4355. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا بَيَانٌ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كَانَ بَيْتٌ فِي الْجَاهِلِيَّةِ يُقَالُ لَهُ ذُو الْخَلَصَةِ وَالْكَعْبَةُ الْيَمَانِيَةُ وَالْكَعْبَةُ الشَّأْمِيَّةُ، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". فَنَفَرْتُ فِي مِائَةٍ وَخَمْسِينَ رَاكِبًا، فَكَسَرْنَاهُ وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَدَعَا لَنَا وَلأَحْمَسَ.
பாடம் : 63 “துல் கலஸா' போர்385
4355. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் “துல் கலஸா' என்றழைக்கப்பட்டுவந்த (இணை வைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்றும் “ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா' என்றும் அழைக்கப்பட்டுவந்தது. ஆகவே, என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை நாங்கள் உடைத்துப் போட்டுவிட்டு, அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்றுவிட்டோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விவரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) “அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் (நன்மை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.386


அத்தியாயம் : 64
4356. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ قَالَ لِي جَرِيرٌ ـ رضى الله عنه ـ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". وَكَانَ بَيْتًا فِي خَثْعَمَ يُسَمَّى الْكَعْبَةَ الْيَمَانِيَةَ، فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ، وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ، وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي، وَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ، وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". فَانْطَلَقَ إِلَيْهَا فَكَسَرَهَا وَحَرَّقَهَا، ثُمَّ بَعَثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ جَرِيرٍ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ. قَالَ فَبَارَكَ فِي خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.
பாடம் : 63 “துல் கலஸா' போர்385
4356. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவுக்கு அதில் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்துவிட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், “தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத்தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “(இறைவா!) “அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அவர்களின் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!” என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387


அத்தியாயம் : 64
4357. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". فَقُلْتُ بَلَى. فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَضَرَبَ يَدَهُ عَلَى صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ يَدِهِ فِي صَدْرِي وَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". قَالَ فَمَا وَقَعْتُ عَنْ فَرَسٍ بَعْدُ. قَالَ وَكَانَ ذُو الْخَلَصَةِ بَيْتًا بِالْيَمَنِ لِخَثْعَمَ وَبَجِيلَةَ، فِيهِ نُصُبٌ تُعْبَدُ، يُقَالُ لَهُ الْكَعْبَةُ. قَالَ فَأَتَاهَا فَحَرَّقَهَا بِالنَّارِ وَكَسَرَهَا. قَالَ وَلَمَّا قَدِمَ جَرِيرٌ الْيَمَنَ كَانَ بِهَا رَجُلٌ يَسْتَقْسِمُ بِالأَزْلاَمِ فَقِيلَ لَهُ إِنَّ رَسُولَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَا هُنَا فَإِنْ قَدَرَ عَلَيْكَ ضَرَبَ عُنُقَكَ. قَالَ فَبَيْنَمَا هُوَ يَضْرِبُ بِهَا إِذْ وَقَفَ عَلَيْهِ جَرِيرٌ فَقَالَ لَتَكْسِرَنَّهَا وَلَتَشْهَدَنَّ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَوْ لأَضْرِبَنَّ عُنُقَكَ. قَالَ فَكَسَرَهَا وَشَهِدَ، ثُمَّ بَعَثَ جَرِيرٌ رَجُلاً مِنْ أَحْمَسَ يُكْنَى أَبَا أَرْطَاةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُبَشِّرُهُ بِذَلِكَ، فَلَمَّا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا جِئْتُ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ. قَالَ فَبَرَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.
பாடம் : 63 “துல் கலஸா' போர்385
4357. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “சரி (விடுவிக்கிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே, “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையால் என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன்.

அப்போது அவர்கள், “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. “துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த “கஸ்அம்' மற்றும் “பஜீலா' குலத் தாரின் ஆலயமாகும். அதில், வழிபாடு செய்யப்பட்டுவந்த பலிபீடங்கள் இருந்தன. அது “அல்கஅபா' என்று அழைக்கப் பட்டுவந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்துவிட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறி கேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக்கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்துவிடுவார்கள்” என்று கூறப்பட்டது.

அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்துகொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். அப்போது நான் (அம்மனிதரிடம்), “நீ இந்த அம்புகளை உடைத்தெறிந்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை' என்று நீ உறுதிமொழி சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்” என்று சொன்னேன். அவ்வாறே அவர் அவற்றை உடைத்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று உறுதிமொழி கூறினார். பிறகு “அஹ்மஸ்' குலத்தாரில் “அபூஅர்த்தாத்' என்னும் (குறிப்புப்) பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் (அந்த ஆலயம் அழிக்கப்பட்ட) இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அதைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுதான் (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) “அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும் படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 64
4358. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ عَمْرَو بْنَ الْعَاصِ عَلَى جَيْشِ ذَاتِ السَّلاَسِلِ قَالَ فَأَتَيْتُهُ فَقُلْتُ أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ "" عَائِشَةُ "". قُلْتُ مِنَ الرِّجَالِ قَالَ "" أَبُوهَا "". قُلْتُ ثُمَّ مَنْ قَالَ "" عُمَرُ "". فَعَدَّ رِجَالاً فَسَكَتُّ مَخَافَةَ أَنْ يَجْعَلَنِي فِي آخِرِهِمْ.
பாடம் : 64 “தாத்துஸ் ஸலாஸில்' போர்388 இதுவே “லக்ம்' மற்றும் “ஜுதாம்' போர் ஆகும். இதை இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “(தாத்துஸ் ஸலாஸில் என்பது) பலீ, உத்ரா, பனுல் கைன் ஆகிய குலங்களின் ஊராகும்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4358. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா' என்று பதிலளித்தார்கள்.

நான், “ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)' என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “உமர்' என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் பட்டியலிட்டு (அவர்களெல்லாரும் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்குப் பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கிவிடுவார்களோ' என்று அஞ்சியதால் நான் மௌனமாயிருந்துவிட்டேன்.389

அத்தியாயம் : 64
4359. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ الْعَبْسِيُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كُنْتُ بِالْبَحْرِ فَلَقِيتُ رَجُلَيْنِ مِنْ أَهْلِ الْيَمَنِ ذَا كَلاَعٍ وَذَا عَمْرٍو، فَجَعَلْتُ أُحَدِّثُهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ ذُو عَمْرٍو لَئِنْ كَانَ الَّذِي تَذْكُرُ مِنْ أَمْرِ صَاحِبِكَ، لَقَدْ مَرَّ عَلَى أَجَلِهِ مُنْذُ ثَلاَثٍ. وَأَقْبَلاَ مَعِي حَتَّى إِذَا كُنَّا فِي بَعْضِ الطَّرِيقِ رُفِعَ لَنَا رَكْبٌ مِنْ قِبَلِ الْمَدِينَةِ فَسَأَلْنَاهُمْ فَقَالُوا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ وَالنَّاسُ صَالِحُونَ. فَقَالاَ أَخْبِرْ صَاحِبَكَ أَنَّا قَدْ جِئْنَا وَلَعَلَّنَا سَنَعُودُ إِنْ شَاءَ اللَّهُ، وَرَجَعَا إِلَى الْيَمَنِ فَأَخْبَرْتُ أَبَا بَكْرٍ بِحَدِيثِهِمْ قَالَ أَفَلاَ جِئْتَ بِهِمْ. فَلَمَّا كَانَ بَعْدُ قَالَ لِي ذُو عَمْرٍو يَا جَرِيرُ إِنَّ بِكَ عَلَىَّ كَرَامَةً، وَإِنِّي مُخْبِرُكَ خَبَرًا، إِنَّكُمْ مَعْشَرَ الْعَرَبِ لَنْ تَزَالُوا بِخَيْرٍ مَا كُنْتُمْ إِذَا هَلَكَ أَمِيرٌ تَأَمَّرْتُمْ فِي آخَرَ، فَإِذَا كَانَتْ بِالسَّيْفِ كَانُوا مُلُوكًا يَغْضَبُونَ غَضَبَ الْمُلُوكِ وَيَرْضَوْنَ رِضَا الْمُلُوكِ.
பாடம் : 65 ஜரீர் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றது390
4359. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன்வாசிகளில் “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' ஆகிய இருவரை நான் சந்தித்தேன்.391 அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது “தூ அம்ர்' என்னிடம், “நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்துபோய் மூன்று நாட்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள்.

நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்துகொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்துகொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனை வரும் நல்லவர்களாக உள்ளனர்” என்று பதிலளித்தனர்.

உடனே “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' இருவரும், “நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்' என்று உங்கள் தோழரிடம் (அபூபக்ரிடம்) சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களை (என்னிடம்) நீங்கள் அழைத்துவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், “ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந் தெடுத்துக்கொள்ளும்வரை நன்மையில் இருப்பீர்கள்.

(ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர் களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்” என்று சொன்னார்.

அத்தியாயம் : 64
4360. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْثًا قِبَلَ السَّاحِلِ وَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَهُمْ ثَلاَثُمِائَةٍ، فَخَرَجْنَا وَكُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَنِيَ الزَّادُ فَأَمَرَ أَبُو عُبَيْدَةَ بِأَزْوَادِ الْجَيْشِ، فَجُمِعَ فَكَانَ مِزْوَدَىْ تَمْرٍ، فَكَانَ يَقُوتُنَا كُلَّ يَوْمٍ قَلِيلٌ قَلِيلٌ حَتَّى فَنِيَ، فَلَمْ يَكُنْ يُصِيبُنَا إِلاَّ تَمْرَةٌ تَمْرَةٌ فَقُلْتُ مَا تُغْنِي عَنْكُمْ تَمْرَةٌ فَقَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَنِيَتْ. ثُمَّ انْتَهَيْنَا إِلَى الْبَحْرِ، فَإِذَا حُوتٌ مِثْلُ الظَّرِبِ فَأَكَلَ مِنْهَا الْقَوْمُ ثَمَانَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَمَرَ أَبُو عُبَيْدَةَ بِضِلَعَيْنِ مِنْ أَضْلاَعِهِ فَنُصِبَا، ثُمَّ أَمَرَ بِرَاحِلَةٍ فَرُحِلَتْ ثُمَّ مَرَّتْ تَحْتَهُمَا فَلَمْ تُصِبْهُمَا.
பாடம் : 66 “சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்392 நபித்தோழர்களின் ஒரு படை குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை (இடை மறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக்கொண்டிருந்தது. அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், அப்படையினருக்குத் தளபதியாக இருந்தார்கள்.
4360. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேர் இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம்.

சிறிது தூரம் சென்றபின், வழியில் (எங்கள்) பயண உணவு தீர்ந்துபோய் விட்டது. ஆகவே, அபூஉபைதா (ரலி) அவர்கள் படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்றுதிரட்டப்பட்டன. அவை இரு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன.

அபூஉபைதா (ரலி) அவர்கள் அது தீரும்வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். ஆகவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்துவந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “(ஒருநாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதுவும் தீர்ந்து போனபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாட்கள் அதிலிருந்து உண்டார்கள்.

பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு (அவற்றுக்கிடையே) தமது வாகனத்தைச் செலுத்தும்படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றுவிட்டது.393


அத்தியாயம் : 64
4361. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الَّذِي حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَمِائَةِ رَاكِبٍ أَمِيرُنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ نَرْصُدُ عِيرَ قُرَيْشٍ، فَأَقَمْنَا بِالسَّاحِلِ نِصْفَ شَهْرٍ فَأَصَابَنَا جُوعٌ شَدِيدٌ حَتَّى أَكَلْنَا الْخَبَطَ، فَسُمِّيَ ذَلِكَ الْجَيْشُ جَيْشَ الْخَبَطِ، فَأَلْقَى لَنَا الْبَحْرُ دَابَّةً يُقَالُ لَهَا الْعَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ وَادَّهَنَّا مِنْ وَدَكِهِ حَتَّى ثَابَتْ إِلَيْنَا أَجْسَامُنَا، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلَعًا مِنْ أَضْلاَعِهِ فَنَصَبَهُ فَعَمَدَ إِلَى أَطْوَلِ رَجُلٍ مَعَهُ ـ قَالَ سُفْيَانُ مَرَّةً ضِلَعًا مِنْ أَعْضَائِهِ فَنَصَبَهُ وَأَخَذَ رَجُلاً وَبَعِيرًا ـ فَمَرَّ تَحْتَهُ قَالَ جَابِرٌ وَكَانَ رَجُلٌ مِنَ الْقَوْمِ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ إِنَّ أَبَا عُبَيْدَةَ نَهَاهُ. وَكَانَ عَمْرٌو يَقُولُ أَخْبَرَنَا أَبُو صَالِحٍ أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ قَالَ لأَبِيهِ كُنْتُ فِي الْجَيْشِ فَجَاعُوا. قَالَ انْحَرْ. قَالَ نَحَرْتُ. قَالَ ثُمَّ جَاعُوا قَالَ انْحَرْ. قَالَ نَحَرْتُ. قَالَ ثُمَّ جَاعُوا قَالَ انْحَرْ. قَالَ نَحَرْتُ ثُمَّ جَاعُوا قَالَ انْحَرْ. قَالَ نُهِيتُ.
பாடம் : 66 “சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்392 நபித்தோழர்களின் ஒரு படை குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை (இடை மறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக்கொண்டிருந்தது. அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், அப்படையினருக்குத் தளபதியாக இருந்தார்கள்.
4361. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப் படைப்பிரிவு “கருவேல இலைப் படைப்பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது.

கடல் எங்களுக்காக “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) எனப்படும் ஓர் உயிரினத்தை (கரையில் ஒதுக்கிப்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அதனால் எங்கள் பழைய (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார்கள்).

மற்றோர் அறிவிப்பில், “ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டு)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் (“இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள்.

அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் (போரிலிருந்து திரும்பியபின் தம் தந்தை சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம்), “நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொன்னார்கள். அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். கைஸ் (ரலி) அவர்கள், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்றார். மீண்டும் அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார்.

உடனே அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்றார். அவர், “(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டுவிட்டேன்” என்று சொன்னார்.


அத்தியாயம் : 64
4362. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّهُ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ غَزَوْنَا جَيْشَ الْخَبَطِ وَأُمِّرَ أَبُو عُبَيْدَةَ، فَجُعْنَا جُوعًا شَدِيدًا فَأَلْقَى الْبَحْرُ حُوتًا مَيِّتًا، لَمْ نَرَ مِثْلَهُ، يُقَالُ لَهُ الْعَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ عَظْمًا مِنْ عِظَامِهِ فَمَرَّ الرَّاكِبُ تَحْتَهُ. فَأَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ قَالَ أَبُو عُبَيْدَةَ كُلُوا. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" كُلُوا رِزْقًا أَخْرَجَهُ اللَّهُ، أَطْعِمُونَا إِنْ كَانَ مَعَكُمْ "". فَأَتَاهُ بَعْضُهُمْ {بِعُضْوٍ} فَأَكَلَهُ.
பாடம் : 66 “சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்392 நபித்தோழர்களின் ஒரு படை குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை (இடை மறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக்கொண்டிருந்தது. அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், அப்படையினருக்குத் தளபதியாக இருந்தார்கள்.
4362. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் “கருவேல இலைப் படைப் பிரிவி'ல் சென்றோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) போட்டது. (அதற்குமுன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) என்று அழைக்கப்படுகிறது.

அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூஉபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.

அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்விதம் கூற நான் கேட்டேன்:

அபூஉபைதா (ரலி) அவர்கள், “உண்ணுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டுவந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள்.

அத்தியாயம் : 64
4363. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 67 அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது394
4363. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“விடைபெறும் ஹஜ்'ஜ‚க்கு முந்தைய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்போர் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக யாரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது” என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.395


அத்தியாயம் : 64
4364. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ، وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ}
பாடம் : 67 அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது394
4364. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

முழுமையான வடிவில் அருளப்பெற்ற இறுதி அத்தியாயம், “பராஅத்' (எனும் 9ஆவது “அத்தவ்பா') அத்தியாயம் ஆகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி “அந்நிசா'வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:

(நபியே!) மக்கள் உங்களிடம் “கலாலா' பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு “கலாலா' பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்...(4:176)396

அத்தியாயம் : 64
4365. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي صَخْرَةَ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَرِيءَ ذَلِكَ فِي وَجْهِهِ فَجَاءَ نَفَرٌ مِنَ الْيَمَنِ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 68 பனூ தமீம் குலத்தாரின் தூதுக் குழு397
4365. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று அவர்களிடம் சொன்னார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர் கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்” என்று சொன்னார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி (ஸல்) அவர்களது முகத்தில் கவலை காணப்பட்டது.

அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “(யமன்வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு யமனியர், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.398

அத்தியாயம் : 64
4366. حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ بَعْدَ ثَلاَثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا فِيهِمْ "" هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ "". وَكَانَتْ فِيهِمْ سَبِيَّةٌ عِنْدَ عَائِشَةَ فَقَالَ "" أَعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ "". وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ "" هَذِهِ صَدَقَاتُ قَوْمٍ، أَوْ قَوْمِي "".
பாடம் : 69 (உயைனா படைப்பிரிவு)399 இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனுல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். ஆகவே அவர்கள், அக்கூட்டத்தார்மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.
4366. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங் கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.

அவையாவன:

1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க்கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளில் ஒருத்தியாவாள்” என்று சொன்னார்கள்.

3. (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவை “ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது “என் சமுதாயத்தின்' தானப் பொருட்கள்” என்று சொன்னார்கள்.400


அத்தியாயம் : 64
4367. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُمْ أَنَّهُ، قَدِمَ رَكْبٌ مِنْ بَنِي تَمِيمٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَمِّرِ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدِ بْنِ زُرَارَةَ. قَالَ عُمَرُ بَلْ أَمِّرِ الأَقْرَعَ بْنَ حَابِسٍ. قَالَ أَبُو بَكْرٍ مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي. قَالَ عُمَرُ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فَنَزَلَ فِي ذَلِكَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُقَدِّمُوا} حَتَّى انْقَضَتْ.
பாடம் : 69 (உயைனா படைப்பிரிவு)399 இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனுல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். ஆகவே அவர்கள், அக்கூட்டத்தார்மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.
4367. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் பின் ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இல்லை; அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்), “நீங்கள் எனக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்லவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்வது என் நோக்கமல்ல” என்று பதிலளித்தார்கள்.

இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, “இறைநம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்” எனும் (49:1ஆவது) வசனம் முழுவதுமாக அருளப்பெற்றது.

அத்தியாயம் : 64
4368. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِنَّ لِي جَرَّةً يُنْتَبَذُ لِي نَبِيذٌ، فَأَشْرَبُهُ حُلْوًا فِي جَرٍّ إِنْ أَكْثَرْتُ مِنْهُ، فَجَالَسْتُ الْقَوْمَ، فَأَطَلْتُ الْجُلُوسَ خَشِيتُ أَنْ أَفْتَضِحَ فَقَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَرْحَبًا بِالْقَوْمِ غَيْرَ خَزَايَا وَلاَ النَّدَامَى "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ الْمُشْرِكِينَ مِنْ مُضَرَ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي أَشْهُرِ الْحُرُمِ، حَدِّثْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ، إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الْجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ، هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ الْمَغَانِمِ الْخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ مَا انْتُبِذَ فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ "".
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4368. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “என்னிடம் “நபீத்' (பழச்சாறு மது) வைக்கப்படுகின்ற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய்விடுவேன் என நான் அஞ்சினேன்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!” என்று சொன்னார்கள்.

அம்மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே “முளர்' குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை.

ஆகவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகின்றேன்:

1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது.

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறுவதுதான் (அது).

2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.

3. ஸகாத் (கட்டாயக்கொடை) வழங்கு வது.

4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது.

மேலும், “போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும்படியும் (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங் கள்தான் அவை” என்றார்கள்.402


அத்தியாயம் : 64
4369. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا هَذَا الْحَىَّ مِنْ رَبِيعَةَ، وَقَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلاَّ فِي شَهْرٍ حَرَامٍ، فَمُرْنَا بِأَشْيَاءَ نَأْخُذُ بِهَا وَنَدْعُو إِلَيْهَا مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ـ وَعَقَدَ وَاحِدَةً ـ وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا لِلَّهِ خُمْسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ، وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ "".
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4369. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் “ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்க விடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். ஆகவே, எங்களுக்குச் சில விஷயங்களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.

(கட்டளையிடும் நான்கு விஷயங் களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறுவது - இவ்வாறு சொல்லி “ஒன்று' என (தமது விரலால்) எண்ணினார்கள் - தொழுகையைக் கடைபிடிப்பது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்துவது (ஆகியவைதான் அவை.)

(மதுபானம் ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்.403


அத்தியாயம் : 64
4370. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو،. وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ كُرَيْبًا، مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَرْسَلُوا إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَإِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّيهَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا، قَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ مَعَ عُمَرَ النَّاسَ عَنْهُمَا. قَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا، وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي، فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ. فَأَخْبَرْتُهُمْ، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُمَا، وَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ عَلَىَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَصَلاَّهُمَا، فَأَرْسَلْتُ إِلَيْهِ الْخَادِمَ فَقُلْتُ قُومِي إِلَى جَنْبِهِ فَقُولِي تَقُولُ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ أَلَمْ أَسْمَعْكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فَأَرَاكَ تُصَلِّيهِمَا. فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي. فَفَعَلَتِ الْجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، إِنَّهُ أَتَانِي أُنَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالإِسْلاَمِ مِنْ قَوْمِهِمْ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ، فَهُمَا هَاتَانِ "".
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4370. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுங்கள். அஸ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அவரிடம் கேளுங்கள். “நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (அன்னையே!) தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே' எனக் கேளுங்கள்” என்று (அம்மூவரும்) கூறினர்.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தாமும் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு (அஸ்ருக்குப்பின்) தொழுபவர் களைத் தடுப்பவர்களாக இருந்தோம் என்று கூறினார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று என்னை அம்மூவரும் அனுப்பிய விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் உம்மு சலமாவிடம் சென்று கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பி வந்து அவர்கள் மூவரிடமும் ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உம்மு சலமா (ரó) அவர்களிடம் சென்று கேட்குமாறு அவர்கள் மூவரும் மீண்டும் என்னை அனுப்பினார்கள்.

(அவ்வாறே அவர்களிடம் வந்து நான் விஷயத்தைக் கேட்டபோது) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தொழ வேண்டாமெனத் தடை செய்ததை நான் கேட்டிருக்கிறேன். பிறகு (ஒருமுறை) அஸ்ர் தொழுதுவிட்டு அவர்கள் எனது அறைக்கு வந்து, அந்த இரு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் “பனூ ஹராம்' குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி, “நீ அவர்களுக்கு அருகில் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நீங்கள் தடை செய்ததை நான் கேட்டிருக்கவில்லையா? ஆனால், தாங்களே இப்போது அதைத் தொழப் பார்க்கின்றேனே?' என நான் கேட்டதாக அவர்களிடம் நீ சொல். அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு” எனக் கூறினேன்.

அப்பெண்ணும் சொன்னபடி செய்தார். நபி (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தபோது அப்பெண் திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், “அபூஉமய்யாவின் மகளே! (உம்மு சலமாவே!) அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையினரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியைத் தெரிவிக்க என்னிடம் வந்திருந்ததால், லுஹ்ருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்களை என்னால் தொழ முடிய வில்லை; அத்தொழுகையே (இப்போது நான் தொழுத) இந்த இரண்டு ரக்அத் களாகும்' என்றார்கள்.404

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4371. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ ـ هُوَ ابْنُ طَهْمَانَ ـ عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ أَوَّلُ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ جُمِّعَتْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ عَبْدِ الْقَيْسِ بِجُوَاثَى. يَعْنِي قَرْيَةً مِنَ الْبَحْرَيْنِ.
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு (இஸ்லாத்தில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகை, “ஜுவாஸா' எனுமிடத்தில் - அதாவது பஹ்ரைனில் இருந்த ஒரு கிராமத்தில்-அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே ஆகும்.405

அத்தியாயம் : 64
4372. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". فَقَالَ عِنْدِي خَيْرٌ يَا مُحَمَّدُ، إِنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَمٍ، وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ مِنْهُ مَا شِئْتَ. حَتَّى كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". قَالَ مَا قُلْتُ لَكَ إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ. فَتَرَكَهُ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ، فَقَالَ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". فَقَالَ عِنْدِي مَا قُلْتُ لَكَ. فَقَالَ "" أَطْلِقُوا ثُمَامَةَ ""، فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، يَا مُحَمَّدُ وَاللَّهِ مَا كَانَ عَلَى الأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَىَّ مِنْ وَجْهِكَ، فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ إِلَىَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضَ إِلَىَّ مِنْ دِينِكَ، فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ إِلَىَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضُ إِلَىَّ مِنْ بَلَدِكَ، فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلاَدِ إِلَىَّ، وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ، فَمَاذَا تَرَى فَبَشَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ، فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ لَهُ قَائِلٌ صَبَوْتَ. قَالَ لاَ، وَلَكِنْ أَسْلَمْتُ مَعَ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلاَ وَاللَّهِ لاَ يَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4372. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள்.

அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் பழிக்குப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்; (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்; நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (அப்படியே) விடப்பட்டார். மறுநாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும் அப்படியே) விட்டுவிட்டார்கள்.

நாளை மறுநாள் வந்தபோது, “நீர் என்ன கருதுகிறீர்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். மேலும், முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதிமொழி கூறுகிறேன்” என மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. நான் (மக்காவுக்குச் சென்று) உம்ரா செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில்தான் உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டனர். இப்போது தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீர் மதம் மாறிவிட்டீரா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிóருந்து ஒரு கோதுமை தானியம்கூட (மக்காவாசி களான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.407


அத்தியாயம் : 64
4373. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يَقُولُ إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ. وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِطْعَةُ جَرِيدٍ حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ، فَقَالَ "" لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ، وَإِنِّي لأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيهِ مَا رَأَيْتُ، وَهَذَا ثَابِتٌ يُجِيبُكَ عَنِّي "". ثُمَّ انْصَرَفَ عَنْهُ.
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4373. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட) “முசைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், “முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்” என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலருடன் மதீனா வந்திருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முசைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்றுகொண்டு, “இந்தத் துண்டை நீ கேட்டால்கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் கண்டிப்பாக அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்.

மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன். இதோ, இவர் தான் ஸாபித். இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.


அத்தியாயம் : 64
4374. قَالَ ابْنُ عَبَّاسٍ فَسَأَلْتُ عَنْ قَوْلِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكَ أُرَى الَّذِي أُرِيتُ فِيهِ مَا أُرِيتُ ". فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِي يَدَىَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَىَّ فِي الْمَنَامِ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي، أَحَدُهُمَا الْعَنْسِيُّ، وَالآخَرُ مُسَيْلِمَةُ ".
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4374. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன்” என்று (முசைலிமாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்டபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. ஆகவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே அவ்விரண்டும் பறந்துவிட்டன.

எனவே, நான் அவ்விரண்டுக்கும் “எனக்குப் பின்னர் வெளிப்படவிருக்கின்ற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்சீ; மற்றொருவன் முசைலிமா” என்று சொன்னார்கள்.408


அத்தியாயம் : 64