2145. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نُهِيَ عَنْ لِبْسَتَيْنِ، أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ، فِي الثَّوْبِ الْوَاحِدِ، ثُمَّ يَرْفَعَهُ عَلَى مَنْكِبِهِ، وَعَنْ بَيْعَتَيْنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ.
பாடம் : 62 தொடுமுறை (முலாமசா) வணிகம்51 இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களால்) ஆடை அணியும் இரு முறை களுக்குத் தடை விதிக்கப்பட்டது: ஒரே துணியை ஒருவர் உடலில் சுற்றிக்கொண்டு, அத(ன் ஒரு மூலைத)னை (ஒரு) தோளில் போட்டு(க்கொண்டு மற்றொரு தோளை திறந்த நிலையில் விட்டு)விடுவது. (மற்றொன்று: ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு தெரியுமாறு குத்துக்காலிட்டு அமர்வது).

மேலும், தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய இரு வணிகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

அத்தியாயம் : 34
2146. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، وَعَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
பாடம் : 63 எறிமுறை (முனாபதா) வணிகம் இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2146. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடுமுறை வணிகம் (முலாமசா), எறிமுறை வணிகம் (முனாபதா) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34
2147. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ.
பாடம் : 63 எறிமுறை (முனாபதா) வணிகம் இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2147. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் தொடுமுறை (முலாமசா), எறிமுறை (முனாபதா) ஆகிய இரு வணிக முறைகளையும் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 34
2148. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لاَ تُصَرُّوا الإِبِلَ وَالْغَنَمَ، فَمَنِ ابْتَاعَهَا بَعْدُ فَإِنَّهُ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا إِنْ شَاءَ أَمْسَكَ، وَإِنْ شَاءَ رَدَّهَا وَصَاعَ تَمْرٍ "". وَيُذْكَرُ عَنْ أَبِي صَالِحٍ وَمُجَاهِدٍ وَالْوَلِيدِ بْنِ رَبَاحٍ وَمُوسَى بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" صَاعَ تَمْرٍ "". وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ سِيرِينَ صَاعًا مِنْ طَعَامٍ وَهْوَ بِالْخِيَارِ ثَلاَثًا. وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ سِيرِينَ صَاعًا مِنْ تَمْرٍ. وَلَمْ يَذْكُرْ ثَلاَثًا، وَالتَّمْرُ أَكْثَرُ.
பாடம் : 64 ஒட்டகம், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பவர், (பாலைக் கறக்காமல் வைத்திருந்து) கூடுதல் பால் தரும் கால்நடை என்று காட்டி விற்பனை செய்வது கூடாது.52 கால்நடையின் மடியைக் கனக்க வைப்பதற்கு ‘அத்தஸ்ரியா’ என்பர். யிதண்ணீரைத் தேக்கிவைத்தல்’ என்பது இதன் சொற்பொருளாகும். இவ்வாறு தேக்கிவைப்பதைக் குறிக்க ‘ஸர்ரைத்துல் மாஅ’ என்பர். (மக்கள் வழக்கில்) கால்நடை யின் பாலைச் சில நாட்கள் கறக்காமல் அப்படியே விட்டுவைத்து, பாலைத் தேக்கி, மடியைக் கனக்க வைப்பதற்கே ‘அத்தஸ்ரியா’ எனப்படும்.
2148. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற் றின் பாலைக் கறக்காமல் விட்டு வைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணி களை வாங்கியவர், விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக்கொள்ள லாம்; விரும்பாவிட்டால் (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் சிறந்த ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சில அறிவிப்புகளில், ‘‘(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளி லிருந்து) மூன்று நாட்கள் வரையில்தான்!” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

வேறுசில அறிவிப்புகளில், யிஒரு ஸாஉ பேரீச்சம்பழம்’ என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே காணப்படுகிறது. மூன்று நாட்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. ஆக, யிபேரீச்சம் பழத்தின் ஒரு ஸாஉ’ என்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகிறது.


அத்தியாயம் : 34
2149. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ مَنِ اشْتَرَى شَاةً مُحَفَّلَةً، فَرَدَّهَا فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا. وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُلَقَّى الْبُيُوعُ.
பாடம் : 64 ஒட்டகம், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பவர், (பாலைக் கறக்காமல் வைத்திருந்து) கூடுதல் பால் தரும் கால்நடை என்று காட்டி விற்பனை செய்வது கூடாது.52 கால்நடையின் மடியைக் கனக்க வைப்பதற்கு ‘அத்தஸ்ரியா’ என்பர். யிதண்ணீரைத் தேக்கிவைத்தல்’ என்பது இதன் சொற்பொருளாகும். இவ்வாறு தேக்கிவைப்பதைக் குறிக்க ‘ஸர்ரைத்துல் மாஅ’ என்பர். (மக்கள் வழக்கில்) கால்நடை யின் பாலைச் சில நாட்கள் கறக்காமல் அப்படியே விட்டுவைத்து, பாலைத் தேக்கி, மடியைக் கனக்க வைப்பதற்கே ‘அத்தஸ்ரியா’ எனப்படும்.
2149. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால், அத்துடன் ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக் கட்டும்! மேலும், (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 34
2150. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تُصَرُّوا الْغَنَمَ، وَمَنِ ابْتَاعَهَا فَهْوَ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا إِنْ رَضِيَهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ "".
பாடம் : 64 ஒட்டகம், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பவர், (பாலைக் கறக்காமல் வைத்திருந்து) கூடுதல் பால் தரும் கால்நடை என்று காட்டி விற்பனை செய்வது கூடாது.52 கால்நடையின் மடியைக் கனக்க வைப்பதற்கு ‘அத்தஸ்ரியா’ என்பர். யிதண்ணீரைத் தேக்கிவைத்தல்’ என்பது இதன் சொற்பொருளாகும். இவ்வாறு தேக்கிவைப்பதைக் குறிக்க ‘ஸர்ரைத்துல் மாஅ’ என்பர். (மக்கள் வழக்கில்) கால்நடை யின் பாலைச் சில நாட்கள் கறக்காமல் அப்படியே விட்டுவைத்து, பாலைத் தேக்கி, மடியைக் கனக்க வைப்பதற்கே ‘அத்தஸ்ரியா’ எனப்படும்.
2150. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத் தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங் காதீர்கள்!53 ஒருவர் வணிகம் செய்து கொண்டிருக்கும்போது, மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி (விலையை ஏற்றிவிட வேண்டும் என்பதற்காகவே) விலை கேட்காதீர்கள்!

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியைக் கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால், அந்த ஆட்டை (கறந்த பாலுக்கு ஈடாக) ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்துவிடலாம். இவ்விரண்டில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2151. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا الْمَكِّيُّ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي زِيَادٌ، أَنَّ ثَابِتًا، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنِ اشْتَرَى غَنَمًا مُصَرَّاةً فَاحْتَلَبَهَا، فَإِنْ رَضِيَهَا أَمْسَكَهَا، وَإِنْ سَخِطَهَا فَفِي حَلْبَتِهَا صَاعٌ مِنْ تَمْرٍ "".
பாடம் : 65 மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கியவர், நினைத்தால் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்; ஆனால், (திருப்பித் தரும் போது) கறந்த பாலுக்காக ஒரு ‘ஸாஉ' பேரீச்சம்பழம் கொடுக்க வேண்டும்.54
2151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் விலைக்கு வாங்கினால், அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாஉ பேரீச்சம்பழம் கொடுக்க வேண்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2152. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا زَنَتِ الأَمَةُ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا، وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا، وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَلْيَبِعْهَا، وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ "".
பாடம் : 66 விபசாரம் செய்யும் அடிமையை விற்பது ‘‘விபசாரம் செய்யும் அடிமையை வாங்கியவர், நினைத்தால் விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம்” என்று ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.
2152. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால் அவளுக்கு, (உரிமையாளன் ஐம்பது) சாட்டையடி வழங்கட்டும்! (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் அவளுக்கு (ஐம்பது சாட்டையடி) கொடுக்கட்டும்! (அதற்குமேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம்! மூன்றாம் முறையும் விபசாரம் செய்தால், அவளை (அவளுடைய உரிமையாளன்) ஒரு முடிக்கற்றைக்காவது விற்று விடட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2153. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصِنْ قَالَ " إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَبِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ". قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي بَعْدَ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ.
பாடம் : 66 விபசாரம் செய்யும் அடிமையை விற்பது ‘‘விபசாரம் செய்யும் அடிமையை வாங்கியவர், நினைத்தால் விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம்” என்று ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.
2153. 2154 அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

‘‘மணமுடிக்காத ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்துவிட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவள் விபசாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள்; (அதற்குப்) பிறகும் விபசாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள்; மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு கயிற்றுக்காவது விற்று விடுங்கள்” என்றார்கள்.

‘‘மூன்றாவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா; அல்லது நான்காவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 34
2155. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَرِي وَأَعْتِقِي، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْعَشِيِّ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ "" مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ "".
பாடம் : 67 பெண்களிடம் (ஆண்கள்) விற்பதும் வாங்குவதும்
2155. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது தொடர்பான) விஷயத்தை அவர்களிடம் நான் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்தபின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத்தான்” என்று கூறினார்கள்.

பிறகு, மாலை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை செல்லாதது ஆகும்; அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் ஆகும்” எனக் கூறி னார்கள்.


அத்தியாயம் : 34
2156. حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ سَاوَمَتْ بَرِيرَةَ فَخَرَجَ إِلَى الصَّلاَةِ، فَلَمَّا جَاءَ قَالَتْ إِنَّهُمْ أَبَوْا أَنْ يَبِيعُوهَا، إِلاَّ أَنْ يَشْتَرِطُوا الْوَلاَءَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قُلْتُ لِنَافِعٍ حُرًّا كَانَ زَوْجُهَا أَوْ عَبْدًا فَقَالَ مَا يُدْرِينِي
பாடம் : 67 பெண்களிடம் (ஆண்கள்) விற்பதும் வாங்குவதும்
2156. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், (அடிமை யாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழு கைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘பரீராவின் உரிமையாளர்கள், யிபரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினால் தவிர, அவரை விற்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமையின் (மரணத்திற்குப்பின் அவருக்கு) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத்தான் உரியது” எனக் கூறினார்கள்.55

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான், அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா? என்று நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், யிஎனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2157. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 68 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு நல்ல ஆலோசனை வழங்க லாமா?56 ‘‘உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசனை கேட்டால் அவருக்கு அச்சகோதரர் நல்ல ஆலோசனை வழங்கட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘‘இதற்கு அனுமதி உள்ளது” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2157. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதி கூறல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், (நபியவர்களின் கட்டளைகளைச் செவியேற்றுக் கட்டுப் படுதல், எல்லா முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுதல் ஆகிய விஷயங்களை ஏற்றுச் செயல்படுவதாக அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன்.


அத்தியாயம் : 34
2158. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ وَلاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ "". قَالَ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا قَوْلُهُ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا.
பாடம் : 68 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு நல்ல ஆலோசனை வழங்க லாமா?56 ‘‘உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசனை கேட்டால் அவருக்கு அச்சகோதரர் நல்ல ஆலோசனை வழங்கட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘‘இதற்கு அனுமதி உள்ளது” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்தி லிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக் காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இடைத்தரகராக இருக்கக் கூடாது (என்பது தான் அதன் பொருள்)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 34
2159. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ. وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ.
பாடம் : 69 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக்கொண்டு விற்றுக்கொடுக்கக் கூடாது.
2159. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

இவ்வாறே (இடைத்தரகராக இருப்பது கூடாதென) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2160. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَبْتَاعُ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ ""
பாடம் : 70 கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது. விற்பவர், வாங்குபவர் இருவருக்குமே இடைத்தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு சீரீன், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். (இதில் விற்றல், வாங்கல் இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அரபியர், ‘‘எனக்கு நீ ஓர் ஆடையை வாங்கிக்கொடு” என்பதைக் குறிக்க யிபிஃ’ எனும் சொல்லைப் பயன்படுத்துவர். (இச்சொல் விற்பதற்குப் பயன்படுவதாகும்.) இவ்வாறு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2160. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வணிகம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வணிகம் செய்ய வேண்டாம். (வாங்கும் நோக்க மின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 34
2161. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ.
பாடம் : 70 கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது. விற்பவர், வாங்குபவர் இருவருக்குமே இடைத்தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு சீரீன், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். (இதில் விற்றல், வாங்கல் இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அரபியர், ‘‘எனக்கு நீ ஓர் ஆடையை வாங்கிக்கொடு” என்பதைக் குறிக்க யிபிஃ’ எனும் சொல்லைப் பயன்படுத்துவர். (இச்சொல் விற்பதற்குப் பயன்படுவதாகும்.) இவ்வாறு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2161. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அத்தியாயம் : 34
2162. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ.
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2162. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வெளியிலிருந்து வரும்) வணிகர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சரக்குகளை) வாங்குவதையும் கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


அத்தியாயம் : 34
2163. حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ مَا مَعْنَى قَوْلِهِ "" لاَ يَبِيعَنَّ حَاضِرٌ لِبَادٍ "". فَقَالَ لاَ يَكُنْ لَهُ سِمْسَارًا.
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2163. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘‘இவர் அவருக்கு இடைத்தரகராக இருக்கக் கூடாது” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2164. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنِي التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ مَنِ اشْتَرَى مُحَفَّلَةً فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا. قَالَ وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ تَلَقِّي الْبُيُوعِ.
பாடம் : 71 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளை இடைமறித்து வாங்குவதற்கு வந்துள்ள தடை57 இந்த வணிகம் ரத்துச் செய்யப்படும். ஏனெனில், தெரிந்துகொண்டே இதைச் செய்பவர் குற்றவாளி ஆவார்; பாவி ஆவார். இது வணிகத்தில் செய்யப்படும் ஒரு மோசடி ஆகும். மோசடி செய்வது கூடாது.58
2164. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை விலைக்கு வாங்கியவர் (அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்), அத்துடன் ஒரு ஸாஉ (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 34