1766. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لَيْسَ التَّحْصِيبُ بِشَىْءٍ، إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 147 அல்முஹஸ்ஸபில் தங்குதல்
1766. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ் ஜின் கிரியைகளில் ஒன்றல்ல; அது நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓரிடம்; அவ்வளவுதான்.

அத்தியாயம் : 25
1767. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَبِيتُ بِذِي طُوًى بَيْنَ الثَّنِيَّتَيْنِ، ثُمَّ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الَّتِي بِأَعْلَى مَكَّةَ، وَكَانَ إِذَا قَدِمَ مَكَّةَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا لَمْ يُنِخْ نَاقَتَهُ إِلاَّ عِنْدَ باب الْمَسْجِدِ، ثُمَّ يَدْخُلُ فَيَأْتِي الرُّكْنَ الأَسْوَدَ فَيَبْدَأُ بِهِ، ثُمَّ يَطُوفُ سَبْعًا ثَلاَثًا سَعْيًا، وَأَرْبَعًا مَشْيًا، ثُمَّ يَنْصَرِفُ فَيُصَلِّي سَجْدَتَيْنِ، ثُمَّ يَنْطَلِقُ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى مَنْزِلِهِ، فَيَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَكَانَ إِذَا صَدَرَ عَنِ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ الَّتِي كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنِيخُ بِهَا.
பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் ‘தூ துவா’வில் தங்குவதும், மக்கா விலிருந்து திரும்பும்போது ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’வில் தங்குவதும்75
1767. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘தூ துவா’ விலுள்ள இரண்டு கணவாய்களுக் கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக் காகவோ மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் தலைவாயில் அருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள்.

பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து ஆரம்பித்து (கஅபாவை) ஏழு முறை சுற்றுவார்கள். (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்தும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்வார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு தமது இருப்பிடத்திற்குத் திரும்புவதற்கு முன்பாகச் சென்று ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றுவார்கள்.

மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக் குத்) திரும்பும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்துத் தங்கிய, ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் வாகனத்தைப் படுக்கவைத்துத் தங்குவார்கள்.


அத்தியாயம் : 25
1768. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ سُئِلَ عُبَيْدُ اللَّهِ عَنِ الْمُحَصَّبِ، فَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ،، قَالَ نَزَلَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعُمَرُ وَابْنُ عُمَرَ. وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُصَلِّي بِهَا ـ يَعْنِي الْمُحَصَّبَ ـ الظُّهْرَ وَالْعَصْرَ ـ أَحْسِبُهُ قَالَ وَالْمَغْرِبَ. قَالَ خَالِدٌ لاَ أَشُكُّ فِي الْعِشَاءِ، وَيَهْجَعُ هَجْعَةً، وَيَذْكُرُ ذَلِكَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் ‘தூ துவா’வில் தங்குவதும், மக்கா விலிருந்து திரும்பும்போது ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’வில் தங்குவதும்75
1768. காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம் ‘அல்முஹஸ்ஸப்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எங்களிடம் கூறினார்கள்.

“இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்முஹஸ்ஸபில் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுவது வழக்கம்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

மஃக்ரிப் தொழுகைகயையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவார் கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் நினைக்கிறேன் எனவும் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இஷாவையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

“(இஷாவைத் தொழுத) பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் (அங்கேயே) உறங்கிவிடுவார்கள்; மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்” எனவும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

அத்தியாயம் : 25
1769. وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ إِذَا أَقْبَلَ بَاتَ بِذِي طُوًى، حَتَّى إِذَا أَصْبَحَ دَخَلَ، وَإِذَا نَفَرَ مَرَّ بِذِي طُوًى وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ، وَكَانَ يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ.
பாடம் : 149 மக்காவிலிருந்து திரும்பும்போது தூ துவாவில் தங்குதல்
1769. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்கா வுக்கு) வரும்போது ‘தூ துவா’வில் இரவில் தங்குவார்கள். விடிந்ததும் (மக்காவுக்குள்) நுழைவார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும் போதும் ‘தூ துவா’வில் விடியும்வரை தங்குவார்கள். மேலும், இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள் என்றும் கூறுவார்கள்.

அத்தியாயம் : 25
1770. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ} فِي مَوَاسِمِ الْحَجِّ.
பாடம் : 150 ஹஜ் நாட்களில் வணிகம் செய்வதும் அறியாமைக் கால சந்தைகளில் விற்பதும்76
1770. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

துல்மஜாஸ், உ(க்)காழ் ஆகியவை அறியாமைக் கால வணிகத் தலங்களாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் மக்கள் அவ்வணிகத் தலங்களை வெறுக்கலா னார்கள்.

இறுதியில், “(ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளைத் தேடுவது உங்கள்மீது குற்றமாகாது” (2:198) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.

அத்தியாயம் : 25
1771. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ، فَقَالَتْ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَكُمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَقْرَى حَلْقَى أَطَافَتْ يَوْمَ النَّحْرِ ". قِيلَ نَعَمْ. قَالَ " فَانْفِرِي ".
பாடம் : 151 ‘அல்முஹஸ்ஸபி’லிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்
1771. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ் முடிந்து புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர், “நான் உங்களை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டேன் என்றே கருதுகிறேன்” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே)” என்று கூறிவிட்டு, “இவர் நஹ்ருடைய (பத்தாம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாரா?” எனக் கேட்டார் கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்ட தும் “அப்படியாயின் புறப்படு!” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1772. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَزَادَنِي مُحَمَّدٌ حَدَّثَنَا مُحَاضِرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَذْكُرُ إِلاَّ الْحَجَّ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا أَنْ نَحِلَّ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ النَّفْرِ حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " حَلْقَى عَقْرَى، مَا أُرَاهَا إِلاَّ حَابِسَتَكُمْ ". ثُمَّ قَالَ " كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ ". قَالَتْ نَعَمْ. قَالَ " فَانْفِرِي ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. إِنِّي لَمْ أَكُنْ حَلَلْتُ. قَالَ " فَاعْتَمِرِي مِنَ التَّنْعِيمِ ". فَخَرَجَ مَعَهَا أَخُوهَا، فَلَقِينَاهُ مُدَّلِجًا. فَقَالَ " مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا ".
பாடம் : 151 ‘அல்முஹஸ்ஸபி’லிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்
1772. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே எண்ணிப் புறப்பட்டோம். நாங்கள் (மக்கா வுக்கு) வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு கட்டளையிட்டார்கள்.

நாங்கள் ஊர் திரும்பும் (நஃப்ருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே)” என்று கூறிவிட்டு, “இவர் நம்மைத் தடுத்துவிட்டார் என்றே கருதுகிறேன்” என்றார்கள். பிறகு அவர்கள், “நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில், நீ தவாஃப் செய்தாயா?” எனக் கேட்டதும் அவர் ‘ஆம்’ என்றார். “(அப்படியாயின்) நீ புறப்படு” என்றார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே” என்றேன். அதற்கு அவர்கள், “தன்யீம் என்ற இடத்திலிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள்.

நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவின் இறுதியில் (‘தவாஃபுல் வதா’வுக்காக மக்கா) போய்க் கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவர்கள், “இன்ன இன்ன இடத்தில் நீ தங்க வேண்டும் (அங்கு மீண்டும் சந்திப்போம்)” என்றார்கள்.

அத்தியாயம் : 25

1773. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ "".
பாடம் : 1 உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்2 (வசதியும் வாய்ப்பும் உள்ள) யார் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமை யாகாமல் இருப்பதில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகின்றான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகார மாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத் தைத் தவிர வேறு கூலியில்லை

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 26
1774. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ عِكْرِمَةَ بْنَ خَالِدٍ، سَأَلَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ الْعُمْرَةِ، قَبْلَ الْحَجِّ فَقَالَ لاَ بَأْسَ. قَالَ عِكْرِمَةُ قَالَ ابْنُ عُمَرَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يَحُجَّ. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ إِسْحَاقَ حَدَّثَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ مِثْلَهُ. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ مِثْلَهُ.
பாடம் : 2 ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ரா செய்தல்
1774. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்குமுன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார் கள். அதற்கு ‘தவறில்லை’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.3

மேலும், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்குமுன் உம்ரா செய்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 26
1775. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ الْمَسْجِدَ،، فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ، وَإِذَا نَاسٌ يُصَلُّونَ فِي الْمَسْجِدِ صَلاَةَ الضُّحَى. قَالَ فَسَأَلْنَاهُ عَنْ صَلاَتِهِمْ. فَقَالَ بِدْعَةٌ. ثُمَّ قَالَ لَهُ كَمِ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعً إِحْدَاهُنَّ فِي رَجَبٍ، فَكَرِهْنَا أَنْ نَرُدَّ عَلَيْهِ. قَالَ وَسَمِعْنَا اسْتِنَانَ، عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فِي الْحُجْرَةِ، فَقَالَ عُرْوَةُ يَا أُمَّاهُ، يَا أُمَّ الْمُؤْمِنِينَ. أَلاَ تَسْمَعِينَ مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ. قَالَتْ مَا يَقُولُ قَالَ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعَ عُمَرَاتٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ. قَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا اعْتَمَرَ عُمْرَةً إِلاَّ وَهُوَ شَاهِدُهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1775. 1776 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக் கருகே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் (ளுஹா) தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் “இது, மார்க்க அடிப்படையற்ற புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள்.5

பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்?” என உர்வா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள்.

நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை.

இதற்கிடையே, அறையில் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், “அன்னையே! இறை நம்பிக்கையாளர்களின் தாயே! அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா?’ எனக் கேட்டார். “அவர் என்ன கூறுகிறார்?” என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று, ரஜப் மாதத்தில் நடந்தது என்று கூறுகிறார்” என்றார்.

ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (இப்போது மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை” எனக் கூறினார்கள்.6


அத்தியாயம் : 26
1777. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَجَبٍ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1777. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் (நபி (ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை” என்றார்கள்.


அத்தியாயம் : 26
1778. حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ عُمْرَةُ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَدَّهُ الْمُشْرِكُونَ، وَعُمْرَةٌ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَالَحَهُمْ، وَعُمْرَةُ الْجِعْرَانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ أُرَاهُ حُنَيْنٍ. قُلْتُ كَمْ حَجَّ قَالَ وَاحِدَةً.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1778. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நான்கு (உம்ராக் கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதை பியா எனுமிடத்தில் இருந்து துல்கஅதா மாதத்தில் செய்(ய முனைந்)த உம்ரா. ஆனால், இணைவைப்பாளர்கள் நபியவர் களைத் தடுத்துவிட்டனர். இணைவைப் பாளர்களுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா; அடுத்து ‘ஜிஇர்ரானா’ என்ற இடத்திலிருந்து ஒரு போரில் -அது ஹுனைன் போர் என்றே கருதுகிறேன்- கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டபோது செய்த உம்ரா (ஹஜ்ஜுடன் சேர்த்து செய்த உம்ரா).

பிறகு “எத்தனை ஹஜ் செய்திருக் கிறார்கள்?” என்று நான் கேட்டதற்கு, “ஒரு ஹஜ்தான்” என்றார்கள்.


அத்தியாயம் : 26
1779. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَيْثُ رَدُّوهُ، وَمِنَ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ، وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1779. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (முதலில்), இணைவைப்பாளர்கள் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காகச் சென்றிருந்தார்கள்; அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து ஹஜ்ஜுடன் ஒரு உம்ரா செய்தார்கள்.


அத்தியாயம் : 26
1780. حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، وَقَالَ، اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلاَّ الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَمِنَ الْعَامِ الْمُقْبِلِ، وَمِنَ الْجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1780. ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்; ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபியாவிலிருந்து (அவர்கள் தடுக்கப்பட்டபோது) செய்யச் சென்ற உம்ரா; அதற்கடுத்த ஆண்டின் உம்ரா; ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப் பங்கிட்ட இடமான ‘ஜிஇர்ரானா’ விலிருந்து செய்த உம்ரா; ஹஜ்ஜுடன் செய்த உம்ரா ஆகியவை ஆகும்.7


அத்தியாயம் : 26
1781. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ مَسْرُوقًا وَعَطَاءً وَمُجَاهِدًا. فَقَالُوا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ. وَقَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1781. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஸ்ரூக், அதாஉ, முஜாஹித் (ரஹ்) ஆகியோரிடம் (நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் துல்கஅதாவில் உம்ரா செய்துள்ளார்கள்” என்று கூறினர்.

மேலும், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்பு துல்கஅதாவில் (வெவ்வேறு ஆண்டுகளில்) இரண்டு முறை உம்ரா செய்துள்ளார்கள்” என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.8

அத்தியாயம் : 26
1782. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يُخْبِرُنَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ، فَنَسِيتُ اسْمَهَا "" مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا "". قَالَتْ كَانَ لَنَا نَاضِحٌ فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ ـ لِزَوْجِهَا وَابْنِهَا ـ وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ قَالَ "" فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ "". أَوْ نَحْوًا مِمَّا قَالَ.
பாடம் : 4 ரமளானில் உம்ரா செய்தல்
1782. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரிடம், -“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்- “நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?” எனக் கேட்டார்கள்.

அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் இருந்த நீர் இறைப்பதற்கான (இரு ஒட்டகங்களில்) ஓர் ஒட்டகத்தில் இன்னா ரின் தந்தையும் அவருடைய மகனும் (என் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றோர் ஒட்டகத்தை அவர் விட்டுச்சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கி றோம்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்” என்றோ, அல்லது அதைப் போன்றோ கூறினார்கள்.

அத்தியாயம் : 26
1783. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحَجَّةِ فَقَالَ لَنَا "" مَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِالْحَجِّ فَلْيُهِلَّ وَمَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ، فَلَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لأَهْلَلْتُ بِعُمْرَةٍ "". قَالَتْ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَظَلَّنِي يَوْمُ عَرَفَةَ، وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ارْفُضِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ "". فَلَمَّا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِي.
பாடம் : 5 ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்கும் இரவிலும் மற்ற நேரங்களிலும் உம்ரா செய்தல்9
1783. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். நான் குர்பானிப் பிராணியைக் கொண்டுவர வில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” எனக் கூறினார்கள்.

எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர்; நான் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருத்தி யாவேன். இந்நிலையில், அரஃபா நாள் நெருங்கியதும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உனது உம்ராவை விட்டுவிட்டு உனது தலைமுடியை அவிழ்த்து வாரிக் கொள்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள்.

அல்முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது (துல்ஹஜ் பத்தாம் நாள் நான் தூய்மையடைந்தபின்) என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் எனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக (அங்கு) இஹ்ராம் கட்டினேன்.

அத்தியாயம் : 26
1784. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ عَمْرَو بْنَ أَوْسٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يُرْدِفَ عَائِشَةَ، وَيُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ. قَالَ سُفْيَانُ مَرَّةً سَمِعْتُ عَمْرًا، كَمْ سَمِعْتُهُ مِنْ عَمْرٍو.
பாடம் : 6 உம்ராவுக்காக ‘தன்ஈமி’ல் இஹ்ராம் கட்டுதல்10
1784. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று ‘தன்யீம்’ எனுமிடத்தில் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒரு முறை, “அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் இதைக் கேட்டுள் ளேன்; எத்தனையோ முறை கேட்டுள் ளேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 26
1785. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَطَاءٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَهَلَّ وَأَصْحَابُهُ بِالْحَجِّ وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْىٌ، غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ، وَكَانَ عَلِيٌّ قَدِمَ مِنَ الْيَمَنِ، وَمَعَهُ الْهَدْىُ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَذِنَ لأَصْحَابِهِ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، يَطُوفُوا بِالْبَيْتِ، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا، إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْىُ، فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ "". وَأَنَّ عَائِشَةَ حَاضَتْ فَنَسَكَتِ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ قَالَ فَلَمَّا طَهُرَتْ وَطَافَتْ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتَنْطَلِقُونَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، وَأَنْطَلِقُ بِالْحَجِّ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ فِي ذِي الْحَجَّةِ، وَأَنَّ سُرَاقَةَ بْنَ مَالِكِ بْنِ جُعْشُمٍ لَقِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْعَقَبَةِ، وَهُوَ يَرْمِيهَا، فَقَالَ أَلَكُمْ هَذِهِ خَاصَّةً، يَا رَسُولَ اللَّهِ قَالَ "" لاَ، بَلْ لِلأَبَدِ "".
பாடம் : 6 உம்ராவுக்காக ‘தன்ஈமி’ல் இஹ்ராம் கட்டுதல்10
1785. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர் களும் ஹஜ்ஜுக்ôக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்கவில்லை. யமனி லிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள் ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என அவர்கள் கூறி னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள்.

அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் மினாவுக்குச் செல்வதா?” என்று பேசிக்கொண்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் குர்பானி பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் கொண்டுவந்திருக்க வில்லையாயின், இஹ்ராமிலிருந்து விடு பட்டிருப்பேன்” எனக் கூறினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறைவேற்றினார்கள்; மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல, நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ரா வையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர் களே?” என (ஏக்கத்துடன்) கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை, ஆயிஷா (ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் கட்டுவதற்காக) ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்துகொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது), உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை. இது எப்போதைக்கும் உரியதே” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 26