1591. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ "".
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இப்ராஹீம், “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்கு வாயாக; என்னையும் என் பிள்ளைகளை யும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக” என்று வேண்டி யதை எண்ணிப்பாருங்கள். “என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களில் பெரும்பாலோரை வழி தவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களில் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களில் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்). (14:35-37) பாடம் : 47 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ், புனித (இறை) ஆலயமாகிய கஅபாவை (மார்க்க அடையாளங்களில்) நிலையானதாக மக்களுக்கு ஆக்கினான். புனித மாதத்தையும் (கஅபாவுக்கு நேர்ந்துவிடப்படும்) தியாகப் பிராணியை யும் (அதன் அடையாள) மாலைகளையும் (அவ்வாறே ஆக்கினான்). வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றை யும் அல்லாஹ் அறிகின்றான் என்பதை யும், எல்லாப் பொருட்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (5:97)
1591. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, சிறுத்த கால்களை உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.25

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 25
1592. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ ـ هُوَ ابْنُ الْمُبَارَكِ ـ قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ "".
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இப்ராஹீம், “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்கு வாயாக; என்னையும் என் பிள்ளைகளை யும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக” என்று வேண்டி யதை எண்ணிப்பாருங்கள். “என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களில் பெரும்பாலோரை வழி தவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களில் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களில் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்). (14:35-37) பாடம் : 47 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ், புனித (இறை) ஆலயமாகிய கஅபாவை (மார்க்க அடையாளங்களில்) நிலையானதாக மக்களுக்கு ஆக்கினான். புனித மாதத்தையும் (கஅபாவுக்கு நேர்ந்துவிடப்படும்) தியாகப் பிராணியை யும் (அதன் அடையாள) மாலைகளையும் (அவ்வாறே ஆக்கினான்). வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றை யும் அல்லாஹ் அறிகின்றான் என்பதை யும், எல்லாப் பொருட்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (5:97)
1592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் நோன்பு கடமையாக்கப்படு வதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக் குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்பு கிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்பு கிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1593. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الْحَجَّاجِ بْنِ حَجَّاجٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ "". تَابَعَهُ أَبَانُ وَعِمْرَانُ عَنْ قَتَادَةَ. وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ عَنْ شُعْبَةَ قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُحَجَّ الْبَيْتُ "". وَالأَوَّلُ أَكْثَرُ، سَمِعَ قَتَادَةُ عَبْدَ اللَّهِ وَعَبْدُ اللَّهِ أَبَا سَعِيدٍ.
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இப்ராஹீம், “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்கு வாயாக; என்னையும் என் பிள்ளைகளை யும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக” என்று வேண்டி யதை எண்ணிப்பாருங்கள். “என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களில் பெரும்பாலோரை வழி தவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களில் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களில் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்). (14:35-37) பாடம் : 47 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ், புனித (இறை) ஆலயமாகிய கஅபாவை (மார்க்க அடையாளங்களில்) நிலையானதாக மக்களுக்கு ஆக்கினான். புனித மாதத்தையும் (கஅபாவுக்கு நேர்ந்துவிடப்படும்) தியாகப் பிராணியை யும் (அதன் அடையாள) மாலைகளையும் (அவ்வாறே ஆக்கினான்). வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றை யும் அல்லாஹ் அறிகின்றான் என்பதை யும், எல்லாப் பொருட்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (5:97)
1593. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த (கஅபா) ஆலயத்தில் நிச்சயமாக ஹஜ்ஜும் செய்யப்படும்; உம்ராவும் செய்யப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கஅபாவில் ஹஜ் நடைபெறாத நிலை வராத வரை யுகமுடிவு நாள் வராது” என்று காணப்படுகிறது.

முதல் அறிவிப்பே பெரும்பான்மை (யோரால் அறிவிக்கப்பட்டது) ஆகும்.

அத்தியாயம் : 25
1594. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جِئْتُ إِلَى شَيْبَةَ. وَحَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جَلَسْتُ مَعَ شَيْبَةَ عَلَى الْكُرْسِيِّ فِي الْكَعْبَةِ فَقَالَ لَقَدْ جَلَسَ هَذَا الْمَجْلِسَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلاَّ قَسَمْتُهُ. قُلْتُ إِنَّ صَاحِبَيْكَ لَمْ يَفْعَلاَ. قَالَ هُمَا الْمَرْآنِ أَقْتَدِي بِهِمَا.
பாடம் : 48 கஅபாவின் திரைச்சீலை26
1594. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷைபா பின் உஸ்மான் பின் அபீதல்ஹா (ரலி) அவர்களுடன் கஅபா வில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா (ரலி) அவர்கள், “இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்கள் அமர்ந் திருந்தார்கள். அப்போது ‘இந்த கஅபாவில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் பங்குவைக்காமல் விடுவதில்லை எனத் தீர்மானித்துவிட்டேன்’ என்றார்கள்.

அப்போது நான் அவர்களிடம் ‘தங்களுடைய தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவரும் அவ்வாறு செய்யவில்லையே?’ எனக் கூறினேன். அதற்கு ‘அந்த இருவரும்தான் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்’ என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என்றார்கள்.27

அத்தியாயம் : 25
1595. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ، يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا "".
பாடம் : 49 கஅபா இடிக்கப்படல் “ஒரு படை கஅபாவின் மீது படை யெடுக்கும்; அப்படையைப் பூமி விழுங்கி விடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.28
1595. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வெளிப் பக்கமாக) வளைந்த கால் களை உடைய கறுப்பு நிறத்தவர் ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்து கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பதைப் போன்றிருக்கிறது.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 25
1596. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ "".
பாடம் : 49 கஅபா இடிக்கப்படல் “ஒரு படை கஅபாவின் மீது படை யெடுக்கும்; அப்படையைப் பூமி விழுங்கி விடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.28
1596. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களை உடைய மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 25
1597. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ.
பாடம் : 50 கறுப்புக் கல் (ஹஜருல் அஸ்வத்) தொடர்பாகக் கூறப் படுபவை29
1597. ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ அருகில் வந்து அதை முத்த மிட்டுவிட்டு, “நீ தீங்கோ நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிரா விட்டால், உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள்.30



அத்தியாயம் : 25
1598. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، فَأَغْلَقُوا عَلَيْهِمْ فَلَمَّا فَتَحُوا، كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ، فَلَقِيتُ بِلاَلاً فَسَأَلْتُهُ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ، بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ.
பாடம் : 51 கஅபாவின் வாசலை மூடுவதும் கஅபாவினுள் விரும்பிய எந்தப் பகுதியிலும் தொழலாம் என்ப தும்
1598. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவி னுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது முதல் ஆளாக நானே உள்ளே நுழைந்தேன்.

அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், ‘ஆம்! வலப் பக்க இரு தூண்களுக்கு மத்தியில்’ எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 25
1599. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْكَعْبَةَ مَشَى قِبَلَ الْوَجْهِ حِينَ يَدْخُلُ، وَيَجْعَلُ الْبَابَ قِبَلَ الظَّهْرِ، يَمْشِي حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثِ أَذْرُعٍ، فَيُصَلِّي يَتَوَخَّى الْمَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِلاَلٌ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى فِيهِ، وَلَيْسَ عَلَى أَحَدٍ بَأْسٌ أَنْ يُصَلِّيَ فِي أَىِّ نَوَاحِي الْبَيْتِ شَاءَ.
பாடம் : 52 கஅபாவுக்குள்ளே தொழுவது
1599. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபா வுக்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கும் தமக்கும் இடையே சுமார் மூன்று முழம் இருக்குமாறு நின்று தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் கூறினார்களோ அந்த இடத்தைக் கண்டறிந்து, அதில் தொழ விரும்பியே இவ்வாறு செய்தார்கள். (இருப்பினும்,) கஅபாவுக்குள் விரும்பிய எத்திசையில் தொழுதாலும் அது யார்மீதும் தவறாகாது.

அத்தியாயம் : 25
1600. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَمَعَهُ مَنْ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَقَالَ لَهُ رَجُلٌ أَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَعْبَةَ قَالَ لاَ.
பாடம்: 53 கஅபாவுக்குள் நுழையாமலிருப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் பல முறை ஹஜ் செய்துள்ளார்கள். ஆனால், (ஹஜ்ஜின்போது கஅபாவினுள்) நுழைய மாட்டார்கள்.31
1600. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ரா செய்தபோது தவாஃப் செய்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிட மிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றி ருந்தார்.

அவரிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?” என ஒருவர் கேட்டதற்கு அவர் ‘இல்லை’ எனப் பதிலளித்தார்.32

அத்தியாயம் : 25
1601. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ الْبَيْتَ وَفِيهِ الآلِهَةُ فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَاتَلَهُمُ اللَّهُ أَمَا وَاللَّهِ قَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ "". فَدَخَلَ الْبَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ.
பாடம் : 54 கஅபாவின் மூலைகளில் நின்று தக்பீர் கூறல்
1601. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்துவிட்டார்கள்; பிறகு அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங் களும் இருந்தன. அவற்றையும் வெளி யேற்றினார்கள்.

இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(தைச் செய்த)வர்களை அல்லாஹ் அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இவர்கள் அறிந்தே உள்ளார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு கஅபாவினுள் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறினார்கள்; அங்கு தொழவில்லை.33

அத்தியாயம் : 25
1602. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ فَقَالَ الْمُشْرِكُونَ إِنَّهُ يَقْدَمُ عَلَيْكُمْ، وَقَدْ وَهَنَهُمْ حُمَّى يَثْرِبَ. فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَرْمُلُوا الأَشْوَاطَ الثَّلاَثَةَ، وَأَنْ يَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ، وَلَمْ يَمْنَعْهُ أَنْ يَأْمُرَهُمْ أَنْ يَرْمُلُوا الأَشْوَاطَ كُلَّهَا إِلاَّ الإِبْقَاءُ عَلَيْهِمْ.
பாடம் : 55 (தவாஃபில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது (அர்ரமல்) எவ்வாறு துவங்கியது?
1602. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்கா) வந்தனர். அப்போது (குறைஷி) இணைவைப்பாளர் கள், “யஸ்ரிபின் (மதீனா) காய்ச்சலால் அவர்கள் நலிவடைந்த நிலையில் அவர் (முஹம்மத்) உங்களிடம் வந்திருக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது (நலிவடையவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் (தவாஃபில் முதல்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுமாறும், ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளை யிட்டார்கள். தவாஃபின் எல்லாச் சுற்று களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரண மாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிடவில்லை.

அத்தியாயம் : 25
1603. حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَقْدَمُ مَكَّةَ، إِذَا اسْتَلَمَ الرُّكْنَ الأَسْوَدَ أَوَّلَ مَا يَطُوفُ يَخُبُّ ثَلاَثَةَ أَطْوَافٍ مِنَ السَّبْعِ.
பாடம் : 56 மக்காவிற்கு வந்ததும் முதல் தவாஃபில் ஹஜருல் அஸ் வதை முத்தமிடுவதும் மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கி விரைந்து ஓடுவதும்
1603. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்த மிட்டதையும், ஏழு சுற்றுகளில் (முதல்) மூன்று சுற்றுகளில் (தோள்களைக் குலுக்கி) விரைவாக ஓடியதையும் நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 25
1604. حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَعَى النَّبِيُّ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَشْوَاطٍ وَمَشَى أَرْبَعَةً فِي الْحَجِّ وَالْعُمْرَةِ. تَابَعَهُ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي كَثِيرُ بْنُ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 57 ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுவது
1604. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக ஓடுவார்கள்; (மீதமுள்ள) நான்கு சுற்றுகளில் (சாதாரண மாக) நடந்து செல்வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1605. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ لِلرُّكْنِ أَمَا وَاللَّهِ إِنِّي لأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَلَمَكَ مَا اسْتَلَمْتُكَ. فَاسْتَلَمَهُ، ثُمَّ قَالَ فَمَا لَنَا وَلِلرَّمَلِ إِنَّمَا كُنَّا رَاءَيْنَا بِهِ الْمُشْرِكِينَ، وَقَدْ أَهْلَكَهُمُ اللَّهُ. ثُمَّ قَالَ شَىْءٌ صَنَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ نُحِبُّ أَنْ نَتْرُكَهُ.
பாடம் : 57 ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுவது
1605. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதவாது:

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நிச்சயமாக நான் அறிவேன்; நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால், நிச்சயமாக நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்கள்.

பிறகு “நாம் ஏன் இப்போது தோள் களைக் குலுக்கியவாறு ஓடவேண்டும்? நாம் அன்று செய்தது நமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குக் காட்டுவதற் காகத்தானே! ஆனால், இன்று அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான். (பிறகு ஏன் செய்ய வேண்டும்?)” எனக் கூறிவிட்டு, “எனினும், இது நபி (ஸல்) அவர்கள் செய்த ஒன்று. அதை விட்டுவிட நாம் விரும்ப வில்லை” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1606. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ مَا تَرَكْتُ اسْتِلاَمَ هَذَيْنِ الرُّكْنَيْنِ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ، مُنْذُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُمَا. قُلْتُ لِنَافِعٍ أَكَانَ ابْنُ عُمَرَ يَمْشِي بَيْنَ الرُّكْنَيْنِ قَالَ إِنَّمَا كَانَ يَمْشِي لِيَكُونَ أَيْسَرَ لاِسْتِلاَمِهِ.
பாடம் : 57 ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு விரைந்து ஓடுவது
1606. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததி லிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபி (ரஹ்) அவர்களிடம், “இப்னு உமர் (ரலி) அவர்கள், அவ்விரு மூலைகளுக்கிடையே (மட்டும் சாதாரண மாக) நடந்து செல்வார்களா?” என்று கேட்டேன். “முத்தமிடுவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்து செல்வார்கள்” எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 25
1607. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَيَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ. تَابَعَهُ الدَّرَاوَرْدِيُّ عَنِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ عَنْ عَمِّهِ.
பாடம் : 58 முனை வளைந்த கைத்தடி மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொ(ட்டு முத்தமி)டல்
1607. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1608. وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، أَنَّهُ قَالَ وَمَنْ يَتَّقِي شَيْئًا مِنَ الْبَيْتِ، وَكَانَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الأَرْكَانَ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِنَّهُ لاَ يُسْتَلَمُ هَذَانِ الرُّكْنَانِ. فَقَالَ لَيْسَ شَىْءٌ مِنَ الْبَيْتِ مَهْجُورًا، وَكَانَ ابْنُ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَسْتَلِمُهُنَّ كُلَّهُنَّ.
பாடம் : 59 ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற மூலைகளை முத்தமிடாதிருத்தல்
1608. அபுஷ்ஷஅஸா ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) அவர்கள் (கஅபாவின்) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரு மூலைகளை முத்தமிடக் கூடாது” என்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த ஆலயத்தில் (முத்தமிடத்) தடுக்கப்பட்ட பகுதி எதுவுமில்லை” என்றார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், எல்லா மூலைகளையும் முத்த மிடுவார்கள்.


அத்தியாயம் : 25
1609. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَلِمُ مِنَ الْبَيْتِ إِلاَّ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ.
பாடம் : 59 ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற மூலைகளை முத்தமிடாதிருத்தல்
1609. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்த தில்லை.

அத்தியாயம் : 25
1610. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا وَرْقَاءُ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَبَّلَ الْحَجَرَ وَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ.
பாடம் : 60 ஹஜருல் அஸ்வதை முத்த மிடல்
1610. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘ஹஜருல் அஸ்வத்’ (எனும் கறுப்பு நிறக்) கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்த மிடுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25