349. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا جِبْرِيلُ. قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ مَعِي مُحَمَّدٌ صلى الله عليه وسلم. فَقَالَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ لِجِبْرِيلَ مَنْ هَذَا قَالَ هَذَا آدَمُ. وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ الْيَمِينِ مِنْهُمْ أَهْلُ الْجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ. فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ فَفَتَحَ "". قَالَ أَنَسٌ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ وَإِدْرِيسَ وَمُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمَ ـ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ـ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ. قَالَ أَنَسٌ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم بِإِدْرِيسَ قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ. ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى. ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا عِيسَى. ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم "". قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ كَانَا يَقُولاَنِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ "". قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلاَةً. قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ. فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا. فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ. فَقَالَ هِيَ خَمْسٌ وَهْىَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ. فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ. فَقُلْتُ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي. ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ، ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ "".
பாடம் : 1 (விண்ணுலகப் பயணமான ‘மிஅராஜ்’ நடந்த) ‘இஸ்ரா’ இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?2 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், “தொழு கையை நிறைவேற்றுமாறும் உண்மையே உரைக்குமாறும் தன்மானத்தோடு வாழு மாறும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்” என்று தாம் (ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.3
349. அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார்.

பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க்கொண்டு விண்ணில் ஏறினார். முதலாவது வானத்திற்கு நான் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், ‘திறங்கள்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார். அதற்கு அவர், “யார் அது?” எனக் கேட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். அதற்கு அவர், “உங்களுடன் யாரேனும் உள்ளார்களா?” எனக் கேட்டார். அவர், “ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார் கள்” என்று பதிலளித்தார். அதற்கு அவர், “(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘ஆம்’ என்று கூறினார்.

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்தபோது, நாங்கள் அந்த வானத்தின் மேலே (இன்னும்) சென்றோம். அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார். நான் ஜிப்ரீல் அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன்.

ஜிப்ரீல் அவர்கள், “இவர்தான் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கம் இருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருக்கும் மக்கள் நரகவாசிகள். ஆகவேதான், இவர் வலப் பக்கம் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் பார்க்கும் போது (வேதனைப்பட்டு) அழுகிறார்” என்று பதிலளித்தார்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு ஏறிச் சென்றார். அதன் காவலரிடம் ‘திறங்கள்’ என்று கூறினார். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.

அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

“நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர்

(ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. எனினும், நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.4

அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்:

“என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்தான் இத்ரீஸ்” என்று பதிலளித்தார்.

பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், “நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தான் மூசா” என்று பதிலளித்தார்.

பின்னர் நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் “நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்தான் ஈசா” என்று பதிலளித்தார்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், “நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தான் இப்ராஹீம்” என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின்

முஸ்-ம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறி வந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (இன்னும்) மேலே என்னை அழைத் துச் செல்லப்பட்டது. நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, (வானவர்கள் விதிகளைப் பதிவு செய்யும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவி யுற்றேன்.

இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர்மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “உங்கள்மீது உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். நான், “(என் சமுதாயத்தார்மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன்.

அவர்கள், “அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள் ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று, “அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான்” என்று சொன்னேன். அப்போதும் அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தாரால் தாங்க முடியாது” என்று சொன்னார்கள்.

அவ்வாறே, நானும் (இறைவனிடம்) திரும்பினேன். அவன் அவற்றில் இன்னொரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் வந்தபோது, “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங் கள். இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்றார்கள். இவ் வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) “இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழு கைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது” என்று அல்லாஹ் கூறிவிட்டான்.

பின்னர் நான் மூசா (அலை) அவர்களி டம் திரும்பிச் சென்றேன். அவர்கள், “(மீண்டும்) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்றார்கள். நான், “என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று சொன்னேன்.

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) ‘சித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு நான் சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.


அத்தியாயம் : 8
350. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ "" فَرَضَ اللَّهُ الصَّلاَةَ حِينَ فَرَضَهَا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ "".
பாடம் : 1 (விண்ணுலகப் பயணமான ‘மிஅராஜ்’ நடந்த) ‘இஸ்ரா’ இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?2 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், “தொழு கையை நிறைவேற்றுமாறும் உண்மையே உரைக்குமாறும் தன்மானத்தோடு வாழு மாறும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்” என்று தாம் (ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.3
350. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மிஅராஜ் இரவில்) அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது, சொந்த ஊரில் இருந்தாலும் பயணத்தில் இருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கினான். பின்னர் பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டு இரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும் தொழுகையில் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகியவற்றில்) தலா இரண்டு ரக்அத்கள் கூடுதலாக்கப்பட்டது.5

அத்தியாயம் : 8
351. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أُمِرْنَا أَنْ نُخْرِجَ، الْحُيَّضَ يَوْمَ الْعِيدَيْنِ وَذَوَاتِ الْخُدُورِ، فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ عَنْ مُصَلاَّهُنَّ. قَالَتِ امْرَأَةٌ يَا رَسُولَ اللَّهِ، إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ. قَالَ "" لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம் : 2 ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், “ஆதமின் மக்களே! (மனிதர்களே!) நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றி லும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்” (7:31) எனும் இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும்.6 (அவ்வாறு ஒரே துணியில் தொழும் ஒருவர்) அதை ஒரு முள்ளைக் கொண்டாவது மூடிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. எனினும், இதன் அறிவிப்பாளர்தொடர் விவாதத்துக்குரியதாகும்.7 ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத் திய உறவு கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்துகொண்டு தொழலாம். நிர்வாணமாக யாரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள்.
351. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள் ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களை யும் (தொழுகைத் திடலுக்கு) புறப்படச் செய்யுமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம்.

“பெண்கள் அனைவரும் முஸ்-ம்களின் கூட்டுத் தொழுகையிலும் பிரார்த்தனை யிலும் கலந்துகொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்றப் பெண்கள் தொழும் இடத்தி-ருந்து விலகியிருக்க வேண்டும்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் என்ன செய்வது)?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்!” என்றார்கள்.8

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 8
352. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ، وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ قَالَ لَهُ قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ، وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم
பாடம் : 3 கீழாடை மட்டும் அணிந்து தொழுதால், அதைப் பிடரியில் முடிச்சுப் போட்டுக்கொள் வது9 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்கள்) சிலர், தம் கீழாடை களைத் தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர் களுடன் தொழுதனர்.
352. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் (ரலி) அவர்கள் (ஒரு முறை) ஒரே கீழாடையை அணிந்துகொண்டு, அதைத் தமது பிடரியின் பக்கமாக முடிச்சுப்போட்டுக்கொண்டவர்களாகத் தொழுதார்கள். அப்போது அவர்களின் (மற்ற) ஆடைகள் துணி மாட்டும் பலகையில் வைக்கப்பட்டிருந்தன.

அவர்களிடம் ஒருவர், “ஒரே கீழாடையிலா தொழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உம்மைப் போன்ற விவரமில்லாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன?” என்று வினவினார்கள்.


அத்தியாயம் : 8
353. حَدَّثَنَا مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ.
பாடம் : 3 கீழாடை மட்டும் அணிந்து தொழுதால், அதைப் பிடரியில் முடிச்சுப் போட்டுக்கொள் வது9 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்கள்) சிலர், தம் கீழாடை களைத் தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர் களுடன் தொழுதனர்.
353. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் பார்த்தேன். மேலும் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுவதை நான் கண்டேன்” என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 8
354. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ.
பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையைத் தோள்மீது மாற்றிப் போட்டுத் தொழுவது10 இது குறித்து முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தாம் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில் கூறியிருப்பதாவது: ஒரே ஆடையைச் சுற்றிக்கொள்பவர் என்பதற்கு ‘முத்தவஷ்ஷித்’ என்று பெயர். அதாவது கீழாடையின் இரு ஓரங்களைத் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொள்வதாகும். நபி (ஸல்) அவர்கள், ஒரே ஆடையைச் சுற்றிக்கொண்டு, தம் தோள்கள்மீது அதன் இரு ஓரங்களை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
354. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்துகொண்டு, அதன் இரு ஓரங் களையும் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள்.


அத்தியாயம் : 8
355. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ.
பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையைத் தோள்மீது மாற்றிப் போட்டுத் தொழுவது10 இது குறித்து முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தாம் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில் கூறியிருப்பதாவது: ஒரே ஆடையைச் சுற்றிக்கொள்பவர் என்பதற்கு ‘முத்தவஷ்ஷித்’ என்று பெயர். அதாவது கீழாடையின் இரு ஓரங்களைத் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொள்வதாகும். நபி (ஸல்) அவர்கள், ஒரே ஆடையைச் சுற்றிக்கொண்டு, தம் தோள்கள்மீது அதன் இரு ஓரங்களை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
355. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா

(ரலி) அவர்களின் இல்லத்தில், ஒரே ஆடையை அணிந்து அதன் இரு ஓரங் களையும் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.


அத்தியாயம் : 8
356. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ.
பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையைத் தோள்மீது மாற்றிப் போட்டுத் தொழுவது10 இது குறித்து முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தாம் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில் கூறியிருப்பதாவது: ஒரே ஆடையைச் சுற்றிக்கொள்பவர் என்பதற்கு ‘முத்தவஷ்ஷித்’ என்று பெயர். அதாவது கீழாடையின் இரு ஓரங்களைத் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொள்வதாகும். நபி (ஸல்) அவர்கள், ஒரே ஆடையைச் சுற்றிக்கொண்டு, தம் தோள்கள்மீது அதன் இரு ஓரங்களை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
356. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு சலமா (ரலி) அவர்களது இல்லத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுவதை நான் பார்த்தேன்.


அத்தியாயம் : 8
357. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ قَالَتْ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ "" مَنْ هَذِهِ "". فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ. فَقَالَ "" مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ "". فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ فُلاَنَ بْنَ هُبَيْرَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ "". قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَاكَ ضُحًى.
பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையைத் தோள்மீது மாற்றிப் போட்டுத் தொழுவது10 இது குறித்து முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தாம் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில் கூறியிருப்பதாவது: ஒரே ஆடையைச் சுற்றிக்கொள்பவர் என்பதற்கு ‘முத்தவஷ்ஷித்’ என்று பெயர். அதாவது கீழாடையின் இரு ஓரங்களைத் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொள்வதாகும். நபி (ஸல்) அவர்கள், ஒரே ஆடையைச் சுற்றிக்கொண்டு, தம் தோள்கள்மீது அதன் இரு ஓரங்களை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
357. உம்முஹானீ பின்த் அபீதா-ப்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (ஒரு துணியால்) மறைத்துக்கொண்டிருந்தார்கள்.



அப்போது அவர்களுக்கு நான் முகமன் (சலாம்) கூறினேன். (அதைக் கேட்ட) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். அதற்கு “நான் உம்மு ஹானீ பின்த் அபீதா-ப்” என்றேன். “உம்மு ஹானியே! வருக!” என்று சொன்னார்கள்.

அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை மாற்றிப் போட்டுக்கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள், அவர்கள் தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயாரின் மகன் (என் சகோதரர் அலீ,) நான் புக-டம் அளித் திருக்கும் ஒரு மனிதரை- ஹுபைராவின் மகன் இன்னாரை- தாம் கொல்லப் போவ தாகக் கூறுகிறார்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) நேரமாக இருந்தது.


அத்தியாயம் : 8
358. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ "".
பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையைத் தோள்மீது மாற்றிப் போட்டுத் தொழுவது10 இது குறித்து முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தாம் அறிவித்துள்ள ஒரு ஹதீஸில் கூறியிருப்பதாவது: ஒரே ஆடையைச் சுற்றிக்கொள்பவர் என்பதற்கு ‘முத்தவஷ்ஷித்’ என்று பெயர். அதாவது கீழாடையின் இரு ஓரங்களைத் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொள்வதாகும். நபி (ஸல்) அவர்கள், ஒரே ஆடையைச் சுற்றிக்கொண்டு, தம் தோள்கள்மீது அதன் இரு ஓரங்களை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
358. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒவ்வொரு வருக்கும் இரண்டு ஆடைகள் உண்டா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அத்தியாயம் : 8
359. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ، لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَىْءٌ "".
பாடம் : 5 ஒரே ஆடையை அணிந்து தொழும்போது, அதன் இரு ஓரங்களையும் தோள்கள்மீது போட்டுக்கொள்ள வேண்டும்.
359. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8
360. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ سَمِعْتُهُ ـ أَوْ، كُنْتُ سَأَلْتُهُ ـ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ "".
பாடம் : 5 ஒரே ஆடையை அணிந்து தொழும்போது, அதன் இரு ஓரங்களையும் தோள்கள்மீது போட்டுக்கொள்ள வேண்டும்.
360. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரே ஆடையை அணிந்துகொண்டு எவரேனும் தொழுதால், அதன் இரு ஓரங்களையும் (வலப்புற ஓரத்தை இடது தோளிலும் இடப்புற ஓரத்தை வலது தோளிலுமாக) மாற்றிப் போட்டுக் கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

அத்தியாயம் : 8
361. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، قَالَ سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الصَّلاَةِ، فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي، فَوَجَدْتُهُ يُصَلِّي وَعَلَىَّ ثَوْبٌ وَاحِدٌ، فَاشْتَمَلْتُ بِهِ وَصَلَّيْتُ إِلَى جَانِبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" مَا السُّرَى يَا جَابِرُ "". فَأَخْبَرْتُهُ بِحَاجَتِي، فَلَمَّا فَرَغْتُ قَالَ "" مَا هَذَا الاِشْتِمَالُ الَّذِي رَأَيْتُ "". قُلْتُ كَانَ ثَوْبٌ. يَعْنِي ضَاقَ. قَالَ "" فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ "".
பாடம் : 6 ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்)?
361. சயீத் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ஒரே ஆடை அணிந்துகொண்டு தொழுவது பற்றிக் கேட்டோம். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நான் அவர்களுடன் சென்றேன். ஒரு (நாள்) இரவு எனது தேவையொன்றுக்காக நான் (அவர்களிடம்) சென்றபோது நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கக் கண்டேன். அப்போது என்மீது ஒரே ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் என் உடல் முழுதும் போர்த்திக்கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுது முடித்ததும் “என்ன, இரவு நேரத்தில் வந்திருக்கிறீர், ஜாபிரே?” என்று கேட்டார்கள்.

அப்போது நான் எனது நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நான் சொல்-முடித்ததும், “என்ன இப்படி (கைகள்கூட வெளியே தெரியாமல்) போர்த்திக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். நான் ஆடை சிறியது (அதனால் இப்படிப் போர்த்தியுள்ளேன்)” என்று சொன்னேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆடை விசாலமானதாக இருந்தால், அதை (கீழேயும் தோள்மீதும்) சுற்றிக் கொள்ளுங்கள்; ஆடை சிறியதாக இருந் தால் அதை இடுப்பில் (வேட்டியாக) அணிந்துகொள்ளுங்கள்” என்று கூறி னார்கள்.


அத்தியாயம் : 8
362. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ، وَقَالَ لِلنِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا.
பாடம் : 6 ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்)?
362. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய கீழங்கியைத் தங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், “ஆண்கள் (சஜ்தாவி-ருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 8
363. حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ "" يَا مُغِيرَةُ، خُذِ الإِدَاوَةَ "". فَأَخَذْتُهَا فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تَوَارَى عَنِّي فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا، فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى.
பாடம் : 7 (இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் (சிரியா) நாட்டு நீளங்கி அணிந்து தொழுவது அக்னி ஆராதனையாளர்கள் (மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவுவதற்கு முன்பே) அணிந்து தொழுவது தவறாகாது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளின்) சிறுநீரில் நனைத்துச் சாயமேற்றப்பட்ட யமன் நாட்டு ஆடையை அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள், சலவைக்குப் போடாத (புத்தம் புதிய) ஆடை அணிந்து தொழுதார்கள்.11
363. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், “முஃகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடுங்கள்” என்றார்கள். நான் அதை எடுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து (கண்ணுக்கெட்டாத தூரம்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள்.

அப்போது அவர்கள் (இறைமறுப்பாளர் கள் நெய்த) ஷாம் (சிரியா) நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள். (அங்கத் தூய்மை செய்வதற்காக) அதன் கை பகுதியி-ருந்து தமது கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கைப் பகுதி குறுகலாக இருந்ததால் தமது கையை அதன் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள்.

நான் (அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக) அவர்க(ளின் உறுப்பு)கள்மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவுவதற்குப் பதிலாகக் கால்களில் அணிந்திருந்த) தமது காலுறைகள்மீது ஈரக் கையால் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு தொழுதார்கள்.

அத்தியாயம் : 8
364. حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، قَالَ حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْقُلُ مَعَهُمُ الْحِجَارَةَ لِلْكَعْبَةِ وَعَلَيْهِ إِزَارُهُ. فَقَالَ لَهُ الْعَبَّاسُ عَمُّهُ يَا ابْنَ أَخِي، لَوْ حَلَلْتَ إِزَارَكَ فَجَعَلْتَ عَلَى مَنْكِبَيْكَ دُونَ الْحِجَارَةِ. قَالَ فَحَلَّهُ فَجَعَلَهُ عَلَى مَنْكِبَيْهِ، فَسَقَطَ مَغْشِيًّا عَلَيْهِ، فَمَا رُئِيَ بَعْدَ ذَلِكَ عُرْيَانًا صلى الله عليه وسلم.
பாடம் : 8 தொழுகையின்போதும் மற்ற நேரங்களிலும் பிறந்த மேனி யுடன் இருக்கலாகாது.
364. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியவர்களின் காலத்தில் குறைஷி யரால் இறையில்லம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது) அவர்களுடன் (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கஅபாவிற்காகக் கற் களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டி ருந்தார்கள். அப்போது நபியவர்கள்மீது கீழங்கி (மட்டுமே) இருந்தது. அவர்களு டைய பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களிடம், “என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் கீழங்கியை அவிழ்த்துத் தோள்மீது (வைத்துள்ள) கல்லுக்குக் கீழே வைத்து (கற்களைச் சுமந்து)கொண்டு வரலாமே!” என்று கூறினார்கள்.

அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது கீழங்கியை அவிழ்த்துத் தம் தோள்கள்மீது வைத்தார்கள். உடனே மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதற்குப்பின் நபி (ஸல்) அவர்கள் (ஒருபோதும்) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.

அத்தியாயம் : 8
365. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ "" أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ "". ثُمَّ سَأَلَ رَجُلٌ عُمَرَ فَقَالَ إِذَا وَسَّعَ اللَّهُ فَأَوْسِعُوا، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ، صَلَّى رَجُلٌ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَمِيصٍ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ فِي تُبَّانٍ وَرِدَاءٍ.
பாடம் : 9 (முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, வெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து தொழுவது
365. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, ஓரே ஆடையை அணிந்துகொண்டு தொழுவது பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்துள்ளனரா?” என்று கேட்டார்கள்.

பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தில் இது பற்றிக்) கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு (ஆடைகளைத்) தாராளமாக வழங்கியிருந்தால் நீங்களும் தாராளமாக அணிந்துகொள்ளுங்கள். (அதாவது:)

- ஒருவர் தம் ஆடை (வகை)கள் அனைத்தையும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் கீழங்கியும் மேல் துண்டும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் கீழங்கியும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் கீழங்கியும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் மேல்துண்டும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் அரைக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழலாம்;

- மற்றொருவர் அரைக்கால் சட்டையும் (முழு நீளச்) சட்டையும் அணிந்து தொழலாம்;

(இறுதியாக) உமர் (ரலி) அவர்கள் “அரைக்கால் சட்டையும் (விசாலமான) மேல்துண்டும் அணிந்து தொழலாம்” என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்.12


அத்தியாயம் : 8
366. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ "" لاَ يَلْبَسُ الْقَمِيصَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ ثَوْبًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلاَ وَرْسٌ، فَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ "". وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 9 (முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, வெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து தொழுவது
366. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கி அணியமாட்டார்; குங்குமப் பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணியமாட்டார். (காலுறைகள் அணியமாட்டார்.) காலணிகள் கிடைக்காதவர், காலுறைகள் அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்கு கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.13

இதை சாலிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 8
367. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ.
பாடம் : 10 (உடலில்) அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்
367. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடு வதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பை மறைக்காமல் ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு (குத்துக்காலிட்டு) அமர்வதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 8
368. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعَتَيْنِ عَنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ.
பாடம் : 10 (உடலில்) அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்
368. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘-மாஸ்’ (முலாமஸா), ‘நபாத்’ (முனாபஃதா) எனும் இரு வியாபார முறைகளுக்குத் தடை விதித்தார்கள். மேலும், ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள்.14


அத்தியாயம் : 8