1208. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا غَالِبٌ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي شِدَّةِ الْحَرِّ، فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ وَجْهَهُ مِنَ الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ.
பாடம் : 9 சஜ்தாவின்போது ஆடையைத் தரையில் விரித்தல்
1208. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கி றோம். எங்களில் ஒருவருக்குத் தமது முகத்தைத் தரையில் வைக்க இயலாத போது, தமது ஆடையை விரித்து அதில் சஜ்தா செய்வார்.

அத்தியாயம் : 21
1209. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَمُدُّ رِجْلِي فِي قِبْلَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَرَفَعْتُهَا، فَإِذَا قَامَ مَدَدْتُهَا.
பாடம் : 10 தொழும்போது செய்ய அனு மதிக்கப்பட்ட (புறச்)செயல்கள்
1209. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும்போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக்கொண்டிருப் பேன். அவர்கள் சஜ்தா செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை நான் மடக்கிக்கொள் வேன்; அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன்.


அத்தியாயம் : 21
1210. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى صَلاَةً قَالَ "" إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي، فَشَدَّ عَلَىَّ لِيَقْطَعَ الصَّلاَةَ عَلَىَّ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَذَعَتُّهُ، وَلَقَدْ هَمَمْتُ أَنْ أُوثِقَهُ إِلَى سَارِيَةٍ حَتَّى تُصْبِحُوا فَتَنْظُرُوا إِلَيْهِ فَذَكَرْتُ قَوْلَ سُلَيْمَانَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي. فَرَدَّهُ اللَّهُ خَاسِيًا "". ثُمَّ قَالَ النَّضْرُ بْنُ شُمَيْلٍ فَذَعَتُّهُ بِالذَّالِ أَىْ خَنَقْتُهُ وَفَدَعَّتُّهُ مِنْ قَوْلِ اللَّهِ {يَوْمَ يُدَعُّونَ} أَىْ يُدْفَعُونَ وَالصَّوَابُ، فَدَعَتُّهُ إِلاَّ أَنَّهُ كَذَا قَالَ بِتَشْدِيدِ الْعَيْنِ وَالتَّاءِ.
பாடம் : 10 தொழும்போது செய்ய அனு மதிக்கப்பட்ட (புறச்)செயல்கள்
1210. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை யைத் தொழுதார்கள். (தொழுது முடித்த தும்) “ஷைத்தான் எனக்குமுன் தோன்றி, என் தொழுகையை முறித்துவிட முயன் றான். அவன்மீது அல்லாஹ் எனக்குச் சக்தி அளித்தான். அவன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். அவனை ஒரு தூணில் கட்டிவைத்து காலையில் நீங்களெல்லாரும் பார்க்க வேண்டுமென விரும்பினேன். ‘இறைவா! எனக்குப்பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்குவாயாக! (38:35) என்று நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறி யது என் நினைவுக்கு வந்தது. (அதனால் அவனை விட்டுவிட்டேன்) இழிந்த நிலையில் அவனை அல்லாஹ் விரட்டி யடித்துவிட்டான்” என்று கூறினார்கள்.

நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘குரல்வளையைப் பிடித் தேன்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தஅத்து’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘குரல்வளையை நெரித்தேன்’ என்பது பொருளாகும். (சில பிரதிகளில்) ‘தஃஅத்து’ என இடம்பெறுகிறது. இதற்கு ‘பிடித்துத் தள்ளினேன்’ என்பது பொருளா கும். “அவர்கள் அன்று நரகத்தில் தள்ளப் படுவர்” (52:13) எனும் வசனத்தில் இச்சொல்லே (யுதஃஊன) ஆளப்பட்டுள் ளது. இருப்பினும், முதலாவது உச்சரிப்பே உகந்ததாகும்.

அத்தியாயம் : 21
1211. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَزْرَقُ بْنُ قَيْسٍ، قَالَ كُنَّا بِالأَهْوَازِ نُقَاتِلُ الْحَرُورِيَّةَ، فَبَيْنَا أَنَا عَلَى جُرُفِ نَهَرٍ إِذَا رَجُلٌ يُصَلِّي، وَإِذَا لِجَامُ دَابَّتِهِ بِيَدِهِ فَجَعَلَتِ الدَّابَّةُ تُنَازِعُهُ، وَجَعَلَ يَتْبَعُهَا ـ قَالَ شُعْبَةُ ـ هُوَ أَبُو بَرْزَةَ الأَسْلَمِيُّ ـ فَجَعَلَ رَجُلٌ مِنَ الْخَوَارِجِ يَقُولُ اللَّهُمَّ افْعَلْ بِهَذَا الشَّيْخِ. فَلَمَّا انْصَرَفَ الشَّيْخُ قَالَ إِنِّي سَمِعْتُ قَوْلَكُمْ، وَإِنِّي غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّ غَزَوَاتٍ أَوْ سَبْعَ غَزَوَاتٍ وَثَمَانِيًا، وَشَهِدْتُ تَيْسِيرَهُ، وَإِنِّي أَنْ كُنْتُ أَنْ أُرَاجِعَ مَعَ دَابَّتِي أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَدَعَهَا تَرْجِعُ إِلَى مَأْلَفِهَا فَيَشُقَّ عَلَىَّ.
பாடம் : 11 ஒருவர் தொழும்போது அவரது ஊர்தி (பிராணி) ஓடிவிட்டால்... “ஒருவரது ஆடையைத் திருடன் எடுத்துச் சென்றால், தொழுகையை விட்டுவிட்டுத் திருடனை விரட்டிச் செல்லலாம்” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1211. அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘அஹ்வாஸ்’ எனுமிடத்தில் ‘ஹரூரிய்யா’ கூட்டத்தாருடன் போர் செய்துகொண்டிருந்தோம்.7

அப்போது ஆற்றோரத்தில் ஒரு மனிதர் தமது வாகனப் பிராணியின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொழுதுகொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூபர்ஸா (ரலி) என்ற நபித் தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் “இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக” எனக் கூறினார்.

அந்தப் பெரியவர் தொழுது முடித்த தும், “நீங்கள் கூறியதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக் கிறேன். நபி (ஸல்) அவர்கள் மார்க் கத்தை இலகுவாக்கியிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓட விட்டு விட்டு, கவலையுடன் நான் செல்வதை விட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது” எனக் கூறினார்.8


அத்தியாயம் : 21
1212. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَرَأَ سُورَةً طَوِيلَةً، ثُمَّ رَكَعَ فَأَطَالَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَفْتَحَ بِسُورَةٍ أُخْرَى، ثُمَّ رَكَعَ حَتَّى قَضَاهَا وَسَجَدَ، ثُمَّ فَعَلَ ذَلِكَ فِي الثَّانِيَةِ، ثُمَّ قَالَ "" إِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا حَتَّى يُفْرَجَ عَنْكُمْ، لَقَدْ رَأَيْتُ فِي مَقَامِي هَذَا كُلَّ شَىْءٍ وُعِدْتُهُ، حَتَّى لَقَدْ رَأَيْتُنِي أُرِيدُ أَنْ آخُذَ قِطْفًا مِنَ الْجَنَّةِ حِينَ رَأَيْتُمُونِي جَعَلْتُ أَتَقَدَّمُ، وَلَقَدْ رَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ، وَرَأَيْتُ فِيهَا عَمْرَو بْنَ لُحَىٍّ وَهُوَ الَّذِي سَيَّبَ السَّوَائِبَ "".
பாடம் : 11 ஒருவர் தொழும்போது அவரது ஊர்தி (பிராணி) ஓடிவிட்டால்... “ஒருவரது ஆடையைத் திருடன் எடுத்துச் சென்றால், தொழுகையை விட்டுவிட்டுத் திருடனை விரட்டிச் செல்லலாம்” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1212. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தைத் தொடங்கி ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூஉ செய்து முடித்தார்கள். சஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள்.

பின்னர் “சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும்வரை தொழுங்கள். எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தை யும் இந்த இடத்தில் நான் கண்டேன். நான் முன்னே செல்வதுபோல் நீங்கள் என்னைக் கண்டபோது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல் என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் பின் லுஹை என்பவரையும் கண்டேன். அவர்தான் சாயிபா எனும் (கால்நடை களை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவர்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 21
1213. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ، فَتَغَيَّظَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ وَقَالَ "" إِنَّ اللَّهَ قِبَلَ أَحَدِكُمْ، فَإِذَا كَانَ فِي صَلاَتِهِ، فَلاَ يَبْزُقَنَّ ـ أَوْ قَالَ ـ لاَ يَتَنَخَّمَنَّ "". ثُمَّ نَزَلَ فَحَتَّهَا بِيَدِهِ. وَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا بَزَقَ أَحَدُكُمْ فَلْيَبْزُقْ عَلَى يَسَارِهِ.
பாடம் : 12 தொழும்போது எச்சில் உமிழ் வதும் வாயால் ஊதுவதும் செல்லும். “நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது சஜ்தாவில் ஊதினார்கள்” என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1213. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ‘கிப்லா’ திசையில் (சுவரில்) எச்சிலைக் கண்டார்கள். பள்ளியில் இருந்தவர்களைக் கடிந்துகொண்ட துடன் “அல்லாஹ் உங்களுக்கு முன்னே இருக்கிறான். எனவே, யாரேனும் தொழுதுகொண்டிருந்தால் கண்டிப்பாக எச்சில் உமிழ வேண்டாம்” எனக் கூறிவிட்டு, இறங்கிவந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள்.

“உங்களில் யாரேனும் உமிழ்ந்தால் தமது இடப் புறத்தில் உமிழட்டும்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்.


அத்தியாயம் : 21
1214. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ شِمَالِهِ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى "".
பாடம் : 12 தொழும்போது எச்சில் உமிழ் வதும் வாயால் ஊதுவதும் செல்லும். “நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது சஜ்தாவில் ஊதினார்கள்” என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தொழும்போது தம் இறை வனுடன் உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ வலப் புறமாகவோ கண்டிப்பாக எச்சில் துப்ப வேண்டாம். எனினும், இடப் புறமாக தமது இடப் பாதத்தின் அடியில் துப்பட்டும்.9

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 21
1215. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّاسُ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُمْ عَاقِدُو أُزْرِهِمْ مِنَ الصِّغَرِ عَلَى رِقَابِهِمْ، فَقِيلَ لِلنِّسَاءِ "" لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا "".
பாடம் : 13 தொழுகையில் ஏற்படும் தவறு களை ஆண்கள் விவரம் தெரியாமல் கைதட்டி உணர்த்தினால் அவர்களின் தொழுகை பாழாகிவிடாது. இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.10 பாடம் : 14 தொழுதுகொண்டிருப்பவரிடம் முன்னே செல்; அல்லது காத்திரு என்று கூறப்பட, அவரும் அவ்வாறு செய்தால் அது தவறாகாது.
1215. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, சிறிதாக இருந்த காரணத் தால் தம் கீழங்கிகளைக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். எனவேதான், “ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலி ருந்து) தலையை உயர்த்த வேண்டாம்” என்று பெண்களிடம் கூறப்பட்டது.11

அத்தியாயம் : 21
1216. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنْتُ أُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الصَّلاَةِ فَيَرُدُّ عَلَىَّ، فَلَمَّا رَجَعْنَا سَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَىَّ وَقَالَ "" إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً "".
பாடம் : 15 தொழும்போது ‘சலாமு’க்குப் பதில் கூறலாகாது.
1216. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும்போது, அவர்களுக்கு நான் ‘சலாம்’ கூறுவேன். அவர்கள் பதில் ‘சலாம்’ கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவிலிருந்து) திரும்பி வந்தபோது அவர்களுக்கு ‘சலாம்’ கூறினேன். எனக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும், “நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 21
1217. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ شِنْظِيرٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ لَهُ فَانْطَلَقْتُ، ثُمَّ رَجَعْتُ وَقَدْ قَضَيْتُهَا، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَىَّ، فَوَقَعَ فِي قَلْبِي مَا اللَّهُ أَعْلَمُ بِهِ فَقُلْتُ فِي نَفْسِي لَعَلَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَجَدَ عَلَىَّ أَنِّي أَبْطَأْتُ عَلَيْهِ، ثُمَّ سَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَىَّ، فَوَقَعَ فِي قَلْبِي أَشَدُّ مِنَ الْمَرَّةِ الأُولَى، ثُمَّ سَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ عَلَىَّ فَقَالَ "" إِنَّمَا مَنَعَنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ أَنِّي كُنْتُ أُصَلِّي "". وَكَانَ عَلَى رَاحِلَتِهِ مُتَوَجِّهًا إِلَى غَيْرِ الْقِبْلَةِ.
பாடம் : 15 தொழும்போது ‘சலாமு’க்குப் பதில் கூறலாகாது.
1217. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், என்னைத் தமது அலுவல் நிமித்தம் (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பிவந்து நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூற வில்லை.

அப்போது என் மனத்தில் ஏற்பட்ட (கவலையான)து அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி (ஸல்) அவர்கள் கோப மாக இருக்கக்கூடும் என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன்.

பிறகு மறுபடியும் சலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பை விடக் கடுமையான (வேதனையான)து என் மனத்தில் தோன்றியது. பின்னர் மீண்டும் சலாம் கூறினேன். அப்போது எனக்குப் பதில் சலாம் கூறிவிட்டு, நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) அவர்கள் கிப்லா அல்லாத திசையை நோக்கி தமது வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.12

அத்தியாயம் : 21
1218. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ بِقُبَاءٍ كَانَ بَيْنَهُمْ شَىْءٌ، فَخَرَجَ يُصْلِحُ بَيْنَهُمْ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ، فَحُبِسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ بِلاَلٌ إِلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ فَقَالَ يَا أَبَا بَكْرٍ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ حُبِسَ وَقَدْ حَانَتِ الصَّلاَةُ، فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ قَالَ نَعَمْ إِنْ شِئْتَ. فَأَقَامَ بِلاَلٌ الصَّلاَةَ، وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَكَبَّرَ لِلنَّاسِ، وَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْشِي فِي الصُّفُوفِ يَشُقُّهَا شَقًّا، حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَأَخَذَ النَّاسُ فِي التَّصْفِيحِ. قَالَ سَهْلٌ التَّصْفِيحُ هُوَ التَّصْفِيقُ. قَالَ وَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ الْتَفَتَ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ إِلَيْهِ، يَأْمُرُهُ أَنْ يُصَلِّيَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يَدَهُ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى لِلنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ مَا لَكُمْ حِينَ نَابَكُمْ شَىْءٌ فِي الصَّلاَةِ أَخَذْتُمْ بِالتَّصْفِيحِ إِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ "". ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقَالَ "" يَا أَبَا بَكْرٍ، مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ لِلنَّاسِ حِينَ أَشَرْتُ إِلَيْكَ "". قَالَ أَبُو بَكْرٍ مَا كَانَ يَنْبَغِي لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 16 தொழும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கைகளை உயர்த்துதல்
1218. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘குபா’வில் குடியிருந்த பனூ அம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தாரிடையே ஏதோ (தகராறு) இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களி டையே சமரசம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வரத் தாமதமானது. தொழுகை நேரம் நெருங்கியது.

அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்குத் தாமதமாகிறது; தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே, மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா?” என்று கேட்டார்கள். “நீர் விரும்பினால் நடத்துகிறேன்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் தொழு கைக்கு இகாமத் சொன்னதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னே சென்றார்கள். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தும் முகமாக) கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும் பிப் பார்க்கமாட்டார்கள். ஆயினும், மக்கள் அதிகமாகக் கைதட்டியதால் திரும்பிப் பார்த்தார்கள். (வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, (திரும்பாமல்) அப்படியே பின்னால் நகர்ந்து வரிசையில் நின்றுகொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள்.

தொழுது முடித்ததும் மக்களை நோக்கி “மக்களே! தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண் களுக்குரியதாகும். எனவே, தொழும் போது ஒருவருக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவர் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) எனக் கூறட்டும்” என்றார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, “அபூபக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்த பிறகும் மக்களுக்குத் தொழுகை நடத்த மறுத்ததேன்?” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அபூகுஹா ஃபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை” எனக் கூறி னார்கள்.13

அத்தியாயம் : 21
1219. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نُهِيَ عَنِ الْخَصْرِ، فِي الصَّلاَةِ. وَقَالَ هِشَامٌ وَأَبُو هِلاَلٍ عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 17 தொழும்போது இடுப்பில் கைவைத்தல்
1219. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

வேறு இரு அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்களே இவ்வாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 21
1220. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ نُهِيَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا.
பாடம் : 17 தொழும்போது இடுப்பில் கைவைத்தல்
1220. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவது தடுக்கப்பட் டுள்ளது.

அத்தியாயம் : 21
1221. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا عُمَرُ ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَصْرَ، فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ "" ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلاَةِ تِبْرًا عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ "".
பாடம் : 18 தொழுகையில் எதைப் பற்றி யாவது ஒருவர் யோசித்தல் நான் தொழுதுகொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார் படுத்து(வதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1221. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் வேகமாக எழுந்து தம் துணைவியரில் ஒருவரது இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படை வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று என் நினைவுக்கு வந்தது. அது எங்களி டம் ‘ஒரு மாலைப்பொழுதோ’ அல்லது ‘ஓர் இரவுப் பொழுதோ’ இருப்பதைக் கூட நான் விரும்பவில்லை. எனவே, அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளை யிட்டேன்” என விளக்கினார்கள்.


அத்தியாயம் : 21
1222. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُذِّنَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ فَإِذَا سَكَتَ أَقْبَلَ، فَلاَ يَزَالُ بِالْمَرْءِ يَقُولُ لَهُ اذْكُرْ مَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى لاَ يَدْرِي كَمْ صَلَّى "". قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِذَا فَعَلَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ قَاعِدٌ. وَسَمِعَهُ أَبُو سَلَمَةَ مِنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
பாடம் : 18 தொழுகையில் எதைப் பற்றி யாவது ஒருவர் யோசித்தல் நான் தொழுதுகொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார் படுத்து(வதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு ‘பாங்கு’ (தொழுகை அறிவிப்பு) சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான்.

தொழுதுகொண்டிருக்கும் மனிதரி டம் “நீ இதுவரை நினைத்திராதவற்றை யெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதையே அறியாதவராகிவிடுவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இவ்வாறு உங்களில் ஒருவருக்கு (மறதி) ஏற்பட்டால், அமர்ந்த நிலையில் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 21
1223. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ النَّاسُ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ، فَلَقِيتُ رَجُلاً فَقُلْتُ بِمَ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَارِحَةَ فِي الْعَتَمَةِ فَقَالَ لاَ أَدْرِي. فَقُلْتُ لَمْ تَشْهَدْهَا قَالَ بَلَى. قُلْتُ لَكِنْ أَنَا أَدْرِي، قَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا.
பாடம் : 18 தொழுகையில் எதைப் பற்றி யாவது ஒருவர் யோசித்தல் நான் தொழுதுகொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார் படுத்து(வதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1223. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து “நேற்றிரவு இஷாவில் நபி (ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்?” என்று கேட்டேன்.

அவர் ‘தெரியாது’ என்றார். “நீர் அத்தொழுகையில் கலந்துகொள்ள வில்லையா?” என்று நான் கேட்டேன். அவர் “கலந்துகொண்டேன்” என்றார். அவரிடம் நான், “அதை நான் அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்” என்றேன்.14

அத்தியாயம் : 21

1224. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ قَبْلَ التَّسْلِيمِ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ سَلَّمَ.
பாடம் : 1 கடமையான தொழுகையின் இரண்டு ரக்அத்களுக்குப்பின் (அத்தஹிய்யாத்தில் அமராமல்) மறதியாக எழுந்துவிட் டால்...?
1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து ‘சலாம்’ கொடுப் பதை நாங்கள் எதிர்பார்த்திருந்தபோது, ‘சலாம்’ கொடுப்பதற்குமுன் அமர்ந்தவாறே (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ‘சலாம்’ கொடுத்தார்கள்..2


அத்தியாயம் : 22
1225. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ مِنِ اثْنَتَيْنِ مِنَ الظُّهْرِ لَمْ يَجْلِسْ بَيْنَهُمَا، فَلَمَّا قَضَى صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ.
பாடம் : 1 கடமையான தொழுகையின் இரண்டு ரக்அத்களுக்குப்பின் (அத்தஹிய்யாத்தில் அமராமல்) மறதியாக எழுந்துவிட் டால்...?
1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லுஹ்ர் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது (மறதிக்காக) இரண்டு சஜ்தா செய்தார்கள். அதன்பின் சலாம் கொடுத்தார்கள்.3

அத்தியாயம் : 22
1226. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلاَةِ فَقَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ.
பாடம் : 2 (மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்...
1226. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழு தார்கள். உடனே அவர்களிடத்தில், “இத்தொழுகை(யின் ரக்அத்) அதிகமாக்கப் பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “என்ன விஷயம்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்” என ஒருவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். (இது தொழுகைக்கான) ‘சலாம்’ கொடுத்தபிறகு (நடந்தது).

அத்தியாயம் : 22
1227. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ أَوِ الْعَصْرَ فَسَلَّمَ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهَ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ "" أَحَقٌّ مَا يَقُولُ "". قَالُوا نَعَمْ. فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ. قَالَ سَعْدٌ وَرَأَيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ صَلَّى مِنَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فَسَلَّمَ وَتَكَلَّمَ ثُمَّ صَلَّى مَا بَقِيَ وَسَجَدَ سَجْدَتَيْنِ وَقَالَ هَكَذَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 3 (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றா வது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால், வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாக்கள் செய்வது
1227. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ (இரு ரக்அத் கள் மட்டும்) தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது ‘துல்யதைன்’ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?” எனக் கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “இவர் கூறுவது உண்மைதானா?” எனக் கேட்டபோது அவர்களும் ‘ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், மஃக்ரிப் தொழுவித்தபோது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதி உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்துவிட்டு, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 22