28. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ "" تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ "".
பாடம் : 20 சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே. அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மனசாட்சியுடன் நேர்மையோடு நடந்துகொள்ளல், உலகில் (எந்த இடத்திலும்) சலாமைப் பரப்புதல், வறுமையிலும் வழங்கி வாழ்தல் ஆகிய முப்பண்புகளை யார் (தம்மில்) ஒன்று சேர்த்துக்கொண்டாரோ, அவர் இறைநம்பிக்கையை ஒன்றுசேர்த்துக் கொண்டுவிட்டார்.26
28. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்பு களி)ல் சிறந்தது எது?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பசித்தோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக் கும் ‘சலாம்’ சொல்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.27

அத்தியாயம் : 2
29. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ "". قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ "" يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ "".
பாடம் : 21 கணவனுக்கு நன்றி மறப்பதும் நன்றி மறத்தலில் (குஃப்ர்) உள்ள ஏற்றத்தாழ்வும்28 இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.29
29. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. நரகவாசிகளில் அதிகம்பேர் பெண்களாகவே இருந்தனர். பெண்கள் நிராகரிக்கின்றனர்” என்று கூறினார்கள்.

அப்போது “இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “கணவனை நிராகரிக் கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவி களுக்கு நன்றி செய்ய மறுக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலமெல்லாம் நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால், ‘உன்னி டமிருந்து எந்த நலனையும் நான் கண்ட தேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” எனப் பதிலளித்தார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
30. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ الْمَعْرُورِ، قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً، فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ "".
பாடம் : 22 பாவங்கள் (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்துச் செயல்களாகும். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதைத் தவிர, வேறு பாவங்களைச் செய்வதால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று சொல்லக் கூடாது. ஏனெனில், (அபூதர் (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர்” என்று சொன்னார்கள். மேலும், உயந்தோன் அல்லாஹ், “தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான். அது அல்லாதவற்றைத் தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான்” (4:48) என்று கூறுகின்றான்.30
30. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதைப் போன்றே) அவருடைய அடிமைமீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் உரிமையாளரும் ஒரே விதமான உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயைக் கொண்டு அவரை இழிவு படுத்திப் பேசிவிட்டேன்.

அப்போது என்னைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் வைத்துள்ளான். எனவே, தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், அவர்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 2
31. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ. قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ "" إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ "".
பாடம்: “இறைம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தமக்குள் சண்டை யிட்டுக்கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்துவையுங்கள்” (49:9) எனும் இறைவசனம் அப்படிச் சண்டையிட்டுக்கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்த வசனத்தில்) ‘இறைநம்பிக்கையாளர்கள்’ (முஃமின்கள்) என்றே குறிப்பிட்டிருக் கின்றான்.31
31. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (முஸ்லிம்களிடையே நடந்த ‘ஜமல்’ போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவி செய்வ தற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து “எங்கே செல்கிறீர்?” எனக் கேட்டார்கள். நான் “இந்த மனிதருக்கு உதவி செய்யப்போகிறேன்” என்றேன்.

அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் “நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களை ஏந்தி சண்டையிட்டுக்கொண்டால், அதில் கொன்றவரும் கொல்லப்பட்டவரும் நரகத்திற்குத் தான் செல்வார்கள்’ என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் ‘அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?’ என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
32. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، ح. قَالَ وَحَدَّثَنِي بِشْرٌ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}.
பாடம் : 23 அநீதிகளில் ஏற்றத்தாழ்வு உண்டு.
32. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“யார் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தமது இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” (6:82) எனும் இறைவசனம் அருளப்பெற்ற போது, நபித்தோழர்கள் “எங்களில் யார்தான் தமக்குத்தாமே அநீதி இழைக் காதவர்?” என்று கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ், “இணை கற்பிப்பதுதான் மிகப்பெரும் அநீதியாகும்” (31:13) எனும் வசனத்தை அருளினான்.32

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
33. حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ "".
பாடம் : 24 நயவஞ்சகனின் அடையாளங்கள்
33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனு மொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 2
34. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ "". تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 24 நயவஞ்சகனின் அடையாளங்கள்
34. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடம் உள்ள னவோ அவன் அப்பட்டமான நயவஞ்ச கன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத் தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக் கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத் தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்).33

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2
35. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 25 மகத்துவமிக்க இரவில் (லைலத்துல் கத்ர்) நின்று வழிபடுவது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
35. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன் மையை எதிர்பார்த்தும் மகத்துவமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் நின்று வழிபடு கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
36. حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عُمَارَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لاَ يُخْرِجُهُ إِلاَّ إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أُرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ، وَلَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ "".
பாடம் : 26 அறப்போர் புரிவதும் இறைநம் பிக்கையின் ஓர் அம்சமாகும்.
36. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது வழியில் (அறப்போர் புரிய) புறப்பட்டுச் சென்றவருக்கு அல்லாஹ் விரைவாக நற்பலன் வழங்குவான். அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் கொண்ட நம்பிக்கையாலேயே அவர் புறப்பட்டிருக்க வேண்டும். அவர் அடையும் நன்மையுடன், அல்லது போர்ச் செல்வங்களுடன் அவரைத் திரும்பச் செய்வதற்கோ, அல்லது அவரைச் சொர்க் கத்தில் அனுமதிப்பதற்கோ (அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்).

என் சமுதாயத்திற்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் எனும் அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால், (நான்) அனுப்பும் எந்தப் படைப்பிரிவுக்குப் பின்னரும் (ஊரில்) நான் அமர்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (இறைவழியில்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (அவ்வழியில்) கொல்லப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்ய) வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
37. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 27 ரமளான் மாதத்தில் கூடுதலாக நின்று வழிபடுவதும் இறைநம் பிக்கையின் ஓர் அம்சமாகும்.
37. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன் மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 2
38. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 28 நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் இறைநம்பிக்கை யின் ஓர் அம்சமாகும்.
38. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன் மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
39. حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الْغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَىْءٍ مِنَ الدُّلْجَةِ "".
பாடம் : 29 மார்க்கம் எளிதானது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசத்தியத்தைவிட்டு விலகி சத்தியத்தில் நிலைத்து நிற்கும் இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மார்க்கமாகும்.
39. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத் துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச் செய்யுங் கள்; நற்செய்தி பெறுங்கள்; (கூடுதல் வழிபாடுகளை உற்சாகத்துடனும் நிரந்தர மாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் துணையாக்கிக்கொள்ளுங்கள்.34

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
40. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ ـ أَوْ قَالَ أَخْوَالِهِ ـ مِنَ الأَنْصَارِ، وَأَنَّهُ صَلَّى قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلاَةٍ صَلاَّهَا صَلاَةَ الْعَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ، وَهُمْ رَاكِعُونَ فَقَالَ أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ الْبَيْتِ، وَكَانَتِ الْيَهُودُ قَدْ أَعْجَبَهُمْ إِذْ كَانَ يُصَلِّي قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ، وَأَهْلُ الْكِتَابِ، فَلَمَّا وَلَّى وَجْهَهُ قِبَلَ الْبَيْتِ أَنْكَرُوا ذَلِكَ. قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ فِي حَدِيثِهِ هَذَا أَنَّهُ مَاتَ عَلَى الْقِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ رِجَالٌ وَقُتِلُوا، فَلَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ}
பாடம் : 30 தொழுகை இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழ்ப்படுத்தப்போவதில்லை. (2:143) அதாவது: இறையில்லம் (கஅபாவின்) அருகில் இருந்தபடி (பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலை நோக்கி) நீங்கள் தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்.
40. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்பத்தில் ‘தம் பாட்டனார்களி(ன் வமிசாவளியினரி)டத்தில்’ அல்லது ‘அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களி(ன் வமிசாவளியினரி)டத்தில்’ தங்கியிருந்தார் கள். நபி (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தி லுள்ள) பைத்துல் மக்திஸை, நோக்கி ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.

(பிறகு கஅபாவை முன்னோக்கித் தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது. கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத் தொழுகையை) நபி (ஸல்) அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்துகொண்டிருந்தனர்.

உடனே அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்” என்று சொல்ல, அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே சுழன்று) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதுவந்தது, யூதர்களுக்கும் மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்துவந்தது. (தொழுகையில்) தமது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பியபோது அதை அவர்கள் வெறுத்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “(புதிய கிப்லா வான கஅபாவுக்கு) கிப்லா மாற்றப்படு வதற்குமுன் (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவை நோக்கித் தொழுத காலத்தி லேயே சிலர் இறந்து விட்டிருந்தனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை (அதாவது தொழுகையை) பாழ்ப்படுத்தப் போவதில்லை’ (2:143) எனும் வசனத்தை அருளினான்” என்று இடம்பெற்றுள்ளது.35

அத்தியாயம் : 2
41. قَالَ مَالِكٌ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ، الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلاَّ أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا "".
பாடம் : 31 ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது
41. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரது இஸ்லாம் (அகத்திலும் புறத்திலும்) அழகு பெற்றுவிட்டால், அவர் அதற்குமுன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்துவிடுகின்றான்.

அதற்குப் பின்னர் (அவர் செய்யும் நன்மை, தீமைகள்) நிகருக்கு நிகராக இருக்கும். (நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் கிடைக்கும். அதிலும்) ஒரு நன்மைக்கு அது போன்ற பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். (ஆனால்,) ஒரு பாவத்திற்கு அதைப் போன்ற ஒன்றே (தண்டனையாகக்) கிடைக்கும். அதையும் அல்லாஹ் மன்னித்துவிட்டால் (எந்தத் தண்டனையும்) கிடையாது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 2
42. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلاَمَهُ، فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ لَهُ بِمِثْلِهَا "".
பாடம் : 31 ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது
42. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகாக்கிக்கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கி லிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ் வொரு தீமைக்கும் அத்தீமை போன்றே (ஒரு தீமையே) பதிவு செய்யப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 2
43. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ "" مَنْ هَذِهِ "". قَالَتْ فُلاَنَةُ. تَذْكُرُ مِنْ صَلاَتِهَا. قَالَ "" مَهْ، عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لاَ يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا "". وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَا دَامَ عَلَيْهِ صَاحِبُهُ.
பாடம் : 32 நிரந்தரமாகச் செய்யப்படும் நல்லறங்களே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும்.
43. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னவர்?” என்று கூறிவிட்டு, அவரது தொழுகையைப் பற்றி (சிலாகித்து)க் கூறினேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதும் நிறுத்து! (வழிபாடுகளில்) உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும், மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை, ஒருவர் நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 2
44. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" مِنْ إِيمَانٍ "". مَكَانَ "" مِنْ خَيْرٍ "".
பாடம் : 33 இறைநம்பிக்கை (ஈமான்) கூடுவ தும் குறைவதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவர்களுக்கு நாம் நல்வழியை அதிகமாக்கினோம். (18:13) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்ட வர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும் (நரகத் தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனை யாக ஆக்கினோம்). (74:31) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நான் முழுமையாக்கிவிட்டேன். (5:3) அதாவது இந்த நிறைவான (மார்க்கத்) தில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டு விட்டால், அவர் (மார்க்கத்தால்) குறைவு டையவர் ஆவார்.
44. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். யார் தமது உள்ளத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். யார் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நன்மை’ என்பதற்குப் பதிலாக ‘இறை நம்பிக்கை’ (‘ஈமான்’) என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.36


அத்தியாயம் : 2
45. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، سَمِعَ جَعْفَرَ بْنَ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، مِنَ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لاَتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. قَالَ أَىُّ آيَةٍ قَالَ {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا}. قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ.
பாடம் : 33 இறைநம்பிக்கை (ஈமான்) கூடுவ தும் குறைவதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவர்களுக்கு நாம் நல்வழியை அதிகமாக்கினோம். (18:13) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்ட வர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும் (நரகத் தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனை யாக ஆக்கினோம்). (74:31) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நான் முழுமையாக்கிவிட்டேன். (5:3) அதாவது இந்த நிறைவான (மார்க்கத்) தில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டு விட்டால், அவர் (மார்க்கத்தால்) குறைவு டையவர் ஆவார்.
45. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது யூதர்களாகிய எங்கள்மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள்.

அதற்கு அந்த யூதர், “இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக முழுமை யாக்கிவிட்டேன். உங்கள்மீது எனது அருட்கொடையை நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாள் எங்களுக்குப் பண்டிகை நாள்தான்)” என்றார்கள்.

அத்தியாயம் : 2
46. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم "" خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ "". فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ "". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَصِيَامُ رَمَضَانَ "". قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ "". قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ "". قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفْلَحَ إِنْ صَدَقَ "".
பாடம் : 34 ‘ஸகாத்’ இஸ்லாத்தின் ஓர் அம்சமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் நிலைத்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வழிபட வேண்டும்; தொழுகையை அவர்கள் கடைப்பிடித்து வர வேண்டும்; ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்றே அவர்களுக் குக் கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும். (98:5)
46. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) ஒலித்த அவரது குரல் கேட்டதே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் விளங்க முடியவில்லை. அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்” என்றார்கள். அவர் “இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், ‘இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்து ரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (தர்மம்) ஏதேனும் என்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தை தவிர” என்றார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதற்குமேல் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 2
47. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ الْمَنْجُوفِيُّ، قَالَ حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، وَمُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا، وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ "". تَابَعَهُ عُثْمَانُ الْمُؤَذِّنُ قَالَ حَدَّثَنَا عَوْفٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 35 பிரேதங்களை (அடக்கம் செய்வ தற்காக)ப் பின்தொடர்ந்து செல்வது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
47. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை (பிரேதத்தை)ப் பின் தொடர்ந்து சென்று, அதற்காக (இறுதி)த் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும்வரை அதனுடன் இருந்தாரோ அவர் இரண்டு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு ‘கீராத்’தும் ‘உஹுத்’ மலை போன்றதாகும். யார் அதற்காக (இறுதி)த் தொழுகையை மட்டும் முடித்துவிட்டு, அதை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 2