2343. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَصَدْرًا مِنْ إِمَارَةِ مُعَاوِيَةَ.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2343. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் குத்தகைக்கு விட்டுவந்தார்கள்.


அத்தியாயம் : 41
2344. ثُمَّ حُدِّثَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ، فَذَهَبَ ابْنُ عُمَرَ إِلَى رَافِعٍ فَذَهَبْتُ مَعَهُ، فَسَأَلَهُ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ كِرَاءِ الْمَزَارِعِ. فَقَالَ ابْنُ عُمَرَ قَدْ عَلِمْتَ أَنَّا كُنَّا نُكْرِي مَزَارِعَنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا عَلَى الأَرْبِعَاءِ وَبِشَىْءٍ مِنَ التِّبْنِ.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2344. பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்த, ‘‘நபி (ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்” என்னும் நபிமொழி எடுத்து ரைக்கப்பட்டது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இதைச் செவியுற்றவுடன் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.

இதைச் செவியுற்ற இப்னு உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ  (ரலி) அவர்களிடம், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 41
2345. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ الأَرْضَ تُكْرَى. ثُمَّ خَشِيَ عَبْدُ اللَّهِ أَنْ يَكُونَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ يَعْلَمُهُ، فَتَرَكَ كِرَاءَ الأَرْضِ.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2345. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுவந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்டபின்) நிலக் குத்தகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் எதையேனும் பிறப்பித்து (பழைய விதிகளை மாற்றியமைத்து)விட்டிருக்க, அதை நாம் அறியாதிருந்துவிட் டோமோ என்று அஞ்சி நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.

அத்தியாயம் : 41
2346. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ حَدَّثَنِي عَمَّاىَ، أَنَّهُمْ كَانُوا يُكْرُونَ الأَرْضَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَا يَنْبُتُ عَلَى الأَرْبِعَاءِ أَوْ شَىْءٍ يَسْتَثْنِيهِ صَاحِبُ الأَرْضِ فَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقُلْتُ لِرَافِعٍ فَكَيْفَ هِيَ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ فَقَالَ رَافِعٌ لَيْسَ بِهَا بَأْسٌ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ. وَقَالَ اللَّيْثُ وَكَانَ الَّذِي نُهِيَ عَنْ ذَلِكَ مَا لَوْ نَظَرَ فِيهِ ذَوُو الْفَهْمِ بِالْحَلاَلِ وَالْحَرَامِ لَمْ يُجِيزُوهُ، لِمَا فِيهِ مِنَ الْمُخَاطَرَةِ.
பாடம் : 19 பொன்னுக்கும் வெள்ளிக்கும் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிகவும் மேலானது தரிசு நிலத்தை (பயிர் செய்வதற் காக) ஆண்டு வாடகைக்கு எடுப்பதே யாகும்” என்று கூறினார்கள்.
2346. 2347 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரர்கள் இருவர், ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது நில உரிமையாளர்(களான நாங்கள்) வரையறுக்கின்ற (ஒரு பகுதி) விளைச்சலை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தோம். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவிட்டார்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம், ‘‘தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெற்றுக்கொண்டு குத்தகைக்கு விடலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதில் (தங்க, வெள்ளி நாணயங்களைப் பெற்றுக்கொண்டு குத்தகைக்கு விடுவதில்) தவறில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் லைஸ் (ரஹ்) அவர்கள், ‘‘ஹலாலையும் (அனுமதிக்கப்பட்ட தையும்) ஹராமையும் (விலக்கப்பட்டதையும்) வேறுபடுத்தி விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் தடை செய்யப்பட்ட குத்தகை முறைகளை ஆய்வுக்கண் கொண்டு பார்ப்பார்களாயின் அவற்றிலுள்ள ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு அவற்றை அனுமதிக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 41
2348. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ "" أَنَّ رَجُلاً مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ. قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ، فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ، فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَىْءٌ "". فَقَالَ الأَعْرَابِيُّ وَاللَّهِ لاَ تَجِدُهُ إِلاَّ قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا، فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ، وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ. فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 20
2348. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராம வாசி ஒருவர் தம்மிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘‘நீ விரும்பிய (இன்பமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்துகொண்டிருக்க வில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், ‘‘ஆம். (நான் விரும்பியபடியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.)

அந்த மனிதர் விதை தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்துவிடும். அப்போது இறைவன், ‘‘எடுத்துக்கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத் தாது” என்று கூறுவான்.

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள்தான் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 41
2349. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ إِنَّا كُنَّا نَفْرَحُ بِيَوْمِ الْجُمُعَةِ، كَانَتْ لَنَا عَجُوزٌ تَأْخُذُ مِنْ أُصُولِ سِلْقٍ لَنَا كُنَّا نَغْرِسُهُ فِي أَرْبِعَائِنَا فَتَجْعَلُهُ فِي قِدْرٍ لَهَا فَتَجْعَلُ فِيهِ حَبَّاتٍ مِنْ شَعِيرٍ لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهُ قَالَ لَيْسَ فِيهِ شَحْمٌ وَلاَ وَدَكٌ، فَإِذَا صَلَّيْنَا الْجُمُعَةَ زُرْنَاهَا فَقَرَّبَتْهُ، إِلَيْنَا فَكُنَّا نَفْرَحُ بِيَوْمِ الْجُمُعَةِ مِنْ أَجْلِ ذَلِكَ وَمَا كُنَّا نَتَغَدَّى وَلاَ نَقِيلُ إِلاَّ بَعْدَ الْجُمُعَةَ.
பாடம் : 21 மரம் நடுதல்
2349. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்துவந்தோம். ஏனெனில், எங்களுடன் மூதாட்டி ஒருவர் நட்பாக இருந்தார். அவர், எங்கள் நீரோடைகளின் ஓரமாக நாங்கள் நட்டு வந்த யிசில்க்’ என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி, அவற்றைத் தமது பாத்திர மொன்றில் போட்டு, அவற்றுடன் தொலி நீக்கப்படாத கோதுமை வித்துகள் சில வற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவார். நாங்கள் ஜுமுஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்த மூதாட்டியைச் சந்திப்போம். அவர் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவார். இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம்.

இதன் மூன்றாவது அறிவிப்பாளரான யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இரண்டாம் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘அந்த உணவு கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் அற்றதாக இருந்தது” என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.


அத்தியாயம் : 41
2350. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ. وَاللَّهُ الْمَوْعِدُ، وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ لاَ يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنَ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وَإِنَّ إِخْوَتِي مِنَ الأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ، وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مِلْءِ بَطْنِي، فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا "" لَنْ يَبْسُطَ أَحَدٌ مِنْكُمْ ثَوْبَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي هَذِهِ، ثُمَّ يَجْمَعَهُ إِلَى صَدْرِهِ، فَيَنْسَى مِنْ مَقَالَتِي شَيْئًا أَبَدًا "". فَبَسَطْتُ نَمِرَةً لَيْسَ عَلَىَّ ثَوْبٌ غَيْرَهَا، حَتَّى قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم مَقَالَتَهُ، ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي، فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا نَسِيتُ مِنْ مَقَالَتِهِ تِلْكَ إِلَى يَوْمِي هَذَا، وَاللَّهِ لَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ شَيْئًا أَبَدًا {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ} إِلَى قَوْلِهِ {الرَّحِيمُ}
பாடம் : 21 மரம் நடுதல்
2350. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா ஏராளமான நபிமொழிகளை அறிவிக்கிறாரே என்று மக்கள் (என்னைக் குறைகூறும் தொனியில்) பேசிக்கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் இதற்கெனக் குறித்த வேளை ஒன்று உண்டு. மேலும், அவர்கள், ‘‘முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்துவிட்டது? அபூஹுரைரா நபிமொழிகளை அறிவிப் பதைப் போன்று அவர்கள் அறிவிப்ப தில்லையே ஏன்?” என்று கேட்கிறார் கள்.

என் முஹாஜிர் சகோதரர்கள் கடை வீதிகளில் வியாபாரங்களில் ஈடுபட்டி ருந்தனர்; என் அன்சாரி சகோதரர்களோ தங்கள் சொத்துகளைப் பராமரிக்கும் வேலையில் (விவசாயம் போன்ற பணிகளில்) ஈடுபட்டிருந்தனர். (அதே நேரத்தில்) நானோ என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (மேற்கொண்டு வருவாய் எதுவும் தேடாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருப்பதை வழக்கமாகக் கொண்ட ஏழை மனிதனாய் இருந்தேன்.

நபி (ஸல்) அவர்களுடன் மற்றவர்கள் இல்லாதபோதும் (சம்பாத்தியத்தைத் தேடி அவர்கள் வெளியே சென்றுவிடும் போதும்) நான் (நபியவர்களுடன்) இருப்பேன். அவர்கள் (நபிமொழிகளை) மறந்துவிடும்போது நான் (அவற்றை) நினைவில் (பாதுகாப்பாக) வைத்திருப்பேன்.

மேலும், ஒருநாள் நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் எனது இந்தச் சொல்லைச் சொல்லிமுடிக்கின்ற வரை, எவர் தமது ஆடையை விரித்து வைத்திருந்து, பிறகு தம் நெஞ்சோடு அதைச் சேர்த்து வைத்துக்கொள்கிறாரோ அவர் என் வாக்கு எதையும் மறக்கமாட்டார்” என்று கூற, நான் என் அங்கியை விரித்தேன். அதைத் தவிர என்மீது வேறு ஆடை எதுவும் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தமது சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை அதை அப்படியே விரித்து வைத்தி ருந்துவிட்டு, பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொண்டேன்.

நபி (ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணை யாக! அப்போதிருந்து அவர்களுடைய சொற்களில் எதையுமே இன்றுவரை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுடைய வேதத்தின் இரு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் (நபிமொழிகளில்) எதையுமே உங்களுக்கு ஒருபோதும் அறிவித்திருக்க மாட்டேன்.

இவைதான் அந்த வசனங்கள்:

நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக் குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்; எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி (தாம் மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங் கருணையாளனும் ஆவேன். (2:159,160)

அத்தியாயம் : 41

2351. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَدَحٍ فَشَرِبَ مِنْهُ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ أَصْغَرُ الْقَوْمِ، وَالأَشْيَاخُ عَنْ يَسَارِهِ فَقَالَ "" يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَهُ الأَشْيَاخَ "". قَالَ مَا كُنْتُ لأُوثِرَ بِفَضْلِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ. فَأَعْطَاهُ إِيَّاهُ.
பாடம் : 1 நீர் விநியோகம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ஒவ்வோர் உயிரினத்தையும் தண்ணீரி லிருந்து நாம் படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா? (21:30) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பருகும் இந்த நீரைப் பார்த்திருக்கிறீர்களா? மேகத்தில் இருந்து, நீங்கள் இதனைப் பொழியச்  செய்தீர்களா? அல்லது இதனைப் பொழியச் செய்தது நாமா? நாம் நாடியிருந்தால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (56:68லி70)2 பாடம் : 2 தண்ணீரைத் தர்மமாகவோ அன் பளிப்பாகவோ இறுதி விருப்பத்தின் (வஸிய்யத்) மூலமோ வழங்கலாம்; அது தனி உடைமையாக அல்லது கூட்டுடைமையாக இருந்தாலும் சரி! உஸ்மான் (ரலி) அவர்கள்கூறினார்கள்: ‘‘ரூமா கிணற்றை வாங்குபவர் யார்? அதில் அ(தை வாங்குப)வருடைய வாளி, மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் அதை வாங்கி (முஸ்லிம்களின் நலனுக்காக வக்ஃப் செய்து)விட்டேன்.3
2351. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘‘சிறுவரே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அச்சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அந்த மீதியை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 42
2352. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَاةٌ دَاجِنٌ وَهْىَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ، وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنَ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ، فَأَعْطَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ، حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ، وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ. فَأَعْطَاهُ الأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ، ثُمَّ قَالَ "" الأَيْمَنَ فَالأَيْمَنَ "".
பாடம் : 1 நீர் விநியோகம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ஒவ்வோர் உயிரினத்தையும் தண்ணீரி லிருந்து நாம் படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா? (21:30) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பருகும் இந்த நீரைப் பார்த்திருக்கிறீர்களா? மேகத்தில் இருந்து, நீங்கள் இதனைப் பொழியச்  செய்தீர்களா? அல்லது இதனைப் பொழியச் செய்தது நாமா? நாம் நாடியிருந்தால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (56:68லி70)2 பாடம் : 2 தண்ணீரைத் தர்மமாகவோ அன் பளிப்பாகவோ இறுதி விருப்பத்தின் (வஸிய்யத்) மூலமோ வழங்கலாம்; அது தனி உடைமையாக அல்லது கூட்டுடைமையாக இருந்தாலும் சரி! உஸ்மான் (ரலி) அவர்கள்கூறினார்கள்: ‘‘ரூமா கிணற்றை வாங்குபவர் யார்? அதில் அ(தை வாங்குப)வருடைய வாளி, மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் அதை வாங்கி (முஸ்லிம்களின் நலனுக்காக வக்ஃப் செய்து)விட்டேன்.3
2352. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டில் வளர்ந்த ஆடு ஒன்றின் பாலை அவர் களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத் தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர்.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்சி, ‘‘உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்துவிடுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, ‘‘(முதலில்) வலப் பக்கம் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப் பக்கம் இருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)” என்று சொன்னார் கள்.

அத்தியாயம் : 42
2353. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلأُ "".
பாடம் : 3 நீர் வைத்திருப்பவர்தான் அந்நீருக்கு, தம் தேவை நிறைவேறும்வரை முன்னுரிமை பெற்றவர். நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்குமேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறருக்குத் தர) மறுக்கக் கூடாது” என்று கூறினார்கள்.
2353. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘(தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீ ரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச்  சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்த தாகிவிடும்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 42
2354. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَمْنَعُوا فَضْلَ الْمَاءِ لِتَمْنَعُوا بِهِ فَضْلَ الْكَلإِ "".
பாடம் : 3 நீர் வைத்திருப்பவர்தான் அந்நீருக்கு, தம் தேவை நிறைவேறும்வரை முன்னுரிமை பெற்றவர். நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்குமேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறருக்குத் தர) மறுக்கக் கூடாது” என்று கூறினார்கள்.
2354. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்குமேல் உள்ள புற்பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 42
2355. حَدَّثَنَا مَحْمُودٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْمَعْدِنُ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْعَجْمَاءُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ "".
பாடம் : 4 தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியவர் (அதில் யாரே னும் மனிதனோ மற்ற பிராணிகளோ விழுந்து இறந்துபோனால்) அதற்கு இழப்பீடு தர வேண்டியதில்லை.
2355. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுரங்க (விப)த்துக்கு இழப்பீடு கிடை யாது; வாயில்லாப் பிராணி(களால் ஏற்படும் இழப்பு)களுக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.5

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 42
2356. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ، هُوَ عَلَيْهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ"" فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} الآيَةَ. فَجَاءَ الأَشْعَثُ فَقَالَ مَا حَدَّثَكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، فِيَّ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ، كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي فَقَالَ لِي "" شُهُودَكَ "". قُلْتُ مَا لِي شُهُودٌ. قَالَ "" فَيَمِينَهُ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ. فَذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ، فَأَنْزَلَ اللَّهُ ذَلِكَ تَصْدِيقًا لَهُ.
பாடம் : 5 கிணறு தொடர்பான வழக்கும் அதற்கான தீர்ப்பும்
2356. 2357 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன்மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்க வும்மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது” (3:77) எனும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் வந்து (மக்களை நோக்கி), ‘‘அபூஅப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கி யது. என் தந்தையின் சகோதரர் மகனு டைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன்.)

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?› என்று கேட்டார்கள். நான், ‘‘என்னிடம் சாட்சிகள் இல்லை” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையதுதான்’ என்று) சத்தியம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். நான், ‘‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே” என்று கூறினேன்.

அப்போதுதான், நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 42
2358. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ مِنِ ابْنِ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلاَّ لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ، وَرَجُلٌ أَقَامَ سِلْعَتَهُ بَعْدَ الْعَصْرِ، فَقَالَ وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِهَا كَذَا وَكَذَا، فَصَدَّقَهُ رَجُلٌ"" ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً}
பாடம் : 6 தண்ணீரைப் பயன்படுத்த விடாமல் வழிப்போக்கரைத் தடுத்தவரின் பாவம்
2358. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத் தவும்மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீ ரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன்.

இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்துகொண்டவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தி யடைவான்; கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்வான்.

மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன்” என்று கூறி, அதை ஒரு மனிதர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.6

இதைக் கூறிவிட்டு, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை யும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ...” (3:77) எனும் இறைவசனத்தை ஓதினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 42
2359. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ فَأَبَى عَلَيْهِ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ "" اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ "". فَغَضِبَ الأَنْصَارِيُّ، فَقَالَ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ. فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ احْبِسِ الْمَاءَ، حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ "". فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ {فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ}.
பாடம் : 7 நதிகளை(யும் கால்வாய்களையும்) மூடிவிடுவது
2359. 2360 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரி தோழர், ‘‘தண் ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள்.

(இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அந்த அன்சாரி தோழர் கோபம் கொண்டு, ‘‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?” என்று கேட்டார்.7

இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடை யும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

(என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறி விட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர், நீங்கள் அளிக் கின்ற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்’ எனும் (4:65) திருக் குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 42
2361. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ خَاصَمَ الزُّبَيْرَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا زُبَيْرُ اسْقِ ثُمَّ أَرْسِلْ "". فَقَالَ الأَنْصَارِيُّ إِنَّهُ ابْنُ عَمَّتِكَ. فَقَالَ عَلَيْهِ السَّلاَمُ "" اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ يَبْلُغُ الْمَاءُ الْجَدْرَ، ثُمَّ أَمْسِكْ "". فَقَالَ الزُّبَيْرُ فَأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ {َلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ}. قَالَ مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَيْسَ أَحَدٌ يَذْكُرُ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ، إِلاَّ اللَّيْثُ فَقَطْ.
பாடம் : 8 மேட்டிலிருக்கும் நிலத்திற்கு முதலில் நீர் பாய்ச்சுதல்
2361. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஓர் அன்சாரி தோழருடன் (பேரீச் சந்தோப்புக்கு நீர் பாய்ச்சும் விஷயத்தில்) சச்சரவு ஏற்பட்டது. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம் இந்த விஷயம் தீர்ப்புக்காகச் சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! (மேட்டிலிருக்கும் உங்கள் தோப்புக்குத்) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு (அதை அன்சாரியின் தோப்புக்கு) அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே அன்சாரி தோழர், ‘‘அவர் உங்கள் அத்தை மகன் ஆயிற்றே! (அதனால் தான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறீர்கள்”) என்று கூறினார்.

இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! வரப்பை அடையும்வரை நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு (பின்னர் அன்சாரியின் தோப்புக்கு) அதைத் திறந்து அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘திருக்குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்துத்தான் இறங்கியது என நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 42
2362. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ فِي شِرَاجٍ مِنَ الْحَرَّةِ يَسْقِي بِهَا النَّخْلَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اسْقِ يَا زُبَيْرُ ـ فَأَمَرَهُ بِالْمَعْرُوفِ ـ ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ "". فَقَالَ الأَنْصَارِيُّ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ. فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَرْجِعَ الْمَاءُ إِلَى الْجَدْرِ "". وَاسْتَوْعَى لَهُ حَقَّهُ. فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنَّ هَذِهِ الآيَةَ أُنْزِلَتْ فِي ذَلِكَ {َلاَ وَرَبِّكِ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ}. قَالَ لِي ابْنُ شِهَابٍ فَقَدَّرَتِ الأَنْصَارُ وَالنَّاسُ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم "" اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ "". وَكَانَ ذَلِكَ إِلَى الْكَعْبَيْنِ.
பாடம் : 9 மேட்டிலுள்ள நிலத்திற்கு கணுக் கால்கள்வரை நீர் பாய்ச்சிக் கொள்ளல்
2362. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமி டத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம்மிடம் இந்த வழக்கு வந்தபோது), ‘‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டையதோப்பு)க்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, ‘‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?” என்று கேட்டார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும்வரை தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் (பிறகு விட்டுவிடுங்கள்)” என்று கூறி, ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த நபிமொழியை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘ ‘(உங்கள் மரங் களுக்கு) நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்’ எனும் (இந்த) நபிமொழியை அடிப்படை யாகக் கொண்டுதான், யிதண்ணீர் கணுக்கால் கள்வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்ட தாகப் பொருள்’ என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டுக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 42