454. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عَلَى باب حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ.
பாடம் : 69 பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
454. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாச-ல் நின்றுகொண்டிருப்பதையும் அப்போது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருப்பதையும் நான் பார்வையிட்டேன்.

அவர்களின் விளையாட்டைப் பார்த் துக்கொண்டிருந்த என்னை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியால் (மற்றவர்கள் என்னைப் பார்க்காத வகையில்) மறைத்துக் கொண்டி ருந்தார்கள்.


அத்தியாயம் : 8
455. وَزَادَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ.
பாடம் : 69 பள்ளிவாச-ல் ஈட்டி வீரர்கள் (வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
455. இப்ராஹீம் பின் முன்திர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அபிசீனியர்கள் தம் ஈட்டிகளால் (வீரவிளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களை (இவ்வாறு நிற்பதைக்) கண்டேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.50

அத்தியாயம் : 8
456. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الْوَلاَءُ لِي. وَقَالَ أَهْلُهَا إِنْ شِئْتِ أَعْطَيْتِهَا مَا بَقِيَ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً إِنْ شِئْتِ أَعْتَقْتِهَا وَيَكُونُ الْوَلاَءُ لَنَا ـ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَّرَتْهُ ذَلِكَ فَقَالَ "" ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَصَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ فَقَالَ "" مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ "". قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى وَعَبْدُ الْوَهَّابِ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ. وَقَالَ جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عَمْرَةَ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ. رَوَاهُ مَالِكٌ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ أَنَّ بَرِيرَةَ. وَلَمْ يَذْكُرْ صَعِدَ الْمِنْبَرَ.
பாடம் : 70 பள்ளிவாச-ல் உள்ள சொற் பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்றல், வாங்கல் பற்றிப் பேசுவது
456. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைச் செலுத்த உதவி கோரி) என்னிடம் வந்தார். நான், “நீ விரும்பினால் உன் உரிமையாளர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை (‘வலாஉ’) எனக்கே உரியதாகிவிட வேண்டும்” என்று கூறினேன்.

ஆனால், பரீராவின் உரிமையாளர்கள் என்னிடம், “நீங்கள் விரும்பினால் பரீரா செலுத்த வேண்டிய மீதித் தொகையைச் செலுத்தி (பரீராவை விடுதலை செய்து) விடலாம்” என்று கூறினார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கை யில், “நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்துகொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகிவிட வேண்டும்.” என (பரீராவின் உரிமையாளர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது, நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “அவரை வாங்கி நீ விடுதலை செய்துவிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது” என்று சொன்னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-லுள்ள) சொற்பொழிவு மேடைமீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:) “மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! யார் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று குறிப்பிட்டார்கள்.51

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் மா-க் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘சொற்பொழிவு மேடைமீது நபி (ஸல்) அவர்கள் ஏறியது’ பற்றிய குறிப்பு இல்லை.

அத்தியாயம் : 8
457. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى "" يَا كَعْبُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا "". وَأَوْمَأَ إِلَيْهِ أَىِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 71 (பள்ளிவாசலில் கடனாளி யிடம்) கடனைக் கேட்பதும் அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும்
457. கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்துத் திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல் களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅப்!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உமது கடனி-ருந்து தள்ளுபடி செய்க!” என்று கூறி, பாதியளவு கடனைக் குறைத்துக்கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள்.

“அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று பாதிக் கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 8
458. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَسْوَدَ ـ أَوِ امْرَأَةً سَوْدَاءَ ـ كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ فَقَالُوا مَاتَ. قَالَ "" أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ "". ـ أَوْ قَالَ قَبْرِهَا ـ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 72 பள்ளிவாசலைப் பெருக்குவ தும் துண்டுத் துணிகள், குச்சி கள், தூசுகள் (கிடந்தால் அவற் றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும்
458. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ‘ஒரு கறுப்பு ஆண்’ அல்லது ‘ஒரு கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். (அவர் இறந்த செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாம-ருந்தது.) ஆகவே, அவரைப் பற்றி (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்” எனக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித் திருக்கக் கூடாதா? ‘அவரது அடக்கத் தலத்தை’ அல்லது ‘அந்தப் பெண்மணி யின் அடக்கத் தலத்தை’ எனக்குக் காட்டுங்கள்” என்று கூறிவிட்டு, அவரது அடக்கத் தலத்திற்குச் சென்று அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.

அத்தியாயம் : 8
459. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَ الآيَاتُ مِنْ سُورَةِ الْبَقَرَةِ فِي الرِّبَا، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَسْجِدِ، فَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ تِجَارَةَ الْخَمْرِ.
பாடம் : 73 மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதெனப் பள்ளி வாசலில் அறிவிப்பது
459. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்பகரா’ அத்தியாத்தின் (இறுதி) வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு வந்து, அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 8
460. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ وَاقِدٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً ـ أَوْ رَجُلاً ـ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ ـ وَلاَ أُرَاهُ إِلاَّ امْرَأَةً ـ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهِ.
பாடம் : 74 பள்ளிவாசலுக்கென சேவகர் கள் இருப்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இம்ரானின் துணைவி, ‘என் இறைவா! எனது வயிற்றில் (வளர்ந்துகொண்டு) இருப்பதை உனக்கு அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துள்ளேன்’ என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக” (3:35) எனும் வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல், “இந்த மஸ்ஜிது(ல் அக்ஸா பள்ளிவாசலு)க்கு சேவகம் செய்வதற்காக (நேர்ச்சை செய்துள்ளேன்)” என்று கூறினார்கள்.
460. அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை ‘ஓர் ஆண்’ அல்லது ‘ஒரு பெண்’ பெருக்கு பவராக இருந்தார்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். - ‘ஒரு பெண்மணி’ என்று அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்.- பிறகு அவரது அடக்கத் தலத்தில் நபி (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை தொழுதது பற்றிய (மேற்கண்ட 458ஆவது) ஹதீஸைக் கூறினார்கள்.

அத்தியாயம் : 8
461. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ عَلَىَّ الْبَارِحَةَ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ لِيَقْطَعَ عَلَىَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي "". قَالَ رَوْحٌ فَرَدَّهُ خَاسِئًا.
பாடம் : 75 கைதி, கடன்காரர் ஆகியோரைப் பள்ளிவாசலில் கட்டி வைப்பது
461. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், “நேற்றிரவு முரட்டு ‘ஜின்’ ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற் காகத் திடீரென்று வந்து நின்றது” என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தை யையோ கூறினார்கள்.

பிறகு “அதன் மீது அல்லாஹ் எனக்குச் சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்கலாம் என்று நினைத் தேன். அப்போது “இறைவா! எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக’ (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது” என்று கூறி னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்கள், “ஆகவே, நான் அதை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டேன்” என்றும் நபியவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 8
462. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَطْلِقُوا ثُمَامَةَ "". فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ، فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ.
பாடம் : 76 இஸ்லாத்தைத் தழுவும்போது குளிப்பதும், பள்ளிவாச-ல் கைதியைக் கட்டிவைப்பதும் (கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் அல்ஹாரிஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள், கடன்காரரைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்குமாறு ஆணையிடு வார்கள்.52
462. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (‘யமாமா’வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி (மூன்று நாட்களாக வந்து பார்த்தார்கள். மூன்றாவது நாள்) வந்தபோது, ‘ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அவர் பள்ளிவாசலுக்கு அருகி-ருந்த (அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்த மான) பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளிவாசலுக்குள் வந்து “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்” என்றார்.

அத்தியாயம் : 8
463. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ فِي الأَكْحَلِ، فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْمَةً فِي الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ، فَلَمْ يَرُعْهُمْ ـ وَفِي الْمَسْجِدِ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ ـ إِلاَّ الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ فَقَالُوا يَا أَهْلَ الْخَيْمَةِ، مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ فَإِذَا سَعْدٌ يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ فِيهَا.
பாடம் : 77 நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாச-ல் கூடாரம் அமைப்பது
463. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் நாடி நரம்பில் தாக்கப்பட்டார்கள். அவரை அருகில்வைத்து நலம் விசாரிப்பதற்காக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (அவருக்கென) ஒரு கூடாரத்தை நபி (ஸல்) அவர்கள் அமைத்தார்கள் -பள்ளிவாசலில் பனூ ஃகிஃபார் குலத்தாருக்கென ஒரு கூடாரம் இருந்தது- சஅத் (ரலி) அவர்களின் (உடலில் இருந்து வழிந்தோடிய) இரத்தம் தான் அக்குலத்தாரை அதிர்ச்சியடையச் செய்தது.

அப்போது அவர்கள், “கூடாரவாசி களே! உங்கள் பகுதியி-ருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன?” என்று கேட்டுக்கொண்டே அங்கு சென்று பார்த்தபோது, தமது காயத்தி-ருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அ(ந்த நோயிலேயே, அல்லது அந்தக் கூடாரத்)தி லேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள்.

அத்தியாயம் : 7
464. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. قَالَ "" طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ "". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ.
பாடம் : 78 தேவை நிமித்தம் ஒட்டகத்தைப் பள்ளிவாசலுக்குள் கொண்டு வருவது “நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
464. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் நோயுற்றுள்ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்கப்பா-ருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!” என்று சொன்னார்கள்.

அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 8
465. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ رَجُلَيْنِ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ.
பாடம் : 79
465. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு நடந்து)சென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை ஒவ் வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.

அத்தியாயம் : 8
466. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ "". فَبَكَى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْعَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا. قَالَ "" يَا أَبَا بَكْرٍ لاَ تَبْكِ، إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ باب إِلاَّ سُدَّ إِلاَّ باب أَبِي بَكْرٍ "".
பாடம் : 80 பள்ளிவாச-ல் சிறு நுழை வாயில் அமைப்பதும் நடை பாதை ஏற்படுத்துவதும்
466. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு விருப்ப உரிமை அளித் தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விருப்ப உரிமை அளித்தபோது அ(ந்த அடியாரன)வர், அல்லாஹ்விடமிருப்பதைத் தேர்ந்தெடுத் துக்கொண்டால், அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழ வேண்டும்.?” என்று வினவிக்கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் அந்த (விருப்ப உரிமை அளிக்கப் பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர்

(ரலி) அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள்” என்று கூறிவிட்டு, “தமது நட்பிலும் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரே ஆவார். ஒருவரை என் சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதை விடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்கும் இடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாச-ல் எந்தச் சிறு நுழைவாயிலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
467. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَىَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلاً لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ "".
பாடம் : 80 பள்ளிவாச-ல் சிறு நுழை வாயில் அமைப்பதும் நடை பாதை ஏற்படுத்துவதும்
467. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது தமது தலையில் ஒரு துணியால் கட்டுப்போட்டவர்களாக (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

பிறகு “தமது நட்பிலும் செல்வத்திலும் எனக்கு அபூபக்ர் பின் அபீகுஹாஃபாவை விட வேறெவரும் பேருதவி புரிந்தவர் கிடையாது. மக்களில் ஒருவரை நான் (என்) உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர் களையே உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்ததாகும்” என்று கூறிவிட்டு, “இந்தப் பள்ளிவாச-ல் என்னிடம் வருவதற்காக உள்ள எல்லா சிறு நுழைவாயில்களையும் அடைத்து விடுங்கள்; அபூபக்ரின் நுழைவாயிலைத் தவிர” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 8
468. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَ مَكَّةَ، فَدَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ، فَفَتَحَ الْبَابَ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَبِلاَلٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، ثُمَّ أُغْلِقَ الْبَابُ، فَلَبِثَ فِيهِ سَاعَةً ثُمَّ خَرَجُوا. قَالَ ابْنُ عُمَرَ فَبَدَرْتُ فَسَأَلْتُ بِلاَلاً فَقَالَ صَلَّى فِيهِ. فَقُلْتُ فِي أَىٍّ قَالَ بَيْنَ الأُسْطُوَانَتَيْنِ. قَالَ ابْنُ عُمَرَ فَذَهَبَ عَلَىَّ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى.
பாடம் : 81 கஅபாவுக்கும் இதர இறையில் லங்களுக்கும் கதவுகளும் தாழ்ப்பாள்களும் அமைத்தல் இப்னு ஜுரைஜ் (அப்துல் ம-க் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு அபீமுலைக்கா அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அத்- தைமீ (ரஹ்) அவர்கள், “அப்துல் மலிக் அவர்களே! நீங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பள்ளிவாசல்களையும் அவற்றின் கதவுகளையும் பார்த்திருக்க வேண்டுமே! (அவற்றின் தூய்மையையும் உறுதியையும் கண்டு வியந்துபோயிருப்பீர் கள்)” என்றார்கள்.
468. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவுக்கு வந்தபோது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் (வந்து) இறையில்லம் கஅபாவின் கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும், பிலால், உசாமா பின் ஸைத், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டனர். அதில் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிறகு அனைவரும் வெளியே வந்தனர்.

நான் விரைந்து வந்து பிலால் (ரலி) அவர்களிடம், (‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?’ என்று) கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “(ஆம்) அதனுள் தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள். “எ(ந்த இடத்)தில் தொழுதார்கள்?” என்று கேட்டதற்கு, ‘இரண்டு தூண்களுக்கிடையே’ என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது “எத்தனை ரக்அத்கள் தொழு தார்கள்?” என்று கேட்கத் தவறிவிட்டேன்.

அத்தியாயம் : 8
469. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ.
பாடம் : 82 பள்ளிவாச-ல் இணைவைப் பாளர் நுழைவது
469. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படை ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூ ஹனீஃபா குலத்தை சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டுவந்தனர். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தனர்.

அத்தியாயம் : 8
470. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ. فَجِئْتُهُ بِهِمَا. قَالَ مَنْ أَنْتُمَا ـ أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ. قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
பாடம் : 83 பள்ளிவாச-ல் உரத்த குர-ல் பேசுவது
470. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் நின்றுகொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என்மீது சிறு கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்தபோது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். “நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வருவீராக” என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்), ‘நீங்கள் யார்?’ அல்லது ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘நாங்கள் தாயிஃப்வாசிகள்’ என்று பதிலளித்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “(நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய்விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந் திருந்தால், நிச்சயமாக நான் உங்கள் இருவரையும் (சாட்டையால்) அடித்திருப் பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாச-ல் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
471. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى "" يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ. قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 83 பள்ளிவாச-ல் உரத்த குர-ல் பேசுவது
471. கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டி யிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்.

(இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கி, “கஅப் பின் மா-க்! கஅப்!” என்று அழைத்தார்கள். உடனே நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அப்போது அவர்கள் “உமது கடனி-ருந்து பாதியைத் தள்ளுபடி செய்க” என்று சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத் ரத்தை நோக்கி), “எழுந்து சென்று பாதிக் கடனைச் செலுத்துவீராக” என்றார்கள்.53

அத்தியாயம் : 8
472. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الْمِنْبَرِ مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ قَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى "". وَإِنَّهُ كَانَ يَقُولُ اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِهِ.
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
472. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபோது ஒரு மனிதர், “இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (இறுதியில்) ஒரு ரக்அத் தொழுதுகொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களின் இறுதித் தொழுகையாக ‘வித்ரை’ ஆக்கிக்கொள்ளுங்கள்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே கட்டளை யிட்டார்கள்” என்று கூறுவார்கள்.


அத்தியாயம் : 8
473. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ "". قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ.
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
473. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) உரையாற்றிக்கொண்டி ருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, “இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டி ரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்; சுப்ஹு தொழுகை(யின் நேரம் நுழைந்து விட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் (இறுதி யில்) வித்ருக்காக ஒரு ரக்அத் தொழுது கொள்ளுங்கள்! நீங்கள் தொழுது முடித்த வற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.54

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களைச் சப்தமிட்டு அழைத்து’ என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 8