2657. حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقْبِيَةٌ فَقَالَ لِي أَبِي مَخْرَمَةُ انْطَلِقْ بِنَا إِلَيْهِ عَسَى أَنْ يُعْطِيَنَا مِنْهَا شَيْئًا. فَقَامَ أَبِي عَلَى الْبَابِ فَتَكَلَّمَ، فَعَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَوْتَهُ فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَعَهُ قَبَاءٌ وَهُوَ يُرِيهِ مَحَاسِنَهُ وَهُوَ يَقُولَ "" خَبَأْتُ هَذَا لَكَ، خَبَأْتُ هَذَا لَكَ "".
பாடம் : 11 கண்பார்வையற்றவரின் சாட்சியம், நடவடிக்கை, திருமணம், பிறருக்கு அவர் திருமணம் செய்துவைத்தல், அவரது கொடுக்கல் வாங்கல், அவர் பாங்கு சொல்வது போன்றவற்றில் அவரை அங்கீகரித்தல் ஆகியவை யும் குரல்களைக் கொண்டு அறியப் பட்டவையும் காசிம் பின் முஹம்மத் (ரஹ்), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), இப்னு சீரின் (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), அதாஉ (ரஹ்) ஆகியோர், ‘‘கண்பார்வையற்றவரின் சாட்சியம் செல்லும்” என்று கூறுகிறார்கள். ‘‘கண்பார்வையற்றவர் புரிந்துகொள்ளும் ஆற்றலுடையவராக இருந்தால் அவரது சாட்சியம் செல்லும்” என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘எத்தனையோ விஷயங்களில் கண்பார்வையற்றவரின் சாட்சியம் செல்லும்” என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (கண்பார்வையற்ற முதியவராக இருந்த போது) ஒரு சாட்சியம் அளித்தால் அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா?” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓர் ஆளை அனுப்பி (செய்தியறிந்து) சூரியன் மறைந்து விட்டிருந்தால், நோன்பை நிறைவு செய்துகொள்வார்கள்; அதிகாலை நேரம் பற்றிக் கேட்பார்கள்; அது உதயமாகி விட்டது என்று கூறப்பட்டால் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்வார்கள். ‘‘(அன்னை மைமூனா (ரலி) அவர் களால் விடுதலை ஆவணம் அளிக்கப்பட்ட அடிமையான) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் என் குரலைப் புரிந்துகொண்டு, யிசுலைமானே! உள்ளே செல். ஏனெனில், நீ கடன் ஏதும் பாக்கி வைக்காத விடுதலை ஆவணம் அளிக்கப்பட்ட அடிமையாவாய்’ என்று கூறினார்கள்” என சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள், முகத்திரை அணிந்த பெண் சாட்சியம் அளிப்பதை அனுமதித்தார்கள்.
2657. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்” என்று கூறினார்கள். என் தந்தை (நபி (ஸல்) அவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்துகொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘உமக்காக இதை நான் எடுத்து வைத்தேன்; உமக்காக இதை நான் எடுத்து வைத்தேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 52
2658. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا "".
பாடம் : 12 பெண்களின் சாட்சியம் (செல் லும்) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (சாட்சி சொல்வதற்கு) இரண்டு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சிகளாக இருக் கட்டும்! (2:282)
2658. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (பாதியளவுதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதுதான் அவர்களது அறிவின் குறைபாடாகும்” என்று கூறினார்கள்.19

அத்தியாயம் : 52
2659. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ،. وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ حَدَّثَنِي عُقْبَةُ بْنُ الْحَارِثِ، أَوْ سَمِعْتُهُ مِنْهُ، أَنَّهُ تَزَوَّجَ أُمَّ يَحْيَى بِنْتَ أَبِي إِهَابٍ قَالَ فَجَاءَتْ أَمَةٌ سَوْدَاءُ فَقَالَتْ قَدْ أَرْضَعْتُكُمَا. فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْرَضَ عَنِّي، قَالَ فَتَنَحَّيْتُ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ قَالَ "" وَكَيْفَ وَقَدْ زَعَمَتْ أَنْ قَدْ أَرْضَعَتْكُمَا "". فَنَهَاهُ عَنْهَا.
பாடம் : 13 ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் சாட்சியம் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அடிமையின் சாட்சியம், அவன் நேர்மையானவனாக இருந்தால் செல்லும். நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களும், ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும் அடிமைகளின் சாட்சியத்தை அனுமதித் தார்கள். ‘‘அடிமையின் சாட்சியம் (எல்லா விஷயங்களிலும்) செல்லும்; அடிமை, தன் எஜமானுக்குச் சாதகமாக அளிக்கும் சாட்சியத்தைத் தவிர” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘சாதாரண விஷயங்களில் மட்டும் அடிமையின் சாட்சியம் செல்லும்” என்று ஹசன் (ரஹ்) அவர்களும், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும் கூறுகிறார் கள். (தமது கருத்தை நியாயப்படுத்தும் விதத்தில்) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், ‘‘நீங்கள் அனைவரும் ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் மக்களே” என்று கூறினார்கள்.
2659. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மு யஹ்யா பின்த் அபீஇஹாபை மணந்துகொண்டேன். (இந்நிலையில்) ஒரு கறுப்பு நிற அடிமைப் பெண் வந்து, ‘‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பிக்கொண்டு) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் என் இருப்பிடத்திலிருந்து விலகி (அவர்களின் முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்ப)க் கூறினேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டி யிருப்பதாகச் சொல்லும்போது எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)?” என்று கேட்டார்கள்; என்னை அவளுடன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 52
2660. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً فَجَاءَتِ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُكُمَا. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" وَكَيْفَ وَقَدْ قِيلَ دَعْهَا عَنْكَ "" أَوْ نَحْوَهُ.
பாடம் : 14 செவிலித் தாயின் சாட்சியம்
2660. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். (இந்நிலையில்) வேறொரு பெண் வந்து, ‘‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கி றேன்” என்று கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்: (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டுவிட்ட பிறகு எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்துவிடு” என்றோ அது போன்றதையோ கூறினார்கள்.

அத்தியாயம் : 52
2661. حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَأَفْهَمَنِي بَعْضَهُ أَحْمَدُ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِنْهُ، قَالَ الزُّهْرِيُّ، وَكُلُّهُمْ حَدَّثَنِي طَائِفَةً مِنْ حَدِيثِهَا وَبَعْضُهُمْ أَوْعَى مِنْ بَعْضٍ، وَأَثْبَتُ لَهُ اقْتِصَاصًا، وَقَدْ وَعَيْتُ عَنْ كُلِّ وَاحِدٍ مِنْهُمُ الْحَدِيثَ الَّذِي حَدَّثَنِي عَنْ عَائِشَةَ، وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا. زَعَمُوا أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزَاةٍ غَزَاهَا فَخَرَجَ سَهْمِي، فَخَرَجْتُ مَعَهُ بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ، فَأَنَا أُحْمَلُ فِي هَوْدَجٍ وَأُنْزَلُ فِيهِ، فَسِرْنَا حَتَّى إِذَا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ غَزْوَتِهِ تِلْكَ، وَقَفَلَ وَدَنَوْنَا مِنَ الْمَدِينَةِ، آذَنَ لَيْلَةً بِالرَّحِيلِ، فَقُمْتُ حِينَ آذَنُوا بِالرَّحِيلِ، فَمَشَيْتُ حَتَّى جَاوَزْتُ الْجَيْشَ، فَلَمَّا قَضَيْتُ شَأْنِي أَقْبَلْتُ إِلَى الرَّحْلِ، فَلَمَسْتُ صَدْرِي، فَإِذَا عِقْدٌ لِي مِنْ جَزْعِ أَظْفَارٍ قَدِ انْقَطَعَ، فَرَجَعْتُ فَالْتَمَسْتُ عِقْدِي، فَحَبَسَنِي ابْتِغَاؤُهُ، فَأَقْبَلَ الَّذِينَ يَرْحَلُونَ لِي، فَاحْتَمَلُوا هَوْدَجِي فَرَحَلُوهُ عَلَى بَعِيرِي الَّذِي كُنْتُ أَرْكَبُ، وَهُمْ يَحْسِبُونَ أَنِّي فِيهِ، وَكَانَ النِّسَاءُ إِذْ ذَاكَ خِفَافًا لَمْ يَثْقُلْنَ وَلَمْ يَغْشَهُنَّ اللَّحْمُ، وَإِنَّمَا يَأْكُلْنَ الْعُلْقَةَ مِنَ الطَّعَامِ، فَلَمْ يَسْتَنْكِرِ الْقَوْمُ حِينَ رَفَعُوهُ ثِقَلَ الْهَوْدَجِ فَاحْتَمَلُوهُ وَكُنْتُ جَارِيَةً حَدِيثَةَ السِّنِّ، فَبَعَثُوا الْجَمَلَ وَسَارُوا، فَوَجَدْتُ عِقْدِي بَعْدَ مَا اسْتَمَرَّ الْجَيْشُ، فَجِئْتُ مَنْزِلَهُمْ وَلَيْسَ فِيهِ أَحَدٌ، فَأَمَمْتُ مَنْزِلِي الَّذِي كُنْتُ بِهِ فَظَنَنْتُ أَنَّهُمْ سَيَفْقِدُونِي فَيَرْجِعُونَ إِلَىَّ، فَبَيْنَا أَنَا جَالِسَةٌ غَلَبَتْنِي عَيْنَاىَ فَنِمْتُ، وَكَانَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ السُّلَمِيُّ ثُمَّ الذَّكْوَانِيُّ مِنْ وَرَاءِ الْجَيْشِ، فَأَصْبَحَ عِنْدَ مَنْزِلِي فَرَأَى سَوَادَ إِنْسَانٍ نَائِمٍ فَأَتَانِي، وَكَانَ يَرَانِي قَبْلَ الْحِجَابِ فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ أَنَاخَ رَاحِلَتَهُ، فَوَطِئَ يَدَهَا فَرَكِبْتُهَا فَانْطَلَقَ يَقُودُ بِي الرَّاحِلَةَ، حَتَّى أَتَيْنَا الْجَيْشَ بَعْدَ مَا نَزَلُوا مُعَرِّسِينَ فِي نَحْرِ الظَّهِيرَةِ، فَهَلَكَ مَنْ هَلَكَ، وَكَانَ الَّذِي تَوَلَّى الإِفْكَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، فَقَدِمْنَا الْمَدِينَةَ فَاشْتَكَيْتُ بِهَا شَهْرًا، يُفِيضُونَ مِنْ قَوْلِ أَصْحَابِ الإِفْكِ، وَيَرِيبُنِي فِي وَجَعِي أَنِّي لاَ أَرَى مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم اللُّطْفَ الَّذِي كُنْتُ أَرَى مِنْهُ حِينَ أَمْرَضُ، إِنَّمَا يَدْخُلُ فَيُسَلِّمُ ثُمَّ يَقُولُ "" كَيْفَ تِيكُمْ "". لاَ أَشْعُرُ بِشَىْءٍ مِنْ ذَلِكَ حَتَّى نَقَهْتُ، فَخَرَجْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ قِبَلَ الْمَنَاصِعِ مُتَبَرَّزُنَا، لاَ نَخْرُجُ إِلاَّ لَيْلاً إِلَى لَيْلٍ، وَذَلِكَ قَبْلَ أَنْ نَتَّخِذَ الْكُنُفَ قَرِيبًا مِنْ بُيُوتِنَا، وَأَمْرُنَا أَمْرُ الْعَرَبِ الأُوَلِ فِي الْبَرِّيَّةِ أَوْ فِي التَّنَزُّهِ، فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ بِنْتُ أَبِي رُهْمٍ نَمْشِي، فَعَثُرَتْ فِي مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا بِئْسَ مَا قُلْتِ، أَتَسُبِّينَ رَجُلاً شَهِدَ بَدْرًا فَقَالَتْ يَا هَنْتَاهْ أَلَمْ تَسْمَعِي مَا قَالُوا فَأَخْبَرَتْنِي بِقَوْلِ أَهْلِ الإِفْكِ، فَازْدَدْتُ مَرَضًا إِلَى مَرَضِي، فَلَمَّا رَجَعْتُ إِلَى بَيْتِي دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمَ فَقَالَ "" كَيْفَ تِيكُمْ "". فَقُلْتُ ائْذَنْ لِي إِلَى أَبَوَىَّ. قَالَتْ وَأَنَا حِينَئِذٍ أُرِيدُ أَنْ أَسْتَيْقِنَ الْخَبَرَ مِنْ قِبَلِهِمَا، فَأَذِنَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُ أَبَوَىَّ فَقُلْتُ لأُمِّي مَا يَتَحَدَّثُ بِهِ النَّاسُ فَقَالَتْ يَا بُنَيَّةُ هَوِّنِي عَلَى نَفْسِكِ الشَّأْنَ، فَوَاللَّهِ لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ قَطُّ وَضِيئَةٌ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا وَلَهَا ضَرَائِرُ إِلاَّ أَكْثَرْنَ عَلَيْهَا. فَقُلْتُ سُبْحَانَ اللَّهِ وَلَقَدْ يَتَحَدَّثُ النَّاسُ بِهَذَا قَالَتْ فَبِتُّ تِلْكَ اللَّيْلَةَ حَتَّى أَصْبَحْتُ لاَ يَرْقَأُ لِي دَمْعٌ وَلاَ أَكْتَحِلُ بِنَوْمٍ، ثُمَّ أَصْبَحْتُ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأُسَامَةَ بْنَ زَيْدٍ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ، يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَأَشَارَ عَلَيْهِ بِالَّذِي يَعْلَمُ فِي نَفْسِهِ مِنَ الْوُدِّ لَهُمْ، فَقَالَ أُسَامَةُ أَهْلُكَ يَا رَسُولَ اللَّهِ وَلاَ نَعْلَمُ وَاللَّهِ إِلاَّ خَيْرًا، وَأَمَّا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَسَلِ الْجَارِيَةَ تَصْدُقْكَ. فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَرِيرَةَ فَقَالَ "" يَا بَرِيرَةُ هَلْ رَأَيْتِ فِيهَا شَيْئًا يَرِيبُكِ "". فَقَالَتْ بَرِيرَةُ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، إِنْ رَأَيْتُ مِنْهَا أَمْرًا أَغْمِصُهُ عَلَيْهَا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنِ الْعَجِينَ فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَوْمِهِ، فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ ابْنِ سَلُولَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِي، فَوَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلاَّ خَيْرًا، وَقَدْ ذَكَرُوا رَجُلاً مَا عَلِمْتُ عَلَيْهِ إِلاَّ خَيْرًا، وَمَا كَانَ يَدْخُلُ عَلَى أَهْلِي إِلاَّ مَعِي "". فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا وَاللَّهِ أَعْذِرُكَ مِنْهُ، إِنْ كَانَ مِنَ الأَوْسِ ضَرَبْنَا عُنُقَهُ، وَإِنْ كَانَ مِنْ إِخْوَانِنَا مِنَ الْخَزْرَجِ أَمَرْتَنَا فَفَعَلْنَا فِيهِ أَمْرَكَ. فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ وَهُوَ سَيِّدُ الْخَزْرَجِ، وَكَانَ قَبْلَ ذَلِكَ رَجُلاً صَالِحًا وَلَكِنِ احْتَمَلَتْهُ الْحَمِيَّةُ فَقَالَ كَذَبْتَ لَعَمْرُ اللَّهِ، لاَ تَقْتُلُهُ وَلاَ تَقْدِرُ عَلَى ذَلِكَ، فَقَامَ أُسَيْدُ بْنُ الْحُضَيْرِ فَقَالَ كَذَبْتَ لَعَمْرُ اللَّهِ، وَاللَّهِ لَنَقْتُلَنَّهُ، فَإِنَّكَ مُنَافِقٌ تُجَادِلُ عَنِ الْمُنَافِقِينَ. فَثَارَ الْحَيَّانِ الأَوْسُ وَالْخَزْرَجُ حَتَّى هَمُّوا، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَنَزَلَ فَخَفَّضَهُمْ حَتَّى سَكَتُوا وَسَكَتَ، وَبَكَيْتُ يَوْمِي لاَ يَرْقَأُ لِي دَمْعٌ وَلاَ أَكْتَحِلُ بِنَوْمٍ، فَأَصْبَحَ عِنْدِي أَبَوَاىَ، قَدْ بَكَيْتُ لَيْلَتَيْنِ وَيَوْمًا حَتَّى أَظُنُّ أَنَّ الْبُكَاءَ فَالِقٌ كَبِدِي ـ قَالَتْ ـ فَبَيْنَا هُمَا جَالِسَانِ عِنْدِي وَأَنَا أَبْكِي إِذِ اسْتَأْذَنَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَأَذِنْتُ لَهَا، فَجَلَسَتْ تَبْكِي مَعِي، فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ إِذْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ، وَلَمْ يَجْلِسْ عِنْدِي مِنْ يَوْمِ قِيلَ فِيَّ مَا قِيلَ قَبْلَهَا، وَقَدْ مَكُثَ شَهْرًا لاَ يُوحَى إِلَيْهِ فِي شَأْنِي شَىْءٌ ـ قَالَتْ ـ فَتَشَهَّدَ ثُمَّ قَالَ "" يَا عَائِشَةُ فَإِنَّهُ بَلَغَنِي عَنْكِ كَذَا وَكَذَا، فَإِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ، فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبِهِ ثُمَّ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ "". فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَقَالَتَهُ قَلَصَ دَمْعِي حَتَّى مَا أُحِسُّ مِنْهُ قَطْرَةً وَقُلْتُ لأَبِي أَجِبْ عَنِّي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقُلْتُ لأُمِّي أَجِيبِي عَنِّي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا قَالَ. قَالَتْ وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَتْ وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ لاَ أَقْرَأُ كَثِيرًا مِنَ الْقُرْآنِ فَقُلْتُ إِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ أَنَّكُمْ سَمِعْتُمْ مَا يَتَحَدَّثُ بِهِ النَّاسُ، وَوَقَرَ فِي أَنْفُسِكُمْ وَصَدَّقْتُمْ بِهِ، وَلَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي بَرِيئَةٌ. وَاللَّهُ يَعْلَمُ إِنِّي لَبَرِيئَةٌ لاَ تُصَدِّقُونِي بِذَلِكَ، وَلَئِنِ اعْتَرَفْتُ لَكُمْ بِأَمْرٍ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ لَتُصَدِّقُنِّي وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلاً إِلاَّ أَبَا يُوسُفَ إِذْ قَالَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} ثُمَّ تَحَوَّلْتُ عَلَى فِرَاشِي، وَأَنَا أَرْجُو أَنْ يُبَرِّئَنِي اللَّهُ، وَلَكِنْ وَاللَّهِ مَا ظَنَنْتُ أَنْ يُنْزِلَ فِي شَأْنِي وَحْيًا، وَلأَنَا أَحْقَرُ فِي نَفْسِي مِنْ أَنْ يُتَكَلَّمَ بِالْقُرْآنِ فِي أَمْرِي، وَلَكِنِّي كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللَّهُ، فَوَاللَّهِ مَا رَامَ مَجْلِسَهُ وَلاَ خَرَجَ أَحَدٌ مِنْ أَهْلِ الْبَيْتِ حَتَّى أُنْزِلَ عَلَيْهِ، فَأَخَذَهُ مَا كَانَ يَأْخُذُهُ مِنَ الْبُرَحَاءِ، حَتَّى إِنَّهُ لَيَتَحَدَّرُ مِنْهُ مِثْلُ الْجُمَانِ مِنَ الْعَرَقِ فِي يَوْمٍ شَاتٍ، فَلَمَّا سُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَضْحَكُ، فَكَانَ أَوَّلَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا أَنْ قَالَ لِي "" يَا عَائِشَةُ، احْمَدِي اللَّهَ فَقَدْ بَرَّأَكِ اللَّهُ "". فَقَالَتْ لِي أُمِّي قُومِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقُلْتُ لاَ وَاللَّهِ، لاَ أَقُومُ إِلَيْهِ، وَلاَ أَحْمَدُ إِلاَّ اللَّهَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ} الآيَاتِ، فَلَمَّا أَنْزَلَ اللَّهُ هَذَا فِي بَرَاءَتِي قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ رضى الله عنه ـ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحِ بْنِ أُثَاثَةَ لِقَرَابَتِهِ مِنْهُ وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا بَعْدَ مَا قَالَ لِعَائِشَةَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ} إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} فَقَالَ أَبُو بَكْرٍ بَلَى، وَاللَّهِ إِنِّي لأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ الَّذِي كَانَ يُجْرِي عَلَيْهِ. وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ عَنْ أَمْرِي، فَقَالَ "" يَا زَيْنَبُ، مَا عَلِمْتِ مَا رَأَيْتِ "". فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَحْمِي سَمْعِي وَبَصَرِي، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ خَيْرًا، قَالَتْ وَهْىَ الَّتِي كَانَتْ تُسَامِينِي، فَعَصَمَهَا اللَّهُ بِالْوَرَعِ. قَالَ وَحَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، مِثْلَهُ. قَالَ وَحَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، مِثْلَهُ.
பாடம் : 15 பெண்களில் ஒருவர் மற்றவரை நேர்மையானவர் என்று உறுதி செய்வது
2661. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது என்ப தைத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் யாரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல் வார்கள்.

இவ்வாறே, அவர்கள் மேற்கொண்ட ஓர் அறப்போரின்போது,20 (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக் கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.

நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்ற மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்துக்கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது (தற்செயலாக) என் நெஞ்சை நான் தொட்டுப்பார்த்தேன்; (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக்கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

ஆகவே, எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் (வைத்துக்) கட்டுவோர், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் பயணம் செய்யும் என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள்.

ஆகவே, சிவிகையைத் தூக்கிவைத்து ஏற்றியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவும் இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்றபிறகு (தொலைந்துபோன) என் கழுத்து மாலை எனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கெனவே தங்கியிருந்த இடத்தை நாடிச் சென்றேன். படையினர், நான் காணாமல்போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்தபொழுது என் கண்களில் (உறக்கம்) மேலிட நான் தூங்கிவிட்டேன். ஸஃப்வான் பின் அல்முஅத்தல் அஸ்ஸுலமீ என்பவர், (படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவறவிட்டுச்சென்ற பொருட்களை எடுப்பதற்காகப்) படையினர் சென்றபின் தங்குவார். அவர், நான் தங்கியிருந்த இடத்திற்கு காலையில் வந்துசேர்ந்தார்.

அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் தெரிந்துகொண்டு) அவர், ‘‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்)” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன்.

பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச்செய்து, அதன் முன்னங்காலை (தமது காலால்) மிதித்துக்கொள்ள நான் அதன் மீது ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நண்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்டிருந் தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார் கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந் தார்கள். நான் நோயுறும்போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காண முடியாமல்போனது, எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, ‘‘நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டுவந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது.

இறுதியில், நான் (நோயிலிருந்து) குணமடைந்துவிட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும், நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த யிமனாஸிஉ’ எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டுமே இவ்வாறு செல் வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்றுகொண்டிருந்தோம்.

எங்களின் இந்த வழக்கம் வனாந்திரங் களில் வசித்துவந்த பண்டைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்றுகொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹ், தாம் அணிந்திருந்த கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று கூறி னார்.

நான், ‘‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.

நான் ‘‘என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படி யொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன்.

என் தாயாரிடம், ‘‘மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! உன்மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ் வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தம்) கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளு டைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவே யாகும்” என்று கூறினார்கள்.

நான், ‘‘சுப்ஹானல்லாஹ்...! (இறைவன் தூயவன்!) இப்படியா மக்கள் பேசிக்கொள் கிறார்கள்?” என்று கேட்டேன். அன்றிரவு விடிய விடிய எனக்குக் கண்ணீர் நிற்க வில்லை; தூக்கம் (கண்களைத்) தழுவ வில்லை. காலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத் தார்கள்.

அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாமதமாயிற்று. உசாமா (ரலி) அவர்களோ, தமது உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்மீதிருந்த பாசத்தை அடிப் படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியார்! அல்லாஹ்வின் மீதாணையாக! நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று அவர்கள் கூறினார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘‘பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

உடனே அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரி (பின்வருமாறு பேசி)னார்கள்: என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர்.

ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் நான் இருக்கும்போது தவிர (வேறு நேரங்களில்) வந்ததில்லை.

உடனே (அன்சாரிகளில் ‘அவ்ஸ்’ கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனைத் தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான யிகஸ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந் தார் லிஇவர் முன்பு நல்ல மனிதராகத்தான் இருந்தார். எனினும், குல மாச்சரியம் அவரைத் தூண்டிவிடலி (சஅத் பின் முஆதை நோக்கி), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது” என்று கூறினார்.

உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, ‘‘நீர்தான் பெய்யுரைத் தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று கொண்டி ருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கி, அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அன்றைய நாள் முழுவதும் நான் அழுதுகொண்டேயிருந்தேன்; என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலையில் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்துவிடுமோ என்றெண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன்.

என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, நான் அழுதுகொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண் ஒருவர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார். நாங்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக் கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலி ருந்து அவர்கள் என்னருகே அமர்ந்த தில்லை. ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு யிவஹீ’யாக அருளப்படவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை)” என்று கூறிவிட்டு, ‘‘ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் பாவமீட்பு பெற்றுக்கொள். ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் கருதவில்லை. நான் என் தந்தையிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.

நானோ வயது குறைந்த இளம்பெண்; குர்ஆனிலிருந்து அதிகம் தெரியாதவள். ஆகவே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட வற்றை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்துபோய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால் லிநான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்லி நீங்கள் அதை நம்பப்போவ தில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால் லிநான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்லி (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! எனக் கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்” (குர்ஆன், 12:18) என்று கூறினேன்.21

பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்று நம்பினேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! என் தொடர்பாக அல்லாஹ் வேத அறிவிப்பு (வஹீ) அருள்வான் என நான் எண்ணவில்லை. குர்ஆனில் என் தொடர்பாகப் பேசப்படும் அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய எனது எண்ணமாகும்.

மாறாக, நான் குற்றமற்றவள் என்று காட்டும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ் வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப் பெற்றுவிட்டது. உடனே (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துகளைப் போன்று வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டு நீங்கியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, ‘யிஆயிஷா! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்” என்று என்னிடம் கூறியதுதான். என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள். நான், ‘‘மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களி டம் நான் செல்லமாட்டேன். அல்லாஹ் வைத் தவிர வேறு யாரையும் நான் புகழவுமாட்டேன்” என்றேன்.

அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பிய வர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் பத்து வசனங்களை (24:11லி20) அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் செலவிடமாட்டேன்” என்று கூறினார்கள்.

லிமிஸ்தஹ் பின் உஸாஸா தம் உற வினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்லி

உடனே உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘உங்களில் செல்வமும் தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ எதுவும் வழங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்ய வேண்டாம்” என்று தொடங்கி, ‘‘அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா...” (24:22) என்பதுவரையிலான வசனத்தை அருளி னான்.

அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு முன்பு தாம் செய்துவந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தொடர்பாக (தமது இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள். ‘‘ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின்மேல் பழிபோடாமல்) நான் பாதுகாத்துக்கொள்கிறேன்.22 அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள்தான் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அவரை அல்லாஹ் (இறையச்சமுடைய,) தார்மீகப் பண்புகளில் பாதுகாத்திருந்தான்.23

இந்த ஹதீஸ் மொத்தம் பத்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்புகளில் கூறுகிறார்கள்:

என்னிடம் உர்வா, சயீத், அல்கமா, உபைதுல்லாஹ் (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறிய வர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷாவை அல்லாஹ் தூய்மைப்படுத்தியது பற்றியும் தெரிவித்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் இச்சம்பவத் தில் ஆளுக்கொரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள். சிலர் சிலரைவிட நன்கு ம”மிட்டும் சம்பவத்தை உறுதியான முறையிலும் கூறினர். அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் ம”மிட்டுள்ளேன். ஒருவரது அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது.

அத்தியாயம் : 52
2662. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ مِرَارًا ثُمَّ قَالَ مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ
பாடம் : 16 ஒருவரைப் பற்றி நல்லவர் என்று ஒருவர் கூறினாலே போதும். அபூஜமீலா சுனைன் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர் (ரலி) அவர்கள் பார்த்தபோது, (அது கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பதை நம்பாமல், நான் என் குழந்தையைத்தான் அதன் தகப்பன் என்கிற பொறுப்பை ஏற்க மறுத்துப் பொது நிதியிலிருந்து பணம் பெறுவதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று கருதி), ‘‘(தஞ்சம் அளிக்கும்) குகையே ஆபத்தாகிவிடப்போகிறது” என்ற பழமொழியைச் சொல்லி, குற்றம்சாட்டுவதைப் போன்று கூறினார்கள். எங்கள் (வட்டார அரசு) அதிகாரி ஒருவர், ‘‘அவர் நல்ல மனிதர்” என்று கூறியதும், ‘‘அப்படியா? (சரி) போ! அக்குழந்தையின் பராமரிப்புச் செலவு எமது (அரசின்) பொறுப்பாகும்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2662. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்குக் கேடுதான்; உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள்.

பிறகு, ‘‘உங்களில் எவர் தம் சகோதர ரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருக் கிறாரோ அவர், ‘‘இன்ன மனிதரை நான் (இவ்வாறு) எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரை விசாரணை செய்பவன். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 52
2663. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يُثْنِي عَلَى رَجُلٍ، وَيُطْرِيهِ فِي مَدْحِهِ فَقَالَ "" أَهْلَكْتُمْ ـ أَوْ قَطَعْتُمْ ـ ظَهْرَ الرَّجُلِ "".
பாடம் : 17 மிகைப் புகழ்ச்சி வெறுக்கப்பட்டது; அறிந்ததை மட்டுமே கூறுக!
2663. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்துகொண்டி ருப்பதையும் அவரை அளவுக்கதிமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே ‘‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை அழித்து விட்டீர்கள்லிஅல்லதுலிமுறித்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 52
2664. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهْوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي، ثُمَّ عَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ فَأَجَازَنِي. قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَهْوَ خَلِيفَةٌ، فَحَدَّثْتُهُ هَذَا الْحَدِيثَ، فَقَالَ إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ. وَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ بَلَغَ خَمْسَ عَشْرَةَ.
பாடம் : 18 குழந்தைகள் பருவமடைவதும் அவர்களின் சாட்சியமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் (வயதில்) அவர்களுக்கு முந்தியவர்கள் அனுமதி கேட்பதைப் போன்று, அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59) ‘‘நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்தபோதே பருவமடைந்துவிட்டேன்” என்று (சட்ட நிபுணர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் பருவம் அடைவதென்பது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதா கும்.24 ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப்போவதில்லை என்று நம்பிக்கையிழந்துவிட்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களின் காத்திருப்பு (யிஇத்தா’) காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு ஏற்படவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இதுதான்.) கர்ப்பிணிகளுக்கான காத்திருப்புக் காலம், அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகிறது. (65:4) ஹசன் பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி இருபத்தொன்று வயதிலெல்லாம் பாட்டியாகிவிட்டதை நான் கண்டேன்.25
2664. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுத் போர் நடந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதி யளிக்கவில்லை. அகழ்ப் போரின்போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத் தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களுடைய) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக்காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்


அத்தியாயம் : 52
2665. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 18 குழந்தைகள் பருவமடைவதும் அவர்களின் சாட்சியமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் (வயதில்) அவர்களுக்கு முந்தியவர்கள் அனுமதி கேட்பதைப் போன்று, அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59) ‘‘நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்தபோதே பருவமடைந்துவிட்டேன்” என்று (சட்ட நிபுணர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் பருவம் அடைவதென்பது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதா கும்.24 ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப்போவதில்லை என்று நம்பிக்கையிழந்துவிட்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களின் காத்திருப்பு (யிஇத்தா’) காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு ஏற்படவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இதுதான்.) கர்ப்பிணிகளுக்கான காத்திருப்புக் காலம், அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகிறது. (65:4) ஹசன் பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி இருபத்தொன்று வயதிலெல்லாம் பாட்டியாகிவிட்டதை நான் கண்டேன்.25
2665. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொரு வர்மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2666. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". قَالَ فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلَكَ بَيِّنَةٌ "". قَالَ قُلْتُ لاَ. قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ "" احْلِفْ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي. قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 19 நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம்,’ஞீஉனக்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்பது26
2666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித் துக்கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின் போது திட்டமிட்டுப் பொய் சொல்லி சத்தியம் செய்கின்றவர், (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:

அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (வந்து), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இது நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (தொடர்பான தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் அவரை நபி (ஸல்) அவர்களின் முன்னால் (கொண்டுபோய்) நிறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு ஆதாரம் ஏதும் உண்டா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்று பதிலளித்தேன். அந்த யூதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அப்படி யென்றால், அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தைக் கொண்டுபோய்விடுவாரே!” என்று கூறினேன். அப்போதுதான், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” எனும் (3:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 52
2668. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ.
பாடம் : 20 பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில், கிரிமினல்) வழக்குகளில் பிரதி வாதி, (தான் குற்றமற்றவன்) என்று சத்தியம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள், ‘‘(வாதியான) உன்னுடைய இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படும்)” என்று சொன்னார்கள். (யிகூஃபா’ நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் (மதீனா நீதிபதி) அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், ஒரேயொருவரின் சாட்சியமும் வாதியின் சத்தியமும் (தீர்ப்பளிக்க போதும் என்பது) குறித்துக் கருத்துக் கேட்டபோது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்கள் ஆண்களில் இருவரைச் சாட்சிகளாக்குங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், நீங்கள் திருப்தி அடையும் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சிகளாக இருக்கட்டும்! அவ்விரு பெண்களில் ஒருவர் மறந்துவிட்டால் மற்றொருவர் நினைவூட்டுவார். (2:282) ‘‘ஒரு சாட்சியும் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின், ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்?” என்று நான் கேட்டேன்.
2668. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிரதிவாதிதான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு (கடிதம்) எழுதி னார்கள்.


அத்தியாயம் : 52
2669. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ، ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ} إِلَى {عَذَابٌ أَلِيمٌ}. ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا فَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فَحَدَّثْنَاهُ بِمَا، قَالَ، فَقَالَ صَدَقَ لَفِيَّ أُنْزِلَتْ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي شَىْءٍ، فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ "". فَقُلْتُ لَهُ إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلاَ يُبَالِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً وَهْوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ، ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ.
பாடம் : 20 பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில், கிரிமினல்) வழக்குகளில் பிரதி வாதி, (தான் குற்றமற்றவன்) என்று சத்தியம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள், ‘‘(வாதியான) உன்னுடைய இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படும்)” என்று சொன்னார்கள். (யிகூஃபா’ நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் (மதீனா நீதிபதி) அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், ஒரேயொருவரின் சாட்சியமும் வாதியின் சத்தியமும் (தீர்ப்பளிக்க போதும் என்பது) குறித்துக் கருத்துக் கேட்டபோது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: உங்கள் ஆண்களில் இருவரைச் சாட்சிகளாக்குங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், நீங்கள் திருப்தி அடையும் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சிகளாக இருக்கட்டும்! அவ்விரு பெண்களில் ஒருவர் மறந்துவிட்டால் மற்றொருவர் நினைவூட்டுவார். (2:282) ‘‘ஒரு சாட்சியும் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின், ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்?” என்று நான் கேட்டேன்.
2669. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு செல்வத்தை (அநியாயமாக) அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” (3:77) எனும் வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் லி ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்:

அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் வழக்கு இருந்துவந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றோம். அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)” என்று கூறினார்கள்.

நான், ‘‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர் தயங்காமல்) பொய்ச் சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்படமாட்டாரே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (குர்ஆனில் ஒரு வசனத்தை) அல்லாஹ் அருளினான்” என்று கூறிவிட்டு, இந்த இறைவசனத்தை (3:77) ஓதிக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 52
2671. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرِيكِ بْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْبَيِّنَةُ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلاً يَنْطَلِقُ يَلْتَمِسُ الْبَيِّنَةَ فَجَعَلَ يَقُولُ "" الْبَيِّنَةَ وَإِلاَّ حَدٌّ فِي ظَهْرِكَ "". فَذَكَرَ حَدِيثَ اللِّعَانِ.
பாடம் : 21 ஒன்றை வாதிடக்கூடியவர், அல்லது குற்றம் சுமத்துகின்றவர் தமது கூற் றுக்கு ஆதாரத்தைத் தேடிச் செல்ல லாம்.
2671. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் (அவதூறு கூறிய தற்குத் தண்டனையாக) உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று கூறினார்கள்.

அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர், தம் மனைவியின்மேல் ஒரு மனிதரை (தவறான உறவு கொள்ள)ப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று மீண்டும் கூறினார்கள்.

இதையடுத்து சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) தொடர்பான ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.27

அத்தியாயம் : 52
2672. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِطَرِيقٍ يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ رَجُلاً لاَ يُبَايِعُهُ إِلاَّ لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ، وَإِلاَّ لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهِ كَذَا وَكَذَا، فَأَخَذَهَا "".
பாடம் : 22 அஸ்ர் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது
2672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்.

ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் எஞ்சிய தண்ணீரை வழிப் போக்கர்களுக்கு (தராமல்) தடுக்கும் மனிதர் ஆவார். மற்றொருவர், உலக ஆதாயத்திற் காகவே ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர் ஆவார். தாம் விரும்புவதை தமக்குக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) ஆட்சி யாளரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.

இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைத் தாம் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக்கொள்ளும்படி செய்தவர் ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2673. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ لِيَقْتَطِعَ بِهَا مَالاً لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "".
பாடம் : 23 பிரதிவாதி எங்கு சத்தியம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்கிறதோ அங்கு சத்தியம் செய்தால் போதும்; ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு அவன் கொண்டுசெல்லப்படலாகாது. (ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘நான் என்னிடத் தில் இருந்தபடியே சத்தியம் செய்வேன்” என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்துவிட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள், அல்லது அவரது சத்தியம்” என்றுதான் கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு (யிஇன்ன இடத்தில் செய்யும் சத்தியம்’ என்று) குறிப்பிடவில்லை.
2673. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(பிரமாண வாக்குமூலத்தின்போது) ஒரு செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 52
2674. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ.
பாடம் : 24 ஒரு சமூகத்தார் அனைவரும் சத்தியம் செய்ய (வேண்டிய பிரச் சினையில் எல்லாரும்) முந்தினால் (யார் ஆரம்பிப்பது)?
2674. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கூட்டத்தார் (ஒரு பொருள் தொடர்பாக ஆதாரமேயின்றி ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியபோது) சத்தியம் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக்கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் (முதலில்) சத்தியம் செய்வதென்பதை அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள்.

அத்தியாயம் : 52
2675. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْعَوَّامُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ أَقَامَ رَجُلٌ سِلْعَتَهُ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهَا مَا لَمْ يُعْطَهَا فَنَزَلَتْ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} وَقَالَ ابْنُ أَبِي أَوْفَى النَّاجِشُ آكِلُ رِبًا خَائِنٌ.
பாடம் : 25 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத் தவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (3:77)
2675. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (கடைத்தெருவில்) தமது சரக்கை (மக்கள்முன்) வைத்து, அல்லாஹ் வின் பெயரால் சத்தியமிட்டு, தாம் அதற் குத் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அது தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் (3:77) அருளப் பட்டது.

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பொய் சொல்லி விலையை ஏற்றுபவர், லிவட்டி வாங்குபவரைப் போன்றுலி மோசடிக்காரர் ஆவார்.


அத்தியாயம் : 52
2676. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبًا لِيَقْتَطِعَ مَالَ رَجُلٍ ـ أَوْ قَالَ أَخِيهِ ـ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". وَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ فِي الْقُرْآنِ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} الآيَةَ. فَلَقِيَنِي الأَشْعَثُ فَقَالَ مَا حَدَّثَكُمْ عَبْدُ اللَّهِ الْيَوْمَ، قُلْتُ كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ.
பாடம் : 25 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத் தவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (3:77)
2676. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு மனிதரின் லிஅல்லது சகோதரரின்லி செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காக, ஒரு பிரமாண(வாக்கு மூலத்)தின்போது பொய்யாகச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை (3:77) அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?” என்று கேட்க, நான். ‘‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 52