421. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَقَالَ "" انْثُرُوهُ فِي الْمَسْجِدِ "". وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ، وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلاَّ أَعْطَاهُ، إِذْ جَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلاً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خُذْ "". فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعُهُ إِلَىَّ. قَالَ "" لاَ "". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ "" لاَ "". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَىَّ. قَالَ "" لاَ "". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ "" لاَ "". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ.
பாடம் : 42 பள்ளிவாசலில் (பணத்தைப்) பங்கீடு (தானம்) செய்வதும் பழக்குலைகளைப் தொங்க விடுவதும் அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (‘பழக்குலை’ என்பதைக் குறிக்க இங்கு மூலத்தில் ‘அல்கின்வு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘அல்கின்வு’ என்ப தற்கு ‘பழக்குலை’ என்பதே பொருளாகும். இதன் இருமை: கின்வானி. இதன் பன்மை ‘கின்வான்’ என்பதாகும். (வாய்பாட்டில்) ஸின்வ், ஸின்வானி (கிளை மரம்) எனும் சொற்களைப் போனறே (இதுவும் அமைந் துள்ளது).
421. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனி-ருந்து (கணிசமான) நிதி கொண்டுவரப் பட்டது. நபி (ஸல்) அவர்கள், “இதைப் பள்ளிவாச-ல் கொட்டிவையுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வங்களிலேயே அதிகமானதாக இருந்தது.-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப்பார்க்காமல் தொழுகைக் காகச் சென்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு அந்தச் செல்வம் நோக்கி வந்து (அதன் அருகில்) அமர்ந்துகொண்டு ஒருவர் விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தை) அப்பாஸ்

(ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ர் போரில் தங்களால் கைது செய்யப்பட்டபின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப்போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் செல்ல முனைந்தார்கள். அவர் களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை எனக்கு இதைத் தூக்கிவிடச் சொல்லுங் கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இல்லை (நான் யாரிடமும் சொல்லமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீங்களாவது என் (தோள்)மீது தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள். பிறகு அதி-ருந்து சிறிதளவைக் கொட்டிவிட்டு. பிறகு அதைத் தூக்கிச் செல்ல முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை.)

எனவே, (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கி விடுமாறு இவர்களில் ஒருவரிடம் கூறுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (கூறமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். “நீங்களாவது என் (தோள்)மீது இதைத் தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள்.

பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதி-ருந்து இன்னும் சிறிதளவைக் கீழே கொட்டிவிட்டு, அதைத் தூக்கி தம் தோள்கள்மீது வைத்துக்கொண்டு நடக்கலானார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசை யைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார்கள அங்கு அந்த நிதியி-ருந்து ஒரேயொரு திர்ஹம்கூட எஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இடத்தைவிட்டு எழுந்தார்கள்.

அத்தியாயம் : 8
422. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، سَمِعَ أَنَسًا، قَالَ وَجَدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ مَعَهُ نَاسٌ فَقُمْتُ، فَقَالَ لِي "" آرْسَلَكَ أَبُو طَلْحَةَ "" قُلْتُ نَعَمْ. فَقَالَ "" لِطَعَامٍ "". قُلْتُ نَعَمْ. فَقَالَ لِمَنْ حَوْلَهُ "" قُومُوا "". فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ.
பாடம் : 43 பள்ளிவாசலில் வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும் பள்ளிவாச-லேயே அதை ஏற்றுக்கொள் வதும்
422. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களைப் பள்ளிவாச-ல் கண்டேன். அவர்களுடன் மக்கள் சிலரும் இருந்தனர். (அவர்களுக்கு முன்னால் சென்று) நான் நின்றேன். அப்போது அவர்கள் என்னிடம், “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “உணவு அருந்துவதற்காகவா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், “எழுந்திருங்கள்” என்று சொல்-விட்டு நடந்தார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் முன்னால் நடந்தேன்.

அத்தியாயம் : 8
423. حَدَّثَنَا يَحْيَى، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ.
பாடம் : 44 பள்ளிவாசலுக்குள் வைத்து வழக்குகளுக்குத் தீர்ப்பளிப்பதும், கணவர்- மனைவியருக்கிடையே சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்வதும்34
423. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் மற்றோர் ஆடவனை (தகாத உறவு கொண்ட நிலையில் இருக்க)க் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்று விடலாமா?” என்று கேட்டார். (இந்த விவகாரத்தில் கணவன்-மனைவி இரு வரும் ‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.)

எனவே, பள்ளிவாசலுக்குள் அத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அப்போது நான் அந்த இடத்தில் (நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தேன்.

அத்தியாயம் : 8
424. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَاهُ فِي مَنْزِلِهِ فَقَالَ "" أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ لَكَ مِنْ بَيْتِكَ "". قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى مَكَانٍ، فَكَبَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَصَفَفْنَا خَلْفَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ.
பாடம் : 45 (அழைப்பின் பேரில்) அடுத்தவர் வீட்டுக்குச் சென்ற ஒருவர் அவ்வீட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொழுதுகொள்ளலாமா; அல்லது வீட்டுக்காரர் சொன்ன இடத்தில் தொழ வேண்டுமா என்பதும், (வீட்டுக்காரர் குறிப்பிடும் இடத்தில் தொழும்போது அவ்விடத்தின் தூய்மை பற்றித்) துருவி விசாரிக்க வேண்டிய தில்லை என்பதும்.35
424. இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எனது வீட்டில் ஓர் இடத்தில் தொழுவித்து, அந்த இடத்தை எனது தொழுமிடமாக்க வருமாறு நான் அழைத்ததன் பேரில்) நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்கள். (வீட்டுக்குள் வந்ததும்) “உமது வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் (குறிப்பிட்ட) ஓர் இடத்தைக் காட்டியதும், (அந்த இடத்தில் நின்று) நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர்’ கூறி(த் தொழலா)னார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.

அத்தியாயம் : 8
425. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ ـ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ ـ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلًّى. قَالَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ "". قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ "" أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ "". قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَّنَا، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ. قَالَ فَثَابَ فِي الْبَيْتِ رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ أَيْنَ مَالِكُ بْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّخْشُنِ فَقَالَ بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى الْمُنَافِقِينَ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ "". قَالَ ابْنُ شِهَابٍ ثُمَّ سَأَلْتُ الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ ـ وَهْوَ أَحَدُ بَنِي سَالِمٍ وَهُوَ مِنْ سَرَاتِهِمْ ـ عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، فَصَدَّقَهُ بِذَلِكَ.
பாடம் : 46 வீடுகளில் தொழுமிடத்தை அமைத்துக்கொள்வது பராஉபின் ஆஸிப் (ரலி) அவர்கள் தமது வீட்டிலுள்ள தொழுமிடத்தில் கூட்டா கச் சேர்ந்து (ஜமாஅத்தாக) தொழுதார்கள்.
425. மஹ்மூத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி களில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்)போய்விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக இருந்து) தொழுகை நடத்திவருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழ வேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.

அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே நான் செய்வேன்” என்று கூறினார்கள்.

இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(மறு நாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன். வீட்டில் நுழைந்ததும். உட்காராமலேயே, “உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். அப்போது நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்துவைத்திருந்த ‘கஸீரா’ எனும் (கஞ்சி வகை) உணவி(னை உட்கொள்வத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். (நபியவர்களின் வருகையை அறிந்த) அப்பகுதி மக்களில் கணிசமானோர் வீட்டில் வந்து குழுமிவிட்டனர். அப்போது அவர்களில் ஒருவர், ‘மா-க் பின் துகைஷின்’ அல்லது ‘இப்னு துக்ஷுன்’ எங்கே என்று கேட்டார். மற்றொருவர், “அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை)” என்று சொன்னார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் அன்பை நாடி, அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்-விட்டிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறிவிட்டு, “அவர் (மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் (அவர்கள்மீது) அபிமானம் கொண்டிருப்பதையும் காண் கிறோம்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று யார் சொன்னாரோ அவர்மீது அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு நான் பனூ சா-ம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களின் பிரமுகர்களில் ஒருவருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களிடம் மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அன்னார் சொன்ன ஹதீஸை ஹுஸைன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் உறுதிப்படுத்தி னார்கள்.

அத்தியாயம் : 8
426. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ.
பாடம் : 47 பள்ளிவாசல் போன்ற இடங்களில் நுழையும்போது வலக் காலால் நுழைவது இப்னு உமர் (ரலி) அவர்கள், தமது வலக் காலை முத-ல் எடுத்துவைத்துப் பள்ளிவாசலில் நுழைவார்கள். வெளியேறும்போது தமது இடக் காலை முத-ல் எடுத்துவைத்து வெளியேறுவார்கள்.
426. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்கத்) தூய்மை செய்யும்போதும் தலைவாரும்போதும் செருப்பணியும்போதும் தம் செயல்கள் ஒவ்வொன்றிலும் இயன்ற வரை வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதையே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 8
427. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 48 அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப்பட்டு, அவ்விடத்தில் பள்ளிவாசல் கட்டலாமா? ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது), “அல்லாஹ், யூதர்களைத் தமது கருணை யி-ருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங் களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று கூறினார்கள். மண்ணறைகளின் (கப்று-அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்)மீது தொழுவது தகாத செயலாகும். ஒரு மண்ணறைக்கு அருகில் தொழுதுகொண்டிருந்த அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “மண்ணறை(யைத் தவிர்த்து விடுங்கள்); மண்ணறை(யைத் தவிர்த்துவிடுங்கள்)” என்று கூறினார்கள். ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பித் தொழுமாறு அனஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் பணிக்கவில்லை.35
427. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் உம்மு சலமா (ரலி) அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின்போது) அபிசீனி யாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் உள்ள ஒரு கிறித்தவ ஆலயம் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவரது சமாதியின் மீது வழிபாட்டுத் தலம் ஒன்றைக் கட்டி, அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள்தான் மறுமை நாளில் அல்லாஹ் விடம் மக்களிலேயே மிகவும் மோசமான வர்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 8
428. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَنَزَلَ أَعْلَى الْمَدِينَةِ، فِي حَىٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ. فَأَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ، كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفُهُ، وَمَلأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ، حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، وَأَنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَقَالَ "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا "". قَالُوا لاَ وَاللَّهِ، لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ. فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ، قُبُورُ الْمُشْرِكِينَ، وَفِيهِ خَرِبٌ، وَفِيهِ نَخْلٌ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ، ثُمَّ بِالْخَرِبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ، وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ، وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ، وَهُمْ يَرْتَجِزُونَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مَعَهُمْ وَهُوَ يَقُولُ "" اللَّهُمَّ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ ""
பாடம் : 48 அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப்பட்டு, அவ்விடத்தில் பள்ளிவாசல் கட்டலாமா? ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது), “அல்லாஹ், யூதர்களைத் தமது கருணை யி-ருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங் களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று கூறினார்கள். மண்ணறைகளின் (கப்று-அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்)மீது தொழுவது தகாத செயலாகும். ஒரு மண்ணறைக்கு அருகில் தொழுதுகொண்டிருந்த அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “மண்ணறை(யைத் தவிர்த்து விடுங்கள்); மண்ணறை(யைத் தவிர்த்துவிடுங்கள்)” என்று கூறினார்கள். ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பித் தொழுமாறு அனஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் பணிக்கவில்லை.35
428. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது, மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் ‘பனூ அம்ர் பின் அவ்ஃப்’ என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களி டையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத் தம்) வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, ‘பனூ நஜ்ஜார்’ கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஊர்தி ஒட்டகம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது.- அப்போதெல்லாம் தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்று வார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள்- பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பி னார்கள்.

(அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.

நான் உங்களிடம் கூறப்போகின்றவை தான் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில பேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. எனவே, (அங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு வசதியாக) நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் (அங்கிருந்த) இணைவைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன. பின்னர் பள்ளிவாச-ன் கிப்லா திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.

பள்ளிவாச-ன் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். ‘ரஜ்ஸ்’ எனும் ஈரசைச்சீர் வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்துவரலாயினர்.

“இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள்.

அத்தியாயம் : 8
429. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، ثُمَّ سَمِعْتُهُ بَعْدُ يَقُولُ كَانَ يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ.
பாடம் : 49 ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது
429. ஷுஅபா (பின் அல்ஹஜ்ஜாஜ் -ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவித்துவந்தார்கள்.

பின்னர் “பள்ளிவாசல் கட்டப்படு வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு) ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாக இருந்தார்கள்” என்று (காலவரையறையுடன் சேர்த்துக்) கூறக் கேட்டேன்.37

அத்தியாயம் : 8
430. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، قَالَ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَلِّي إِلَى بَعِيرِهِ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.
பாடம் : 50 ஒட்டகம் உள்ள இடங்களில் தொழுவது
430. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை (தடுப்பாக வைத்து அதை) நோக்கித் தொழுதுவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 8
431. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ انْخَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" أُرِيتُ النَّارَ، فَلَمْ أَرَ مَنْظَرًا كَالْيَوْمِ قَطُّ أَفْظَعَ "".
பாடம் : 51 அடுப்பு அல்லது நெருப்பு அல்லது (பிறரால்) வழிபாடு செய்யப்படும் ஒன்று தமக்கு முன்னால் இருக்கும் நிலையில், உயர்ந்தோன் அல்லாஹ்வையே நாடி ஒருவர் தொழுவது38 அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எனக்கு நரகம் எடுத்துக்காட்டப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
431. அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட் டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சூரிய கிரகணத் தொழு கையை) தொழு(வித்)தார்கள். பிறகு (இத் தொழுகையில் நான் இருந்தபோது) எனக்கு நரகம் எடுத்துக்காட்டப்பட்டது. இன்று (நான் கண்டதைப்) போன்று பயங்கரமான காட்சி எதையும் நான் ஒரு போதும் கண்டதில்லை” என்று சொன் னார்கள்.

அத்தியாயம் : 8
432. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا "".
பாடம் : 52 அடக்கத் தலங்களில் தொழுவது வெறுக்கப்பட்ட செயலாகும்.
432. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்கள் இல்லங்களை மண்ணறைகளாக (கப்றுகள்) ஆக்கிவிடாதீர்கள்.39

அத்தியாயம் : 8
433. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ "".
பாடம் : 53 (அநீதியாளர்கள்) பூமிக்குள் புதையுண்ட இடங்களிலும் (பொதுவாக இறைவனின்) வேதனை இறங்கிய இடங் களிலும் தொழுவது (கொடுங்கோல் மன்னன் நும்ரூதும் அவனுடைய மக்களும் உயிருடன்) புதையுண்ட (இராக்கிலுள்ள) ‘பாபில்’ எனும் இடத்தில் தொழுவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.40
433. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘ஹிஜ்ர்’வாசிகளைக் குறித்து), “இவர்களைத் தீண்டியதைப் போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று (அஞ்சி) அழுதபடியே தவிர, வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள். உங்களால் அழ முடியாவிட்டால் அந்த இடத்திற்கே செல்லாதீர்கள்” என்று (ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது எங்களிடம்) கூறினார்கள்.41

அத்தியாயம் : 8
434. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ ـ أَوِ الرَّجُلُ الصَّالِحُ ـ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ "".
பாடம் : 54 கிறித்தவ ஆலயங்களில் தொழு வது “உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழையமாட்டோம்” என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறித்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உருவச் சிலைகள் இல்லாத கிறித்தவ ஆலயங்களில் தொழுதுள்ளார்கள்.42
434. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட ‘மரியா’ என்றழைக்கப்பட்ட ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே ‘நல்ல அடியார்’ அல்லது ‘நல்ல மனிதர்’ ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவரது சமாதியின் மீது வழிபாட்டுத் தலம் ஒன்றைக் கட்டிவிடு வார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும்விடுவார்கள். இத்தகையோர் தான் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.43

அத்தியாயம் : 8
435. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهْوَ كَذَلِكَ " لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ". يُحَذِّرُ مَا صَنَعُوا.
பாடம் : 55
435. ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகி யோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தமது முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கறுப்புத் துணி ஒன்றைப் போட்டுக்கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது, அதைத் தமது முகத்தி-ருந்து விலக்கிவிடுவார்கள்.

அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணை யிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை அவர்கள் வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடாதீர்கள் எனத் தம் சமுதாயத் தாரை) எச்சரித்தார்கள்.


அத்தியாயம் : 8
437. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ "".
பாடம் : 55
437. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத்தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 8
438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ حَدَّثَنَا سَيَّارٌ ـ هُوَ أَبُو الْحَكَمِ ـ قَالَ حَدَّثَنَا يَزِيدُ الْفَقِيرُ، قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي، نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ "".
பாடம் : 56 “பூமி முழுவதும் எனக்குத் தொழுமிடமாகவும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது” எனும் நபிமொழி
438. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் யாருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங் கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:

1. (எதிரிகளுக்கும் எனக்கும் இடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவு இருந் தாலும், (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.

2. எனக்குப் பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழு மிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்கேனும் தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால், (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்.

3. (முந்தைய இறைத்தூதர்கள் யாருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.

4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காகப்) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44

அத்தியாயம் : 8
439. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ وَلِيدَةً، كَانَتْ سَوْدَاءَ لِحَىٍّ مِنَ الْعَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ قَالَتْ فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ قَالَتْ فَوَضَعَتْهُ أَوْ وَقَعَ مِنْهَا، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهْوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطَفَتْهُ قَالَتْ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ قَالَتْ فَاتَّهَمُونِي بِهِ قَالَتْ فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا قَالَتْ وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ، إِذْ مَرَّتِ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ قَالَتْ فَوَقَعَ بَيْنَهُمْ قَالَتْ فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ ـ زَعَمْتُمْ ـ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ قَالَتْ فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَتْ. قَالَتْ عَائِشَةُ فَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشٌ قَالَتْ فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي قَالَتْ فَلاَ تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلاَّ قَالَتْ وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ لاَ تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلاَّ قُلْتِ هَذَا قَالَتْ فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ.
பாடம் : 57 பெண்கள் பள்ளிவாச-ல் (தங்கி) உறங்குவது
439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கறுப்பு நிற அடிமைப்பெண் அரபியரில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். பின்னர் அவளை அவர்கள் விடுதலை செய்து விட்டனர். ஆயினும், அவர்களுடனேயே அவள் இருந்துவந்தாள். அந்தப் பெண் (தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பின்வருமாறு என்னிடம்) கூறினாள்:

(ஒரு நாள்) அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் (மணமுடித்த புதிதில்) சிவப்புத் தோ-ல் முத்துகள் பதிக்கபட்ட அரையணித் தோள் பட்டிகை அணிந்துகொண்டு (குளியலறைக்குப்) புறப்பட்டாள்.45

அப்போது ‘அவள் அதை (ஓர் இடத்தில் கழற்றி) வைத்தாள்’ அல்லது ‘(எதிர்பாராத விதமாக) அந்தப் பட்டிகை அவளிடமிருந்து (கழன்று) விழுந்துவிட்டது’. கீழே கிடந்த அதைக் கடந்து சென்ற பருந்துக் குஞ்சு ஒன்று, இறைச்சி என்று நினைத்துக் கொத்திச் சென்றுவிட்டது. அவர்கள் அதைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்தார் (அதை நான்தான் திருடியிருப்பேன் என்று எண்ணி) என்மீது குற்றம்சாட்டி (என்னை வதைத்த)னர். (எந்த அளவுக்கென்றால்,) எனது பிறவி உறுப்பில்கூட சோதனையிட்டனர்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது, பறந்துவந்த அந்தப் பருந்துக் குஞ்சு அந்தப் பட்டிகையைக் (கீழே) போட அவர்களுக்கு மத்தியில் அது விழுந்தது. (உடனே) நான் (அவர்களிடம்), “நிரபராதியான என்மீது (திருட்டுக்)குற்றம் சாட்டி, (அதை நான் எடுத்துவிட்டதாக)க் கூறினீர்களே! அந்தப் பட்டிகை இதோ இங்கு இருக்கிறது” என்று சொன்னேன். இதற்குப் பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினேன்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் அந்தப் பெண்ணுக்கென முடியாலான ஒரு கூடாரம்’ அல்லது ‘சிறிய குடில்’ இருந்தது. (அதில் அவள் வசித்துவந்தாள்.)

அந்தப் பெண் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார். அவர் என்னிடம் அமர்ந்திருந்த ஒவ்வோர் அமர்வி(ன் முடிவி)லும் (பின்வருமாறு) பாடாமல் அவர் இருந்ததில்லை:

எம் இறைவனின் விந்தைப் பட்டி

ய-ல்

அந்த அரையணிப் பட்டிகை நாளும் ஒன்றே!

எனை இறைமறுப்பின் பட்டியி-ருந்து

ஈடேற்றிக் காத்த நாளும் அன்றே!

(ஒரு நாள்) நான் அவரிடம், “நீ என்னுடன் அமரும்போதெல்லாம் இதை நீ சொல்லாமல் இருப்பதில்லையே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அப்போதுதான் அந்தப் பெண் (மேற்கண்ட) அந்தச் செய்தியை என்னிடம் கூறினார்.

அத்தியாயம் : 8
440. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهْوَ شَابٌّ أَعْزَبُ لاَ أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 58 பள்ளிவாசலில் ஆண்கள் உறங்குவது “உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ன்) திண்ணையில் (தங்கி) இருந்தனர்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தனர்” என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
440. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மணமாகாத, குடும்பமில்லாத இளைஞ னாக நான் இருந்தபோது, நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசலில் (தங்கி) உறங்கிக் கொண்டிருந்தேன்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8