1746. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ وَبَرَةَ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ مَتَى أَرْمِي الْجِمَارَ قَالَ إِذَا رَمَى إِمَامُكَ فَارْمِهْ. فَأَعَدْتُ عَلَيْهِ الْمَسْأَلَةَ، قَالَ كُنَّا نَتَحَيَّنُ، فَإِذَا زَالَتِ الشَّمْسُ رَمَيْنَا.
பாடம் : 134 (ஷைத்தானுக்கு) கற்கள் எறி யுதல்68 நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் (ஷைத்தானுக்கு) கல்லெறிந்தார்கள். மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1746. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நான் (நஹ்ருடைய நாட்கள் அல்லாத நாட்களில்) எப்போது (ஷைத்தானுக்கு) கல் எறிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “உம்முடைய (ஹஜ்) தலைவர் எறியும்போது நீரும் எறியும்!” என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, “நாங்கள் சூரியன் உச்சி சாயும்வரை காத்திருப்போம்; பிறகு கல்லெறிவோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1747. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ رَمَى عَبْدُ اللَّهِ مِنْ بَطْنِ الْوَادِي، فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنَّ نَاسًا يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا، فَقَالَ وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا الأَعْمَشُ بِهَذَا.
பாடம் : 135 ‘பத்னுல் வாதீ’ எனும் பள்ளத் திலிருந்து (ஷைத்தானுக்கு) கல்லெறிதல்69
1747. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘பத்னுல் வாதி’ பள்ளத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், “அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லை எறிகின்றனர்?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! ‘அல்பகரா’ அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இதுதான்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1748. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ، وَمِنًى عَنْ يَمِينِهِ، وَرَمَى بِسَبْعٍ، وَقَالَ هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صلى الله عليه وسلم.
பாடம் : 136 (ஜம்ராக்களின் மீது கல்லெறி யும்போது) ஏழு சிறு கற்களை எறிதல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எறிந்த தாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1748. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பெரிய ஜம்ராவுக்கு (ஜம்ரத்துல் அகபாவுக்கு) வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்றுகொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார்கள்.

பிறகு “இவ்வாறுதான், ‘அல்பகரா’ அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார் கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1749. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَنَّهُ حَجَّ مَعَ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ فَرَآهُ يَرْمِي الْجَمْرَةَ الْكُبْرَى بِسَبْعِ حَصَيَاتٍ، فَجَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ، وَمِنًى عَنْ يَمِينِهِ، ثُمَّ قَالَ هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ.
பாடம் : 137 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது இறையில்லம் கஅபா இடப் பக்கம் அமையுதல்
1749. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர் களுடன் ஹஜ் செய்தேன்; அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தமது இடப் பக்கத்தில் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்று கொண்டார்கள்.

பிறகு அவர்கள், “இதுவே ‘அல்பகரா’ அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் கல்லெறிந்த இடமாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1750. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ الْحَجَّاجَ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا الْبَقَرَةُ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا آلُ عِمْرَانَ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا النِّسَاءُ. قَالَ فَذَكَرْتُ ذَلِكَ لإِبْرَاهِيمَ، فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ أَنَّهُ كَانَ مَعَ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ حِينَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، فَاسْتَبْطَنَ الْوَادِيَ، حَتَّى إِذَا حَاذَى بِالشَّجَرَةِ اعْتَرَضَهَا، فَرَمَى بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ، ثُمَّ قَالَ مِنْ هَا هُنَا وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ قَامَ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صلى الله عليه وسلم.
பாடம் : 138 ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்த தாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1750. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபடி, (அல்பகரா அத்தியாயம் என்று கூறாமல்) ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம்’ என்றும், (ஆலு இம்ரான் அத்தியாயம் என்று கூறாமல்) ‘இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம்’ என்றும், (அந்நிசா அத்தியாயம் என்று கூறாமல்) ‘பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்’ என்றும் கூறியதை நான் செவியுற்றேன். இது பற்றி நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்:

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது நான் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் பத்னுல் வாதி எனும் பள்ளத்தில் இறங்கி, அதில் உள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்றுகொண்டு ஏழு கற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள்.

“பிறகு அல்லாஹ்வின் மீதாணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந் தபடி) நின்றார்கள்” என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1751. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ فَيَقُومَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْوُسْطَى، ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيَسْتَهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، وَيَقُومُ طَوِيلاً، ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.
பாடம் : 139 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெ றிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்துவிடுவது இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.70 பாடம் : 140 இரண்டு ஜம்ராக்களில் கல்லெ றிந்த பின்பு கிப்லாவை முன் னோக்கிச் சமதளத்தில் நிற்பது71
1751. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு முன்னேறி சமதளப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள்.

பின்பு இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளப் பகுதிக்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார் கள். பின்பு ‘பத்னுல் வாதி’ பள்ளத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; ஆனால், அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பிவிடுவார்கள்.

“இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” எனக் கூறுவார்கள்.

அத்தியாயம் : 25
1752. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، ثُمَّ يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ فَيُسْهِلُ، فَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ قِيَامًا طَوِيلاً، فَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْجَمْرَةَ الْوُسْطَى كَذَلِكَ، فَيَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيُسْهِلُ، وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ قِيَامًا طَوِيلاً، فَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْجَمْرَةَ ذَاتَ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا، وَيَقُولُ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ.
பாடம் : 141 முதல் மற்றும் இரண்டாவது ஐம்ராவில் கைகளை உயர்த்(தி பிரார்த்தித்)தல்
1752. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஐம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு முன்னேறி சமதளப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப் பக்கமாக நகர்ந்து, சமதளப் பகுதிக்குப் போய் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றுகொண்டு கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள்.

பின்பு ‘பத்னுல் வாதி’ பள்ளத்திலிருந்து, கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்கமாட்டார்கள்; பிறகு திரும்பிவிடுவார்கள். “இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” எனக் கூறுவார்கள்.

அத்தியாயம் : 25
1753. وَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، وَكَانَ يُطِيلُ الْوُقُوفَ، ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الثَّانِيَةَ، فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ الْيَسَارِ مِمَّا يَلِي الْوَادِيَ، فَيَقِفُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الْعَقَبَةِ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَنْصَرِفُ وَلاَ يَقِفُ عِنْدَهَا. قَالَ الزُّهْرِيُّ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ مِثْلَ هَذَا عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ.
பாடம் : 142 முதலிரண்டு ஐம்ராக்களிலும் பிரார்த்திப்பது
1753. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பிறகு சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப் பார்கள்.

பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதியில் இறங்கி, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார் கள்; அங்கு நிற்கமாட்டார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள் என சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்பவராக இருந்தார்கள்.

அத்தியாயம் : 25
1754. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ ـ وَكَانَ أَفْضَلَ أَهْلِ زَمَانِهِ ـ يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ هَاتَيْنِ حِينَ أَحْرَمَ، وَلِحِلِّهِ حِينَ أَحَلَّ، قَبْلَ أَنْ يَطُوفَ. وَبَسَطَتْ يَدَيْهَا.
பாடம் : 143 கல்லெறிந்தபின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுல் இஃபாளாவுக்கு முன்பு தலையை மழித்துக்கொள்வதும்
1754. தம் காலத்தவரில் சிறந்த அறிஞராக விளங்கிய காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்ட நாடியபோதும், தவாஃபுல் இஃபாளா செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல் லெறிந்துவிட்டு, தலையை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டிருந்த வேளையிலும் நான் அவர்களுக்கு என்னுடைய இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கிறேன்” எனக் கூறித் தம்முடைய இரு கைகளை யும் விரித்துக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 25
1755. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنِ الْحَائِضِ.
பாடம் : 144 ‘தவாஃபுல் வதா’ (விடைபெறும் தவாஃப்)72
1755. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது.


அத்தியாயம் : 25
1756. حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ. تَابَعَهُ اللَّيْثُ حَدَّثَنِي خَالِدٌ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 144 ‘தவாஃபுல் வதா’ (விடைபெறும் தவாஃப்)72
1756. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் மினாவில் கல்லெறிந்தபின்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தொழுது விட்டு, பின்னர் சிறிது நேரம் உறங்கினார் கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அதை (இறுதியாக) தவாஃப் செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1757. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَاضَتْ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَحَابِسَتُنَا هِيَ "". قَالُوا إِنَّهَا قَدْ أَفَاضَتْ. قَالَ "" فَلاَ إِذًا "".
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1757. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு (ஹஜ்ஜின்போது) மாத விடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டர்கள்.

அதற்குத் தோழர்கள் “அவர் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், பரவாயில்லை. (நாம் போகலாம்!)” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1758. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ أَهْلَ الْمَدِينَةِ، سَأَلُوا ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ امْرَأَةٍ، طَافَتْ ثُمَّ حَاضَتْ، قَالَ لَهُمْ تَنْفِرُ. قَالُوا لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعَ قَوْلَ زَيْدٍ. قَالَ إِذَا قَدِمْتُمُ الْمَدِينَةَ فَسَلُوا. فَقَدِمُوا الْمَدِينَةَ فَسَأَلُوا، فَكَانَ فِيمَنْ سَأَلُوا أُمُّ سُلَيْمٍ، فَذَكَرَتْ حَدِيثَ صَفِيَّةَ. رَوَاهُ خَالِدٌ وَقَتَادَةُ عَنْ عِكْرِمَةَ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1758. 1759 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஒரு பெண் (ஹஜ்ஜில் இஃபாளா) தவாஃப் செய்தபிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டனர். அதற்கு அவர்கள், “அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) போய்விட வேண்டி யதுதான்” என்றார்கள்.

அப்போது மக்கள், “உங்கள் கூற்றை எடுத்துக்கொண்டு, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கூற்றை விட்டுவிட நாங்கள் தயாரில்லை” என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றதும் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப்பாருங்கள்” என்றார்கள்.

மக்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்கள் (விளக்கம்) கேட்டவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1760. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا أَفَاضَتْ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1760. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாதவிடாய் ஏற்பட்ட பெண் (ஹஜ்ஜில்) தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டால் (மக்காவைவிட்டுச்) சென்றுவிடலாம் என அவளுக்குச் சலுகை வழங்கப்பட்டிருந்தது.


அத்தியாயம் : 25
1761. قَالَ وَسَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ إِنَّهَا لاَ تَنْفِرُ. ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لَهُنَّ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1761. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “மாதவிடாய் ஏற்பட்ட பெண் (ஹஜ்ஜில் தவாஃபுல் வதா செய்யாமல்) மக்காவைவிட்டுச் செல்லக் கூடாது!” என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, “நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு (அவ்வாறு செல்ல) சலுகை வழங்கியுள்ளார்கள்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1762. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَقَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَمْ يَحِلَّ وَكَانَ مَعَهُ الْهَدْىُ، فَطَافَ مَنْ كَانَ مَعَهُ مِنْ نِسَائِهِ وَأَصْحَابِهِ، وَحَلَّ مِنْهُمْ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ الْهَدْىُ، فَحَاضَتْ هِيَ، فَنَسَكْنَا مَنَاسِكَنَا مِنْ حَجِّنَا، فَلَمَّا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ لَيْلَةُ النَّفْرِ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ كُلُّ أَصْحَابِكَ يَرْجِعُ بِحَجٍّ وَعُمْرَةٍ غَيْرِي. قَالَ "" مَا كُنْتِ تَطُوفِي بِالْبَيْتِ لَيَالِيَ قَدِمْنَا "". قُلْتُ لاَ. قَالَ "" فَاخْرُجِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ فَأَهِلِّي بِعُمْرَةٍ، وَمَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا "". فَخَرَجْتُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ، وَحَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عَقْرَى حَلْقَى، إِنَّكِ لَحَابِسَتُنَا، أَمَا كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ "". قَالَتْ بَلَى. قَالَ "" فَلاَ بَأْسَ. انْفِرِي "". فَلَقِيتُهُ مُصْعِدًا عَلَى أَهْلِ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ، أَوْ أَنَا مُصْعِدَةٌ، وَهُوَ مُنْهَبِطٌ. وَقَالَ مُسَدَّدٌ قُلْتُ لاَ. تَابَعَهُ جَرِيرٌ عَنْ مَنْصُورٍ فِي قَوْلِهِ لاَ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1762. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தோடு புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறை யில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வா வையும் தவாஃப் செய்தார்கள்; ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் குர்பானி பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களுடைய துணைவியர், அவர் களுடைய தோழர்கள் அனைவரும் தவாஃப் செய்தார்கள். பிறகு அவர்களில் குர்பானி பிராணி கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா கிரியைகளையும் செய்தோம்.

நபி (ஸல்) அவர்கள் ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தங்கியிருந்த - (மினாவிலி ருந்து) திரும்ப வேண்டிய- இரவில் நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்” என்றேன். அதற்கு அவர்கள், “நாம் மக்காவுக்கு வந்கு சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “நீ உன் சகோதரருடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்! மேலும், இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.

நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் ‘தன்யீம்’ சென்று உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) நீ எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாய். நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாயல்லவா?” எனக் கேட்டார் கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்றதும், “அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு!” என்றார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவாசி களுடன் மேலே ஏறும்போது அவர்களை நான் சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. எல்லாத் தொடர்களிலும் (மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்ததைக் குறிக்க) ‘லா’ எனும் சொல்லே இடம்பெறுகிறது. (வேறுசில அறிவிப்புகளில் ‘பலா’ எனும் சொல் காணப்படுகிறது.)

அத்தியாயம் : 25
1763. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبِرْنِي بِشَىْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى. قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ. افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ.
பாடம் : 146 ‘மினா’விலிருந்து புறப்படும் (நஃப்ருடைய) நாளில் ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல்74
1763. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்’ என்று பதிலளித்தார் கள். அடுத்து நான், “(மினாவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்கே அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டதற்கு, ‘அல்அப்தஹில்’ என்று கூறிவிட்டு, “உன் தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்துகொள்!” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1764. حَدَّثَنَا عَبْدُ الْمُتَعَالِ بْنُ طَالِبٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ قَتَادَةَ، حَدَّثَهُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، وَرَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ.
பாடம் : 146 ‘மினா’விலிருந்து புறப்படும் (நஃப்ருடைய) நாளில் ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல்74
1764. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நஃப்ருடைய நாளில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை அல்முஹஸ்ஸ பில் நிறைவேற்றிவிட்டு சிறிது நேரம் உறங்கினார்கள். பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

அத்தியாயம் : 25
1765. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّمَا كَانَ مَنْزِلٌ يَنْزِلُهُ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَكُونَ أَسْمَحَ لِخُرُوجِهِ. يَعْنِي بِالأَبْطَحِ.
பாடம் : 147 அல்முஹஸ்ஸபில் தங்குதல்
1765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல; மதீனாவுக்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே அல்முஹஸ்ஸப் -அதாவது அல்அப்தஹ்- ஆகும்.


அத்தியாயம் : 25