3306. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِلْوَزَغِ الْفُوَيْسِقُ. وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ. وَزَعَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِهِ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3306. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘பல்லி தீங்கிழைக் கக்கூடியது (அல்ஃபுவைசிக்)” என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கருதிக்கொண்டிருக் கிறார்கள்.109


அத்தியாயம் : 59
3307. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أُمَّ شَرِيكٍ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3307. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லுமாறு தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.


அத்தியாயம் : 59
3308. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، فَإِنَّهُ يَلْتَمِسُ الْبَصَرَ، وَيُصِيبُ الْحَبَلَ "". تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ أَبَا أُسَامَةَ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3308. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதுகில் இரண்டு வெள்ளைக் கோடு கள் உள்ள (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.110

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3309. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ،، قَالَتْ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَتْلِ الأَبْتَرِ وَقَالَ "" إِنَّهُ يُصِيبُ الْبَصَرَ، وَيُذْهِبُ الْحَبَلَ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குட்டைவால் பாம்பைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். மேலும், ‘‘அது கண் பார்வையைப் பறித்துவிடும்; கருவைச் சிதைத்துவிடும்” என்று கூறினார்கள்.111


அத்தியாயம் : 59
3310. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ أَبِي يُونُسَ الْقُشَيْرِيِّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ ثُمَّ نَهَى قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم هَدَمَ حَائِطًا لَهُ، فَوَجَدَ فِيهِ سِلْخَ حَيَّةٍ فَقَالَ " انْظُرُوا أَيْنَ هُوَ ". فَنَظَرُوا فَقَالَ " اقْتُلُوهُ ". فَكُنْتُ أَقْتُلُهَا لِذَلِكَ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3310. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பாம்புகளைக் கொன்றுவந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன்னார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை இடித்தார்கள். பாம்புச் சட்டையொன்றை அதில் கண்டார்கள். அப்போது ‘‘அந்தப் பாம்பு எங்கேயிருக் கிறது என்று பாருங்கள்” என்று உத்தர விட்டார்கள். மக்கள் (தேடிப்பார்த்து அதைக்) கண்டுபிடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொன்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அதனால்தான் நான் அவற்றைக் கொன்றுவந்தேன்.


அத்தியாயம் : 59
3311. فَلَقِيتُ أَبَا لُبَابَةَ فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقْتُلُوا الْجِنَّانَ، إِلاَّ كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الْوَلَدَ، وَيُذْهِبُ الْبَصَرَ، فَاقْتُلُوهُ ".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3311. (தொடர்ந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

(இந்த நிலையில்) அபூலுபாபா (ரலி) அவர்களை நான் சந்தித்தேன். அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், (வீட்டிலுள்ள மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்லாதீர்கள்;112 குட்டைவால் உள்ள, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர. ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தை யைச் சிதைத்துவிடும்; பார்வையைப் பறித்துவிடும். ஆகவே, அவற்றைக் கொன்று விடுங்கள்” எனக் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்.113


அத்தியாயம் : 59
3312. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3312. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் பாம்பு களைக் கொன்றுவந்தார்கள்.


அத்தியாயம் : 59
3313. . فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3313. (தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

அப்போது அபூலுபாபா (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்” என்று தெரிவித்தார்கள். ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

அத்தியாயம் : 59
3314. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عَنْهَا ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْحُدَيَّا، وَالْغُرَابُ، وَالْكَلْبُ الْعَقُورُ "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3314. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங் கள் புனித (ஹரம்) எல்லையிலும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், பருந்து, (நீர்க்) காகம், வெறி நாய்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114


அத்தியாயம் : 59
3315. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ مِنَ الدَّوَابِّ مَنْ قَتَلَهُنَّ وَهْوَ مُحْرِمٌ فَلاَ جُنَاحَ عَلَيْهِ الْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ، وَالْغُرَابُ، وَالْحِدَأَةُ "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3315. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றை (ஹஜ் அல்லது உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டிய ஒருவர் கொன்றுவிட் டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. தேள், எலி, வெறிநாய், (நீர்க்) காகம், பருந்து ஆகியவைதான் அவை.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115


அத்தியாயம் : 59
3316. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ رَفَعَهُ قَالَ "" خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ "". قَالَ ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ عَنْ عَطَاءٍ فَإِنَّ لِلشَّيَاطِينِ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3316. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்துவையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். மாலையில் உங்கள் குழந்தை களை (வெளியே செல்ல விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்வதும் (பொருள்களையும் குழந்தைகளையும்) பறிப்பதும் நடக்கும்.

தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கி ழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச்சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்து. அவற்றில் சிலவற்றில் (யிஜின்கள்’ என்பதற்குப் பதிலாக) யிஷைத்தான்கள்’ என இடம்பெற் றுள்ளது.


அத்தியாயம் : 59
3317. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَارٍ فَنَزَلَتْ {وَالْمُرْسَلاَتِ عُرْفًا} فَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، إِذْ خَرَجَتْ حَيَّةٌ مِنْ جُحْرِهَا فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا "". وَعَنْ إِسْرَائِيلَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ قَالَ وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ رَطْبَةً. وَتَابَعَهُ أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ. وَقَالَ حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3317. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, யிவல்முர்சலாத்தி உர்ஃபன்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படு கின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கி லிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.117

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில், ‘‘அதை நாங்கள் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்” என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 59
3318. حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خِشَاشِ الأَرْضِ "". قَالَ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3318. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவு மில்லை; பூமியிலுள்ள புழுபூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழி யாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியாயம் : 59
3319. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது.

அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல் லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத் தையே எரிக்கலாமா?)” என்று யிவஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.119

அத்தியாயம் : 59
3320. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عُتْبَةُ بْنُ مُسْلِمٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன் றில் நிவாரணமும் இருக்கிறது.120

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3321. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، وَابْنِ، سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" غُفِرَ لاِمْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ الْمَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முகத்திரையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். (ஆகவே, அது பிழைத்துக் கொண்டது.) ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ)மன்னிப்பு வழங்கப் பட்டது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3322. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْتُهُ مِنَ الزُّهْرِيِّ كَمَا أَنَّكَ هَا هُنَا أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهم ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3322. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.121

இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3323. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ.
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3323. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொல்லை தரும்) நாய்களைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்.


அத்தியாயம் : 59
3324. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَمْسَكَ كَلْبًا يَنْقُصْ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ، إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ كَلْبَ مَاشِيَةٍ "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3324. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவு குறைந்துவிடுகிறது; விவசாயப் பண்ணை யைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடை களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122


அத்தியாயம் : 59
3325. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، قَالَ أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ الشَّنَئِيَّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ "". فَقَالَ السَّائِبُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِيْ وَرَبِّ هَذِهِ الْقِبْلَةِ.
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3325. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் எவர் (தேவையின்றி) நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல் களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக் குக் குறைந்துவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.

நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; இந்த கிப்லா (இறையில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.123

அத்தியாயம் : 59