4455. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ أَنَّ أَبَا بَكْر ٍ ـ رضى الله عنه ـ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعْدَ مَوْتِهِ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4455. ஆயிஷா (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னால்அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள்.


அத்தியாயம் : 64
4458. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا يَحْيَى، وَزَادَ، قَالَتْ عَائِشَةُ لَدَدْنَاهُ فِي مَرَضِهِ فَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا أَنْ لاَ تَلُدُّونِي فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ لِلدَّوَاءِ. فَلَمَّا أَفَاقَ قَالَ "" أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي "". قُلْنَا كَرَاهِيَةَ الْمَرِيضِ لِلدَّوَاءِ. فَقَالَ "" لاَ يَبْقَى أَحَدٌ فِي الْبَيْتِ إِلاَّ لُدَّ ـ وَأَنَا أَنْظُرُ ـ إِلاَّ الْعَبَّاسَ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ "". رَوَاهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4458. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டி ருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, “எனது வாயில் மருந்தூற்றாதீர்கள்' என்பது போல் சைகை செய்யலானார்கள். “நோயாளி மருந்தை வெறுப்பது போலத்தான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம்.

அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்க வில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்தபோது மருந்தூற்றினீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “(ஆம்! தடுத்தீர்கள்.) நோயாளி மருந்தை வெறுப்பது போலத் தான் (நீங்களும் இதை வெறுத்து, “வேண்டாம்' என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்)” என்று கூறினோம்.

அவர்கள், “நான் பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4459. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا أَزْهَرُ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ ذُكِرَ عِنْدَ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْصَى إِلَى عَلِيٍّ، فَقَالَتْ مَنْ قَالَهُ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِنِّي لَمُسْنِدَتُهُ إِلَى صَدْرِي، فَدَعَا بِالطَّسْتِ فَانْخَنَثَ فَمَاتَ، فَمَا شَعَرْتُ، فَكَيْفَ أَوْصَى إِلَى عَلِيٍّ
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4459. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப்பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இதைச் சொன்னவர் யார்?” என்று கேட்டுவிட்டு, “(நபி (ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டுவரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்துபோனதைக்கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க,) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பு தொடர்பாக) எப்படி அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்திருப்பார்கள்?” என்று கேட்டார்கள்.489


அத்தியாயம் : 64
4460. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ أَوْصَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لاَ. فَقُلْتُ كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الْوَصِيَّةُ أَوْ أُمِرُوا بِهَا قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4460. தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை' என்று பதிலளித்தார்கள். நான், “அப்படியென்றால் “மக்கள்மீது இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பது எப்படிக் கடமையாக்கப்பட்டது?' அல்லது “இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.490


அத்தியாயம் : 64
4461. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دِينَارًا وَلاَ دِرْهَمًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً، إِلاَّ بَغْلَتَهُ الْبَيْضَاءَ الَّتِي كَانَ يَرْكَبُهَا، وَسِلاَحَهُ، وَأَرْضًا جَعَلَهَا لاِبْنِ السَّبِيلِ صَدَقَةً.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4461. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையோ) விட்டுச் செல்லவில்லை; “பைளா' எனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.491


அத்தியாயம் : 64
4462. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَعَلَ يَتَغَشَّاهُ، فَقَالَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ وَاكَرْبَ أَبَاهُ. فَقَالَ لَهَا "" لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ "". فَلَمَّا مَاتَ قَالَتْ يَا أَبَتَاهْ، أَجَابَ رَبًّا دَعَاهُ، يَا أَبَتَاهْ مَنْ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ، يَا أَبَتَاهْ إِلَى جِبْرِيلَ نَنْعَاهْ. فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ يَا أَنَسُ، أَطَابَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم التُّرَابَ
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4462. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் நோய் கடுமையானபோது, அவர்களுக்கு மயக்க மேற்படத் தொடங்கியது. அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தோ! (மரணத்தின்) வேதனையால் அவதிப்படும் என் தந்தையே!” என்று கூறினார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினத்திற்குப்பின் உன் தந்தைக்கு எந்த வேதனையும் இல்லை” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள்,

“தந்தையே!அதிபதியின் அழைப்பைஏற்றவரே!

தந்தையே!ஃபிர்தவ்ஸ் சோலையைஉறைவிடமாகக் கொண்டவரே!

தந்தையே!தெரிவிக்கிறோம்உங்கள் இறப்பைவானவர் ஜிப்ரீலுக்கு!”என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது ஃபாத்திமா (ரலி) அவர்கள் (என்னை நோக்கி), “அனஸே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது மண்ணை அள்ளிப்போட உங்கள் மனம் எப்படி இடம் தந்தது?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 64
4463. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ يُونُسُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، فِي رِجَالٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ وَهْوَ صَحِيحٌ "" إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، ثُمَّ يُخَيَّرَ "". فَلَمَّا نَزَلَ بِهِ وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى سَقْفِ الْبَيْتِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى "". فَقُلْتُ إِذًا لاَ يَخْتَارُنَا. وَعَرَفْتُ أَنَّهُ الْحَدِيثُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهْوَ صَحِيحٌ قَالَتْ فَكَانَتْ آخِرَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا "" اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى "".
பாடம் : 85 நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை
4463. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தம் தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலை குத்தி நின்றது.

பிறகு, “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொன்னார்கள். அப்போது நான், அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை; (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்) என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டேன்.

ஆரோக்கியமானவர்களாய் இருந்த போது, (“இறைத்தூதர்கள் அனைவரும் இறக்கும்முன் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுவார்கள்' என்று) அவர்கள் கூறிய சொல் இதுதான் என நான் புரிந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் பேசிய இறுதி வார்த்தை, “இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)” என்பதுதான்.

இதை (உர்வா (ரஹ்) போன்ற) பல அறிஞர்களின் அவையில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 64
4464. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ رضى الله عنهم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَبِثَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ الْقُرْآنُ، وَبِالْمَدِينَةِ عَشْرًا.
பாடம் : 86 நபி (ஸல்) அவர்களின் இறப்பு(க் காலம்)
4464. ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள்; (ஹிஜ்ரத்துக்குப்பின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள்.492


அத்தியாயம் : 64
4466. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ وَهْوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ. قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ مِثْلَهُ.
பாடம் : 86 நபி (ஸல்) அவர்களின் இறப்பு(க் காலம்)
4466. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

“இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களும் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.493

அத்தியாயம் : 64
4467. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ. {يَعْنِي صَاعًا مِنْ شَعِيرٍ}
பாடம் : 87
4467. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

முப்பது “ஸாஉ' தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.494

அத்தியாயம் : 64
4468. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنِ الْفُضَيْلِ بْنِ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، اسْتَعْمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُسَامَةَ ـ فَقَالُوا فِيهِ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَدْ بَلَغَنِي أَنَّكُمْ قُلْتُمْ فِي أُسَامَةَ، وَإِنَّهُ أَحَبُّ النَّاسِ إِلَىَّ "".
பாடம் : 88 நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை (ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி) அனுப்பியது495
4468. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர், உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உசாமாவின் (நியமன) விஷயத்தில் நீங்கள் (குறை) ஏதோ பேசியதாக எனக்குத் தெரியவந்தது. நிச்சயமாக அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4469. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ بَعْثًا وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَطَعَنَ النَّاسُ فِي إِمَارَتِهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنْ تَطْعُنُوا فِي إِمَارَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعُنُونَ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلإِمَارَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ بَعْدَهُ "".
பாடம் : 88 நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை (ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி) அனுப்பியது495
4469. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓர் அறப்போருக்காகப்) படையொன்றை அனுப்பி, அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். (அவரைவிட மூத்தவர்கள் பலர் இருக்க, அவர் தலைமை தாங்குவது சரியல்லவென்று) மக்கள் (சிலர்) அவரது தலைமையைக் குறை கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “இவரது தலைமையைக் குறித்து நீங்கள் இப்போது குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதன்று;) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஆட்சியதிகாரத்திற்குத் தகுதியானவராகத் தான் இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். மேலும், அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.496

அத்தியாயம் : 64
4470. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنِ الصُّنَابِحِيِّ، أَنَّهُ قَالَ لَهُ مَتَى هَاجَرْتَ قَالَ خَرَجْنَا مِنَ الْيَمَنِ مُهَاجِرِينَ، فَقَدِمْنَا الْجُحْفَةَ، فَأَقْبَلَ رَاكِبٌ فَقُلْتُ لَهُ الْخَبَرَ فَقَالَ دَفَنَّا النَّبِيَّ صلى الله عليه وسلم مُنْذُ خَمْسٍ. قُلْتُ هَلْ سَمِعْتَ فِي لَيْلَةِ الْقَدْرِ شَيْئًا قَالَ نَعَمْ أَخْبَرَنِي بِلاَلٌ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فِي السَّبْعِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ.
பாடம் : 89
4470. அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ் ஸுனாபிஹீ (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் எப்போது (மதீனாவுக்கு) புலம்பெயர்ந்து வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள், “நாங்கள் யமன் நாட்டிலிருந்து (நபியின் நகரமான மதீனாவை நோக்கி) புலம்பெயர்ந்து வந்தோம். நாங்கள் “ஜுஹ்ஃபா'வுக்கு வந்து சேர்ந்தபோது, (தமது வாகனத்தில் பயணித்தபடி) பயணி ஒருவர் எங்களை நோக்கி வந்தார். நான் அவரிடம், “(முக்கியச்) செய்தி ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அந்தப் பயணி, “ஐந்து நாட்களுக்கு முன்பு நாங்கள் நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்துவிட்டோம்” என்று பதிலளித்தார்.

நான், “லைலத்துல் கத்ர் (குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தின் கண்ணிய மிக்க இரவு) பற்றி நீங்கள் (மதீனாவில்) ஏதேனும் செவியுற்றீர்களா?” என்று ஸுனாபிஹீ (ரஹ்) அவர்களிடம் கேட்க, அவர், “ஆம். நபி (ஸல்) அவர்களின் (பள்ளிவாசலின்) தொழுகை அறிவிப்பாளரான பிலால் (ரலி) அவர்கள், “அது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாட்களில் ஏழாவது இரவில் கிடைக்கும்' என்று எனக்குத் தெரிவித்தார்கள்” எனப் பதிலளித்தார்கள்.497

அத்தியாயம் : 64
4471. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ ـ رضى الله عنه ـ كَمْ غَزَوْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَبْعَ عَشْرَةَ. قُلْتُ كَمْ غَزَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ تِسْعَ عَشْرَةَ.
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் எத்தனை அறப்போர்களில் கலந்து கொண் டார்கள்?
4471. அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?” என்று நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “பதினேழு (அறப்போர்களில் நபி (ஸல்) அவர்களுடன் நான் கலந்துகொண்டேன்)” என்று பதிலளித்தார்கள்.

நான், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை அறப்போர்களில் கலந்துகொண்டார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பத்தொன்பது போர்களில் (கலந்து கொண்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.498


அத்தியாயம் : 64
4472. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا الْبَرَاءُ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم خَمْسَ عَشْرَةَ.
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் எத்தனை அறப்போர்களில் கலந்து கொண் டார்கள்?
4472. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் பதினைந்து அறப்போர்களில் கலந்து கொண்டேன்.


அத்தியாயம் : 64
4473. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلِ بْنِ هِلاَلٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كَهْمَسٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّ عَشْرَةَ غَزْوَةً.
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் எத்தனை அறப்போர்களில் கலந்து கொண் டார்கள்?
4473. புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்களுடன் பதினாறு அறப்போர்களில் கலந்துகொண்டேன்.

அத்தியாயம் : 64

4474. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أُصَلِّي. فَقَالَ " أَلَمْ يَقُلِ اللَّهُ {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} ثُمَّ قَالَ لِي لأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ الْمَسْجِدِ ". ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ قُلْتُ لَهُ أَلَمْ تَقُلْ " لأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ ". قَالَ " {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ ".
பாடம் : 1 குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை இதற்கு “உம்முல் கிதாப்' (“இறைவேதத்தின் அன்னை') என்று பெயரிடப்பட் டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவ தாக) இதை எழுதித்தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகிறது. இதை ஓதித்தான் தொழுகையும் தொடங்கப்படுகிறது.4 (இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் “மாலிகி யவ்மித்தீன்' என்பதில் இடம்பெற்றுள்ள) “தீன்' எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்படவிருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, “பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி' என இவ்வசனத்தின் பொருள் அமையும்.) “கமா ததீனு துதானு” (நீ எப்படி நடந்துகொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் “தீன்' எனும் சொல்லில் தொனிக்கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகின்ற பிரதிபலனை இச்சொல் குறிக்கிறது.) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:5 “அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) “தீனை' நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள்” எனும் குர்ஆனின் (82:9ஆவது) வசனத்தில் உள்ள “தீன்' என்பதற்கு “செயல்களுக்கான விசாரணை' என்பது பொருள். (56:86ஆவது வசனத்தின் மூலத் தில் இடம்பெற்றுள்ள) “மதீனீன்' எனும் சொல்லுக்கு “விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர்' என்பது பொருள்.6
4474. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுதுகொண்டிருந்தேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “உங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிக்கு இறைத் தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7

பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உமக்குக் கற்றுத்தருகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முற்பட்டபோது நான் அவர்களிடம், “நீங்கள் “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உமக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “அது “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா' அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65