3989. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ، حَلِيفُ بَنِي زُهْرَةَ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشَرَةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، حَتَّى إِذَا كَانُوا بِالْهَدَةِ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لِحَىٍّ مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُمْ بَنُو لِحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ بِقَرِيبٍ مِنْ مِائَةِ رَجُلٍ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمُ التَّمْرَ فِي مَنْزِلٍ نَزَلُوهُ فَقَالُوا تَمْرُ يَثْرِبَ. فَاتَّبَعُوا آثَارَهُمْ، فَلَمَّا حَسَّ بِهِمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى مَوْضِعٍ، فَأَحَاطَ بِهِمُ الْقَوْمُ، فَقَالُوا لَهُمْ انْزِلُوا فَأَعْطُوا بِأَيْدِيكُمْ وَلَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ أَنْ لاَ نَقْتُلَ مِنْكُمْ أَحَدًا. فَقَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَيُّهَا الْقَوْمُ، أَمَّا أَنَا فَلاَ أَنْزِلُ فِي ذِمَّةِ كَافِرٍ. ثُمَّ قَالَ اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ صلى الله عليه وسلم. فَرَمَوْهُمْ بِالنَّبْلِ، فَقَتَلُوا عَاصِمًا، وَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ نَفَرٍ عَلَى الْعَهْدِ وَالْمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ وَزَيْدُ بْنُ الدَّثِنَةِ، وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَرَبَطُوهُمْ بِهَا. قَالَ الرَّجُلُ الثَّالِثُ هَذَا أَوَّلُ الْغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ، إِنَّ لِي بِهَؤُلاَءِ أُسْوَةً. يُرِيدُ الْقَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ، فَأَبَى أَنْ يَصْحَبَهُمْ، فَانْطُلِقَ بِخُبَيْبٍ وَزَيْدِ بْنِ الدَّثِنَةِ حَتَّى بَاعُوهُمَا بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلٍ خُبَيْبًا، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا حَتَّى أَجْمَعُوا قَتْلَهُ، فَاسْتَعَارَ مِنْ بَعْضِ بَنَاتِ الْحَارِثِ مُوسَى يَسْتَحِدُّ بِهَا فَأَعَارَتْهُ، فَدَرَجَ بُنَىٌّ لَهَا وَهْىَ غَافِلَةٌ حَتَّى أَتَاهُ، فَوَجَدَتْهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالْمُوسَى بِيَدِهِ قَالَتْ فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فَقَالَ أَتَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَلِكَ قَالَتْ وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ قِطْفًا مِنْ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ بِالْحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرَةٍ وَكَانَتْ تَقُولُ إِنَّهُ لَرِزْقٌ رَزَقَهُ اللَّهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا بِهِ مِنَ الْحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الْحِلِّ قَالَ لَهُمْ خُبَيْبٌ دَعُونِي أُصَلِّي رَكْعَتَيْنِ. فَتَرَكُوهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ، فَقَالَ وَاللَّهِ لَوْلاَ أَنْ تَحْسِبُوا أَنَّ مَا بِي جَزَعٌ لَزِدْتُ، ثُمَّ قَالَ اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا، وَاقْتُلْهُمْ بَدَدًا، وَلاَ تُبْقِ مِنْهُمْ أَحَدًا. ثُمَّ أَنْشَأَ يَقُولُ فَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ جَنْبٍ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ ثُمَّ قَامَ إِلَيْهِ أَبُو سِرْوَعَةَ عُقْبَةُ بْنُ الْحَارِثِ، فَقَتَلَهُ وَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ لِكُلِّ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا الصَّلاَةَ، وَأَخْبَرَ أَصْحَابَهُ يَوْمَ أُصِيبُوا خَبَرَهُمْ، وَبَعَثَ نَاسٌ مِنْ قُرَيْشٍ إِلَى عَاصِمِ بْنِ ثَابِتٍ حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ أَنْ يُؤْتَوْا بِشَىْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَتَلَ رَجُلاً عَظِيمًا مِنْ عُظَمَائِهِمْ، فَبَعَثَ اللَّهُ لِعَاصِمٍ مِثْلَ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رُسُلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا أَنْ يَقْطَعُوا مِنْهُ شَيْئًا. وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ ذَكَرُوا مُرَارَةَ بْنَ الرَّبِيعِ الْعَمْرِيَّ وَهِلاَلَ بْنَ أُمَيَّةَ الْوَاقِفِيَّ، رَجُلَيْنِ صَالِحَيْنِ قَدْ شَهِدَا بَدْرًا.
பாடம் : 10
3989. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேரை உளவுப்படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடைய மகன் ஆஸிமின் (தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களைத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவிற்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள “அல்ஹத்தா' என்ற இடத்தில் இருந்தபோது “ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த “பனூ லிஹ்யான்' எனும் கிளைக் குலத்தாருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது.

உடனே அக்கிளையினர் (அவர் களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் திரண்டு, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் இறங்கித் தங்கி, சாப்பிட்டுவிட்டுச் சென்றிருந்த இடத்தில் பேரீச்சம் பழங்களைக் கண்டனர். “(இது) யஸ்ரிப் (மதீனா) நகரின் பேரீச்சம் பழம்” என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர்.

எனவே, அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். இவர்களின் வருகை ஆஸிம் (ரலி) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும் தெரிந்தபோது அவர்கள் (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கூட்டத்தார் அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து, “இறங்கி வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களில் யாரையும் கொல்லமாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று கூறினர்.

அப்போது ஆஸிம் பின் ஸாபித் அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “(என்) சமூகத்தாரே! நான் ஓர் இறைமறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனது) பொறுப்பில் இறங்கிச் செல்லமாட்டேன்” (என்று கூறிவிட்டு,) “இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்துவிடு” என்று சொன்னார்கள். அந்த இறை மறுப்பாளர்கள், உளவுப்படையினரின் மீது அம்பெய்து, ஆஸிமை(யும், மற்றும் அறுவரையும்) கொன்றுவிட்டனர்.

பிறகு குபைப், ஸைத் பின் அத்தஸினா மற்றும் இன்னொரு மனிதர் (ஆகிய மூவரும்) அவர்களுடைய உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தம் கையில் கிடைத்தவுடன் இறைமறுப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதல் துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். இவர்களிடம் எனக்கு நல்ல
அத்தியாயம் : 64
3990. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ ذُكِرَ لَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ ـ وَكَانَ بَدْرِيًّا ـ مَرِضَ فِي يَوْمِ جُمُعَةٍ فَرَكِبَ إِلَيْهِ بَعْدَ أَنْ تَعَالَى النَّهَارُ وَاقْتَرَبَتِ الْجُمُعَةُ، وَتَرَكَ الْجُمُعَةَ
பாடம் இருக்கிறது” (என்று) கொல்லப்பட்ட தன் சகாக்களைக் கருத்தில் கொண்டு கூறினார். அவர்கள் அவரை (அடித்துத்) துன்புறுத்தி இழுத்துச் சென்றனர். அவர் அவர்களுடன் செல்ல மறுத்தார். (எனவே, அவரைக் கொன்றுவிட்டனர்.) பிறகு, குபைப் அவர்களையும், ஸைத் பின் அத்தஸினா அவர்களையும் கொண்டுசென்று பத்ர் போர் நடந்து முடிந்திருந்த (அந்தச்) சமயத்தில் (மக்காவில்) விற்றுவிட்டனர். பனுல் ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்னும் குலத்தார், குபைப் (ரலி) அவர்களை (பழி தீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக்கொண்டனர். (ஏனெனில்) குபைப் (ரலி) அவர்கள் (இக்குலத்தாரின் தலைவர்) ஹாரிஸ் பின் ஆமிரை பத்ர் போரின்போது கொலை செய்திருந்தார். (புனித மாதங்கள் முடிந்து பழிக்குப் பழியாகத்) தம்மைக் கொலை செய்ய அவர்கள் ஒன்றுதிரளும் (நாள் வரும்) வரை பனுல் ஹாரிஸ் குலத்தாரிடம் குபைப் கைதியாக இருந்துவந்தார். (கொலை செய்யப்போகும் நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) இரவலாகக் கேட்டார். அவளும் இரவல் தந்தாள். அப்போது, அவள் கவனிக்காமல் இருக்க, அவளுடைய சிறிய மகன் (விளையாடிக்கொண்டே) தவழ்ந்து குபைபிடம் வந்துசேர்ந்தான். குபைப் (ரலி) தனது மடியில் அவனை அமர்த்திக் கொண்டிருக்க, அந்தக் கத்தி அவரது கையிலிருக்கும் நிலையில் அவரை அவள் பார்த்தாள். அந்தப் பெண் (ஸைனப் பின்த் அல்ஹாரிஸ்) கூறுகிறாள்: (கத்தி அவர் கையிலும் குழந்தை அவரது மடியிலும் இருப்பதைப் பார்த்து எங்கே அவனை அவர் கொன்றுவிடுவாரோ) என்று நான் அஞ்சி நடுங்கினேன். எனது அச்சத்தை குபைப் புரிந்துகொண்டார். அப்போது அவர், “அவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? நான் அப்படிச் செய்பவன் அல்லன்” என்று கூறினார். (பின்னொரு நாளில், தாம் இஸ்லாத்தை ஏற்றபின் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபடி அந்தப் பெண்) கூறினார்: குபைபைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அலலாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றைத் தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. -”அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறி வந்தார்.- (அவரைக் கொலை செய்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்கு அவரைக் கொண்டுவந்தபோது, “என்னை இரண்டு ரக்அத்கள் தொழவிடுங்கள்” என்று (குபைப்) கேட்டார். அவர்களும் அனுமதித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார். பிறகு, “மரணத்தை அஞ்சித்தான் நான் (நீண்ட நேரம் தொழுகிறேன்) என்று நீங்கள் எண்ணாவிட்டால் நான் (தொழுகையை) அதிமாக்கியிருப்பேன்” என்று கூறினார். பின்பு, “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக்கொண்டு இவர்களை நீ தனித்தனியாகக் கொன்றுவிடு. இவர்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காதே” என்று (அவர்களுக்கெதிராக) குபைப் பிரார்த்தனை புரிந்தார். அதன் பிறகு, “நான் முஸ்லிமாகக் கொல்லப்படும்போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காகத்தான் எனும்போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்பு களின் இணைப்புகளின் மீதுகூட (தன்) அருள்வளத்தைப் பொழிவான்” என்று கவி பாடினார்கள். பிறகு, “அபூசிர்வஆ - உக்பா பின் ஹாரிஸ்' என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொலை செய்தான். (அன்றிலிருந்து) அடைத்துவைத்து அல்லது கட்டிவைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத்கள்) தொழுவதை முன்மாதிரியாக ஆக்கியவர் குபைப் (ரலி) அவர்களே என்றாயிற்று. மேலும், நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப்படையினர் (கொல்லப்பட்ட) செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே (இறையறிவிப்பின் மூலம்) தெரிவித்தார்கள். ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷி களுக்குக் கிடைத்தபோது அவர்களில் சிலர் (கொல்லப்பட்டது ஆஸிம்தான் என்று) அடையாளம் தெரிந்துகொள்ள அவருடைய (முக்கிய) உறுப்புகளில் ஒன்றை (வெட்டிக்) கொண்டுவருமாறு ஆளனுப்பிவைத்தனர். (ஏனெனில்) ஆஸிம் (ரலி) அவர்கள் (பத்ர் போரின்போது) அவர்களின் தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்டிருந்தார். (அவரது உடலின் முக்கிய உறுப்பொன்றை வெட்டியெடுத்துவரப் போனபோது) ஆஸிம் (ரலி) அவர்களுக்காக (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக் கூட்டமொன்றை அனுப்பினான். அவை குறைஷியரின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களைப் பாதுகாத்தன. அவர்களுடைய உடலிலிருந்து எதையும் வெட்டியெடுத்துச் செல்ல அவர்களால் முடியவில்லை.32 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “முராரா பின் ரபீஉ அல்அம்ரீ (ரலி) அவர்களும் ஹிலால் பின் உமைய்யா அல்வாக்கிஃபீ (ரலி) அவர்களும் பத்ர் போரில் கலந்துகொண்ட நல்ல மனிதர்கள்” என்று என்னிடத்தில் மக்கள் கூறினர்.33
3990. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

பத்ர் போரில் கலந்துகொண்டவரான34 சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை நோய்வாய்ப்பட்டார்கள். எனவே (அவர்களைக் கவனித்துக்கொள்ள) பகல் பொழுது உயர்ந்தபின் “ஜுமுஆ (தொழுகை)' நேரம் நெருங்கிவிட்டிருந்த நிலையில், இப்னு உமர் (ரலி) அவர்கள் சயீத் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுப் போனார்கள். மேலும், ஜுமுஆ தொழுகையை இப்னு உமர் விடவேண்டியதாயிற்று.35


அத்தியாயம் : 64
3991. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَاهُ، كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ الزُّهْرِيِّ، يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ، عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الأَسْلَمِيَّةِ، فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَنْ مَا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ اسْتَفْتَتْهُ، فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ ابْنِ خَوْلَةَ، وَهْوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا، فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهْىَ حَامِلٌ، فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ، فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ، فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ ـ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ ـ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ تُرَجِّينَ النِّكَاحَ فَإِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ. قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَىَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ، وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي، وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي. تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، وَسَأَلْنَاهُ، فَقَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، مَوْلَى بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ أَنَّ مُحَمَّدَ بْنَ إِيَاسِ بْنِ الْبُكَيْرِ، وَكَانَ، أَبُوهُ شَهِدَ بَدْرًا أَخْبَرَهُ.
பாடம் இருக்கிறது” (என்று) கொல்லப்பட்ட தன் சகாக்களைக் கருத்தில் கொண்டு கூறினார். அவர்கள் அவரை (அடித்துத்) துன்புறுத்தி இழுத்துச் சென்றனர். அவர் அவர்களுடன் செல்ல மறுத்தார். (எனவே, அவரைக் கொன்றுவிட்டனர்.) பிறகு, குபைப் அவர்களையும், ஸைத் பின் அத்தஸினா அவர்களையும் கொண்டுசென்று பத்ர் போர் நடந்து முடிந்திருந்த (அந்தச்) சமயத்தில் (மக்காவில்) விற்றுவிட்டனர். பனுல் ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்னும் குலத்தார், குபைப் (ரலி) அவர்களை (பழி தீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக்கொண்டனர். (ஏனெனில்) குபைப் (ரலி) அவர்கள் (இக்குலத்தாரின் தலைவர்) ஹாரிஸ் பின் ஆமிரை பத்ர் போரின்போது கொலை செய்திருந்தார். (புனித மாதங்கள் முடிந்து பழிக்குப் பழியாகத்) தம்மைக் கொலை செய்ய அவர்கள் ஒன்றுதிரளும் (நாள் வரும்) வரை பனுல் ஹாரிஸ் குலத்தாரிடம் குபைப் கைதியாக இருந்துவந்தார். (கொலை செய்யப்போகும் நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) இரவலாகக் கேட்டார். அவளும் இரவல் தந்தாள். அப்போது, அவள் கவனிக்காமல் இருக்க, அவளுடைய சிறிய மகன் (விளையாடிக்கொண்டே) தவழ்ந்து குபைபிடம் வந்துசேர்ந்தான். குபைப் (ரலி) தனது மடியில் அவனை அமர்த்திக் கொண்டிருக்க, அந்தக் கத்தி அவரது கையிலிருக்கும் நிலையில் அவரை அவள் பார்த்தாள். அந்தப் பெண் (ஸைனப் பின்த் அல்ஹாரிஸ்) கூறுகிறாள்: (கத்தி அவர் கையிலும் குழந்தை அவரது மடியிலும் இருப்பதைப் பார்த்து எங்கே அவனை அவர் கொன்றுவிடுவாரோ) என்று நான் அஞ்சி நடுங்கினேன். எனது அச்சத்தை குபைப் புரிந்துகொண்டார். அப்போது அவர், “அவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? நான் அப்படிச் செய்பவன் அல்லன்” என்று கூறினார். (பின்னொரு நாளில், தாம் இஸ்லாத்தை ஏற்றபின் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபடி அந்தப் பெண்) கூறினார்: குபைபைவிடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அலலாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றைத் தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. -”அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறி வந்தார்.- (அவரைக் கொலை செய்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்கு அவரைக் கொண்டுவந்தபோது, “என்னை இரண்டு ரக்அத்கள் தொழவிடுங்கள்” என்று (குபைப்) கேட்டார். அவர்களும் அனுமதித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார். பிறகு, “மரணத்தை அஞ்சித்தான் நான் (நீண்ட நேரம் தொழுகிறேன்) என்று நீங்கள் எண்ணாவிட்டால் நான் (தொழுகையை) அதிமாக்கியிருப்பேன்” என்று கூறினார். பின்பு, “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக்கொண்டு இவர்களை நீ தனித்தனியாகக் கொன்றுவிடு. இவர்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காதே” என்று (அவர்களுக்கெதிராக) குபைப் பிரார்த்தனை புரிந்தார். அதன் பிறகு, “நான் முஸ்லிமாகக் கொல்லப்படும்போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காகத்தான் எனும்போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்பு களின் இணைப்புகளின் மீதுகூட (தன்) அருள்வளத்தைப் பொழிவான்” என்று கவி பாடினார்கள். பிறகு, “அபூசிர்வஆ - உக்பா பின் ஹாரிஸ்' என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொலை செய்தான். (அன்றிலிருந்து) அடைத்துவைத்து அல்லது கட்டிவைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (கொல்லப்படுவதற்குமுன் இரண்டு ரக்அத்கள்) தொழுவதை முன்மாதிரியாக ஆக்கியவர் குபைப் (ரலி) அவர்களே என்றாயிற்று. மேலும், நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப்படையினர் (கொல்லப்பட்ட) செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே (இறையறிவிப்பின் மூலம்) தெரிவித்தார்கள். ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷி களுக்குக் கிடைத்தபோது அவர்களில் சிலர் (கொல்லப்பட்டது ஆஸிம்தான் என்று) அடையாளம் தெரிந்துகொள்ள அவருடைய (முக்கிய) உறுப்புகளில் ஒன்றை (வெட்டிக்) கொண்டுவருமாறு ஆளனுப்பிவைத்தனர். (ஏனெனில்) ஆஸிம் (ரலி) அவர்கள் (பத்ர் போரின்போது) அவர்களின் தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்டிருந்தார். (அவரது உடலின் முக்கிய உறுப்பொன்றை வெட்டியெடுத்துவரப் போனபோது) ஆஸிம் (ரலி) அவர்களுக்காக (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக் கூட்டமொன்றை அனுப்பினான். அவை குறைஷியரின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களைப் பாதுகாத்தன. அவர்களுடைய உடலிலிருந்து எதையும் வெட்டியெடுத்துச் செல்ல அவர்களால் முடியவில்லை.32 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “முராரா பின் ரபீஉ அல்அம்ரீ (ரலி) அவர்களும் ஹிலால் பின் உமைய்யா அல்வாக்கிஃபீ (ரலி) அவர்களும் பத்ர் போரில் கலந்துகொண்ட நல்ல மனிதர்கள்” என்று என்னிடத்தில் மக்கள் கூறினர்.33
3991. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் “பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டவராவார்- “விடைபெறும் ஹஜ்'ஜின்போது சஅத் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போது “சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப்பின் ஏற்படும்) உதிரப்போக்கிóருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக்கொண்டார்.

அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான “அபுஸ்ஸனாபில் பின் பஅகக்' (ரலி) அவர்கள் சுபைஆ (ரலி) அவர்களிடம் வந்து, “திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவனை இழந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப்பின் காத்திருக்க வேண்டிய “இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும்வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறி னார்கள்.

சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, “நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் புரிந்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், பத்ரில் கலந்துகொண்ட இயாஸ் பின் (அல்)புகைர் (ரலி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக முஹம்மத் பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 64
3992. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُعَاذِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ أَبُوهُ مِنْ أَهْلِ بَدْرٍ ـ قَالَ جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا تَعُدُّونَ أَهْلَ بَدْرٍ فِيكُمْ قَالَ مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ قَالَ وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلاَئِكَةِ "".
பாடம் : 11 பத்ர் போரில் வானவர்கள் கலந்து கொண்டது36
3992. நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ர் போரில் கலந்துகொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்துகொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்.

(உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை பத்ர் போரில் கலந்துகொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
3993. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَحْيَى، عَنْ مُعَاذِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ،، وَكَانَ، رِفَاعَةُ مِنْ أَهْلِ بَدْرٍ، وَكَانَ رَافِعٌ مِنْ أَهْلِ الْعَقَبَةِ، فَكَانَ يَقُولُ لاِبْنِهِ مَا يَسُرُّنِي أَنِّي شَهِدْتُ بَدْرًا بِالْعَقَبَةِ قَالَ سَأَلَ جِبْرِيلُ النَّبِيَّ صلى الله عليه وسلم. بِهَذَا.
பாடம் : 11 பத்ர் போரில் வானவர்கள் கலந்து கொண்டது36
3993. முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அகபா' விசுவாசப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவரான ராஃபிஉ (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான தம்முடைய மகன் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம், “ அகபா வாக்குப் பிரமாணத்திற்குப் பிரதியாக பத்ரில் நான் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்குமா?” என்று கேட்பது வழக்கம்.

“ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (பத்ர் போரில் கலந்து கொண்டவர்களைப் பற்றி முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார்கள்” என்றும் ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 64
3994. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا يَحْيَى، سَمِعَ مُعَاذَ بْنَ رِفَاعَةَ، أَنَّ مَلَكًا، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَعَنْ يَحْيَى، أَنَّ يَزِيدَ بْنَ الْهَادِ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مَعَهُ يَوْمَ حَدَّثَهُ مُعَاذٌ هَذَا الْحَدِيثَ، فَقَالَ يَزِيدُ فَقَالَ مُعَاذٌ إِنَّ السَّائِلَ هُوَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ.
பாடம் : 11 பத்ர் போரில் வானவர்கள் கலந்து கொண்டது36
3994. முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வானவர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார்.

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த நாளில் யஸீத் பின் அல்ஹாத் (ரஹ்) அவர்களுடன் நான் இருந்தேன். “(நபி (ஸல்) அவர்களிடம்) கேள்வி கேட்டவர் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான்” என ரிஃபாஆ (ரஹ்) கூறினார்கள் என்று யஸீத் சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
3995. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ بَدْرٍ "" هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ ـ عَلَيْهِ أَدَاةُ الْحَرْبِ "".
பாடம் : 11 பத்ர் போரில் வானவர்கள் கலந்து கொண்டது36
3995. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 64
3996. حَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مَاتَ أَبُو زَيْدٍ وَلَمْ يَتْرُكْ عَقِبًا، وَكَانَ بَدْرِيًّا.
பாடம் : 12
3996. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஸைத் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்) எந்தச் சந்ததியையும் விட்டுச் செல்லாமல் இறந்துபோனார்கள். மேலும், அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட வராயிருந்தார்கள்.37


அத்தியாயம் : 64
3997. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ خَبَّابٍ، أَنَّ أَبَا سَعِيدِ بْنِ مَالِكٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَدِمَ مِنْ سَفَرٍ، فَقَدَّمَ إِلَيْهِ أَهْلُهُ لَحْمًا مِنْ لُحُومِ الأَضْحَى فَقَالَ مَا أَنَا بِآكِلِهِ حَتَّى أَسْأَلَ، فَانْطَلَقَ إِلَى أَخِيهِ لأُمِّهِ وَكَانَ بَدْرِيًّا قَتَادَةَ بْنِ النُّعْمَانِ فَسَأَلَهُ، فَقَالَ إِنَّهُ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ نَقْضٌ لِمَا كَانُوا يُنْهَوْنَ عَنْهُ مِنْ أَكْلِ لُحُومِ الأَضْحَى بَعْدَ ثَلاَثَةِ أَيَّامٍ.
பாடம் : 12
3997. அப்துல்லாஹ் பின் கப்பாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயீத் பின் மாலிக் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பிய போது, அவர்களுடைய துணைவியார் குர்பானி இறைச்சியை (சாப்பிடுவதற்காக)க்கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்தார். அப்போது அவர்கள், “இது பற்றி நான் (மார்க்கத் தீர்ப்புக்) கேட்காத வரையில் இதை உண்ணமாட்டேன்' என்று கூறினார்கள்.

உடனே அவர்கள் தம் தாய்வழிச் சகோதரரான கத்தாதா பின் நுஅமான் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். -அவர் பத்ர் போரில் கலந்துகொண்டவராயிருந்தார்38 -(அவரிடம் சென்று) இது பற்றிக் கேட்டார்கள். அதற்கு கத்தாதா (ரலி) அவர்கள், “குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்குமேல் (சேமித்து வைத்து) எவரும் சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை மாற்றும் உத்தரவு நீங்கள் (பயணம்) சென்றதற்குப் பின்னால் வெளியானது' என்று கூறினார்கள்.39


அத்தியாயம் : 64
3998. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ الزُّبَيْرُ لَقِيتُ يَوْمَ بَدْرٍ عُبَيْدَةَ بْنَ سَعِيدِ بْنِ الْعَاصِ وَهْوَ مُدَجَّجٌ لاَ يُرَى مِنْهُ إِلاَّ عَيْنَاهُ، وَهْوَ يُكْنَى أَبُو ذَاتِ الْكَرِشِ، فَقَالَ أَنَا أَبُو ذَاتِ الْكَرِشِ. فَحَمَلْتُ عَلَيْهِ بِالْعَنَزَةِ، فَطَعَنْتُهُ فِي عَيْنِهِ فَمَاتَ. قَالَ هِشَامٌ فَأُخْبِرْتُ أَنَّ الزُّبَيْرَ قَالَ لَقَدْ وَضَعْتُ رِجْلِي عَلَيْهِ ثُمَّ تَمَطَّأْتُ، فَكَانَ الْجَهْدَ أَنْ نَزَعْتُهَا وَقَدِ انْثَنَى طَرَفَاهَا. قَالَ عُرْوَةُ فَسَأَلَهُ إِيَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَاهُ، فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَهَا، ثُمَّ طَلَبَهَا أَبُو بَكْرٍ فَأَعْطَاهُ، فَلَمَّا قُبِضَ أَبُو بَكْرٍ سَأَلَهَا إِيَّاهُ عُمَرُ فَأَعْطَاهُ إِيَّاهَا، فَلَمَّا قُبِضَ عُمَرُ أَخَذَهَا، ثُمَّ طَلَبَهَا عُثْمَانُ مِنْهُ فَأَعْطَاهُ إِيَّاهَا، فَلَمَّا قُتِلَ عُثْمَانُ وَقَعَتْ عِنْدَ آلِ عَلِيٍّ، فَطَلَبَهَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، فَكَانَتْ عِنْدَهُ حَتَّى قُتِلَ.
பாடம் : 12
3998. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரின்போது நான் உபைதா பின் சயீத் பின் அல்ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன் இரு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் “அபூதாத்தில் கரிஷ்' (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டுவந்தான்.

(போர்க் களத்தில் அவன்) நான் “அபூதாத்தில் கரிஷ்' (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான்.

“நான் அவன்மீது எனது காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். ஈட்டியின் இரு ஓரங்களும் வளைந்துபோயிருந்தன” என்று ஸுபைர் (ரலி) அவர்கள் சொன்ன தாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த ஈட்டியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர் (ரலி) அவர்கள் அதைக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர் (ரலி) அவர்கள் அதை (திரும்ப) எடுத்துக்கொண்டார்கள். பிறகு அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்தபோது, அதை உமர் (ரலி) அவர்கள் (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க்கொண்டார்கள்.

பிறகு அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ (ரலி) அவர்களி(ன் குடும்பத்தாரி)டம் வந்தது. அதனை, ஸுபைர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ (ரலி) அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்துவந்தது.


அத்தியாயம் : 64
3999. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، وَكَانَ، شَهِدَ بَدْرًا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَايِعُونِي "".
பாடம் : 12
3999. பத்ர் போரில் கலந்துகொண்ட வரான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)40 அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னிடம் வாக்குப் பிரமாணம் தாருங்கள்” என்று கூறினார்கள்.41


அத்தியாயம் : 64
4000. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ أَبَا حُذَيْفَةَ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَبَنَّى سَالِمًا، وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ ـ وَهْوَ مَوْلًى لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ ـ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا، وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلاً فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ، وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ حَتَّى أَنْزَلَ اللَّهُ تَعَالَى {ادْعُوهُمْ لآبَائِهِمْ} فَجَاءَتْ سَهْلَةُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம் : 12
4000. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹின்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்துவைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல (சாóமை, அபூஹுதைஃபா (ரலி) அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக்கொண்டார்கள்.)

மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்துவந்தன. “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்” எனும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும்வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)42

“பிறகு (அபூஹுதைஃபாவின் துணைவியார்) சஹ்லா (பின்த் சுஹைல் -ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்...” என்று (தொடங்கும்) ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல்யமான் (ரஹ்) அவர்கள்) முழுமையாகக் கூறினார்கள்.43


அத்தியாயம் : 64
4001. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ بُنِيَ عَلَىَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ حَتَّى قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَقُولِي هَكَذَا، وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ "".
பாடம் : 12
4001. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக்கொண்டிருந்த காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பதுபோல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, “எங்களி டையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்லிக்கொள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4002. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ،. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَخْبَرَنِي أَبُو طَلْحَةَ ـ رضى الله عنه ـ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ "". يُرِيدُ التَّمَاثِيلَ الَّتِي فِيهَا الأَرْوَاحُ.
பாடம் : 12
4002. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான அபூதல்ஹா (ஸைத் அல்அன்சாரீ-ரலி) அவர்கள் கூறியதாவது:

“எந்த வீட்டினுள் நாயோ உருவப் படமோ உள்ளதோ அந்த வீட்டினுள் (இறையருளைச் சுமந்து வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயிரினங்களின் சிலைகளையும், உருவப் படங்களையும் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (இப்படிக்) கூறினார்கள்” (என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.)44

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது


அத்தியாயம் : 64
4003. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ،. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ عَلَيْهِمُ السَّلاَمُ ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا قَالَ كَانَتْ لِي شَارِفٌ مِنْ نَصِيبِي مِنَ الْمَغْنَمِ يَوْمَ بَدْرٍ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْطَانِي مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ مِنَ الْخُمُسِ يَوْمَئِذٍ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَبْتَنِيَ بِفَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَاعَدْتُ رَجُلاً صَوَّاغًا فِي بَنِي قَيْنُقَاعَ أَنْ يَرْتَحِلَ مَعِي فَنَأْتِيَ بِإِذْخِرٍ، فَأَرَدْتُ أَنْ أَبِيعَهُ مِنَ الصَّوَّاغِينَ فَنَسْتَعِينَ بِهِ فِي وَلِيمَةِ عُرْسِي، فَبَيْنَا أَنَا أَجْمَعُ لِشَارِفَىَّ مِنَ الأَقْتَابِ وَالْغَرَائِرِ وَالْحِبَالِ، وَشَارِفَاىَ مُنَاخَانِ إِلَى جَنْبِ حُجْرَةِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ، حَتَّى جَمَعْتُ مَا جَمَعْتُ فَإِذَا أَنَا بِشَارِفَىَّ قَدْ أُجِبَّتْ أَسْنِمَتُهَا، وَبُقِرَتْ خَوَاصِرُهُمَا، وَأُخِذَ مِنْ أَكْبَادِهِمَا، فَلَمْ أَمْلِكْ عَيْنَىَّ حِينَ رَأَيْتُ الْمَنْظَرَ، قُلْتُ مَنْ فَعَلَ هَذَا قَالُوا فَعَلَهُ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، وَهْوَ فِي هَذَا الْبَيْتِ، فِي شَرْبٍ مِنَ الأَنْصَارِ، عِنْدَهُ قَيْنَةٌ وَأَصْحَابُهُ فَقَالَتْ فِي غِنَائِهَا أَلاَ يَا حَمْزَ لِلشُّرُفِ النِّوَاءِ، فَوَثَبَ حَمْزَةُ إِلَى السَّيْفِ، فَأَجَبَّ أَسْنِمَتَهُمَا، وَبَقَرَ خَوَاصِرَهُمَا، وَأَخَذَ مِنْ أَكْبَادِهِمَا قَالَ عَلِيٌّ فَانْطَلَقْتُ حَتَّى أَدْخُلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ زَيْدُ بْنُ حَارِثَةَ، وَعَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم الَّذِي لَقِيتُ فَقَالَ "" مَا لَكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، مَا رَأَيْتُ كَالْيَوْمِ، عَدَا حَمْزَةُ عَلَى نَاقَتَىَّ، فَأَجَبَّ أَسْنِمَتَهُمَا، وَبَقَرَ خَوَاصِرَهُمَا وَهَا هُوَ ذَا فِي بَيْتٍ مَعَهُ شَرْبٌ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِرِدَائِهِ، فَارْتَدَى ثُمَّ انْطَلَقَ يَمْشِي، وَاتَّبَعْتُهُ أَنَا وَزَيْدُ بْنُ حَارِثَةَ، حَتَّى جَاءَ الْبَيْتَ الَّذِي فِيهِ حَمْزَةُ، فَاسْتَأْذَنَ عَلَيْهِ فَأُذِنَ لَهُ، فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَلُومُ حَمْزَةَ فِيمَا فَعَلَ، فَإِذَا حَمْزَةُ ثَمِلٌ مُحْمَرَّةٌ عَيْنَاهُ، فَنَظَرَ حَمْزَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ صَعَّدَ النَّظَرَ، فَنَظَرَ إِلَى رُكْبَتِهِ، ثُمَّ صَعَّدَ النَّظَرَ، فَنَظَرَ إِلَى وَجْهِهِ، ثُمَّ قَالَ حَمْزَةُ وَهَلْ أَنْتُمْ إِلاَّ عَبِيدٌ لأَبِي فَعَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُ ثَمِلٌ، فَنَكَصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى عَقِبَيْهِ الْقَهْقَرَى، فَخَرَجَ وَخَرَجْنَا مَعَهُ.
பாடம் : 12
4003. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த நிதியான ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு (மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத்) தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து “இத்கிர்' புல்லை நாங்கள் கொண்டு வருவதெனச் சொல்லியிருந்தேன்.

அந்தப் புல்லைப் பொற்கொல்லர் களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளை யும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன்.

அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரீ ஒருவரது அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பி வந்தேன். அப்போது) என் இரு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதி (கத்தியால்) பிளக்கப்பட்டிருந்தது. அவற்றின் ஈரல் குலைகள் பிடுங்கப்பட்டிருந்தன. அவற்றின் (இந்த அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்தவிடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், “இதை(யெல்லாம்) செய்தவர் யார்?” என்று கேட்டேன்.

மக்கள், “ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில்தான் இருக்கிறார். அவருடன் அவருடைய நண்பர்களும் பாடகியொருத்தியும் உள்ளனர். அந்தப் பாடகி தமது பாடலினிடையே, “ஹம்ஸாவே! இந்தக் கொழுத்த கிழம் ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி)விடுங்கள்” என்று பாடினாள். உடனே ஹம்ஸா தமது வாளை நோக்கிப் பாய்ந்து (எடுத்து வந்து) அந்த இரு ஒட்டகங்களின் திமில்களை வெட்டி இடுப்பைப் பிளந்தார். மேலும், அதன் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்” என்று பதிலளித்தனர்.

(அலீ (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:) உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் இருந்தார்கள். நான் சந்தித்த (துயரத்)தை நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டு, “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கர மான) ஒருநாளை (ஒருபோதும்) நான் பார்த்ததில்லை. ஹம்ஸா, என் இரு ஒட்டகங்களையும் (அநியாயமாகத்) தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) பிளந்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் (நண்பர்கள்) குழுவுடன் இருக்கிறார்” என்று சொன்னேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அங்கி ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அணிந்துகொண்டு நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். நபிகளாருக்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை, அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார்.

ஹம்ஸா, நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு (தமது) பார்வையை உயர்த்தி அவர்களின் இரு முழங்கால்களையும் பார்த்தார். பிறகு பார்வையை உயர்த்தி நபி (ஸல்) அவர்களது முகத்தைப் பார்த்தார். பிறகு, “நீங்கள் எல்லாம் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார்.

அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாங்கிய வண்ணம் தாம் வந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.45


அத்தியாயம் : 64
4004. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ أَنْفَذَهُ لَنَا ابْنُ الأَصْبَهَانِيِّ سَمِعَهُ مِنِ ابْنِ مَعْقِلٍ، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ كَبَّرَ عَلَى سَهْلِ بْنِ حُنَيْفٍ فَقَالَ إِنَّهُ شَهِدَ بَدْرًا.
பாடம் : 12
4004. அப்துல்லாஹ் பின் மஅகில் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி-அவர்கள் இறந்தபோது) அவர்களுக்கு (ஜனாஸா தொழுவித்த) அலீ (ரலி) அவர்கள் (வழக்க மாகக் கூறும் தக்பீரைவிடக் கூடுதலாக ஒருமுறை) தக்பீர் கூறினார்கள்.

(இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது) “சஹ்ல் (பின் ஹுனைஃப் -ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டார்கள். (பத்ர் போரில் கலந்து கொண்டவருக்குப் பிறரைவிடத் தனிச் சிறப்பு உண்டு. அதனால் கூடுதலாக தக்பீர் கூறினேன்)” என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.46


அத்தியாயம் : 64
4005. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ شَهِدَ بَدْرًا تُوُفِّيَ بِالْمَدِينَةِ قَالَ عُمَرُ فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ. قَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي. فَلَبِثْتُ لَيَالِيَ، فَقَالَ قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا. قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ. فَصَمَتَ أَبُو بَكْرٍ، فَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا، فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ، فَلَبِثْتُ لَيَالِيَ، ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ، فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَىَّ حِينَ عَرَضْتَ عَلَىَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ قُلْتُ نَعَمْ. قَالَ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ إِلاَّ أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا.
பாடம் : 12
4005. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)

-குனைஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ர் போரில் கலந்துகொண்ட வருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள்-47

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறேன்” என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள், “(உங்கள் மகளை நான் மணம் புரிந்துகொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்தபின் எனது முடிவைக் கூறுகிறேன்)” என்று சொன்னார்கள்.

சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்தபோது) அவர், “இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்துவைக்கிறேன்” என்றுகூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களைவிட அபூபக்ர் (ரலி) அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துவைத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்” என்று கூறினார்கள்.

நான், “ஆம்' என்று கூறினேன். (அதற்கு அபூபக்ர்-ரலி) அவர்கள், “நீங்கள் கூறியபோது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர் களை (தாம் மணம் புரிந்துகொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4006. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، سَمِعَ أَبَا مَسْعُودٍ الْبَدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ "".
பாடம் : 12
4006. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செய்யும் செலவும் தர்மமே ஆகும்.

இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48


அத்தியாயம் : 64
4007. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فِي إِمَارَتِهِ أَخَّرَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ الْعَصْرَ وَهْوَ أَمِيرُ الْكُوفَةِ، فَدَخَلَ أَبُو مَسْعُودٍ عُقْبَةُ بْنُ عَمْرٍو الأَنْصَارِيُّ جَدُّ زَيْدِ بْنِ حَسَنٍ شَهِدَ بَدْرًا فَقَالَ لَقَدْ عَلِمْتَ نَزَلَ جِبْرِيلُ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَمْسَ صَلَوَاتٍ ثُمَّ قَالَ هَكَذَا أُمِرْتَ. كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ.
பாடம் : 12
4007. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கூஃபாவின் ஆளுநர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (ஒருநாள்) அஸ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி விட்டார்கள். அப்போது ஸைத் பின் ஹசன் (ரஹ்) அவர்களின் பாட்டனாரும் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் வந்து, “(முஃகீரா அவர்களே!) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஐவேளை தொழுகைகளையும் அவற்றுக்குரிய நேரங்களில்) தொழுதார் கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஐந்து (நேரத்) தொழு கைகளை (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு, ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “இவ்வா(று குறித்த நேரங்களில் தொழுதுகாட்டுமா)றே நான் பணிக்கப்பட்டுள்ளேன் என்று (கூறியதெல் லாம்) உங்களுக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது ஆட்சிக் காலத்தில் (ஒரு நாள், அன்னார் தொழுகையைத் தாமதப்படுத்தியபோது) அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தெரிவித்தார்கள்.49


அத்தியாயம் : 64
4008. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ "". قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَلَقِيتُ أَبَا مَسْعُودٍ وَهْوَ يَطُوفُ بِالْبَيْتِ، فَسَأَلْتُهُ فَحَدَّثَنِيهِ.
பாடம் : 12
4008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரு (2:285, 286), வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகிறாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும்.

இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூமஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போது (அல்கமா (ரஹ்) அவர்களிடம் கூறியதைப் போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள்.


அத்தியாயம் : 64