2165. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ تَلَقَّوُا السِّلَعَ حَتَّى يُهْبَطَ بِهَا إِلَى السُّوقِ "".
பாடம் : 71
வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57
இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்யலாகாது; மேலும், விற்பனைப் பொருட்கள் சந்தைக்கு கொண்டுவந்து இறக்கப்படுவதற்குமுன் (இடையிலேயே) வாங்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34

2166. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ، فَنَهَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا فِي أَعْلَى السُّوقِ، يُبَيِّنُهُ حَدِيثُ عُبَيْدِ اللَّهِ.
பாடம் : 72
(வெளியூரிலிருந்து வரும்) வியாபாரிகளை எதிர்கொள்வதற்குரிய எல்லை59
2166. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (வெளியூரிலிருந்து சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை (ஊருக்குள்) எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கிவந்தோம். (அவ்வாறு நாங்கள் வாங்கும்) உணவுப் பொருள் உணவுச் சந்தைக்குக் கொண்டுசெல்லப் படுவதற்குமுன் அதை நாங்கள் விற்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
வணிகர்களை எதிர்கொண்டது சந்தை (கடைவீதி) துவங்கும் இடத்தில்தான். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

2167. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِمْ، فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ.
பாடம் : 72
(வெளியூரிலிருந்து வரும்) வியாபாரிகளை எதிர்கொள்வதற்குரிய எல்லை59
2167. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் உணவுப் பொருட் களைக் கடைவீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்றுவந்தனர்; ஆகவே, கடைத்தெருவுக்குள் கொண்டு சொல்லாமல் வாங்கிய இடத்திலேயே அவர்கள் விற்கக் கூடாதென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

2168. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْنِي بَرِيرَةُ فَقَالَتْ كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ وَقِيَّةٌ، فَأَعِينِينِي. فَقُلْتُ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَقَالَتْ لَهُمْ فَأَبَوْا عَلَيْهَا، فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ، فَقَالَتْ إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا، إِلاَّ أَنْ يَكُونَ الْوَلاَءُ لَهُمْ. فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلاَءَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". فَفَعَلَتْ عَائِشَةُ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، قَضَاءُ اللَّهِ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، وَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 73
வியாபாரத்தின்போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்...?
2168. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா (ரலி) என்னிடம் வந்து, ‘‘நான் என் உரிமை யாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் யிஊ(க்)கியா’ வீதம் (ஒன்பது ஆண்டுகளில்) ஒன்பது யிஊ(க்)கியா’க்கள் செலுத்தி (விடுதலை ஆகி)விடுவதென எழுதிக்கொடுத்துள் ளேன்; எனக்கு நீங்கள் உதவுங்கள்” என்றார். அதற்கு நான், ‘‘உன் வாரிசுரிமை (அல்வலாஉ) எனக்கே இருக்க வேண்டும் என்பதை உன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்கிறேன்” எனக் கூறினேன். உடனே, பரீரா தம் உரிமையாளர்களிடம் சென்றார். அவர்களி டம் அவர் இதைக் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும்போது பரீரா, தம் உரிமை யாளர்களிடமிருந்து திரும்பி வந்து, ‘‘விஷயத்தை உரிமையாளர்களிடம் கூறினேன்; அவர்கள் யிவாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும்’ எனக் கூறி, மறுத்து விட்டனர்” என்று கூறினார். இதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைக் கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பரீராவை நீ வாங்கிக்கொள்! யிவாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று அறிவித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்). ஏனெனில், (அடிமை இறந்தபின் அவனுக்கு) வாரிசாகும் உரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியது” எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்: இறை வாழ்த்துக்குப்பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த நிபந்தனையும் செல்லாதது ஆகும். அவை நூறு நிபந்தனைகளாயினும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத் தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது. நிச்சயமாக, அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்த வருக்கே உரியது.

2169. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عَائِشَةَ، أُمَّ الْمُؤْمِنِينَ أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً فَتُعْتِقَهَا، فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا. فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ يَمْنَعُكِ ذَلِكَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 73
வியாபாரத்தின்போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்...?
2169. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அடிமைப் பெண்ணின் உரிமையாளர்கள், யிஇவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் அடிப் படையில் உமக்கு விற்கிறோம் எனக் கூறினார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘‘அவர்களின் நிபந்தனை உனக்குத் தடையாக இராது; ஏனெனில், அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை (அவர்களை) விடுதலை செய்தவருக்கே உரியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2170. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، سَمِعَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ "".
பாடம் : 74
பேரீச்சம்பழத்திற்குப் பேரீச்சம்பழத்தை விற்பது60
2170. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக் குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வது வட்டியாகும். உடனுக்கு டன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம்பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2171. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلاً، وَبَيْعُ الزَّبِيبِ بِالْكَرْمِ كَيْلاً.
பாடம் : 75
உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்
2171. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, (பேரீச்ச மரத்திலுள்ள உலராத) கனிகளை, (கொய்யப்பட்டு) அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்ட மாற்று முறையில்) விற்பதும் (கொடியி லுள்ள) திராட்சைப் பழத்தை, (பறித்து) அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்குப் பதிலாக (பண்டமாற்று முறையில்) விற்பதும் ஆகும்.61

2172. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ قَالَ وَالْمُزَابَنَةُ أَنْ يَبِيعَ الثَّمَرَ بِكَيْلٍ، إِنْ زَادَ فَلِي وَإِنْ نَقَصَ فَعَلَىَّ. قَالَ وَحَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الْعَرَايَا بِخَرْصِهَا.
பாடம் : 75
உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்
2172. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் யிமுஸாபனா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். யிமுஸாபனா’ என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும்போது, ‘அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது’ என்று கூறி விற்பதாகும்.

2173.
பாடம் : 75
உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்
2173. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளைத் தோராயமாக மதிப்பிட்டு விற்பதற்கு ‘அராயா’வில் (ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட மரங்களில் மட்டும்) அனுமதி அளித்தார்கள்.62
அத்தியாயம் :

2174. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ، أَخْبَرَهُ أَنَّهُ الْتَمَسَ، صَرْفًا بِمِائَةِ دِينَارٍ، فَدَعَانِي طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ فَتَرَاوَضْنَا، حَتَّى اصْطَرَفَ مِنِّي، فَأَخَذَ الذَّهَبَ يُقَلِّبُهَا فِي يَدِهِ، ثُمَّ قَالَ حَتَّى يَأْتِيَ خَازِنِي مِنَ الْغَابَةِ، وَعُمَرُ يَسْمَعُ ذَلِكَ، فَقَالَ وَاللَّهِ لاَ تُفَارِقُهُ حَتَّى تَأْخُذَ مِنْهُ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ "".
பாடம் : 76
தொலி நீக்கப்படாத கோதுமைக்கு தொலி நீக்கப்படாத கோதுமையை விற்பது
2174. மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நூறு பொற்காசுகளை (வெள்ளிக் காசுகளாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். நாங்கள் விலை குறித்துப் பேசினோம். இறுதியில் எனக்கு நாணயமாற்றுச் செய்ய அவர்கள் முன்வந்தார்கள். (என்னிடமிருந்து) பொற்காசுகளைப் பெற்று தமது கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு ‘அல்ஃகாபா’ எனும் இடத்திலிருந்து என் காசாளர் வரும்வரை (நீர் பொறுத்திருக்க வேண்டும்) என்றார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் (என்னிடம்), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவரிடமிருந்து (பொற்காசுகளுக்குப் பதிலாக வெள்ளிக் காசுகளைப்) பெறாமல் நீர் (இந்த இடத்தை விட்டுப்) பிரியக் கூடாது; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஉடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக்கொள்வது வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டி ஆகும்; உடனுக்குடன் அல்லாமல் பேரீச்சம்பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும் என்று கூறியுள்ளார்கள்” என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

2175. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ أَبُو بَكْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلاَّ سَوَاءً بِسَوَاءٍ، وَالْفِضَّةَ بِالْفِضَّةِ إِلاَّ سَوَاءً بِسَوَاءٍ، وَبِيعُوا الذَّهَبَ بِالْفِضَّةِ وَالْفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْتُمْ "".
பாடம் : 77
தங்கத்திற்குத் தங்கத்தை விற்பது
2175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தை யும் விரும்பியவாறு விற்றுக்கொள் ளுங்கள்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2176. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا ابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنْ عَمِّهِ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ أَبَا سَعِيدٍ، حَدَّثَهُ مِثْلَ، ذَلِكَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَقِيَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَقَالَ يَا أَبَا سَعِيدٍ، مَا هَذَا الَّذِي تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو سَعِيدٍ فِي الصَّرْفِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" الذَّهَبُ بِالذَّهَبِ مِثْلاً بِمِثْلٍ وَالْوَرِقُ بِالْوَرِقِ مِثْلاً بِمِثْلٍ "".
பாடம் : 78
வெள்ளிக்கு வெள்ளியை விற்பது
2176. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இதற்குமுன் 2174ஆவது ஹதீஸில் உமர் (ரலி) அவர்கள் அறிவித்த) அந்த ஹதீஸைப் போன்று ஒரு ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அறிவித்தார்கள்.
பின்னர் (ஒரு தடவை) அபூசயீத் (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிவித்த அந்த ஹதீஸ் என்ன? (திரும்பக் கூறுங்கள்)” என்று (உறுதிபடுத்திக் கொள்வதற்காகக்) கேட்டார்கள்.
அப்போது யிநாணயமாற்று’ தொடர்பாக அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘தங்கத்தை தங்கத்திற்குச் சரிக்குச் சமமாகவே (விற்க வேண்டும்); வெள்ளியை வெள்ளிக்குச் சரிக்குச் சமமாகவே (விற்க வேண்டும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.

2177. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ، وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلاَ تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ، وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلاَ تَبِيعُوا مِنْهَا غَائِبًا بِنَاجِزٍ ""
பாடம் : 78
வெள்ளிக்கு வெள்ளியை விற்பது
2177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எடையில்) சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்), தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ குறைத்தோ) விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைக் கூட்டி(யோ, குறைத்தோ)விடாதீர்கள்! அவற்றில் ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2178. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ أَبَا صَالِحٍ الزَّيَّاتَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ الدِّينَارُ بِالدِّينَارِ، وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ. فَقُلْتُ لَهُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ لاَ يَقُولُهُ. فَقَالَ أَبُو سَعِيدٍ سَأَلْتُهُ فَقُلْتُ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم، أَوْ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ قَالَ كُلُّ ذَلِكَ لاَ أَقُولُ، وَأَنْتُمْ أَعْلَمُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي، وَلَكِنَّنِي أَخْبَرَنِي أُسَامَةُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ رِبًا إِلاَّ فِي النَّسِيئَةِ ".
பாடம் : 79
தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தைத் தவணை முறையில் விற்பது
2178. 2179 அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ‘‘தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் (சரிக்குச் சமமாக மட்டுமே) விற்கலாம்!” என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்களிடம் நான், ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுவதில் லையே!” எனக் கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் இ(வ்வாறு கூறிவருவ)தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர் களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவ்வா றெல்லாம் நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நன்கறிந்தவர்; என்றாலும், கடனில் (தவணையில்) தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார் என்று விடையளித்தார்கள்.63

2180. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْمِنْهَالِ، قَالَ سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ وَزَيْدَ بْنَ أَرْقَمَ ـ رضى الله عنهم ـ عَنِ الصَّرْفِ،، فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا يَقُولُ هَذَا خَيْرٌ مِنِّي. فَكِلاَهُمَا يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الذَّهَبِ بِالْوَرِقِ دَيْنًا.
பாடம் : 80
தங்கத்திற்கு வெள்ளியைத் தவணை முறையில் விற்பது64
2180. 2181 அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். அப்போது அவ்விருவரில் ஒவ்வொருவரும் (மற்றறவர் குறித்து) ‘‘இவர் என்னைவிடச் சிறந்தவர்” என்று சொல்லிக்கொண்டனர்.
பிறகு இருவருமே, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக் குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார் கள்” என்று பதிலளித்தனர்.65

2182. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْفِضَّةِ بِالْفِضَّةِ وَالذَّهَبِ بِالذَّهَبِ، إِلاَّ سَوَاءً بِسَوَاءٍ، وَأَمَرَنَا أَنْ نَبْتَاعَ الذَّهَبَ بِالْفِضَّةِ كَيْفَ شِئْنَا، وَالْفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْنَا.
பாடம் : 81
வெள்ளிக்குத் தங்கத்தை உடனுக் குடன் விற்றல்
2182. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகத் தவிர (வேறு விதமாக) விற்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். (ஆனால்,) வெள்ளியைத் தங்கத்திற்கு நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் தங்கத்தை வெள்ளிக்கு நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.66

2183. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ، وَلاَ تَبِيعُوا الثَّمَرَ بِالتَّمْرِ " قَالَ سَالِمٌ وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ بَعْدَ ذَلِكَ فِي بَيْعِ الْعَرِيَّةِ بِالرُّطَبِ أَوْ بِالتَّمْرِ، وَلَمْ يُرَخِّصْ فِي غَيْرِهِ.
பாடம் : 82
‘அல்முஸாபனா' எனும் வணிகம்
மரத்திலுள்ள (உலராத) பேரீச்சம்பழங் களுக்குப் பதிலாக உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக்குப் பதிலாக உலர்ந்த திராட் சையை விற்பதும் யிமுஸாபனா’ ஆகும். அத்துடன் இரவல் மரங்களின் (பழங்கள்) வியாபாரமும்.
நபி (ஸல்) அவர்கள் அல்முஸாபனா, அல்முஹாகலா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.67
2183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப் படும் நிலையை அடையாத வரை அவற்றை நீங்கள் விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனி களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்க வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப் படும் நிலையை அடையாத வரை அவற்றை நீங்கள் விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனி களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத கனிகளை விற்க வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2184.
பாடம் : 82
‘அல்முஸாபனா' எனும் வணிகம்
மரத்திலுள்ள (உலராத) பேரீச்சம்பழங் களுக்குப் பதிலாக உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக்குப் பதிலாக உலர்ந்த திராட் சையை விற்பதும் யிமுஸாபனா’ ஆகும். அத்துடன் இரவல் மரங்களின் (பழங்கள்) வியாபாரமும்.
நபி (ஸல்) அவர்கள் அல்முஸாபனா, அல்முஹாகலா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.67
2184. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, அல்லது செங்காய்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்க (ஏழைகளுக்கு வழங்கப்பட்ட) இரவல் மரங்களில் (அராயா) மட்டும் அனுமதித்தார்கள்; அவை அல்லாதவற்றில் அனுமதிக்க வில்லை.