3011. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا صَالِحُ بْنُ حَىٍّ أَبُو حَسَنٍ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" ثَلاَثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ الرَّجُلُ تَكُونُ لَهُ الأَمَةُ فَيُعَلِّمُهَا فَيُحْسِنُ تَعْلِيمَهَا، وَيُؤَدِّبُهَا فَيُحْسِنُ أَدَبَهَا، ثُمَّ يُعْتِقُهَا فَيَتَزَوَّجُهَا، فَلَهُ أَجْرَانِ، وَمُؤْمِنُ أَهْلِ الْكِتَابِ الَّذِي كَانَ مُؤْمِنًا، ثُمَّ آمَنَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَهُ أَجْرَانِ، وَالْعَبْدُ الَّذِي يُؤَدِّي حَقَّ اللَّهِ وَيَنْصَحُ لِسَيِّدِهِ "". ثُمَّ قَالَ الشَّعْبِيُّ وَأَعْطَيْتُكَهَا بِغَيْرِ شَىْءٍ وَقَدْ كَانَ الرَّجُلُ يَرْحَلُ فِي أَهْوَنَ مِنْهَا إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 145
(யூதர்கள், கிறித்தவர்களாகிய) இரு வேதக்காரர்களில் இஸ்லாத்தை ஏற்றவரின் சிறப்பு
3011. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மூவருக்கு இரட்டை நன்மைகள் அளிக்கப்படும். அவர்கள்:
1. ஒருவரிடம் அடிமைப் பெண் இருந்தாள். அவளுக்கு அவர் கல்வி கற்பித்தார்; அதையும் செம்மையாகச் செய்தார்; அவளுக்கு ஒழுக்கம் கற்பித்தார். அதையும் செய்மையாகச் செய்தார். பிறகு அவளை (விடுதலை செய்து) தாமே மணமுடித்துக்கொண்டார். அவருக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கும்.
2. வேதக்காரர்களில் (ஏக இறையை) நம்பியவர். அவர் (தம்) இறைத்தூதரை நம்பினார்; பிறகு (இறுதித் தூதரான முஹம்மத்) நபி (ஸல்) அவர்களையும் நம்பினார். அவருக்கும் இரட்டை நன்மை கள் கிடைக்கும்.
3. இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.
அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் ஹை (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த நபிமொழியை எனக்கு அறி வித்த) ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘(கட்டணம் ஏதுமின்றி இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதைவிட சின்ன விஷயங்களை அறிந்துகொள்ள சிலர் மதீனாவரைகூட பயணம் சென்றுகொண்டி ருந்தார்கள்” என்று கூறினார்கள்.125
அத்தியாயம் : 56

3012. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ ـ رضى الله عنهم ـ قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالأَبْوَاءِ ـ أَوْ بِوَدَّانَ ـ وَسُئِلَ عَنْ أَهْلِ الدَّارِ يُبَيَّتُونَ مِنَ الْمُشْرِكِينَ، فَيُصَابُ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ قَالَ "" هُمْ مِنْهُمْ "". وَسَمِعْتُهُ يَقُولُ "" لاَ حِمَى إِلاَّ لِلَّهِ وَلِرَسُولِهِ صلى الله عليه وسلم "".
பாடம் : 146
பகை நாட்டினர்மீது இரவில் தாக்குதல் தொடுத்தால் குழந்தைகளும் பெண்களும் தாக்கப்படக்கூடும் (என்ற நிலையில் தாக்குதல் நடத்தலாமா?)
(குர்ஆனின் 7:4; 10:50 ஆகிய வசனங்களில்) யிஇரவு நேரத்தில்’ என்பதைக் குறிக்க யிபயா(த்)தன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (27:49ஆவது வசனத்தில்) ‘அவரை இரவில் அழித்துவிடுவோம்’ என்பதைக் குறிக்க யில நுபய்யி(த்)தன்னஹு’ எனும் சொற்றொடர் இடம்பெறுகிறது. (4:81ஆவது வசனத்தில்) யிஇரவில் கூடி இரகசிய ஆலோசனை நடத்துதல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிபய்ய(த்)த’ எனும் சொல் ஆளப்படுகிறது. (இங்கும் தலைப்பில் யிஇரவில் தாக்குதல் தொடுத்தல்’ என்பதைக் குறிக்க இதே சொல் (யுபய்யி(த்)தூன) ஆளப்பட்டுள்ளது.)
3012. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘அப்வா’ அல்லது யிவத்தான்’ எனுமிடத் தில் நபி (ஸல்) அவர்கள் என் அருகில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.126
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘(பிரத் யேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை” என்று கூற நான் கேட்டிருக் கிறேன்.

3013. وَعَنِ الزُّهْرِيِّ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، حَدَّثَنَا الصَّعْبُ، فِي الذَّرَارِيِّ كَانَ عَمْرٌو يُحَدِّثُنَا عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعْنَاهُ مِنَ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ، قَالَ "" هُمْ مِنْهُمْ "" وَلَمْ يَقُلْ كَمَا قَالَ عَمْرٌو "" هُمْ مِنْ آبَائِهِمْ "".
பாடம் : 146
பகை நாட்டினர்மீது இரவில் தாக்குதல் தொடுத்தால் குழந்தைகளும் பெண்களும் தாக்கப்படக்கூடும் (என்ற நிலையில் தாக்குதல் நடத்தலாமா?)
(குர்ஆனின் 7:4; 10:50 ஆகிய வசனங்களில்) யிஇரவு நேரத்தில்’ என்பதைக் குறிக்க யிபயா(த்)தன்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (27:49ஆவது வசனத்தில்) ‘அவரை இரவில் அழித்துவிடுவோம்’ என்பதைக் குறிக்க யில நுபய்யி(த்)தன்னஹு’ எனும் சொற்றொடர் இடம்பெறுகிறது. (4:81ஆவது வசனத்தில்) யிஇரவில் கூடி இரகசிய ஆலோசனை நடத்துதல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிபய்ய(த்)த’ எனும் சொல் ஆளப்படுகிறது. (இங்கும் தலைப்பில் யிஇரவில் தாக்குதல் தொடுத்தல்’ என்பதைக் குறிக்க இதே சொல் (யுபய்யி(த்)தூன) ஆளப்பட்டுள்ளது.)
3013. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(எதிரிகளுடைய) குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தொடர்பாக ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள், ‘‘அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எமக்கு அறிவித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வாயிலாக, ‘‘அக்குழந்தை கள் அவர்களின் பெற்றோர்களைச் சேர்ந்தவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, ‘‘அந்தக் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே” என்றுதான் கூறினார்கள்.
இதை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

3014. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صلى الله عليه وسلم مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ.
பாடம் : 147
போரில் குழந்தைகளைக் கொல் வது
3014. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளை யும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

3015. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ.
பாடம் : 148
போரில் பெண்களைக் கொல்வது
3015. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.

3016. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْثٍ فَقَالَ "" إِنْ وَجَدْتُمْ فُلاَنًا وَفُلاَنًا فَأَحْرِقُوهُمَا بِالنَّارِ "" ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَرَدْنَا الْخُرُوجَ "" إِنِّي أَمَرْتُكُمْ أَنْ تُحْرِقُوا فُلاَنًا وَفُلاَنًا، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ، فَإِنْ وَجَدْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا "".
பாடம் : 149
அல்லாஹ் வழங்கும் (நெருப்பால் கரிக்கும்) வேதனையால் யாரையும் வேதனை செய்யக் கூடாது.
3016. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களை ஒரு குழுவில் அனுப்பிவைத் தார்கள். அப்போது, ‘‘இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் புறப்பட தயாரானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்னாரையும் இன்னாரையும் எரித்துவிடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. ஆகவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.127

3017. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ حَرَّقَ قَوْمًا، فَبَلَغَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحَرِّقْهُمْ، لأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ "". وَلَقَتَلْتُهُمْ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ "".
பாடம் : 149
அல்லாஹ் வழங்கும் (நெருப்பால் கரிக்கும்) வேதனையால் யாரையும் வேதனை செய்யக் கூடாது.
3017. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள்.128 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘‘நானாக இருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கின்ற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், யிஎவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள் கிறாரோ அவரைக் கொன்றுவிடுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர் களைக் கொன்றுவிட்டிருப்பேன்” என்று சொன்னார்கள்.

3018. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَهْطًا، مِنْ عُكْلٍ ثَمَانِيَةً قَدِمُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاجْتَوَوُا الْمَدِينَةَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، ابْغِنَا رِسْلاً. قَالَ "" مَا أَجِدُ لَكُمْ إِلاَّ أَنْ تَلْحَقُوا بِالذَّوْدِ "". فَانْطَلَقُوا فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا حَتَّى صَحُّوا وَسَمِنُوا، وَقَتَلُوا الرَّاعِيَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، وَكَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، فَأَتَى الصَّرِيخُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَبَعَثَ الطَّلَبَ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، ثُمَّ أَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ فَكَحَلَهُمْ بِهَا، وَطَرَحَهُمْ بِالْحَرَّةِ، يَسْتَسْقُونَ فَمَا يُسْقَوْنَ حَتَّى مَاتُوا. قَالَ أَبُو قِلاَبَةَ قَتَلُوا وَسَرَقُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم وَسَعَوْا فِي الأَرْضِ فَسَادًا.
பாடம் : 150
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘அவர்களை நீங்கள் முற்றிலுமாக ஒடுக்கிவிட்ட பின்னால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள். அதன் பிறகு, (அவர்கள்மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம். (47:4)
இது பற்றி ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்கள் குறித்த ஹதீஸ் அறிவிக்கப் பட்டுள்ளது.129
மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
பூமியில் (எதிரிகளை) முற்றாக ஒழிக்காத வரை (அவர்களைப்) போர்க்கைதி களாக வைத்துக்கொள்வது எந்த இறைத்தூதருக்கும் உகந்ததன்று. நீங்கள் உலகப் பொருட்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமையை விரும்புகின்றான். அல்லாஹ் வல்லமை படைத்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான். (8:67)
பாடம் : 151
(முஸ்லிம்) போர்க் கைதி இறைமறுப்பாளர்களிடமிருந்து தப்பிக்க, சிறைப்பிடித்தவர்களைக் கொல்லலாமா? அல்லது ஏமாற்றலாமா?
இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து மிஸ்வர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.130
பாடம் : 152
இணைவைப்பாளர் ஒரு முஸ்லிமை எரித்துவிட்டால் (அதற்குப் பதிலாக) அவரை எரிக்கலாமா?
3018. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிஉக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது.131 அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை” என்று பதிலளித்தார்கள்.
உடனே (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம்பெற்றுத் தெளிவானார்கள். பின்னர் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்றபின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் அபயக் குரல் எழுப்பியவாறு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.
நபி (ஸல்) அவர்கள் யிஉக்ல்’ குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பிவைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபியவர்கள் துண்டித்தார்கள்.
பிறகு ஆணிகளைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டுவரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ எனுமிடத்தில் எறிந்துவிட்டார் கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும்வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடி னார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)132

3019. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ اللَّهِ.""
பாடம் : 153
3019. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘‘ஓர் எறும்பு உம்மைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீர் எரித்துவிட்டீரே!” என்று அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3020. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، قَالَ قَالَ لِي جَرِيرٌ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". وَكَانَ بَيْتًا فِي خَثْعَمَ يُسَمَّى كَعْبَةَ الْيَمَانِيَةَ قَالَ فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ، وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ ـ قَالَ ـ وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي وَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". فَانْطَلَقَ إِلَيْهَا فَكَسَرَهَا وَحَرَّقَهَا، ثُمَّ بَعَثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُخْبِرُهُ فَقَالَ رَسُولُ جَرِيرٍ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْوَفُ أَوْ أَجْرَبُ. قَالَ فَبَارَكَ فِي خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.
பாடம் : 154
வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்
3020. ஜரீர் பின் அப்திலில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) யிதுல்கலஸா’வின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஆலயமாக இருந்தது.133
நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் (சிறந்த) குதிரை வீரர்களாக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
பிறகு நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களி டம், ‘‘உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப்போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படை வீரர்களுக்கும் வளம் வழங்குமாறு ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

3021. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَخْلَ بَنِي النَّضِيرِ.
பாடம் : 154
வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்
3021. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.134

3022. حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَهْطًا مِنَ الأَنْصَارِ إِلَى أَبِي رَافِعٍ لِيَقْتُلُوهُ، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ فَدَخَلَ حِصْنَهُمْ قَالَ فَدَخَلْتُ فِي مَرْبِطِ دَوَابَّ لَهُمْ، قَالَ وَأَغْلَقُوا باب الْحِصْنِ، ثُمَّ إِنَّهُمْ فَقَدُوا حِمَارًا لَهُمْ، فَخَرَجُوا يَطْلُبُونَهُ، فَخَرَجْتُ فِيمَنْ خَرَجَ أُرِيهِمْ أَنَّنِي أَطْلُبُهُ مَعَهُمْ، فَوَجَدُوا الْحِمَارَ، فَدَخَلُوا وَدَخَلْتُ، وَأَغْلَقُوا باب الْحِصْنِ لَيْلاً، فَوَضَعُوا الْمَفَاتِيحَ فِي كَوَّةٍ حَيْثُ أَرَاهَا، فَلَمَّا نَامُوا أَخَذْتُ الْمَفَاتِيحَ، فَفَتَحْتُ باب الْحِصْنِ ثُمَّ دَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ. فَأَجَابَنِي، فَتَعَمَّدْتُ الصَّوْتَ، فَضَرَبْتُهُ فَصَاحَ، فَخَرَجْتُ ثُمَّ جِئْتُ، ثُمَّ رَجَعْتُ كَأَنِّي مُغِيثٌ فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ، وَغَيَّرْتُ صَوْتِي، فَقَالَ مَا لَكَ لأُمِّكَ الْوَيْلُ قُلْتُ مَا شَأْنُكَ قَالَ لاَ أَدْرِي مَنْ دَخَلَ عَلَىَّ فَضَرَبَنِي. قَالَ فَوَضَعْتُ سَيْفِي فِي بَطْنِهِ، ثُمَّ تَحَامَلْتُ عَلَيْهِ حَتَّى قَرَعَ الْعَظْمَ، ثُمَّ خَرَجْتُ وَأَنَا دَهِشٌ، فَأَتَيْتُ سُلَّمًا لَهُمْ لأَنْزِلَ مِنْهُ فَوَقَعْتُ فَوُثِئَتْ رِجْلِي، فَخَرَجْتُ إِلَى أَصْحَابِي فَقُلْتُ مَا أَنَا بِبَارِحٍ حَتَّى أَسْمَعَ النَّاعِيَةَ، فَمَا بَرِحْتُ حَتَّى سَمِعْتُ نَعَايَا أَبِي رَافِعٍ تَاجِرِ أَهْلِ الْحِجَازِ. قَالَ فَقُمْتُ وَمَا بِي قَلَبَةٌ حَتَّى أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْنَاهُ.
பாடம் : 155
தூங்கும் இணைவைப்பாளரைக் கொல்வது
3022. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர் களின் தலைவரான) அபூராஃபிஉவிடம் அவரைக் கொல்வதற்காக அனுப்பினார் கள்.135 அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார்.
அவர் கூறுகிறார்: நான் அவர்களுடைய ஊர்திப் பிராணிகளைக் கட்டிவைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந் தேன். அவர்கள் கோட்டையின் வாயிலை மூடிவிட்டனர். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நானும் அவர் களுடன் சேர்ந்து அதைத் தேடுபவனைப் போன்று காட்டிக்கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
(பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைக் கதவை இரவில் மூடிவிட்டார் கள். (அதன்) சாவிகளை நான் பார்க்கும் வகையில் (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். பிறகு அபூராஃபிஉவிடம் சென்று, ‘அபூராஃபிஉவே!› என்று அழைத்தேன். அவன் எனக்குப் பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட் டான். உடனே நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
பிறகு (அவனைக்) காப்பாற்ற வந்த வனைப் போன்று மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, ‘‘அபூராஃபிஉவே!” என்று என் குரலை மாற்றிக்கொண்டு அவனை அழைத்தேன். அவன், ‘‘உனக் கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுதான்” என்று சொன்னான். நான், ‘‘உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவன், ‘‘என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னைத் தாக்கிவிட்டான்” என்று கூறினான்.
உடனே நான், அவனது வயிற்றில் என் வாளை வைத்து (சிரமப்பட்டு)அழுத்தினேன். அது (அவனது வயிற்றுக் குள் சென்று) அவனது எலும்பில் இடித்தது. பிறகு நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்துவிட்டேன்; என் கால் சுளுக்கிக்கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, ‘‘(அவனது மரணத்தையறிந்து அவனது வீட்டார்) ஓலமிடும் சப்தத்தைக் கேட்காத வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று கூறினேன்.
ஹிஜாஸ் பகுதியின் (பெரும்) வணிகரான அபூராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஓலங்களைச் கேட்கும்வரை அந்த இடத்தை விட்டு நான் செல்லவில்லை. பிறகு எந்த வேதனையுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித் தோம்.

3023. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَهْطًا مِنَ الأَنْصَارِ إِلَى أَبِي رَافِعٍ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ بَيْتَهُ لَيْلاً، فَقَتَلَهُ وَهْوَ نَائِمٌ.
பாடம் : 155
தூங்கும் இணைவைப்பாளரைக் கொல்வது
3023. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவரிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரைக் கொன்றார்கள்.

3024. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَاصِمُ بْنُ يُوسُفَ الْيَرْبُوعِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ كُنْتُ كَاتِبًا لَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى حِينَ خَرَجَ إِلَى الْحَرُورِيَّةِ فَقَرَأْتُهُ فَإِذَا فِيهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ انْتَظَرَ حَتَّى مَالَتِ الشَّمْسُ.
பாடம் : 156
எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3024. உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்கள் யிஹரூரிய்யா’க்களை (காரிஜிய் யாக்களை) நோக்கி (போருக்கு)ப் புறப்பட்ட போது, அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்தேன்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டி ருந்தது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை (போர்க் களத்தில் இறங்காமல்) எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

3025. ثُمَّ قَامَ فِي النَّاسِ فَقَالَ " أَيُّهَا النَّاسُ لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ ـ ثُمَّ قَالَ ـ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ ". وَقَالَ مُوسَى بْنُ عُقْبَةَ حَدَّثَنِي سَالِم أَبُو النَّضْرِ كُنْتُ كَاتِبًا لِعُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ فَأَتَاهُ كِتَابُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُو ".
பாடம் : 156
எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3025. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘‘எதிரிகளைப் (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். (வேறு வழியின்றி போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘இறைவா! வேதத்தை அருள் பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! கூட்டுப் படைகளைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடித்து இவர்களுக் கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.136
அறிவிப்பாளர் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஎதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்’ என்று சொன்னார்கள் என்றிருந்தது” என சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

3026. وَقَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا "".
பாடம் : 156
எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3026. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்துவிடாமல் பொறுமையாக இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3026. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்துவிடாமல் பொறுமையாக இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3027. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" هَلَكَ كِسْرَى ثُمَّ لاَ يَكُونُ كِسْرَى بَعْدَهُ، وَقَيْصَرٌ لَيَهْلِكَنَّ ثُمَّ لاَ يَكُونُ قَيْصَرٌ بَعْدَهُ، وَلَتُقْسَمَنَّ كُنُوزُهَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3027. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு கிஸ்ரா (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் நிச்சயம் அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு சீசர் (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். அவ்விருவரின் கருவூலங்களும் இறை வழியில் (போரிடுவோரிடையே) பங்கிடப் பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3027. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு கிஸ்ரா (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் நிச்சயம் அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு சீசர் (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். அவ்விருவரின் கருவூலங்களும் இறை வழியில் (போரிடுவோரிடையே) பங்கிடப் பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3028. وَسَمَّى الْحَرْبَ خَدْعَةً
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3028. (தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:)
மேலும், நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.

3029. حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَصْرَمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَرْبَ خُدْعَةً.
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3029. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 56
3029. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 56
3030. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْحَرْبُ خُدْعَةٌ "".
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3030. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.