369. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الْحَجَّةِ فِي مُؤَذِّنِينَ يَوْمَ النَّحْرِ نُؤَذِّنُ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثُمَّ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيًّا، فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِي أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 10
(உடலில்) அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்
369. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் ‘ஹஜ்ஜத்துல் வதா’விற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது, “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது” என்று ‘மினா’வில் பொது அறிவிப்புச் செய்யும்படி சிலரை அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக் குப்) பின்னால் அலீ (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிட மிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அவ்வாறே எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே, “(இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக்கொண்டது குறித்தும்,) இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லம் கஅபாவை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.
அத்தியாயம் : 8

370. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ مُلْتَحِفًا بِهِ وَرِدَاؤُهُ مَوْضُوعٌ، فَلَمَّا انْصَرَفَ قُلْنَا يَا أَبَا عَبْدِ اللَّهِ تُصَلِّي وَرِدَاؤُكَ مَوْضُوعٌ قَالَ نَعَمْ، أَحْبَبْتُ أَنْ يَرَانِي الْجُهَّالُ مِثْلُكُمْ، رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي هَكَذَا.
பாடம் : 11
மேல்துண்டு இல்லாமல் தொழுவது
370. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரே ஆடையைச் சுற்றியபடி தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களது மேல்துண்டு (தனியாக) வைக்கப்பட்டிருந்தது.
தொழுது முடித்ததும் அவர்களிடம் “அபூஅப்தில்லாஹ்! உங்களது மேல் துண்டை (தனியாக) வைத்துவிட்டு (ஒரே ஆடையில்) தொழுகின்றீர்களே?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஆம்; உங்களைப் போன்ற விவரம் புரியாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டு மென்றே நான் விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை நான் கண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.

371. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَزَا خَيْبَرَ، فَصَلَّيْنَا عِنْدَهَا صَلاَةَ الْغَدَاةِ بِغَلَسٍ، فَرَكِبَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَرَكِبَ أَبُو طَلْحَةَ، وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ، فَأَجْرَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فِي زُقَاقِ خَيْبَرَ، وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ حَسَرَ الإِزَارَ عَنْ فَخِذِهِ حَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ فَخِذِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم، فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ قَالَ "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "". قَالَهَا ثَلاَثًا. قَالَ وَخَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ فَقَالُوا مُحَمَّدٌ ـ قَالَ عَبْدُ الْعَزِيزِ وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا ـ وَالْخَمِيسُ. يَعْنِي الْجَيْشَ، قَالَ فَأَصَبْنَاهَا عَنْوَةً، فَجُمِعَ السَّبْىُ، فَجَاءَ دِحْيَةُ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، أَعْطِنِي جَارِيَةً مِنَ السَّبْىِ. قَالَ "" اذْهَبْ فَخُذْ جَارِيَةً "". فَأَخَذَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، أَعْطَيْتَ دِحْيَةَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ سَيِّدَةَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ، لاَ تَصْلُحُ إِلاَّ لَكَ. قَالَ "" ادْعُوهُ بِهَا "". فَجَاءَ بِهَا، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" خُذْ جَارِيَةً مِنَ السَّبْىِ غَيْرَهَا "". قَالَ فَأَعْتَقَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَتَزَوَّجَهَا. فَقَالَ لَهُ ثَابِتٌ يَا أَبَا حَمْزَةَ، مَا أَصْدَقَهَا قَالَ نَفْسَهَا، أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، حَتَّى إِذَا كَانَ بِالطَّرِيقِ جَهَّزَتْهَا لَهُ أُمُّ سُلَيْمٍ فَأَهْدَتْهَا لَهُ مِنَ اللَّيْلِ، فَأَصْبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَرُوسًا فَقَالَ "" مَنْ كَانَ عِنْدَهُ شَىْءٌ فَلْيَجِئْ بِهِ "". وَبَسَطَ نِطَعًا، فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ ـ قَالَ وَأَحْسِبُهُ قَدْ ذَكَرَ السَّوِيقَ ـ قَالَ فَحَاسُوا حَيْسًا، فَكَانَتْ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 12
தொடை (மறைக்க வேண்டிய பகுதியா? என்பது) பற்றிய குறிப்பு
நபி (ஸல்) அவர்கள், “தொடை மறைக்க வேண்டிய பகுதியாகும்” என்று கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி), ஜர்ஹத் (ரலி), முஹம்மத் பின் (அப்தில்லாஹ் பின்) ஜஹ்ஷ் (ரலி) ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமது தொடைப் பகுதியை திறந்திருந்தார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதில் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பே வலுவான அறிவிப்பாளர்தொடர் உடையதாகும்.
ஜர்ஹத் (ரலி) அவர்களின் அறிவிப்பு(ப் பிரகாரம் செயல்படுவதே) தார்மிகப் பண்பாகும். இதன்மூலம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த தோட்டத்திற்குள்) உஸ்மான் (ரலி) அவர்கள் நுழைந்தபோது, நபி (ஸல்) அவர்கள் (திறந்திருந்த) தம் முழங்கால்களை மூடிக்கொண்டார்கள்.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தொடை எனது தொடைமீதிருக்க, அவர்களுக்கு அல்லாஹ் (வேத அறி விப்பை) அருளினான். அப்போது எனது தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு அவர்களின் தொடை என்மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது.15
371. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்மீது போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின்போது) கைபருக்கு அருகில் (அதன் புறநகரில்) நாங்கள் (இரவின் இறுதிப் பகுதி) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். அபூதல்ஹா
(ரலி) அவர்களும் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். நான் அபூதல்ஹா
(ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால் (அருகில் சென்றுகொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையில் உராய்ந்துகொண்டிருந்தது. பின்னர் அவர்கள் தமது தொடையி-ருந்த கீழங்கியை விலக்கினார்கள். எந்த அளவுக்கென்றால், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன்.
(பிறகு) அந்த நகருக்குள் அவர்கள் பிரவேசித்தபோது, “அல்லாஹ் மிகப் பெரியவன்” கைபர் பாழா(வது உறுதியா)கி விட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோ மாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று மூன்று முறை கூறினார்கள்.
அந்த ஊர் மக்கள் தங்களுடைய அலுவல்களுக்காகப் புறப்பட்டு வந்தபோது (எங்களைக் கண்டதும்), “முஹம்மத் (வந்துவிட்டார்)” என்று கூறினர்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எம்முடைய நண்பர்களில் சிலர், “(முஹம்மதும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)” என்று அம்மக்கள் கூறியதாக அறிவித்தனர்.-
பிறகு (கைபர்வாசிகளை ஒடுக்கி) அதை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தோம். போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோது திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே திஹ்யா (ரலி) அவர்கள் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயை எனும் பெண்மணியைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைழா, நளீர் குலத்தாரின் தலைவியான ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை திஹ்யா அவர்களுக்கு வழங்கிவிட்டீர் களே! ஸஃபிய்யா, உங்களுக்கல்லாமல் வேறெவருக்கும் தகுதியாகமாட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “திஹ்யா வையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள்” என்றார்கள்.
ஸஃபிய்யா அவர்களுடன் திஹ்யா (ரலி) அவர்கள் வந்தார்கள். ஸஃபிய்யா அவர்களைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (திஹ்யா (ரலி) அவர்களிடம்), “கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங் கள்” என்று சொன்னார்கள். பின்னர் ஸஃபிய்யாவை நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்து மணந்துகொண்டார்கள்.
(இந்த ஹதீஸை அறிவிக்கிற) அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் (அல்புனானீ -ரஹ்) அவர்கள், “அபூஹம்ஸா! நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மணக்கொடையாக (மஹ்ர்) எனன கொடுத்தார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அவரையே மணக்கொடையாக ஆக்கினார்கள்; (அதாவது) அவரை விடுதலை செய்வதையே மணக்கொடையாக ஆக்கி அவரை மணந்துகொண்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.
நாங்கள் (கைபரி-ருந்து திரும்பி வரும்) வழியில் (‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில்) இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அலங்கார) ஆயத்தம் செய்து இரவு நேரத்தில் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
புது மாப்பிள்ளையாக காலையில் எழுந்த நபி (ஸல்) அவர்கள், “எவரிடமேனும் ஏதேனும் (உணவுப்) பொருள் இருப்பின், அதை (எம்மிடம்) கொண்டுவாருங்கள்” என்று கூறி, தோல் விரிப்பொன்றை விரித்தார்கள். அப்போது (அங்கிருந்த நபித்தோழர்களில்) ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரலானார். மற்றொருவர் நெய்யைக் கொண்டுவரலானார்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், “(மற்றொருவர்) மாவு (கொண்டுவரலானார்”) என்று குறிப்பிட்டதாகவே நான் கருதுகிறேன்.-
அவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து ‘ஹைஸ்’ எனும் (ம-தா போன்ற) ஒருவகை பலகாரத்தைத் தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மணவிருந்தாக (வலீமா) அமைந்தது.

372. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ.
பாடம் : 13
ஒரு பெண் எத்தனை ஆடை களை அணிந்து தொழ வேண்டும்?16
இக்ரிமா (ரஹ்) அவர்கள், “பெண் ஒரே ஆடையில் தனது உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டாலும் போதுமான தாகும்” என்று கூறினார்கள்.
372. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதிகாலை) ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது இறை நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களின் மேலாடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்துகொள்வார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்கு அப்பெண்கள் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறியமாட்டார்கள்.

373. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي "". وَقَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلاَةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي "".
பாடம் : 14
வேலைப்பாடு மிக்க ஆடையணிந்து தொழும்போது அதன் வேலைப்பாடு கவனத்தை ஈர்த்தால் (என்ன செய்வது)?
373. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார் கள். (தொழுது கொண்டிருக்கும்போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள்.
தொழுது முடித்ததும், “எனது இந்தக் கறுப்புக் கம்பளி ஆடையை, (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) ‘அன்பிஜான்’ (நகர எளிய) ஆடையை (வாங்கி) என்னிடம் கொண்டுவாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “நான் தொழுதுகொண்டிருக்கும்போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.17

374. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي "".
பாடம் : 15
சிலுவை பொறிக்கப்பட்ட அல்லது (உயிரினங்களின்) உருவப்படம் வரையப்பட்ட ஆடையுடன் தொழுதால் தொழுகை பாழாகிவிடுமா என்பது பற்றியும், இவற்றுக்கு வந்துள்ள தடை பற்றியும்
374. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த பல வண்ண திரைச் சீலை ஒன்று இருந்தது. அதைக் கொண்டு வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அல மாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள்.
(அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய இந்தத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னார்கள்.18

375. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ فَصَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ وَقَالَ "" لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ "".
பாடம் : 16
ஒருவர் பட்டாலான முழு நீளங் கியை அணிந்து தொழுதுவிட்டுப் பின்னர் அதைக் கழற்றிவிடுவது
375. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) நபி (ஸல்) அவர்களுக்கு (‘ஃபர்ரூஜ்’ எனும்) பட்டு நீளங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அதை அவர்கள் அணிந்துகொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள்.
பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும், அதை வெறுப்பவர்கள் போன்று கடுமையாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, “இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று” எனக் கூறினார்கள்.

376. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلاً أَخَذَ وَضُوءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَاكَ الْوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ، ثُمَّ رَأَيْتُ بِلاَلاً أَخَذَ عَنَزَةً فَرَكَزَهَا، وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا، صَلَّى إِلَى الْعَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَىِ الْعَنَزَةِ.
பாடம் : 17
சிவப்பு நிற ஆடையணிந்து தொழுவது
376. அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ-ர-) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது ‘அப்தஹ்’ எனுமிடத் தில்) தோ-னாலான சிவப்பு நிற கூடார மொன்றில் (தங்கியிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (‘உளூ’) செய்துவிட்டு மீதிவைத்த தண்ணீரை பிலால் (ரலி) அவர்கள் எடுத்துவருவதைக் கண்டேன். மேலும், அந்த எஞ்சிய தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக்கொள்வதையும் நான் பார்த்தேன்.
அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர், அதை(த் தமது மேனியில்) தடவிக்கொண்டார். அந்தத் தண்ணீரில் சிறிதளவும் கிடைக்கப்பெறாதவர், அடுத்தவரின் கையில் இருந்த ஈரத்தைத் தொட்டுக்கொண்டார்.
பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை எடுத்து வந்து அதை ஊன்றுவதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேலங்கியை (தமது கணைக்கால்கள் தெரியுமளவுக்கு) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்து (தடுப்பாக வைக்கப்பட்டிருந்த) அந்தக் கைத்தடியை நோக்கி மக்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்து செல்வதை நான் பார்த்தேன்.

377. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ مِنْ أَىِّ شَىْءٍ الْمِنْبَرُ فَقَالَ مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي هُوَ مِنْ أَثْلِ الْغَابَةِ، عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ عُمِلَ، وَوُضِعَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ خَلْفَهُ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى، فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى الْمِنْبَرِ، ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ بِالأَرْضِ، فَهَذَا شَأْنُهُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ـ رَحِمَهُ اللَّهُ ـ عَنْ هَذَا الْحَدِيثِ، قَالَ فَإِنَّمَا أَرَدْتُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ أَعْلَى مِنَ النَّاسِ، فَلاَ بَأْسَ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنَ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ. قَالَ فَقُلْتُ إِنَّ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ كَانَ يُسْأَلُ عَنْ هَذَا كَثِيرًا فَلَمْ تَسْمَعْهُ مِنْهُ قَالَ لاَ.
பாடம் : 18
மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
“பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் சிறுநீர் (போன்றவை) ஓடினாலும் சரியே! ஆனால், தொழுப வருக்கும் அந்தப் பாலத்திற்கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும்” என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், (கீழே தொழவைத்த) இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாச-ன் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின்மேல் நின்று தொழுதார்கள்.
377. அபூஹாஸிம் (சலமா பின் தீனார்- ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்களில் சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், “(நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய) அந்தச் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எதனால் செய்யப்பட்டது?” என்று வினவினர்.
அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களில் என்னைவிட (இது பற்றி) நன்கு தெரிந்தவர்கள் யாரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. அது ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்டதாகும்; அதை இன்ன பெண்மணியின் அடிமையான இன்னாரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்(து கொடுத்)தார்.
அது செய்யப்பட்டு (உரிய இடத்தில்) வைக்கப்பட்டபோது அதன்மீது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறி) நின்று கிப்லாவை முன்னோக்கி (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) சொன்னார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்ஆன் வசனங் களை) ஓதிவிட்டு, ‘ருகூஉ’ செய்தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் ருகூஉ செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்றுவிட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாக்கில் நகர்ந்து தரையில் (இறங்கி) சஜ்தா செய்தார்கள். பிறகு திரும்பவும் மேடைக் குத் திரும்பினார்கள்.
பிறகு (இரண்டாவது ரக்அத்தில் குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அதன் பின்னர் தலையை உயர்த்தி (நிமிர்ந்து நின்று விட்டு)ப் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாக்கில் நகர்ந்து வந்து தரையின்மீது சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். இதுதான் நடந்த நிகழ்ச்சியாகும்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்.
அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறுகையில், “(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள், (பின்பற்றித் தொழுத) மக்களை விட உயரமான இடத்தில் (நின்றுகொண்டு) இருந்தார்கள் என்று கூறும் இந்த ஹதீஸிலிருந்து ‘மக்களைவிட உயரமான இடத்தில் இமாம் இருப்பதில் தவறில்லை’ என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.
அப்போது நான், “(இது சம்பந்தமாக) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் அதிகமாகக் கேட்கப்படுகிறதாமே! அவரிடமிருந்து இந்த ஹதீஸை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள், “இல்லை (நான் அவரிடமிருந்து இந்த ஹதீஸைச் செவியுறவில்லை)” என்று பதிலளித்தார்கள்.

378. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَقَطَ عَنْ فَرَسِهِ، فَجُحِشَتْ سَاقُهُ أَوْ كَتِفُهُ، وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ، دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا، وَهُمْ قِيَامٌ فَلَمَّا سَلَّمَ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا "". وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ آلَيْتَ شَهْرًا فَقَالَ "" إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ "".
பாடம் : 18
மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
“பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் சிறுநீர் (போன்றவை) ஓடினாலும் சரியே! ஆனால், தொழுப வருக்கும் அந்தப் பாலத்திற்கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும்” என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், (கீழே தொழவைத்த) இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாச-ன் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின்மேல் நின்று தொழுதார்கள்.
378. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்துகொண் டிருந்தபோது) தமது குதிரையி-ருந்து கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களது ‘கணைக்கால்’ அல்லது ‘தோள்பட்டை’யில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. மேலும், (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ‘தம் துணைவியரை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்’ என்று சத்தியமும் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதன் படிகள் பேரீச்சங்கட்டையால் ஆனவை.
ஆகவே, அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; தோழர் கள் நின்றவாறு தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்(து தொழுகையை முடித்)தபோது, “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தா செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவாறு தொழுங்கள்” என்று சொன்னார்கள்.19
(அந்த அறையி-ருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கிவந்தார்கள். அப்போது மக்கள், “ஒரு மாத காலம் தங்கள் துணைவியரை நெருங்கமாட்டேன் எனத் தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று கூறினார்கள்.

379. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ وَأَنَا حَائِضٌ وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ. قَالَتْ وَكَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ.
பாடம் : 19
சஜ்தா செய்யும்போது தொழுதுகொண்டிருப்பவரின் ஆடை அவருடைய மனைவியின் மேல் பட்டுவிட்டால் (அவருடைய தொழுகை பாழாகிவிடுமா?)
379. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு எதிரில் நான் (படுத்துக்கொண்டு) இருப்பேன். அப்போது எனக்கு மாத விடாய் ஏற்பட்டிருக்கும். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது சில நேரங்களில் அவர்களது ஆடை என்மீது படும். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.

380. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ "" قُومُوا فَلأُصَلِّ لَكُمْ "". قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ وَالْيَتِيمَ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ.
பாடம் : 20
பாய்மேல் தொழுதல்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்ப-ல் நின்றவண்ணம் தொழுதார்கள்.
“(நீ கப்ப-ல் செல்லும்போது) உன் சகாக்களுக்குச் சிரமம் ஏற்படாம-ருக்கு மானால், நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுதுகொள்; அவர்களுக்குச் சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.20
380. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய்வழிப்) பாட்டி முளைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், “எழுங்கள். உங்களுக்காக நான் (கூடுதலான தொழுகையைத்) தொழுவிக் கிறேன்” என்று கூறினார்கள். (தொழுவதற் காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி நான் எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டதால் கறுப்பேறி இருந் தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழு கைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்றுகொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று கூடுதலான) இரண்டு ரக்அத்கள் எங்களுக்குத் தொழவைத்து விட்டு, (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

381. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى الْخُمْرَةِ.
பாடம் : 21
(பேரீச்சங் கீற்றினால் வேயப் பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவது
381. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட) தொழுகை விரிப்பின் மீது தொழுதுவந்தார்கள்.

382. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا. قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ.
பாடம் : 22
படுக்கை விரிப்பில் தொழுவது
அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள்.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
382. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக (விரிப் பில் படுத்து) உறங்கிக்கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் ‘சஜ்தா’ செய்யுமிடத் தில்) இருந்துகொண்டிருக்கும். அவர்கள் ‘சஜ்தா’வுக்கு வரும்போது என்னை (தமது விரலால்) தொட்டுணர்த்துவார்கள்.
உடனே நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்துவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.

383. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْىَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ، اعْتِرَاضَ الْجَنَازَةِ.
பாடம் : 22
படுக்கை விரிப்பில் தொழுவது
அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள்.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
383. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் படுத்திருக்கும்) எனது படுக்கை விரிப்பில் தொழுவார்கள். அப்போது அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே ‘ஜனாஸா’வைப் போன்று குறுக்கே நான் படுத்திருப்பேன்.

384. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى الْفِرَاشِ الَّذِي يَنَامَانِ عَلَيْهِ.
பாடம் : 22
படுக்கை விரிப்பில் தொழுவது
அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள்.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
384. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தாமும் (தம் துணைவியாரும் என் சிற்றன்னையுமான) ஆயிஷா (ரலி) அவர்களும் உறங்கும் படுக்கை விரிப்பில் (இரவில்) தொழுவார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் (அவர்கள் சஜ்தா செய்யும்) ‘கிப்லா’ திசைக்கும் இடையே குறுக்கே படுத்திருப்பார்கள்.

385. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَضَعُ أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الْحَرِّ فِي مَكَانِ السُّجُودِ.
பாடம் : 23
கடும் வெப்பத்தில் ஆடையின் (ஓரத்தின்) மீது சிரவணக்கம் செய்வது
“நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக் கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத் தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்; இரு கைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத் துக்கொள்வார்கள்” என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
385. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பகல் நேரத்தில்) தொழும்போது, எங்களில் சிலர் கடுமையான வெப்பம் காரணமாக ஆடையின் ஒரு பகுதியைச் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுமிடத்தில் வைத்துக்கொள் வார்கள்.

386. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ.
பாடம் : 24
காலணியுடன் தொழுதல்
386. சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் தம் காலணி களுடன் தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.21

387. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بَالَ ثُمَّ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ مِثْلَ هَذَا. قَالَ إِبْرَاهِيمُ فَكَانَ يُعْجِبُهُمْ، لأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ.
பாடம் : 25
காலுறைகளுடன் தொழுவது
387. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால் தடவி) தம் காலுறைகள்மீது ‘மஸ்ஹு’ செய்தார்கள். பிறகு அவர்கள் (காலுறைகளுடனேயே) எழுந்து தொழு வதை நான் கண்டேன்.
அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட் டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக் கிறேன்” என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(“காலுறைகளின் மீது ‘மஸ்ஹு’ செய்து தொழலாம்” என்ற கருத்துடைய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் உள்ளிட்ட) மக்களுக்கு, (ஜரீர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளிப்பதாய் அமைந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார்.

388. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ وَضَّأْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَصَلَّى.
பாடம் : 25
காலுறைகளுடன் தொழுவது
388. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். (அவர்கள் உளூவின் இறுதியில், கால்களைக் கழுவாமல்) தம் காலுறைகள்மீது (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்து)விட்டு (காலுறைகளுட னேயே) தொழுதார்கள்.