4943. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ دَخَلْتُ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ عَبْدِ اللَّهِ الشَّأْمَ فَسَمِعَ بِنَا أَبُو الدَّرْدَاءِ فَأَتَانَا فَقَالَ أَفِيكُمْ مَنْ يَقْرَأُ فَقُلْنَا نَعَمْ. قَالَ فَأَيُّكُمْ أَقْرَأُ فَأَشَارُوا إِلَىَّ فَقَالَ اقْرَأْ. فَقَرَأْتُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ أَنْتَ سَمِعْتَهَا مِنْ فِي صَاحِبِكَ قُلْتُ نَعَمْ. قَالَ وَأَنَا سَمِعْتُهَا مِنْ فِي النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَؤُلاَءِ يَأْبَوْنَ عَلَيْنَا.
பாடம்:
92. ‘அல்லைல்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(92:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பில்ஹுஸ்னா’ (நல்லறம்) எனும் சொல்லுக்கு ‘(நல்வழியில் செலவிட்ட தனது செல்வத்திற்கு) ‘அழகிய பிரதி’(பலனை இறைவன் வழங்குவான் என்று உறுதியாக அவன் நம்புவதில்லை)’ என்று பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(92:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தரத்தா’ (வீழ்ந்தான்) எனும் சொல்லுக்கு ‘இறந்தான்’ என்பது பொருள். (இப்பொருளின்படி இவ்வசனத்திற்கு ‘அவன் இறக்கும் போது அவனது பொருள் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது’ என்று பொருள் வரும். இதற்கு ‘நரகத்தில் வீழும்போது’ என்றும் சிலர் பொருள் கொண்டுள்ளனர்.)
(92:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலழ்ழா’ எனும் சொல்லுக்கு ‘கொழுந்து விட்டெரிந்தது’ என்று பொருள். (இதே சொல்லை) உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் ‘தத்தலழ்ழா’ (கொழுந்து விட்டெரியும்) என்று ஓதினார்கள்.
பாடம்: 1
ஒளிரும் பகலின் மீது சத்தியமாக! (எனும் 92:2ஆவது இறை வசனம்)
4943. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ‘‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார் கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள்.
உடனே நான், ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல்உன்ஸா” என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன்.அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர்களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன்.
‘‘(இப்படித்தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதல் முறையிலுள்ள, ‘‘வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றார்கள்)” என்று சொன்னார்கள்.2
அத்தியாயம் : 65

4944. حَدَّثَنَا عُمَرُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ قَدِمَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ عَلَى أَبِي الدَّرْدَاءِ فَطَلَبَهُمْ فَوَجَدَهُمْ فَقَالَ أَيُّكُمْ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللَّهِ قَالَ كُلُّنَا. قَالَ فَأَيُّكُمْ يَحْفَظُ وَأَشَارُوا إِلَى عَلْقَمَةَ. قَالَ كَيْفَ سَمِعْتَهُ يَقْرَأُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى}. قَالَ عَلْقَمَةُ {وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ هَكَذَا، وَهَؤُلاَءِ يُرِيدُونِي عَلَى أَنْ أَقْرَأَ {وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنْثَى} وَاللَّهِ لاَ أُتَابِعُهُمْ.
பாடம்: 2
ஆணையும் பெண்ணையும் படைத்தவன்மீது சத்தியமாக! (எனும் 92:3ஆவது இறைவசனம்)
4944. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்த) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.
பிறகு, ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘நாங்கள் அனைவரும்தான்” என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள்.
தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா” எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள்.
அல்கமா (ரஹ்) அவர்கள், ‘வஃத்தகரி வல்உன்ஸா’ என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘நான் சாட்சியம் கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்), ‘வமா கலக்கஃத் தக்கர வல்உன்ஸா’ என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.3

4945. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَقِيعِ الْغَرْقَدِ فِي جَنَازَةٍ فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ ". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ فَقَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} إِلَى قَوْلِهِ {لِلْعُسْرَى}
பாடம்: 3
‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத்தின்) வழியை நாம் எளிதாக்குவோம் ‘‘ எனும் (92:5-7) இறைவசனங்கள்
4945. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கத் (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.
உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத் தின்) வழியை நாம் எளிதாக்குவோம். எவர் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ் வையும்) பொருட்படுத்தாது, (இம் மார்க்கத்திலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கிவிடுகின்றாரோ, அவருக் குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்” எனும் (92:5-10) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.4

4946. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ فِي جَنَازَةٍ فَأَخَذَ عُودًا يَنْكُتُ فِي الأَرْضِ فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ أَوْ مِنَ الْجَنَّةِ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ قَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} الآيَةَ. قَالَ شُعْبَةُ وَحَدَّثَنِي بِهِ مَنْصُورٌ فَلَمْ أُنْكِرْهُ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ".
பாடம்: 4
‘‘மேலும், யார் நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத்தின்) வழியை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:6,7) இறைவசனங்கள்
...அபூஅப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்” என்று தொடங்கி, மேற்கண்ட (4945ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.
பாடம்: 5
அவருக்கு நன்மைக்குரிய (சொர்க்கத்தின்) வழியை நாம் எளிதாக்கு வோம் (எனும் 92:7ஆவது இறைவசனம்)
4946. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.
மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ அவருக்கு, எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4947. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ ". فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ قَالَ " لاَ، اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى} إِلَى قَوْلِهِ {فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى}
பாடம்: 6
‘‘எவர் கஞ்சத்தனம் செய்து, (தம் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்துகொண்டு நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகின்றாரோ அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்குவோம்” எனும் (92:8-10) வசனங்கள்
4947. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’ ஒன்றுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.
உடனே நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவருக்கு எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

4948. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ، فَأَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ، فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ وَمَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلاَّ كُتِبَ مَكَانُهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَإِلاَّ قَدْ كُتِبَتْ شَقِيَّةً أَوْ سَعِيدَةً ". قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى أَهْلِ السَّعَادَةِ، وَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاءِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ. قَالَ " أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاءِ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} الآيَةَ.
பாடம்: 7
‘‘நல்லறங்களைப் பொய்யாக்கி விடுகிறாரோ” எனும் (92:9ஆவது) இறைவசனம்
4948. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருநாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல் ஃகர்கதி’ல் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள்.
பிறகு ‘‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறுள்ளதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள்.
ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பேறு பெற்றவரோ அவர் நற்பேறுள்ளவராக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) நற்பேறற்றவரோ அவர் நற்பேறற்றவர் களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள்.

4949. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ فَأَخَذَ شَيْئًا فَجَعَلَ يَنْكُتُ بِهِ الأَرْضَ فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ وَمَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ قَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاءِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} الآيَةَ.
பாடம்: 8
அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்குவோம் (எனும் 92:10ஆவது இறைவசனம்)
4949. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (‘பகீஉல் ஃகர்கத்’ மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.
மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொரு வருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகைசெய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழிகாணப்படும்” என்று கூறிவிட்டு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.5

4950. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدُبَ بْنَ سُفْيَانَ ـ رضى الله عنه ـ قَالَ اشْتَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَقُمْ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثًا، فَجَاءَتِ امْرَأَةٌ فَقَالَتْ يَا مُحَمَّدُ إِنِّي لأَرْجُو أَنْ يَكُونَ شَيْطَانُكَ قَدْ تَرَكَكَ، لَمْ أَرَهُ قَرِبَكَ مُنْذُ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثًا. فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
பாடம்:
93. ‘அள்ளுஹா’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(93:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா சஜா’ எனும் சொல்லுக்கு ‘அது (பகலுக்குச்) சமமாகும்போது’ என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(இச்சொல்லுக்கு) இருட்டிவிடும்போது, (உறக்கம் வந்து) அமைதியடையும்போது என்று பொருள்.
(93:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆயில்’ எனும் சொல்லுக்கு ‘குழந்தை குட்டிகள் உடையவர்’ (குடும்பஸ்தர்) என்பது பொருள்.
பாடம்: 1
(நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை (எனும் 93:3ஆவது இறை வசனம்)
4950. ஜுன்துப் பின் (அப்தில்லாஹ் பின்) சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக்கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை” என்று கூறினாள்.2
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின்மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.3

4951. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا الْبَجَلِيَّ، قَالَتِ امْرَأَةٌ يَا رَسُولَ اللَّهِ مَا أُرَى صَاحِبَكَ إِلاَّ أَبْطَأَكَ. فَنَزَلَتْ {مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
பாடம்: 2
(நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:3ஆவது) இறை வசனம்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள சொல்லை) ‘மா வத்தஅக்க’ என அழுத்தக் குறியுடனும், ‘மா வதஅக்க’ என அழுத்தக் குறியின்றியும் ஓதப்படுகிறது. பொருள் ஒன்றே! ‘‘உம்மைக் கைவிடவில்லை”.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
(இந்த வசனத்தின் பொருளாவது:) உம்மை உம்முடைய இறைவன் கைவிடவுமில்லை; உம்மீது கோபங்கொள்ளவுமில்லை.
4951. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத்தான் வந்துள்ளார் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.4
அப்போதுதான், ‘‘(நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:3ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

4952. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيٌّ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ. {تَقْوِيمٍ} الْخَلْقِ.
பாடம்:
94. ‘அலம் நஷ்ரஹ்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(94:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘விஸ்ரக்க’ (உமது சுமை) எனும் சொல், அறியாமைக் காலத்து (பாவ)ச் சுமைகளைக் குறிக்கும்.
(94:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்கள’ எனும் சொல்லுக்கு ‘அழுத்திக் கொண்டிருந்தது’ என்று பொருள்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(94:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஅல் உஸ்ரி யுஸ்ரா’ எனும் சொற்றொடருக்கு ‘அந்தச் சிரமத்துடன் இன்னோர் இலகுவும் இருக்கிறது’ என்று பொருள்.
இந்த வசனம், ‘‘எங்கள் விஷயத்தில் இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” எனும் (9:52ஆவது) இறைவசனத்தின் கருத்தில் அமைந்துள்ளது.2 ஒரு துன்பம், இரு இன்பங்களை ஒருபோதும் வெல்ல முடியாது.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(94:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபன்ஸப்’ எனும் சொல்லுக்கு ‘உம் தேவைகளுக்காக உம்முடைய இறைவனிடத்தில் (கோரி) முயல்வீராக’ என்று பொருள்.
‘(நபியே!) நாம் உமது இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?’ எனும் (94:1ஆவது) வசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இஸ்லாத்துக்காக அவர்களின் இதயத்தை இறைவன் விரிவாக்கினான்” என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.
பாடம்:
95. ‘அத்தீன்’ அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அந்த (95:1ஆவது) வசனம், மக்கள் உட்கொள்ளும் அத்திப்பழத்தையும் ஆலிவ் மரத்தையுமே குறிக்கிறது.
(95:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபமா யுகஃத்திபுக்க’ (உம்மை யாரால் பொய்யாக்க முடியும்) எனும் சொற்றொடருக்கு ‘மக்கள் (மறுமை நாளில்) தங்கள் (நல்ல, கெட்ட) செயல்களுக்கேற்ப பிரதிபலன் வழங்கப்படுவார்கள் எனும் உங்களது கூற்றை எவரால் பொய்யாக்க முடியும்?’ என்று பொருள்.
இது ‘நற்பலன், அல்லது தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மைப் பொய்யர் என்று கூற எவருக்குத் துணிவுண்டு?’ என்று கூறுவதைப் போன்றுள்ளது.
பாடம்: 1
4952. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகை யின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.2
(95:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தக்வீம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்புகளை செம்மைப்படுத்தல்’ என்பது பொருள்.

4953. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنَا أَبُو صَالِحٍ، سَلْمَوَيْهِ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلاَّ جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلاَءُ فَكَانَ يَلْحَقُ بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ ـ قَالَ وَالتَّحَنُّثُ التَّعَبُّدُ ـ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى أَهْلِهِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ بِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهْوَ فِي غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَنَا بِقَارِئٍ ". قَالَ " فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجُهْدُ ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ اقْرَأْ. قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيِةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجُهْدُ، ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ اقْرَأْ. قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجُهْدُ ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ} ". الآيَاتِ إِلَى قَوْلِهِ {عَلَّمَ الإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ} فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ قَالَ لِخَدِيجَةَ " أَىْ خَدِيجَةُ مَا لِي، لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ". فَأَخْبَرَهَا الْخَبَرَ. قَالَتْ خَدِيجَةُ كَلاَّ أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، فَوَاللَّهِ إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ. فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلٍ وَهْوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخِي أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ وَيَكْتُبُ مِنَ الإِنْجِيلِ بِالْعَرَبِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ فَقَالَتْ خَدِيجَةُ يَا ابْنَ عَمِّ اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ. قَالَ وَرَقَةُ يَا ابْنَ أَخِي مَاذَا تَرَى فَأَخْبَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم خَبَرَ مَا رَأَى. فَقَالَ وَرَقَةُ هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، لَيْتَنِي فِيهَا جَذَعًا، لَيْتَنِي أَكُونُ حَيًّا. ذَكَرَ حَرْفًا. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَوَمُخْرِجِيَّ هُمْ ". قَالَ وَرَقَةُ نَعَمْ لَمْ يَأْتِ رَجُلٌ بِمَا جِئْتَ بِهِ إِلاَّ أُوذِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ حَيًّا أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الْوَحْىُ، فَتْرَةً حَتَّى حَزِنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்:
96. ‘அல்அலக்’ அத்தியாயம்1
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
திருக்குர்ஆனின் ஆரம்பத்தில் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்திற்கு முன்பாக), ‘‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமை” எழுதுங்கள். பிறகு, ஒவ்வோர் இரு அத்தியாயங்களுக்கிடையேயும் (பிரித்துக் காட்டும் அடையாளமாக) ஒரு கோடு வரைந்துகொள்ளுங்கள்.2
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(96:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நாதியஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனுடைய உற்றார் உறவினர்’ என்று பொருள்.
(96:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸபானியா’ (நரகத்தின் காவலர்களை) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது.
அபூஉபைதா மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(96:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஆ’ எனும் சொல்லுக்கு ‘மீட்சி’ என்பது பொருள்.
(96:15ஆவது வசனத்திலுள்ள) ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல்லுக்கு ‘நிச்சயமாக நாம் பிடித்து இழுப்போம்’ என்று பொருள். ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல் ‘சஃபஉத்து பி யதிஹி’ எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு, ‘நான் அவனை எனது கையால் பிடித்தேன்’ என்பது பொருள்.
பாடம்: 1
4953. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்குமுன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள்.
அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டுசெல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது.
ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘‘ஓதுவீராக!” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று சொன்னார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்று கூறினேன்.
உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.
பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்துச் சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு), ‘‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ‘‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை (யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவு களைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்குச் சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வராக்கா பின் நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். - ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவச் சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!” என்றார்கள்.
அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட ‘வரக்கா’, ‘‘(நீர் கண்ட) இவர்தான் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, ‘‘(மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி வேறுசில வார்த்தைகளையும் சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, ‘வரக்கா’, ‘‘ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று சொன்னார்.
அதன் பின்னர் ‘வரக்கா’ நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்றுபோயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.3

4954. قَالَ مُحَمَّدُ بْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ قَالَ فِي حَدِيثِهِ " بَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي، فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ فَفَرِقْتُ مِنْهُ فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي ". فَدَثَّرُوهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ * وَرَبَّكَ فَكَبِّرْ * وَثِيَابَكَ فَطَهِّرْ * وَالرِّجْزَ فَاهْجُرْ}. قَالَ أَبُو سَلَمَةَ وَهْىَ الأَوْثَانُ الَّتِي كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَعْبُدُونَ. قَالَ ثُمَّ تَتَابَعَ الْوَحْىُ.
பாடம்:
96. ‘அல்அலக்’ அத்தியாயம்1
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
திருக்குர்ஆனின் ஆரம்பத்தில் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்திற்கு முன்பாக), ‘‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமை” எழுதுங்கள். பிறகு, ஒவ்வோர் இரு அத்தியாயங்களுக்கிடையேயும் (பிரித்துக் காட்டும் அடையாளமாக) ஒரு கோடு வரைந்துகொள்ளுங்கள்.2
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(96:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நாதியஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனுடைய உற்றார் உறவினர்’ என்று பொருள்.
(96:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸபானியா’ (நரகத்தின் காவலர்களை) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது.
அபூஉபைதா மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(96:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஆ’ எனும் சொல்லுக்கு ‘மீட்சி’ என்பது பொருள்.
(96:15ஆவது வசனத்திலுள்ள) ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல்லுக்கு ‘நிச்சயமாக நாம் பிடித்து இழுப்போம்’ என்று பொருள். ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல் ‘சஃபஉத்து பி யதிஹி’ எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு, ‘நான் அவனை எனது கையால் பிடித்தேன்’ என்பது பொருள்.
பாடம்: 1
4954. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேத அறிவிப்பு (வஹீ) நின்று போயிருந்த இடைக் காலம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள்.
அப்போது அல்லாஹ், ‘‘போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்தி ருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகி யிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.-
இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.4

4955. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّالِحَةُ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ}
பாடம்: 2
‘‘அவனே மனிதனைக் கருக்கட்டி யிலிருந்து படைத்தான்” எனும் (96:2ஆவது) இறைவசனம்
4955. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.5

4956. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، قَالَ مُحَمَّدُ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها. أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّادِقَةُ جَاءَهُ الْمَلَكُ فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ}
பாடம்: 3
‘‘(நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடை யாளி” எனும் (96:3ஆவது) இறை வசனம்
4956. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4956. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4957. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَرَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى خَدِيجَةَ فَقَالَ " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَذَكَرَ الْحَدِيثَ
பாடம்: 4
அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான் (எனும் 96:4ஆவது இறைவசனம்)
4957. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹிரா குகையிலிருந்து), கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுவதுமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.

4958. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ أَبُو جَهْلٍ لَئِنْ رَأَيْتُ مُحَمَّدًا يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ لأَطَأَنَّ عَلَى عُنُقِهِ. فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " لَوْ فَعَلَهُ لأَخَذَتْهُ الْمَلاَئِكَةُ ". تَابَعَهُ عَمْرُو بْنُ خَالِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ الْكَرِيمِ.
பாடம்: 5
‘‘அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சய மாக, அவனது நெற்றி முடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறி ழைத்த- பொய்யுரைத்த அந்த நெற்றியை!” எனும் (96:15,16 ஆகிய) இறைவசனங்கள்
4958. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘கஅபா’ அருகில் முஹம்மத் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, ‘‘அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4959. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ. " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ ". فَبَكَى.
பாடம்:
97. ‘அல்கத்ர்’ அத்தியாயம்1
(97:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்லஉ’ எனும் சொல்லுக்கு ‘உதயமாதல்’ என்று பொருள். (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள இதே சொல்லான) ‘மத்லிஉ’ என்பதற்கு ‘உதயமாகுமிடம்’ என்று பொருள்.
(97:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்ஸல்னாஹு’ என்பதிலுள்ள ‘ஹு’ எனும் பிரதிப்பெயர்ச் சொல், குர்ஆனையே சுட்டுகிறது.
(குர்ஆனை) அருளியவன் அல்லாஹ் ஒருவனாயிருக்க (நான் இதை இறக்கி வைத்தேன் என்பதற்குப் பதிலாக) நாம் இ(ந்)த (குர்ஆ)னை இறக்கிவைத்தோம்’ என்று பன்மையாகக் குறிப்பிட்டதற்குக் காரணம், (பொதுவாக) அரபியர் ஒருமை வினையை வலியுறுத்த பன்மையைப் பயன்படுத்துவர். இதன் மூலம் அந்தச் சொல் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக ஆகும்.
பாடம்:
98. ‘அல்பய்யினா’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
(98:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முன்ஃபக்கீன’ எனும் சொல்லுக்கு ‘விலகிக்கொள்வோர்’ என்பது பொருள்.
(98:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கய்யிமா’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள்.
(98:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தீனுல் கய்யிமா’ (நிலையான மார்க்கம்) என்பதில், ‘தீன்’ எனும் (ஆண்பால்) சொல்லை ‘அல்கய்யிமா’ எனும் பெண்பால் சொல்லுடன் இறைவன் இணைத்துள்ளான். (‘தீன்’ எனும் ஆண்பால் சொல்லை ‘அல்மில்லத்’ (மார்க்கம்) எனும் பெண்பால் சொல்லாலும் அழைப்பதே காரணம்.)
பாடம்: 1
4959. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள்.
உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.2

4960. حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ ". قَالَ أُبَىٌّ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " اللَّهُ سَمَّاكَ لِي ". فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي. قَالَ قَتَادَةُ فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ}
பாடம்: 2
4960. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது” என்றார்கள்.

4961. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي دَاوُدَ أَبُو جَعْفَرٍ الْمُنَادِي، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىِّ بْنِ كَعْبٍ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ الْقُرْآنَ ". قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " نَعَمْ ". قَالَ وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ الْعَالَمِينَ قَالَ " نَعَمْ ". فَذَرَفَتْ عَيْنَاهُ.
பாடம் : 3
4961. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?” என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், ‘‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?” என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.

4962. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْخَيْلُ لِثَلاَثَةٍ، لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ فِي الْمَرْجِ وَالرَّوْضَةِ، كَانَ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ بِهِ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ فَهْىَ لِذَلِكَ الرَّجُلِ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا فَهْىَ لَهُ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً فَهْىَ عَلَى ذَلِكَ وِزْرٌ. فَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ. قَالَ " مَا أَنْزَلَ اللَّهُ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةَ الْفَاذَّةَ الْجَامِعَةَ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}
பாடம்:
99. ‘அஸ்ஸில்ஸால்’ அத்தியாயம்1
பாடம்: 1
‘‘ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (மறுமையில்) அதனையும் கண்டு கொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனம்
(99:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஹா லஹா’ (வஹீ மூலம் அதற்கு அறிவித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், ‘அவ்ஹா இலைஹா’ எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச்சொற்களான) ‘வஹா லஹா’, ‘வஹா இலைஹா’ ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.
4962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.
குதிரையை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.
அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.
இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (அதாவது அதை விற்ற தொகையின் ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.
மற்றொருவர் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். அதன் காரணத்தால், அது அவருக்குப் பாவச்சுமையாக மாறிவிடுகின்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.2
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.