434. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ ـ أَوِ الرَّجُلُ الصَّالِحُ ـ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ "".
பாடம் : 54
கிறித்தவ ஆலயங்களில் தொழு வது
“உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழையமாட்டோம்” என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறித்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உருவச் சிலைகள் இல்லாத கிறித்தவ ஆலயங்களில் தொழுதுள்ளார்கள்.42
434. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனிய நாட்டில் தாம் கண்ட ‘மரியா’ என்றழைக்கப்பட்ட ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே ‘நல்ல அடியார்’ அல்லது ‘நல்ல மனிதர்’ ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவரது சமாதியின் மீது வழிபாட்டுத் தலம் ஒன்றைக் கட்டிவிடு வார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும்விடுவார்கள். இத்தகையோர் தான் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.43
அத்தியாயம் : 8

435. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهْوَ كَذَلِكَ " لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ". يُحَذِّرُ مَا صَنَعُوا.
பாடம் : 55
435. ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகி யோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தமது முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கறுப்புத் துணி ஒன்றைப் போட்டுக்கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது, அதைத் தமது முகத்தி-ருந்து விலக்கிவிடுவார்கள்.
அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணை யிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை அவர்கள் வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடாதீர்கள் எனத் தம் சமுதாயத் தாரை) எச்சரித்தார்கள்.

437. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ "".
பாடம் : 55
437. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத்தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ حَدَّثَنَا سَيَّارٌ ـ هُوَ أَبُو الْحَكَمِ ـ قَالَ حَدَّثَنَا يَزِيدُ الْفَقِيرُ، قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي، نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ "".
பாடம் : 56
“பூமி முழுவதும் எனக்குத் தொழுமிடமாகவும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது” எனும் நபிமொழி
438. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் யாருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங் கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:
1. (எதிரிகளுக்கும் எனக்கும் இடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவு இருந் தாலும், (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. எனக்குப் பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழு மிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்கேனும் தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால், (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்.
3. (முந்தைய இறைத்தூதர்கள் யாருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காகப்) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44

439. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ وَلِيدَةً، كَانَتْ سَوْدَاءَ لِحَىٍّ مِنَ الْعَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ قَالَتْ فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ قَالَتْ فَوَضَعَتْهُ أَوْ وَقَعَ مِنْهَا، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهْوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطَفَتْهُ قَالَتْ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ قَالَتْ فَاتَّهَمُونِي بِهِ قَالَتْ فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا قَالَتْ وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ، إِذْ مَرَّتِ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ قَالَتْ فَوَقَعَ بَيْنَهُمْ قَالَتْ فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ ـ زَعَمْتُمْ ـ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ قَالَتْ فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَتْ. قَالَتْ عَائِشَةُ فَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشٌ قَالَتْ فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي قَالَتْ فَلاَ تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلاَّ قَالَتْ وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ لاَ تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلاَّ قُلْتِ هَذَا قَالَتْ فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ.
பாடம் : 57
பெண்கள் பள்ளிவாச-ல் (தங்கி) உறங்குவது
439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கறுப்பு நிற அடிமைப்பெண் அரபியரில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். பின்னர் அவளை அவர்கள் விடுதலை செய்து விட்டனர். ஆயினும், அவர்களுடனேயே அவள் இருந்துவந்தாள். அந்தப் பெண் (தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பின்வருமாறு என்னிடம்) கூறினாள்:
(ஒரு நாள்) அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் (மணமுடித்த புதிதில்) சிவப்புத் தோ-ல் முத்துகள் பதிக்கபட்ட அரையணித் தோள் பட்டிகை அணிந்துகொண்டு (குளியலறைக்குப்) புறப்பட்டாள்.45
அப்போது ‘அவள் அதை (ஓர் இடத்தில் கழற்றி) வைத்தாள்’ அல்லது ‘(எதிர்பாராத விதமாக) அந்தப் பட்டிகை அவளிடமிருந்து (கழன்று) விழுந்துவிட்டது’. கீழே கிடந்த அதைக் கடந்து சென்ற பருந்துக் குஞ்சு ஒன்று, இறைச்சி என்று நினைத்துக் கொத்திச் சென்றுவிட்டது. அவர்கள் அதைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்தார் (அதை நான்தான் திருடியிருப்பேன் என்று எண்ணி) என்மீது குற்றம்சாட்டி (என்னை வதைத்த)னர். (எந்த அளவுக்கென்றால்,) எனது பிறவி உறுப்பில்கூட சோதனையிட்டனர்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது, பறந்துவந்த அந்தப் பருந்துக் குஞ்சு அந்தப் பட்டிகையைக் (கீழே) போட அவர்களுக்கு மத்தியில் அது விழுந்தது. (உடனே) நான் (அவர்களிடம்), “நிரபராதியான என்மீது (திருட்டுக்)குற்றம் சாட்டி, (அதை நான் எடுத்துவிட்டதாக)க் கூறினீர்களே! அந்தப் பட்டிகை இதோ இங்கு இருக்கிறது” என்று சொன்னேன். இதற்குப் பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினேன்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் அந்தப் பெண்ணுக்கென முடியாலான ஒரு கூடாரம்’ அல்லது ‘சிறிய குடில்’ இருந்தது. (அதில் அவள் வசித்துவந்தாள்.)
அந்தப் பெண் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார். அவர் என்னிடம் அமர்ந்திருந்த ஒவ்வோர் அமர்வி(ன் முடிவி)லும் (பின்வருமாறு) பாடாமல் அவர் இருந்ததில்லை:
எம் இறைவனின் விந்தைப் பட்டி
ய-ல்
அந்த அரையணிப் பட்டிகை நாளும் ஒன்றே!
எனை இறைமறுப்பின் பட்டியி-ருந்து
ஈடேற்றிக் காத்த நாளும் அன்றே!
(ஒரு நாள்) நான் அவரிடம், “நீ என்னுடன் அமரும்போதெல்லாம் இதை நீ சொல்லாமல் இருப்பதில்லையே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அப்போதுதான் அந்தப் பெண் (மேற்கண்ட) அந்தச் செய்தியை என்னிடம் கூறினார்.

440. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهْوَ شَابٌّ أَعْزَبُ لاَ أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 58
பள்ளிவாசலில் ஆண்கள் உறங்குவது
“உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
“திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர்” என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
440. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மணமாகாத, குடும்பமில்லாத இளைஞ னாக நான் இருந்தபோது, நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசலில் (தங்கி) உறங்கிக் கொண்டிருந்தேன்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

441. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ "" أَيْنَ ابْنُ عَمِّكِ "". قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَىْءٌ، فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لإِنْسَانٍ "" انْظُرْ أَيْنَ هُوَ "". فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُضْطَجِعٌ، قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ، وَأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ "" قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ "".
பாடம் : 58
பள்ளிவாசலில் ஆண்கள் உறங்குவது
“உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
“திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர்” என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
441. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது, (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே, அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுக்காமல் (வீட்டி-ருந்து) சென்று விட்டார்” என்று கூறினார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாச-ல் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தபோது, அலீ (ரலி) அவர்களின் மேலங்கி அவரது முதுகி-ருந்து (தரையில்) விழுந்துவிட்டிருக்க, அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக் கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மேனியி-ருந்த மண்ணைத் துடைத்தவாறே, “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே (அபுத்துராப்)! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.

442. حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ، إِمَّا إِزَارٌ وَإِمَّا كِسَاءٌ، قَدْ رَبَطُوا فِي أَعْنَاقِهِمْ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ السَّاقَيْنِ، وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ، فَيَجْمَعُهُ بِيَدِهِ، كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ.
பாடம் : 58
பள்ளிவாசலில் ஆண்கள் உறங்குவது
“உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
“திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர்” என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
442. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்களில் எழுபது பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர் களில் ஒருவருக்குக்கூட மேல்துண்டு இருந்ததில்லை. (ஒரேயோர் ஆடைதான் அவர்களுக்கு இருந்தது.) ஒன்று அது கீழங்கியாக இருக்கும்; அல்லது (அது) ஒரு துணியாக (மட்டும்) இருக்கும். அதை அவர்கள் தங்கள் பிடரியில் முடிந்து கொண்டிருப்பார்கள்.
அவற்றில் சில, (பற்றாக் குறையால்) கணைக்கால்களின் பாதியளவே இருக்கும். இன்னும் சில கணுக்கால்களை எட்டு மளவுக்கு இருக்கும். அதை அவர்கள் (தொழும்போதும் மற்ற நேரங்களிலும்) தமது கரத்தால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். மறைக்க வேண்டிய தம் உறுப்புகளை பிறர் பார்த்துவிடக் கூடாதே! என்பதற்காக (அவ்வாறு சேர்த்துப் பிடித்தனர்.)

443. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ "" صَلِّ رَكْعَتَيْنِ "". وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي.
பாடம் : 59
பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது
“நபி (ஸல்) அவர்கள் பயணத்தி-ருந்து திரும்பியதும் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம்” என்று கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
443. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தை முடித்துக்கொண்டு) பள்ளிவாச-ல் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “(பயணத்தி-ருந்து திரும்பிய நீர்) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று சொன்னார்கள்.
எனக்கு நபி (ஸல்) அவர்கள் தர வேண்டிய கடன் (பாக்கி) ஒன்றும் இருந்தது. அப்போது அவர்கள் அதை எனக்கு வழங்கியதுடன், மேலதிகமாகவும் வழங்கினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
(எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த) முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள், ‘முற்பகல் நேரத்தில் (நான் நபிகளாரிடம் சென்றேன்)’ என்று (ஜாபிர் (ரலி) அவர்கள்) கூறியதாகவும் குறிப்பிட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.

444. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ "".
பாடம் : 60
பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
இதை அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

445. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ "".
பாடம் : 61
பள்ளிவாச-ல் இருக்கும்போது (உளூவை முறிக்கக்கூடிய) சிறுதுடக்கு ஏற்படல்46
445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த் தனை செய்கிறார்கள்; ஆனால், (உளூவை முறிக்கக்கூடிய) சிறுதுடக்கு ஏற்படாம-ருக்க வேண்டும்.
வானவர்கள், “இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

446. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الْجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّبِنِ وَالْجَرِيدِ، وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ، فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ، وَسَقَفَهُ بِالسَّاجِ.
பாடம் : 62
(‘மஸ்ஜிதுந் நபவீ’) பள்ளி
வாச-ன் கட்டுமானம்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இருந்தது.
உமர் (ரலி) அவர்களே (தமது ஆட்சிக் காலத்தில்) பள்ளிவாசலை (விரிவாக்கிக்) கட்டும்படி உத்தரவிட்டார்கள். (கட்டடப் பணி நடைபெற்றபோது) “மக்களை மழை நீரி-ருந்து பாதுகாக்கும் விதமாகக் கட்டுவீராக! சிவப்பு வர்ணமோ மஞ்சள் வர்ணமோ தீட்ட வேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன். அதனால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடும்” என்று (கட்டடப் பணியாளரிடம்) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு காலம் வரும். அக்காலத்தில்) பள்ளிவாசல்களின் மூலம் மக்கள் பெருமையடித்துக்கொள்வார்கள். (வழிபாடுகள் மூலம்) அவற்றை மிகக் குறைவாகவே அலங்கரிப்பார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
யூத, கிறித்தவர்கள் (தங்கள் ஆலயங் களை) அலங்கரித்ததைப் போன்றே நீங்களும் பள்ளிவாசல்களை அலங்கரிக் கிறீர்கள் என்பது மட்டும் உறுதி.
446. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் ‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசல் (உடைய சுவர்கள்) செங்கற் களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற் கூரை பேரீச்சமர ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்ச மரக் கட்டைகளாலும் அமைந்திருந்தன.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. என்றாலும், உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்ச மர ஓலை ஆகியவற்றால் அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்பு போன்றே (பேரீச்சமரக்) கட்டைகளால் அமைத்தார்கள்.
பின்னர் (ஆட்சிப் பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்து, அதிகமான அம்சங்களைச் சேர்த்தார்கள்.
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.

447. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، قَالَ لِي ابْنُ عَبَّاسٍ وَلاِبْنِهِ عَلِيٍّ انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ. فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً، وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ وَيَقُولُ "" وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الْجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ "". قَالَ يَقُولُ عَمَّارٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ.
பாடம் : 63
பள்ளிவாசல் கட்ட ஒத்துழைத் தல்
(அல்லாஹ் கூறுகின்றான்:)
இணைவைப்பாளர்களுக்கு, அல்லாஹ் வின் பள்ளிவாசல்களைப் பராமரிக்கும் உரிமை கிடையாது. அவர்கள் தம்மிட முள்ள இறைமறுப்புக்குத் தாமே சாட்சி களாக உள்ளனர். அவர்களின் நல்லறங் கள் யாவும் அழிந்துவிட்டன. நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பவர்கள் யாரென்றால், அல்லாஹ் வையும் மறுமை நாளையும் நம்பி, தொழுகையைக் கடைப்பிடித்து, ‘ஸகாத்’ வழங்கி, அல்லாஹ்வைத் தவிர வேறெதற் கும் அஞ்சாதவர்கள்தான். அவர்களே நல்வழி பெற்றோராக முடியும். (9:17,18)
447. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பஸ்ராவின் ஆளுநராயிருந்த காலகட்டத்தில்) என்னிடமும் தம் புதல்வர் அலீ (ரஹ்) அவர்களிடமும், “நீங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, அவர் கூறும் ஹதீஸைக் கேட்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.
அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் தோட்டத்தில் (நீர்பாய்ச்சி) அதைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் எங்களைக் கண்ட) உடன் தமது மேல்துண்டை எடுத்துப் போர்த்திக்கொண்டபின் (பல ஹதீஸ்களை) எங்களுக்குக் கூறத் தொடங்கினார்கள். இறுதியாக ‘மஸ்ஜிதுந் நபவீ’ கட்டியது பற்றிப் பேச்சு வந்தபோது (பின்வருமாறு) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) செங்கற்களை ஒவ்வொன்றாகச் சுமந்து எடுத்துக்கொண்டு சென்றோம்.. அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற் களாகச் சுமந்த வண்ணமிருந்தார்.
அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (அவரது தலையில் படிந்திருந்த) புழுதி யைத் தட்டிவிட்டு, “பாவம் அம்மார்! அவரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்று விடுவார்கள். அவர்களை அம்மார் சொர்க்கத்தி(ற்குக் காரணமான, தலை மைக்குக் கட்டுப்படும் செயலி)ன் பக்கம் அழைக்க, அந்தக் கூட்டத்தாரோ அவரை நரகத்தி(ற்குக் காரணமான நல்ல தலைமைக்கு எதிராகச் செயல்படுவத)ன் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்டதிலிருந்து) அம்மார் (ரலி) அவர்கள், “குழப்பங்களைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள்.47

448. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى امْرَأَةٍ أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ يَعْمَلْ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ.
பாடம் : 64
சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள், (கட்டடத்) தொழிலாளர்கள் ஆகியோரின் உதவியை நாடுதல்
448. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (அன்சாரிப்) பெண்ணிடம் ஆள னுப்பி, “நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கு (ஏற்ற வகையில் மேடை தயாரிக்க) எனக்கு மரச்சட்டங்களைச் செய்து தருமாறு தச்சு வேலை தெரிந்த உன் பணியாளருக்கு உத்தரவிடுவீராக” என்று கூறினார்கள்.

449. حَدَّثَنَا خَلاَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ، فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا قَالَ "" إِنْ شِئْتِ "". فَعَمِلَتِ الْمِنْبَرَ.
பாடம் : 64
சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள், (கட்டடத்) தொழிலாளர்கள் ஆகியோரின் உதவியை நாடுதல்
449. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு (அன்சாரிப்) பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கி றார்; நீங்கள் அமர்ந்துகொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரலாமா?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று கூற, அப்பெண்மணி சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்றை செய்(து கொடுத்)தார்.

450. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ بَنَى مَسْجِدًا ـ قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ "".
பாடம் : 65
பள்ளிவாசல் கட்டியவர் (அடை யும் வெகுமதி)
450. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலை (அதன் பழைய அமைப்பை மாற்றி விரிவுபடுத்தி)க் கட்ட விரும்பியபோது, அவர்களைப் பற்றி மக்கள் (குறை) பேசினர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கிவிட்டீர்கள். ‘யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அதைப் போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் அல்அஷஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எமக்கு இந்த ஹதீஸை அறிவித்த ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி (யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ)” என்று (நபியவர்கள்) கூறியதாகவே நான் கருதுகிறேன்.

451. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمْسِكْ بِنِصَالِهَا "".
பாடம் : 66
(அம்புகளை எடுத்துச் செல்ப வர்) பள்ளிவாசலைக் கடந்து சென்றால், அம்பின் முனை யைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
451. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றின் முனை களைப் பிடித்து (மறைத்து)க்கொள்” என்று சொன்னார்கள்.48

452. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ مَرَّ فِي شَىْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا "".
பாடம் : 67
(அம்பின் முனையைப் பிடித் துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லல்
452. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய பள்ளிவாசல்களிலோ அல்லது கடைவீதிகளிலோ அம்புடன் நடந்து செல்பவர், தமது கையால் அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொள்ளட்டும்; எந்த முஸ்-மையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்..
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

453. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ "". قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ.
பாடம் : 68
பள்ளிவாச-ல் கவிதை பாடுதல்49
453. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பள்ளிவாசலுக்குள் கவி பாடுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டித்தபோது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களி டம், “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:
(என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிதைகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானை ‘ரூஹுல் குதுஸ்’ (தூய ஆத்மா வானவர் ‘ஜிப்ரீல்’) மூலம் பலப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர் களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித் தார்கள்.