1611. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ، قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ اسْتِلاَمِ الْحَجَرِ،. فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ. قَالَ قُلْتُ أَرَأَيْتَ إِنْ زُحِمْتُ أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ بِالْيَمَنِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ.
பாடம் : 60
ஹஜருல் அஸ்வதை முத்த மிடல்
1611. ஸுபைர் பின் அரபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் (எனும் கறுப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்” எனக் கூறினார்கள்.
அப்போது நான், “கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருதுகிறீர் களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உமது ஊராகிய) யமனில் வைத்துக் கொள்வீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடு வதையும் கண்டேன்” என (மீண்டும்) கூறினார்கள்.
அத்தியாயம் : 25

1612. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ.
பாடம் : 61
ஹஜருல் அஸ்வதிற்கு நேராக வரும்போது சைகை செய்வது
1612. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார் கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் அதை நோக்கிச் சைகை செய்தார்கள்.

1613. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى الرُّكْنَ أَشَارَ إِلَيْهِ بِشَىْءٍ كَانَ عِنْدَهُ وَكَبَّرَ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ.
பாடம் : 62
ஹஜருல் அஸ்வதின் அருகில் தக்பீர் கூறல்
1613. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை ‘தவாஃப்’ செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளால் (அதாவது கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1614. حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،، ذَكَرْتُ لِعُرْوَةَ، قَالَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَّ أَوَّلَ، شَىْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً، ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ مِثْلَهُ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ ـ رضى الله عنه ـ فَأَوَّلُ شَىْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ، ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ، وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا.
பாடம் : 63
(‘உம்ரா’ செய்வதற்காக) மக்கா வந்தவர் தமது இருப்பிடம் செல்வதற்கு முன்னால் தவாஃப் செய்துவிட்டு, இரண்டு ரக்அத் கள் தொழுது, பிறகு ஸஃபாவிற் குச் செல்வது34
1614. 1615 உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. பின்னர் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இதைப் போன்றே ஹஜ் செய்தார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் என் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்களும் முதல் வேலையாக தவாஃப்தான் செய்தார்கள். பிறகு முஹாஜிர்களும் அன்சாரிகளும் இவ்வாறு செய்ததையே நான் பார்த்தேன். மேலும் என் தாயார் (அஸ்மா), “நானும் என் சகோதரியும் (ஆயிஷா) (கணவர்) ஸுபைரும் இன்னாரும் இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமிட்)டபின் (‘சயீ’ செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்” என்று கூறினார்கள்.

1616. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا طَافَ فِي الْحَجِّ أَوِ الْعُمْرَةِ أَوَّلَ مَا يَقْدَمُ سَعَى ثَلاَثَةَ أَطْوَافٍ، وَمَشَى أَرْبَعَةً، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ يَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 63
(‘உம்ரா’ செய்வதற்காக) மக்கா வந்தவர் தமது இருப்பிடம் செல்வதற்கு முன்னால் தவாஃப் செய்துவிட்டு, இரண்டு ரக்அத் கள் தொழுது, பிறகு ஸஃபாவிற் குச் செல்வது34
1616. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ (மக்கா) வந்ததும் முதன் முதலாக தவாஃப் செய்வார்கள். அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து ஓடுவார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையே சுற்றுவார்கள்.

1617. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا طَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الأَوَّلَ يَخُبُّ ثَلاَثَةَ أَطْوَافٍ، وَيَمْشِي أَرْبَعَةً، وَأَنَّهُ كَانَ يَسْعَى بَطْنَ الْمَسِيلِ إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 63
(‘உம்ரா’ செய்வதற்காக) மக்கா வந்தவர் தமது இருப்பிடம் செல்வதற்கு முன்னால் தவாஃப் செய்துவிட்டு, இரண்டு ரக்அத் கள் தொழுது, பிறகு ஸஃபாவிற் குச் செல்வது34
1617. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத் தில் முதல் தவாஃப் செய்யும்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக் கிடையே சுற்றும்போது, ‘பத்னுல் மசீல்’ எனும் (நீரோடை) பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.

1618. وَقَالَ لِي عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ قَالَ كَيْفَ يَمْنَعُهُنَّ، وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ الرِّجَالِ قُلْتُ أَبَعْدَ الْحِجَابِ أَوْ قَبْلُ قَالَ إِي لَعَمْرِي لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الْحِجَابِ. قُلْتُ كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ قَالَ لَمْ يَكُنَّ يُخَالِطْنَ كَانَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ تَطُوفُ حَجْرَةً مِنَ الرِّجَالِ لاَ تُخَالِطُهُمْ، فَقَالَتِ امْرَأَةٌ انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ. قَالَتْ {انْطَلِقِي} عَنْكِ. وَأَبَتْ. {وَكُنَّ} يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ، فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ، وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ الْبَيْتَ قُمْنَ حَتَّى يَدْخُلْنَ وَأُخْرِجَ الرِّجَالُ، وَكُنْتُ آتِي عَائِشَةَ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ وَهِيَ مُجَاوِرَةٌ فِي جَوْفِ ثَبِيرٍ. قُلْتُ وَمَا حِجَابُهَا قَالَ هِيَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ لَهَا غِشَاءٌ، وَمَا بَيْنَنَا وَبَيْنَهَا غَيْرُ ذَلِكَ، وَرَأَيْتُ عَلَيْهَا دِرْعًا مُوَرَّدًا.
பாடம் : 64
ஆண்களுடன் பெண்களும் தவாஃப் செய்வது
1618. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஹஜ் அதிகாரியாக இருந்த) இப்னு ஹிஷாம், ஆண்களுடன் (சேர்ந்து) பெண்களும் தவாஃப் செய்வதைத் தடுத்தபோது, “நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆண்களுடன் (சேர்ந்து) தவாஃப் செய்திருக்க, அவர்களை அவர் எப்படித் தடுக்கலாம்?” என்று தாம் கேள்வி எழுப்பியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
நான் (அவரிடம், “நபியவர்களின் துணைவியர் இவ்வாறு தவாஃப் செய்தது, (திரைக்கப்பால் நின்றே அவர்களிடம் பேச வேண்டும் என்ற) ‘ஹிஜாப்’ சட்டம் வந்த பின்பா? அல்லது அதற்கு முன்பா?” என்று கேட்டேன். அவர் “ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி)மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இதை நான் கண்டேன்” என்றார்.
நான், “அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்துவிடுவார்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கலந்துவிடமாட்டார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களுடன் கலக்காமல் ஓரமாக தவாஃப் செய்வார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கை யாளர்களின் தாயே! நடங்கள்! நாம் (சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்’ என்றார்; அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நீ போ(ய் முத்தமிடு; நான் வரவில்லை)!’ என்று மறுத்தார்கள். இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக்கொண்டு சென்று ஆண்களோடு தவாஃப் செய்வார்கள். ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேற்றப்படும்வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது அவர்கள் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கி (இஃதிகாஃபில்) இருந்தார்கள்” என்று கூறினார்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “(அப்போது) அவர்களின் ஹிஜாப் என்னவாக இருந்தது?” எனக் கேட்டேன். “ஆயிஷா (ரலி) அவர்கள், துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை இருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அதைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இளஞ்சிவப்பு நிறமுள்ள சட்டை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1619. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. فَقَالَ "" طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ، وَأَنْتِ رَاكِبَةٌ "". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، وَهْوَ يَقْرَأُ {وَالطُّورِ * وَكِتَابٍ مَسْطُورٍ}
பாடம் : 64
ஆண்களுடன் பெண்களும் தவாஃப் செய்வது
1619. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) “நான் நோயுற்றுள் ளேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்” என்றார்கள். நான் அவ்வாறே தவாஃப் செய்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் (சுப்ஹு) தொழுதுகொண்டிருந்தார்கள்.

1620. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ وَهُوَ يَطُوفُ بِالْكَعْبَةِ بِإِنْسَانٍ رَبَطَ يَدَهُ إِلَى إِنْسَانٍ بِسَيْرٍ، أَوْ بِخَيْطٍ، أَوْ بِشَىْءٍ غَيْرِ ذَلِكَ، فَقَطَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، ثُمَّ قَالَ "" قُدْهُ بِيَدِهِ "".
பாடம் : 65
தவாஃப் செய்யும்போது பேசுவது
1620. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை தவாஃப் செய்துகொண்டிருந்தபோது, ஒரு மனிதருக்கு அருகே சென்றார்கள். அவர் தமது கையை வாரினாலோ அல்லது கயிற் றாலோ அல்லது வேறு ஒரு பொருளாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டி (தவாஃப் செய்து)கொண்டிருந்தார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் துண்டித்துவிட்டு, “இவரது கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!” என்று (அந்த மற்றொருவரிடம்) கூறினார்கள்.

1621. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ.
பாடம் : 66
ஒருவர் ‘தவாஃப்’ செய்யும்போது, வாரையோ விரும்பத் தகாத வேறு பொருளையோ கண்டால் அதைத் துண்டித்துவிடுவது
1621. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள்.

1622. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ يُونُسُ قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ "" أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ "".
பாடம் : 67
கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது; இணைவைப்பாளர்கள் ஹஜ் செய்வது கூடாது.
1622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜில், அபூபக்ர் (ரலி) அவர்களை (ஹஜ் குழுவிற்குத்) தலைவராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அங்கு) துல்ஹஜ் பத்தாம் நாள் (மினாவில்), “எச்சரிக்கை! இந்த ஆண்டுக்குப் பின்னர் இணை வைப்பாளர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக யாரும் தவாஃப் செய்யக் கூடாது” எனப் பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் என்னையும் ஒருவனாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

1623. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَيَقَعُ الرَّجُلُ عَلَى امْرَأَتِهِ فِي الْعُمْرَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، ثُمَّ صَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}. قَالَ وَسَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبِ امْرَأَتَهُ حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 68
தவாஃபுக்கு இடையில் (தொழுகையில்) நின்றுவிடல்35
ஒருவர் தவாஃப் செய்யும்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால், அல்லது அந்த இடத்திலிருந்து அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டால் தொழுகை முடிந்து சலாம் கொடுத்தவுடன் விட்ட இடத்திலிருந்து தவாஃபைத் தொடர வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இப்னு உமர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) ஆகியோரும் இவ்வாறு கூறியதாகவே அறிவிக்கப்பட் டுள்ளது.
பாடம் : 69
(தவாஃபின்போது) ஏழு சுற்று களுக்கு ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இரு ரக்அத்கள் தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்கும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“தவாஃப் செய்தபின் கடமையான தொழுகை தொழுதால், அது தவாஃபின் இரண்டு ரக்அத்களுக்குப் போதுமாகும்” என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுவதாக நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “நபிவழியே சிறந்தது; நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுக்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.
1623. 1624 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா- மர்வாவிற்கு இடையில் சுற்றி னார்கள்” என்று கூறிவிட்டு, இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு அல்லாஹ் வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.
நான் இதே கேள்வியை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட் டேன். அதற்கு, “ஸஃபா-மர்வாவுக்கு இடையில் சுற்றுவதற்கு முன்னால் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கக் கூடாது” என அவர்கள் பதிலளித்தார்கள்.

1625. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، فَطَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَمْ يَقْرَبِ الْكَعْبَةَ بَعْدَ طَوَافِهِ بِهَا حَتَّى رَجَعَ مِنْ عَرَفَةَ.
பாடம் : 70
முதல் தவாஃப் (தவாஃபுல் குதூம்) செய்தபின் அரஃபா செல்லும்வரை தவாஃப் செய்ய கஅபாவை நெருங்காமல் இருத்தல்
1625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது தவாஃப் (குதூம்) செய்தார்கள்; ஸஃபா- மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்த தவாஃபிற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும்வரை நபியவர்கள் கஅபாவிற்குச் செல்லவில்லை.36

1626. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو مَرْوَانَ يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ الْغَسَّانِيُّ عَنْ هِشَامٍ عَنْ عُرْوَةَ عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهْوَ بِمَكَّةَ، وَأَرَادَ الْخُرُوجَ، وَلَمْ تَكُنْ أُمُّ سَلَمَةَ طَافَتْ بِالْبَيْتِ وَأَرَادَتِ الْخُرُوجَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَطُوفِي عَلَى بَعِيرِكِ، وَالنَّاسُ يُصَلُّونَ "". فَفَعَلَتْ ذَلِكَ، فَلَمْ تُصَلِّ حَتَّى خَرَجَتْ.
பாடம் : 71
(மஸ்ஜிதுல் ஹராம்) பள்ளி வாசலுக்கு வெளியே, தவா ஃபிற்கான இரண்டு ரக்அத்கள் தொழுதல்
புனித ஹரமுக்கு வெளியே உமர் (ரலி) அவர்கள் (அத்தொழுகையைத்) தொழு திருக்கிறார்கள்.
1626. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். (இறுதி) தவாஃப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “சுப்ஹு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட வுடன் மக்கள் தொழுதுகொண்டிருக்கும் போது, நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்துகொள்” எனக் கூறினார்கள்.
அவ்வாறே நான் செய்தேன். இதனால் (தவாஃபுக்கான இரு ரக்அத்களை அங்கிருந்து) வெளியேறும்வரை நான் தொழவில்லை. (அதன் பிறகே தொழு தேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “(இறுதி தவாஃப் செய்யாதது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்” என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

1627. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّفَا، وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}.
பாடம் : 72
மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுதல்
1627. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது கஅபாவை ஏழு முறை (தவாஃப்) சுற்றினார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரியுள்ளது” (33:21) என உயர்ந்தோன் அல்லாஹ் கூறியுள்ளான்.

1628. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ نَاسًا، طَافُوا بِالْبَيْتِ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ قَعَدُوا إِلَى الْمُذَكِّرِ، حَتَّى إِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامُوا يُصَلُّونَ فَقَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَعَدُوا حَتَّى إِذَا كَانَتِ السَّاعَةُ الَّتِي تُكْرَهُ فِيهَا الصَّلاَةُ قَامُوا يُصَلُّونَ.
பாடம் : 73
சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37
இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள்.
உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1628. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், “சிலர் சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு, மார்க்கச் சொற்பொழிவாள ரிடத்தில் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமானபோது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்” என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், (சொற்பொழி வில் அமர்ந்தவர்களைக் குறித்து) “இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, தொழுகை வெறுக்கப்படும் நேரம் வந்தவுடன் எழுந்து தொழுகிறார்கள்” என்று (கண்டித்துக்) கூறினார்கள்.38

1629. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ الصَّلاَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا.
பாடம் : 73
சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37
இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள்.
உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1629. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சூரியன் உதிக்கும்போதும் மறையும் போதும் தொழக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற் றிருக்கிறேன்.

1630. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ـ هُوَ الزَّعْفَرَانِيُّ ـ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَطُوفُ بَعْدَ الْفَجْرِ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ. ق
பாடம் : 73
சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37
இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள்.
உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1630. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், சுப்ஹுக்குப்பின் தவாஃப் செய்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை நான் கண்டேன்.