2537. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسٌ ـ رضى الله عنه ـ أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا ائْذَنْ فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ، فَقَالَ "" لاَ تَدَعُونَ مِنْهُ دِرْهَمًا "".
பாடம் : 11
ஒரு முஸ்லிமின் சகோதரர், அல்லது தந்தையின் சகோதரர் இணை வைப்பாளராக இருக்கும்போது போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டால், பிணைத்தொகை பெற்றுத்தான் விடுதலை செய்ய வேண்டுமா?14
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் எனக்கும் அகீலுக் கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன்” என்று கூறினார்கள்.
தம் சகோதரர் அகீல் அவர்களிட மிருந்தும் தம் தந்தையின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் பெற்ற போர்ச் செல்வத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் பங்கிருந்தது.15
2537. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் (ரலி) அவர்களி டமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை) விட்டுவிடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அனுமதி கோரினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரிடமிருந்து ஒரு திர்ஹமைக்கூட (வாங்காமல்) விட்டுவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.16
அத்தியாயம் : 49

2538. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، أَخْبَرَنِي أَبِي أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ أَعْتَقَ فِي الْجَاهِلِيَّةِ مِائَةَ رَقَبَةٍ، وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ، فَلَمَّا أَسْلَمَ حَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ وَأَعْتَقَ مِائَةَ رَقَبَةٍ، قَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَصْنَعُهَا فِي الْجَاهِلِيَّةِ، كُنْتُ أَتَحَنَّثُ بِهَا، يَعْنِي أَتَبَرَّرُ بِهَا، قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ لَكَ مِنْ خَيْرٍ "".
பாடம் : 12
இணைவைப்பாளர் (தம் அடிமையை) விடுதலை செய்தல்
2538. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங் களையும் அறுத்து தர்மம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் (செய்து) நூறு அடிமைகளையும் விடுதலை செய்தார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்துவந்த (தர்ம) காரியங் களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகின் றீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான நன்மை)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்” என்று கூறினார்கள்.17

2539. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ذَكَرَ عُرْوَةُ أَنَّ مَرْوَانَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ " إِنَّ مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا الْمَالَ، وَإِمَّا السَّبْىَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ ". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ ". فَقَالَ النَّاسُ طَيَّبْنَا ذَلِكَ. قَالَ " إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ مِمَّنْ لَمْ يَأْذَنْ فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ ". فَرَجَعَ النَّاسُ، فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ طَيَّبُوا وَأَذِنُوا، فَهَذَا الَّذِي بَلَغَنَا عَنْ سَبْىِ هَوَازِنَ. وَقَالَ أَنَسٌ قَالَ عَبَّاسٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلاً.
பாடம் : 13
அரபியரில் ஓர் அடிமையை உடைமையாக்கிக்கொள்வது, அந்த அடிமையை (பிறருக்கு) அன்பளிப்புச் செய்வது, விற்பது, (அரபி அடிமைப் பெண்ணோடு) உடலுறவு கொள்வது, அடிமை யிடம் பிணைத் தொகை பெறுவது, அவன் சந்ததிகளைச் சிறைபிடிப்பது ஆகியவை (செல்லுமா?)18
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கின்றான்:
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார். அவருக்கு நாம் நம்மிடமிருந்து நல்ல வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றோம். அவர் அதிலி ருந்து மறைமுகமாகவும் வெளிப்படை யாகவும் (நல்வழியில்) செலவு செய்கின்றார். (கூறுங்கள்:) இவ்விருவரும் சமமானவர் களா? எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை. (16:75)19
2539. மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
(ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) யிஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் (முஸ்லிலிம்களாகி) தம்மிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட) தங்களின் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் தங்களிடமே திருப்பித் தந்துவிடும்படி நபியவர்களிடம் அவர்கள் கோரினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (அக் குழுவினரிடம்), ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற(மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையாகப் பேசுவதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆகவே, செல்வங் கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாட்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய (குலத்தாரின்) கைதிகளைத் திருப்பித் தந்துவிடலாம் எனக் கருதுகிறேன். உங்களில் யார் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர், அல்லாஹ் நமக்கு (இனி) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கும்வரை அவ்வாறே செய்யட்டும். (தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.)
(இதைச் செவியுற்றதும்) மக்கள், ‘யிநாங்கள் மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் (இதற்கு மனப்பூர்வமாகச்) சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்க ளுடைய தலைவர்கள் (உங்களுடன் கலந்துபேசி) உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள்.
ஆகவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களுடைய தலைவர்கள் அவர்களு டன் (கலந்து) பேசினர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.20
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்:
அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்துவிட்டேன்” என்று கூறினார்கள்.

2541. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، قَالَ كَتَبْتُ إِلَى نَافِعٍ فَكَتَبَ إِلَىَّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَغَارَ عَلَى بَنِي الْمُصْطَلِقِ وَهُمْ غَارُّونَ وَأَنْعَامُهُمْ تُسْقَى عَلَى الْمَاءِ، فَقَتَلَ مُقَاتِلَتَهُمْ، وَسَبَى ذَرَارِيَّهُمْ، وَأَصَابَ يَوْمَئِذٍ جُوَيْرِيَةَ. حَدَّثَنِي بِهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَكَانَ فِي ذَلِكَ الْجَيْشِ.
பாடம் : 13
அரபியரில் ஓர் அடிமையை உடைமையாக்கிக்கொள்வது, அந்த அடிமையை (பிறருக்கு) அன்பளிப்புச் செய்வது, விற்பது, (அரபி அடிமைப் பெண்ணோடு) உடலுறவு கொள்வது, அடிமை யிடம் பிணைத் தொகை பெறுவது, அவன் சந்ததிகளைச் சிறைபிடிப்பது ஆகியவை (செல்லுமா?)18
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கின்றான்:
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார். அவருக்கு நாம் நம்மிடமிருந்து நல்ல வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றோம். அவர் அதிலி ருந்து மறைமுகமாகவும் வெளிப்படை யாகவும் (நல்வழியில்) செலவு செய்கின்றார். (கூறுங்கள்:) இவ்விருவரும் சமமானவர் களா? எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை. (16:75)19
2541. அப்துல்லாஹ் பின் அவ்ன் அல்முஸ்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் யிபனூ முஸ்தலிக்’ குலத்தார் பாராமுகமாக இருந்தபோது, அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக்கொண்டிருந்தன. அவர் களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களுடைய மக்களை (பெண்கள், பிள்ளைகுட்டிகளை) போர்க் கைதிகளாக சிறைபிடித்தார்கள்; அன்று தான் ஜுவைரிய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்.21

2542. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، قَالَ رَأَيْتُ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ فَسَأَلْتُهُ فَقَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ بَنِي الْمُصْطَلِقِ فَأَصَبْنَا سَبْيًا مِنْ سَبْىِ الْعَرَبِ، فَاشْتَهَيْنَا النِّسَاءَ فَاشْتَدَّتْ عَلَيْنَا الْعُزْبَةُ وَأَحْبَبْنَا الْعَزْلَ، فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا، مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلاَّ وَهْىَ كَائِنَةٌ "".
பாடம் : 13
அரபியரில் ஓர் அடிமையை உடைமையாக்கிக்கொள்வது, அந்த அடிமையை (பிறருக்கு) அன்பளிப்புச் செய்வது, விற்பது, (அரபி அடிமைப் பெண்ணோடு) உடலுறவு கொள்வது, அடிமை யிடம் பிணைத் தொகை பெறுவது, அவன் சந்ததிகளைச் சிறைபிடிப்பது ஆகியவை (செல்லுமா?)18
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கின்றான்:
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார். அவருக்கு நாம் நம்மிடமிருந்து நல்ல வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றோம். அவர் அதிலி ருந்து மறைமுகமாகவும் வெளிப்படை யாகவும் (நல்வழியில்) செலவு செய்கின்றார். (கூறுங்கள்:) இவ்விருவரும் சமமானவர் களா? எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை. (16:75)19
2542. அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தபோது அவர்களிடம் (‘அஸ்ல்’ எனும் புணர்ச்சி இடைமுறிப்பு செய்வது பற்றி) கேட்டேன். அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் யிபனூ முஸ்தலிக்’ (குலத் தாருக்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுப் போர்க் கைதிகளில் சிலர் எங்களுக்குத் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம்.
ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (இந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்ய நாங்கள் விரும்பினோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டோம். அதற்கு, ‘‘நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று பதிலளித்தார்கள்.22

2543. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ. وَحَدَّثَنِي ابْنُ سَلاَمٍ أَخْبَرَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الْمُغِيرَةِ عَنِ الْحَارِثِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَعَنْ عُمَارَةَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا زِلْتُ أُحِبُّ بَنِي تَمِيمٍ مُنْذُ ثَلاَثٍ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِيهِمْ، سَمِعْتُهُ يَقُولُ "" هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ "". قَالَ وَجَاءَتْ صَدَقَاتُهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَذِهِ صَدَقَاتُ قَوْمِنَا "". وَكَانَتْ سَبِيَّةٌ مِنْهُمْ عِنْدَ عَائِشَةَ. فَقَالَ "" أَعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ "".
பாடம் : 13
அரபியரில் ஓர் அடிமையை உடைமையாக்கிக்கொள்வது, அந்த அடிமையை (பிறருக்கு) அன்பளிப்புச் செய்வது, விற்பது, (அரபி அடிமைப் பெண்ணோடு) உடலுறவு கொள்வது, அடிமை யிடம் பிணைத் தொகை பெறுவது, அவன் சந்ததிகளைச் சிறைபிடிப்பது ஆகியவை (செல்லுமா?)18
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கின்றான்:
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார். அவருக்கு நாம் நம்மிடமிருந்து நல்ல வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றோம். அவர் அதிலி ருந்து மறைமுகமாகவும் வெளிப்படை யாகவும் (நல்வழியில்) செலவு செய்கின்றார். (கூறுங்கள்:) இவ்விருவரும் சமமானவர் களா? எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை. (16:75)19
2543. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிபனூ தமீம்’ குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்க லானேன். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே அதிகக் கடுமையுடன் (மகா பொய்யன்) தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்” என்று கூறினார்கள்.
(ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தர்மப் பொருள்கள் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவை எங்கள் இனத்தாரின் தர்மப் பொருள்கள்” என்று கூறினார்கள்.
(ஒருமுறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூதமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி” என்று கூறினார்கள்.23
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2544. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَعَالَهَا، فَأَحْسَنَ إِلَيْهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، كَانَ لَهُ أَجْرَانِ "".
பாடம் : 14
தம் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்க மும் கல்வியும் கற்பிப்பவரின் சிறப்பு
2544. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து, தாமே அவளை மணமுடித்துக்கொள்கி றாரோ அவருக்கு இரு நன்மைகள் உண்டு.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24

2545. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، قَالَ سَمِعْتُ الْمَعْرُورَ بْنَ سُوَيْدٍ، قَالَ رَأَيْتُ أَبَا ذَرٍّ الْغِفَارِيَّ ـ رضى الله عنه ـ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً فَشَكَانِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَعَيَّرْتَهُ بِأُمِّهِ "". ثُمَّ قَالَ "" إِنَّ إِخْوَانَكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُمْ "".
பாடம் : 15
‘‘அடிமைகள் உங்கள் சகோதரர்கள். நீங்கள் உண்பதிலிருந்தே அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி யது
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணை கற்பிக் காதீர்கள். தாய் தந்தையர், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பயணத் தோழர், வழிப்போக்கர், உங்கள் வலக் கரங்கள் உடைமையாக்கிக்கொண்ட அடிமைகள் ஆகியோருக்கு நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அகந்தை கொள்பவனையும் தற்பெருமை கொள்பவனையும் நேசிக்கமாட்டான். (4:36)
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
அண்டை வீட்டாரில் உறவினரைக் குறிக்க யிதில்குர்பா’ எனும் சொல்லும், அந்நியரைக் குறிக்க ‘அல்ஜுனுப்’ எனும் சொல்லும் மூலத்தில் ஆளப்பட்டுள்ளன.
2545. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர் களை (ஒருமுறை) பார்த்தேன். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும் அவர்களின் அடிமைமீது (அதே போன்ற) ஓர் (புதிய) மேலங்கியும் இருந்தது. அதைப் பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம்.
அப்போது அதற்கு அவர்கள் பின் வருமாறு சொன்னார்கள்: நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘‘நீர் இவருடைய தாயைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசினீரா” என்று கேட்டார்கள்.
பிறகு, ‘‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான்.
ஆகவே, எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர், தம் சகோதரருக்கு தாம் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.

2546. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْعَبْدُ إِذَا نَصَحَ سَيِّدَهُ وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ "".
பாடம்: 16
இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை, தன் எசமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நன்முறையில் வழிபடுவானாயின் அவனுக்கு இரு முறை(‘னாலும்) நன்மை கிடைக்கும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2547. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ صَالِحٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ، وَأَيُّمَا عَبْدٍ أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، فَلَهُ أَجْرَانِ "".
பாடம்: 16
இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2547. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எந்த மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக்கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, அவளைத் தாமே மணமும் புரிந்துகொள்கிறாரோ அவருக்கு இரு நன்மைகள் கிடைக்கும். எந்த அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எசமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுகிறானோ அவ னுக்கும் இரு நன்மைகள் கிடைக்கும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2548. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لِلْعَبْدِ الْمَمْلُوكِ الصَّالِحِ أَجْرَانِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ وَالْحَجُّ وَبِرُّ أُمِّي، لأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ "".
பாடம்: 16
இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.
இதை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘எவனது கையில் என் உயிர் இருக்கிறதோ அவன்மீது சத்திய மாக! அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாம லிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று சொன் னார்கள்.

2549. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" نِعْمَ مَا لأَحَدِهِمْ يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ وَيَنْصَحُ لِسَيِّدِهِ "".
பாடம்: 16
இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2549. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் அடிமை, தம் இறைவனை நன்முறையில் வழிபட்டு, தம் எசமானுக்கு விசுவாசமாக நடந்து கொண்டால், அவரே நல்லவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2550. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا نَصَحَ الْعَبْدُ سَيِّدَهُ، وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ، كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ "".
பாடம் : 17
அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32)
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75)
அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25)
இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25)
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2550. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அடிமை (அப்த்), தன் எசமானுக்கு (சய்யித்) விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வழிபட்டு வருவானாயின், அவனுக்கு இரு முறை(களிலும்) நன்மை கிடைக்கும்.26
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2551. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الْحَقِّ وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ، لَهُ أَجْرَانِ "".
பாடம் : 17
அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32)
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75)
அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25)
இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25)
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2551. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
தன் இறைவனை நல்லமுறையில் வழிபட்டு, தன் எசமானுக்கு (சய்யித்) தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங் காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துகொண்டு) அவனுக்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்ற அடிமைக்கு இரு நன்மைகள் கிடைக்கும்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

2552. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ. وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ. وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي. وَلْيَقُلْ فَتَاىَ وَفَتَاتِي وَغُلاَمِي "".
பாடம் : 17
அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32)
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75)
அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25)
இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25)
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2552. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் (அடிமையிடம்) ‘‘உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொடு, உன் ரப்புக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு” என்று கூற வேண்டாம். யிஎன் தலைவர்; என் உரிமையாளர்’ என்று கூறட்டும்.
அவ்வாறே, உங்களில் யாரும், என் அடிமை; என் அடிமைப் பெண் என்று கூற வேண்டாம். ‘‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” என்று கூறட்டும்.27
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2553. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ مِنَ الْعَبْدِ، فَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ قِيمَتَهُ، يُقَوَّمُ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ، وَأُعْتِقَ مِنْ مَالِهِ، وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ "".
பாடம் : 17
அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32)
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75)
அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25)
இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25)
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2553. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையில் (அப்த்) தமக்கிருக்கும் பங்கை விடுதலை செய்கிறாரோ, அவருக்கு அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவனுக்கு நியாயமான விலை மதிப்பிடப்பட்டு, தமது செல்வத்திலிருந்து (அதைச் செலுத்தி அவனை) முழுமையாக விடுவித்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவன் விடுதலை பெறுவான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
2553. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எவர் ஓர் அடிமையில் (அப்த்) தமக்கிருக்கும் பங்கை விடுதலை செய்கிறாரோ, அவருக்கு அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவனுக்கு நியாயமான விலை மதிப்பிடப்பட்டு, தமது செல்வத்திலிருந்து (அதைச் செலுத்தி அவனை) முழுமையாக விடுவித்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவன் விடுதலை பெறுவான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
2554. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهْىَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 17
அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32)
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75)
அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25)
இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25)
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள்மீது ஆட்சி புரியும் தலைவர் மக்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.
பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை (அப்த்), தன் உரிமையாளரின் (சய்யித்) செல்வத்திற்குப் பொறுப் பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

2555. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَزَيْدَ بْنَ خَالِدٍ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ "".
பாடம் : 17
அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32)
பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75)
அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25)
இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25)
நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2555. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குச் சாட்டையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்கேனும் விற்றுவிடுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.