2678. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ يَسْأَلُهُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ "". فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ "". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَصِيَامُ رَمَضَانَ "". قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ "". قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ "". فَأَدْبَرَ الرَّجُلُ وَهْوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفْلَحَ إِنْ صَدَقَ "".
பாடம் : 26 சத்தியம் செய்வது எப்படி?28 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வின் பேரில் சத்தியம் செய்கின்றனர். (9:62,74) பின்னர் அவர்கள், ‘‘நாங்கள் நன்மையையும் நல்லிணக்கத்தையும் தவிர வேறெதையும் கருதவில்லை” என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவாறு (நபியே!) உம்மிடம் வருவார்கள். (4:62) சத்தியம் செய்யும்போது, யிபில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி’ இவற்றில் ஒன்று சொல்லப்படும். (அல்லாஹ்வின் மீதாணையாக என்பதே பொருளாகும்.) நபி (ஸல்) அவர்கள், ‘‘அஸ்ர் தொழு கைக்குப் பிறகு அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்த ஒரு மனிதன்” என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள். அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்யக் கூடாது.
2678. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பகலிலும் இரவி லும் ஐந்து தொழுகைகள் (இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாகும்)” என்று பதில் கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர (வேறு தொழுகை) ஏதும் என்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மேலும், ‘‘ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் ‘‘இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். ‘‘இல்லை; நீயாக விரும்பிச் செலுத்தும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குமேல் நான் அதிகமாகச் செய்யவும்மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும்மாட்டேன்” என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 52
2679. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، قَالَ ذَكَرَ نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ "".
பாடம் : 26 சத்தியம் செய்வது எப்படி?28 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வின் பேரில் சத்தியம் செய்கின்றனர். (9:62,74) பின்னர் அவர்கள், ‘‘நாங்கள் நன்மையையும் நல்லிணக்கத்தையும் தவிர வேறெதையும் கருதவில்லை” என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவாறு (நபியே!) உம்மிடம் வருவார்கள். (4:62) சத்தியம் செய்யும்போது, யிபில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி’ இவற்றில் ஒன்று சொல்லப்படும். (அல்லாஹ்வின் மீதாணையாக என்பதே பொருளாகும்.) நபி (ஸல்) அவர்கள், ‘‘அஸ்ர் தொழு கைக்குப் பிறகு அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்த ஒரு மனிதன்” என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள். அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்யக் கூடாது.
2679. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது அமைதியாக இருக்கட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2680. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَىَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا بِقَوْلِهِ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْهَا "".
பாடம் : 27 பிரதிவாதி சத்தியம் செய்தபிறகு வாதி ஆதாரம் கொண்டுவந்தால் (ஏற்கப்படுமா?) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் சிலர் மற்றச் சிலரைவிட தம் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுரியம் அதிக முள்ளவராக இருக்கலாம்” என்று கூறி னார்கள். ‘‘நேர்மையான ஆதாரம், பொய்யான சத்தியத்தைக் காட்டிலும் (ஏற்றுக்கொள்ள) முன்னுரிமை பெற்றதாகும்” என்று தாவூஸ் (ரஹ்), இப்ராஹீம் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்.29
2680. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கக்கூடும். ஆகவே, எவரது (சாதுரியமான) சொல்லை வைத்து அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை (அவருக்குரியது) என்று நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் ஒதுக்கித்தருகிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அத்தியாயம் : 52
2681. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ، قَالَ لَهُ سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ فَزَعَمْتَ أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالْوَفَاءِ بِالْعَهْدِ وَأَدَاءِ الأَمَانَةِ. قَالَ وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ.
பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். (உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! நிச்சயமாக, அவர் வாக்குறுதியை முழுமை யாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54) (கூஃபா நகர நீதிபதி) சயீத் பின் அம்ர் பின் அல்அஷ்வஃ (ரஹ்) அவர்கள், ‘‘வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து கூறினார். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ என்பாரை) நினைவுகூர்ந்து, ”அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஉ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
2681. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

(கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக் ளீயஸ் என்னிடம், ‘‘அவர் (முஹம்மத்லிஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?› என்று உம்மிடம் நான் கேட்டேன். ‘‘அவர் தொழுகை, வாய்மை, சுயக்கட்டுப்பாடு, வாக்குறுதியை நிறைவேற்றல், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்ப ஒப்படைத்தல்30 ஆகியவற்றைக் கடைப் பிடிக்குமாறு கட்டளையிடுகிறார் என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.

அத்தியாயம் : 52
2682. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، نَافِعِ بْنِ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخَلَفَ "".
பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். (உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! நிச்சயமாக, அவர் வாக்குறுதியை முழுமை யாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54) (கூஃபா நகர நீதிபதி) சயீத் பின் அம்ர் பின் அல்அஷ்வஃ (ரஹ்) அவர்கள், ‘‘வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து கூறினார். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ என்பாரை) நினைவுகூர்ந்து, ”அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஉ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
2682. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2683. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، رضى الله عنهم قَالَ لَمَّا مَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَاءَ أَبَا بَكْرٍ مَالٌ مِنْ قِبَلِ الْعَلاَءِ بْنِ الْحَضْرَمِيِّ، فَقَالَ أَبُو بَكْرٍ مَنْ كَانَ لَهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم دَيْنٌ، أَوْ كَانَتْ لَهُ قِبَلَهُ عِدَةٌ، فَلْيَأْتِنَا. قَالَ جَابِرٌ فَقُلْتُ وَعَدَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُعْطِيَنِي هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا، فَبَسَطَ يَدَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ، قَالَ جَابِرٌ فَعَدَّ فِي يَدِي خَمْسَمِائَةٍ، ثُمَّ خَمْسَمِائَةٍ، ثُمَّ خَمْسَمِائَةٍ.
பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். (உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! நிச்சயமாக, அவர் வாக்குறுதியை முழுமை யாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54) (கூஃபா நகர நீதிபதி) சயீத் பின் அம்ர் பின் அல்அஷ்வஃ (ரஹ்) அவர்கள், ‘‘வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து கூறினார். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ என்பாரை) நினைவுகூர்ந்து, ”அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஉ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
2683. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது, (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (பஹ்ரைன் ஆளுநர்) அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால், அல்லது நபியவர்களிடமிருந்து யாருக் காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)” என்று கூறினார்கள்.

(இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், ‘‘எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். லி ‘‘இப்படிக் கூறியபோது, தம் இரு கைகளையும் ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்” என்று அறிவிப்பாளர் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் லி அபூபக்ர் (ரலி) அவர்கள் என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும், பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.31

அத்தியாயம் : 52
2684. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، عَنْ سَالِمٍ الأَفْطَسِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلَنِي يَهُودِيٌّ مِنْ أَهْلِ الْحِيرَةِ أَىَّ الأَجَلَيْنِ قَضَى مُوسَى قُلْتُ لاَ أَدْرِي حَتَّى أَقْدَمَ عَلَى حَبْرِ الْعَرَبِ فَأَسْأَلَهُ. فَقَدِمْتُ، فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ قَضَى أَكْثَرَهُمَا وَأَطْيَبَهُمَا، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَالَ فَعَلَ.
பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். (உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! நிச்சயமாக, அவர் வாக்குறுதியை முழுமை யாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54) (கூஃபா நகர நீதிபதி) சயீத் பின் அம்ர் பின் அல்அஷ்வஃ (ரஹ்) அவர்கள், ‘‘வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து கூறினார். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ என்பாரை) நினைவுகூர்ந்து, ”அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஉ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
2684. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (இராக்கில் உள்ள) யிஹீரா’வாசியான யூதர் ஒருவர், ‘‘மூசா (அலை) அவர்கள் (எட்டு ஆண்டு அல்லது பத்தாண்டு பணிபுரிதல் என்ற) இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்?” என்று கேட்டார். நான், ‘‘எனக்குத் தெரியாது. நான் அரபுப் பேரறிஞரிடம் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்) சென்று அவரிடம் கேட்கும்வரை (காத்திரு)” என்று கூறினேன். அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன்.

அவர்கள், ‘‘அவ்விரண்டில் அதிக மானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (எவராயினும்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 52
2685. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ، وَكِتَابُكُمُ الَّذِي أُنْزِلَ عَلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم أَحْدَثُ الأَخْبَارِ بِاللَّهِ، تَقْرَءُونَهُ لَمْ يُشَبْ، وَقَدْ حَدَّثَكُمُ اللَّهُ أَنَّ أَهْلَ الْكِتَابِ بَدَّلُوا مَا كَتَبَ اللَّهُ وَغَيَّرُوا بِأَيْدِيهِمُ الْكِتَابَ، فَقَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ، لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلاً أَفَلاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ الْعِلْمِ عَنْ مُسَاءَلَتِهِمْ، وَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلاً قَطُّ يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ.
பாடம் : 29 இணை கற்பிப்போரிடம் சாட்சியம் உள்ளிட்டவை கோரப்படாது. ‘‘பிற சமுதாயங்களிடையே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் அது செல்லாது; ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘நாம் மறுமை நாள்வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம்” (5:14) என்று கூறுகிறான்” என ஷஅபீ  (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களை உண்மைப்படுத்தவும் வேண்டாம்; பொய்ப்பிக்கவும் வேண் டாம். யிநாங்கள் அல்லாஹ்வையும், அவனால் அருளப்பெற்ற வேதங்களையும் நம்புகிறோம்’ என்று மட்டும் கூறுங்கள். (2:136) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2685. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் சமுதாயமே! இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அருளப் பெற்றுள்ள உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியது. அதை நீங்கள் கலப்படமில்லாத நிலையில் ஓதிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங் களின் விவரங்களைக்) கேட்கிறீர்கள்? வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள்; தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு, ‘‘அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்று கூறுகிறார்கள் (என அல்லாஹ் சொல்கின்றான்). (2:79)

(அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள (மார்க்க) ஞானம், அவர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் யாரும் உங்களுக்கு அருளப்பட்ட (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதேயில்லையே.

இதை உபைதுல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2686. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي الشَّعْبِيُّ، أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلُ الْمُدْهِنِ فِي حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا مَثَلُ قَوْمٍ اسْتَهَمُوا سَفِينَةً، فَصَارَ بَعْضُهُمْ فِي أَسْفَلِهَا وَصَارَ بَعْضُهُمْ فِي أَعْلاَهَا، فَكَانَ الَّذِي فِي أَسْفَلِهَا يَمُرُّونَ بِالْمَاءِ عَلَى الَّذِينَ فِي أَعْلاَهَا، فَتَأَذَّوْا بِهِ، فَأَخَذَ فَأْسًا، فَجَعَلَ يَنْقُرُ أَسْفَلَ السَّفِينَةِ، فَأَتَوْهُ فَقَالُوا مَا لَكَ قَالَ تَأَذَّيْتُمْ بِي، وَلاَ بُدَّ لِي مِنَ الْمَاءِ، فَإِنْ أَخَذُوا عَلَى يَدَيْهِ أَنْجَوْهُ وَنَجَّوْا أَنْفُسَهُمْ، وَإِنْ تَرَكُوهُ أَهْلَكُوهُ وَأَهْلَكُوا أَنْفُسَهُمْ "".
பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பேற்பது என்ப(தை முடிவு செய்வ)தற்காகத் தம் எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது, அவர்கள் அருகில் நீர் இருக்கவில்லை. (3:44) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தம் எழுதுகோல்களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களின் எழுதுகோல்கள் நீரோட்டத்துடன் சென்றுவிட்டன. நபி ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மீறி (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று)விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.32 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: சீட்டுக் குலுக்கலில் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய்விட்டார். (37:141) இதில் இடம்பெற்றுள்ள யிமுத்ஹளீன்’ என்பதற்கு, யிசீட்டுக் குலுக்கிப் போடப் பட்டவர்களில் அவரும் ஒருவர்’ என்பது பொருளாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தைச் சத்தியம் செய்யும்படி கூறினார்கள். அவர்கள் விரைந்து (ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு) வந்தார்கள்; ஆகவே, அவர்களில் யியார் (முதலில்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.33
2686. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைச் சட்டங்கள் மீறப்படும்போது வாளாவிருப்பவர், அவற்றை மீறி நடப்பவர் ஆகியோருக்கு உதாரணம் ஒரு கூட்டத் தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த்தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு மேல்தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அதனால் மேல்தளத்திலிருந்தவர்களுக்குத் தொல்லை ஏற்பட்டது.

ஆகவே, (கீழ்த்தளத்தில் இருந்த) ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிடத் தொடங்கினான். மேல்தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, ‘‘உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவன், ‘‘நீங்கள் என்னால் தொல்லைக்குள்ளானீர் கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால் கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்வேன்)” என்று கூறினான்.

அப்போது (துளையிட விடாமல்) அவனுடைய இரு கைகளையும் அவர்கள் பிடித்துக்கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பாற்றிக்கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டுவிட்டால் அவனையும் அழித்துவிடுவார்கள்; தங்களையும் அழித்துக்கொள்வார்கள்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2687. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدٍ الأَنْصَارِيُّ، أَنَّ أُمَّ الْعَلاَءِ، امْرَأَةً مِنْ نِسَائِهِمْ قَدْ بَايَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُ سَهْمُهُ فِي السُّكْنَى حِينَ أَقْرَعَتِ الأَنْصَارُ سُكْنَى الْمُهَاجِرِينَ. قَالَتْ أُمُّ الْعَلاَءِ فَسَكَنَ عِنْدَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَاشْتَكَى، فَمَرَّضْنَاهُ حَتَّى إِذَا تُوُفِّيَ وَجَعَلْنَاهُ فِي ثِيَابِهِ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ. فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ "". فَقُلْتُ لاَ أَدْرِي بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا عُثْمَانُ فَقَدْ جَاءَهُ ـ وَاللَّهِ ـ الْيَقِينُ وَإِنِّي لأَرْجُو لَهُ الْخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي "". قَالَتْ فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا، وَأَحْزَنَنِي ذَلِكَ قَالَتْ فَنِمْتُ فَأُرِيتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَقَالَ "" ذَلِكَ عَمَلُهُ "".
பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பேற்பது என்ப(தை முடிவு செய்வ)தற்காகத் தம் எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது, அவர்கள் அருகில் நீர் இருக்கவில்லை. (3:44) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தம் எழுதுகோல்களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களின் எழுதுகோல்கள் நீரோட்டத்துடன் சென்றுவிட்டன. நபி ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மீறி (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று)விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.32 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: சீட்டுக் குலுக்கலில் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய்விட்டார். (37:141) இதில் இடம்பெற்றுள்ள யிமுத்ஹளீன்’ என்பதற்கு, யிசீட்டுக் குலுக்கிப் போடப் பட்டவர்களில் அவரும் ஒருவர்’ என்பது பொருளாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தைச் சத்தியம் செய்யும்படி கூறினார்கள். அவர்கள் விரைந்து (ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு) வந்தார்கள்; ஆகவே, அவர்களில் யியார் (முதலில்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.33
2687. காரிஜா பின் ஸைத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவரான உம்முல் அலா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தார்.34 அவர் என்னிடம் தெரிவித்ததாவது:

(மக்கா முஸ்லிம்களான) யிமுஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்கவைப்பது’ என்பதை அறிய அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களின் பங்கில் வந்தது. ஆகவே, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் இறந்த போது, அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு)விட்டோம்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), ‘‘அபூசாயிபே! உங்கள்மீது இறையருள் உண்டாவதாக! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கு நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவரிடம் எப்படி நடந்துகொள்ளப்படும் (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?)› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ‘‘அது அவருடைய (நற்)செயல்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 52
2688. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பேற்பது என்ப(தை முடிவு செய்வ)தற்காகத் தம் எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது, அவர்கள் அருகில் நீர் இருக்கவில்லை. (3:44) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தம் எழுதுகோல்களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களின் எழுதுகோல்கள் நீரோட்டத்துடன் சென்றுவிட்டன. நபி ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மீறி (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று)விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.32 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: சீட்டுக் குலுக்கலில் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய்விட்டார். (37:141) இதில் இடம்பெற்றுள்ள யிமுத்ஹளீன்’ என்பதற்கு, யிசீட்டுக் குலுக்கிப் போடப் பட்டவர்களில் அவரும் ஒருவர்’ என்பது பொருளாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தைச் சத்தியம் செய்யும்படி கூறினார்கள். அவர்கள் விரைந்து (ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு) வந்தார்கள்; ஆகவே, அவர்களில் யியார் (முதலில்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.33
2688. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாருடைய பெயர் வருகிறதோ அவர் நபி (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்படுவார். நபி (ஸல்) அவர்கள் (தம்) துணைவியரில் ஒவ்வொருவருக்கும் தமது இரவையும் பகலையும் பங்கிட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும் இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள்.

இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

அத்தியாயம் : 52
2689. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا "".
பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பேற்பது என்ப(தை முடிவு செய்வ)தற்காகத் தம் எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது, அவர்கள் அருகில் நீர் இருக்கவில்லை. (3:44) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தம் எழுதுகோல்களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களின் எழுதுகோல்கள் நீரோட்டத்துடன் சென்றுவிட்டன. நபி ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மீறி (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று)விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.32 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: சீட்டுக் குலுக்கலில் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய்விட்டார். (37:141) இதில் இடம்பெற்றுள்ள யிமுத்ஹளீன்’ என்பதற்கு, யிசீட்டுக் குலுக்கிப் போடப் பட்டவர்களில் அவரும் ஒருவர்’ என்பது பொருளாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தைச் சத்தியம் செய்யும்படி கூறினார்கள். அவர்கள் விரைந்து (ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு) வந்தார்கள்; ஆகவே, அவர்களில் யியார் (முதலில்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.33
2689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையி(ல் நிற்பதி)லும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.

தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.36

அத்தியாயம் : 52

2690. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه أَنَّ أُنَاسًا، مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ كَانَ بَيْنَهُمْ شَىْءٌ، فَخَرَجَ إِلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ يُصْلِحُ بَيْنَهُمْ، فَحَضَرَتِ الصَّلاَةُ، وَلَمْ يَأْتِ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَجَاءَ بِلاَلٌ، فَأَذَّنَ بِلاَلٌ بِالصَّلاَةِ، وَلَمْ يَأْتِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَجَاءَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حُبِسَ، وَقَدْ حَضَرَتِ الصَّلاَةُ فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ فَقَالَ نَعَمْ إِنْ شِئْتَ. فَأَقَامَ الصَّلاَةَ فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ، ثُمَّ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْشِي فِي الصُّفُوفِ، حَتَّى قَامَ فِي الصَّفِّ الأَوَّلِ، فَأَخَذَ النَّاسُ بِالتَّصْفِيحِ حَتَّى أَكْثَرُوا، وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَكَادُ يَلْتَفِتُ فِي الصَّلاَةِ، فَالْتَفَتَ فَإِذَا هُوَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَرَاءَهُ فَأَشَارَ إِلَيْهِ بِيَدِهِ، فَأَمَرَهُ يُصَلِّي كَمَا هُوَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَهُ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى دَخَلَ فِي الصَّفِّ، وَتَقَدَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ مَا لَكُمْ إِذَا نَابَكُمْ شَىْءٌ فِي صَلاَتِكُمْ أَخَذْتُمْ بِالتَّصْفِيحِ، إِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ، فَإِنَّهُ لا يَسْمَعُهُ أَحَدٌ إِلاَّ الْتَفَتَ، يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ حِينَ أَشَرْتُ إِلَيْكَ لَمْ تُصَلِّ بِالنَّاسِ "". فَقَالَ مَا كَانَ يَنْبَغِي لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 மக்களிடையே சமாதானம் செய்துவைத்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தர்மம், அல்லது நற்செயல், அல்லது மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தல் ஆகியவற்றைத் தூண்டக்கூடியவர்(களின் இரகசிய உரையாடல்)களைத் தவிர, அவர்களின் பெரும்பாலான இரகசிய உரையாடல்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து இவற்றைச் செய்பவருக்கு, விரைவில் மாபெரும் பிரதிபலனை நாம் வழங்கு வோம். (4:114) மக்களுக்கிடையே சமாதானம் செய்துவைப்பதற்காகத் தலைவர் தம் தோழர்களுடன் (சண்டை சச்சரவுள்ள) பகுதிகளுக்குச் செல்வது.
2690. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். (அதன் பிறகும்) நபி (ஸல்) அவர்கள் வரவில்லை.

ஆகவே, பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தடுக்கப்பட்டுள்ளார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. ஆகவே, தாங்கள் மக்களுக்கு(த் தலைமை தாங்கி)த் தொழுவிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிப் பதற்காக) முன்னே சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்து வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டத் தொடங்கி, இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை யின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். அங்கே தமக்குப் பின்னே நபி (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுவிக்கும் படி கட்டளையிட்டார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின் வாக்கில் நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்துகொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்தபின் மக்களை நோக்கி, ‘‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கிவிடுகிறீர்கள். பெண்கள்தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக் குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ்வே தூய்மையானவன்) என்று கூறட்டும்.

ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்” என்று கூறிவிட்டு, ‘‘அபூபக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுவிக்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள்.2

அத்தியாயம் : 53
2691. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَوْ أَتَيْتَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ. فَانْطَلَقَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَكِبَ حِمَارًا، فَانْطَلَقَ الْمُسْلِمُونَ يَمْشُونَ مَعَهُ، وَهْىَ أَرْضٌ سَبِخَةٌ، فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ. فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنْهُمْ وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ. فَغَضِبَ لِعَبْدِ اللَّهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَشَتَمَا، فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ، فَكَانَ بَيْنَهُمَا ضَرْبٌ بِالْجَرِيدِ وَالأَيْدِي وَالنِّعَالِ، فَبَلَغَنَا أَنَّهَا أُنْزِلَتْ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا}.
பாடம் : 1 மக்களிடையே சமாதானம் செய்துவைத்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தர்மம், அல்லது நற்செயல், அல்லது மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தல் ஆகியவற்றைத் தூண்டக்கூடியவர்(களின் இரகசிய உரையாடல்)களைத் தவிர, அவர்களின் பெரும்பாலான இரகசிய உரையாடல்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து இவற்றைச் செய்பவருக்கு, விரைவில் மாபெரும் பிரதிபலனை நாம் வழங்கு வோம். (4:114) மக்களுக்கிடையே சமாதானம் செய்துவைப்பதற்காகத் தலைவர் தம் தோழர்களுடன் (சண்டை சச்சரவுள்ள) பகுதிகளுக்குச் செல்வது.
2691. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது.3 நபி (ஸல்) அவர்கள் அவரிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம் களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவரை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவர், ‘‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கழுதையின் துர் நாற்றம் எனக்குத் தொல்லை தந்துவிட்டது” என்று கூறினார்.

அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்” என்று கூறினார்.

அப்துல்லாஹ்வுக்காக அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏச, அன்சாரியும் ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோப மடைந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும் கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது, ‘‘இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்” (49:9) எனும் வசனம் அருளப்பட்டது என்ற செய்தி எங்களுக்கு எட்டியது.

அத்தியாயம் : 53
2692. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا "".
பாடம் : 2 மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவர் (அதற்காகப் பொய்யே சொன்னாலும்) அவர் பொய்யர் அல்லர்.
2692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவர் பொய்யர் அல்லர். அவர் (இங்கும் அங்கும்) நல்லதை லிபுனைந்துலி கூறுகிறார்.

இதை உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 53
2693. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، وَإِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، قُبَاءٍ اقْتَتَلُوا حَتَّى تَرَامَوْا بِالْحِجَارَةِ، فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ "" اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ "".
பாடம் : 3 தலைவர் தம் தோழர்களிடம், ‘‘நம்மை அழைத்துச் செல்லுங்கள்; நாம் (அவர்களிடையே) சமாதானம் செய்துவைப்போம்” என்று கூறுவது
2693. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிகுபா’வாசிகள் தமக்கிடையே சண்டை யிட்டுக்கொண்டனர்; ஒருவர் மீதொருவர் கற்களை வீசிக்கொள்ளுமளவுக்கு அவர் களது சண்டை இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ‘‘நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைப்போம்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 53
2694. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} قَالَتْ هُوَ الرَّجُلُ يَرَى مِنِ امْرَأَتِهِ مَا لاَ يُعْجِبُهُ، كِبَرًا أَوْ غَيْرَهُ، فَيُرِيدُ فِرَاقَهَا فَتَقُولُ أَمْسِكْنِي، وَاقْسِمْ لِي مَا شِئْتَ. قَالَتْ فَلاَ بَأْسَ إِذَا تَرَاضَيَا.
பாடம் : 4 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: கணவன்லிமனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. சமாதானமே சிறந்ததாகும். (4:128)
2694. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு பெண், தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதால் அவர்கள்மீது எந்தக் குற்றமு மில்லை” (4:128) எனும் குர்ஆன் வசனத் திற்கு விளக்கமளித்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறுகூறினார்கள்:

ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத முதுமை உள்ளிட்டவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்புவான். அப்போது அவள் ‘‘என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக்கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்துவிடு” என்று சொல்வதை இது குறிக்கும். இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால், இதில் தவறேதுமில்லை.

அத்தியாயம் : 53
2695. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، رضى الله عنهما قَالاَ جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. فَقَامَ خَصْمُهُ فَقَالَ صَدَقَ، اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. فَقَالَ الأَعْرَابِيُّ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَقَالُوا لِي عَلَى ابْنِكَ الرَّجْمُ. فَفَدَيْتُ ابْنِي مِنْهُ بِمِائَةٍ مِنَ الْغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ، فَقَالُوا إِنَّمَا عَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا الْوَلِيدَةُ وَالْغَنَمُ فَرَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ ـ لِرَجُلٍ ـ فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا فَارْجُمْهَا "". فَغَدَا عَلَيْهَا أُنَيْسٌ فَرَجَمَهَا.
பாடம் : 5 (மக்கள் தமக்கிடையே) அநீதியான சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டால் அது ரத்துச் செய்யப்படும்.
2695. அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் கூறியதாவது:

(ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவருடைய எதிரி எழுந்து நின்று, ‘‘இவர் சொன்னது உண்மையே. எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார்.

அந்தக் கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), ‘‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், யிஉன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், யிஉம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடி களும், ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும் ஆடுகளும் உம்மிடம் திருப்பித்தரப்பட வேண்டும்; உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ், அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை அளித்தார்.

அத்தியாயம் : 53