2045. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَتْنِي عَمْرَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا، وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالأَبْنِيَةِ فَقَالَ "" مَا هَذَا "". قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" آلْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ "". فَرَجَعَ، فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ.
பாடம் : 18 இஃதிகாஃப் இருப்பதாக முடிவு செய்துவிட்டுப் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொள்ளல்
2045. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றிக் குறிப்பிட்டார் கள். அவர்களிடம் நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்க) அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளித்தார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார். அவ்வாறே செய்தேன். இதைக் கண்ட ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறே கட்டப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தமது கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு ‘‘இவை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், ‘‘ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகியோரின் கூடாரங்கள்” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா? நான் இஃதிகாஃப் இருக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். (ரமளான்) நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.6

அத்தியாயம் : 33
2046. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ وَهْىَ فِي حُجْرَتِهَا، يُنَاوِلُهَا رَأْسَهُ.
பாடம் : 19 இஃதிகாஃப் இருப்பவர் தமது தலையைக் கழுவுவதற்காக வீட்டிற்குள் தலையை நீட்டுதல்
2046. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை அறை’லிருக்கும் என்னிடம் கொடுப்பார்கள். நான் அவர்களது தலையை வாரிவிடுவேன்; அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்.

அத்தியாயம் : 33

2047. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّكُمْ تَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَتَقُولُونَ مَا بَالُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ لاَ يُحَدِّثُونَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ وَإِنَّ إِخْوَتِي مِنَ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ صَفْقٌ بِالأَسْوَاقِ، وَكُنْتُ أَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مِلْءِ بَطْنِي، فَأَشْهَدُ إِذَا غَابُوا وَأَحْفَظُ إِذَا نَسُوا، وَكَانَ يَشْغَلُ إِخْوَتِي مِنَ الأَنْصَارِ عَمَلُ أَمْوَالِهِمْ، وَكُنْتُ امْرَأً مِسْكِينًا مِنْ مَسَاكِينِ الصُّفَّةِ أَعِي حِينَ يَنْسَوْنَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَدِيثٍ يُحَدِّثُهُ "" إِنَّهُ لَنْ يَبْسُطَ أَحَدٌ ثَوْبَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي هَذِهِ، ثُمَّ يَجْمَعَ إِلَيْهِ ثَوْبَهُ إِلاَّ وَعَى مَا أَقُولُ "". فَبَسَطْتُ نَمِرَةً عَلَىَّ، حَتَّى إِذَا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَقَالَتَهُ جَمَعْتُهَا إِلَى صَدْرِي، فَمَا نَسِيتُ مِنْ مَقَالَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تِلْكَ مِنْ شَىْءٍ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப் பட்டதும், பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்; நீங்கள் வாகை சூடலாம். (நபியே!) அவர்கள் (சிலர்) வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்றுவிடுகின்றனர். உம்மை நின்ற நிலையில் விட்டுவிடுகின்றனர். ‘‘அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையைவிடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (62: 10,11) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29)
2047. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!” என்று கூறுகிறீர்கள். ‘‘முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அவர்கள் (அதிகமாக) அறிவிப்பதில்லையே!” என்றும் நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆனால், என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வணிகத்தில் ஈடுபட்டி ருந்தனர். நான் யிஎன் வயிறு நிரம்பினால் போதும்’ என்று நபி (ஸல்) அவர்களுட னேயே இருந்துவந்தேன். அவர்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும் போதும் நான் (அல்லாஹ்வின் தூதருட னேயே) இருப்பேன்; அவர்கள் (நபிமொழி களை) மறந்துவிடும்போது நான் நினைவில் வைத்திருப்பேன். என் அன்சாரி சகோதரர் கள் தங்கள் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்; நான் திண்ணை ஏழைத் தோழர்களில் ஓர் ஏழையாக இருந்தேன்; அவர்கள் மறந்துவிடும் வேளையில் (நபி (ஸல்) அவர்களின் போதனைகளை) நான் ம”ம் செய்துகொள்வேன்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்த போது, ‘‘நான், எனது இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை யார் தமது துணியை (மேல்துண்டை) விரித்து வைத்திருந்து, பிறகு அதைத் தம்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க்கொள்கிறாரோ அவர் நான் சொல்பவற்றை ம”ம் செய்யாமல் இருக்கமாட்டார்” எனக் கூறினார்கள்.

நான் என்மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து(அணைத்து)க்கொண்டேன்; (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதையும் நான் மறக்கவில்லை.


அத்தியாயம் : 34
2048. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالاً، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَىَّ زَوْجَتَىَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا. قَالَ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ، هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعَ. قَالَ فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ، فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ ـ قَالَ ـ ثُمَّ تَابَعَ الْغُدُوَّ، فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تَزَوَّجْتَ "". قَالَ نَعَمْ. قَالَ "" وَمَنْ "". قَالَ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. قَالَ "" كَمْ سُقْتَ "". قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ. فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப் பட்டதும், பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்; நீங்கள் வாகை சூடலாம். (நபியே!) அவர்கள் (சிலர்) வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்றுவிடுகின்றனர். உம்மை நின்ற நிலையில் விட்டுவிடுகின்றனர். ‘‘அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையைவிடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (62: 10,11) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29)
2048. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத் துவத்தை ஏற்படுத்தினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘நான் அன்சாரிகளிலேயே அதிகமான செல்வம் உடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவிய ரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கி றேன். அவரது யிஇத்தா’ (காத்திருப்புக் காலம்) முடிந்ததும் அவரை உமக்கு மணமுடித்துத்தருகிறேன்” எனக் கூறினார்.

அப்போது நான், ‘‘இது எனக்குத் தேவையில்லை. வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ‘‘கைனுகா எனும் சந்தை இருக்கிறது” என்றார். நான் (அடுத்த நாள்) காலை அங்கு சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) அடையாளத்துடன் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீர் மண முடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘யாரை?” என்றார்கள். ‘‘ஓர் அன்சாரிப் பெண்ணை” என்றேன். ‘‘எவ்வளவு யிமஹ்ர்’ (மணக்கொடை) கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். ‘‘ ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்கு லிஅளவுக்குலி தங்கம்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்றார்கள்.


அத்தியாயம் : 34
2049. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ الْمَدِينَةَ فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، وَكَانَ سَعْدٌ ذَا غِنًى، فَقَالَ لِعَبْدِ الرَّحْمَنِ أُقَاسِمُكَ مَالِي نِصْفَيْنِ، وَأُزَوِّجُكَ. قَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، دُلُّونِي عَلَى السُّوقِ. فَمَا رَجَعَ حَتَّى اسْتَفْضَلَ أَقِطًا وَسَمْنًا، فَأَتَى بِهِ أَهْلَ مَنْزِلِهِ، فَمَكَثْنَا يَسِيرًا ـ أَوْ مَا شَاءَ اللَّهُ ـ فَجَاءَ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَهْيَمْ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. قَالَ "" مَا سُقْتَ إِلَيْهَا "". قَالَ نَوَاةً مِنْ ذَهَبٍ، أَوْ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. قَالَ "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப் பட்டதும், பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்; நீங்கள் வாகை சூடலாம். (நபியே!) அவர்கள் (சிலர்) வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்றுவிடுகின்றனர். உம்மை நின்ற நிலையில் விட்டுவிடுகின்றனர். ‘‘அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையைவிடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (62: 10,11) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29)
2049. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி னார்கள். சஅத் (ரலி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘எனது செல்வத்தைச் சரிபாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன்; (என் மனைவியரில் ஒருவரை மணவிலக்குச் செய்து) உமக்கு மண முடித்துத்தருகிறேன்” எனக் கூறினார்.

அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்) வழங்குவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்” எனக் கூறினார்கள். (அதன்படி சந்தைக்குச் சென்று) அவர்கள் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, தாம் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டுவந்தார்கள்.

சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார் கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘என்ன விசேஷம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ûணை மணமுடித்துக்கொண்டேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தீர்?› எனக் கேட்டார்கள். ‘‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 34
2050. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَتْ عُكَاظٌ وَمِجَنَّةُ وَذُو الْمَجَازِ أَسْوَاقًا فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا كَانَ الإِسْلاَمُ فَكَأَنَّهُمْ تَأَثَّمُوا فِيهِ فَنَزَلَتْ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ } فِي مَوَاسِمِ الْحَجِّ، قَرَأَهَا ابْنُ عَبَّاسٍ.
பாடம் : 1 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப் பட்டதும், பூமியில் பரவிச்சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்; நீங்கள் வாகை சூடலாம். (நபியே!) அவர்கள் (சிலர்) வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், அதன்பால் அவர்கள் சென்றுவிடுகின்றனர். உம்மை நின்ற நிலையில் விட்டுவிடுகின்றனர். ‘‘அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையைவிடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (62: 10,11) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29)
2050. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உ(க்)காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வணிகம் செய்வதை மக்கள் பாவம் எனக் கருதினர்.

அப்போதுதான், ‘‘(ஹஜ்ஜின்போது வணிகம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள்மீது குற்றமன்று” (2:198) எனும் வசனம் அருளப் பெற்றது.2

இவ்வசனத்துடன் ‘ஹஜ் காலங்களில்’ (ஃபீ மவாசிமில் ஹஜ்) என்பதையும் சேர்த்தே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியிருக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2051. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنه ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي فَرْوَةَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي فَرْوَةَ، سَمِعْتُ الشَّعْبِيَّ، سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي فَرْوَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْحَلاَلُ بَيِّنٌ، وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ، فَمَنْ تَرَكَ مَا شُبِّهَ عَلَيْهِ مِنَ الإِثْمِ كَانَ لِمَا اسْتَبَانَ أَتْرَكَ، وَمَنِ اجْتَرَأَ عَلَى مَا يَشُكُّ فِيهِ مِنَ الإِثْمِ أَوْشَكَ أَنْ يُوَاقِعَ مَا اسْتَبَانَ، وَالْمَعَاصِي حِمَى اللَّهِ، مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكْ أَنْ يُوَاقِعَهُ "".
பாடம் : 2 அனுமதிக்கப்பட்டதும் தெளி வானது; தடை செய்யப்பட்டதும் தெளிவானது. இவை இரண்டுக்கு மிடையே சந்தேகத்திற்கிடமான வையும் உண்டு.
2051. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவை இரண்டுக்கு மிடையே சந்தேகத்திற்கிடமான சில செயல்களும் உள்ளன. யார் பாவம் எனச் சந்தேகப்படுபவற்றை கைவிடுகிறாரோ அவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் கைவிடுவார்; யார் பாவம் எனச் சந்தேகிக்கப்படுபவற்றைச் செய்யத் துணிகிறாரோ அவர் (பாவம் என்று) தெளிவாகத் தெரிகின்றவற்றிலும் சிக்கிக்கொள்ளக்கூடும். பாவங்கள் அல்லாஹ்வின் வேலிகளாகும். யார் வேலியைச் சுற்றி மேய்கிறாரோ அவர் அதற்குள்ளேயே சென்றுவிடக்கூடும்.3

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2052. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَةً، سَوْدَاءَ جَاءَتْ، فَزَعَمَتْ أَنَّهَا أَرْضَعَتْهُمَا، فَذَكَرَ لِلنَّبِيِّ فَأَعْرَضَ عَنْهُ، وَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ "" كَيْفَ وَقَدْ قِيلَ "". وَقَدْ كَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي إِهَابٍ التَّمِيمِيِّ.
பாடம் : 3 சந்தேகத்திற்கிடமானவை பற்றிய விளக்கம் ஹஸ்ஸான் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இறையச்சமுள்ள வாழ்க்கை வாழ்வ தற்கு) தார்மீகப் பண்புகளைப் பேணுவதை விட எளிதான ஒன்றை நான் காணவில்லை. உனக்குச் சந்தேகமானதை விட்டுவிட்டு, சந்தேகமில்லாததைக் கைகொள்! (இதுதான் தார்மிக ஒழுக்கம்.)
2052. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கறுப்பு நிறப் பெண் ஒருவர் (என்னி டம்) வந்து, எனக்கும் என் மனைவிக்கும், தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார்; இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை: பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு, ‘‘இவ்வாறு கூறப்பட்டபின் எப்படி (அவளுடன் நீர் வாழ முடியும்)?” என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூஇஹாப் தமீமியின் புதல்வியாவார்.4


அத்தியாயம் : 34
2053. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي فَاقْبِضْهُ. قَالَتْ فَلَمَّا كَانَ عَامَ الْفَتْحِ أَخَذَهُ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَقَالَ ابْنُ أَخِي، قَدْ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ أَخِي، وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي، كَانَ قَدْ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ "". ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" احْتَجِبِي مِنْهُ "". لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம் : 3 சந்தேகத்திற்கிடமானவை பற்றிய விளக்கம் ஹஸ்ஸான் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இறையச்சமுள்ள வாழ்க்கை வாழ்வ தற்கு) தார்மீகப் பண்புகளைப் பேணுவதை விட எளிதான ஒன்றை நான் காணவில்லை. உனக்குச் சந்தேகமானதை விட்டுவிட்டு, சந்தேகமில்லாததைக் கைகொள்! (இதுதான் தார்மிக ஒழுக்கம்.)
2053. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (தமது மரணத் தறுவாயில்) தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆ என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன்; எனவே, அவனை நீ கைப்பற்றிக்கொள்!” என்று உறுதிமொழி வாங்கினார். அதன்படி, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு, ‘‘இவன் என் சகோதரரின் மகன்; என்னிடத்தில் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்” எனக் கூறினார்.

அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது பிறந்த வன்” எனக் கூறினார். இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்” எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் புதல்வர் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்” எனக் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸம்ஆவின் புதல்வர் அப்தே! இவன் உமக்கு உரியவú”’ எனக் கூறினார்கள். பின்னர், ‘‘(தாய்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது; விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்” எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘சவ்தாவே! நீ இந்த இளைஞனிடமிருந்து திரையிட்டு உன்னை மறைத்துக்கொள்!” என்றார்கள். (‘அவர் ஸம்ஆவின் மகன்தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததால்தான் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு, அவர் அன்னை சவ்தா (ரலி) அவர்களை இறக்கும்வரை பார்க்கவில்லை.5


அத்தியாயம் : 34
2054. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ فَقَالَ "" إِذَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْ، وَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ، فَإِنَّهُ وَقِيذٌ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُرْسِلُ كَلْبِي وَأُسَمِّي، فَأَجِدُ مَعَهُ عَلَى الصَّيْدِ كَلْبًا آخَرَ لَمْ أُسَمِّ عَلَيْهِ، وَلاَ أَدْرِي أَيُّهُمَا أَخَذَ. قَالَ "" لاَ تَأْكُلْ، إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى الآخَرِ "".
பாடம் : 3 சந்தேகத்திற்கிடமானவை பற்றிய விளக்கம் ஹஸ்ஸான் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இறையச்சமுள்ள வாழ்க்கை வாழ்வ தற்கு) தார்மீகப் பண்புகளைப் பேணுவதை விட எளிதான ஒன்றை நான் காணவில்லை. உனக்குச் சந்தேகமானதை விட்டுவிட்டு, சந்தேகமில்லாததைக் கைகொள்! (இதுதான் தார்மிக ஒழுக்கம்.)
2054. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடு வதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிராணியை அம்பின் கூர்முனை தாக்கிக் கொன்றால் அதை நீர் உண்ணலாம்; அம்பின் பக்கவாட்டுப் பகுதி தாக்கிக் கொன்றால் அதை நீர் உண்ணாதீர்!. ஏனெனில், அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாகும்” என்றார் கள்.

நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் உண்ணலாமா?)” எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உண்ணாதீர்! நீர் அல்லாஹ்வின் பெயர் கூறியது உமது நாயை அனுப்பியபோதுதான். மற்றொரு நாய்க்கு நீர் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என விடையளித்தார்கள்.6

அத்தியாயம் : 34
2055. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ فَقَالَ "" لَوْلاَ أَنْ تَكُونَ صَدَقَةً لأَكَلْتُهَا "". وَقَالَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَجِدُ تَمْرَةً سَاقِطَةً عَلَى فِرَاشِي "".
பாடம் : 4 சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்க்க வேண்டிய அளவு
2055. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘‘இது தர்ம (ஸதகா)ப் பொரு ளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது படுக்கை யில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன் (அது தர்மப் பொருளாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் போட்டு விடுகிறேன்)” என்று கூறினார்கள்.7

அத்தியாயம் : 34
2056. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ شُكِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الرَّجُلُ يَجِدُ فِي الصَّلاَةِ شَيْئًا، أَيَقْطَعُ الصَّلاَةَ قَالَ "" لاَ، حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا "". وَقَالَ ابْنُ أَبِي حَفْصَةَ عَنِ الزُّهْرِيِّ لاَ وُضُوءَ إِلاَّ فِيمَا وَجَدْتَ الرِّيحَ أَوْ سَمِعْتَ الصَّوْتَ.
பாடம் : 5 அடிப்படை இல்லாத மனக் குழப்பங்களைச் யிசந்தேகத்திற்கிட மானவை' எனக் கருத முடியாது.
2056. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு மனிதர் தொழும்போது வாயு பிரிந்தது போன்று உணர்கிறார்; இதனால் தொழுகை முறியுமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை முறியாது” என்றார்கள்.8

சப்தத்தைக் கேட்காமல், நாற்றத்தை உணராமல் அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டியதில்லை என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 34
2057. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ،، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ قَوْمًا، قَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ قَوْمًا يَأْتُونَنَا بِاللَّحْمِ لاَ نَدْرِي أَذَكَرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ أَمْ لاَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سَمُّوا اللَّهَ عَلَيْهِ وَكُلُوهُ "".
பாடம் : 5 அடிப்படை இல்லாத மனக் குழப்பங்களைச் யிசந்தேகத்திற்கிட மானவை' எனக் கருத முடியாது.
2057. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! ஒரு கூட்டத் தார் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அதனை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அதை உண்ணுங்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 34
2058. حَدَّثَنَا طَلْقُ بْنُ غَنَّامٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمٍ، قَالَ حَدَّثَنِي جَابِرٌ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ أَقْبَلَتْ مِنَ الشَّأْمِ عِيرٌ، تَحْمِلُ طَعَامًا، فَالْتَفَتُوا إِلَيْهَا، حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ اثْنَا عَشَرَ رَجُلاً فَنَزَلَتْ {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا}
பாடம் : 6 ‘‘அவர்கள் வணிகப் பொருட் களையோ கவனத்தை ஈர்க்கக்கூடியதையோ கண்டால் அதன்பால் சென்றுவிடுகின்றனர்” (62:11) எனும் இறைவசனம்
2058. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டி ருந்தோம். அப்போது உணவுப் பொருட் களை ஏற்றிக்கொண்டு ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டக (வணிக)க் கூட்டம் வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர் களுடன் பன்னிரண்டு நபர்களைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை.

அப்போதுதான், ‘‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் அதன்பால் சென்றுவிடுகிறார்கள்” (62:11) எனும் வசனம் அருளப்பெற்றது.9

அத்தியாயம் : 34
2059. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلاَلِ أَمْ مِنَ الْحَرَامِ "".
பாடம் : 7 யிஎவ்வாறு பொருள் ஈட்டினோம்' என்பதைப் பற்றிக் கவலைப்படாத வர்
2059. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு மனிதர், தாம் சம்பாதித்தது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா, அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 34
2060. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، قَالَ كُنْتُ أَتَّجِرُ فِي الصَّرْفِ، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ ـ رضى الله عنه ـ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي الْفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، وَعَامِرُ بْنُ مُصْعَبٍ، أَنَّهُمَا سَمِعَا أَبَا الْمِنْهَالِ، يَقُولُ سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ وَزَيْدَ بْنَ أَرْقَمَ عَنِ الصَّرْفِ، فَقَالاَ كُنَّا تَاجِرَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّرْفِ فَقَالَ " إِنْ كَانَ يَدًا بِيَدٍ فَلاَ بَأْسَ، وَإِنْ كَانَ نَسَاءً فَلاَ يَصْلُحُ ".
பாடம் : 8 தரைவழியிலும் வேறுவழியிலும் வணிகம் செய்தல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வை நினைவு கூரல், தொழுகையைக் கடைப்பிடித்தல், ஸகாத் வழங்குதல் ஆகியவற்றிலிருந்து அவர்களை எந்த வணிகமும் கொடுக்கல் வாங்கலும் திசைதிருப்பிவிடாது. (24:37) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அன்றைய மக்கள் கொடுக்கல் வாங்க லும் வியாபாரமும் செய்துவந்தார்கள்; ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்காத வரை அவர்களின் வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களை இறை நினைவிலிருந்து திசை திருப்பவில்லை.
2060. 2061 அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நாணயமாற்று வணிகம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் இருவரும் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வணிகம் செய்பவர்களாக இருந்தோம்: அவர்களிடம் இந்த நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டோம்; அதற்கு, உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை; தவணையாக இருந்தால் அது கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் (மொத்தம்) ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 34
2062. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّ أَبَا مُوسَى الأَشْعَرِيَّ، اسْتَأْذَنَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَلَمْ يُؤْذَنْ لَهُ، وَكَأَنَّهُ كَانَ مَشْغُولاً فَرَجَعَ أَبُو مُوسَى، فَفَرَغَ عُمَرُ فَقَالَ أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ائْذَنُوا لَهُ قِيلَ قَدْ رَجَعَ. فَدَعَاهُ. فَقَالَ كُنَّا نُؤْمَرُ بِذَلِكَ. فَقَالَ تَأْتِينِي عَلَى ذَلِكَ بِالْبَيِّنَةِ. فَانْطَلَقَ إِلَى مَجْلِسِ الأَنْصَارِ، فَسَأَلَهُمْ. فَقَالُوا لاَ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا إِلاَّ أَصْغَرُنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ. فَذَهَبَ بِأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ. فَقَالَ عُمَرُ أَخَفِيَ عَلَىَّ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَلْهَانِي الصَّفْقُ بِالأَسْوَاقِ. يَعْنِي الْخُرُوجَ إِلَى تِجَارَةٍ.
பாடம் : 9 வணிகத்திற்காக வெளியே செல்லுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்! (62:10)
2062. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். லிஉமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள் போலும்லி அபூமூசா (ரலி) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். ‘‘அவர் திரும்பிச் சென்றுவிட்டார்” என்று கூறப்பட்டது.

உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்துவரச் செய்தார்கள். (‘‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்” எனக் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!” எனக் கூறினார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களில் சிறியவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்லமாட்டார்கள்” என்றனர்.

எனவே, அபூமூசா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) சந்தைகளில் நான் வணிகம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டது (போலும்)!” என்று கூறினார்கள்.10

அத்தியாயம் : 34
2063. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ، خَرَجَ فِي الْبَحْرِ فَقَضَى حَاجَتَهُ. وَسَاقَ الْحَدِيثَ. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ بِهَذَا.
பாடம் : 10 கடல்வழி(ப் பயணம் மேற் கொண்டு) வணிகம் செய்தல் ம(த்)தர் அல்வர்ராக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இ(வ்வாறு கடல் பயணம்செய்து வணிகம் செய்வ)தில் எந்தத் தவறும் இல்லை. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் காரணமில்லாமல் குறிப்பிடவில்லை. (இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை அன்னார் ஓதினார்கள்:) (நபியே!) கடலைக் கிழித்துக்கொண்டு கப்பல்கள் செல்வதை நீர் காண்கிறீர். அவனது அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் நீங்கள் நன்றி செய்வதற் காகவுமே (இதையெல்லாம் உங்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான்). (16:14) (இவ்வசனத்தில் யிகப்பல்கள்’ என்பதைக் குறிக்க) ‘அல்ஃபுல்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஒருமை, பன்மை இரண்டுக்கும் லிகப்பல், கப்பல்கள்லி இச்சொல்லே பயன்படுகிறது. முஜாஹித் (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: கப்பல்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கின்றன. இவ்வாறு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வது பெரிய கப்பல்கள்தான்.
2063. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்: அவர் கடல் மார்க்கமாகப் பயணம் சென்று, தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டார். தொடர்ந்து ஹதீஸைக் கூறினார்கள்.11

அத்தியாயம் : 34
2064. حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ أَقْبَلَتْ عِيرٌ، وَنَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُمُعَةَ، فَانْفَضَّ النَّاسُ إِلاَّ اثْنَىْ عَشَرَ رَجُلاً، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا }
பாடம் : 11 ‘‘அவர்கள் வணிகப் பொருட் களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் அதன் பால் சென்றுவிடுகின்றனர்” (எனும் 62:11ஆவது வசனத்தொடர்) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: எந்த வணிகமும் கொடுக்கல் வாங்க லும் அவர்களை இறைநினைவிலிருந்து திசைதிருப்பிவிடாது. (24:27) ‘‘அன்றைய மக்கள் வணிகம் செய்து வந்தனர். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அவர்கள் முன்னே வந்தால் அதை நிறைவேற்றாத வரை அவர்களது வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ இறைநினைவிலிருந்து அவர்களைத் திருப்பியதில்லை” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2064. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது, (வணிக)க் கூட்டம் ஒன்று வந்தது; உடனே பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒட்டக (வணிகக் கூட்டத்தை நோக்கி) கலைந்து சென்றுவிட்டனர்.

அப்போதுதான், ‘‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால், நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அங்கே சென்று விடுகிறார்கள்” (62:11) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 34