1581. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ. وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ أَقْرَبِهِمَا إِلَى مَنْزِلِهِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَدَاءٌ وَكُدًا مَوْضِعَانِ.
பாடம் : 41 மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?
1581. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்கள் ‘கதாஉ’, ‘குதா’ ஆகிய இரண்டின் வழியாக வும் (மக்காவினுள்) நுழைபவராக இருந்தார்கள். தமது இல்லத்திற்கு அருகில் உள்ள ‘கதாஉ’ வழியாகவே பெரும்பாலும் அவர்கள் நுழைவார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

‘கதாஉ’, ‘குதா’ என்பன இரண்டு இடங்களாகும்.21

அத்தியாயம் : 25
1582. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ. فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَ "" أَرِنِي إِزَارِي "". فَشَدَّهُ عَلَيْهِ.
பாடம் : 42 மக்காவின் சிறப்பும் அதன் நிர்மாணமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்று கூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்று வோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதி காஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். “என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக் கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசி களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப் பாருங்கள். அப்போது அல்லாஹ், “(என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச்சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது” என்று கூறினான். இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித் தளங்களை உயர்த்திக் கட்டியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (என்று பிரார்த்தித்தனர்). “எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களில் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்) (2:125-128).
1582. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்துச் சென்றார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (கல் சுமப்பதற்கு வசதியாக), “உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்” எனக் கூறினார்கள்.

(நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களின் கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி இருந்தன. (அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி) “எனது ஆடையை எனக்குக் கொடுங்கள்” என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்தவுடன்) அதை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள்.

அத்தியாயம் : 25
1583. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ لَمَّا بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ. قَالَ "" لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُ "". فَقَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ لَئِنْ كَانَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ، إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ.
பாடம் : 42 மக்காவின் சிறப்பும் அதன் நிர்மாணமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்று கூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்று வோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதி காஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். “என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக் கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசி களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப் பாருங்கள். அப்போது அல்லாஹ், “(என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச்சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது” என்று கூறினான். இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித் தளங்களை உயர்த்திக் கட்டியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (என்று பிரார்த்தித்தனர்). “எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களில் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்) (2:125-128).
1583. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷா! நிச்சயமாக உன் சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை கட்டியபோது இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தைக் குறைத்து விட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்திற்கு நீங்கள் அதை மாற்றலாமல்லவா?” எனக் கேட்டேன். “உன் சமுதாயத்தார் இறைமறுப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லை என்றால், அவ்வாறே நான் செய்திருப்பேன்” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

(நான் இந்த ஹதீஸை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்(களிடம் தெரிவித்தபோது அவர்)கள், “ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்ன வற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ர்’ (எனும் வளைந்த) பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை முத்தமிடாததற்குக் காரணம், இறை இல்லமான கஅபாவானது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப் படாமல் (சிறிது விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1584. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ "" نَعَمْ "". قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ قَالَ "" إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ "". قُلْتُ فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ "" فَعَلَ ذَلِكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ "".
பாடம் : 42 மக்காவின் சிறப்பும் அதன் நிர்மாணமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்று கூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்று வோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதி காஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். “என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக் கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசி களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப் பாருங்கள். அப்போது அல்லாஹ், “(என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச்சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது” என்று கூறினான். இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித் தளங்களை உயர்த்திக் கட்டியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (என்று பிரார்த்தித்தனர்). “எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களில் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்) (2:125-128).
1584. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் (கஅபா வை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, “இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “அப்படியானால், கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “உன் சமூகத்தாருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

நான் “கஅபாவின் வாசலை உயரமாக வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் நாடியவர்களைத் தடுத்துவிடுவதற்காகவும்தான் உன் சமுதாயத்தார் அவ்வாறு செய்தார்கள். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 25
1585. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْلاَ حَدَاثَةُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْبَيْتَ ثُمَّ لَبَنَيْتُهُ عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَإِنَّ قُرَيْشًا اسْتَقْصَرَتْ بِنَاءَهُ ـ وَجَعَلْتُ لَهُ خَلْفًا "". قَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامٌ خَلْفًا يَعْنِي بَابًا.
பாடம் : 42 மக்காவின் சிறப்பும் அதன் நிர்மாணமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்று கூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்று வோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதி காஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். “என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக் கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசி களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப் பாருங்கள். அப்போது அல்லாஹ், “(என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச்சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது” என்று கூறினான். இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித் தளங்களை உயர்த்திக் கட்டியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (என்று பிரார்த்தித்தனர்). “எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களில் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்) (2:125-128).
1585. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் சமுதாயத்தார் (குறைஷி யர்) இறைமறுப்புக்கு நெருங்கிய காலத்த வர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் அதை (அடித்தளத்தைவிட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்ட னர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (‘பின்புற வாசல்’ என்பதைக் குறிக்க வந்துள்ள) ‘கல்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘வாசல்’ எனப் பொருள் செய்யப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 25
1586. حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" يَا عَائِشَةُ لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ لأَمَرْتُ بِالْبَيْتِ فَهُدِمَ، فَأَدْخَلْتُ فِيهِ مَا أُخْرِجَ مِنْهُ وَأَلْزَقْتُهُ بِالأَرْضِ، وَجَعَلْتُ لَهُ بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا، فَبَلَغْتُ بِهِ أَسَاسَ إِبْرَاهِيمَ "". فَذَلِكَ الَّذِي حَمَلَ ابْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ عَلَى هَدْمِهِ. قَالَ يَزِيدُ وَشَهِدْتُ ابْنَ الزُّبَيْرِ حِينَ هَدَمَهُ وَبَنَاهُ وَأَدْخَلَ فِيهِ مِنَ الْحِجْرِ، وَقَدْ رَأَيْتُ أَسَاسَ إِبْرَاهِيمَ حِجَارَةً كَأَسْنِمَةِ الإِبِلِ. قَالَ جَرِيرٌ فَقُلْتُ لَهُ أَيْنَ مَوْضِعُهُ قَالَ أُرِيكَهُ الآنَ. فَدَخَلْتُ مَعَهُ الْحِجْرَ فَأَشَارَ إِلَى مَكَانٍ فَقَالَ هَا هُنَا. قَالَ جَرِيرٌ فَحَزَرْتُ مِنَ الْحِجْرِ سِتَّةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا.
பாடம் : 42 மக்காவின் சிறப்பும் அதன் நிர்மாணமும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்று கூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்று வோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதி காஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். “என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக் கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசி களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப் பாருங்கள். அப்போது அல்லாஹ், “(என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச்சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது” என்று கூறினான். இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித் தளங்களை உயர்த்திக் கட்டியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (என்று பிரார்த்தித்தனர்). “எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களில் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்) (2:125-128).
1586. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! உன் சமுதாயத்தார் அறி யாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையானால், கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்; (இடிக்கப்பட்டதும்) கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பகுதியை அதனுடன் சேர்த்து(க் கட்டி), அத(ன் வாசல்த)னைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒரு வாசல், மேற்கே ஒரு வாசல் என இரு வாசல்களை அதற்கு அமைத்திருப்பேன்; இதன் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்” என்றார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கஅபாவை இடிக்கக் காரணமாக அமைந்தது, இந்தச் செய்திதான். “இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் அதை இடித்துக் கட்டியதையும் ‘ஹிஜ்ர்’ (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் நான் பார்த்தேன்; (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில இருப்பதைக் கண்டேன்” என (அறிவிப்பாளர்) யஸீத் பின் ரூமான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.

ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களிடம், “அந்த அடித்தளம் இப்போது எங்கே உள்ளது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இப்போதே அதை உனக்குக் காட்டுகிறேன்” என்றார். அவருடன் ‘ஹிஜ்ர்’ எனும் வளைந்த பகுதிக்கு நான் சென்றேன். ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ‘இந்த இடம்தான்’ என்றார். நான் அதை அளந்து பார்த்தபோது, ஹிஜ்ர் எனும் பகுதியிலிருந்து சுமார் ஆறு முழங்கள் தள்ளி அது இருந்தது.22

அத்தியாயம் : 25
1587. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ "" إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا "".
பாடம் : 43 புனித ‘ஹரம்’ எல்லையின் சிறப்பு23 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இந்த ஊரைக் கண்ணியப் படுத்திய அதன் இறைவனையே வழிபடு மாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அவனுக்கே முற்றிலும் கீழ்ப் படிந்தவனாக இருக்கும்படியும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் (என்று கூறுவீராக). (27:91) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களை அபயமளிக்கும் புனித பூமியில் (பாதுகாப்பாக) வசிக்கும்படி செய்யவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனி வர்க்கமும் நம்மிடமிருந்து ஆகாரமாகக் கொண்டு வரப்படுகிறது; எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள். (28:57)
1587. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியடைந்த நாளில், “அல்லாஹ் இந்த ஊரைப் புனிதமானதாக்கியுள்ளான். இவ்வூரிலுள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது; இங்கே வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை. (மக்களுக்கு) அறிவிப்பு செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது!” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1588. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ فِي دَارِكَ بِمَكَّةَ. فَقَالَ "" وَهَلْ تَرَكَ عَقِيلٌ مِنْ رِبَاعٍ أَوْ دُورٍ "". وَكَانَ عَقِيلٌ وَرِثَ أَبَا طَالِبٍ هُوَ وَطَالِبٌ وَلَمْ يَرِثْهُ جَعْفَرٌ وَلاَ عَلِيٌّ ـ رضى الله عنهما ـ شَيْئًا لأَنَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ، وَكَانَ عَقِيلٌ وَطَالِبٌ كَافِرَيْنِ، فَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ لاَ يَرِثُ الْمُؤْمِنُ الْكَافِرَ. قَالَ ابْنُ شِهَابٍ وَكَانُوا يَتَأَوَّلُونَ قَوْلَ اللَّهِ تَعَالَى {إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ} الآيَةَ.
பாடம் : 44 மக்காவிலுள்ள வீடுகள் வாரிசு ரிமைப்படி உடைமையாக்கப் படுவதும் அவற்றை விற்பதும் வாங்குவதும்24 (மற்ற இடங்களைவிடக்) குறிப்பாக மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள். ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக யார் (ஏக இறையை) மறுத்து, இறைவழியிலிருந்தும் உள்ளூர்வாசி மற்றும் வெளியூர்வாசி ஆகிய அனைத்து மக்களுக்கும் சமமாக நாம் ஆக்கியுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தும் (மக்களைத்) தடுக்கிறார்களோ அவர்களையும், யார் அதில் (மஸ்ஜிதுல் ஹராமில்) அநீதியிழைத்து எல்லை மீறி நடக்க விரும்புகிறார்களோ அவர்களையும் வதைக்கும் வேதனையை நாம் சுவைக்கச் செய்வோம். (22:25) இந்த வசனத்தின் மூலத்தில் உள்ள ‘அல்ஆகிஃப்’ என்பதற்கு, ‘உள்ளூரிலேயே வசிப்பவர்’ என்பது பொருள். ‘அல்பாதீ’ என்பதற்கு வெளியிலிருந்து வருபவர் என்பது பொருள்.
1588. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், (மக்கா பயணத்தின்போது), “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “(அபூதாலிபின் புதல்வர்) அகீல், தங்கும் விடுதிகள், அல்லது வீடுகள் எதையேனும் (நமக்கு) விட்டுவைத்துள் ளாரா, என்ன?” எனக் கேட்டார்கள்.

அபூதாலிபின் சொத்துகளுக்கு (அவருடைய மக்களில்) அகீலும் தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூதாலிப் இறந்தபோது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந் தனர். “இறைமறுப்பாளருக்கு இறை நம்பிக்கையாளர் வாரிசாகமாட்டார்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இறைநம்பிக்கை கொண்டு, (மார்க்கத்துக்காகப்) புலம்பெயர்ந்து சென்று, தம் செல்வங்களாலும் உயிர்களாலும் இறைவழியில் போரிட்டவர்களும், (அவர்களுக்கு) அடைக்கலம் அளித்து உதவி புரிந்தவர்களும்தான் சிலருக்குச் சிலர் உற்ற நண்பர்கள் ஆவர்” (8:72) என அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த வசனத்திற்கு, இறைநம்பிக்கையாளர்களே சிலருக்குச் சிலர் வாரிசாவார்கள் என (முற்கால) அறிஞர்கள் விளக்கம் அளித்துவந்தனர்.

அத்தியாயம் : 25
1589. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَرَادَ قُدُومَ مَكَّةَ "" مَنْزِلُنَا غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ "".
பாடம் : 45 நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம்
1589. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜில் ‘மினா’விலிருந்து) மக்காவிற்கு வருகை தர விரும்பியபோது, “நாளை நாம் தங்கப்போகும் இடம் இறைவன் நாடினால், ‘பனூ கினானா’ குலத்தாரின் (அல்முஹஸ்ஸப்) பள்ளத் தாக்கு ஆகும். அங்குதான் (குறைஷியர்), ‘இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தனர்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 25
1590. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْغَدِ يَوْمَ النَّحْرِ وَهُوَ بِمِنًى "" نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ "". يَعْنِي ذَلِكَ الْمُحَصَّبَ، وَذَلِكَ أَنَّ قُرَيْشًا وَكِنَانَةَ تَحَالَفَتْ عَلَى بَنِي هَاشِمٍ وَبَنِي عَبْدِ الْمُطَّلِبِ، أَوْ بَنِي الْمُطَّلِبِ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ، وَلاَ يُبَايِعُوهُمْ حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمُ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَقَالَ سَلاَمَةُ عَنْ عُقَيْلٍ وَيَحْيَى بْنُ الضَّحَّاكِ عَنِ الأَوْزَاعِيِّ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ وَقَالاَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ بَنِي الْمُطَّلِبِ أَشْبَهُ.
பாடம் : 45 நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம்
1590. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை ‘மினா’வில் இருந்தபோது, “நாம் நாளை பனூ கினானா பள்ளத்தாக்கை -அதாவது அல்முஹஸ்ஸபை- அடை வோம். அங்குதான் (குறைஷியர்) ‘இறை மறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தார்கள்” என்றார்கள்.

“பனூ ஹாஷிம் குலத்தாருக்கும் பனூ அப்தில் முத்தலிப் -அல்லது பனுல் முத்தலிப்- குலத்தாருக்கும் எதிராக, ‘நபி (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக் காத வரை இவர்களோடு திருமண ஒப்பந் தமோ வியாபாரக் கொடுக்கல்வாங்கலோ செய்யமாட்டோம்’ என்று குறைஷியரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சலாமா (ரஹ்), யஹ்யா பின் அள்ளஹ்ஹாக் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், ‘பனூ ஹாஷிம், பனுல் முத்தலிப் என (ஐயமின்றி) வந்துள் ளது.

‘பனுல் முத்தலிப்’ என்பதே பொருத்த மானது என்று அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நானும்) கூறுகிறேன்.

அத்தியாயம் : 25
1591. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ "".
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இப்ராஹீம், “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்கு வாயாக; என்னையும் என் பிள்ளைகளை யும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக” என்று வேண்டி யதை எண்ணிப்பாருங்கள். “என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களில் பெரும்பாலோரை வழி தவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களில் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களில் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்). (14:35-37) பாடம் : 47 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ், புனித (இறை) ஆலயமாகிய கஅபாவை (மார்க்க அடையாளங்களில்) நிலையானதாக மக்களுக்கு ஆக்கினான். புனித மாதத்தையும் (கஅபாவுக்கு நேர்ந்துவிடப்படும்) தியாகப் பிராணியை யும் (அதன் அடையாள) மாலைகளையும் (அவ்வாறே ஆக்கினான்). வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றை யும் அல்லாஹ் அறிகின்றான் என்பதை யும், எல்லாப் பொருட்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (5:97)
1591. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, சிறுத்த கால்களை உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.25

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 25
1592. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ ـ هُوَ ابْنُ الْمُبَارَكِ ـ قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ "".
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இப்ராஹீம், “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்கு வாயாக; என்னையும் என் பிள்ளைகளை யும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக” என்று வேண்டி யதை எண்ணிப்பாருங்கள். “என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களில் பெரும்பாலோரை வழி தவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களில் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களில் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்). (14:35-37) பாடம் : 47 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ், புனித (இறை) ஆலயமாகிய கஅபாவை (மார்க்க அடையாளங்களில்) நிலையானதாக மக்களுக்கு ஆக்கினான். புனித மாதத்தையும் (கஅபாவுக்கு நேர்ந்துவிடப்படும்) தியாகப் பிராணியை யும் (அதன் அடையாள) மாலைகளையும் (அவ்வாறே ஆக்கினான்). வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றை யும் அல்லாஹ் அறிகின்றான் என்பதை யும், எல்லாப் பொருட்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (5:97)
1592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் நோன்பு கடமையாக்கப்படு வதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக் குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்பு கிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்பு கிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1593. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الْحَجَّاجِ بْنِ حَجَّاجٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ "". تَابَعَهُ أَبَانُ وَعِمْرَانُ عَنْ قَتَادَةَ. وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ عَنْ شُعْبَةَ قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُحَجَّ الْبَيْتُ "". وَالأَوَّلُ أَكْثَرُ، سَمِعَ قَتَادَةُ عَبْدَ اللَّهِ وَعَبْدُ اللَّهِ أَبَا سَعِيدٍ.
பாடம் : 46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இப்ராஹீம், “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்கு வாயாக; என்னையும் என் பிள்ளைகளை யும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக” என்று வேண்டி யதை எண்ணிப்பாருங்கள். “என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களில் பெரும்பாலோரை வழி தவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்” (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களில் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களில் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம்) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்). (14:35-37) பாடம் : 47 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ், புனித (இறை) ஆலயமாகிய கஅபாவை (மார்க்க அடையாளங்களில்) நிலையானதாக மக்களுக்கு ஆக்கினான். புனித மாதத்தையும் (கஅபாவுக்கு நேர்ந்துவிடப்படும்) தியாகப் பிராணியை யும் (அதன் அடையாள) மாலைகளையும் (அவ்வாறே ஆக்கினான்). வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றை யும் அல்லாஹ் அறிகின்றான் என்பதை யும், எல்லாப் பொருட்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். (5:97)
1593. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இந்த (கஅபா) ஆலயத்தில் நிச்சயமாக ஹஜ்ஜும் செய்யப்படும்; உம்ராவும் செய்யப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கஅபாவில் ஹஜ் நடைபெறாத நிலை வராத வரை யுகமுடிவு நாள் வராது” என்று காணப்படுகிறது.

முதல் அறிவிப்பே பெரும்பான்மை (யோரால் அறிவிக்கப்பட்டது) ஆகும்.

அத்தியாயம் : 25
1594. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جِئْتُ إِلَى شَيْبَةَ. وَحَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جَلَسْتُ مَعَ شَيْبَةَ عَلَى الْكُرْسِيِّ فِي الْكَعْبَةِ فَقَالَ لَقَدْ جَلَسَ هَذَا الْمَجْلِسَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلاَّ قَسَمْتُهُ. قُلْتُ إِنَّ صَاحِبَيْكَ لَمْ يَفْعَلاَ. قَالَ هُمَا الْمَرْآنِ أَقْتَدِي بِهِمَا.
பாடம் : 48 கஅபாவின் திரைச்சீலை26
1594. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷைபா பின் உஸ்மான் பின் அபீதல்ஹா (ரலி) அவர்களுடன் கஅபா வில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா (ரலி) அவர்கள், “இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்கள் அமர்ந் திருந்தார்கள். அப்போது ‘இந்த கஅபாவில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் பங்குவைக்காமல் விடுவதில்லை எனத் தீர்மானித்துவிட்டேன்’ என்றார்கள்.

அப்போது நான் அவர்களிடம் ‘தங்களுடைய தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவரும் அவ்வாறு செய்யவில்லையே?’ எனக் கூறினேன். அதற்கு ‘அந்த இருவரும்தான் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்’ என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என்றார்கள்.27

அத்தியாயம் : 25
1595. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الأَخْنَسِ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ، يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا "".
பாடம் : 49 கஅபா இடிக்கப்படல் “ஒரு படை கஅபாவின் மீது படை யெடுக்கும்; அப்படையைப் பூமி விழுங்கி விடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.28
1595. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வெளிப் பக்கமாக) வளைந்த கால் களை உடைய கறுப்பு நிறத்தவர் ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்து கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பதைப் போன்றிருக்கிறது.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 25
1596. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ "".
பாடம் : 49 கஅபா இடிக்கப்படல் “ஒரு படை கஅபாவின் மீது படை யெடுக்கும்; அப்படையைப் பூமி விழுங்கி விடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.28
1596. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களை உடைய மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 25
1597. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ.
பாடம் : 50 கறுப்புக் கல் (ஹஜருல் அஸ்வத்) தொடர்பாகக் கூறப் படுபவை29
1597. ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்’ அருகில் வந்து அதை முத்த மிட்டுவிட்டு, “நீ தீங்கோ நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிரா விட்டால், உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள்.30

அத்தியாயம் : 25
1598. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، فَأَغْلَقُوا عَلَيْهِمْ فَلَمَّا فَتَحُوا، كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ، فَلَقِيتُ بِلاَلاً فَسَأَلْتُهُ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ، بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ.
பாடம் : 51 கஅபாவின் வாசலை மூடுவதும் கஅபாவினுள் விரும்பிய எந்தப் பகுதியிலும் தொழலாம் என்ப தும்
1598. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவி னுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது முதல் ஆளாக நானே உள்ளே நுழைந்தேன்.

அப்போது பிலால் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா?” என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், ‘ஆம்! வலப் பக்க இரு தூண்களுக்கு மத்தியில்’ எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 25
1599. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْكَعْبَةَ مَشَى قِبَلَ الْوَجْهِ حِينَ يَدْخُلُ، وَيَجْعَلُ الْبَابَ قِبَلَ الظَّهْرِ، يَمْشِي حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثِ أَذْرُعٍ، فَيُصَلِّي يَتَوَخَّى الْمَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِلاَلٌ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى فِيهِ، وَلَيْسَ عَلَى أَحَدٍ بَأْسٌ أَنْ يُصَلِّيَ فِي أَىِّ نَوَاحِي الْبَيْتِ شَاءَ.
பாடம் : 52 கஅபாவுக்குள்ளே தொழுவது
1599. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபா வுக்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கும் தமக்கும் இடையே சுமார் மூன்று முழம் இருக்குமாறு நின்று தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் கூறினார்களோ அந்த இடத்தைக் கண்டறிந்து, அதில் தொழ விரும்பியே இவ்வாறு செய்தார்கள். (இருப்பினும்,) கஅபாவுக்குள் விரும்பிய எத்திசையில் தொழுதாலும் அது யார்மீதும் தவறாகாது.

அத்தியாயம் : 25
1600. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَمَعَهُ مَنْ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَقَالَ لَهُ رَجُلٌ أَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَعْبَةَ قَالَ لاَ.
பாடம்: 53 கஅபாவுக்குள் நுழையாமலிருப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் பல முறை ஹஜ் செய்துள்ளார்கள். ஆனால், (ஹஜ்ஜின்போது கஅபாவினுள்) நுழைய மாட்டார்கள்.31
1600. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ரா செய்தபோது தவாஃப் செய்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிட மிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றி ருந்தார்.

அவரிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?” என ஒருவர் கேட்டதற்கு அவர் ‘இல்லை’ எனப் பதிலளித்தார்.32

அத்தியாயம் : 25