4335. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِسْمَةَ حُنَيْنٍ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مَا أَرَادَ بِهَا وَجْهَ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَتَغَيَّرَ وَجْهُهُ ثُمَّ قَالَ "" رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் : 57
ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353
இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4335. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை (மக்களிடையே) பங்கிட்டபோது அன்சாரிகளில் ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் நபியவர்கள் இறைத் திருப்தியை நாடவில்லை” என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தேன். உடனே அவர்களுடைய முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. பிறகு அவர்கள், “(இறைத்தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்; ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.368
அத்தியாயம் : 64

4336. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَاسًا، أَعْطَى الأَقْرَعَ مِائَةً مِنَ الإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى نَاسًا، فَقَالَ رَجُلٌ مَا أُرِيدَ بِهَذِهِ الْقِسْمَةِ وَجْهُ اللَّهِ. فَقُلْتُ لأُخْبِرَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" رَحِمَ اللَّهُ مُوسَى. قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் : 57
ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353
இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4336. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின்போது, நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ (பின் ஹாபிஸ்-ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ -ரலி) அவர்களுக்கும் அதே போன்று கொடுத்தார்கள். இன்னும் சிலருக்கும் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார்.369
உடனே நான், “இதை நிச்சயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொன்னேன். (அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் சென்று நான் சொல்ல) அவர்கள், “(இறைத்தூதர்) “மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். இதைவிட அதிகமாக அவர்கள் மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.370

4337. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ أَقْبَلَتْ هَوَازِنُ وَغَطَفَانُ وَغَيْرُهُمْ بِنَعَمِهِمْ وَذَرَارِيِّهِمْ، وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشَرَةُ آلاَفٍ وَمِنَ الطُّلَقَاءِ، فَأَدْبَرُوا عَنْهُ حَتَّى بَقِيَ وَحْدَهُ، فَنَادَى يَوْمَئِذٍ نِدَاءَيْنِ لَمْ يَخْلِطْ بَيْنَهُمَا، الْتَفَتَ عَنْ يَمِينِهِ، فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ "". قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، أَبْشِرْ نَحْنُ مَعَكَ. ثُمَّ الْتَفَتَ عَنْ يَسَارِهِ، فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ "". قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، أَبْشِرْ نَحْنُ مَعَكَ. وَهْوَ عَلَى بَغْلَةٍ بَيْضَاءَ، فَنَزَلَ فَقَالَ "" أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ""، فَانْهَزَمَ الْمُشْرِكُونَ، فَأَصَابَ يَوْمَئِذٍ غَنَائِمَ كَثِيرَةً، فَقَسَمَ فِي الْمُهَاجِرِينَ وَالطُّلَقَاءِ وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا، فَقَالَتِ الأَنْصَارُ إِذَا كَانَتْ شَدِيدَةٌ فَنَحْنُ نُدْعَى، وَيُعْطَى الْغَنِيمَةَ غَيْرُنَا. فَبَلَغَهُ ذَلِكَ، فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ، فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ "". فَسَكَتُوا فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ أَلاَ تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا، وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَحُوزُونَهُ إِلَى بُيُوتِكُمْ "". قَالُوا بَلَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا، وَسَلَكَتِ الأَنْصَارُ شِعْبًا لأَخَذْتُ شِعْبَ الأَنْصَارِ "". فَقَالَ هِشَامٌ يَا أَبَا حَمْزَةَ، وَأَنْتَ شَاهِدٌ ذَاكَ قَالَ وَأَيْنَ أَغِيبُ عَنْهُ
பாடம் : 57
ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353
இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4337. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தாரும் ஃகதஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டனர்.அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியில்) பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களில் பலரும் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தனியாக) விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள்.
அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்துவிடாமல் (இடைவெளி இருக்குமாறு) பார்த்துக்கொண்டார்கள்.
தம் வலப் பக்கம் திரும்பி, “அன்சாரி களே!” என்று அழைக்க அவர்கள், “இதோ, வந்துவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்; (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் இடப் பக்கம் திரும்பி, “அன்சாரிகளே! என்று அழைத்தார்கள். அவர்கள் (மீண்டும்), “இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம், அல்லாஹ்வின் தூதரே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்” என்று சொன்னார்கள். பிறகு, இணைவைப்பாளர்கள் (அந்தப் போரில்) தோற்றுப்போனதால், ஏராளமான போர்ச் செல்வங்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியில்) பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.
ஆகவே அன்சாரிகள் (சிலர்), “ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சினை என்றால் (உயிரை அர்ப்பணித்து உதவிட) நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஆனால், (பிரச்சினை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக் குறையுடன்) பேசிக்கொண்டார்கள். இவர் கள் இப்படிப் பேசிக்கொள்ளும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய இந்தச் செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அவர்கள் (உண்மைதான் என்பது போல்) மௌனமாயிருந்தார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சொந்தமாக்கிக்கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம் (நாங்கள் அதைத்தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களெல்லாரும் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் வேறொரு பள்ளத்தாக்கில் செல்வார்களாயின் நான் அன்சாரிகள் செல்லும் பள்ளத்தாக்கையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்,) “அபூஹம்ஸாவே! நீங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?” என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?” என்று பதிலளித்தார்கள்.

4338. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً قِبَلَ نَجْدٍ، فَكُنْتُ فِيهَا، فَبَلَغَتْ سِهَامُنَا اثْنَىْ عَشَرَ بَعِيرًا، وَنُفِّلْنَا بَعِيرًا بَعِيرًا، فَرَجَعْنَا بِثَلاَثَةَ عَشَرَ بَعِيرًا.
பாடம் : 58
“நஜ்த்' நோக்கி அனுப்பப்பட்ட படைப்பிரிவு371
4338. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். நான் அதில் இடம் பெற்றிருந்தேன்.
(அந்தப் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில்) எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன.
எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களுக்குரிய பங்குக்கும் மேல் அதிகமாக ஒவ்வோர் ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஆக, நாங்கள் (ஒவ்வொருவரும்) பதிமூன்று ஒட்டகங்களைப் பெற்றுத் திரும்பினோம்.372

4339. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَحَدَّثَنِي نُعَيْمٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ، فَدَعَاهُمْ إِلَى الإِسْلاَمِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا. فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا، صَبَأْنَا. فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ، وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ، حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لاَ أَقْتُلُ أَسِيرِي، وَلاَ يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ، حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرْنَاهُ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ "" اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ "". مَرَّتَيْنِ.
பாடம் : 59
நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பி யது373
4339. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா' (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்) என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி) “ஸபஃனா, ஸபஃனா' (நாங்கள் மதம் மாறிவிட்டோம், மதம் மாறிவிட்டோம்) என்று சொல்லலானார்கள்.
உடனே அவர்களில் சிலரை காலித் (ரலி) அவர்கள் கொல்லவும் சிலரைச் சிறைபிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒருநாள் காலித் (ரலி) அவர்கள், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்லமாட்டேன்; மேலும், என் சகாக்களில் எவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்கள்” என்று சொன்னேன்.
இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என இருமுறை சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

4340. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً فَاسْتَعْمَلَ رَجُلاً مِنَ الأَنْصَارِ، وَأَمَرَهُمْ أَنْ يُطِيعُوهُ، فَغَضِبَ فَقَالَ أَلَيْسَ أَمَرَكُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُطِيعُونِي. قَالُوا بَلَى. قَالَ فَاجْمَعُوا لِي حَطَبًا. فَجَمَعُوا، فَقَالَ أَوْقِدُوا نَارًا. فَأَوْقَدُوهَا، فَقَالَ ادْخُلُوهَا. فَهَمُّوا، وَجَعَلَ بَعْضُهُمْ يُمْسِكُ بَعْضًا، وَيَقُولُونَ فَرَرْنَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ النَّارِ. فَمَا زَالُوا حَتَّى خَمَدَتِ النَّارُ، فَسَكَنَ غَضَبُهُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ، الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ "".
பாடம் : 60
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) மற்றும் அல்கமா பின் முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ (ரலி) ஆகியோரின் படைப்பிரிவு
இது “அன்சாரிகளின் படைப்பிரிவு' என்று அழைக்கப்படுகிறது.374
4340. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.(அவர்கள் ஏதோ தவறிழைத்துவிட) அவர்கள்மீது அவர் கோபமுற்று, “நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிட வில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “ஆம் (கட்டளை யிட்டார்கள்)” என்று பதிலளித்தனர்.
அவர், “அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், “நெருப்பு மூட்டுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், “இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்” என்று கூற, அவர்கள் அதில் நுழையப்போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும் அவர்கள், “(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித்தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்” என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும்வரை இவ்வாறே கூறிக்கொண்டிருந்தனர். பிறகு, படைத் தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, “அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள்வரையிலும்கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்கமாட்டார்கள்.375 கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில்தான்” என்று சொன்னார்கள்.

4341. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا مُوسَى وَمُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ، قَالَ وَبَعَثَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى مِخْلاَفٍ قَالَ وَالْيَمَنُ مِخْلاَفَانِ ثُمَّ قَالَ " يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا ". فَانْطَلَقَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إِلَى عَمَلِهِ، وَكَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إِذَا سَارَ فِي أَرْضِهِ كَانَ قَرِيبًا مِنْ صَاحِبِهِ أَحْدَثَ بِهِ عَهْدًا، فَسَلَّمَ عَلَيْهِ، فَسَارَ مُعَاذٌ فِي أَرْضِهِ قَرِيبًا مِنْ صَاحِبِهِ أَبِي مُوسَى، فَجَاءَ يَسِيرُ عَلَى بَغْلَتِهِ حَتَّى انْتَهَى إِلَيْهِ، وَإِذَا هُوَ جَالِسٌ، وَقَدِ اجْتَمَعَ إِلَيْهِ النَّاسُ، وَإِذَا رَجُلٌ عِنْدَهُ قَدْ جُمِعَتْ يَدَاهُ إِلَى عُنُقِهِ فَقَالَ لَهُ مُعَاذٌ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَيَّمَ هَذَا قَالَ هَذَا رَجُلٌ كَفَرَ بَعْدَ إِسْلاَمِهِ. قَالَ لاَ أَنْزِلُ حَتَّى يُقْتَلَ. قَالَ إِنَّمَا جِيءَ بِهِ لِذَلِكَ فَانْزِلْ. قَالَ مَا أَنْزِلُ حَتَّى يُقْتَلَ فَأَمَرَ بِهِ فَقُتِلَ ثُمَّ نَزَلَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ، كَيْفَ تَقْرَأُ الْقُرْآنَ قَالَ أَتَفَوَّقُهُ تَفَوُّقًا. قَالَ فَكَيْفَ تَقْرَأُ أَنْتَ يَا مُعَاذُ قَالَ أَنَامُ أَوَّلَ اللَّيْلِ فَأَقُومُ وَقَدْ قَضَيْتُ جُزْئِي مِنَ النَّوْمِ، فَأَقْرَأُ مَا كَتَبَ اللَّهُ لِي، فَأَحْتَسِبُ نَوْمَتِي كَمَا أَحْتَسِبُ قَوْمَتِي.
பாடம் : 61
அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4341. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி னார்கள்; அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்குப் பொறுப்பாளராக அனுப்பினார்கள். யமன் இரு மாகாணங்களாகும்.377
பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர் கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.
அவர்கள் இருவரும் தத்தம் பணி (இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தமது சந்திப்பைப் புதுப்பித்துக்கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத் (ரலி), தம் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது தம் சகாவான அபூமூசா (ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தமது கோவேறு கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்றுசேர்ந்தார்.
அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், தம்மிடம் மக்கள் ஒன்றுகூடியிருக்க (தமது அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இரு கைகளும் தம் கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முஆத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் கைஸ் அவர்களே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின் அதை நிராகரித்துவிட்டவன்” என்று பதிலளித்தார்கள்.378
முஆத் (ரலி) அவர்கள், “இவன் கொல்லப்படும்வரை நான் (என் வாகனத்தி லிருந்து) இறங்கமாட்டேன்” என்றார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத்தான். ஆகவே, நீங்கள் இறங்குங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு முஆத், (ரலி) அவர்கள் “இவன் கொல்லப்படும்வரை நான் (வாகனத்திóருந்து) இறங்கமாட்டேன்” என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும்படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு முஆத் (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி, “அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு அபூமூசா (ரலி) அவர்கள், “முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகிறீர்கள்?” என்று கேட்க, முஆத் (ரலி) அவர்கள், “இரவின் முற்பகுதியில் நான் உறங்கிவிடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். ஆகவே, நான் எழு(ந்து வழிபடு)வதற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

4343.
பாடம் : 61
அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4343. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்குப் பொறுப்பாளராக அனுப்பிவைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள், “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம், “ அல்பித்உ என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்பித்உ என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் :

4344. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَدَّهُ أَبَا مُوسَى، وَمُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ " يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا ". فَقَالَ أَبُو مُوسَى يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ أَرْضَنَا بِهَا شَرَابٌ مِنَ الشَّعِيرِ الْمِزْرُ، وَشَرَابٌ مِنَ الْعَسَلِ الْبِتْعُ. فَقَالَ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ ". فَانْطَلَقَا فَقَالَ مُعَاذٌ لأَبِي مُوسَى كَيْفَ تَقْرَأُ الْقُرْآنَ قَالَ قَائِمًا وَقَاعِدًا وَعَلَى رَاحِلَتِهِ وَأَتَفَوَّقُهُ تَفَوُّقًا. قَالَ أَمَّا أَنَا فَأَنَامُ وَأَقُومُ، فَأَحْتَسِبُ نَوْمَتِي كَمَا أَحْتَسِبُ قَوْمَتِي، وَضَرَبَ فُسْطَاطًا، فَجَعَلاَ يَتَزَاوَرَانِ، فَزَارَ مُعَاذٌ أَبَا مُوسَى، فَإِذَا رَجُلٌ مُوثَقٌ، فَقَالَ مَا هَذَا فَقَالَ أَبُو مُوسَى يَهُودِيٌّ أَسْلَمَ ثُمَّ ارْتَدَّ. فَقَالَ مُعَاذٌ لأَضْرِبَنَّ عُنُقَهُ. تَابَعَهُ الْعَقَدِيُّ وَوَهْبٌ عَنْ شُعْبَةَ. وَقَالَ وَكِيعٌ وَالنَّضْرُ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. رَوَاهُ جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ أَبِي بُرْدَةَ.
பாடம் : 61
அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4344. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பூட்டிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாராகும் ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாராகும் ஒருவகை பானமான “பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
பின்பு நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒருமுறை சந்தித்தபோது) முஆத் (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வழிபடு)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கி றேன்” என்று சொன்னார். பிறகு கம்பளியாலான கூடாரமொன்றை அமைத்துக்கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒரு மனிதர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். நான், “இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “இவனது கழுத்தை நான் துண்டிப்பேன்” என்றார்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4346. حَدَّثَنِي عَبَّاسُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ طَارِقَ بْنَ شِهَابٍ، يَقُولُ حَدَّثَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَرْضِ قَوْمِي، فَجِئْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُنِيخٌ بِالأَبْطَحِ فَقَالَ "" أَحَجَجْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ "". قُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" كَيْفَ قُلْتَ "". قَالَ قُلْتُ لَبَّيْكَ إِهْلاَلاً كَإِهْلاَلِكَ. قَالَ "" فَهَلْ سُقْتَ مَعَكَ هَدْيًا "". قُلْتُ لَمْ أَسُقْ. قَالَ "" فَطُفْ بِالْبَيْتِ وَاسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حِلَّ "". فَفَعَلْتُ حَتَّى مَشَطَتْ لِي امْرَأَةٌ مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، وَمَكُثْنَا بِذَلِكَ حَتَّى اسْتُخْلِفَ عُمَرُ.
பாடம் : 61
அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4346. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்தஹ்' பள்ளத்தாக்கில் தங்கியிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.
அதற்கு அவர்கள், “நீங்கள் (இஹ்ராமின்போது) என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ தாங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என்று சொன்னேன்” எனப் பதிலளித்தேன். அவர்கள், “உங்களுடன் பலிப் பிராணியை நீங்கள் கொண்டுவந்தீர்களா?” என்று கேட்டார்கள். நான், “கொண்டுவரவில்லை” என்று பதிலளித்தேன்.
அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத் தலை வாரினாள். இவ்வாறே, உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்வரை நாங்கள் செயல்பட்டுவந்தோம்.379

4347. حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ "" إِنَّكَ سَتَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ طَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ طَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْكُمْ صَدَقَةً، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ، فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ طَاعُوا لَكَ بِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {طَوَّعَتْ} طَاعَتْ وَأَطَاعَتْ لُغَةٌ، طِعْتُ وَطُعْتُ وَأَطَعْتُ.
பாடம் : 61
அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4347. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பியபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்லப்போகிறீர்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றும் உறுதிமொழி கூற அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகை களை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளிடையே பங்கிடப்பட வேண்டிய ஸகாத்தை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியும்போது, அவர்களின் செல்வங் களில் உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதிக்குள்ளானவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.380
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இங்கு “கீழ்ப்படிதல்' என்பதைக் குறித்து) “அ(த்)தாஊ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. தவ்வஅ, தாஅ, அ(த்)தாஅ எல்லாம் (பொருளில்) ஒன்றே! “நான் கீழ்ப்படிந்தேன்' என்பதை திஅ(த்)து, துஅ(த்)து, அ(த்)தஅத்து என (மூன்று முறையில்) கூறலாம்.

4348. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، أَنَّ مُعَاذًا ـ رضى الله عنه ـ لَمَّا قَدِمَ الْيَمَنَ صَلَّى بِهِمِ الصُّبْحَ فَقَرَأَ {وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً} فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لَقَدْ قَرَّتْ عَيْنُ أُمِّ إِبْرَاهِيمَ. زَادَ مُعَاذٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبٍ عَنْ سَعِيدٍ عَنْ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَرَأَ مُعَاذٌ فِي صَلاَةِ الصُّبْحِ سُورَةَ النِّسَاءِ فَلَمَّا قَالَ {وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً} قَالَ رَجُلٌ خَلْفَهُ قَرَّتْ عَيْنُ أُمِّ إِبْرَاهِيمَ.
பாடம் : 61
அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4348. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆத் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) வந்தபோது மக்களுக்கு சுப்ஹ் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது, “அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” எனும் (4:125ஆம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.381
மற்றோர் அறிவிப்பில் கூடுதாக உள்ள தாவது:
நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) அனுப்பினார்கள். (அங்கு சென்றபின்) முஆத் (ரலி) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் (இமாமாக நின்று குர்ஆனின் நான்காவது அத்தியாயமான) “அந்நிசா' அத்தியாயத்தை ஓதினார்கள். “அல்லாஹ் இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” (4:125) எனும் வசனத்தை முஆத் (ரலி) அவர்கள் ஓதியபோது அவர்களுக்குப் பின்னாóருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.

4349. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانُ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ إِسْحَاقَ بْنِ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ. بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ خَالِدِ بْنِ الْوَلِيدِ إِلَى الْيَمَنِ، قَالَ ثُمَّ بَعَثَ عَلِيًّا بَعْدَ ذَلِكَ مَكَانَهُ فَقَالَ مُرْ أَصْحَابَ خَالِدٍ، مَنْ شَاءَ مِنْهُمْ أَنْ يُعَقِّبَ مَعَكَ فَلْيُعَقِّبْ، وَمَنْ شَاءَ فَلْيُقْبِلْ. فَكُنْتُ فِيمَنْ عَقَّبَ مَعَهُ، قَالَ فَغَنِمْتُ أَوَاقٍ ذَوَاتِ عَدَدٍ.
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4349. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீயே! காலிதின் சகாக்களில் “உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வர விரும்புபவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்சிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந் தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் “ஊகியா'க்களை நான் பெற்றேன்.

4350. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ سُوَيْدِ بْنِ مَنْجُوفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا إِلَى خَالِدٍ لِيَقْبِضَ الْخُمُسَ وَكُنْتُ أُبْغِضُ عَلِيًّا، وَقَدِ اغْتَسَلَ، فَقُلْتُ لِخَالِدٍ أَلاَ تَرَى إِلَى هَذَا فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ "" يَا بُرَيْدَةُ أَتُبْغِضُ عَلِيًّا "". فَقُلْتُ نَعَمْ. قَالَ "" لاَ تُبْغِضْهُ فَإِنَّ لَهُ فِي الْخُمُسِ أَكْثَرَ مِنْ ذَلِكَ "".
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4350. புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களிடம் “குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக்கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து காலித் (ரலி) அவர்களிடம், “இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டேன்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், “புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?” என்று கேட்க நான், “ஆம்!' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “அவர்மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு “குமுஸ்' நிதியில் அதைவிட அதிக உரிமையுள்ளது” என்று சொன்னார்கள்.

4351. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ بَعَثَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ بِذُهَيْبَةٍ فِي أَدِيمٍ مَقْرُوظٍ لَمْ تُحَصَّلْ مِنْ تُرَابِهَا، قَالَ فَقَسَمَهَا بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ بَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ، وَأَقْرَعَ بْنِ حَابِسٍ وَزَيْدِ الْخَيْلِ، وَالرَّابِعُ إِمَّا عَلْقَمَةُ وَإِمَّا عَامِرُ بْنُ الطُّفَيْلِ، فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ كُنَّا نَحْنُ أَحَقَّ بِهَذَا مِنْ هَؤُلاَءِ. قَالَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَلاَ تَأْمَنُونِي وَأَنَا أَمِينُ مَنْ فِي السَّمَاءِ، يَأْتِينِي خَبَرُ السَّمَاءِ صَبَاحًا وَمَسَاءً "". قَالَ فَقَامَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، نَاشِزُ الْجَبْهَةِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقُ الرَّأْسِ، مُشَمَّرُ الإِزَارِ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، اتَّقِ اللَّهَ. قَالَ "" وَيْلَكَ أَوَلَسْتُ أَحَقَّ أَهْلِ الأَرْضِ أَنْ يَتَّقِيَ اللَّهَ "". قَالَ ثُمَّ وَلَّى الرَّجُلُ، قَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَضْرِبُ عُنُقَهُ قَالَ "" لاَ، لَعَلَّهُ أَنْ يَكُونَ يُصَلِّي "". فَقَالَ خَالِدٌ وَكَمْ مِنْ مُصَلٍّ يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي لَمْ أُومَرْ أَنْ أَنْقُبَ قُلُوبَ النَّاسِ، وَلاَ أَشُقَّ بُطُونَهُمْ "" قَالَ ثُمَّ نَظَرَ إِلَيْهِ وَهْوَ مُقَفٍّ فَقَالَ "" إِنَّهُ يَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَتْلُونَ كِتَابَ اللَّهِ رَطْبًا، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ "". وَأَظُنُّهُ قَالَ "" لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ ثَمُودَ "".
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4351. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரó). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தான்” என்று கூறினார்.
இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ண முள்ளன” என்று சொன்னார்கள்.
அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?” என்று கேட்டார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்” என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைப் பிளந்து பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள்.
மேலும் கூறினார்கள்: இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால்,அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார் கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளைஅடைந்தால் “ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்.383

4352. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ. زَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ فَقَدِمَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رضى الله عنه بِسِعَايَتِهِ، قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِمَ أَهْلَلْتَ يَا عَلِيُّ "". قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ "". قَالَ وَأَهْدَى لَهُ عَلِيٌّ هَدْيًا.
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4352. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
“(யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்வதற் காக வருகை தந்த) அலீ (ரலி) அவர்களுக்கு, அவர்களது இஹ்ராமிலேயே தொடர்ந்து நீடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதே ஹதீஸ் சற்று கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமனின்) அதிகாரி என்ற முறையில் (ஹஜ் செய்ய) வருகை தந்தார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அலீயே! நீங்கள் எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?” எனக் கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் கட்டியுள்ளேன்” என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இப்போது இருப்பதைப் போன்று இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒருசேர முடித்தபின்னர்) குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணி ஒன்றைப் பலியிட்டார்கள்.384

4353. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، حَدَّثَنَا بَكْرٌ، أَنَّهُ ذَكَرَ لاِبْنِ عُمَرَ أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، فَقَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْحَجِّ، وَأَهْلَلْنَا بِهِ مَعَهُ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ قَالَ " مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ فَلْيَجْعَلْهَا عُمْرَةً ". وَكَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم هَدْىٌ، فَقَدِمَ عَلَيْنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ مِنَ الْيَمَنِ حَاجًّا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِمَ أَهْلَلْتَ فَإِنَّ مَعَنَا أَهْلَكَ ". قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ " فَأَمْسِكْ، فَإِنَّ مَعَنَا هَدْيًا ".
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4353. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை எண்ணியபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜையே எண்ணினோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், “எவருடன் குர்பானி பிராணி இல்லையோ அவர் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணி இருந்தது.
அப்போது எங்களிடம் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய நாடியவராக யமனிலிருந்து வர, நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான ஃபாத்திமா) நம்முடன்தான் இருக்கிறார்” என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் குர்பானி பிராணி உள்ளது” என்று சொன்னார்கள்.