5375. وَعَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَصَابَنِي جَهْدٌ شَدِيدٌ فَلَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، فَاسْتَقْرَأْتُهُ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ، فَدَخَلَ دَارَهُ وَفَتَحَهَا عَلَىَّ، فَمَشَيْتُ غَيْرَ بَعِيدٍ، فَخَرَرْتُ لِوَجْهِي مِنَ الْجَهْدِ وَالْجُوعِ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى رَأْسِي فَقَالَ "" يَا أَبَا هُرَيْرَةَ "". فَقُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. فَأَخَذَ بِيَدِي فَأَقَامَنِي، وَعَرَفَ الَّذِي بِي، فَانْطَلَقَ بِي إِلَى رَحْلِهِ، فَأَمَرَ لِي بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ، ثُمَّ قَالَ "" عُدْ يَا أَبَا هِرٍّ "". فَعُدْتُ فَشَرِبْتُ، ثُمَّ قَالَ "" عُدْ "". فَعُدْتُ فَشَرِبْتُ حَتَّى اسْتَوَى بَطْنِي فَصَارَ كَالْقِدْحِ ـ قَالَ ـ فَلَقِيتُ عُمَرَ وَذَكَرْتُ لَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِي وَقُلْتُ لَهُ تَوَلَّى اللَّهُ ذَلِكَ مَنْ كَانَ أَحَقَّ بِهِ مِنْكَ يَا عُمَرُ، وَاللَّهِ لَقَدِ اسْتَقْرَأْتُكَ الآيَةَ وَلأَنَا أَقْرَأُ لَهَا مِنْكَ. قَالَ عُمَرُ وَاللَّهِ لأَنْ أَكُونَ أَدْخَلْتُكَ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَكُونَ لِي مِثْلُ حُمْرِ النَّعَمِ.
பாடம்: 1 ‘‘நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள்” எனும் (20:81ஆவது) இறைவசனம் ‘‘நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களி லிருந்து செலவு செய்யுங்கள்” (2:267) என்று அல்லாஹ் கூறுகின்றான். ‘‘(தூதர்களே) தூய்மையானவற்றி óருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிபவன் ஆவேன்” (23:51) என்று அல்லாஹ் கூறுகின்றான்.2
5375. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு (பசியால்) கடும் சோர்வு ஏற்பட்டது. ஆகவே, நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக்காட்டினார்கள்.4

(அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வாலும் பசியாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூஹுரைரா!’ என்று அழைத்தார்கள். நான், ‘‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், அல்லாஹ்வின் தூதரே; கட்டளையிடுங்கள்” என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என் னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தமது இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள்.

நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘இன்னும் அருந்துங்கள், அபூஹிர்!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு ‘‘மீண்டும் (அருந்துங்கள்)” என்றார்கள். நான் வயிறு நிரம்பும்வரை மீண்டும் அருந்தினேன். ஆகவே, வயிறு (உப்பி) பாத்திரத்தைப் போன்றாகிவிட்டது.

பிறகு, நான் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘‘(என் பசியைப் போக்கும் பொறுப்பை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்துவிட்டான். உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக்காட்டும்படி உங்களிடம் நான் கேட்டேன்” என்று சொன்னேன்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.5

அத்தியாயம் : 70
5376. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنِي أَنَّهُ، سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا غُلاَمُ سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ "". فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ.
பாடம்: 2 உணவு உண்ணும்போது அல்லாஹ் வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுவதும் வலக் கரத்தால் உண்பதும்
5376. (நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒருமுறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘சிறுவரே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

அத்தியாயம் : 70
5377. حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدِّيلِيِّ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ أَبِي نُعَيْمٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ـ وَهْوَ ابْنُ أُمِّ سَلَمَةَ ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَكَلْتُ يَوْمًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا فَجَعَلْتُ آكُلُ مِنْ نَوَاحِي الصَّحْفَةِ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلْ مِمَّا يَلِيكَ "".
பாடம்: 3 (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பது அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பெயர் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்” என்று கூறினார்கள்.6
5377. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) (அவர்களுக்கு) அவர்களின் (முதல் கணவர் மூலம் பிறந்த) புதல்வரான உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்டேன். தட்டின் ஓரங்களிருந்து எடுத்து உண்ணத் தொடங்கினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 70
5378. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ أَبِي نُعَيْمٍ، قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِطَعَامٍ وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ فَقَالَ "" سَمِّ اللَّهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ "".
பாடம்: 3 (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பது அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பெயர் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்” என்று கூறினார்கள்.6
5378. வஹ்ப் பின் கைசான் அபீநுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப் பட்டது. அவர்களுடன் அவர்களுடைய வளர்ப்பு மகன் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 70
5379. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَهُ ـ قَالَ أَنَسٌ ـ فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَىِ الْقَصْعَةِ ـ قَالَ ـ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ.
பாடம் : 4 உடனிருப்பவர் தமது செயலால் அருவருப்பு அடையவில்லை என்றால் (உணவருந்தும்) ஒருவர் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் (உணவுப் பொருளைத்) தேடுவது (ஒழுங்கீனம் ஆகாது).
5379. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தையற்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவுக்காக (விருந்துக்கு) அழைத்தார். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் கண்டேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன்.7

அத்தியாயம் : 70
5380. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَتَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ. وَكَانَ قَالَ بِوَاسِطٍ قَبْلَ هَذَا فِي شَأْنِهِ كُلِّهِ.
பாடம்: 5 உணவு உண்பது உள்ளிட்ட செயல் களில் வலக் கரத்தைப் பயன் படுத்துவது உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உன் வலக் கரத்தால் சாப்பிடு” என்று சொன்னார்கள்.8
5380. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்கத்தூய்மை மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும்போதும், அவர்கள் காலணி அணியும்போதும், தலைவாரிக்கொள்ளும்போதும் தம்மால் இயன்றவரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை) இதற்குமுன் (இராக்கில் உள்ள) ‘வாசித்’ நகரில் வைத்து அஷ்அஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத் திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)” என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள்.9

அத்தியாயம் : 70
5381. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ أَبُو طَلْحَةَ لأُمِّ سُلَيْمٍ لَقَدْ سَمِعْتُ صَوْتَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ضَعِيفًا أَعْرِفُ فِيهِ الْجُوعَ، فَهَلْ عِنْدَكِ مِنْ شَىْءٍ فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ، ثُمَّ أَخْرَجَتْ خِمَارًا لَهَا فَلَفَّتِ الْخُبْزَ بِبَعْضِهِ، ثُمَّ دَسَّتْهُ تَحْتَ ثَوْبِي وَرَدَّتْنِي بِبَعْضِهِ، ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَذَهَبْتُ بِهِ فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَمَعَهُ النَّاسُ، فَقُمْتُ عَلَيْهِمْ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَرْسَلَكَ أَبُو طَلْحَةَ "". فَقُلْتُ نَعَمْ. قَالَ "" بِطَعَامٍ "". قَالَ فَقُلْتُ نَعَمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمَنْ مَعَهُ "" قُومُوا "". فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ، فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أُمَّ سُلَيْمٍ قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالنَّاسِ، وَلَيْسَ عِنْدَنَا مِنَ الطَّعَامِ مَا نُطْعِمُهُمْ. فَقَالَتِ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْبَلَ أَبُو طَلْحَةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى دَخَلاَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلُمِّي يَا أُمَّ سُلَيْمٍ مَا عِنْدَكِ "". فَأَتَتْ بِذَلِكَ الْخُبْزِ فَأَمَرَ بِهِ فَفُتَّ وَعَصَرَتْ أُمُّ سُلَيْمٍ عُكَّةً لَهَا فَأَدَمَتْهُ، ثُمَّ قَالَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ "" ائْذَنْ لِعَشَرَةٍ "". فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا، ثُمَّ أَذِنَ لِعَشَرَةٍ، فَأَكَلَ الْقَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا، وَالْقَوْمُ ثَمَانُونَ رَجُلاً.
பாடம்: 6 வயிறு நிரம்பும் அளவுக்கு உண்ணுதல்10
5381. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ஸைத் அல்அன்சாரீ-ரலி) அவர்கள் தம் துணைவியார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘‘நான் நபி (ஸல்) அவர்களுடைய குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். ஆகவே, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள்.

பிறகு உம்மு சுலைம் அவர்கள் தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி எனது கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள்.

பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். ‘‘உணவுடனா அனுப்பியுள்ளார்?” என்று அவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர் களிடம், ‘‘எழுந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்) ‘‘உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!” என்று சொன்னார்கள். (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.

உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தாமே நபி (ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூதல்ஹா அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!” என்று சொன்னார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டுதுண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது.

பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள். பிறகு ‘‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியளியுங்கள்” என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள்.

அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள்.

பிறகு ‘‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள்” என்று கூற, அபூதல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.11


அத்தியாயம் : 70
5382. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ وَحَدَّثَ أَبُو عُثْمَانَ، أَيْضًا عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ "". فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ، فَعُجِنَ، ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبَيْعٌ أَمْ عَطِيَّةٌ أَوْ ـ قَالَ ـ هِبَةٌ "". قَالَ لاَ بَلْ بَيْعٌ. قَالَ فَاشْتَرَى مِنْهُ شَاةً فَصُنِعَتْ، فَأَمَرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ يُشْوَى، وَايْمُ اللَّهِ مَا مِنَ الثَّلاَثِينَ وَمِائَةٍ إِلاَّ قَدْ حَزَّ لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَهَا لَهُ، ثُمَّ جَعَلَ فِيهَا قَصْعَتَيْنِ فَأَكَلْنَا أَجْمَعُونَ وَشَبِعْنَا، وَفَضَلَ فِي الْقَصْعَتَيْنِ، فَحَمَلْتُهُ عَلَى الْبَعِيرِ. أَوْ كَمَا قَالَ.
பாடம்: 6 வயிறு நிரம்பும் அளவுக்கு உண்ணுதல்10
5382. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களில் யாரிடமாவது உணவேதும் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் ‘ஒரு ஸாஉ’ அல்லது ‘அது போன்ற அளவு’ உணவு (மாவு)தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது.

(சற்று நேரத்திற்குப்)பின் மிக உயரமான பரட்டைத் தலை கொண்ட இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘(இவை) விற்பதற்கா? அல்லது அன்பளிப்பா?” என்று கேட்டார்கள்.

அவர் ‘‘இல்லை. விற்பதற்காகத்தான் (கொண்டுவந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்.

அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்கும் அதன் ஈரலில் ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு அவரிடமே (நேரடியாக) அதைக் கொடுத்து விட்டார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து(ப் பாதுகாத்து) வைத்தார்கள்.

பிறகு இரு (அகன்ற) தட்டுகளில் அந்த ஆட்டு இறைச்சியை வைத்தார்கள். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரு தட்டுகளிலும் மீதியிருந்தது. எனவே, நான் அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிச் சென்றேன்.12


அத்தியாயம் : 70
5383. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ.
பாடம்: 6 வயிறு நிரம்பும் அளவுக்கு உண்ணுதல்10
5383. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.13

அத்தியாயம் : 70
5384. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ بُشَيْرَ بْنَ يَسَارٍ، يَقُولُ حَدَّثَنَا سُوَيْدُ بْنُ النُّعْمَانِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ، فَلَمَّا كُنَّا بِالصَّهْبَاءِ ـ قَالَ يَحْيَى وَهْىَ مِنْ خَيْبَرَ عَلَى رَوْحَةٍ ـ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِطَعَامٍ، فَمَا أُتِيَ إِلاَّ بِسَوِيقٍ، فَلُكْنَاهُ فَأَكَلْنَا مِنْهُ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ. قَالَ سُفْيَانُ سَمِعْتُهُ مِنْهُ عَوْدًا وَبَدْءًا.
பாடம்: 7 ‘‘கண் பார்வையற்றவர், கால் ஊனமுற்றவர் மற்றும் நோயாளி ஆகியோர் (பிறர் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவதில் அவர்கள்)மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (24:61ஆவது) இறைவசனமும், பயணச் செலவைப் பகிர்ந்துகொள்வதும், உணவைச் சேர்ந்து உண்பதும்
5384. சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனும் இடத்தில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவைக் கொண்டுவரும்படி கூறினார்கள்.

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸஹ்பா என்பது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ள இடமாகும்.-

அப்போது மாவுதான் கொண்டுவரப் பட்டது. அதை நாங்கள் மென்று சாப்பிட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி பணித்தார்கள். (தண்ணீர் வந்தவுடன்) வாய் கொப்புளித் தார்கள். நாங்களும் கொப்புளித்தோம். எங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸை நான் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து முதலாவதாகவும் இறுதியாகவும் கேட்டேன்” என்று கூறுகிறார்கள்.14

அத்தியாயம் : 70
5385. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ كُنَّا عِنْدَ أَنَسٍ وَعِنْدَهُ خَبَّازٌ لَهُ فَقَالَ مَا أَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم خُبْزًا مُرَقَّقًا وَلاَ شَاةً مَسْمُوطَةً حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம்: 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்
5385. கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருந்தார். அப்போது ‘‘நபி (ஸல்) அவர்கள் தாம் இறக்கும்வரை மிருதுவான ரொட்டியையோ, வெந்நீரால் முடி களையப்பட்டுத் தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டையோ உண்டதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 70
5386. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ يُونُسَ ـ قَالَ عَلِيٌّ هُوَ الإِسْكَافُ ـ عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ مَا عَلِمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عَلَى سُكُرُّجَةٍ قَطُّ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ قَطُّ، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ. قِيلَ لِقَتَادَةَ فَعَلَى مَا كَانُوا يَأْكُلُونَ قَالَ عَلَى السُّفَرِ.
பாடம்: 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்
5386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொடுகறி வைக்கப் பயன்படும்) கிண்ணத்தில் வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்களிடம், ‘‘அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார் கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘உணவு விரிப்பில்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 70
5387. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا، يَقُولُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْنِي بِصَفِيَّةَ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ أَمَرَ بِالأَنْطَاعِ فَبُسِطَتْ فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ وَالأَقِطُ وَالسَّمْنُ. وَقَالَ عَمْرٌو عَنْ أَنَسٍ بَنَى بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ.
பாடம்: 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்
5387. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கி, (கைபருக்கும் மதீனாவுக்கும் இடையே மூன்று நாட்கள்) தங்கினார்கள். அப்போது நான் அவர்களின் மண விருந்துக்காக முஸ்லிம்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் தோல்விரிப்புகளைக் கொண்டுவரும்படி பணித்தார்கள். அவ்வாறே அவை (கொண்டுவந்து) விரிக்கப்பட்டன. பிறகு, அவற்றில் பேரீச்சம்பழங்கள், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவை வைக்கப்பட்டன.15

அம்ர் பின் அபீஅம்ர் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (மணவிருந்திற்காக) ‘ஹைஸ்’ எனும் ஒரு வகைப் பண்டத்தைத் தயாரித்து தோல் விரிப்பில் வைத்தார்கள்.16


அத்தியாயம் : 70
5388. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، وَعَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، قَالَ كَانَ أَهْلُ الشَّأْمِ يُعَيِّرُونَ ابْنَ الزُّبَيْرِ يَقُولُونَ يَا ابْنَ ذَاتِ النِّطَاقَيْنِ. فَقَالَتْ لَهُ أَسْمَاءُ يَا بُنَىَّ إِنَّهُمْ يُعَيِّرُونَكَ بِالنِّطَاقَيْنِ، هَلْ تَدْرِي مَا كَانَ النِّطَاقَانِ إِنَّمَا كَانَ نِطَاقِي شَقَقْتُهُ نِصْفَيْنِ، فَأَوْكَيْتُ قِرْبَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِأَحَدِهِمَا، وَجَعَلْتُ فِي سُفْرَتِهِ آخَرَ، قَالَ فَكَانَ أَهْلُ الشَّأْمِ إِذَا عَيَّرُوهُ بِالنِّطَاقَيْنِ يَقُولُ إِيهًا وَالإِلَهْ. تِلْكَ شَكَاةٌ ظَاهِرٌ عَنْكَ عَارُهَا.
பாடம்: 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்
5388. வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் குறை கூறிக்கொண்டிருந்தார்கள்.17 ‘இரண்டு கச்சுடையாளின் மகனே!’ என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ் வின் தாயார்) அஸ்மா (ரலி) அவர்கள், ‘‘என்னருமை மகனே! அவர்கள் உன்னை இரண்டு கச்சுகளைச் சொல்லிக் குறை சொல்கிறார்கள். ‘இரண்டு கச்சுகள்’ என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது என் கச்சுதான். அதை நான் இரு பாதிகளாகக் கிழித்து அவற்றில் ஒன்றால் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோல் பை(யின் வா)யைக் கட்டினேன். மற்றொன்றை அவர்களின் உணவு விரிப்புக்காக வைத்தேன்” என்று கூறினார்கள்.18

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(இதன் பின்) ஷாம்வாசிகள் இரண்டு கச்சுகளைக் குறிப்பிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் குறை கூறும்போது அவர்கள், ‘‘ஆம்! (உண்மைதான்.) இறைவன்மீதாணையாக! இது ஒரு கூப்பாடு. இதில் உன்மீது எந்தக் குறையுமில்லை” என்று (ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி தமக்குத்தாமே) கூறுவார்கள்.


அத்தியாயம் : 70
5389. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أُمَّ حُفَيْدٍ بِنْتَ الْحَارِثِ بْنِ حَزْن ٍ ـ خَالَةَ ابْنِ عَبَّاسٍ ـ أَهْدَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا، فَدَعَا بِهِنَّ فَأُكِلْنَ عَلَى مَائِدَتِهِ، وَتَرَكَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم كَالْمُسْتَقْذِرِ لَهُنَّ، وَلَوْ كُنَّ حَرَامًا مَا أُكِلْنَ عَلَى مَائِدَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ أَمَرَ بِأَكْلِهِنَّ.
பாடம்: 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்
5389. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உடும்புகளையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடும்புகளை எடுத்து வரச்சொன்னார்கள். அவை (சமைக்கப்பட்டு) அவர்களுடைய விரிப்பின் மீது உண்ணப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை அருவருப்பது போல் தோன்றியது. அவற்றை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். அவை தடை செய்யப்பட்டவையாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை உண்ணப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி அவர்கள் கட்டளையிட்டிருக்கவுமாட்டார்கள்.19

அத்தியாயம் : 70
5390. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَحْيَى، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُمْ، كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالصَّهْبَاءِ ـ وَهْىَ عَلَى رَوْحَةٍ مِنْ خَيْبَرَ ـ فَحَضَرَتِ الصَّلاَةُ، فَدَعَا بِطَعَامٍ فَلَمْ يَجِدْهُ إِلاَّ سَوِيقًا، فَلاَكَ مِنْهُ فَلُكْنَا مَعَهُ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ، ثُمَّ صَلَّى وَصَلَّيْنَا، وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 9 மாவு
5390. சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவிலுள்ள இடமாகும். அப்போது தொழுகை நேரம் வந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரச்சொன்னார்கள். மாவைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

அதை அவர்கள் மென்று சாப்பிட்டார்கள். நாங்களும் அவர்களுடன் மென்று சாப்பிட்டோம். பிறகு அவர்கள் தண்ணீரைக் கொண்டுவரச்சொல்லி வாய் கொப்புளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுதிட நாங்களும் தொழுதோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வில்லை.20

அத்தியாயம் : 70
5391. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيُّ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ ـ وَهْىَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ ـ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا، قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ، فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ قَلَّمَا يُقَدِّمُ يَدَهُ لِطَعَامٍ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ، فَأَهْوَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ إِلَى الضَّبِّ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الْحُضُورِ أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَا قَدَّمْتُنَّ لَهُ، هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ. فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ عَنِ الضَّبِّ، فَقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" لاَ وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ "". قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَىَّ.
பாடம்: 10 நபி (ஸல்) அவர்கள் எந்த உணவுப் பொருளையும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு அது என்னவென்று அறிந்து கொள்ளாத வரை உண்டதில்லை.
5391. ‘அல்லாஹ்வின் வாள்’ என்றழைக் கப்படும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயார் ஆவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களுடைய சகோதரி ஹுஃபைதா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்திலிருந்து கொண்டுவந்திருந்தார்கள்.

(அன்னை) மைமூனா (ரலி) அவர்கள் அந்த உடும்பு இறைச்சியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்முன் வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரோ, எந்த உணவாயி னும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தமது கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர், ‘‘நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குத் தெரிவியுங்கள். அது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தமது கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் ‘‘உடும்பு தடை செய்யப்பட்டதா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆகவே, என் மனம் அதை விரும்பவில்லை” என்று சொன்னார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 70
5392. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" طَعَامُ الاِثْنَيْنِ كَافِي الثَّلاَثَةِ، وَطَعَامُ الثَّلاَثَةِ كَافِي الأَرْبَعَةِ "".
பாடம்: 11 ஒருவருடைய உணவு இருவருக்குப் போதும்.
5392. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.21

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 70
5393. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ لاَ يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ، فَأَدْخَلْتُ رَجُلاً يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لاَ تُدْخِلْ هَذَا عَلَىَّ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ "".
பாடம்: 12 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.22 இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
5393. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். ஆகவே, (ஒருநாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடு வார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார்’ எனக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 70
5394. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَإِنَّ الْكَافِرَ ـ أَوِ الْمُنَافِقَ فَلاَ أَدْرِي أَيَّهُمَا قَالَ عُبَيْدُ اللَّهِ ـ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ "". وَقَالَ ابْنُ بُكَيْرٍ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ.
பாடம்: 12 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.22 இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
5394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளர்’ அல்லது ‘நயவஞ்சகர்’ ஏழு குடல்களில் சாப்பிடுவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்தா பின் சுலைமான் (ரஹ்) அவர்கள், ‘‘இதை எனக்கு அறிவித்த உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், ‘இறைமறுப் பாளர்’, ‘நயவஞ்சகர்’ ஆகிய இரு சொற்களில் எதைச் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது (நினைவில்லை)” என்று கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 70