4435.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4435. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), “அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர் கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (4:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள்.

ஆகவே, “இவ்வுலகம், மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன்.478

அத்தியாயம் :
4436. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَرَضَ الَّذِي مَاتَ فِيهِ جَعَلَ يَقُولُ "" فِي الرَّفِيقِ الأَعْلَى "".
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4436. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, “(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொல்லத் தொடங்கினார்கள்.

அத்தியாயம் : 64
4437. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ إِنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ صَحِيحٌ يَقُولُ "" إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُحَيَّا أَوْ يُخَيَّرَ "". فَلَمَّا اشْتَكَى وَحَضَرَهُ الْقَبْضُ وَرَأْسُهُ عَلَى فَخِذِ عَائِشَةَ غُشِيَ عَلَيْهِ، فَلَمَّا أَفَاقَ شَخَصَ بَصَرُهُ نَحْوَ سَقْفِ الْبَيْتِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ فِي الرَّفِيقِ الأَعْلَى "". فَقُلْتُ إِذًا لاَ يُجَاوِرُنَا. فَعَرَفْتُ أَنَّهُ حَدِيثُهُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهْوَ صَحِيحٌ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4437. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரை' அல்லது “(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாதவரை' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை என்று சொல்லிவந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்துவிட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது.

பிறகு அவர்கள், “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்)” என்று பிரார்த் தித்தார்கள். உடனே நான், “இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன்.ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) நான் அறிந்துகொண்டேன்.

அத்தியாயம் : 64
4438. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَفَّانُ، عَنْ صَخْرِ بْنِ جُوَيْرِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا مُسْنِدَتُهُ إِلَى صَدْرِي، وَمَعَ عَبْدِ الرَّحْمَنِ سِوَاكٌ رَطْبٌ يَسْتَنُّ بِهِ، فَأَبَدَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَصَرَهُ، فَأَخَذْتُ السِّوَاكَ فَقَصَمْتُهُ وَنَفَضْتُهُ وَطَيَّبْتُهُ، ثُمَّ دَفَعْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَنَّ بِهِ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَنَّ اسْتِنَانًا قَطُّ أَحْسَنَ مِنْهُ، فَمَا عَدَا أَنْ فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَفَعَ يَدَهُ أَوْ إِصْبَعَهُ ثُمَّ قَالَ "" فِي الرَّفِيقِ الأَعْلَى "". ثَلاَثًا ثُمَّ قَضَى، وَكَانَتْ تَقُولُ مَاتَ بَيْنَ حَاقِنَتِي وَذَاقِنَتِي.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4438. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன், அவர் பல் துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்தியபின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைவிட அழகாகப் பல் துலக்கியதை அதற்குமுன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் “தம் கையை' அல்லது “தம் விரலை' உயர்த்திப் பிறகு, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே நபி (ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்தபோது அவர்கள் இறந்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.

அத்தியாயம் : 64
4439. حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ فَلَمَّا اشْتَكَى وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ طَفِقْتُ أَنْفِثُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ، الَّتِي كَانَ يَنْفِثُ، وَأَمْسَحُ بِيَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْهُ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம்மீது ஊதி, தமது கையை (தம் உடல்மீது) தடவிக்கொள்வார்கள்.479

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக்கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்)மீது தடவலானேன்.

அத்தியாயம் : 64
4440.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4440. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் பக்கம் தம் முதுகைச் சாய்த்தபடி (என் அரவணைப்பில்) இருக்க, அவர்கள் பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர்கள், “இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.

அத்தியாயம் :
4441. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِلاَلٍ الْوَزَّانِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ "" لَعَنَ اللَّهُ الْيَهُودَ، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ "". قَالَتْ عَائِشَةُ لَوْلاَ ذَلِكَ لأُبْرِزَ قَبْرُهُ. خَشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4441. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள், எந்த நோயிலிருந்து எழுந்திராமல் போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் அவர்களின் அடக்கத் தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், “தமது அடக்கத் தலம் எங்கே வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்.480

அத்தியாயம் : 64
4442. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ وَهْوَ بَيْنَ الرَّجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ، بَيْنَ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَبَيْنَ رَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَخْبَرْتُ عَبْدَ اللَّهِ بِالَّذِي قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ هَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ قَالَ قُلْتُ لاَ. قَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ عَلِيٌّ. وَكَانَتْ عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم تُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا دَخَلَ بَيْتِي وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ قَالَ "" هَرِيقُوا عَلَىَّ مِنْ سَبْعِ قِرَبٍ لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ "". فَأَجْلَسْنَاهُ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ مِنْ تِلْكَ الْقِرَبِ، حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا بِيَدِهِ أَنْ قَدْ فَعَلْتُنَّ قَالَتْ ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ فَصَلَّى لَهُمْ وَخَطَبَهُمْ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4442. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “தெரியாது' என்று பதிலளித்தேன். “அவர்தான் அலீ பின் அபீதாலிப்” என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்க்காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள், “வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என்மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும்” என்று கூறினார்கள்.

எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்த மான துணி அலசும் பாத்திரத்தின்மேல் அமரவைத்தோம். பிறகு அவர்கள்மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள், “(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)” என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுவித்தார்கள்; பிறகு அவர்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.481

அத்தியாயம் : 64
4443. وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، رضى الله عنهم قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ وَهْوَ كَذَلِكَ يَقُولُ " لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ". يُحَذِّرُ مَا صَنَعُوا.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4443. ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்ளலானார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக்கொண்டார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, “அல்லாஹ் யூதர்களையும் கிறித்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று அவர்கள் செய்ததைக் குறித்து (“அதே போல் நீங்களும் செய்து விடாதீர்கள்” என்று) எச்சரித்தார்கள்.482

அத்தியாயம் : 64
4445. أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَاجَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ، وَمَا حَمَلَنِي عَلَى كَثْرَةِ مُرَاجَعَتِهِ إِلاَّ أَنَّهُ لَمْ يَقَعْ فِي قَلْبِي أَنْ يُحِبَّ النَّاسُ بَعْدَهُ رَجُلاً قَامَ مَقَامَهُ أَبَدًا، وَلاَ كُنْتُ أُرَى أَنَّهُ لَنْ يَقُومَ أَحَدٌ مَقَامَهُ إِلاَّ تَشَاءَمَ النَّاسُ بِهِ، فَأَرَدْتُ أَنْ يَعْدِلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَبِي بَكْرٍ. رَوَاهُ ابْنُ عُمَرَ وَأَبُو مُوسَى وَابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4445. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுவிக்கும்படி (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏன் கட்டளையிட்டீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வாதிட்டேன்.483

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அவர்களின் இடத்தில் செயல்படும் ஒரு மனிதரை மக்கள் விரும்புவார்கள் என்று என் மனத்திற்கு ஒருபோதும் படவில்லை. மேலும், அவர்களின் இடத்தில் செயல்பட முன்வரும் எவரையும் மக்கள் ஒரு துர்க்குறியாகவே கருதுவார்கள் என்றுதான் நான் எண்ணிவந்தேன். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்களைவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விலக்கிவிட வேண்டும் என்று நான் விரும்பினேன்.

இதே ஹதீஸை இப்னு உமர் (ரலி), அபூமூசா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

அத்தியாயம் : 64
4446. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَإِنَّهُ لَبَيْنَ حَاقِنَتِي وَذَاقِنَتِي، فَلاَ أَكْرَهُ شِدَّةَ الْمَوْتِ لأَحَدٍ أَبَدًا بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4446. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்கு மிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவ தில்லை.484

அத்தியாயம் : 64
4447. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ الأَنْصَارِيُّ ـ وَكَانَ كَعْبُ بْنُ مَالِكٍ أَحَدَ الثَّلاَثَةِ الَّذِينَ تِيبَ عَلَيْهِمْ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ خَرَجَ مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَقَالَ النَّاسُ يَا أَبَا حَسَنٍ، كَيْفَ أَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَصْبَحَ بِحَمْدِ اللَّهِ بَارِئًا، فَأَخَذَ بِيَدِهِ عَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، فَقَالَ لَهُ أَنْتَ وَاللَّهِ بَعْدَ ثَلاَثٍ عَبْدُ الْعَصَا، وَإِنِّي وَاللَّهِ لأُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَوْفَ يُتَوَفَّى مِنْ وَجَعِهِ هَذَا، إِنِّي لأَعْرِفُ وُجُوهَ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ عِنْدَ الْمَوْتِ، اذْهَبْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلْنَسْأَلْهُ فِيمَنْ هَذَا الأَمْرُ، إِنْ كَانَ فِينَا عَلِمْنَا ذَلِكَ، وَإِنْ كَانَ فِي غَيْرِنَا عَلِمْنَاهُ فَأَوْصَى بِنَا. فَقَالَ عَلِيٌّ إِنَّا وَاللَّهِ لَئِنْ سَأَلْنَاهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَمَنَعَنَاهَا لاَ يُعْطِينَاهَا النَّاسُ بَعْدَهُ، وَإِنِّي وَاللَّهِ لاَ أَسْأَلُهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4447. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் - (இவருடைய தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் கலந்து கொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார்- அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், “அபுல்ஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்” என்று சொன் னார்கள்.

அப்போது அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவில் தமது இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தóபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டு கொள்பவன் நான்.

எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். “இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்தபிறகு) யாரிடமிருக்கும்?” என்று கேட்டுக்கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப்பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள்.

அத்தியாயம் : 64
4448. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ الْمُسْلِمِينَ، بَيْنَا هُمْ فِي صَلاَةِ الْفَجْرِ مِنْ يَوْمِ الاِثْنَيْنِ وَأَبُو بَكْرٍ يُصَلِّي لَهُمْ لَمْ يَفْجَأْهُمْ إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ، فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ فِي صُفُوفِ الصَّلاَةِ. ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ، فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ، وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ أَنْ يَخْرُجَ إِلَى الصَّلاَةِ فَقَالَ أَنَسٌ وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ فَرَحًا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ إِلَيْهِمْ بِيَدِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتِمُّوا صَلاَتَكُمْ، ثُمَّ دَخَلَ الْحُجْرَةَ وَأَرْخَى السِّتْرَ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4448. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் திங்கட்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகையில் இருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கிக்கொண்டு திடீரென (வெளியே) வந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான். மக்கள் தொழுகை அணிகளில் நின்று கொண்டி ருக்க, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுப் பிறகு புன்னகைத்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்து கொள்ளத் தம் குதிகால்களால் பின்வாங்கிச் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்க வர விரும்புகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் தமது தொழுகையில் (கவனம் சிதறி) குழப்பத்திற்குள்ளாக இருந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்' என்று தம் கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு, அறைக்குள் நுழைந்துகொண்டு திரையைத் தொங்கவிட்டார்கள்.485

அத்தியாயம் : 64
4449. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ أَبَا عَمْرٍو، ذَكْوَانَ مَوْلَى عَائِشَةَ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ كَانَتْ تَقُولُ إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَىَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ، دَخَلَ عَلَىَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ، وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ، فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ، فَلَيَّنْتُهُ، وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ ـ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ ـ فِيهَا مَاءٌ، فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ "". ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ "" فِي الرَّفِيقِ الأَعْلَى "". حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4449. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறையில் தங்க வேண்டிய) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறந்தார்கள். அவர்களது இறப்பின்போது அவர்களது எச்சிலையும் எனது எச்சிலை யும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என்மீது பொழிந்த அருட்கொடைகளில் ஒன்றாகும். (இருவரின் எச்சிலும் ஒன்றுசேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தனது கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக்கொண்டிருந்த தைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள் என்று நான் புரிந்துகொண்டேன். ஆகவே, “உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?” என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், “ஆம்' என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது.

நான், “பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், தம் தலையால், “ஆம்' என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய “தோல் பாத்திரம் ஒன்று' அல்லது “பெரிய மரக் குவளையொன்று' இருந்தது.

(அறிவிப்பாளர்) உமர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா; மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு” என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்திக் கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.486

அத்தியாயம் : 64
4450. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَقُولَ "" أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا "" يُرِيدُ يَوْمَ عَائِشَةَ، فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكُونُ حَيْثُ شَاءَ، فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَا، قَالَتْ عَائِشَةُ فَمَاتَ فِي الْيَوْمِ الَّذِي كَانَ يَدُورُ عَلَىَّ فِيهِ فِي بَيْتِي، فَقَبَضَهُ اللَّهُ وَإِنَّ رَأْسَهُ لَبَيْنَ نَحْرِي وَسَحْرِي، وَخَالَطَ رِيقُهُ رِيقِي ـ ثُمَّ قَالَتْ ـ دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ وَمَعَهُ سِوَاكٌ يَسْتَنُّ بِهِ فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ أَعْطِنِي هَذَا السِّوَاكَ يَا عَبْدَ الرَّحْمَنِ. فَأَعْطَانِيهِ فَقَضِمْتُهُ، ثُمَّ مَضَغْتُهُ فَأَعْطَيْتُهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَنَّ بِهِ وَهْوَ مُسْتَنِدٌ إِلَى صَدْرِي.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4450. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, “நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.

ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கிவந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான்.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், “என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே!” என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார்.

நான் அதைப் பற்களால் கடித்து மென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர் களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

அத்தியாயம் : 64
4451. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِي وَفِي يَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَكَانَتْ إِحْدَانَا تُعَوِّذُهُ بِدُعَاءٍ إِذَا مَرِضَ، فَذَهَبْتُ أُعَوِّذُهُ، فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ وَقَالَ "" فِي الرَّفِيقِ الأَعْلَى فِي الرَّفِيقِ الأَعْلَى "". وَمَرَّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ وَفِي يَدِهِ جَرِيدَةٌ رَطْبَةٌ، فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَظَنَنْتُ أَنَّ لَهُ بِهَا حَاجَةً فَأَخَذْتُهَا، فَمَضَغْتُ رَأْسَهَا وَنَفَضْتُهَا فَدَفَعْتُهَا إِلَيْهِ، فَاسْتَنَّ بِهَا كَأَحْسَنِ مَا كَانَ مُسْتَنًّا ثُمَّ نَاوَلَنِيهَا فَسَقَطَتْ يَدُهُ ـ أَوْ سَقَطَتْ مِنْ يَدِهِ ـ فَجَمَعَ اللَّهُ بَيْنَ رِيقِي وَرِيقِهِ فِي آخِرِ يَوْمٍ مِنَ الدُّنْيَا وَأَوَّلِ يَوْمٍ مِنَ الآخِرَةِ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4451. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறை வரும்) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன்.

அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, “(இறைவா சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள்.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தமது கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள்.

பிறகு அதை என்னிடம் கொடுத்து விட்டார்கள். பிறகு “அவர்களது கரம் விழுந்துவிட்டது' அல்லது “அ(க்குச்சி யான)து அவர்களின் கரத்திóருந்து விழுந்துவிட்டது'. இவ்விதம் நபி (ஸல்) அவர்களின் எச்சிலையும் எனது எச்சிலையும் (அவர்களது) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்றுசேர்த்தான்.

அத்தியாயம் : 64
4452. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ حَتَّى نَزَلَ، فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمِ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ، فَتَيَمَّمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُغَشًّى بِثَوْبِ حِبَرَةٍ، فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ وَبَكَى. ثُمَّ قَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي، وَاللَّهِ لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ، أَمَّا الْمَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا. قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ أَبَا بَكْرٍ، خَرَجَ وَعُمَرُ يُكَلِّمُ النَّاسَ فَقَالَ اجْلِسْ يَا عُمَرُ، فَأَبَى عُمَرُ أَنْ يَجْلِسَ. فَأَقْبَلَ النَّاسُ إِلَيْهِ وَتَرَكُوا عُمَرَ، فَقَالَ أَبُو بَكْرٍ أَمَّا بَعْدُ مَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَىٌّ لاَ يَمُوتُ، قَالَ اللَّهُ {وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} إِلَى قَوْلِهِ {الشَّاكِرِينَ} وَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ النَّاسَ لَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ أَنْزَلَ هَذِهِ الآيَةَ حَتَّى تَلاَهَا أَبُو بَكْرٍ، فَتَلَقَّاهَا مِنْهُ النَّاسُ كُلُّهُمْ فَمَا أَسْمَعُ بَشَرًا مِنَ النَّاسِ إِلاَّ يَتْلُوهَا. فَأَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ قَالَ وَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ أَبَا بَكْرٍ تَلاَهَا فَعَقِرْتُ حَتَّى مَا تُقِلُّنِي رِجْلاَىَ، وَحَتَّى أَهْوَيْتُ إِلَى الأَرْضِ حِينَ سَمِعْتُهُ تَلاَهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ مَاتَ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4452. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் “சுன்ஹ்' எனுமிடத்திலுள்ள தமது உறைவிடத்திலிருந்து ஒரு குதிரைமீது பயணம் செய்து முன்னோக்கி வந்து (மதீனாவை அடைந்து குதிரையைவிட்டு) இறங்கிப் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்கள். மக்களிடம் பேசவில்லை. இறுதியில் என்னிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடினார்கள். அவர்கள் (இறந்து) யமன் நாட்டுத் துணி ஒன்றால் போர்த்தப்பட்டிருக்க, அவர்களின் முகத்தைவிட்டு (அத்துணியை) நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தம் தலையைக் கவிழ்த்து அவர்களை முத்தமிட்டு அழுதார்கள்.

பிறகு, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். உங்களுக்கு அல்லாஹ் இரு இறப்புகளை ஒன்றுசேர்க்கவில்லை. உங்கள்மீது விதிக்கப்பட்டிருந்த இறப்பைத் தாங்கள் அனுபவித்துவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.487

அத்தியாயம் : 64
4454. قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ أَبَا بَكْرٍ، خَرَجَ وَعُمَرُ يُكَلِّمُ النَّاسَ فَقَالَ اجْلِسْ يَا عُمَرُ، فَأَبَى عُمَرُ أَنْ يَجْلِسَ. فَأَقْبَلَ النَّاسُ إِلَيْهِ وَتَرَكُوا عُمَرَ، فَقَالَ أَبُو بَكْرٍ أَمَّا بَعْدُ مَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَىٌّ لاَ يَمُوتُ، قَالَ اللَّهُ {وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} إِلَى قَوْلِهِ {الشَّاكِرِينَ} وَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ النَّاسَ لَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ أَنْزَلَ هَذِهِ الآيَةَ حَتَّى تَلاَهَا أَبُو بَكْرٍ، فَتَلَقَّاهَا مِنْهُ النَّاسُ كُلُّهُمْ فَمَا أَسْمَعُ بَشَرًا مِنَ النَّاسِ إِلاَّ يَتْلُوهَا. فَأَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ قَالَ وَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ أَبَا بَكْرٍ تَلاَهَا فَعَقِرْتُ حَتَّى مَا تُقِلُّنِي رِجْلاَىَ، وَحَتَّى أَهْوَيْتُ إِلَى الأَرْضِ حِينَ سَمِعْتُهُ تَلاَهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ مَاتَ.
பாடம் : 84 நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்471 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. இவர்களும் இறந்துவிடக்கூடியவர்கள்தான். பிறகு நிச்சயமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்துவைத்துத்) தர்க்கித்துக்கொள்வீர்கள்.(39:30,31)
4454. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும், “உமரே! அமருங்கள்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்தார்கள். அப்போது மக்கள் உமர் (ரலி) அவர்களை விட்டுவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்; உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வழிபட்டுக்கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும். உங்களில் யார் அல்லாஹ்வை வழிபட்டுக்கொண்டிருந்தார்களோ அவர்கள் “அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணம் அடையவேமாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.

“அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத் ஓர் (இறைத்)தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பிவிடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்” (அல்குர்ஆன் 3:144) என்றார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும்வரை, அல்லாஹ் அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போலவும், அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போலவும் இதை ஓதக்கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டேயிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.488

அத்தியாயம் : 64