2517. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ، صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ قَالَ لِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ "". قَالَ سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ فَانْطَلَقْتُ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ ـ رضى الله عنهما ـ إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ ـ أَوْ أَلْفَ دِينَارٍ ـ فَأَعْتَقَهُ.
பாடம் : 1 அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையை (நன்மையின் பாதையைக்) கடந்து செல்ல(த் துணிய)வில்லை. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா? (அதுதான்) ஒருவரை அடிமைத் தளை’ லிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினி கிடக்கும் நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதாகும். (90:10லி17)
2517. அலீ பின் ஹுசைன் (ரஹ்)2 அவர்களின் தோழரான சயீத் பின் மர் ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை யார் விடுதலை செய்கிறாரோ, (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ் வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்று வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உடனே நான், இந்த நபிமொழியை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றேன். இதைக் கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹங்களையோ ஆயிரம் தீனார்களையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.

அத்தியாயம் : 49
2518. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَفْضَلُ، قَالَ "" إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ "". قُلْتُ فَأَىُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ "" أَغْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا "". قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ. قَالَ "" تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ "". قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ. قَالَ "" تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ "".
பாடம் : 2 எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது?
2518. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதை யில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் உரிமை யாளர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித் தார்கள்.

நான், ‘‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லை யென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பலவீனருக்கு உதவி செய்; அல்லது வேலை இல்லாதவனுக்கு வேலை கொடு!” என்று கூறினார்கள். நான், ‘‘இதுவும் என்னால் இயலவில்லையென் றால்...?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்துகொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 49
2519. حَدَّثَنَا مُوسَى بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْعَتَاقَةِ فِي كُسُوفِ الشَّمْسِ. تَابَعَهُ عَلِيٌّ عَنِ الدَّرَاوَرْدِيِّ عَنْ هِشَامٍ.
பாடம் : 3 சூரிய கிரகணமோ இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமை களை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2519. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 49
2520. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عَثَّامٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ كُنَّا نُؤْمَرُ عِنْدَ الْخُسُوفِ بِالْعَتَاقَةِ.
பாடம் : 3 சூரிய கிரகணமோ இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமை களை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2520. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப் பட்டிருந்தோம்.

அத்தியாயம் : 49
2521. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ عَبْدًا بَيْنَ اثْنَيْنِ، فَإِنْ كَانَ مُوسِرًا قُوِّمَ عَلَيْهِ ثُمَّ يُعْتَقُ "".
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2521. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இருவருக்குக் கூட்டான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியானவராக இருக்கும்போது அந்த அடிமைக்கு (நியாயமான) விலை மதிப்பிடப்பட்டு (அதையும் அவரே செலுத்தி) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3


அத்தியாயம் : 49
2522. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ قُوِّمَ الْعَبْدُ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ وَعَتَقَ عَلَيْهِ، وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ "".
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும். பிறகு அவர் தம் பங்காளிக்கு, அவர்களுக்கான பங்குத் தொகைகளை கொடுத்துவிட்டு, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (பங்கின்) அளவிற்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2523. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، اخْتَصَرَهُ.
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவிற்குச் செல்வம் இருந் தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரது பொறுப்பாகும். அந்த அடிமைக்கு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் விலை(யைச் செலுத்தும்) அளவுக்கு அவரிடம் செல்வம் இல்லை யென்றால், அவர் விடுதலை செய்த அந்த (பங்கின்) அளவுக்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 49
2524. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ فِي مَمْلُوكٍ أَوْ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، وَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ قِيمَتَهُ بِقِيمَةِ الْعَدْلِ، فَهْوَ عَتِيقٌ "". قَالَ نَافِعٌ وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ. قَالَ أَيُّوبُ لاَ أَدْرِي أَشَىْءٌ قَالَهُ نَافِعٌ، أَوْ شَىْءٌ فِي الْحَدِيثِ.
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2524. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ அவரிடம் அந்த அடிமையின் நியாய விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்படுவான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேலும், ‘‘அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால், அவர் விடுதலை செய்த (பங்கின்) அளவுக்கே அந்த அடிமையை விடுதலை செய்தவர் ஆவார்” என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

‘‘இது நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா; அல்லது நபிமொழியின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.


அத்தியாயம் : 49
2525. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مِقْدَامٍ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يُفْتِي فِي الْعَبْدِ أَوِ الأَمَةِ يَكُونُ بَيْنَ شُرَكَاءَ، فَيُعْتِقُ أَحَدُهُمْ نَصِيبَهُ مِنْهُ، يَقُولُ قَدْ وَجَبَ عَلَيْهِ عِتْقُهُ كُلِّهِ، إِذَا كَانَ لِلَّذِي أَعْتَقَ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ، يُقَوَّمُ مِنْ مَالِهِ قِيمَةَ الْعَدْلِ، وَيُدْفَعُ إِلَى الشُّرَكَاءِ أَنْصِبَاؤُهُمْ، وَيُخَلَّى سَبِيلُ الْمُعْتَقِ. يُخْبِرُ ذَلِكَ ابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ اللَّيْثُ وَابْنُ أَبِي ذِئْبٍ وَابْنُ إِسْحَاقَ وَجُوَيْرِيَةُ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَإِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُخْتَصَرًا.
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்
2525. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தமது பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பு வழங்கிவந்தார்கள்.

அத்தீர்ப்பில், ‘‘(தமது பங்கை) விடுதலை செய்தவர்மீது அவ்வடிமையை முழுவது மாக விடுதலை செய்வது கடமையாகும். அவரிடம் அந்த அடிமையின் நியாயமான விலையை அடைகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், (மற்ற) பங்குதாரர்களின் பங்குத் தொகையைக் கொடுத்துவிட்டு, விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என்று சொல்லிவந்தார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்தார்கள்.

இதே ஹதீஸ் சுருக்கமாக இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் ஆறு தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 49
2526. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، سَمِعْتُ قَتَادَةَ، قَالَ حَدَّثَنِي النَّضْرُ بْنُ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {مَنْ أَعْتَقَ شَقِيصًا مِنْ عَبْدٍ }
பாடம் : 5 கூட்டு அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தவரிடம் (முழுமையாக விடுதலை செய்யத் தேவையான) செல்வம் இல்லாத போது விடுதலை ஆவண ஒப்பந்தப்படி (பாக்கித் தொகையைக் கட்ட) உழைப்பதற்கு அடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமம் தரப்படக் கூடாது.
2526. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையிலுள்ள (தமது) பங்கை விடுதலை செய்துவிட்டாரோ அவர்... (என்று ஹதீஸ் தொடங்கி அடுத்த ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம் பெறு கின்றன.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2527. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْتَقَ نَصِيبًا أَوْ شَقِيصًا فِي مَمْلُوكٍ، فَخَلاَصُهُ عَلَيْهِ فِي مَالِهِ إِنْ كَانَ لَهُ مَالٌ، وَإِلاَّ قُوِّمَ عَلَيْهِ، فَاسْتُسْعِيَ بِهِ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ "". تَابَعَهُ حَجَّاجُ بْنُ حَجَّاجٍ وَأَبَانُ وَمُوسَى بْنُ خَلَفٍ عَنْ قَتَادَةَ. اخْتَصَرَهُ شُعْبَةُ.
பாடம் : 5 கூட்டு அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தவரிடம் (முழுமையாக விடுதலை செய்யத் தேவையான) செல்வம் இல்லாத போது விடுதலை ஆவண ஒப்பந்தப்படி (பாக்கித் தொகையைக் கட்ட) உழைப்பதற்கு அடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமம் தரப்படக் கூடாது.
2527. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையில் (தமக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் (போதிய) செல்வம் இருக்கு மாயின், தமது செல்வத்திலிருந்தே அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். (அவரிடம் போதிய செல்வம்) இல்லை யெனில், அவ்வடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். (மீதித் தொகையைக் கட்டுவதற்கு வசதியாக) உழைப்பதற்கு அவ்வடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகமான சிரமத்தைத் தரக் கூடாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 49
2528. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ "".
பாடம் : 6 அடிமையை விடுதலை செய்தல், மனைவிக்கு மணவிலக்கு அளித்தல் போன்றவற்றில் நேரும் தவறும் மறதியும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காகவே அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே (நிய்யத் செய்ததே) கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், (ஒன்றை) மறந்துவிட்ட வனுக்கும் தவறுதலாகச் செய்துவிட்ட வனுக்கும் யிநிய்யத்’ (எண்ணம்) என்பதே கிடையாது.4
2528. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாத வரை அல்லது (அதை வெளிப்படுத்திப்) பேசாத வரை எனக்காக அல்லாஹ் மன்னிக்கின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2529. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلاِمْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ "".
பாடம் : 6 அடிமையை விடுதலை செய்தல், மனைவிக்கு மணவிலக்கு அளித்தல் போன்றவற்றில் நேரும் தவறும் மறதியும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காகவே அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே (நிய்யத் செய்ததே) கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், (ஒன்றை) மறந்துவிட்ட வனுக்கும் தவறுதலாகச் செய்துவிட்ட வனுக்கும் யிநிய்யத்’ (எண்ணம்) என்பதே கிடையாது.4
2529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செயல்கள் (அனைத்தும்) எண்ணங் களைப் பொறுத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந் தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செய்வாராயின் அவரது புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமையும். எவரது புலம்பெயர்தல், அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக் காகவோ அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.5

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 49
2530. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ لَمَّا أَقْبَلَ يُرِيدُ الإِسْلاَمَ وَمَعَهُ غُلاَمُهُ، ضَلَّ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ، فَأَقْبَلَ بَعْدَ ذَلِكَ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَبَا هُرَيْرَةَ، هَذَا غُلاَمُكَ قَدْ أَتَاكَ "". فَقَالَ أَمَا إِنِّي أُشْهِدُكَ أَنَّهُ حُرٌّ. قَالَ فَهُوَ حِينَ يَقُولُ يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِ
பாடம் : 7 விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தம் அடிமையை நோக்கி, யிஇவன் அல்லாஹ்வுக்குரியவன்' என்று கூறுவதும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துவதும்6
2530. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்தபொழுது என்னுடன் என் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னையும் நான் அவரையும் பிரிந்து வழிமாறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தபொழுது அவ் வடிமை வந்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைரா! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்துவிட்டார் (பாரும்)” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘(அல்லாஹ் வின் தூதரே!) இந்த அடிமை சுதந்திர மாகிவிட்டார் என்பதற்கு நான் தங்களைச் சாட்சியாக ஆக்குகிறேன்” என்று கூறி னேன்.7

அறிவிப்பாளர் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது) பின்வரும் கவிதையைப் பாடிக்கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது:

எவ்வளவு நீண்ட

களைப்பூட்டும் இரவு!

இருந்தாலும்,

காத்தது அந்த

இரவுதான்!

இறைமறுப்பு இல்லத்திலிருந்து!


அத்தியாயம் : 49
2531. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْتُ فِي الطَّرِيقِ يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِ قَالَ وَأَبَقَ مِنِّي غُلاَمٌ لِي فِي الطَّرِيقِ ـ قَالَ ـ فَلَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بَايَعْتُهُ، فَبَيْنَا أَنَا عِنْدَهُ إِذْ طَلَعَ الْغُلاَمُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا أَبَا هُرَيْرَةَ، هَذَا غُلاَمُكَ "". فَقُلْتُ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ. فَأَعْتَقْتُهُ. لَمْ يَقُلْ أَبُو كُرَيْبٍ عَنْ أَبِي أُسَامَةَ حُرٌّ.
பாடம் : 7 விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தம் அடிமையை நோக்கி, யிஇவன் அல்லாஹ்வுக்குரியவன்' என்று கூறுவதும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துவதும்6
2531. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில்,

எவ்வளவு நீண்ட

களைப்பூட்டும் இரவு!

இருந்தாலும்

காத்தது அந்த

இரவுதான்!

இறைமறுப்பு இல்லத்திலிருந்து!

என்று பாடினேன். வழியில் என் அடிமை ஒருவன் என்னை விட்டுத் தப்பி யோடிவிட்டான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அபூஹுரைரா! இதோ உங்கள் அடிமை!” என்று கூறி னார்கள். நான், ‘‘அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக” என்று கூறி, அவனை விடுதலை செய்துவிட்டேன்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்:

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிசுதந்திரமானவன்’ எனும் சொல் இடம்பெறவில்லை.


அத்தியாயம் : 49
2532. حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ لَمَّا أَقْبَلَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ وَمَعَهُ غُلاَمُهُ وَهْوَ يَطْلُبُ الإِسْلاَمَ، فَأَضَلَّ أَحَدُهُمَا صَاحِبَهُ بِهَذَا، وَقَالَ أَمَا إِنِّي أُشْهِدُكَ أَنَّهُ لِلَّهِ.
பாடம் : 7 விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தம் அடிமையை நோக்கி, யிஇவன் அல்லாஹ்வுக்குரியவன்' என்று கூறுவதும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துவதும்6
2532. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தேடி (நபி (ஸல்) அவர்களை நோக்கி மதீனா) வந்தபோது, அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தார். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள்...

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 49
2533. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّ عُتْبَةَ بْنَ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنْ يَقْبِضَ إِلَيْهِ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ، قَالَ عُتْبَةُ إِنَّهُ ابْنِي. فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَمَنَ الْفَتْحِ أَخَذَ سَعْدٌ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ. فَأَقْبَلَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَقْبَلَ مَعَهُ بِعَبْدِ بْنِ زَمْعَةَ. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ هَذَا ابْنُ أَخِي عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ يَا رَسُولَ اللَّهِ هَذَا أَخِي ابْنُ وَلِيدَةِ زَمْعَةَ، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ابْنِ وَلِيدَةِ زَمْعَةَ، فَإِذَا هُوَ أَشْبَهُ النَّاسِ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ "". مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِيهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" احْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ "". مِمَّا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ. وَكَانَتْ سَوْدَةُ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 8 உம்முல் வலத்8 ‘‘யுகமுடிவு நாளின் அடையாளங்களில், யிஉம்முல் வலத்’ தன் எசமானைப் பெற்றெடுப்பதும் ஒன்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.9
2533. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களி டம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணு டைய மகனைப் பற்றி, ‘‘அவன் என் மகன்” என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், சஅத் (ரலி) அவர்கள் ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். ஸம்ஆவின் (சொந்த) மகன் அப்த் (ரலி) அவர்களையும் தம்முடன் அழைத்து வந்தார்.

பிறகு சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம், இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; என் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண் ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பான வனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆ வின் மகன் அப்த் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் எனும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள்.

(பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக்கொள்” என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்ட காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கட்டளையிட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.10

அத்தியாயம் : 49
2534. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَعْتَقَ رَجُلٌ مِنَّا عَبْدًا لَهُ عَنْ دُبُرٍ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِهِ فَبَاعَهُ. قَالَ جَابِرٌ مَاتَ الْغُلاَمُ عَامَ أَوَّلَ.
பாடம் : 9 பின்தேதியிட்டு விடுதலை அளிக்கப்பட்ட அடிமையை விற்பது11
2534. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவர் தம் அடிமை ஒருவனை பின்தேதியிட்டு விடுதலை செய்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை, (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் ஆட்சியின்) முதலாம் ஆண்டில் இறந்துவிட்டார்.12

அத்தியாயம் : 49
2535. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَلاَءِ، وَعَنْ هِبَتِهِ.
பாடம் : 10 விடுதலை செய்யப்பட்ட அடி மைக்கு வாரிசாகும் உரிமையை (‘அல்வலா') விற்பதும் அன்பளிப்புச் செய்வதும்13
2535. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகின்ற உரிமையை விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 49
2536. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَيْتُ بَرِيرَةَ فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْطَى الْوَرِقَ "". فَأَعْتَقْتُهَا، فَدَعَاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا فَقَالَتْ لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا ثَبَتُّ عِنْدَهُ. فَاخْتَارَتْ نَفْسَهَا.
பாடம் : 10 விடுதலை செய்யப்பட்ட அடி மைக்கு வாரிசாகும் உரிமையை (‘அல்வலா') விற்பதும் அன்பளிப்புச் செய்வதும்13
2536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்கினேன். அப்போது அவருடைய உரிமையாளர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அவளை விடுதலை செய்துவிடு! ஏனெனில், விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) வாரிசாகும் உரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

நான் அவரை விடுதலை செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவருடைய கணவர் விஷயத் தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்துவிடுவது ஆகிய இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பரீரா, ‘‘அவர் எனக்கு எவ்வளவுதான் (கொட்டிக்) கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்கமாட்டேன்” என்று கூறி, (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

அத்தியாயம் : 49