا شَاءَ اللَّهُ فِي الْمَجْلِسِ، ثُمَّ رَجَعَ، فَطَوَاهَا ثُمَّ أَرْسَلَ بِهَا إِلَيْهِ. فَقَالَ لَهُ الْقَوْمُ مَا أَحْسَنْتَ، سَأَلْتَهَا إِيَّاهُ وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يَرُدُّ سَائِلاً. فَقَالَ الرَّجُلُ وَاللَّهِ مَا سَأَلْتُهَا إِلاَّ لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ. قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ.
பாடம்: 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30
5810. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு பெண்மணி ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டுவந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்குகிறேன்’ என்று சொன்னார்” என சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ‘புர்தா’ என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் ‘தெரியும்’ என்று சொல்ல,) ‘‘ஆம். அது கரைவைத்து நெய்யப்பட்ட போர்வை” என சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவை யென்று கருதி அதை வாங்கிக்கொண்டார் கள். பிறகு, அதைக் கீழங்கியாக அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது மக்களில் ஒருவர் அதைத் தொட்டுப்பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணியக்கொடுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தமது வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

மக்கள், ‘‘நீ செய்தது சரியல்ல. நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கேட்பவரை (வெறுங் கையோடுத்) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்களிடம் (ஏன்) இதைக் கேட்டாய்” என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாளில் என் (உடல் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்” என்றார். அவ்வாறே அது அவருக்கு கஃபனாக ஆயிற்று.32


அத்தியாயம் : 77
5811. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هِيَ سَبْعُونَ أَلْفًا، تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ "". فَقَامَ عُكَاشَةُ بْنُ مِحْصَنٍ الأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ قَالَ ادْعُ اللَّهَ لِي يَا رَسُولَ اللَّهِ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ "" اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ "". ثُمَّ قَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ "" سَبَقَكَ عُكَاشَةُ "".
பாடம்: 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30
5811. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் நிலவு பிரகாசிப்பதுபோல் முகங்கள் பிரகாசித்தவாறு சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ (ரலி) அவர்கள் தம்மீதிருந்த கோடுபோட்ட வண்ணப் போர்வையை உயர்த்தியவாறு எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்” என்று சொன் னார்கள்.33


அத்தியாயம் : 77
5812. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قُلْتُ لَهُ أَىُّ الثِّيَابِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ.
பாடம்: 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30
5812. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(பருத்தி யாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 77
5813. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه ـ قَالَ كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يَلْبَسَهَا الْحِبَرَةَ.
பாடம்: 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30
5813. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது.


அத்தியாயம் : 77
5814. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ.
பாடம்: 18 சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை மற்றும் மேல்போர்வை கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30
5814. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தி யாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 77
5815. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، رضى الله عنهم قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهْوَ كَذَلِكَ " لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ". يُحَذِّرُ مَا صَنَعُوا.
பாடம்: 19 கெட்டியான ஆடைகளும் (சதுர வடிவிலான) கறுப்புக் கம்பளி ஆடைகளும்
5815. ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக்கொள்ளலானார் கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள்.

அவர்கள் அதே நிலையில் இருந்து கொண்டே ‘‘யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட் டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள்.34


அத்தியாயம் : 77
5817. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي خَمِيصَةٍ لَهُ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا سَلَّمَ قَالَ "" اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي، وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ بْنِ غَانِمٍ مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ "".
பாடம்: 19 கெட்டியான ஆடைகளும் (சதுர வடிவிலான) கறுப்புக் கம்பளி ஆடைகளும்
5817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) சலாம் கொடுத்தவுடன், ‘‘எனது இந்தக் கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், சற்று முன்பு அது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது. அபூஜஹ்மின் (மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.

-அவர் அதீ பின் கஅப் குலத்தைச் சேர்ந்த அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா பின் ஃகானிம் என்பவர் ஆவார்.-35


அத்தியாயம் : 77
5818. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ قُبِضَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَيْنِ.
பாடம்: 19 கெட்டியான ஆடைகளும் (சதுர வடிவிலான) கறுப்புக் கம்பளி ஆடைகளும்
5818. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றை யும் எடுத்துக்காட்டி, ‘‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று சொன்னார்கள்.36

அத்தியாயம் : 77
5819. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ، وَعَنْ صَلاَتَيْنِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ، وَأَنْ يَحْتَبِيَ بِالثَّوْبِ الْوَاحِدِ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ.
பாடம்: 20 ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ).
5819. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘முலாமசா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபார முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.37 ஃபஜ்ருக்குப் பிறகு சூரியன் உயரும்வரை தொழுவது, அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும்வரை தொழுவது ஆகிய இரு (நஃபில்) தொழுகைகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக்கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்வதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள்.

ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ) தடை விதித்தார்கள்.38


அத்தியாயம் : 77