3969. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يُقْسِمُ قَسَمًا إِنَّ هَذِهِ الآيَةَ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ } نَزَلَتْ فِي الَّذِينَ بَرَزُوا يَوْمَ بَدْرٍ حَمْزَةَ وَعَلِيٍّ وَعُبَيْدَةَ بْنِ الْحَارِثِ وَعُتْبَةَ وَشَيْبَةَ ابْنَىْ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3969. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இவர்கள் தம் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) வசனம் பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.


அத்தியாயம் : 64
3970. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَأَلَ رَجُلٌ الْبَرَاءَ وَأَنَا أَسْمَعُ، قَالَ أَشَهِدَ عَلِيٌّ بَدْرًا قَالَ بَارَزَ وَظَاهَرَ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3970. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அலீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டார்களா?” என்று கேட்டார். (“ஆம். கலந்துகொண்டார்கள்) கவசத்திற்குமேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்” என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 64
3971. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ كَاتَبْتُ أُمَيَّةَ بْنَ خَلَفٍ، فَلَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ، فَذَكَرَ قَتْلَهُ وَقَتْلَ ابْنِهِ، فَقَالَ بِلاَلٌ لاَ نَجَوْتُ إِنْ نَجَا أُمَيَّةُ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3971. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா பின் கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர் களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்துபூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

பிறகு பத்ர் போரில் உமய்யா கொல்லப் பட்டதையும் அவருடைய மகன் (அலீ பின் உமய்யா) கொல்லப்பட்டதையும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உமய்யா பிழைத்துக்கொண்டால் நான் பிழைக்கப்போவதில்லை” என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்கள்.18


அத்தியாயம் : 64
3972. حَدَّثَنَا عَبْدَانُ بْنُ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ {وَالنَّجْمِ} فَسَجَدَ بِهَا، وَسَجَدَ مَنْ مَعَهُ، غَيْرَ أَنَّ شَيْخًا أَخَذَ كَفًّا مِنْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ فَقَالَ يَكْفِينِي هَذَا. قَالَ عَبْدُ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3972. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53வது) அத்தியாயத்தை ஒதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி (ஸல்) அவர்கள் “சஜ்தா' செய்தார்கள். அங்கிருந்த முதியவர் ஒருவரை தவிர மற்ற அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் “சஜ்தா' செய்தனர். அவர் ஒரு பிடி மண்ணை அள்ளித் தமது நெற்றிக்குக் கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னார். பிறகு, அந்த மனிதர் இறைமறுப்பாளராகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.19


அத்தியாயம் : 64
3973. أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، قَالَ كَانَ فِي الزُّبَيْرِ ثَلاَثُ ضَرَبَاتٍ بِالسَّيْفِ، إِحْدَاهُنَّ فِي عَاتِقِهِ، قَالَ إِنْ كُنْتُ لأُدْخِلُ أَصَابِعِي فِيهَا. قَالَ ضُرِبَ ثِنْتَيْنِ يَوْمَ بَدْرٍ، وَوَاحِدَةً يَوْمَ الْيَرْمُوكِ. قَالَ عُرْوَةُ وَقَالَ لِي عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ حِينَ قُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يَا عُرْوَةُ، هَلْ تَعْرِفُ سَيْفَ الزُّبَيْرِ قُلْتُ نَعَمْ. قَالَ فَمَا فِيهِ قُلْتُ فِيهِ فَلَّةٌ فُلَّهَا يَوْمَ بَدْرٍ. قَالَ صَدَقْتَ. بِهِنَّ فُلُولٌ مِنْ قِرَاعِ الْكَتَائِبِ ثُمَّ رَدَّهُ عَلَى عُرْوَةَ. قَالَ هِشَامٌ فَأَقَمْنَاهُ بَيْنَنَا ثَلاَثَةَ آلاَفٍ، وَأَخَذَهُ بَعْضُنَا، وَلَوَدِدْتُ أَنِّي كُنْتُ أَخَذْتُهُ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3973. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களது தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்தபோது) எனது விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரு காயங்கள் பத்ர் போரிலும் இன்னொன்று “யர்மூக்' போரிலும் ஏற்பட்டவையாகும்.

(என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களது வாள் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானிடம் இருந்தது.) என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான், “உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?” என்று கேட்டார்.

நான், “ஆம்' (தெரியும்) என்றேன். “அதில் என்ன (அடையாளம்) உள்ளது?” என்று கேட்டார். “பத்ர் போரில் அதன் முனை முறிந்துபோய்விட்டது. அந்த முறிவுதான் (அடையாளம்)” என்றேன். “உண்மை சொன்னீர்” என்று அப்துல் மலிக் பின் மர்வான் கூறினார். பிறகு, “அவர்களுடைய வாட்கள் பல்வேறு படைகளில் -கலந்துகொண்டு எதிரிகளின் வாட்களுடன்- மோதி முனைகள் முறிந்திருந்தன” எனும் (நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர்) அடியைக் கூறினார். பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (பின் உர்வா-ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் / தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கிக்கொண்டார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


அத்தியாயம் : 64
3974. حَدَّثَنَا فَرْوَةُ، عَنْ عَلِيٍّ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ سَيْفُ الزُّبَيْرِ مُحَلًّى بِفِضَّةٍ. قَالَ هِشَامٌ وَكَانَ سَيْفُ عُرْوَةَ مُحَلًّى بِفِضَّةٍ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3974. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


அத்தியாயம் : 64
3975. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَصْحَابَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالُوا لِلزُّبَيْرِ يَوْمَ الْيَرْمُوكِ أَلاَ تَشُدُّ فَنَشُدَّ مَعَكَ فَقَالَ إِنِّي إِنْ شَدَدْتُ كَذَبْتُمْ. فَقَالُوا لاَ نَفْعَلُ، فَحَمَلَ عَلَيْهِمْ حَتَّى شَقَّ صُفُوفَهُمْ، فَجَاوَزَهُمْ وَمَا مَعَهُ أَحَدٌ، ثُمَّ رَجَعَ مُقْبِلاً، فَأَخَذُوا بِلِجَامِهِ، فَضَرَبُوهُ ضَرْبَتَيْنِ عَلَى عَاتِقِهِ بَيْنَهُمَا ضَرْبَةٌ ضُرِبَهَا يَوْمَ بَدْرٍ. قَالَ عُرْوَةُ كُنْتُ أُدْخِلُ أَصَابِعِي فِي تِلْكَ الضَّرَبَاتِ أَلْعَبُ وَأَنَا صَغِيرٌ. قَالَ عُرْوَةُ وَكَانَ مَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يَوْمَئِذٍ وَهْوَ ابْنُ عَشْرِ سِنِينَ، فَحَمَلَهُ عَلَى فَرَسٍ وَكَّلَ بِهِ رَجُلاً.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3975. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யர்மூக் போரின்போது20 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(கிழக்கு ரோமானியரான பைஸாந்தியர்மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “நான் தாக்குதல் தொடுக்கும்போது நீங்கள் வாக்கைக் காப்பாற்றமாட்டீர்கள் (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிடமாட்டீர்கள்)” என்று கூறினார்கள். “இல்லை. அப்படி நாங்கள் செய்யமாட்டோம்” என்று அவர்கள் கூறினர்.

பிறகு ஸுபைர் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து சென்றார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவர்களது குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர் பிடித்துக்கொண்டு அவர்களது தோள்மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர்.

(ஏற்கெனவே) பத்ர் போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் என் விரல்களை விட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர் (ரலி) அவர் களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையில் அமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர் (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள்.


அத்தியாயம் : 64
3976. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، قَالَ ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ أَبِي طَلْحَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ يَوْمَ بَدْرٍ بِأَرْبَعَةٍ وَعِشْرِينَ رَجُلاً مِنْ صَنَادِيدِ قُرَيْشٍ فَقُذِفُوا فِي طَوِيٍّ مِنْ أَطْوَاءِ بَدْرٍ خَبِيثٍ مُخْبِثٍ، وَكَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلاَثَ لَيَالٍ، فَلَمَّا كَانَ بِبَدْرٍ الْيَوْمَ الثَّالِثَ، أَمَرَ بِرَاحِلَتِهِ فَشُدَّ عَلَيْهَا رَحْلُهَا، ثُمَّ مَشَى وَاتَّبَعَهُ أَصْحَابُهُ وَقَالُوا مَا نُرَى يَنْطَلِقُ إِلاَّ لِبَعْضِ حَاجَتِهِ، حَتَّى قَامَ عَلَى شَفَةِ الرَّكِيِّ، فَجَعَلَ يُنَادِيهِمْ بِأَسْمَائِهِمْ وَأَسْمَاءِ آبَائِهِمْ "" يَا فُلاَنُ بْنَ فُلاَنٍ، وَيَا فُلاَنُ بْنَ فُلاَنٍ، أَيَسُرُّكُمْ أَنَّكُمْ أَطَعْتُمُ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا، فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا "". قَالَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، مَا تُكَلِّمُ مِنْ أَجْسَادٍ لاَ أَرْوَاحَ لَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ "". قَالَ قَتَادَةُ أَحْيَاهُمُ اللَّهُ حَتَّى أَسْمَعَهُمْ قَوْلَهُ تَوْبِيخًا وَتَصْغِيرًا وَنَقِيمَةً وَحَسْرَةً وَنَدَمًا.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3976. அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்து நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக்கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தார் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது.

பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றி)க் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது தேவை ஏதோ ஒன்றுக்காகச் செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்த (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரே! இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இறைவன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மை என்றே நாங்கள் கண்டுகொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானதுதான் என்று நீங்கள் கண்டுகொண்டீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களைவிட நன்கு செவியுறுபவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) க(த்)தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்:

அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும் அவர்களுக்கு) அல்லாஹ் உயிர் கொடுத்தான்.21


அத்தியாயம் : 64
3977. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما {الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا} قَالَ هُمْ وَاللَّهِ كُفَّارُ قُرَيْشٍ. قَالَ عَمْرٌو هُمْ قُرَيْشٌ وَمُحَمَّدٌ صلى الله عليه وسلم نِعْمَةُ اللَّهِ {وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ } قَالَ النَّارَ يَوْمَ بَدْرٍ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3977. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ “அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்காக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீர் காணவில்லையா?' எனும் (14:28ஆம்) இறைவசனம், அல்லாஹ்வின் மீதாணையாக! குறைஷிக் குல இறைமறுப்பாளர்களையே குறிக்கிறது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

“அவர்கள் குறைஷிகளாவர். “அல்லாஹ் வின் அருட்கொடை' என்பது முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கும். “அழிவுக் கிடங்கு' என்பது பத்ருடைய நாளில் (இறைத்தூதரை எதிர்த்துப் போரிட்டு குறைஷியர் வீழ்ந்த) நரகத்தைக் குறிக்கும்” என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 64
3978. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ ذُكِرَ عِنْدَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ ابْنَ عُمَرَ رَفَعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم " إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِبُكَاءِ أَهْلِهِ ". فَقَالَتْ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ لَيُعَذَّبُ بِخَطِيئَتِهِ وَذَنْبِهِ، وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ الآنَ "
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3978. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“குடும்பத்தார் அழுவதால் மண்ணறை யில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) “இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்' என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.22


அத்தியாயம் : 64
3979. . قَالَتْ وَذَاكَ مِثْلُ قَوْلِهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْقَلِيبِ وَفِيهِ قَتْلَى بَدْرٍ مِنَ الْمُشْرِكِينَ، فَقَالَ لَهُمْ مَا قَالَ إِنَّهُمْ لَيَسْمَعُونَ مَا أَقُولُ. إِنَّمَا قَالَ " إِنَّهُمُ الآنَ لَيَعْلَمُونَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌّ ". ثُمَّ قَرَأَتْ {إِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى} {وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ} تَقُولُ حِينَ تَبَوَّءُوا مَقَاعِدَهُمْ مِنَ النَّارِ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3979. (மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இது எப்படியிருக்கிறதென்றால், “(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர் கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி (ஸல்) அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) “நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றதுதான்.

ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்” என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத் திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை)ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80)

(நபியே!) அடக்கத் தலங்களில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது. (35:22)

“நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.


அத்தியாயம் : 64
3980. حَدَّثَنِي عُثْمَانُ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَلِيبِ بَدْرٍ فَقَالَ {هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ثُمَّ قَالَ إِنَّهُمُ الآنَ يَسْمَعُونَ مَا أَقُولُ} فَذُكِرَ لِعَائِشَةَ فَقَالَتْ إِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّهُمُ الآنَ لَيَعْلَمُونَ أَنَّ الَّذِي كُنْتُ أَقُولُ لَهُمْ هُوَ الْحَقُّ ". ثُمَّ قَرَأَتْ {إِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى} حَتَّى قَرَأَتِ الآيَةَ.
பாடம் : 8 அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3980. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ரின் கிணற்றருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு (உள்ளே கிடந்த இறைமறுப்பாளர்களின் சடலங்களை நோக்கி), “உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானதுதான் என்று கண்டுகொண்டீர்களா?” என்று கேட்டார்கள். பிறகு, “இவர்கள், நான் கூறுவதை இப்போது செவியுறுகிறார்கள்” என்றும் கூறினார்கள்.

(“இறந்தவர்கள் செவியுறுகிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்ற) தகவல் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, “நான் அவர்களுக்குச் சொல்லிவந்த (கொள்கைகள்) எல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்' என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக), “(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது” எனும் (35:22) இறைவசனத்தை (இறுதிவரை) ஓதினார் கள்.23

அத்தியாயம் : 64
3982. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ أُصِيبَ حَارِثَةُ يَوْمَ بَدْرٍ وَهْوَ غُلاَمٌ، فَجَاءَتْ أُمُّهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَرَفْتَ مَنْزِلَةَ حَارِثَةَ مِنِّي، فَإِنْ يَكُنْ فِي الْجَنَّةِ أَصْبِرْ وَأَحْتَسِبْ، وَإِنْ تَكُ الأُخْرَى تَرَى مَا أَصْنَعُ فَقَالَ "" وَيْحَكِ أَوَهَبِلْتِ أَوَجَنَّةٌ وَاحِدَةٌ هِيَ إِنَّهَا جِنَانٌ كَثِيرَةٌ، وَإِنَّهُ فِي جَنَّةِ الْفِرْدَوْسِ "".
பாடம் : 9 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் சிறப்பு
3982. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராகா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொல்லப்பட்டார்கள். ஆகவே, அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஹாரிஸாவுக்கு உள்ள தகுதியைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமைகாப்பேன். (இதுவன்றி) வேறு நிலையாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அடப்பாவமே! இழந்து தவிக்கிறாயோ!” (என்று கூறிவிட்டு) “சொர்க்கம் ஒன்றே ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கம் பல உண்டு. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) “ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' எனும் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள்.24


அத்தியாயம் : 64
3983. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَا مَرْثَدٍ وَالزُّبَيْرَ وَكُلُّنَا فَارِسٌ قَالَ "" انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا امْرَأَةً مِنَ الْمُشْرِكِينَ، مَعَهَا كِتَابٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى الْمُشْرِكِينَ "". فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا حَيْثُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَا الْكِتَابُ. فَقَالَتْ مَا مَعَنَا كِتَابٌ. فَأَنَخْنَاهَا فَالْتَمَسْنَا فَلَمْ نَرَ كِتَابًا، فَقُلْنَا مَا كَذَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لَنُجَرِّدَنَّكِ. فَلَمَّا رَأَتِ الْجِدَّ أَهْوَتْ إِلَى حُجْزَتِهَا وَهْىَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ فَأَخْرَجَتْهُ، فَانْطَلَقْنَا بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، فَدَعْنِي فَلأَضْرِبْ عُنُقَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ "". قَالَ حَاطِبٌ وَاللَّهِ مَا بِي أَنْ لاَ أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ الْقَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي، وَلَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلاَّ لَهُ هُنَاكَ مِنْ عَشِيرَتِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَ، وَلاَ تَقُولُوا لَهُ إِلاَّ خَيْرًا "". فَقَالَ عُمَرُ إِنَّهُ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ، فَدَعْنِي فَلأَضْرِبَ عُنُقَهُ. فَقَالَ "" أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ "". فَقَالَ "" لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمُ الْجَنَّةُ، أَوْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ "". فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ وَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
பாடம் : 9 பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் சிறப்பு
3983. அலீ (பின் அபீதாலிப் - ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கன்னாஸ் பின் ஹுஸைன்- ரலி) அவர்களையும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்' எனுமிடம்வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பாளர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீபல்(த்)தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறினார்கள்.

(பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந் தோம். அவளிடம், “கடிதம் (எங்கே? அதை எடு)” என்று கேட்டோம். அவள், “எம்மிடம் கடிதம் எதுவுமில்லை” என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்கவைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை.

அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்” என்று சொன்னோம்.

விடாப்பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டுசென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீபல்(த்)தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்துகொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிóருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்” என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று (மீண்டும்) கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ர் போரில் கலந்துகொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்துகொண்டவர்களை நோக்கி அல்லாஹ், “நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' அல்லது “உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள்.25

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, “அல்லாஹ்வும் அவனு டைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.26

அத்தியாயம் : 64
3984. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ، وَالزُّبَيْرِ بْنِ الْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ، عَنْ أَبِي أُسَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" إِذَا أَكْثَبُوكُمْ فَارْمُوهُمْ وَاسْتَبْقُوا نَبْلَكُمْ "".
பாடம் : 10
3984. அபூஉசைத் (மாலிக் பின் ரபீஆ- ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்கள்மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் தூரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.27


அத்தியாயம் : 64
3985. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ، وَالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ، عَنْ أَبِي أُسَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" إِذَا أَكْثَبُوكُمْ ـ يَعْنِي كَثَرُوكُمْ ـ فَارْمُوهُمْ، وَاسْتَبْقُوا نَبْلَكُمْ "".
பாடம் : 10
3985. அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ர் போரின்போது எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் -அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்துகொண்டால் -அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
3986. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرُّمَاةِ يَوْمَ أُحُدٍ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ أَصَابُوا مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةً سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلاً. قَالَ أَبُو سُفْيَانَ يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالْحَرْبُ سِجَالٌ.
பாடம் : 10
3986. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (மலைக்கணவாயில் நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை(த் தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின்போது முஸ்óம் களாகிய) எங்களில் எழுபது பேரை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்குமுன் நடந்த) பத்ர் போரின்போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பாளர்களில் எழுபது பேரைக் கைது செய்து இன்னும் எழுபது பேரைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்று நாற்பது பேரை வீழ்த்தினார்கள்.

(இதைப் பற்றி) அபூசுஃப்யான் கூறினார்: இந்த (உஹுத் போரின்) நாள் பத்ருடைய நாளுக்குப் பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி, மாறிதான் இறைக்க முடியும்)28


அத்தியாயம் : 64
3987. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى،، أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْخَيْرِ بَعْدُ، وَثَوَابُ الصِّدْقِ الَّذِي آتَانَا بَعْدَ يَوْمِ بَدْرٍ "".
பாடம் : 10
3987. நன்மை என்பது அல்லாஹ் (இந்த உஹுத் போருக்குப்) பின்பு நமக்குக் கொணர்ந்த நன்மையும், (இரண்டாம்) பத்ர் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நமது வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும்.29

“இதை (என் தந்தை) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்தார்கள் என்று நான் எண்ணுகிறேன்” என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 64
3988. حَدَّثَنِي يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ إِنِّي لَفِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ إِذِ الْتَفَتُّ، فَإِذَا عَنْ يَمِينِي وَعَنْ يَسَارِي فَتَيَانِ حَدِيثَا السِّنِّ، فَكَأَنِّي لَمْ آمَنْ بِمَكَانِهِمَا، إِذْ قَالَ لِي أَحَدُهُمَا سِرًّا مِنْ صَاحِبِهِ يَا عَمِّ أَرِنِي أَبَا جَهْلٍ. فَقُلْتُ يَا ابْنَ أَخِي، وَمَا تَصْنَعُ بِهِ قَالَ عَاهَدْتُ اللَّهَ إِنْ رَأَيْتُهُ أَنْ أَقْتُلَهُ أَوْ أَمُوتَ دُونَهُ. فَقَالَ لِي الآخَرُ سِرًّا مِنْ صَاحِبِهِ مِثْلَهُ قَالَ فَمَا سَرَّنِي أَنِّي بَيْنَ رَجُلَيْنِ مَكَانَهُمَا، فَأَشَرْتُ لَهُمَا إِلَيْهِ، فَشَدَّا عَلَيْهِ مِثْلَ الصَّقْرَيْنِ حَتَّى ضَرَبَاهُ، وَهُمَا ابْنَا عَفْرَاءَ.
பாடம் : 10
3988. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பத்ர் போரின்போது (படை) அணியில் நின்றுகொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் இளவயதுடைய இரு இளைஞர்கள் (நின்றுகொண்டு) இருந்தனர்.

அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன்.30 அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடத்தில், “என் பெரிய தந்தையே! அபூஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொல்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக்கொண்டுள்ளேன்”என்றார். அப்போது மற்றொருவரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலாமவரைப் போலவே என்னிடம் கூறினார்.

அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஆதலால், அவ்விருவருக்கும் அபூஜஹ்லை சுட்டிக் காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா'வின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.31


அத்தியாயம் : 64