2363. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ "" فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ "". تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَالرَّبِيعُ بْنُ مُسْلِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ.
பாடம் : 10 நீர் புகட்டுவதன் சிறப்பு
2363. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) யிஎனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக்கொண்டார்.

உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதை வாயால் கவ்விக்கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அவருடைய இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்றும் பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமை யில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 42
2364. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الْكُسُوفِ، فَقَالَ "" دَنَتْ مِنِّي النَّارُ حَتَّى قُلْتُ أَىْ رَبِّ، وَأَنَا مَعَهُمْ فَإِذَا امْرَأَةٌ ـ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ تَخْدِشُهَا هِرَّةٌ قَالَ مَا شَأْنُ هَذِهِ قَالُوا حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا "".
பாடம் : 10 நீர் புகட்டுவதன் சிறப்பு
2364. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன் னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், ‘‘இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப்போகிறேனோ?› என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக்கொண்டிருந்தது.

‘‘இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனை செய்யப்படு கிறாள்?)” என்று நான் கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), ‘‘இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் சாகும்வரை இந்தப் பெண் கட்டிவைத்திருந்தாள்” என்று பதிலளித்தனர்.8

இந்த அறிவிப்பின் இடையே, ‘ ’ ‘அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்” என அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 42
2365. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا، حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ ـ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ ـ لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ "".
பாடம் : 10 நீர் புகட்டுவதன் சிறப்பு
2365. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனை செய்யப்பட்டாள். அந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்துவைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது லிஅல்லாஹ்வே மிக அறிந்தவன்லி ‘‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட் டும் என்று அதை அவிழ்த்துவிடவு மில்லை” என்று அல்லாஹ் கூறினான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 42
2366. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فَشَرِبَ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ، هُوَ أَحْدَثُ الْقَوْمِ، وَالأَشْيَاخُ عَنْ يَسَارِهِ قَالَ "" يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ الأَشْيَاخَ "". فَقَالَ مَا كُنْتُ لأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ. فَأَعْطَاهُ إِيَّاهُ.
பாடம் : 11 நீர்த்தொட்டி மற்றும் தோல் பையின் உரிமையாளரே தமது தண்ணீரைப் பயன்படுத்த அதிக உரிமை பெற்றவர் எனும் கருத்து
2366. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (பானம் உள்ள) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது, அவர்களின் வலப் பக்கம், மக்களில் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இடப் பக்கம் முதியவர்கள் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக்கூடிய எனது பங்கை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 42
2367. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَذُودَنَّ رِجَالاً عَنْ حَوْضِي كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الْحَوْضِ "".
பாடம் : 11 நீர்த்தொட்டி மற்றும் தோல் பையின் உரிமையாளரே தமது தண்ணீரைப் பயன்படுத்த அதிக உரிமை பெற்றவர் எனும் கருத்து
2367. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன்மீது ஆணையாக! (தனது குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமை யில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்க விருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர் களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன்.9

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 42
2368. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَكَثِيرِ بْنِ كَثِيرٍ ـ يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الآخَرِ ـ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ، لَوْ تَرَكَتْ زَمْزَمَ ـ أَوْ قَالَ لَوْ لَمْ تَغْرِفْ مِنَ الْمَاءِ ـ لَكَانَتْ عَيْنًا مَعِينًا، وَأَقْبَلَ جُرْهُمُ فَقَالُوا أَتَأْذَنِينَ أَنْ نَنْزِلَ عِنْدَكِ قَالَتْ نَعَمْ وَلاَ حَقَّ لَكُمْ فِي الْمَاءِ. قَالُوا نَعَمْ "".
பாடம் : 11 நீர்த்தொட்டி மற்றும் தோல் பையின் உரிமையாளரே தமது தண்ணீரைப் பயன்படுத்த அதிக உரிமை பெற்றவர் எனும் கருத்து
2368. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(நபி) இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாருக்கு (ஹாஜருக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்) விட்டுவிட்டிருந்தால் லி (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) லி தண்ணீரைக் கையால் அள்ளாமல் இருந் திருந்தால் லி அது (நிற்காமல்) ஓடுகின்ற நீரோடையாக இருந்திருக்கும்.

(பிறகு) யிபனூ ஜுர்ஹும்’ குலத்தார் அங்கு வந்து, ‘‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக்கொள்ள நீங்கள் அனுமதிப் பீர்களா?” என்று (ஹாஜரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘சரி; (தங்கி வசித்துக்கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத்) தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது” என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார், ‘‘சரி (அவ்வாறே ஒப்புக்கொள்கிறோம்)” என்று கூறினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 42
2369. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهْوَ كَاذِبٌ، وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ، وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ، فَيَقُولُ اللَّهُ الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي، كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ "". قَالَ عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ عَنْ عَمْرٍو سَمِعَ أَبَا صَالِحٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 11 நீர்த்தொட்டி மற்றும் தோல் பையின் உரிமையாளரே தமது தண்ணீரைப் பயன்படுத்த அதிக உரிமை பெற்றவர் எனும் கருத்து
2369. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான். (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்தபோது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப்பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவருடைய செல் வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்தவன் ஆவான்.

இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிக்க விடாமல்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 42
2370. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حِمَى إِلاَّ لِلَّهِ وَلِرَسُولِهِ "". وَقَالَ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَمَى النَّقِيعَ، وَأَنَّ عُمَرَ حَمَى السَّرَفَ وَالرَّبَذَةَ.
பாடம் : 12 அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் கிடையாது.
2370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் கிடையாது” என்று கூறினார்கள்.

இதை ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) யிநகீஉ’ எனுமிடத் தைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக ஆக்கியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘ஷரஃப்’ மற்றும் யிரபதா’ எனுமிடங்களைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந் தார்கள் என்று நமக்குச் செய்தி கிட்டியுள் ளது” என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.10

அத்தியாயம் : 42
2371. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ بِهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهُ انْقَطَعَ طِيَلُهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، فَهِيَ لِذَلِكَ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا ثُمَّ لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا، فَهِيَ لِذَلِكَ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ "". وَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ فَقَالَ "" مَا أُنْزِلَ عَلَىَّ فِيهَا شَىْءٌ إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {َمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ }""
பாடம் : 13 நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலி ருந்து கால்நடைகளுக்கு நீர் புகட்டு வதும்11
2371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிட மிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமை யாகும். அதை இறைவழியில் பயன்படுத்து வதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில், அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவ னிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில், அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடு களைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாள ருக்கு இல்லாமல் இருந்தாலும், அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். (இவ்விதம் நல்ல நோக்கங்களுக்காக வளர்க்கப்படும்) இந்தக் குதிரை அவருக்கு (மறுமையில்) நற்பலன் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும்.

இன்னொருவர், தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (விற்பனை வருமானத் திற்கான ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது சுமத்தும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு (அவரு டைய) அந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத் தால், அது அவனுக்குப் பாவச்சுமையாக ஆகிவிடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கழுதைகள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்த இறைக்கட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; யிஎவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனை யைக்) கண்டுகொள்வான்’ (99:7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 42
2372. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ "" اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ فَشَأْنَكَ بِهَا "". قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ "" هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". قَالَ فَضَالَّةُ الإِبِلِ قَالَ "" مَالَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "".
பாடம் : 13 நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலி ருந்து கால்நடைகளுக்கு நீர் புகட்டு வதும்11
2372. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லிக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்துவிடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர், ‘‘(பிறரது) தொலைந்துபோன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்...)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குச் சொந்தமானது; அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது; அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு அவர், ‘‘தொலைந்துபோன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (குடலும்) அதன் கால்குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக்கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக்கொள்ளும்வரை. (ஆகவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 42
2373. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلاً، فَيَأْخُذَ حُزْمَةً مِنْ حَطَبٍ فَيَبِيعَ، فَيَكُفَّ اللَّهُ بِهِ وَجْهَهُ، خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ أُعْطِيَ أَمْ مُنِعَ "".
பாடம் : 14 விறகு, புல் ஆகியவற்றை விற்றல்
2373. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்து விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரது முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்றுவதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்தததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம்.

இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 42
2374. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ "".
பாடம் : 14 விறகு, புல் ஆகியவற்றை விற்றல்
2374. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் விறகு (சேகரித்து அதன்) கட்டு ஒன்றை முதுகில் சுமந்து (விற்கச்) செல்வது, அவர் ஒருவரிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில், (அப்படிக் கேட்கும்போது) அவர் இவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 42
2375. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، حُسَيْنِ بْنِ عَلِيٍّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنهم ـ أَنَّهُ قَالَ أَصَبْتُ شَارِفًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَغْنَمٍ يَوْمَ بَدْرٍ قَالَ وَأَعْطَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَارِفًا أُخْرَى، فَأَنَخْتُهُمَا يَوْمًا عِنْدَ باب رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَأَنَا أُرِيدُ أَنْ أَحْمِلَ عَلَيْهِمَا إِذْخِرًا لأَبِيعَهُ، وَمَعِي صَائِغٌ مِنْ بَنِي قَيْنُقَاعَ فَأَسْتَعِينَ بِهِ عَلَى وَلِيمَةِ فَاطِمَةَ، وَحَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ يَشْرَبُ فِي ذَلِكَ الْبَيْتِ مَعَهُ قَيْنَةٌ، فَقَالَتْ أَلاَ يَا حَمْزَ لِلشُّرُفِ النِّوَاءِ. فَثَارَ إِلَيْهِمَا حَمْزَةُ بِالسَّيْفِ، فَجَبَّ أَسْنِمَتَهُمَا، وَبَقَرَ خَوَاصِرَهُمَا، ثُمَّ أَخَذَ مِنْ أَكْبَادِهِمَا. قُلْتُ لاِبْنِ شِهَابٍ وَمِنَ السَّنَامِ قَالَ قَدْ جَبَّ أَسْنِمَتَهُمَا فَذَهَبَ بِهَا. قَالَ ابْنُ شِهَابٍ قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ فَنَظَرْتُ إِلَى مَنْظَرٍ أَفْظَعَنِي فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ زَيْدُ بْنُ حَارِثَةَ فَأَخْبَرْتُهُ الْخَبَرَ فَخَرَجَ وَمَعَهُ زَيْدٌ، فَانْطَلَقْتُ مَعَهُ، فَدَخَلَ عَلَى حَمْزَةَ فَتَغَيَّظَ عَلَيْهِ فَرَفَعَ حَمْزَةُ بَصَرَهُ وَقَالَ هَلْ أَنْتُمْ إِلاَّ عَبِيدٌ لآبَائِي فَرَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقَهْقِرُ حَتَّى خَرَجَ عَنْهُمْ، وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الْخَمْرِ.
பாடம் : 14 விறகு, புல் ஆகியவற்றை விற்றல்
2375. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரில் கிடைத்த பொருட்களில் (எனது பங்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கூட்டாக வயது முதிர்ந்த ஓர் ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருந்தார்கள்.

ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். யிஇத்கிர்’ புல்லை விற்பதற்காக அதன்மீது ஏற்றிக் கொண்டுவர நான் விரும்பியிருந்தேன். அப்போது யிபனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டுவர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம்புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) குடித்துக் கொண்டிருந்தார்.

அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், ‘‘ஹம்ஸாவே! இதோ! வயதான கொழுத்த ஒட்டகங்கள்! (இவற்றை அறுத்து விருந்தாளிகளுக்குப் பரிமாறிவிடுங்கள்)” என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்துக்கொண்டார்கள். அருவருப்பூட்டிய அந்தப் பயங்கரக் காட்சியை நான் கண்டேன்.

உடனே நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி (ஸல்) அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் பின் ஹாரிஸா அவர் களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தமது கோபத்தை நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தமது பார்வையை உயர்த்தி, ‘‘நீங்கள் என் முன்னோர்களின் அடிமை கள்தானே?” என்று கூறினார்கள்.12

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரைவிட்டு அப்படியே பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார் கள். இந்த நிகழ்ச்சி மது தடை செய்யப்படு வதற்கு முன்பு நடந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களிடம், ‘‘திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா (ரலி) அவர்கள்) எடுத்துக்கொண்டார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்” என்று கூறினார்.13

அத்தியாயம் : 42
2376. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقْطِعَ مِنَ الْبَحْرَيْنِ، فَقَالَتِ الأَنْصَارُ حَتَّى تُقْطِعَ لإِخْوَانِنَا مِنَ الْمُهَاجِرِينَ مِثْلَ الَّذِي تُقْطِعُ لَنَا قَالَ "" سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي "".
பாடம் : 15 தரிசுநில ஒதுக்கீடு14
2376. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார் கள்.15 அதற்கு அன்சாரிகள், ‘‘(அல்லாஹ் வின் தூதரே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர் களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம்)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அன் சாரிகளே!) எனக்குப்பின் (சிறிது காலத்திற் குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்)வரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள்” என்று சொன்னார் கள்.

அத்தியாயம் : 42
2377. وَقَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الأَنْصَارَ لِيُقْطِعَ لَهُمْ بِالْبَحْرَيْنِ، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنْ فَعَلْتَ فَاكْتُبْ لإِخْوَانِنَا مِنْ قُرَيْشٍ بِمِثْلِهَا، فَلَمْ يَكُنْ ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي "".
பாடம் : 16 தரிசுநில ஒதுக்கீட்டை எழுதிப் பதிவு செய்தல்
2377. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந் தால் எங்களுடைய குறைஷி சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார்கள்.

ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகின்ற அளவுக்கு) மானிய நிலங்கள் அப்போது நபி (ஸல்) அவர்களி டம் இருக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிட மற்றவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர் கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று (அன்சாரிகளி டம்) கூறினார்கள்.16

அத்தியாயம் : 42
2378. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مِنْ حَقِّ الإِبِلِ أَنْ تُحْلَبَ عَلَى الْمَاءِ "".
பாடம் : 17 நீர்நிலையருகே ஒட்டகத்தின் பாலைக் கறத்தல்
2378. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

பெண் ஒட்டகத்தின் உரிமைகளில் நீர் நிலையருகே அதன் பாலைக் கறப்பதும் ஒன்றாகும்.17

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 42
2379. أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ ابْتَاعَ نَخْلاً بَعْدَ أَنْ تُؤَبَّرَ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ، إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ، وَمَنِ ابْتَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ "". وَعَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ فِي الْعَبْدِ.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் எவர் பேரீச்ச மரங்களை வாங்கினாரோ, அவர் (அதை வாங்கியபோது அந்த போக விளைச்சல் தமக்கே சேர வேண்டு மென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியது. எவர் செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்குகிறாரோ, (அந்தச் செல்வம் தமக்கே சேர வேண்டும் என்று) வாங்கியவர் நிபந்தனையிட்டிருந்தால் தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே சேரும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அடிமை தொடர்பான இந்த ஹதீஸ் உமர் (ரலி) அவர்களாலும் அறிவிக்கப் பட்டுள்ளது.


அத்தியாயம் : 42
2380. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنهم ـ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُبَاعَ الْعَرَايَا بِخَرْصِهَا تَمْرًا.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2380. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, ‘அராயா’ (இரவல்) மரத்திலுள்ள கனிகளை (ஐந்து யிவஸ்க்’கு களுக்கும் குறைவான அளவில்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதியளித் தார்கள்.


அத்தியாயம் : 42
2381. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْمُخَابَرَةِ، وَالْمُحَاقَلَةِ، وَعَنِ الْمُزَابَنَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَأَنْ لاَ تُبَاعَ إِلاَّ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ، إِلاَّ الْعَرَايَا.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2381. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முகாபராவையும், முஹாகலாவையும், முஸாபனாவையும், பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள். மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் (இரவல் மரங்கள்) மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித் தார்கள்.19


அத்தியாயம் : 42
2382. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ أَبِي سُفْيَانَ، مَوْلَى أَبِي أَحْمَدَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ أَوْ فِي خَمْسَةِ أَوْسُقٍ، شَكَّ دَاوُدُ فِي ذَلِكَ.
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதில் தமக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும் மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டபின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தாம் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும்வரை (அதாவது கனிகளைப் பறித்துக்கொள்ளும்வரை). இவ்வாறே ‘அராயா’ (இரவல் மரங்கள்) வியாபாரம் செய்பவருக்கும் உரிமை யுண்டு.18
2382. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அராயா’ (இரவல்) வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக ஐந்து யிவஸ்க்’குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்துகொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள், யிஐந்து வஸ்க்குகளுக்கும் குறைவாகவா; ஐந்து வஸ்க்குகளுக்கா’ என்று சந்தேகப்படுகிறார்கள்.20


அத்தியாயம் : 42