2798. حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الْوَلِيدِ عَنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ لَهُ ـ وَقَالَ ـ مَا يَسُرُّنَا أَنَّهُمْ عِنْدَنَا "". قَالَ أَيُّوبُ أَوْ قَالَ "" مَا يَسُرُّهُمْ أَنَّهُمْ عِنْدَنَا "". وَعَيْنَاهُ تَذْرِفَانِ.
பாடம் : 7
உயிர்த் தியாகத்தை விரும்புதல்
2798. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார் கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பதுபோல் கூறலானார்கள்:) ‘‘ஸைத் பின் அல்ஹாரிஸா கொடியைப் பிடித்திருந்தார்; இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு ஜஅஃபர் அதைப் பற்றினார்; அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை அப்துல்லாஹ் பின் ரவாஹா பிடித்தார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைப் பிடித்தார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது.10
(வீரமரணத்தால் அவர்கள் பெற்ற பெரும்பேற்றினை நாம் அறிந்தபிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது.
லிஅறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள், அல்லது, ‘அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்லி
இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அத்தியாயம் : 56

2799. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ خَالَتِهِ أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، قَالَتْ نَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَرِيبًا مِنِّي، ثُمَّ اسْتَيْقَظَ يَتَبَسَّمُ. فَقُلْتُ مَا أَضْحَكَكَ قَالَ "" أُنَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ يَرْكَبُونَ هَذَا الْبَحْرَ الأَخْضَرَ، كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ "". قَالَتْ فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَدَعَا لَهَا، ثُمَّ نَامَ الثَّانِيَةَ، فَفَعَلَ مِثْلَهَا، فَقَالَتْ مِثْلَ قَوْلِهَا، فَأَجَابَهَا مِثْلَهَا. فَقَالَتِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ "" أَنْتِ مِنَ الأَوَّلِينَ "". فَخَرَجَتْ مَعَ زَوْجِهَا عُبَادَةَ بْنِ الصَّامِتِ غَازِيًا أَوَّلَ مَا رَكِبَ الْمُسْلِمُونَ الْبَحْرَ مَعَ مُعَاوِيَةَ، فَلَمَّا انْصَرَفُوا مِنْ غَزْوِهِمْ قَافِلِينَ فَنَزَلُوا الشَّأْمَ، فَقُرِّبَتْ إِلَيْهَا دَابَّةٌ لِتَرْكَبَهَا فَصَرَعَتْهَا فَمَاتَتْ.
பாடம் : 8
இறைவழியில் (போரிடச்) சென்று கீழே விழுந்து இறந்துபோனவரும் உயிர்த் தியாகிகளில் ஒருவரே.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
யார் தமது இல்லத்திலிருந்து புறப்பட்டு அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் புலம்பெயர்ந்து செல்லும்போது, அவரை இறப்பு சந்தித்துவிடுகிறதோ அவருக்குரிய பிரதிபலன் அல்லாஹ்விடம் உறுதியாகிவிட்டது. (4:100)
(இங்கு யிஉறுதியாகிவிட்டது’ என்பதைக் குறிக்க மூலத்தில்) யிவகஅ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு (யிநிகழ்ந்து விட்டது’ என்பது சொற்பொருளாக இருப்பினும் இங்கு) யிஉறுதியாகிவிட்டது (வஜப) என்பதே பொருளாகும்.
2799. உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக்கொண்டே கண்விழித் தார்கள். நான், ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போன்று (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்துகொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) காட்டப்பட்டது” என்று கூறினார்கள்.
நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்ததைப் போன்றே செய்தார்கள். நானும் முன்பு கேட்டதைப் போன்றே கேட்டேன். முன்பு பதில் சொன்னதைப் போலவே அவர்களும் பதில் சொன்னார் கள். நான், ‘‘அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அவர்கள், ‘‘முதன் முதலாகச் செல்பவர் களில் நீங்களும் ஒருவர்தான்” என்று கூறினார்கள்.
(உம்மு ஹராம் (ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்:)
அவ்வாறே, (தளபதி) முஆவியா (ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (கிழக்கு ரோமில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுடன் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். தமது படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் (சிரியா) நாட்டில் இறங்கினார்கள்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் ஏறிக்கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக்கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.11

2801. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، فَلَمَّا قَدِمُوا، قَالَ لَهُمْ خَالِي أَتَقَدَّمُكُمْ، فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِلاَّ كُنْتُمْ مِنِّي قَرِيبًا. فَتَقَدَّمَ، فَأَمَّنُوهُ، فَبَيْنَمَا يُحَدِّثُهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَوْمَئُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ، فَطَعَنَهُ فَأَنْفَذَهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ، فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ. ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ فَقَتَلُوهُمْ، إِلاَّ رَجُلاً أَعْرَجَ صَعِدَ الْجَبَلَ. قَالَ هَمَّامٌ فَأُرَاهُ آخَرَ مَعَهُ، فَأَخْبَرَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ، فَرَضِيَ عَنْهُمْ وَأَرْضَاهُمْ، فَكُنَّا نَقْرَأُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا. ثُمَّ نُسِخَ بَعْدُ، فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لِحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم.
பாடம் : 9
இறைவழியில் துன்புறுத்தப்படுபவர்
2801. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தார் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (ஹராம் பின் மில்ஹான், தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் சரி; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென் றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்ப ளித்தார்கள்.
அவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டி ருந்தபோது, தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவருடைய எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீது ஏறிக்கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள், ‘‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக்கொண்டார்) என்று (அறிவிக்கப்பட்ட தாகவே) நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தாம் பெற்ற நற்பலனைக் குறித்து) திருப்தி கொள்ளும்படிச் செய்தான் என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். தன் (வெகுமதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்னும் இறைவசனத்தை ஓதிக்கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது.
நபி (ஸல்) அவர்கள் (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த பனூ உஸய்யா ஆகிய கூட்டத்தாருக்கெதிராக நாற்பது நாட்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.12

2802. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ فِي بَعْضِ الْمَشَاهِدِ وَقَدْ دَمِيَتْ إِصْبَعُهُ، فَقَالَ "" هَلْ أَنْتِ إِلاَّ إِصْبَعٌ دَمِيتِ، وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ "".
பாடம் : 9
இறைவழியில் துன்புறுத்தப்படுபவர்
2802. ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது, அவர்களது (கால்) விரலில் (காயம் ஏற்பட்டு) இரத்தம் சொட்டிக்கொண்டி ருந்தது. அப்போது அவர்கள்,
‘‘நீ இரத்தம் சொட்டுகின்றஒரு விரல்தானே?நீ பட்டதெல்லாம்இறைவழியில் தானே!”
என்று கூறினார்கள்.

2803. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُكْلَمُ أَحَدٌ فِي سَبِيلِ اللَّهِ ـ وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُكْلَمُ فِي سَبِيلِهِ ـ إِلاَّ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّوْنُ لَوْنُ الدَّمِ وَالرِّيحُ رِيحُ الْمِسْكِ "".
பாடம் : 10
இறைவழியில் காயப்படுத்தப் படுபவர்
2803. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் யாரும்லி உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை அல்லாஹ்வே அறிந்தவன் லி மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும் கஸ்தூரி மணம் கமழ்கின்றவராகவுமே வருவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2804. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ أَخْبَرَهُ أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ سَأَلْتُكَ كَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ فَزَعَمْتَ أَنَّ الْحَرْبَ سِجَالٌ وَدُوَلٌ، فَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى ثُمَّ تَكُونُ لَهُمُ الْعَاقِبَةُ.
பாடம் : 11
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே! அவர்களிடம்) நீர், ‘‘நீங்கள் எங்கள் விஷயத்தில் (வெற்றி, அல்லது வீரமரணம் ஆகிய) இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறெதையும் எதிர் பார்க்கிறீர்களா?” என்று கேட்பீராக! (9:52)
(இதைத்தான்) யிவெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்’ (என்று அபூசுஃப்யான் அவர்கள் கிழக்கு ரோமானிய அரசர் ஹிரக்ளீயஸிடம் கூறினார்.)
2804. அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக்ளீயஸ், ‘‘அவருடன் (முஹம்மதுடன்) நீங்கள் புரியும் போர் (முடிவு) எவ்வாறு உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கு நீர், யிபோர் (முடிவு எங்களிடையே) கிணற்று வாளிகள் போன்று சுழல் (முறையில்) அமைகின்றது’ என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். பிறகு அவர்களுக்குச் சாதமாகவே இறுதி முடிவு இருக்கும்” என்று கூறினார்.

2805. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ حُمَيْدٍ، قَالَ سَأَلْتُ أَنَسًا. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا زِيَادٌ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ غَابَ عَمِّي أَنَسُ بْنُ النَّضْرِ عَنْ قِتَالِ بَدْرٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ الْمُشْرِكِينَ، لَئِنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ الْمُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أَصْنَعُ، فَلَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَانْكَشَفَ الْمُسْلِمُونَ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ ـ يَعْنِي أَصْحَابَهُ ـ وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ " ـ يَعْنِي الْمُشْرِكِينَ ـ ثُمَّ تَقَدَّمَ، فَاسْتَقْبَلَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ، فَقَالَ يَا سَعْدُ بْنَ مُعَاذٍ، الْجَنَّةَ، وَرَبِّ النَّضْرِ إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ. قَالَ سَعْدٌ فَمَا اسْتَطَعْتُ يَا رَسُولَ اللَّهِ مَا صَنَعَ. قَالَ أَنَسٌ فَوَجَدْنَا بِهِ بِضْعًا وَثَمَانِينَ ضَرْبَةً بِالسَّيْفِ أَوْ طَعْنَةً بِرُمْحٍ أَوْ رَمْيَةً بِسَهْمٍ، وَوَجَدْنَاهُ قَدْ قُتِلَ وَقَدْ مَثَّلَ بِهِ الْمُشْرِكُونَ، فَمَا عَرَفَهُ أَحَدٌ إِلاَّ أُخْتُهُ بِبَنَانِهِ. قَالَ أَنَسٌ كُنَّا نَرَى أَوْ نَظُنُّ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِيهِ وَفِي أَشْبَاهِهِ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 12
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘தாங்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர், தமது இலட்சிய(மான வீரமரண)த்தை அடைந்துவிட்டனர். அவர்களில் இன்னும் சிலர் (அதனை) எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் ஒரு போதும் மாறிவிடவில்லை. (33:23)
2805. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அவர் (திரும்பி வந்த வுடன்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள வில்லை; (இனி) இணைவைப்பாளர் களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெறச் செய்தால், நான் செய்யப்போவதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்ப்பான்” என்று கூறினார்.
பின்பு உஹுத் போரின்போது முஸ்லிம் கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், ‘‘இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர் களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரவே, ‘‘சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன்மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுத் மலையிலிருந்து பெறுகிறேன்” என்று கூறினார்.
சஅத் (ரலி) அவர்கள் (இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு), ‘‘அவர் செய்த (சாகசத்)தைப் போன்று செய்ய என்னால் இயலவில்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.
நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். இணைவைப்பாளர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்துவிட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னா ரென்று) அறிந்துகொள்ள முடியவில்லை; அவருடைய சகோதரிகூட அவரது விரல்(நுனி)களை வைத்துத்தான் அவரை அடையாளம் காண முடிந்தது.
‘‘அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்ட வர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர்...” (33:23) எனும் இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதிவந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2806. وَقَالَ إِنَّ أُخْتَهُ وَهْىَ تُسَمَّى الرُّبَيِّعَ كَسَرَتْ ثَنِيَّةَ امْرَأَةٍ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْقِصَاصِ، فَقَالَ أَنَسٌ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا. فَرَضُوا بِالأَرْشِ وَتَرَكُوا الْقِصَاصَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ".
பாடம் : 12
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘தாங்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர், தமது இலட்சிய(மான வீரமரண)த்தை அடைந்துவிட்டனர். அவர்களில் இன்னும் சிலர் (அதனை) எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் ஒரு போதும் மாறிவிடவில்லை. (33:23)
2806. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்களுடைய சகோதரி யிருபய்யிஉ’ எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அவளது முன்பல் (பழிக்குப் பழியாக) உடைக்கப்படாது” என்று கூறினார்.
அவ்வாறே, அந்தப் பெண்ணின் குலத்தார் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்ள சம்மதித்துப் பழிவாங்காமல் விட்டுவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஒன்றைச் சொல்லிவிட்டால் அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுகிறான்” என்று கூறினார்கள்.13

2807. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، أُرَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ نَسَخْتُ الصُّحُفَ فِي الْمَصَاحِفِ، فَفَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا، فَلَمْ أَجِدْهَا إِلاَّ مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ، وَهْوَ قَوْلُهُ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ}
பாடம் : 12
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘தாங்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர், தமது இலட்சிய(மான வீரமரண)த்தை அடைந்துவிட்டனர். அவர்களில் இன்னும் சிலர் (அதனை) எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் ஒரு போதும் மாறிவிடவில்லை. (33:23)
2807. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதி யெடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம்தான் பெற்றேன். (ஒரு வழக்கின்போது) அவரது சாட்சியத்தை இரு மனிதர்களின் சாட்சியத் திற்குச் சமமாக நபி (ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர் களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறைவழியில் மரணமடைய வேண்டும் என்ற) தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (33:23)

2808. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ الْفَزَارِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ مُقَنَّعٌ بِالْحَدِيدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُقَاتِلُ وَأُسْلِمُ. قَالَ "" أَسْلِمْ ثُمَّ قَاتِلْ "". فَأَسْلَمَ ثُمَّ قَاتَلَ، فَقُتِلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَمِلَ قَلِيلاً وَأُجِرَ كَثِيرًا "".
பாடம் : 13
அறப்போரில் ஈடுபடுவதற்கு முந்தைய நற்செயல்கள்
‘‘நீங்கள் போர்புரிவதெல்லாம் (உங்கள் போரின் முடிவுகளெல்லாம்) உங்களின் நற்செயல்களை வைத்துத்தான்” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கிறீர் கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரிய செயலாகும். யார் அல்லாஹ்வின் வழியில் ஈயம் பூசப்பட்ட சுவரைப் போன்று உறுதி யாக (ஒன்றுபட்டு) நின்று போர் புரிகின் றார்களோ அவர்களையே அல்லாஹ் விரும்புகிறான். (61:2லி4)
2808. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முதலில்) நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, பிறகு போர் புரிவீராக!” என்று கூறினார்கள். அவ்வாறே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பிறகு (இறைவழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்” என்று கூறினார்கள்.

2809. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ الْبَرَاءِ، وَهْىَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ، أَلاَ تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الْجَنَّةِ، صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي الْبُكَاءِ. قَالَ "" يَا أُمَّ حَارِثَةَ، إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الأَعْلَى "".
பாடம் : 14
எங்கிருந்தோ வந்த அம்பு பாய்ந்து ஒருவர் கொல்லப்படல்
2809. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர் களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த் அல்பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்குத் தாங்கள் அறிவிக்கமாட்டீர்களா? அவர் பத்ர் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர்மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்துவிட்டிருந்தது.14 அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமை யாக இருந்துவிடுவேன்; அவர் வேறெந்த நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ‘‘ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல சோலைகள் உள்ளன. உம்முடைய மகன் (அவற்றில்) மிக உயர்ந்த யிஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க் கச் சோலையை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.

2810. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الرَّجُلُ يُقَاتِلُ لِلْمَغْنَمِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِلذِّكْرِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُرَى مَكَانُهُ، فَمَنْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ "" مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 15
அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவர்
2810. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடு கிறார்; இன்னொரு மனிதர் தமது தகுதி யைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) யார் இறைவழியில் போரிடுபவர் ஆவார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவர்களில் யாருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) யார் அல்லாஹ் வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறாரோ அவரே இறைவழியில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.15

2811. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا عَبَايَةُ بْنُ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو عَبْسٍ، هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَبْرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ "".
பாடம் : 16
இறைவழியில் புழுதி படிந்த பாதங் கள்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியிருக்கும் நாட்டுப்புற அரபியருக்கும் அல்லாஹ்வின் தூதரைவிட்டுப் பின்வாங்குவதும் அவரது உயிரைவிடத் தம் உயிர்கள்மேல் ஆசை கொள்வதும் தகாது. இதற்குக் காரணம், இறைவழியில் அவர்களுக்குத் தாகமோ களைப்போ பசியோ (எது) ஏற்பட்டாலும், இறைமறுப்பாளர்களுக்குக் கோபமூட்டும் வகையில் ஓர் இடத்தில் அவர்கள் கால்வைத்தாலும், பகைவனிடமிருந்து அவர்கள் எதையேனும் சந்தித்தாலும் அதற்குப் பிரதியாக அவர்களுக்கு ஒரு நல்லறம் எழுதப்படாமல் இராது என்பதே ஆகும். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் பிரதிபலனை வீணாக்கமாட்டான். (9:120)
2811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் பாதங்கள் இரண்டிலும் இறைவழியில் புழுதி படிந்திருக்க, அவற்றை நரக நெருப்புத் தீண்டு வதில்லை.
இதை அபூஅப்ஸ் அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.16

2812. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَهُ وَلِعَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ ائْتِيَا أَبَا سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ. فَأَتَيْنَاهُ وَهُوَ وَأَخُوهُ فِي حَائِطٍ لَهُمَا يَسْقِيَانِهِ، فَلَمَّا رَآنَا جَاءَ فَاحْتَبَى وَجَلَسَ فَقَالَ كُنَّا نَنْقُلُ لَبِنَ الْمَسْجِدِ لَبِنَةً لَبِنَةً، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَسَحَ عَنْ رَأْسِهِ الْغُبَارَ وَقَالَ "" وَيْحَ عَمَّارٍ، تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ وَيَدْعُونَهُ إِلَى النَّارِ "".
பாடம் : 17
இறைவழியில் (போராடும்போது) தலையில் படிந்த புழுதியைத் துடைப்பது
2812. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடமும் தம் புதல்வர் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமும், ‘‘அபூசயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் கூறும் ஹதீஸைச் செவியுறுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்களும் அவர்களுடைய (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூசயீத் (ரலி) அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் வந்து, முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டார்கள்.
பிறகு கூறலானார்கள்: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டிருந்தோம். அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரது தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அவர்களை அம்மார், அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தார் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.17

2813. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا رَجَعَ يَوْمَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، فَأَتَاهُ جِبْرِيلُ وَقَدْ عَصَبَ رَأْسَهُ الْغُبَارُ فَقَالَ وَضَعْتَ السِّلاَحَ، فَوَاللَّهِ مَا وَضَعْتُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَأَيْنَ "". قَالَ هَا هُنَا. وَأَوْمَأَ إِلَى بَنِي قُرَيْظَةَ. قَالَتْ فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 18
போருக்குப்பின் குளிப்பதும் (வானவர் ஜிப்ரீல்) புழுதி படிந்தவராக வருவதும்
2813. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் முடிந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலை யைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஆயுதத்தைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இதோ, இங்கே!” என்று பனூ குறைழா (எனும் யூதக்) குலத்தாரை நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.

2814. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ أَنَسٌ أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ்வின் (பின்வரும்) சொல்லி(ல் குறிப்பிடப் படுவோரி)ன் சிறப்பு
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்.
அல்லாஹ் தனது அருளைத் தங்களுக்கு வழங்கிய(தை எண்ணி அ)தற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தம்முடன் (இதுவரை) வந்துசேராமல், தமக்குப் பின்னர் (உயிர்த் தியாகம் செய்து வர) இருப்போருக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவுமாட்டார்கள் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள் மற்றும் மேன்மை குறித்தும், இறைநம்பிக்கையாளர்களின் பிரதிபலனை அல்லாஹ் வீணாக்கமாட்டான் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின் றனர். (3:169லி171)
2814. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிபிஃரு மஊனா’ (எனுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் காலை (நேரத் தொழுகை)களில் பிரார்த்தித்தார்கள். ரிஅல், தக்வான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய கூட்டத்தாரே அவர்கள்.
பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதிவந்தோம்; பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம்.18

2815. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ اصْطَبَحَ نَاسٌ الْخَمْرَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ قُتِلُوا شُهَدَاءَ. فَقِيلَ لِسُفْيَانَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ قَالَ لَيْسَ هَذَا فِيهِ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ்வின் (பின்வரும்) சொல்லி(ல் குறிப்பிடப் படுவோரி)ன் சிறப்பு
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்.
அல்லாஹ் தனது அருளைத் தங்களுக்கு வழங்கிய(தை எண்ணி அ)தற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தம்முடன் (இதுவரை) வந்துசேராமல், தமக்குப் பின்னர் (உயிர்த் தியாகம் செய்து வர) இருப்போருக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவுமாட்டார்கள் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள் மற்றும் மேன்மை குறித்தும், இறைநம்பிக்கையாளர்களின் பிரதிபலனை அல்லாஹ் வீணாக்கமாட்டான் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின் றனர். (3:169லி171)
2815. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.19
அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப் பில் இல்லை” என்று பதிலளித்தார்.

2816. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ جِيءَ بِأَبِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ مُثِّلَ بِهِ وَوُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَذَهَبْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ، فَنَهَانِي قَوْمِي، فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقِيلَ ابْنَةُ عَمْرٍو، أَوْ أُخْتُ عَمْرٍو. فَقَالَ "" لِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا "". قُلْتُ لِصَدَقَةَ أَفِيهِ حَتَّى رُفِعَ قَالَ رُبَّمَا قَالَهُ.
பாடம் : 20
உயிர்த் தியாகிக்கு வானவர்கள் நிழல் தருவது
2816. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உஹுத் போரின்போது) என் தந்தை (அப்துல்லாஹ்), உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் சமூகத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரிவைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர் (ரலி) அவர்களின் மகள் என்றோ அவர்களுடைய சகோதரி என்றோ (அதாவது ஜாபிரின் அத்தை என்றோ, தந்தையின் அத்தை என்றோ) கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஏன் அழுகிறாய்?› அல்லது ‘நீ அழாதே!› வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(புகாரீ ஆகிய) நான் அறிவிப்பாளர் ஸதகா பின் ஃபள்ல் (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர் (உடல்) தூக்கப்படும்வரை (நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஜாபிர் (ரலி) அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் உறுதியின்றிக் கூறினார்கள்)” எனப் பதிலளித் தார்கள்.20

2817. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَىْءٍ، إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ "".
பாடம் : 21
அறப்போர் புரிந்(து உயிர்த் தியாகம் செய்)தவர் உலகத்திற்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுவது
2817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணி யத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறை வழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21