3489. حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ الْكَاهِلِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسِ، رضى الله عنهما. {وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ} قَالَ الشُّعُوبُ الْقَبَائِلُ الْعِظَامُ، وَالْقَبَائِلُ الْبُطُونُ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3489. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்' (49:13) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள “ஷுஊப்' (சமூகங்கள்) என்னும் சொல் பெரிய இனங்களையும் “கபாயில்' (குலங்கள்) எனும் சொல், அந்த இனங் களில் உள்ள உட்பிரிவுகளையும் குறிக் கும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.2

அத்தியாயம் : 61
3490. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ "" أَتْقَاهُمْ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ "".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3490. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே” என்று பதிலளித் தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை” என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படி யென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் (அலை) அவர்கள்தான் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்)” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் : 61
3491. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا كُلَيْبُ بْنُ وَائِلٍ، قَالَ حَدَّثَتْنِي رَبِيبَةُ النَّبِيِّ، صلى الله عليه وسلم زَيْنَبُ ابْنَةُ أَبِي سَلَمَةَ قَالَ قُلْتُ لَهَا أَرَأَيْتِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَانَ مِنْ مُضَرَ قَالَتْ فَمِمَّنْ كَانَ إِلاَّ مِنْ مُضَرَ مِنْ بَنِي النَّضْرِ بْنِ كِنَانَةَ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3491. குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம் நான், “நபி (ஸல்) அவர்கள் “முளர்' குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்ட தற்கு, “முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் பின் கினானாவின் சந்ததி களில் ஒருவர் ஆவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 61
3492. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا كُلَيْبٌ، حَدَّثَتْنِي رَبِيبَةُ النَّبِيِّ، صلى الله عليه وسلم وَأَظُنُّهَا زَيْنَبَ قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُقَيَّرِ وَالْمُزَفَّتِ. وَقُلْتُ لَهَا أَخْبِرِينِي النَّبِيُّ صلى الله عليه وسلم مِمَّنْ كَانَ مِنْ مُضَرَ كَانَ قَالَتْ فَمِمَّنْ كَانَ إِلاَّ مِنْ مُضَرَ، كَانَ مِنْ وَلَدِ النَّضْرِ بْنِ كِنَانَةَ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3492. குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள்- அவர்கள் ஸைனப் (ரலி) அவர்கள் என்று எண்ணுகிறேன்- எனக்கு அறிவித் தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப் பட்ட பாத்திரங்களையும் (பயன்படுத்த வேண்டாமென்று) தடை விதித்தார்கள்.

நான் அவரிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகத் தானே இருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் பின் கினானாவின் சந்ததிகளில் ஒருவர் ஆவார்கள்” என்று சொன்னார்கள்.4

அத்தியாயம் : 61
3493. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا، وَتَجِدُونَ خَيْرَ النَّاسِ فِي هَذَا الشَّأْنِ أَشَدَّهُمْ لَهُ كَرَاهِيَةً ".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3493. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களை நீங்கள் மூலகங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்தபின்பும் சிறந்தவர் களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள்தான்.5

அத்தியாயம் : 61
3494. " وَتَجِدُونَ شَرَّ النَّاسِ ذَا الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ، وَيَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ "
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3494. மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற் றொரு முகத்துடனும் செல்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3495. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْنِ، مُسْلِمُهُمْ تَبَعٌ لِمُسْلِمِهِمْ، وَكَافِرُهُمْ تَبَعٌ لِكَافِرِهِمْ "". ""وَالنَّاسُ مَعَادِنُ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا، تَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ أَشَدَّ النَّاسِ كَرَاهِيَةً لِهَذَا الشَّأْنِ حَتَّى يَقَعَ فِيهِ.""
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3495. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதி காரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்óமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் உள்ள இறை மறுப்பாளர் குறைஷியரில் உள்ள இறைமறுப்பாளரைப் பின்பற்றுபவர் ஆவார்.6

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3496. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْنِ، مُسْلِمُهُمْ تَبَعٌ لِمُسْلِمِهِمْ، وَكَافِرُهُمْ تَبَعٌ لِكَافِرِهِمْ "". ""وَالنَّاسُ مَعَادِنُ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا، تَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ أَشَدَّ النَّاسِ كَرَاهِيَةً لِهَذَا الشَّأْنِ حَتَّى يَقَعَ فِيهِ.""
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3496. மக்கள் மூலகங்கள் ஆவர்.அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறு வழியின்றிச்) சிக்கிக்கொள்ளும்வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண் பீர்கள்.7

அத்தியாயம் : 61
3497. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما – {إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى} قَالَ فَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ قُرْبَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم. فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ بَطْنٌ مِنْ قُرَيْشٍ إِلاَّ وَلَهُ فِيهِ قَرَابَةٌ، فَنَزَلَتْ عَلَيْهِ إِلاَّ أَنْ تَصِلُوا قَرَابَةً بَيْنِي وَبَيْنَكُمْ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3497. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்த ஊதியத்தையும் நான் கேட்கவில்லை. ஆயினும், உறவுமுறையை நீங்கள் பேணி நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனும் (42:23) இறைவசனம் குறித்து (இதன் கருத்து என்ன என்று) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இதன் பொருள், “ஆயினும் என் உறவினர்களிடம் நீங்கள் அன்பு பாராட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்பதாகும்” என்று பதிலளித்தார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைஷியரின் எந்தக் கிளைக் குலத்திற்கும் நபி (ஸல்) அவர்களுடன் உறவுமுறை இல்லாமல் இருந்ததில்லை. ஆகவே, “(குறைந்தபட்சம்) எனக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த உறவு முறையையாவது பேணி நடக்கும்படி உங்களைக் கேட்கிறேன்” என்னும் பொருளில்தான் இந்த இறைவசனம் அருளப்பெற்றது” என்று பதிலளித் தார்கள்.8

அத்தியாயம் : 61
3498. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مِنْ هَا هُنَا جَاءَتِ الْفِتَنُ نَحْوَ الْمَشْرِقِ، وَالْجَفَاءُ وَغِلَظُ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، وَالْبَقَرِ فِي رَبِيعَةَ وَمُضَرَ "".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3498. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இங்கிருந்துதான்-கிழக்கு திசையிலிருந்துதான்-குழப்பங்கள் தோன்றும். ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் (தங்கள் உலக வேலைகளில் மூழ்கியுள்ள) “ரபீஆ' மற்றும் “முளர்' ஆகிய குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையேதான் கல்மனமும் கடின சித்தமும் காணப்படும்.9

இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3499. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" الْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ، وَالإِيمَانُ يَمَانٍ، وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ "". سُمِّيَتِ الْيَمَنَ لأَنَّهَا عَنْ يَمِينِ الْكَعْبَةِ، وَالشَّأْمَ عَنْ يَسَارِ الْكَعْبَةِ، وَالْمَشْأَمَةُ الْمَيْسَرَةُ، وَالْيَدُ الْيُسْرَى الشُّؤْمَى، وَالْجَانِبُ الأَيْسَرُ الأَشْأَمُ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்ட வர்தான். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: எவனை முன்னிறுத்தி நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான். (4:1) அறியாமைக் கால வாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு (49:13ஆவது வசனத்தில்) “சமூகங்கள்' என்பதைக் குறிக்க “ஷுஊப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தூரத்து உறவினர்களைக் குறிக்கும். “குலங்கள்' என்பதைக் குறிக்க “கபாயில்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும்.
3499. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்த தாகும்.10

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

“யமன்' நாடு கஅபாவுக்கு வலப் பக்கம் அமைந்திருப்பதால்தான் அதற்கு “யமன்' என்று பெயரிடப்பட்டது. “ஷாம்' (சிரியா) நாடு கஅபாவின் இடப் பக்கம் அமைந் துள்ளது. “மஷ்அமா' என்பதற்கு “மய்ஸரா' (இடது) என்பது பொருள். இடக் கரத்திற்கு “ஷுஃமா' என்பர். இடப் பக்கத்திற்கு “அல்அஷ்அம்' என்பர்.11

அத்தியாயம் : 61
3500. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ يُحَدِّثُ أَنَّهُ بَلَغَ مُعَاوِيَةَ وَهْوَ عِنْدَهُ فِي وَفْدٍ مِنْ قُرَيْشٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يُحَدِّثُ أَنَّهُ سَيَكُونُ مَلِكٌ مِنْ قَحْطَانَ، فَغَضِبَ مُعَاوِيَةُ، فَقَامَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّهُ بَلَغَنِي أَنَّ رِجَالاً مِنْكُمْ يَتَحَدَّثُونَ أَحَادِيثَ لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، وَلاَ تُؤْثَرُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَأُولَئِكَ جُهَّالُكُمْ، فَإِيَّاكُمْ وَالأَمَانِيَّ الَّتِي تُضِلُّ أَهْلَهَا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ هَذَا الأَمْرَ فِي قُرَيْشٍ، لاَ يُعَادِيهِمْ أَحَدٌ إِلاَّ كَبَّهُ اللَّهُ عَلَى وَجْهِهِ، مَا أَقَامُوا الدِّينَ "".
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3500. முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களிடம் குறைஷியரின் ஒரு தூதுக் குழுவில் ஒருவராக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “கஹ்த்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்” என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது.13

அப்போது முஆவியா (ரலி) அவர்கள் கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு பின்னர், “இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன்: உங்களில் சிலர், அல்லாஹ் வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக் கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக் குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். தீய வழியில் செலுத்துகின்ற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கின்றேன்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம்தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப்) பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டிவரும்வரை இந்நிலை நீடிக்கும்' என்று கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள்.14

அத்தியாயம் : 61
3501. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لا يَزَالُ هَذَا الأَمْرُ فِي قُرَيْشٍ، مَا بَقِيَ مِنْهُمُ اثْنَانِ "".
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3501. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும்வரை.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3502. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ،، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطَيْتَ بَنِي الْمُطَّلِبِ وَتَرَكْتَنَا، وَإِنَّمَا نَحْنُ وَهُمْ مِنْكَ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَىْءٌ وَاحِدٌ "".
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3502. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நடந்து (நபி (ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களை விட்டுவிட்டீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில்தானே இருக்கின்றோம்” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனுல் முத்தலிபும்(முத்தலிப் கிளையாரும்) ஒருவர்தான் (வெவ்வேறானவர்கள் அல்லர்)” என்று பதிலளித்தார்கள்.15

அத்தியாயம் : 61
3503. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، مُحَمَّدٌ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ ذَهَبَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَعَ أُنَاسٍ مِنْ بَنِي زُهْرَةَ إِلَى عَائِشَةَ، وَكَانَتْ أَرَقَّ شَىْءٍ لِقَرَابَتِهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3503. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த உறவு முறையின் காரணத்தால் அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்வார்கள்.16

அத்தியாயம் : 61
3504. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدٍ، ح قَالَ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُرَيْشٌ وَالأَنْصَارُ وَجُهَيْنَةُ وَمُزَيْنَةُ وَأَسْلَمُ وَأَشْجَعُ وَغِفَارُ مَوَالِيَّ لَيْسَ لَهُمْ مَوْلًى، دُونَ اللَّهِ وَرَسُولِهِ "".
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3504. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷிகளும் அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை.17

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 61
3505. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ أَحَبَّ الْبَشَرِ إِلَى عَائِشَةَ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ، وَكَانَ أَبَرَّ النَّاسِ بِهَا، وَكَانَتْ لاَ تُمْسِكُ شَيْئًا مِمَّا جَاءَهَا مِنْ رِزْقِ اللَّهِ {إِلاَّ} تَصَدَّقَتْ. فَقَالَ ابْنُ الزُّبَيْرِ يَنْبَغِي أَنْ يُؤْخَذَ عَلَى يَدَيْهَا. فَقَالَتْ أَيُؤْخَذُ عَلَى يَدَىَّ عَلَىَّ نَذْرٌ إِنْ كَلَّمْتُهُ. فَاسْتَشْفَعَ إِلَيْهَا بِرِجَالٍ مِنْ قُرَيْشٍ، وَبِأَخْوَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاصَّةً فَامْتَنَعَتْ، فَقَالَ لَهُ الزُّهْرِيُّونَ أَخْوَالُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ وَالْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ إِذَا اسْتَأْذَنَّا فَاقْتَحِمِ الْحِجَابَ. فَفَعَلَ، فَأَرْسَلَ إِلَيْهَا بِعَشْرِ رِقَابٍ، فَأَعْتَقَتْهُمْ، ثُمَّ لَمْ تَزَلْ تُعْتِقُهُمْ حَتَّى بَلَغَتْ أَرْبَعِينَ. فَقَالَتْ وَدِدْتُ أَنِّي جَعَلْتُ حِينَ حَلَفْتُ عَمَلاً أَعْمَلُهُ فَأَفْرُغَ مِنْهُ.
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3505. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) மீது எல்லா மனிதர்களைவிடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நன்மை புரியக்கூடியவராக அப்துல்லாஹ் (ரலி) இருந்தார். ஆயிஷா (ரலி) அவர்கள், தம்மிடம் வருகின்ற அல்லாஹ்வின் கொடை எதையும் தம்மிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்துவிடுவது வழக்கம். ஆகவே, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக்கொள்வது அவசியம்” என்று கூறினார்கள்.18

அதனால் அவர்கள் (கோபமுற்று), “(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக்கொள்வதா? (நான் இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், (ஆயிஷா (ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்காகப் பரிந்துரை செய்யும்படி குறைஷியர் சிலரையும் குறிப்பாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தாய்மாமன்மார்களையும் கேட்டுக்கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா (ரலி) அவர்கள் பேச மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா உள்ளிட்ட நபி (ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், “நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக்கொண்டி ருக்கும்போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் செய்தார் கள். பிறகு (ஆயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக்கொண்டு பேசிவிட்டார்கள். அவர் களின் சத்தியம் முறிந்துபோனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பிவைத்தார்கள். அவர்களை ஆயிஷா (ரலி) அவர்கள் விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும்வரை அடிமைகளை விடுதலை செய்துகொண்டேயிருந்தார்கள்.

இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்தபோதே, “என் சத்தியம் முறிந்துபோனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்' என்று முடிவு செய்துவிட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிóருந்து விடுபட்டிருப்பேன். (“இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது”) என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 61
3506. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ عُثْمَانَ، دَعَا زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ، وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ، فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ. فَفَعَلُوا ذَلِكَ.
பாடம் : 3 குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படி அருளப்பட்டிருப்பது
3506. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத் தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரி யான ஸைத் பின் ஸாபித் (ரலி) தவிர உள்ள) குஹைஷியரின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், “நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் மொழி வழக்கி லேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில் தான் அருளப்பெற்றது” என்று சொன்னார் கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.

அத்தியாயம் : 61
3507. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، حَدَّثَنَا سَلَمَةُ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَوْمٍ مِنْ أَسْلَمَ، يَتَنَاضَلُونَ بِالسُّوقِ، فَقَالَ "" ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ "". لأَحَدِ الْفَرِيقَيْنِ، فَأَمْسَكُوا بِأَيْدِيهِمْ فَقَالَ "" مَا لَهُمْ "". قَالُوا وَكَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَ بَنِي فُلاَنٍ. قَالَ "" ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ "".
பாடம் : 4 யமன் நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து “குஸாஆ' குலத்தைச் சேர்ந்த அஸ்லம் பின் அஃப்ஸா பின் ஹாரிஸா பின் அம்ர் பின் ஆமிர் அவர்களும் யமன் நாட்டைச் சேர்ந்தவர்தான்.19
3507. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெய்து (விளையாடிக்)கொண்டிருக்கை யில் (அவ்வழியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங் கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்ப வராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள்.

“நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று இரு தரப்பாரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பார் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்க, அவர்கள், “நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(தொடர்ந்து) அம்பெய்யுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.20

அத்தியாயம் : 61
3508. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهْوَ يَعْلَمُهُ إِلاَّ كَفَرَ، وَمَنِ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 5
3508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தம் தந்தையல்ல என்று) விவரம் அறிந்துகொண்டே “அவர்தான் என் தந்தை” என்று கூறும் ஒரு மனிதர் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவராகி விடுகிறார். தமக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தாம், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன்தான் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்பவர், தம் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61