2991. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَبَّحَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ وَقَدْ خَرَجُوا بِالْمَسَاحِي عَلَى أَعْنَاقِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا هَذَا مُحَمَّدٌ وَالْخَمِيسُ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. فَلَجَئُوا إِلَى الْحِصْنِ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "". وَأَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ، فَأُكْفِئَتِ الْقُدُورُ بِمَا فِيهَا. تَابَعَهُ عَلِيٌّ عَنْ سُفْيَانَ رَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ.
பாடம் : 130
போரின்போது ‘அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று சொல்வது
2991. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்துசேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டுவிட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘‘முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்). முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். உடனே கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தி, ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்). கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் (போர்க்) களத்தில் இறங்கிவிட்டோமென்றால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்” என்று கூறினார்கள்.
எங்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் (அறுத்து) சமைத்தோம். நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (நாட்டுக்) கழுதை களின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன.112
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 56

2992. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَكُنَّا إِذَا أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَيُّهَا النَّاسُ، ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّهُ مَعَكُمْ، إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ، تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ "".
பாடம் : 131
(பயணங்களில) யிதக்பீர்' கூறும்போது குரலை உயர்த்துவது விரும்பத் தக்கதன்று.
2992. அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கைபர் பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறும் போது, யிலா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறிவந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள் ளுங்கள். (மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியுறுபவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் வளமானது. அவனது புகழ் உயர்ந்தது” என்று கூறினார்கள்.

2993. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا.
பாடம் : 132
(பயணங்களில்) பள்ளத்தாக்கில் இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்' என்று கூறுவது
2993. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று தக்பீர் கூறிவந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று தஸ்பீஹ் கூறிவந்தோம்.

2994. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا تَصَوَّبْنَا سَبَّحْنَا.
பாடம் : 133
(பயணங்களில்) மேட்டில் ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்' என்று கூறுவது
2994. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று யிதஸ்பீஹ்’ கூறுவோம்.

2995. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَفَلَ مِنَ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ ـ وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ الْغَزْوِ ـ يَقُولُ كُلَّمَا أَوْفَى عَلَى ثَنِيَّةٍ أَوْ فَدْفَدٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "". قَالَ صَالِحٌ فَقُلْتُ لَهُ أَلَمْ يَقُلْ عَبْدُ اللَّهِ إِنْ شَاءَ اللَّهُ قَالَ لاَ.
பாடம் : 133
(பயணங்களில்) மேட்டில் ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்' என்று கூறுவது
2995. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ லிஅல்லது அறப்போரிலிருந்தோலி திரும்பும்போது, ஒரு குன்றில் அல்லது ஒரு மேட்டில் ஏறும்போதெல்லாம் மூன்றுமுறை, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:
லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க், வ லஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன லி ரப்பினா, ஹாமிதூன, ஸதகல்லாஹு வ அதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்த வன். அவனுக்கு இணையானவர் எவரு மில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் அனைத்தின்மீதும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (அவனை) வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக் குச் சிரம்பணிந்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் நாங்கள் திரும்பு கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான்; கூட்டுப்படை களைத் தன்னந்தனியாக நின்று தோற்கடித்துவிட்டான்)
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(ஆயிபூன என்பதற்குப்பின்) இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் திரும்புகிறோம்) என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறவில்லையா?” என்று கேட்டேன். அவர்கள் யிஇல்லை’ என்றார்கள்.

2996. حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْعَوَّامُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، وَاصْطَحَبَ، هُوَ وَيَزِيدُ بْنُ أَبِي كَبْشَةَ فِي سَفَرٍ، فَكَانَ يَزِيدُ يَصُومُ فِي السَّفَرِ فَقَالَ لَهُ أَبُو بُرْدَةَ سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا "".
பாடம் : 134
ஒருவர் உள்ளூரில் இருக்கும்போது செய்துவரும் நற்செயல்களுக்கான நன்மை போன்றது பயணத்தில் இருக்கும்போதும் அவருக்கு எழுதப்படும்.
2996. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் ஆரோக்கியமானவராயும் ஊரிலிருக்கும்போதும் செய்துவரும் நற்செயல்களுக்குக் கிடைப்பதைப் போன்ற (அதே) நன்மை அவர் நோயுற்றுவிடும் போதும் அல்லது பிரயாணத்தில் இருக்கும் போதும் அவருக்கு எழுதப்படும்.
இதை அறிவித்த அபூபுர்தா (ரஹ்) அவர்கள், ‘‘இதைப் பலதடவை (என் தந்தை) அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்” என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக்கொண்டுவந்த யஸீத் பின் அபீகப்ஷா (ரஹ்) அவர்களிடம் கூறி னார்கள்.

2997. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَدَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّاسَ يَوْمَ الْخَنْدَقِ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَهُمْ فَانْتَدَبَ الزُّبَيْرُ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ "". قَالَ سُفْيَانُ الْحَوَارِيُّ النَّاصِرُ.
பாடம் : 135
(இரவில்) தனியாகப் பயணம் செய்வது
2997. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது (யிஇரவில் தனியாகச் சென்று எதிரிகளை உளவு பார்ப்பதற்கு முன் வருபவர் யார்?› என்று மக்களை) அழைத்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (அப்போதும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என் (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.113
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மூலத்தில் இடம்பெற்றுள்ள யிஹவாரீ’ என்பது உதவியாளரைக் குறிக்கும்” என்று கூறினார்கள்.

2998. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الْوَحْدَةِ مَا أَعْلَمُ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ "".
பாடம் : 135
(இரவில்) தனியாகப் பயணம் செய்வது
2998. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள சிரமங்கள் குறித்து நான் அறிந்துள்ளதை மக்கள் அறிந்தால், எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்யமாட்டார்.114
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 56
2998. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள சிரமங்கள் குறித்து நான் அறிந்துள்ளதை மக்கள் அறிந்தால், எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்யமாட்டார்.114
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 56
2999. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، سُئِلَ أُسَامَةُ بْنُ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ يَحْيَى يَقُولُ وَأَنَا أَسْمَعُ فَسَقَطَ عَنِّي ـ عَنْ مَسِيرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، قَالَ فَكَانَ يَسِيرُ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ. وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ.
பாடம் : 136
(ஊருக்கத் திரும்பும்போது) பயணத் தைத் துரிதப்படுத்தல்
நபி (ஸல்) அவர்கள் (தபூக் போரிலி ருந்து திரும்பும்போது), ‘‘நான் மதீனாவுக்கு விரைவாகச் செல்லப்போகிறேன். யார் என்னுடன் விரைவாக வர விரும்புகிறாரோ அவர் விரைந்து வரட்டும்” என்று கூறினார்கள்.115
இதை அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2999. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின்போது (அரஃபா விலிருந்து முஸ்தலிஃபா திரும்பும்போது) நபி (ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் மிதமான வேகத்தில் செல்பவர்களாக இருந்தார்கள். (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடைவெளியைக் கண்டால் விரைவாகச் செல்வார்கள்” என்று பதிலளித்துவிட்டு, ‘‘விரைவு (நஸ்ஸு) என்பது, மிதமான வேகத்தைவிட அதிகமாக உள்ள வேகத் தைக் குறிக்கும்” என்று உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.116
அறிவிப்பாளர் யஹ்யா அல்கத்தான் (ரஹ்) அவர்கள், ‘‘எனக்கு இதை அறிவித்த உர்வா (ரஹ்) அவர்கள், யிநான் உசாமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை நேரடியாகச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்’ என்று கூறினார்கள். ஆனால், அதை நான் (ஆரம்பத்தில்) சொல்ல மறந்துவிட்டேன்” என்று கூறினார்கள்.

3000. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ ـ هُوَ ابْنُ أَسْلَمَ ـ عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ، فَأَسْرَعَ السَّيْرَ حَتَّى إِذَا كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ، ثُمَّ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، يَجْمَعُ بَيْنَهُمَا، وَقَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ وَجَمَعَ بَيْنَهُمَا.
பாடம் : 136
(ஊருக்கத் திரும்பும்போது) பயணத் தைத் துரிதப்படுத்தல்
நபி (ஸல்) அவர்கள் (தபூக் போரிலி ருந்து திரும்பும்போது), ‘‘நான் மதீனாவுக்கு விரைவாகச் செல்லப்போகிறேன். யார் என்னுடன் விரைவாக வர விரும்புகிறாரோ அவர் விரைந்து வரட்டும்” என்று கூறினார்கள்.115
இதை அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
3000. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மக்கா (செல்லும்) சாலையில் இருந்தேன். அப்போது அவர்களுக்கு (அன்னாரின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் (ரலி) அவர்கள் கடுமையான (நோயின்) வேதனையில் இருப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் விரைந்து பயணம் செய்யலானார்கள்.
செம்மேகம் மறைந்தபின் (வாகனத்திலிருந்து) இறங்கி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செல்ல நேரிடும்போது மஃக்ரிபைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் (இஷா நேரத்தில்) சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறி னார்கள்.117

3001. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابَهُ، فَإِذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ "".
பாடம் : 136
(ஊருக்கத் திரும்பும்போது) பயணத் தைத் துரிதப்படுத்தல்
நபி (ஸல்) அவர்கள் (தபூக் போரிலி ருந்து திரும்பும்போது), ‘‘நான் மதீனாவுக்கு விரைவாகச் செல்லப்போகிறேன். யார் என்னுடன் விரைவாக வர விரும்புகிறாரோ அவர் விரைந்து வரட்டும்” என்று கூறினார்கள்.115
இதை அபூஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
3001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பயணம் வேதனையின் ஒரு துண்டா கும். அது உங்களின் உறக்கத்தையும் உணவையும் பானத்தையும் தடுத்து விடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர் தமது (பயணத்) தேவையை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்துசெல் லட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118

3002. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَبْتَعْهُ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "".
பாடம் : 137
ஒருவரை (அறப்போருக்காகத்) தாம் ஏற்றியனுப்பிய குதிரை விற்கப் படுவதைக் கண்டால்...
3002. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (ஒருவரை) இறைவழியில் (போரிட) குதிரையொன்றில் ஏற்றி அனுப்பினார்கள்; பிறகு அக்குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டார்கள். அதை விலைக்கு வாங்க விரும்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (விளக்கம்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

3003. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَابْتَاعَهُ ـ أَوْ فَأَضَاعَهُ ـ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِهِ وَإِنْ بِدِرْهَمٍ، فَإِنَّ الْعَائِدَ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ "".
பாடம் : 137
ஒருவரை (அறப்போருக்காகத்) தாம் ஏற்றியனுப்பிய குதிரை விற்கப் படுவதைக் கண்டால்...
3003. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒருவரை இறைவழியில் (போர் புரிவதற்காக) குதிரையின் மீது ஏற்றி அனுப்பினேன். அந்தக் குதிரையை வைத்திருந்தவர் அதை விற்றுவிட்டார் லிஅல்லது பாழாக்கிவிட்டார்லி அதை நான் விலைக்கு வாங்கிக்கொள்ள விரும்பினேன். அதை அவர் மலிவான விலைக்கு விற்று விடுவார் என்று நான் எண்ணினேன்.
ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா என்று) கேட்டேன். அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள்; அது ஒரு திர்ஹமுக்குக் கிடைப்பதாயிருந்தாலும் சரி! ஏனெனில், தமது அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், தனது வாந்தியைத் தானே திரும்பத் தின்னும் நாயைப் போன்றவன்” என்று கூறினார்கள்.119

3004. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ ـ وَكَانَ لاَ يُتَّهَمُ فِي حَدِيثِهِ ـ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَهُ فِي الْجِهَادِ فَقَالَ "" أَحَىٌّ وَالِدَاكَ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَفِيهِمَا فَجَاهِدْ "".
பாடம் : 138
பெற்றோரின் அனுமதியுடன் அறப்போர் புரிவது
3004. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்துகொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘ஆம் (உயிருடன் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அவ்விருவருக்காக உழைப்பீராக!” என்று கூறினார்கள்.

3005. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ أَبَا بَشِيرٍ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ ـ قَالَ عَبْدُ اللَّهِ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ وَالنَّاسُ فِي مَبِيتِهِمْ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَسُولاً أَنْ لاَ يَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلاَدَةٌ إِلاَّ قُطِعَتْ.
பாடம் : 139
ஒட்டகத்தின் கழுத்தில் மணி போன்றவற்றைத் தொங்கவிடுவது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
3005. அபூபஷீர் கைஸ் பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர் களுடன் இருந்தேன். லிமக்கள் இரவில் தாங்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர் கூறியதாகவே நான் எண்ணுகிறேன் என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் நாணால் ஆன மாலையோ வேறு மாலைகளோ இருந்தால், அவை துண்டிக்கப்படாமல் இருக்கலாகாது” என்று (பொதுமக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.120

3006. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً. قَالَ "" اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ "".
பாடம் : 140
ஒருவர் (அறப்போர்) படையில் (தமது பெயரைப்) பதிவு செய்தபின் அவர் மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டால், அல்லது வேறு (நியாயமான) தடையேதும் அவருக்கு ஏற்பட்டால் (போரில் கலந்துகொள்ளாமலிருக்க) அவ ருக்கு அனுமதியுண்டா?
3006. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘ஓர் ஆண் ஒரு (அந்நியப்) பெண்ணு டன் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவருடனேயேயன்றி பயணம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன அறப் போரில் கலந்துகொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துகொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ போய் உன் மனைவி யுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.121

3007. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُهُ مِنْهُ، مَرَّتَيْنِ قَالَ أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَالزُّبَيْرَ وَالْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ قَالَ "" انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةً وَمَعَهَا كِتَابٌ، فَخُذُوهُ مِنْهَا "". فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى الرَّوْضَةِ، فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ فَقُلْنَا أَخْرِجِي الْكِتَابَ. فَقَالَتْ مَا مَعِي مِنْ كِتَابٍ. فَقُلْنَا لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ. فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا، فَأَتَيْنَا بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَإِذَا فِيهِ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ مِنْ أَهْلِ مَكَّةَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا حَاطِبُ، مَا هَذَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، لاَ تَعْجَلْ عَلَىَّ، إِنِّي كُنْتُ امْرَأً مُلْصَقًا فِي قُرَيْشٍ، وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهَا، وَكَانَ مَنْ مَعَكَ مِنَ الْمُهَاجِرِينَ لَهُمْ قَرَابَاتٌ بِمَكَّةَ، يَحْمُونَ بِهَا أَهْلِيهِمْ وَأَمْوَالَهُمْ، فَأَحْبَبْتُ إِذْ فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ فِيهِمْ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ بِهَا قَرَابَتِي، وَمَا فَعَلْتُ كُفْرًا وَلاَ ارْتِدَادًا وَلاَ رِضًا بِالْكُفْرِ بَعْدَ الإِسْلاَمِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَقَدْ صَدَقَكُمْ "". قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. قَالَ "" إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ أَنْ يَكُونَ قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ، فَقَدْ غَفَرْتُ لَكُمْ "". قَالَ سُفْيَانُ وَأَىُّ إِسْنَادٍ هَذَا.
பாடம் : 141
ஒற்றர்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
இறை நம்பிக்கை கொண்டோரே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை உற்ற நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்.(60:1)
யிஉளவுபார்த்தல்’ (தஜஸ்ஸுஸ்) என்றால், யிதுருவி ஆராய்தல்’ (தபஹ்ஹுஸ்) என்று பொருள்.
3007. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) ஆகியோரையும், ‘‘நீங்கள் யிரவ்ளத்து காக்’ எனுமிடம்122 வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள்.
(அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. இறுதியில், நாங்கள் யிரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘‘கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், ‘‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள்.
நாங்கள், ‘‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனை’)ட வேண்டியதிருக்கும்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போர் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (போர்த்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள்.
ஹாத்திப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப் பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்க வில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்பவ னாக இருந்துவந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களு டைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். எனக்கு அவர்களி டையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் பிரதியாக அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக்கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் இறைமறுப்பாலோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் பத்ர் போரில் கலந்துகொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள்.
‘‘என்ன (பலமான) அறிவிப்பாளர்தொடர் இது!” என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர்தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (வியந்து) கூறினார்கள்.

3008. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا كَانَ يَوْمَ بَدْرٍ أُتِيَ بِأُسَارَى، وَأُتِيَ بِالْعَبَّاسِ وَلَمْ يَكُنْ عَلَيْهِ ثَوْبٌ، فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُ قَمِيصًا فَوَجَدُوا قَمِيصَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ يَقْدُرُ عَلَيْهِ، فَكَسَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِيَّاهُ، فَلِذَلِكَ نَزَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَمِيصَهُ الَّذِي أَلْبَسَهُ. قَالَ ابْنُ عُيَيْنَةَ كَانَتْ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَدٌ فَأَحَبَّ أَنْ يُكَافِئَهُ.
பாடம் : 142
(போர்க்) கைதிகளுக்கு ஆடை அணிவிப்பது
3008. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டுவரப் பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களும் (கைதி யாகக்) கொண்டுவரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந் தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு மேலங்கி யைத் தேடினார்கள். அப்போது (நயவஞ்ச கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் மேலங்கி அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப் பதை மக்கள் கண்டார்கள்.
அதையே அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அணிவித் தார்கள். இதனால்தான், அப்துல்லாஹ் பின் உபை (இறந்த பின்பு அவரு)க்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியைக் கழற்றி அணிவித்தார்கள்.
‘‘அப்துல்லாஹ் பின் உபை, நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் கை கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

3009. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي سَهْلٌ ـ رضى الله عنه يَعْنِي ابْنَ سَعْدٍ ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ "" لأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلاً يُفْتَحُ عَلَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ "". فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ فَقَالَ "" أَيْنَ عَلِيٌّ "". فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ، فَبَرَأَ كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ فَقَالَ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا. فَقَالَ "" انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلاً خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ "".
பாடம் : 143
யாரது கரத்தால் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்கிறாரோ அவரது சிறப்பு
3009. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நாளை நான் ஒரு மனிதரிடம் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைக் கொடுப்பேன். அவருடைய கரங்களில் அல்லாஹ் வெற்றி அளிப்பான். அவர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவன் தூதரும் நேசிக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
அந்தக் கொடி தம்மில் யாரிடம் தரப் படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவைக் கழித்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களாக வந்தனர். அப்போது ‘‘அலீ எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘அலீ அவர்களுக்குக் கண் வலி” என்று சொல்லப்பட்டது.
ஆகவே, (அலீ அவர்களை அழைத்து வரச்செய்து) நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரு கண்களிலும் தமது எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். உடனே அலீ அவர்கள் (அதற்குமுன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி)அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘‘அவர்கள் நம்மைப் போன்று (முஸ்லிம் களாக) ஆகும்வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்கள்மீது கடமையாகின்றவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் அல்லாஹ் ஒருவருக்கு நல்வழி அளிப்பதானது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.123

3010. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يَدْخُلُونَ الْجَنَّةَ فِي السَّلاَسِلِ "".
பாடம் : 144
சங்கிலிகளில் (போர்க்) கைதிகள்
3010. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர் களாகச் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப் படைவான்.124
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.