5355. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَفْضَلُ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ "". تَقُولُ الْمَرْأَةُ إِمَّا أَنْ تُطْعِمَنِي وَإِمَّا أَنْ تُطَلِّقَنِي. وَيَقُولُ الْعَبْدُ أَطْعِمْنِي وَاسْتَعْمِلْنِي. وَيَقُولُ الاِبْنُ أَطْعِمْنِي، إِلَى مَنْ تَدَعُنِي فَقَالُوا يَا أَبَا هُرَيْرَةَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ لاَ هَذَا مِنْ كِيسِ أَبِي هُرَيْرَةَ.
பாடம்: 2
மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர் ஆகியோருக்குச் செலவு செய்வது கடமையாகும்.6
5355. அபூஸாலிஹ் தக்வான்அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதியை) தன்னிறை வான நிலையில் செய்யும் தர்மமே சிறந்த தர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையைவிடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு!” என்று சென்னார்கள்7 என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவிட்டு, (கணவரிடம்) மனைவி, ‘‘எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு” என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), ‘‘எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக்கொள்!” என்று கூறுகின்றான். மகன் (தன் தந்தையிடம்), ‘‘எனக்கு உணவளியுங்கள். (உங்களை விட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு?” என்று கூறுகின்றான் எனக் கூறினார்கள்.
மக்கள், ‘‘அபூஹுரைரா அவர்களே! இதையுமா நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘இல்லை; இது அபூஹுரைராவின்(எனது) விளக்கமாகும்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 69

5356. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ "".
பாடம்: 2
மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர் ஆகியோருக்குச் செலவு செய்வது கடமையாகும்.6
5356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உனது தர்மத்தைத்) தொடங்கு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

5357. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ قَالَ لِي مَعْمَرٌ قَالَ لِي الثَّوْرِيُّ هَلْ سَمِعْتَ فِي الرَّجُلِ يَجْمَعُ لأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ أَوْ بَعْضِ السَّنَةِ قَالَ مَعْمَرٌ فَلَمْ يَحْضُرْنِي، ثُمَّ ذَكَرْتُ حَدِيثًا حَدَّثَنَاهُ ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبِيعُ نَخْلَ بَنِي النَّضِيرِ، وَيَحْبِسُ لأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ.
பாடம்: 3
ஒருவர் தம் குடும்பத்தாருக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவைச் சேமித்துவைப்பது (செல்லும் என்பது)ம், தம்மைச் சார்ந்தோருக்கு அவர் செலவிட வேண்டிய முறையும்
5357. மஅமர் பின் ராஷித் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான, அல்லது ஆண்டின் ஒரு பகுதிக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவரைப் பற்றி நீங்கள் (ஏதேனும் ஹதீஸ்) கேள்விப்பட்டி ருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘‘(அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை” என்று சொன்னேன். பிறகு, உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது:
நபி (ஸல்) அவர்கள் பனுந்நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு, அவர் களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்துவைப்பவர்களாக இருந்தார்கள்.9

5358. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، وَكَانَ، مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ذَكَرَ لِي ذِكْرًا مِنْ حَدِيثِهِ، فَانْطَلَقْتُ حَتَّى دَخَلْتُ عَلَى مَالِكِ بْنِ أَوْسٍ فَسَأَلْتُهُ فَقَالَ مَالِكٌ انْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى عُمَرَ، إِذْ أَتَاهُ حَاجِبُهُ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ وَعَبْدِ الرَّحْمَنِ وَالزُّبَيْرِ وَسَعْدٍ يَسْتَأْذِنُونَ قَالَ نَعَمْ. فَأَذِنَ لَهُمْ ـ قَالَ ـ فَدَخَلُوا وَسَلَّمُوا فَجَلَسُوا، ثُمَّ لَبِثَ يَرْفَا قَلِيلاً فَقَالَ لِعُمَرَ هَلْ لَكَ فِي عَلِيٍّ وَعَبَّاسٍ قَالَ نَعَمْ. فَأَذِنَ لَهُمَا، فَلَمَّا دَخَلاَ سَلَّمَا وَجَلَسَا، فَقَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا. فَقَالَ الرَّهْطُ عُثْمَانُ وَأَصْحَابُهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنَهُمَا، وَأَرِحْ أَحَدَهُمَا مِنَ الآخَرِ. فَقَالَ عُمَرُ اتَّئِدُوا أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ "". يُرِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهُ. قَالَ الرَّهْطُ قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ قَالاَ قَدْ قَالَ ذَلِكَ. قَالَ عُمَرُ فَإِنِّي أُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَالِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ، قَالَ اللَّهُ {مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ} إِلَى قَوْلِهِ {قَدِيرٌ}. فَكَانَتْ هَذِهِ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ وَلاَ اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ، لَقَدْ أَعْطَاكُمُوهَا وَبَثَّهَا فِيكُمْ، حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ، فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَيَاتَهُ، أَنْشُدُكُمْ بِاللَّهِ، هَلْ تَعْلَمُونَ ذَلِكَ قَالُوا نَعَمْ. قَالَ لِعَلِيٍّ وَعَبَّاسٍ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ ذَلِكَ قَالاَ نَعَمْ. ثُمَّ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضَهَا أَبُو بَكْرٍ يَعْمَلُ فِيهَا بِمَا عَمِلَ بِهِ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمَا حِينَئِذٍ ـ وَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ ـ تَزْعُمَانِ أَنَّ أَبَا بَكْرٍ كَذَا وَكَذَا، وَاللَّهُ يَعْلَمُ أَنَّهُ فِيهَا صَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ فَقُلْتُ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ، فَقَبَضْتُهَا سَنَتَيْنِ أَعْمَلُ فِيهَا بِمَا عَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، ثُمَّ جِئْتُمَانِي وَكَلِمَتُكُمَا وَاحِدَةٌ وَأَمْرُكُمَا جَمِيعٌ، جِئْتَنِي تَسْأَلُنِي نَصِيبَكَ مِنِ ابْنِ أَخِيكَ، وَأَتَى هَذَا يَسْأَلُنِي نَصِيبَ امْرَأَتِهِ مِنْ أَبِيهَا، فَقُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهُ إِلَيْكُمَا عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَتَعْمَلاَنِ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِمَا عَمِلَ بِهِ فِيهَا أَبُو بَكْرٍ، وَبِمَا عَمِلْتُ بِهِ فِيهَا، مُنْذُ وُلِّيتُهَا، وَإِلاَّ فَلاَ تُكَلِّمَانِي فِيهَا فَقُلْتُمَا ادْفَعْهَا إِلَيْنَا بِذَلِكَ. فَدَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ، أَنْشُدُكُمْ بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْهِمَا بِذَلِكَ فَقَالَ الرَّهْطُ نَعَمْ. قَالَ فَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ دَفَعْتُهَا إِلَيْكُمَا بِذَلِكَ قَالاَ نَعَمْ. قَالَ أَفَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ، فَوَالَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ لاَ أَقْضِي فِيهَا قَضَاءً غَيْرَ ذَلِكَ، حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَإِنْ عَجَزْتُمَا عَنْهَا فَادْفَعَاهَا فَأَنَا أَكْفِيكُمَاهَا.
பாடம்: 3
ஒருவர் தம் குடும்பத்தாருக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவைச் சேமித்துவைப்பது (செல்லும் என்பது)ம், தம்மைச் சார்ந்தோருக்கு அவர் செலவிட வேண்டிய முறையும்
5358. முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்களிடம் சென்று (‘ஃபதக்’ சொத்து தொடர்பான பிரச்சினை குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
நான் (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (அழைத்ததன் பேரில் அவர்கள்) இடம் சென்றேன். (சிறிது நேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.) அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர் ‘யர்ஃபஉ’ என்பார் அவர்களிடம் வந்து, ‘‘உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார்.
உமர் (ரலி) அவர்கள், ‘சரி’ என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர் (ரலி) அவர்களிடம், ‘‘அலீ (ரலி) அவர்களை யும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய குழுவினர், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கின்றேன். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே!’ என்று இறைத் தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அந்தக் குழுவினர், ‘‘அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் -பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, ‘‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.
அவ்விருவரும், ‘‘(ஆம்) அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக் கிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறெனில், உங்களிடம் நான் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுகின்றேன். (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ) செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை அளிக்கவில்லை” (என்று கூறிவிட்டு,) ‘‘அல்லாஹ் எந்தச் செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பி அளித்தானோ அந்தச் செல்வம், உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச்சென்றதால் கிடைத்ததன்று. மாறாக, அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, ‘‘எனவே இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை நபி (ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதியாயிற்று.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்கு வழங்கிவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டுவந்தார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கின் றேன்: இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு (அங்கிருந்த குழுவினரான) அவர்கள், ‘‘ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள். (பிறகு) அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களி டமும், ‘‘உங்கள் இருவரையும் அல்லாஹ் வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்க, அவர்களிருவரும் ‘‘ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள்.
(தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள்,) ‘‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்” (என்று கூறிவிட்டு,) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்போதும் நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்படி இப்படி(ச் சொல்கிறார்கள்; இறைத்தூதர் நிதியான எங்களுடைய சொத்தைத் தர மறுக்கிறார்கள்)” என்று சொன்னீர்கள்!
(ஆனால்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே சொன்னார்கள்; நல்லவிதமாக நடந்துகொண்டார்கள்; நல்வழி நடந்து வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.
அப்போது (ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட) நான் ‘‘அல்லாஹ்வின் தூதரு(டைய ஆட்சி)க்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்” என்று கூறி அ(ந்தச் செல்வத்)தை எனது ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுக்குப் பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி நானும் செயல்பட்டுவந்தேன்.
பிறகு நீங்கள் இருவரும் (இச்செல்வம் தொடர்பாகப் பேச) என்னிடம் வந்தீர்கள். உங்களிருவரின் பேச்சும் ஒன்றாகவே இருந்தது; இருவரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்தது.
‘‘(அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். (இதோ!) இவரும் (அலீயும்) என்னிடம் தம் மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்கைக் கேட்டபடி வந்தார்.
அப்போது (உங்கள் இருவரிடமும்) நான், ‘‘நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்’ எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் இச்செல்வத்தை ஒப்படைத்துவிடுகிறேன். அவ்வாறில்லையாயின், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் இருவரும் பேசவேண்டாம்” என்று சொன்னேன்.
அதற்கு நீங்கள் இருவரும் ‘‘அ(ந்)த (நிபந்தனை’)ன் அடிப்படையில் அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று சொன்னீர்கள். அதன்படியே அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் நான் ஒப்படைத்தேன்” என்று சொன்னார் கள்.
பிறகு (அங்கிருந்த குழுவினரிடம்), ‘‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் நான் கேட்கின்றேன்: நான் அ(ச்செல்வத்)தை இவர்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனை’)ன்படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)” என்று கேட்க, அதற்கு அக்குழுவினர் ‘‘ஆம்” என்றார்கள்.
அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனை ‘)ன் படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)” என்று கேட்க, அவ்விரு வரும் ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ‘‘இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடம் கோருகின்றீர்களா? எவனது கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்த தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன்” என்று சொன்னார்கள்.10

5359. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ هِنْدُ بِنْتُ عُتْبَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا قَالَ "" لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ "".
பாடம்: 4
கணவன் (ஊரில்) இல்லாதபோது மனைவி மற்றும் குழந்தைகளின் (பராமரிப்புச்) செலவு
5359. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘(குற்றம்) இல்லை; நியாயமான அளவுக்கு எடுத்தால்” என்று பதிலளித்தார்கள்.

5360. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا عَنْ غَيْرِ أَمْرِهِ فَلَهُ نِصْفُ أَجْرِهِ "".
பாடம்: 4
கணவன் (ஊரில்) இல்லாதபோது மனைவி மற்றும் குழந்தைகளின் (பராமரிப்புச்) செலவு
5360. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தி யத்திலிருந்து அவனது உத்தரவின்றி (அற வழியில்) செலவிட்டால், அதன் பிரதி பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

5361. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي الْحَكَمُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، وَبَلَغَهَا أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ فَلَمْ تُصَادِفْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عَائِشَةُ ـ قَالَ ـ فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا نَقُومُ فَقَالَ "" عَلَى مَكَانِكُمَا "". فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى بَطْنِي فَقَالَ "" أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا ـ أَوْ أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا ـ فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، فَهْوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ "".
பாடம்: 5
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற(கண)வர்களுக்காகத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் அமுதூட்டுவார்கள். அமுதூட்டும் அவர்களுக்கு உணவும் உடையும் முறைப்படி வழங்குவது குழந்தையின் தந்தைமீது கடமையாகும். எவருக்கும் அவரது சக்திக்கேற்பவே தவிர கட்டளைகள் பிறப்பிக்கப்படமாட்டா.
ஒரு தாய் தன் குழந்தைக்காகவோ, ஒரு தந்தை தன் குழந்தைக்காகவோ துன்புறுத்தப்படமாட்டார்கள். (தந்தை இறந்துவிட்டால்) அதைப் போன்ற கடமை வாரிசுகள்மீதும் உண்டு. (தாய், தந்தை) இருவரும் ஆலோசனை கலந்து திருப்தி அடைந்து (ஈராண்டுகளுக்கு முன்பே) பால்குடிப் பழக்கத்தை நிறுத்திவிட விரும்பினால் இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:233)12
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும்வரையில் முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடனேயே கழிகின்றன). (46:15)13
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
(குழந்தைக்குப் பாலூட்டுவதில் தம்பதியரான) உங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால், தந்தையின் சார்பில் வேறொரு பெண் பாலூட்டுவாள். வசதியுடையவர் தம் வசதிக்கேற்பச் செலவு செய்யட்டும்! யாருக்கு அளவான வசதி அளிக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு இறைவன் வழங்கியதிலிருந்து செலவழிக்கட்டும்! அல்லாஹ், தான் வழங்கியதற்கேற்பவே தவிர எவருக்கும் கட்டளைகள் பிறப்பிப்பதில்லை. கஷ்டத்திற்குப்பின் வசதியை அல்லாஹ் வழங்குவான். (65:6, 7)14
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) கூறினார்கள்:
எந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அளிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால்தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களைவிடத் தாயே தன் குழந்தைமீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன்மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது.
(இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அளிக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும், அவளுக்கு இடரளிப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது.
ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்பினால் அதுவும் குற்றமாகாது.
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபிஸால்’ எனும் சொல்லுக்கு ‘பால்குடியை நிறுத்துதல்’ என்பது பொருள்.
பாடம்: 6
கணவனின் வீட்டு வேலைகளை மனைவி செய்வது
5361. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக் கும் இடையே அமர்ந்தார்கள்.
அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ‘நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது’ அல்லது ‘உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது’ முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.15

5362. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، سَمِعَ مُجَاهِدًا، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، يُحَدِّثُ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ "" أَلاَ أُخْبِرُكِ مَا هُوَ خَيْرٌ لَكِ مِنْهُ، تُسَبِّحِينَ اللَّهَ عِنْدَ مَنَامِكِ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتَحْمَدِينَ اللَّهَ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتُكَبِّرِينَ اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ "". ـ ثُمَّ قَالَ سُفْيَانُ إِحْدَاهُنَّ أَرْبَعٌ وَثَلاَثُونَ ـ فَمَا تَرَكْتُهَا بَعْدُ، قِيلَ وَلاَ لَيْلَةَ صِفِّينَ قَالَ وَلاَ لَيْلَةَ صِفِّينَ.
பாடம்: 7
மனைவியின் பணியாள்
5362. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உறங்கும்போது முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்!” என்று கூறினார்கள்.16
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும்.
(தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள்) ‘‘இவற்றை (நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட) பின்னால் (ஒருநாளும் ஓதாமல்) நான் விட்டதில்லை” என்று கூறினார்கள். அவர்களிடம், ‘ஸிஃப்பீன்’ போரின் இரவில்கூடவா விட்டதில்லை? என்று கேட்கப்பட்டது. அவர்கள், ‘‘ஆம்; ஸிஃப்பீன் போரின் இரவில்கூடத்தான்” என்று பதிலளித்தார்கள்.

5363. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي الْبَيْتِ قَالَتْ كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ.
பாடம்: 8
ஆண் தன் வீட்டுப் பணிகளைச் செய்வது
5363. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.17

5364. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلاَّ مَا أَخَذْتُ مِنْهُ وَهْوَ لاَ يَعْلَمُ فَقَالَ "" خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ "".
பாடம்: 9
கணவன் செலவுக்கு(ப் பணம்) தராவிட்டால் அவனுக்குத் தெரியாமல் தனக்கும் தன் குழந்தைக் கும் வேண்டியதை நியாயமான அளவில் எடுத்துக்கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு.
5364. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.18

5365. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، وَأَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ نِسَاءُ قُرَيْشٍ ـ وَقَالَ الآخَرُ صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ ـ أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ، وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ "". وَيُذْكَرُ عَنْ مُعَاوِيَةَ وَابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 10
கணவனின் செல்வத்தையும் (அவன் வழங்கும்) செலவுத் தொகையையும் பாதுகாப்பது மனைவியின் பொறுப்பாகும்.
5365. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் குறைஷி பெண்களேயாவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இப்னு தாவூஸ், அபுஸ்ஸினாத் ஆகிய இருவரில்) ஒருவரது அறிவிப்பில் காணப்படுவ தாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷி குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள்மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் ஆவர்.19
முஆவியா (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

5366. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ آتَى إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم حُلَّةً سِيَرَاءَ فَلَبِسْتُهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ فَشَقَّقْتُهَا بَيْنَ نِسَائِي.
பாடம்: 11
நியாயமான வகையில் மனைவிக்கு ஆடை வழங்குவது (கணவனின் கடமையாகும்).
5366. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப் பாக) வழங்கினார்கள். ஆகவே, அதை நான் அணிந்துகொண்டேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.20

5367. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ هَلَكَ أَبِي وَتَرَكَ سَبْعَ بَنَاتٍ أَوْ تِسْعَ بَنَاتٍ فَتَزَوَّجْتُ امْرَأَةً ثَيِّبًا فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تَزَوَّجْتَ يَا جَابِرُ "". فَقُلْتُ نَعَمْ. فَقَالَ "" بِكْرًا أَمْ ثَيِّبًا "". قُلْتُ بَلْ ثَيِّبًا. قَالَ "" فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ، وَتُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ "". قَالَ فَقُلْتُ لَهُ إِنَّ عَبْدَ اللَّهِ هَلَكَ وَتَرَكَ بَنَاتٍ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أَجِيئَهُنَّ بِمِثْلِهِنَّ، فَتَزَوَّجْتُ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ وَتُصْلِحُهُنَّ. فَقَالَ "" بَارَكَ اللَّهُ لَكَ "". أَوْ قَالَ خَيْرًا.
பாடம்: 12
கணவனின் குழந்தை(யைப் பராமரிக்கும்) விஷயத்தில் அவனுக்கு மனைவி ஒத்துழைப்பது (விரும்பத் தக்கதாகும்).
5367. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (உஹுத் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ‘ஏழு பெண் குழந்தைகளை’ அல்லது ‘ஒன்பது பெண் குழந்தைகளை’ விட்டுச்சென்றார்கள். ஆகவே, (கன்னிகழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்று சொன்னேன். அவர்கள், ‘‘கன்னிப்பெண்ணையா? கன்னிகழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை; கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்று பதிலளித்தேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக்குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!” என்று சொன்னார்கள்.
அதற்கு நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், பல பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்” என்றேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு ‘வளம் வழங்குவானாக’ அல்லது ‘நன்மையைப் பொழிவானாக’ என்று சொன்னார்கள்.21

5368. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ هَلَكْتُ. قَالَ "" وَلِمَ "". قَالَ وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ. قَالَ "" فَأَعْتِقْ رَقَبَةً "". قَالَ لَيْسَ عِنْدِي. قَالَ "" فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ أَسْتَطِيعُ. قَالَ "" فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ أَجِدُ. فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ "" أَيْنَ السَّائِلُ "". قَالَ هَا أَنَا ذَا. قَالَ "" تَصَدَّقْ بِهَذَا "". قَالَ عَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ فَوَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ قَالَ "" فَأَنْتُمْ إِذًا "".
பாடம்: 13
ஏழை (தமக்குக் கிடைக்கும் பொருளைத்) தம் வீட்டாருக்கே செலவிடுதல்
5368. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘நான் அழிந்துவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் (என்ன நடந்தது)?” என்று கேட்டார்கள். அவர், ‘‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஓர் அடிமையை விடுதலை செய்துவிடுவீராக” என்று சொன்னார்கள். அதற்கு அவர் ‘‘என்னிடம் அடிமை இல்லையே!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘அது என்னால் இயலாது” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக” என்று சொன்னார்கள். அம்மனிதர், ‘‘என்னிடம் வசதி இல்லையே!” என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு பெரிய கூடை (அரக்) கொண்டுவரப்பட்டது. உடனே அவர்கள், ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இதோ! நான்தான் அது” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதைத் தர்மம் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அவர் ‘‘எங்களைவிட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன்மீது ஆணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை” என்று சொன்னார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘‘அப்படியென்றால் நீங்கள்தான் (அதற்கு உரியவர்கள்)” என்று சொன்னார்கள்.22

5369. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ لِي مِنْ أَجْرٍ فِي بَنِي أَبِي سَلَمَةَ أَنْ أُنْفِقَ عَلَيْهِمْ، وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هَكَذَا وَهَكَذَا، إِنَّمَا هُمْ بَنِيَّ. قَالَ "" نَعَمْ لَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ "".
பாடம்: 14
‘‘(குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதைப் பராமரிக்கும்) அதைப் போன்ற கடமை வாரிசுகள்மீதும் உண்டு” எனும் (2:233 ஆவது) வசனத்தொடரும், குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பில் தாய்க்குப் பங்கு உண்டா? என்பதும்
(அல்லாஹ் கூறுகின்றான்:)
அல்லாஹ் இரு மனிதர்களை ஓர் உதாரணமாகக் கூறுகின்றான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எதற்கும் சக்தி அற்றவன். தன் எசமானுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டுவரமாட்டான். மற்றவனோ தானும் நேர்வழியில் இருந்துகொண்டு, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவ்விருவரும் சமம் ஆவார்களா? (16:76)23
5369. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் (முதல் கணவரான) அபூசலமாவின் பிள்ளை களுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா? நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக) விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே!” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! அவர்களுக்காக நீ செலவிட்ட(ôல் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு” என்று பதிலளித்தார்கள்.24

5370. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هِنْدُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ مَا يَكْفِينِي وَبَنِيَّ قَالَ "" خُذِي بِالْمَعْرُوفِ "".
பாடம்: 14
‘‘(குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதைப் பராமரிக்கும்) அதைப் போன்ற கடமை வாரிசுகள்மீதும் உண்டு” எனும் (2:233 ஆவது) வசனத்தொடரும், குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பில் தாய்க்குப் பங்கு உண்டா? என்பதும்
(அல்லாஹ் கூறுகின்றான்:)
அல்லாஹ் இரு மனிதர்களை ஓர் உதாரணமாகக் கூறுகின்றான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எதற்கும் சக்தி அற்றவன். தன் எசமானுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டுவரமாட்டான். மற்றவனோ தானும் நேர்வழியில் இருந்துகொண்டு, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவ்விருவரும் சமம் ஆவார்களா? (16:76)23
5370. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியாரான) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவருடைய செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் ‘‘நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்” என்று சொன்னார்கள்.25

5371. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالرَّجُلِ الْمُتَوَفَّى عَلَيْهِ الدَّيْنُ، فَيَسْأَلُ "" هَلْ تَرَكَ لِدَيْنِهِ فَضْلاً "". فَإِنْ حُدِّثَ أَنَّهُ تَرَكَ وَفَاءً صَلَّى، وَإِلاَّ قَالَ لِلْمُسْلِمِينَ "" صَلُّوا عَلَى صَاحِبِكُمْ "". فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْفُتُوحَ قَالَ "" أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ تُوُفِّيَ مِنَ الْمُؤْمِنِينَ فَتَرَكَ دَيْنًا فَعَلَىَّ قَضَاؤُهُ، وَمَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ "".
பாடம்: 15
‘‘எவர் ஒரு (கடன்) சுமையை, அல்லது நலிந்தவர்க(ளான வாரிசு க)ளை விட்டுச்செல்கிறாரோ அவர் களின் பொறுப்பு என்னுடையது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது26
5371. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், ‘‘இவர் தமது கடனை அடைக்கப் பொருள் எதையும் விட்டுச் சென்றுள்ளாரா?” என்று கேட்பது வழக்கம். ‘‘அவர் (தமது கடனை அடைக்கத்) தேவையானதை விட்டுச்சென்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லிம்களிடம், ‘‘உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்” என்று கூறிவிடுவார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், ‘‘நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். ஆகவே, இறை நம்பிக்கையாளர்களில் எவர் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்துவிடுகிறாரோ அவரது கடனை அடைப்பது என் பொறுப்பாகும். எவர் ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்” என்று சொன்னார்கள்.27

5372. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي ابْنَةَ أَبِي سُفْيَانَ. قَالَ "" وَتُحِبِّينَ ذَلِكَ "". قُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي الْخَيْرِ أُخْتِي. فَقَالَ "" إِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ إِنَّا نَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ ابْنَةَ أَبِي سَلَمَةَ. فَقَالَ "" ابْنَةَ أُمِّ سَلَمَةَ "". فَقُلْتُ نَعَمْ. قَالَ ""فَوَاللَّهِ لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ "". وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ عُرْوَةُ ثُوَيْبَةُ أَعْتَقَهَا أَبُو لَهَبٍ.
பாடம்: 16
அடிமைப் பெண்களும் அவர்கள் அல்லாத (சுதந்திரமான)வர்களும் செவிலித்தாயாக இருப்பது
5372. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருமுறை) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யானின் புதல்வியான என் சகோதரியைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூசலமாவின் மகள் ‘துர்ரா’வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என்று கேட்க, நான் ‘‘ஆம்” என்று சொன்னேன்.
அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் ‘ஸுவைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டி யிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்!” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண் ஆவார்.) ஸுவைபாவை அபூலஹப் விடுதலை செய்திருந்தார்.28

உணவு வகைகள்
5373. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِي ِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَطْعِمُوا الْجَائِعَ، وَعُودُوا الْمَرِيضَ، وَفُكُّوا الْعَانِيَ "". قَالَ سُفْيَانُ وَالْعَانِي الأَسِيرُ.
பாடம்: 1
‘‘நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள்” எனும் (20:81ஆவது) இறைவசனம்
‘‘நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களி லிருந்து செலவு செய்யுங்கள்” (2:267) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
‘‘(தூதர்களே) தூய்மையானவற்றி óருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிபவன் ஆவேன்” (23:51) என்று அல்லாஹ் கூறுகின்றான்.2
5373. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பசித்தவருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஆனீ’ எனும் சொல்லுக்கு ‘கைதி’ என்பது பொருள்.
அத்தியாயம் : 70

5374. حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ طَعَامٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى قُبِضَ.
பாடம்: 1
‘‘நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள்” எனும் (20:81ஆவது) இறைவசனம்
‘‘நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களி லிருந்து செலவு செய்யுங்கள்” (2:267) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
‘‘(தூதர்களே) தூய்மையானவற்றி óருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிபவன் ஆவேன்” (23:51) என்று அல்லாஹ் கூறுகின்றான்.2
5374. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.