2065. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا، غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا "".
பாடம் : 12
‘‘இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்த நல்ல பொருட் களிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்” (2:267) எனும் இறைவசனம்
2065. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர் களுக்குத்) தர்மம் செய்தால், (அப்படி) தர்மம் செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்குக் கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்காக அவளுடைய கணவனுக்கும் நற்பலன் உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் (செலவிட உதவியதற்காக) அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும். அவர்களில் ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34

2066. حَدَّثَنِي يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا عَنْ غَيْرِ أَمْرِهِ، فَلَهُ نِصْفُ أَجْرِهِ "".
பாடம் : 12
‘‘இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்த நல்ல பொருட் களிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்” (2:267) எனும் இறைவசனம்
2066. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ஒரு பெண், தன் கணவனின் கட்டளை யின்றி அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் (சம்பாதித்த) அவனுக்கு நற்பலனில் பாதி உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2067. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ الْكِرْمَانِيُّ، حَدَّثَنَا حَسَّانُ، حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ "".
பாடம் : 13
வாழ்வாதாரத்தில் செழிப்பை ஒருவர் விரும்பினால்...?
2067. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது தமது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்பினால், அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.12
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2068. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
பாடம் : 14
நபி (ஸல்) அவர்கள் பொருட்களைத் தவணை முறையில் (கடனாக) வாங்கியது
2068. சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகத்தில் (சலம்) அடைமானம் பற்றிப் பேசினோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள்; அதற்காகத் தமது இரும்புக் கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி னார்கள் என நமக்கு அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள்.

2069. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، ح. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا أَسْبَاطٌ أَبُو الْيَسَعِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ مَشَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِخُبْزِ شَعِيرٍ، وَإِهَالَةٍ سَنِخَةٍ، وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم دِرْعًا لَهُ بِالْمَدِينَةِ عِنْدَ يَهُودِيٍّ، وَأَخَذَ مِنْهُ شَعِيرًا لأَهْلِهِ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ "" مَا أَمْسَى عِنْدَ آلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم صَاعُ بُرٍّ وَلاَ صَاعُ حَبٍّ، وَإِنَّ عِنْدَهُ لَتِسْعَ نِسْوَةٍ "".
பாடம் : 14
நபி (ஸல்) அவர்கள் பொருட்களைத் தவணை முறையில் (கடனாக) வாங்கியது
2069. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் தீட்டப் படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப் பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து, அவரிடமிருந்து தம் குடும்பத்தாருக்காகத் தீட்டப்படாத கோதுமையை (கடனாக) வாங்கியிருந்தார்கள்.
‘‘முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ‘ஸாஉ’, மற்ற தானியங்களில் ஒரு ‘ஸாஉ’கூட இருந்ததில்லை. அந்த நேரத்தில் நபியவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்” என்று நபி (ஸல்) அவர்களே கூற நான் கேட்டிருந்தேன்.

2070. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ قَالَ لَقَدْ عَلِمَ قَوْمِي أَنَّ حِرْفَتِي لَمْ تَكُنْ تَعْجِزُ عَنْ مَئُونَةِ أَهْلِي، وَشُغِلْتُ بِأَمْرِ الْمُسْلِمِينَ، فَسَيَأْكُلُ آلُ أَبِي بَكْرٍ مِنْ هَذَا الْمَالِ وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيهِ.
பாடம் : 15
கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2070. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆனபோது ‘‘எனது தொழில் என் குடும்பத்தாரின் செலவுக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாயத்தார் அறிவர்; இப்போது நான் முஸ்லிம்களின் (தலைமைப்) பொறுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்; இனி அபூபக்ரின் குடும்பத்தார் இந்த(ப் பொது) நிதியிலிருந்து உண்பார்கள். இதில் முஸ்லிம்களுக்காக அபூபக்ர் உழைப்பார்” என்று கூறி னார்கள்.

2071. حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عُمَّالَ أَنْفُسِهِمْ، وَكَانَ يَكُونُ لَهُمْ أَرْوَاحٌ فَقِيلَ لَهُمْ لَوِ اغْتَسَلْتُمْ. رَوَاهُ هَمَّامٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ.
பாடம் : 15
கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2071. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தோழர்கள் பலர் சுயதொழில் செய்(து உண்)பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே, ‘‘நீங்கள் குளிக்கக் கூடாதா?” என்று அவர்களிடம் கூறப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2072. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ "".
பாடம் : 15
கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கைத்தொழில் செய்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது. இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் கைத்தொழில் செய்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.
இதை மிக்தாம் பின் மஅதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2073. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَّ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ كَانَ لاَ يَأْكُلُ إِلاَّ مِنْ عَمَلِ يَدِهِ "".
பாடம் : 15
கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி தாபூத் (அலை) அவர்கள் கைத் தொழில் செய்தே உண்பவர்களாக இருந் தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி தாபூத் (அலை) அவர்கள் கைத் தொழில் செய்தே உண்பவர்களாக இருந் தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2074. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ "".
பாடம் : 15
கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைத் தமது முதுகில் சும(ந்து விற்றுப் பிழை)ப்பதானது, பிறரிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். பிறர் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைத் தமது முதுகில் சும(ந்து விற்றுப் பிழை)ப்பதானது, பிறரிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். பிறர் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2075.
பாடம் : 15
கைத்தொழில் செய்தும் உழைத்தும் பொருளீட்டுவது13
2075. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் கயிறுகளை எடுத்துக்கொண்டு... (என ஆரம்பித்து மேற்கண்டபடி இறுதிவரை).
இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் :
2075. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் கயிறுகளை எடுத்துக்கொண்டு... (என ஆரம்பித்து மேற்கண்டபடி இறுதிவரை).
இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் :
2076. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رَحِمَ اللَّهُ رَجُلاً سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى "".
பாடம் : 16
விற்கும்போதும் வாங்கும்போதும் பெருந்தன்மையோடு தாராளமாக நடந்துகொள்ளல்
உரிமையைக் கோரும் ஒருவர் அதை எல்லைமீறாமல் கோரட்டும்!14
2076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாங்கும்போதும் விற்கும்போதும் உரிமையை நிறைவேற்றக் கோரும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2077. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، أَنَّ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَلَقَّتِ الْمَلاَئِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ قَالُوا أَعَمِلْتَ مِنَ الْخَيْرِ شَيْئًا قَالَ كُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا وَيَتَجَاوَزُوا عَنِ الْمُوسِرِ قَالَ قَالَ فَتَجَاوَزُوا عَنْهُ "". وَقَالَ أَبُو مَالِكٍ عَنْ رِبْعِيٍّ "" كُنْتُ أُيَسِّرُ عَلَى الْمُوسِرِ وَأُنْظِرُ الْمُعْسِرَ "". وَتَابَعَهُ شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ رِبْعِيٍّ. وَقَالَ أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ رِبْعِيٍّ "" أُنْظِرُ الْمُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ "". وَقَالَ نُعَيْمُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ رِبْعِيٍّ "" فَأَقْبَلُ مِنَ الْمُوسِرِ، وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ "".
பாடம் : 17
வசதி படைத்த கடனாளிக்கும் அவகாசம் அளித்தல்
2077. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று அவரிடம், ‘‘நீர் (உமது வாழ் நாளில்) ஏதேனும் நன்மை செய்திருக் கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘‘(நான் மக்களுக்கு கடன் கொடுத்துவந்தேன்.) வசதியான கடனாளிக் கும் அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டு விடும்படியும் நான் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்” என்று கூறினார்.
உடனே ‘‘அவருடைய தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்” என்று (அல்லாஹ் வானவர்களிடம்) கூறினான்.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூமாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மென்மையாக நடப்பவனாகவும் இருந் தேன்” என்று அவர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அப்துல் மலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும்வந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
நுஐம் பின் அபீஹின்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘‘வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்துவந்தேன்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

2078. حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ "".
பாடம் : 18
சிரமப்படும் கடனாளிக்கு அவகாசம் அளித்தல்
2078. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம், ‘‘இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம் தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்” என்று கூறுவார். அல்லாஹ்வும் அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2078. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம், ‘‘இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம் தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்” என்று கூறுவார். அல்லாஹ்வும் அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2079. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "".
பாடம் : 19
விற்பவரும் வாங்குபவரும் (பொருட் களில் உள்ள) குறைகளை மறைக் காமல் தெளிவுபடுத்தி நலம் நாடுதல்
அத்தாஉ பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடமிருந்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கிய போது), ‘‘அத்தாஉ பின் காலித் என்பாரிட மிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) இவரை விலைக்கு வாங்கிக்கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; (இந்த அடிமையிடம் மறைக்கப்பட்ட) எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமுமில்லை, குற்றம் புரியும் தன்மையுமில்லை” என்று எனக்கு எழுதித்தந்தார்கள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இங்கு யிகுற்றம் புரியும் தன்மை’ என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஃகாஇலா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது விபசாரம் செய்தல், திருடுதல், ஓடிப்போதல் போன்ற குற்றங்களைக் குறிக்கும்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் (பின்வருமாறு) சொல்லப்பட்டது:
(கால்நடைகளை விற்றுக்கொடுக்கும்) தரகர்கள் சிலர், (உள்ளூர் தொழுவங்களுக்கே வெளியூர்களான) யிகுராசான்’ தொழுவம், யிசிஜிஸ்தான்’ தொழுவம் என்று பெயரிட்டுக்கொண்டு, இது நேற்று குராசானிலிருந்து வந்தது; இது இன்றுதான் சிஜிஸ்தானிலிருந்து வந்தது என்று (வாங்குவோரை ஏமாற்றுவதற்காகச்) சொல்கிறார்கள்.
இதை இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
‘‘விற்பனை செய்யும் பொருளில் குறை இருப்பதை அறிந்திருக்கின்ற எவரும் அதைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல” என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
2079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் வளம் (பரக்கத்) வழங்கப் படும். இருவரும் குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2080. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُرْزَقُ تَمْرَ الْجَمْعِ، وَهْوَ الْخِلْطُ مِنَ التَّمْرِ، وَكُنَّا نَبِيعُ صَاعَيْنِ بِصَاعٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ صَاعَيْنِ بِصَاعٍ، وَلاَ دِرْهَمَيْنِ بِدِرْهَمٍ "".
பாடம் : 20
பல வகைப் பேரீச்சம் பழங்களைக் கலந்து விற்றல்
2080. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பலதரப்பட்ட பேரீச்சம் பழங்கள் கலந்து எங்களுக்கு வழங்கப்படும்; அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். (அவற்றில்) இரண்டு ‘ஸாஉ’களுக்கு ஒரு ‘ஸாஉ’ (உயர் ரகப் பேரீச்சம் பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்துவந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு ‘ஸாஉ’க்கு இரண்டு ‘ஸாஉ’கள் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள்.15

2081. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا شُعَيْبٍ فَقَالَ لِغُلاَمٍ لَهُ قَصَّابٍ اجْعَلْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً، فَإِنِّي أُرِيدُ أَنْ أَدْعُوَ النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ، فَإِنِّي قَدْ عَرَفْتُ فِي وَجْهِهِ الْجُوعَ. فَدَعَاهُمْ، فَجَاءَ مَعَهُمْ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ هَذَا قَدْ تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ فَأْذَنْ لَهُ، وَإِنْ شِئْتَ أَنْ يَرْجِعَ رَجَعَ "". فَقَالَ لاَ، بَلْ قَدْ أَذِنْتُ لَهُ.
பாடம் : 21
இறைச்சி வணிகம் செய்பவர், (பிராணியை) அறுப்பவர் ஆகியோர் தொடர்பாகக் கூறப்பட்டவை
2081. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஷுஐப் என்ற அன்சாரி, (பிராணியை) அறுத்துத் துண்டுபோடும் தம் ஊழியரிடம், ‘‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப்போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்” என்று கூறிவிட்டு, ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் மற்றொரு மனிதரும் சேர்ந்து வந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பிவிட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பிவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள் ‘‘இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்” என்றார்கள்.

2082. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْخَلِيلِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "".
பாடம் : 22
வணிகத்தில் பொய் சொல்வதும் குறைகளை மறைப்பதும் அதை அழித்துவிடும்.
2082. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால், அவர்களது வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந் தால் அவர்களின் வணிகத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2082. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத் திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விரு வரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால், அவர்களது வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் பேசியிருந் தால் அவர்களின் வணிகத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2083. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ "".
பாடம் : 23
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பல்கிப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள். (3:130)16
2083. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதர், தாம் பொருளீட் டியது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா; அல்லது அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பது குறித்துப் பொருட்படுத்தமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2083. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதர், தாம் பொருளீட் டியது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா; அல்லது அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பது குறித்துப் பொருட்படுத்தமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
2084. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا نَزَلَتْ آخِرُ الْبَقَرَةِ قَرَأَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِمْ فِي الْمَسْجِدِ، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 24
வட்டி உண்பவர், வட்டிக்குச் சாட்சியாக இருப்பவர், வட்டிக்கு எழுத்தராக இருப்பவர்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
வட்டி உண்போர், ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுவதைப் போலன்றி (மறுமை நாளில் வேறு விதமாக) எழமாட்டார்கள். (2:275)
2084. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (2:275லி281) அருளப்பெற்றபோது, அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள்.