3469. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ مِنْهُمْ، فَإِنَّهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ "".
பாடம் : 54
3469. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயங் களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவரேனும் எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின், அது உமர் பின் அல்கத்தாப் அவர்கள்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3470. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ، فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لاَ. فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا. فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا، فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ الْعَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي. وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي. وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا. فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبُ بِشِبْرٍ، فَغُفِرَ لَهُ "".
பாடம் : 54
3470. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இருந் தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர் களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்த படி, ‘‘(எனக்குப்) பாவமன்னிப்புக் கிடைக் குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார்.

பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், ‘‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவி யது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார்.

அப்போது இறையருளைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக்கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, ‘‘நீ தூரப் போ!” என்று (அவர் வசித்துவந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, ‘‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான்.

(அவ்வாறே கணக்கெடுத்தபோது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்துவந்த ஊரைவிட ஒரே) ஒரு சாண் அளவுக்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3471. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ "" بَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً إِذْ رَكِبَهَا فَضَرَبَهَا فَقَالَتْ إِنَّا لَمْ نُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْنَا لِلْحَرْثِ "". فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللَّهِ بَقَرَةٌ تَكَلَّمُ. فَقَالَ "" فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ـ وَمَا هُمَا ثَمَّ ـ وَبَيْنَمَا رَجُلٌ فِي غَنَمِهِ إِذْ عَدَا الذِّئْبُ فَذَهَبَ مِنْهَا بِشَاةٍ، فَطَلَبَ حَتَّى كَأَنَّهُ اسْتَنْقَذَهَا مِنْهُ، فَقَالَ لَهُ الذِّئْبُ هَذَا اسْتَنْقَذْتَهَا مِنِّي فَمَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لاَ رَاعِيَ لَهَا غَيْرِي "". فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللَّهِ ذِئْبٌ يَتَكَلَّمُ. قَالَ "" فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ "". وَمَا هُمَا ثَمَّ. وَحَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ.
பாடம் : 54
3471. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘‘(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி னார். பிறகு அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தை) உழுவதற்காகத்தான்” என்று கூறியது எனச் சொன்னார்கள்.

மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்துபோய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை.

தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக்கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள்) புகுந்து ஆட்டை(த் தாக்கிக் கவ்வி)க்கொண்டு சென்றுவிட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். அப்போது அந்த ஓநாய் அவரைப் பார்த்து, யிஏய்! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது” எனச் சொன்னார்கள்.

அப்போதும் மக்கள், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்க வில்லை.138

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3472. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ، فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ، وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ. وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا، فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلاَمٌ. وَقَالَ الآخَرُ لِي جَارِيَةٌ. قَالَ أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ، وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ، وَتَصَدَّقَا "".
பாடம் : 54
3472. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருடைய அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கி னார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார்.

நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது)” என்று கூறினார்.

(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ‘‘எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ‘‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழி யுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3473. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَعَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ، أُسَامَةَ بْنَ زَيْدٍ مَاذَا سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الطَّاعُونِ فَقَالَ أُسَامَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الطَّاعُونُ رِجْسٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ "". قَالَ أَبُو النَّضْرِ "" لاَ يُخْرِجُكُمْ إِلاَّ فِرَارًا مِنْهُ "".
பாடம் : 54
3473. ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு உசாமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிகொள்ளை நோய் என்பது இஸ்ரவேலர் களின் ஒரு கூட்டத்தார்மீது லிஅல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீதுலி (அவர்களுடைய அட்டூழியங்கள் அதி கரித்தபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள் எனப் பதிலளித்தார்கள்.

அபுந்நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது.

(வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.)


அத்தியாயம் : 60
3474. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَنِي "" أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلاَّ كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ "".
பாடம் : 54
3474. நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘அது, தான் நாடியவர்கள்மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்குக் கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள்.

மேலும், ‘‘கொள்ளைநோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவரேனும் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும், அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தமது ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 60
3475. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ قُرَيْشًا، أَهَمَّهُمْ شَأْنُ الْمَرْأَةِ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالَ وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ "". ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ "" إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ ابْنَةَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا "".
பாடம் : 54
3475. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின்போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல்அஸ்வத்) திருடிவிட்டார். அவர் விஷயமாக குறைஷியர் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘‘அவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். அவர்களில் சிலர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?” என்று கூறினர். (உசாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ள, அவ்வாறே) உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவர் விஷயமாகப்) பேசினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்?” என்று (கோபத்து டன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரை யில்), ‘‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 60
3476. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ النَّزَّالَ بْنَ سَبْرَةَ الْهِلاَلِيَّ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَجُلاً، قَرَأَ، وَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ خِلاَفَهَا فَجِئْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ وَقَالَ "" كِلاَكُمَا مُحْسِنٌ، وَلاَ تَخْتَلِفُوا، فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمُ اخْتَلَفُوا فَهَلَكُوا "".
பாடம் : 54
3476. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். ஆகவே, அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன்.

அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்துபோனார்கள்” என்று சொன்னார்கள்.139


அத்தியாயம் : 60
3477. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ عَبْدُ اللَّهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، وَهْوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَيَقُولُ "" اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ "".
பாடம் : 54
3477. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக்கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. ‘‘அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத் தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, யிஇறைவா! என் சமுதாயத் தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 60
3478. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الْغَافِرِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ رَجُلاً كَانَ قَبْلَكُمْ رَغَسَهُ اللَّهُ مَالاً فَقَالَ لِبَنِيهِ لَمَّا حُضِرَ أَىَّ أَبٍ كُنْتُ لَكُمْ قَالُوا خَيْرَ أَبٍ. قَالَ فَإِنِّي لَمْ أَعْمَلْ خَيْرًا قَطُّ، فَإِذَا مُتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي ثُمَّ ذَرُّونِي فِي يَوْمٍ عَاصِفٍ. فَفَعَلُوا، فَجَمَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَقَالَ مَا حَمَلَكَ قَالَ مَخَافَتُكَ. فَتَلَقَّاهُ بِرَحْمَتِهِ "". وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 54
3478. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களுக்குமுன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது தம் மகன்களிடம், ‘‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தை யாக இருந்தேன்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. ஆகவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப்பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

அவரை (அவரது உடல் அணுக்களை) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒன்றுதிரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘‘இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘உன்(மீது எனக்குள்ள) அச்சம்தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)” என்று சொன்னார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3479. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، قَالَ قَالَ عُقْبَةُ لِحُذَيْفَةَ أَلاَ تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ سَمِعْتُهُ يَقُولُ "" إِنَّ رَجُلاً حَضَرَهُ الْمَوْتُ، لَمَّا أَيِسَ مِنَ الْحَيَاةِ، أَوْصَى أَهْلَهُ إِذَا مُتُّ فَاجْمَعُوا لِي حَطَبًا كَثِيرًا، ثُمَّ أَوْرُوا نَارًا حَتَّى إِذَا أَكَلَتْ لَحْمِي، وَخَلَصَتْ إِلَى عَظْمِي، فَخُذُوهَا فَاطْحَنُوهَا، فَذَرُّونِي فِي الْيَمِّ فِي يَوْمٍ حَارٍّ أَوْ رَاحٍ. فَجَمَعَهُ اللَّهُ، فَقَالَ لِمَ فَعَلْتَ قَالَ خَشْيَتَكَ. فَغَفَرَ لَهُ "". قَالَ عُقْبَةُ وَأَنَا سَمِعْتُهُ يَقُولُ. حَدَّثَنَا مُوسَى حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ وَقَالَ "" فِي يَوْمٍ رَاحٍ "".
பாடம் : 54
3479. ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன்:

‘‘(மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்றுவந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்தபோது தம் குடும்பத்தாரிடம் தமது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். யிநான் இறந்துவிட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீ மூட்டிவிடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்துவிட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில் லிஅல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில்லி என்னைக் கடலில் தூவிவிடுங்கள்” என்று சொன்னார்.

(அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரது அணுக்களை) ஒன்றுதிரட்டி, (முழு உருவையளித்து), ‘‘ஏன் (இவ்வாறு) செய்தாய்?” என்று கேட்டான். அவர், ‘‘உன் அச்சத்தால்தான்” என்று சொன்னார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித்தான்.140

வேறொரு அறிவிப்பில், உக்பா (ரலி) அவர்கள், ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்...” என்று சொன்னார்கள். அதில் ‘‘காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில்” என்னும் வாசகம் (மட்டுமே) இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 60
3480. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهُ أَنْ يَتَجَاوَزَ عَنَّا. قَالَ فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ "".
பாடம் : 54
3480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக் குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தம் (அலுவலரான) வாலிபரிடம், ‘‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரை) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் நம்மை மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார்.

அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட் டான்.141

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3481. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَانَ رَجُلٌ يُسْرِفُ عَلَى نَفْسِهِ، فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ قَالَ لِبَنِيهِ إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اطْحَنُونِي ثُمَّ ذَرُّونِي فِي الرِّيحِ، فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ عَلَىَّ رَبِّي لَيُعَذِّبَنِّي عَذَابًا مَا عَذَّبَهُ أَحَدًا. فَلَمَّا مَاتَ فُعِلَ بِهِ ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الأَرْضَ، فَقَالَ اجْمَعِي مَا فِيكِ مِنْهُ. فَفَعَلَتْ فَإِذَا هُوَ قَائِمٌ، فَقَالَ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ يَا رَبِّ، خَشْيَتُكَ. فَغَفَرَ لَهُ "". وَقَالَ غَيْرُهُ "" مَخَافَتُكَ يَا رَبِّ "".
பாடம் : 54
3481. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதர், எல்லை மீறி (தீய செயல் புரிந்து)வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தம் மகன்களை அழைத்து, ‘‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவிவிடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்” என்று கூறினார்.

அவர் இறந்தபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே உயர்ந்தோன் அல்லாஹ், பூமியை நோக்கி, ‘‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்றுசேர்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்ற போது அல்லாஹ், ‘‘நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘என் இறைவா! உன் அச்சம்தான் இப்படிச் செய்யும்படி என் னைத் தூண்டியது” என்று பதிலளித்தார். ஆகவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப் பளித்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3482. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ سَقَتْهَا إِذْ حَبَسَتْهَا، وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ "".
பாடம் : 54
3482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழுபூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.142


அத்தியாயம் : 60
3483. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، عُقْبَةُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحِي فَافْعَلْ مَا شِئْتَ "".
பாடம் : 54
3483. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.

இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3484. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ "".
பாடம் : 54
3484. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து பெற்ற (அறிவுரைகளில்) ஒன்றுதான், ‘‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.143

இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3485. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ ابْنَ عُمَرَ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنَ الْخُيَلاَءِ خُسِفَ بِهِ، فَهْوَ يَتَجَلْجَلُ فِي الأَرْضِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "". تَابَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 54
3485. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத் துக்கொண்டே நடந்தபொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3486. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ كُلُّ أُمَّةٍ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ، فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا، فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى ".
பாடம் : 54
3486. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(உலகில்) இறுதிச் சமுதாயமான நாம்தான் மறுமையில் (தகுதியிலும் சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.144

ஆகவே, நாளை (சனிக்கிழமை) யூதர் களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக் குரியதும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3487. عَلَى كُلِّ مُسْلِمٍ فِى كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمٌ يَغْسِلُ رَأْسَهُ وَجَسَدَهُ
பாடம் : 54
3487. ஒவ்வொரு ஏழு நாளிலும் தம் தலையையும் உடலையும் கழுவுகின்ற ஒருநாள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.145


அத்தியாயம் : 60
3488. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ قَدِمَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ الْمَدِينَةَ آخِرَ قَدْمَةٍ قَدِمَهَا، فَخَطَبَنَا فَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ فَقَالَ مَا كُنْتُ أُرَى أَنَّ أَحَدًا يَفْعَلُ هَذَا غَيْرَ الْيَهُودِ، وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَمَّاهُ الزُّورَ ـ يَعْنِي الْوِصَالَ فِي الشَّعَرِ. تَابَعَهُ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ.
பாடம் : 54
3488. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வருகை தந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றியபடி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘‘இதை (போலி முடி வைத்துக்கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் இதை யிபொய்யானது’ என்று சொன்னார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 60