1533. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ، وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ، وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ يُصَلِّي فِي مَسْجِدِ الشَّجَرَةِ، وَإِذَا رَجَعَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي، وَبَاتَ حَتَّى يُصْبِحَ.
பாடம் : 15
‘அஷ்ஷஜரா’ எனும் பாதை வழியாக நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்குச்) சென்றது
1533. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஷ்ஷஜரா’ எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது ‘அல்முஅர்ரஸ்’ எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்குச் செல்லும்போது ‘அஷ்ஷஜரா’விலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது ‘பத்னுல்வாதி’யிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுது விட்டு, விடியும்வரை அங்கேயே தங்குவார்கள்.4
அத்தியாயம் : 25

1534. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، وَبِشْرُ بْنُ بَكْرٍ التِّنِّيسِيُّ، قَالاَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي عِكْرِمَةُ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ إِنَّهُ سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِوَادِي الْعَقِيقِ يَقُولُ "" أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي فَقَالَ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةً فِي حَجَّةٍ "".
பாடம் : 16
‘அல்அகீக்’ (எனும் பள்ளத் தாக்கு) வளமிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது
1534. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘அல்அகீக்’ பள்ளத்தாக்கில் இருந்தபோது, “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் இன்றிரவும் என்னிடம் வந்தார். அவர், ‘இந்த வளமிக்க பள்ளத்தாக்கில் தொழுங் கள்; ஹஜ்ஜுடன் உம்ரா என்று கூறுங்கள்’ என்றார்” எனக் கூறியதை நான் கேட்டேன்.5
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1535. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رُئِيَ وَهُوَ فِي مُعَرَّسٍ بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي قِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ. وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ، يَتَوَخَّى بِالْمُنَاخِ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُنِيخُ، يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ أَسْفَلُ مِنَ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي، بَيْنَهُمْ وَبَيْنَ الطَّرِيقِ وَسَطٌ مِنْ ذَلِكَ.
பாடம் : 16
‘அல்அகீக்’ (எனும் பள்ளத் தாக்கு) வளமிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது
1535. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்னுல்வாதியில் உள்ள துல்ஹுலை ஃபாவில் (இரவின் இறுதியில்) ஓய்வெடுக் கும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) “நீங்கள் வளமிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்கள்” என்று (வானவரால்) கூறப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த இடத்தைத் தேர்வு செய்ததைப் போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் அங்கேயே தமது ஒட்டகத்தைப் படுக்கவைப்பார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சாலிமும் அவ்வாறே செய்வார்கள்.
முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல்வாதியில் உள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் இருந்த சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற் கும் நடுவில் உள்ளது என்று மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1536. قَالَ أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى، أَخْبَرَهُ أَنَّ يَعْلَى قَالَ لِعُمَرَ ـ رضى الله عنه ـ أَرِنِي النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ يُوحَى إِلَيْهِ قَالَ فَبَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ، وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ، وَهْوَ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَسَكَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاعَةً فَجَاءَهُ الْوَحْىُ، فَأَشَارَ عُمَرُ ـ رضى الله عنه ـ إِلَى يَعْلَى، فَجَاءَ يَعْلَى، وَعَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُحْمَرُّ الْوَجْهِ، وَهُوَ يَغِطُّ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" أَيْنَ الَّذِي سَأَلَ عَنِ الْعُمْرَةِ "" فَأُتِيَ بِرَجُلٍ فَقَالَ "" اغْسِلِ الطِّيبَ الَّذِي بِكَ ثَلاَثَ مَرَّاتٍ، وَانْزِعْ عَنْكَ الْجُبَّةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجَّتِكَ "". قُلْتُ لِعَطَاءٍ أَرَادَ الإِنْقَاءَ حِينَ أَمَرَهُ أَنْ يَغْسِلَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَ نَعَمْ.
பாடம் : 17
(இஹ்ராம் கட்டும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) குங்குமம் கலந்த நறுமணப் பொருள் இருந்தால் மூன்று முறை கழுவுதல்
1536. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வரும்போது அவர்களை எனக்குக் காட்டுங்கள்” என்று சொல்லியிருந்தேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ‘ஜிஇர்ரானா’ எனுமிடத்தில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) வந்தது. உமர் (ரலி) அவர்கள் என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத்துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட் டார். அவரிடம் “உம் மீதுள்ள நறு மணத்தை மூன்று முறை கழுவுவீராக! (தைக்கப்பட்ட) உமது நீளங்கியைக் களைவீராக! உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள்.
“மும்முறை கழுவச் சொன்னது நன்கு தூய்மைப்படுத்தவா?” என்று (அறிவிப்பாள ரான) அதாஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார்.

1537. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَدَّهِنُ بِالزَّيْتِ. فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ قَالَ مَا تَصْنَعُ بِقَوْلِهِ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ.
பாடம் : 18
இஹ்ராம் கட்டும்போது (உடலில்) நறுமணம் பூசுவதும், இஹ்ராம் கட்ட நாடும்போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவு வதும் தலை வாருவதும்
இஹ்ராம் கட்டியவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட் கொள்ளும் ஆலிவ் எண்ணெய், நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்த லாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
மோதிரம் அணியலாம், பணப் பையுள்ள இடுப்புவாரை அணியலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், இஹ்ராம் கட்டிய நிலையில் தமது வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், தமது ஒட்டகச் சிவிகையை இழுத்துச்செல்வோர் (இஹ்ராம் கட்டிய நிலையில்) சிறிய கால்சட்டை அணிவதைக் குற்றமாகக் கருதியதில்லை.6
1537. 1538 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் நான் கூறினேன்.
அப்போது, “இப்னு உமரின் கூற்றை வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது, தமது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணத்தின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1539. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ حِينَ يُحْرِمُ، وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ.
பாடம் : 18
இஹ்ராம் கட்டும்போது (உடலில்) நறுமணம் பூசுவதும், இஹ்ராம் கட்ட நாடும்போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவு வதும் தலை வாருவதும்
இஹ்ராம் கட்டியவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட் கொள்ளும் ஆலிவ் எண்ணெய், நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்த லாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
மோதிரம் அணியலாம், பணப் பையுள்ள இடுப்புவாரை அணியலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், இஹ்ராம் கட்டிய நிலையில் தமது வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், தமது ஒட்டகச் சிவிகையை இழுத்துச்செல்வோர் (இஹ்ராம் கட்டிய நிலையில்) சிறிய கால்சட்டை அணிவதைக் குற்றமாகக் கருதியதில்லை.6
1539. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டும் நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்காக நான் நறுமணம் பூசினேன். அவ்வாறே, இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வருவதற்கு முன்னாலும் நறுமணம் பூசுவேன்.

1540. حَدَّثَنَا أَصْبَغُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا.
பாடம் : 19
(தலைமுடியில்) களிம்பு தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டி ‘தல்பியா’ சொல்வது7
1540. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமுடியில் களிம்பு தடவி படிய வைத்திருந்த நிலையில் ‘தல்பியா’ கூறியதைச் செவியுற்றேன்.

1541. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ عِنْدِ الْمَسْجِدِ يَعْنِي مَسْجِدَ ذِي الْحُلَيْفَةِ.
பாடம் : 20
‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாச லில் இஹ்ராம் கட்டுவது
1541. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசலைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் கட்டியதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1541. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசலைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் கட்டியதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
1542. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَلْبَسُ الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ، إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلاَ تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ "".
பாடம் : 21
இஹ்ராம் கட்டியவர் அணியக் கூடாத ஆடைகள்
1542. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடைகளை அணிய லாம்?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முழு நீளங்கிகள், தலைப்பாகை கள், முழுக்கால் சட்டைகள், முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் ஆகியவற்றை அவர் அணியக் கூடாது.
காலணி கிடைக்காதவர், தம் காலுறை யின் (மேலிருந்து) கணுக்கால்களுக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்துகொள்ளலாம். குங்குமப் பூச் சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்கள்” என்றார்கள்.8

1543. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ ـ رضى الله عنه ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى. قَالَ فَكِلاَهُمَا قَالَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي، حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
பாடம் : 22
ஹஜ்ஜின்போது பயணம் செய் வதும் தமது வாகனத்தில் பிறரை ஏற்றிச்செல்வதும்
1543. 1544 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் வாகனத்தின்பின் அமர்ந்து ‘அரஃபா’விலிருந்து ‘முஸ்தலிஃபா’வரை சென்றார்கள். பிறகு ஃபள்ல் (ரலி) அவர்கள் ‘முஸ்தலிஃபா’விலிருந்து ‘மினா’வரை சென்றார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாவை நிறுத்தவில்லை” என இவ்விருவருமே கூறினார்கள்.

1545. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ، بَعْدَ مَا تَرَجَّلَ وَادَّهَنَ وَلَبِسَ إِزَارَهُ وَرِدَاءَهُ، هُوَ وَأَصْحَابُهُ، فَلَمْ يَنْهَ عَنْ شَىْءٍ مِنَ الأَرْدِيَةِ وَالأُزْرِ تُلْبَسُ إِلاَّ الْمُزَعْفَرَةَ الَّتِي تَرْدَعُ عَلَى الْجِلْدِ، فَأَصْبَحَ بِذِي الْحُلَيْفَةِ، رَكِبَ رَاحِلَتَهُ حَتَّى اسْتَوَى عَلَى الْبَيْدَاءِ، أَهَلَّ هُوَ وَأَصْحَابُهُ وَقَلَّدَ بَدَنَتَهُ، وَذَلِكَ لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، فَقَدِمَ مَكَّةَ لأَرْبَعِ لَيَالٍ خَلَوْنَ مِنْ ذِي الْحَجَّةِ، فَطَافَ بِالْبَيْتِ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَمْ يَحِلَّ مِنْ أَجْلِ بُدْنِهِ لأَنَّهُ قَلَّدَهَا، ثُمَّ نَزَلَ بِأَعْلَى مَكَّةَ عِنْدَ الْحَجُونِ، وَهْوَ مُهِلٌّ بِالْحَجِّ، وَلَمْ يَقْرَبِ الْكَعْبَةَ بَعْدَ طَوَافِهِ بِهَا حَتَّى رَجَعَ مِنْ عَرَفَةَ، وَأَمَرَ أَصْحَابَهُ أَنْ يَطَّوَّفُوا بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ يُقَصِّرُوا مِنْ رُءُوسِهِمْ ثُمَّ يَحِلُّوا، وَذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ مَعَهُ بَدَنَةٌ قَلَّدَهَا، وَمَنْ كَانَتْ مَعَهُ امْرَأَتُهُ فَهِيَ لَهُ حَلاَلٌ، وَالطِّيبُ وَالثِّيَابُ.
பாடம் : 23
இஹ்ராம் கட்டியவர் மேல் துண்டு, கீழாடை போன்ற துணிகளை அணிதல்
ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ரா முடன் இருந்தபோது, மஞ்சள் நிற ஆடை அணிந்துகொண்டார்கள்.
“(இஹ்ராம் கட்டிய) பெண் (துணியால்) வாயை மூடவோ, (முகத்திரையால்) முகத்தை மறைக்கவோ வேண்டாம். குங்குமப் பூச்சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணியவும் வேண்டாம்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். “நகைகள், கறுப்பாடை, இளஞ்சிவப் பாடை, காலுறை ஆகியவற்றை பெண்கள் அணிவதில் தவறில்லை” என்றும் அவர்கள் சொன்னார்கள்.
“குசும்பச் செடியின் சிவப்புச் சாயத்தை நான் வாசனைப் பொருளாகக் கருத வில்லை” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இஹ்ராம் கட்டியவர் (இஹ்ராமுடைய) ஆடையை மாற்றி அணிவதில் தவறில்லை என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
1545. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், எண்ணெய் தடவித் தலைசீவி கீழாடையும் மேல் துண்டும் அணிந்துகொண்டு, தம் தோழர் களோடு மதீனாவிலிருந்து (விடைபெறும் ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல்மீது ஒட்டிக்கொள்ளும் அளவுக்குக் குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி மேல்துண்டு, கீழாடை போன்றவற்றை அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. ‘துல்ஹுலைஃபா’விற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள்.
பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறியமர்ந்து ‘பைதா’ எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது (குர்பானி) ஒட்டகத்தில் அடையாள மாலையைத் தொங்கவிட்டார் கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாட்கள் எஞ்சியிருக்கும்போது நடந்தது.
துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்ற டைந்தபோது, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்திற்கு அடையாள மாலை அணிவித்து தம்மோடு கொண்டுவந்ததனால், (தலைமுடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய நிலையில் மக்காவின் மேற்பகுதியில் ஹஜூன் எனும் மலைக்கு அருகில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்த அவர்கள், அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவை நெருங்கினார்கள்.
தம் தோழர்கள், கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருமாறும், ஸஃபா, மர்வா இடையில் ஓடுமாறும் பிறகு தலைமுடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். இது, தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டுவராதவர்களுக்குச் சொல்லப் பட்டதாகும். அவர்களில் துணைவியோடு வந்தவர்கள் தாம்பத்திய உறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் ஆகியவை அப்போது அனுமதிக்கப்பட்ட வையாகும்.

1546. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ بِذِي الْحُلَيْفَةِ، فَلَمَّا رَكِبَ رَاحِلَتَهُ وَاسْتَوَتْ بِهِ أَهَلَّ.
பாடம் : 24
விடியும்வரை ‘துல்ஹுலைஃபா’ வில் தங்குவது
இதுபற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1546. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரத்அத்கள் (கஸ்ராகத்) தொழுதுவிட்டு அங்கேயே விடியும்வரை தங்கினார்கள். பிறகு ஊர்தி ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, ஒட்டகம் நிலைக்கு வந்தபோது இஹ்ராம் கட்டி னார்கள்.

1547. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، قَالَ وَأَحْسِبُهُ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ.
பாடம் : 24
விடியும்வரை ‘துல்ஹுலைஃபா’ வில் தங்குவது
இதுபற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1547. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். பிறகு ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் (கஸ்ராக) அஸ்ர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும்வரை தங்கினார்கள் என்றே எண்ணுகிறேன்.9

1548. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَسَمِعْتُهُمْ يَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا.
பாடம் : 25
‘தல்பியா’வை உரத்த குரலில் கூறல்
1548. அனஸ் (ரலி) கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’ வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற் கான ‘தல்பியா’வை உரத்த குரலில் கூறியதை நான் கேட்டேன்.

1549. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ تَلْبِيَةَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ.
பாடம் : 26
‘தல்பியா’ கூறல்10
1549. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க ல(க்)க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க லா ஷரீக்க லக்” என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ‘தல்பியா’ ஆகும்.
(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உனக்கு இணை துணை கிடையாது. எல்லாப் புகழும் அருட் கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் யாருமில்லை).

1550. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنِّي لأَعْلَمُ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ. تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ. وَقَالَ شُعْبَةُ أَخْبَرَنَا سُلَيْمَانُ، سَمِعْتُ خَيْثَمَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ.
பாடம் : 26
‘தல்பியா’ கூறல்10
1550. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ‘தல்பியா’ கூறிவந்தார்கள் என்பதை நிச்சயமாக நான் அறிவேன்:
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்” என்று கூறுவார்கள்.
(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். எல்லாப் புகழும் அருட்கொடையும் உனக்கே உரியன.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1551. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ مَعَهُ بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ، ثُمَّ رَكِبَ حَتَّى اسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ، حَمِدَ اللَّهَ وَسَبَّحَ وَكَبَّرَ، ثُمَّ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ، وَأَهَلَّ النَّاسُ بِهِمَا، فَلَمَّا قَدِمْنَا أَمَرَ النَّاسَ فَحَلُّوا، حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ أَهَلُّوا بِالْحَجِّ قَالَ وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا، وَذَبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ بَعْضُهُمْ هَذَا عَنْ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ أَنَسٍ.
பாடம் : 27
‘தல்பியா’ சொல்வதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலேயே அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர் கூறுவது
1551. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஹஜ் பயணத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். பிறகு விடியும்வரை அங்கேயே இரவில் தங்கினார்கள். பிறகு வாகனத்தின் மீதமர்ந்து ‘பைதா’ எனுமிடத் தில் வாகனம் நிலைக்கு வந்தபோது, ‘அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் தூயவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூறினார்கள்.
பிறகு ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற் காகவும் இஹ்ராம் கட்டி, தல்பியா கூறினார்கள். மக்களும் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்குமே இஹ்ராம் கட்டி தல்பியா கூறினர். நாங்கள் (மக்கா) வந்(து உம்ராவை முடித்)தபோது இஹ்ராமி லிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் அவ்வாறே செய்தனர்; துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கடடினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (குர்பானி) ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளன்று இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.

1552. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً.
பாடம் : 28
வாகனம் நிலைக்கு வரும்போது ‘தல்பியா’ கூறல்
1552. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகம் நிலைக்கு வந்தபோது ‘தல்பியா’ கூறினார்கள்.