ஹஜ்
1513. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ قَالَ "" نَعَمْ "". وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 1
ஹஜ் கடமையும் அதன் சிறப்பும்
அல்லாஹ் கூறுகின்றான்:
மக்களில் அங்கு சென்றுவரச் சக்திபெற்றோர், அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ‘ஹஜ்’ செய்வது கடமையாகும். யார் மறுத்தாரோ (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம தேவையற்றவன். (3:97)
1513. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குப் பின்னால் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பிவிடலானார்கள்.
பிறகு அப்பெண் நபி (ஸல்) அவர்களி டம், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதியாக்கியுள்ள ஹஜ் கடமை, வயது முதிர்ந்தவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர இயலாது. எனவே, நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்ய லாமா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்!’ என்றார்கள். இது ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நடந்தது.
அத்தியாயம் : 25

1514. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْكَبُ رَاحِلَتَهُ بِذِي الْحُلَيْفَةِ ثُمَّ يُهِلُّ حَتَّى تَسْتَوِيَ بِهِ قَائِمَةً.
பாடம் : 2
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகுதொலைவி லுள்ள ஒவ்வொரு வழிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்” (22:27, 28).
(இந்த வசனத்தின் மூலத்தில் உள்ள) ‘ஃபஜ்’ எனும் சொல்லுக்கு ‘விசாலமான பாதை’ என்பது பொருளாகும்.
1514. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’வில் தமது ஒட்டக ஊர்தியில் ஏறினார்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் சரியாக நின்றபோது ‘இஹ்ராம்’ கட்டி ‘தல்பியா’ கூறியதை நான் பார்த்தேன்.

1515. حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، سَمِعَ عَطَاءً، يُحَدِّثُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ إِهْلاَلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ ذِي الْحُلَيْفَةِ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ. رَوَاهُ أَنَسٌ وَابْنُ عَبَّاسٍ رضى الله عنهم.
பாடம் : 2
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகுதொலைவி லுள்ள ஒவ்வொரு வழிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்” (22:27, 28).
(இந்த வசனத்தின் மூலத்தில் உள்ள) ‘ஃபஜ்’ எனும் சொல்லுக்கு ‘விசாலமான பாதை’ என்பது பொருளாகும்.
1515. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘துல்ஹுலைஃபா’வில் தமது ஒட்டக ஊர்தி சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி ‘தல்பியா’ கூறுவார்கள்.
இதைப் போன்று அனஸ் (ரலி, இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்துள் ளனர்.

1516. وَقَالَ أَبَانُ حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ، فَأَعْمَرَهَا مِنَ التَّنْعِيمِ، وَحَمَلَهَا عَلَى قَتَبٍ. وَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ شُدُّوا الرِّحَالَ فِي الْحَجِّ، فَإِنَّهُ أَحَدُ الْجِهَادَيْنِ.
பாடம் : 3
ஒட்டகச் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்வது
1516. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, ‘தன்யீம்’ எனுமிடத்திலிருந்து இஹ்ராம் கட்டி, உம்ரா செய்யுமாறு கட்டளை யிட்டார்கள். அவர் ஒட்டகச் சேணத்தி(ன் பிற்பகுதியி)ல் என்னை அமரவைத்தார்.
“ஹஜ்ஜுக்காக ஒட்டகச் சேணங்களைக் கட்டுங்கள். ஏனெனில், அது (ஹஜ்) இரண்டு அறப்போர்களில் ஒன்றாகும்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

1517. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، قَالَ حَجَّ أَنَسٌ عَلَى رَحْلٍ، وَلَمْ يَكُنْ شَحِيحًا، وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَجَّ عَلَى رَحْلٍ وَكَانَتْ زَامِلَتَهُ.
பாடம் : 3
ஒட்டகச் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்வது
1517. ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். அவர்கள் கஞ்சராக இருக்க வில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக் குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாக இருந்ததாக வும் அனஸ் (ரலி) அவர்கள் (எங்களுக்கு) அறிவித்தார்கள்.

1518. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا أَيْمَنُ بْنُ نَابِلٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، اعْتَمَرْتُمْ وَلَمْ أَعْتَمِرْ. فَقَالَ "" يَا عَبْدَ الرَّحْمَنِ اذْهَبْ بِأُخْتِكَ فَأَعْمِرْهَا مِنَ التَّنْعِيمِ "". فَأَحْقَبَهَا عَلَى نَاقَةٍ فَاعْتَمَرَتْ.
பாடம் : 3
ஒட்டகச் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்வது
1518. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்துவிட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை” எனக் கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று, தன்யீமிலிருந்து அவரை உம்ரா செய்யவைத்து வாரும்” என்றார்கள்.
அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் பின்பகுதியில் அமர்த்தினார்; நான் உம்ரா செய்தேன்.

1519. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ "" إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ "". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ "" جِهَادٌ فِي سَبِيلِ اللَّهِ "". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ "" حَجٌّ مَبْرُورٌ "".
பாடம் : 4
பாவச் செயல் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு2
1519. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் “(நற்)செயல் களில் சிறந்தது எது?” எனக் கேட்கப் பட்டது. “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது” என்றார்கள். “அதற்குப் பிறகு எது (சிறந்தது)?” எனக் கேட்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்” என்றார்கள்.
“அதற்குப் பிறகு எது (சிறந்தது)” எனக் கேட்கப்பட்டபோது, “பாவச் செயல் எதுவும் கலவாத (ஒப்புக்கொள்ளப்பட்ட) ஹஜ்” என்று பதிலளித்தார்கள்.

1520. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا خَالِدٌ، أَخْبَرَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، نَرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ قَالَ "" لاَ، لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ "".
பாடம் : 4
பாவச் செயல் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு2
1520. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே (பெண்களா கிய) நாங்கள் சிறந்த செயலாகக் கருது கிறோம்; எனவே, நாங்களும் அறப்போர் புரியலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(அவ்வாறு) இல்லை. எனினும், (பெண்களுக்குச்) சிறந்த அறப்போர், பாவச் செயல் எதுவும் கலவாத (ஒப்புக்கொள்ளப்பட்ட) ஹஜ்தான்” என்றார்கள்.

1521. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ "".
பாடம் : 4
பாவச் செயல் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு2
1521. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தீய பேச்சு, பாவச் செயல் ஆகியவற்றில் ஈடுபடாமல் அல்லாஹ்வி(ன் அன்பைப் பெறுவத)ற்காகவே ஹஜ் செய்கிறாரோ அவர், தம்மைத் தம்முடைய தாய் ஈன்ற நாளில் இருந்ததைப் போன்று (பாவமில்லாதவராகத்) திரும்புவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1522. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ جُبَيْرٍ، أَنَّهُ أَتَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ فِي مَنْزِلِهِ وَلَهُ فُسْطَاطٌ وَسُرَادِقٌ، فَسَأَلْتُهُ مِنْ أَيْنَ يَجُوزُ أَنْ أَعْتَمِرَ قَالَ فَرَضَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَلأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ.
பாடம் : 5
ஹஜ், உம்ரா ஆகியவற்றுக்காக ‘இஹ்ராம்’ கட்டுவதற்கான குறிப்பிட்ட எல்லைகள்3
1522. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவர்களின் வீடாக இருந்தது. நான் அவர்களிடம், “உம்ராவுக் காக எந்த இடத்திலிருந்து நான் இஹ்ராம் கட்டலாம்?” எனக் கேட்டேன்.
அதற்கு, “நஜ்த்வாசிகள் ‘கர்ன்’ எனும் இடத்திலிருந்தும் மதீனாவாசிகள் ‘துல் ஹுலைஃபா’விலிருந்தும் ஷாம் (சிரியா) வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டுமென அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லைகள் நிர்ணயித்தார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

1523. حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ أَهْلُ الْيَمَنِ يَحُجُّونَ وَلاَ يَتَزَوَّدُونَ وَيَقُولُونَ نَحْنُ الْمُتَوَكِّلُونَ، فَإِذَا قَدِمُوا مَكَّةَ سَأَلُوا النَّاسَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى}. رَوَاهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ مُرْسَلاً.
பாடம் : 6
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்:
(ஹஜ்ஜுக்குத்) தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தயார்படுத்திக்கொள்ளுங் கள். தயார்செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது நிச்சயமாக இறையச்சமாகும். (2:197)
1523. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவை யான) பொருள்களைத் தயாரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; “நாங்கள் இறைவன்மீது நம்பிக்கைவைத்துள்ளோம்” என்றும் கூறுவார்கள். மக்கா வந்ததும் மக்களிடம் யாசகம் கேட்பார்கள்.
இது தொடர்பாகவே அல்லாஹ் “(ஹஜ்ஜுக்குத்) தேவையான பொருட்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். தயார்செய்ய வேண்டிய பொருளில் தலைசிறந்தது நிச்சயமாக இறையச்சமாகும்” (2:197) எனும் வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பில் இக்ரிமா (ரஹ்) அவர்களின் கூற்றாக (மவ்கூஃப்) அறிவிக்கப்பட்டுள்ளது.

1524. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ، مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ.
பாடம் : 7
மக்காவாசிகள் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டும் இடம்
1524. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இப் பகுதியினருக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக் காக வேறு பகுதியிலிருந்து இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்.
இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ள லாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்று கூறினார்கள்.
இதை தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1525. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَأَهْلُ الشَّأْمِ مِنَ الْجُحْفَةِ، وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ "". قَالَ عَبْدُ اللَّهِ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ "".
பாடம் : 8
மதீனாவாசிகள் இஹ்ராம் கட்டும் எல்லையும், மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’வுக்கு முன்னால் இஹ்ராம் கட்டக் கூடாது என்பதும்
1525. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’விலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் நஜ்த்வாசிகள் ‘கர்னி’லிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“யமன்வாசிகள் ‘யலம்லம்’ எனுமிடத் திலிருந்து இஹ்ராம் கட்டுவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்குச் செய்தி கிடைத்தது” எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

1526. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ وَقَّتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، لِمَنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمُهَلُّهُ مِنْ أَهْلِهِ، وَكَذَاكَ حَتَّى أَهْلُ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا.
பாடம் : 9
ஷாம் (சிரியா)வாசிகள் இஹ்ராம் கட்டும் இடம்
1526. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’வை யும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல் ஜுஹ்ஃபா’வையும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனாஸிலை’யும் யமன்வாசி களுக்கு ‘யலம்லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர் களுக்கும் உரியனவாகும்.
“இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லை களுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்கு மிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்கள்.

1527. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، وَقَّتَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 10
நஜ்த்வாசிகள் இஹ்ராம் கட்டும் இடம்
1527. 1528 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’விலிருந்தும் ஷாம் (சிரியா)வாசிகள் ‘மஹ்யஆ’ எனும் ‘அல்ஜுஹ்ஃபா’விலிருந்தும் நஜ்த் வாசிகள் ‘கர்னி’லிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“யமன்வாசிகள் ‘யலம்லம்’ எனுமிடத்தி லிருந்து இஹ்ராம் கட்டுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் கள் கூறுகிறார்கள். ஆனால், நான் (நேரடியாக) நபி (ஸல்) அவர்களிடம் இதைக் கேட்கவில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1529. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنًا، فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا.
பாடம் : 11
இஹ்ராம் எல்லைகளுக்குட் பட்ட பகுதியில் வசிப்போர் இஹ்ராம் கட்டும் இடம்
1529. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லமை’யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்.
இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

1530. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لأَهْلِهِنَّ وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِمْ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَ ذَلِكَ، فَمِنْ حَيْثُ أَنْشَأَ حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ.
பாடம் : 12
யமன்வாசிகள் இஹ்ராம் கட்டும் இடம்
1530. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் ஷாம் (சிரியா)வாசிகளுக்கு ‘அல்ஜுஹ்ஃபா’வை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனா ஸிலை’யும் யமன்வாசிகளுக்கு ‘யலம் லமை’யும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்; இந்த (வரையறுக்கப்பட்ட) எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே (எங்கேனும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்; மக்கா வாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

1531. حَدَّثَنِي عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا فُتِحَ هَذَانِ الْمِصْرَانِ أَتَوْا عُمَرَ فَقَالُوا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّ لأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَهُوَ جَوْرٌ عَنْ طَرِيقِنَا، وَإِنَّا إِنْ أَرَدْنَا قَرْنًا شَقَّ عَلَيْنَا. قَالَ فَانْظُرُوا حَذْوَهَا مِنْ طَرِيقِكُمْ. فَحَدَّ لَهُمْ ذَاتَ عِرْقٍ.
பாடம் : 13
இராக்வாசிகளின் எல்லை ‘தாத்து இர்க்’ ஆகும்.
1531. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபா, பஸ்ரா எனும்) இந்த இரு (இராக்) நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். அது, நாங்கள் (மக்கா விற்கு) செல்லும் பாதையிலிருந்து விலகியுள்ளது. நாங்கள் ‘கர்ன்’ வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும்” என்றனர்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அதற்கு எதிரில் உள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலேயே கூறுங்கள்” என்றார்கள். பின்பு ‘தாத்து இர்க்’ என அவர்களுக்கு எல்லை நிர்ணயித்தார்கள்.

1532. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَاخَ بِالْبَطْحَاءِ بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا. وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَفْعَلُ ذَلِكَ.
பாடம் : 14
1532. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘துல்ஹுலைஃபா’வில் கற்கள் நிறைந்த இடத்தில் (அல்பத்ஹா) தமது ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி), இவ்வாறே செய் வார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.