மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு
1188. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَرْبَعًا قَالَ سَمِعْتُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً ح.
பாடம் : 1
மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
1188. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கேற்ற வரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியேற்றுள்ளேன்.2
அத்தியாயம் : 20

1189. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صلى الله عليه وسلم وَمَسْجِدِ الأَقْصَى "".
பாடம் : 1
மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
1189. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல் களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1190. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ "".
பாடம் : 1
மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
1190. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1191. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ـ هُوَ الدَّوْرَقِيُّ ـ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ لاَ يُصَلِّي مِنَ الضُّحَى إِلاَّ فِي يَوْمَيْنِ يَوْمَ يَقْدَمُ بِمَكَّةَ، فَإِنَّهُ كَانَ يَقْدَمُهَا ضُحًى، فَيَطُوفُ بِالْبَيْتِ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ خَلْفَ الْمَقَامِ، وَيَوْمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ، فَإِنَّهُ كَانَ يَأْتِيهِ كُلَّ سَبْتٍ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَرِهَ أَنْ يَخْرُجَ مِنْهُ حَتَّى يُصَلِّيَ فِيهِ. قَالَ وَكَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَزُورُهُ رَاكِبًا وَمَاشِيًا.
பாடம் : 2
‘குபா’ பள்ளிவாசல்3
1191. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் இரண்டு நாட்கள் தவிர வேறு நாட்களில் ‘ளுஹா’ தொழுகை தொழமாட்டார்கள்:
1. அவர்கள் மக்காவுக்கு வரக்கூடிய நாள். அந்நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் வந்து, கஅபாவை ‘தவாஃப்’ செய்து ‘மகாமு இப்ராஹீம்’ எனும் இடத்திற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
2. ‘குபா’ பள்ளிவாசலுக்குச் செல்லும் நாள். அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ‘குபா’ பள்ளிவாசலுக்குச் சென்று நுழைந்ததும் தொழாமல் வெளியே வரமாட்டார்கள்.
மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் ஊர்தியிலும் வரும் வழக்கம் உடைய வராக இருந்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

1192. قَالَ وَكَانَ يَقُولُ إِنَّمَا أَصْنَعُ كَمَا رَأَيْتُ أَصْحَابِي يَصْنَعُونَ، وَلاَ أَمْنَعُ أَحَدًا أَنْ يُصَلِّيَ فِي أَىِّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ، غَيْرَ أَنْ لاَ تَتَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا.
பாடம் : 2
‘குபா’ பள்ளிவாசல்3
1192. மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்:
நான் என் தோழர்கள் செய்ததைப் போன்றே செய்கிறேன். இரவிலோ பகலிலோ தாம் நாடிய எந்த நேரத்தில் யார் தொழுதாலும் நான் தடுக்கமாட்டேன். ஆயினும், (சரியாக) சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக் காதீர்கள்.4

1193. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا. وَكَانَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَفْعَلُهُ.
பாடம் : 3
ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘குபா’ பள்ளிவாசலுக்குச் செல்வது
1193. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் ஊர்தியிலும் வருவார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் செய்வார்கள்.

1194. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا. زَادَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ.
பாடம் : 4
‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந் தும் ஊர்தியிலும் செல்வது
1194. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘குபா’வுக்கு நடந்தும் ஊர்தியிலும் செல்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் அறி விப்பில், “அங்கே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” என்றும் (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக்) கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

1195. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ "".
பாடம் : 5
நபி (ஸல்) அவர்களின் அடக் கத் தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு
1195. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.5
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1196. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي "".
பாடம் : 5
நபி (ஸல்) அவர்களின் அடக் கத் தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு
1196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத் தின் மீது அமைந்துள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
1196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத் தின் மீது அமைந்துள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
1197. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ إِلاَّ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ. وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى وَمَسْجِدِي "".
பாடம் : 6
பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல்6
1197. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறிதயாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னை வியப்பில் ஆழ்த்தின; எனக்கு மகிழ்ச்சி அளித்தன. (அவை:)
1. ஒரு பெண், கணவனோ (மண முடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது.
2. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது.
3. சுப்ஹு தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும்வரையும், அஸ்ர் தொழுததிலிருந்து சூரியன் மறையும்வரையும் தொழக் கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்றப் பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடிப்) புனிதப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

தொழுகையில் செய்யும் பிற செயல்கள்
1198. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ وَهْىَ خَالَتُهُ ـ قَالَ فَاضْطَجَعْتُ عَلَى عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، ثُمَّ اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ، فَمَسَحَ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ آيَاتٍ خَوَاتِيمَ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا بِيَدِهِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 1
தொழுகையுடன் சம்பந்தப் பட்ட காரியங்களில் கைக ளைப் பயன்படுத்துவது2
“ஒருவர் தொழும்போது தமது உடலில் தாம் விரும்பிய எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தொழும்போது தமது தொப்பியைக் கழற்றியும் மாட்டியும் இருக்கிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் தொழும்போது தமது மேனியில் சொறிந்துகொள்ளும் நேரம், அல்லது தமது ஆடையைச் சரி செய்துகொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தமது கையை இடக்கை மணிக்கட்டில் வைத்திருப்பார்கள்.
1198. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலவாட்டில் நான் படுத்துக்கொண் டேன். நபி (ஸல்) அவர்களும் அவர் களின் துணைவி (மைமூனா) அவர்களும் அந்தத் தலையணையின் நீள வாட்டில் படுத்துக்கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்குச் சற்று முன்புவரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தமது கையால் தமது முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை அகற்றிவிட்டு ‘ஆலு இம்ரான்’ அத்தி யாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள்.
பிறகு தொங்கவிடப்பட்ட தோல்பாத் திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போலவே செய்து, அவர்களின் (இடது) பக்கத்தில் நின்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை என் தலை மீது வைத்து எனது வலக்காதைப் பிடித்து (வலப் புறத்திற்கு) திருப்பினார்கள்.
இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், மேலும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரத்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னால் வித்ர் தொழுதுவிட்டுப் படுத்துக்கொண் டார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்ததும் எழுந்து சுருக்க மாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு சுப்ஹு தொழுவித்தார்கள்.3
அத்தியாயம் : 21

1199. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الصَّلاَةِ فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا وَقَالَ "" إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً "". حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُرَيْمُ بْنُ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 2
தொழுகையில் பேசக் கூடாது.
1199. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆரம்பக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் முகமன் (சலாம்) கூறுவோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவின் மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிய போது நபியவர்களுக்கு ‘சலாம்’ கூறினோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் கூறவில்லை.
(தொழுது முடித்ததும்) “நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1200. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى ـ هُوَ ابْنُ يُونُسَ ـ عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، قَالَ قَالَ لِي زَيْدُ بْنُ أَرْقَمَ إِنْ كُنَّا لَنَتَكَلَّمُ فِي الصَّلاَةِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، يُكَلِّمُ أَحَدُنَا صَاحِبَهُ بِحَاجَتِهِ حَتَّى نَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ} الآيَةَ، فَأُمِرْنَا بِالسُّكُوتِ.
பாடம் : 2
தொழுகையில் பேசக் கூடாது.
1200. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டி ருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார்.
இந்நிலையில், “(அனைத்துத்) தொழு கைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகை யையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” (2:238) எனும் இறைவசனம் அருளப் பெற்றது. அதன்பின் (தொழுகையில்) பேசக் கூடாது என்று கட்டளையிடப் பட்டோம்.

1201. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصْلِحُ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، وَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ بِلاَلٌ أَبَا بَكْرٍ ـ رضى الله عنهما ـ فَقَالَ حُبِسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَؤُمُّ النَّاسَ قَالَ نَعَمْ إِنْ شِئْتُمْ. فَأَقَامَ بِلاَلٌ الصَّلاَةَ، فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَصَلَّى، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْشِي فِي الصُّفُوفِ يَشُقُّهَا شَقًّا حَتَّى قَامَ فِي الصَّفِّ الأَوَّلِ، فَأَخَذَ النَّاسُ بِالتَّصْفِيحِ. قَالَ سَهْلٌ هَلْ تَدْرُونَ مَا التَّصْفِيحُ هُوَ التَّصْفِيقُ. وَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرُوا الْتَفَتَ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصَّفِّ، فَأَشَارَ إِلَيْهِ مَكَانَكَ. فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ وَتَقَدَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى.
பாடம் : 3
தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் என்று ஆண்கள் கூறலாம்.
1201. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூஅம்ர் பின் அவ்ஃப் கூட்டத் தாரிடையே சமரசம் செய்து வைப்பதற் காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார் கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நபி (ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
“நீங்கள் விரும்பினால் செய்கிறேன்” என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னே சென்று தொழுவிக்கலானார்கள். சற்று நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசை யில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். மக்களின் கைதட்டல் மிகுந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார்கள். “அங்கேயே நிற்பீராக” என்று நபி (ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்றுகொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள்.4

1202. حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَقُولُ التَّحِيَّةُ فِي الصَّلاَةِ وَنُسَمِّي، وَيُسَلِّمُ بَعْضُنَا عَلَى بَعْضٍ، فَسَمِعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِنَّكُمْ إِذَا فَعَلْتُمْ ذَلِكَ فَقَدْ سَلَّمْتُمْ عَلَى كُلِّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ "".
பாடம் : 4
தொழும்போது அறியாத நிலை யில் சிலரது பெயரைக் குறிப்பி டல், அல்லது பிறரை நோக்கி ‘சலாம்’ கூறல்
1202. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் தொழுகையில் ‘அத்தஹிய் யாத்’ ஓதும்போது (சிலரது) பெயரைக் குறிப்பிட்டு, ஒருவர்மீது மற்றவர் ‘சலாம்’ கூறிவந்தோம்.
இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து, அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பர(க்)கா(த்)துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்; அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல் லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்ம தன் அப்துஹு வரசூலுஹு” (சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது அல்லாஹ் வின் சாந்தியும் அருளும் அருள்வள மும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழி கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழி கிறேன்) என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம் மற்றும் பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் சலாம் கூறியவர்களாவீர்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

1203. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ "".
பாடம் : 5
(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்ட) பெண்கள் கைதட்டுதல்5
1203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதாகும்; கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
1203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதாகும்; கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
1204. حَدَّثَنَا يَحْيَى، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيحُ لِلنِّسَاءِ "".
பாடம் : 5
(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்ட) பெண்கள் கைதட்டுதல்5
1204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தஸ்பீஹ்’ கூறுதல் ஆண்களுக்குரிய தாகும்; கைதட்டுதல் பெண்களுக்குரிய தாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1205. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ يُونُسُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ الْمُسْلِمِينَ، بَيْنَا هُمْ فِي الْفَجْرِ يَوْمَ الاِثْنَيْنِ، وَأَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يُصَلِّي بِهِمْ فَفَجَأَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَنَظَرَ إِلَيْهِمْ، وَهُمْ صُفُوفٌ، فَتَبَسَّمَ يَضْحَكُ، فَنَكَصَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ عَلَى عَقِبَيْهِ، وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ أَنْ يَخْرُجَ إِلَى الصَّلاَةِ، وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ فَرَحًا بِالنَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ رَأَوْهُ، فَأَشَارَ بِيَدِهِ أَنْ أَتِمُّوا، ثُمَّ دَخَلَ الْحُجْرَةَ وَأَرْخَى السِّتْرَ، وَتُوُفِّيَ ذَلِكَ الْيَوْمَ.
பாடம் : 6
தொழுபவர் ஏதேனும் பிரச் சினைக்காகப் பின்புறமாகவோ முன்புறமாகவோ நகர்தல்
இதுபற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
1205. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழு வித்துக்கொண்டிருந்தார்கள். (மரணத் தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே புன்னகைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்வாக்கில் திரும்பலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் மக்களுக்குத் தொழுகையில் குழப்பம் நேரும் நிலை ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் தொழுது முடியுங்கள்’ என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்து விட்டார்கள்.

1206. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَادَتِ امْرَأَةٌ ابْنَهَا، وَهْوَ فِي صَوْمَعَةٍ قَالَتْ يَا جُرَيْجُ. قَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي. قَالَتْ يَا جُرَيْجُ. قَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي. قَالَتْ يَا جُرَيْجُ. قَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي. قَالَتِ اللَّهُمَّ لاَ يَمُوتُ جُرَيْجٌ حَتَّى يَنْظُرَ فِي وَجْهِ الْمَيَامِيسِ. وَكَانَتْ تَأْوِي إِلَى صَوْمَعَتِهِ رَاعِيَةٌ تَرْعَى الْغَنَمَ فَوَلَدَتْ فَقِيلَ لَهَا مِمَّنْ هَذَا الْوَلَدُ قَالَتْ مِنْ جُرَيْجٍ نَزَلَ مِنْ صَوْمَعَتِهِ. قَالَ جُرَيْجٌ أَيْنَ هَذِهِ الَّتِي تَزْعُمُ أَنَّ وَلَدَهَا لِي قَالَ يَا بَابُوسُ مَنْ أَبُوكَ قَالَ رَاعِي الْغَنَمِ "".
பாடம் : 7
தொழுதுகொண்டிருக்கும் பிள்ளையைத் தாய் அழைத் தால்...?
1206. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை ‘ஜுரைஜ்!’ என்று அழைத்தார். ஜுரைஜ் “இறைவா! என் தாயா? என் தொழு கையா? (யாரைக் கவனிப்பேன்)” என்று (மனதிற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் ‘ஜுரைஜ்!’ என்று அழைத்த போது “இறைவா! என் தாயா? என் தொழுகையா?” என்று (மனத்திற்குள்) கூறினார். (மூன்றாவது முறையாகவும்) ‘ஜுரைஜ்!’ என்று அழைத்தார். அப்போதும் அவர் “இறைவா! என் தாயா? என் தொழுகையா?” என்று கூறினார்.
அப்போது அப்பெண் “இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக் கூடாது” என்று துஆ செய்தார். ஆடு மேய்க்கும் பெண் ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்துசெல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது, “ஜுரைஜுக்குத்தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கிவந்து இவ்வாறு செய்துவிட்டார்” என்று அவள் கூறினாள்.
“தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?” என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு, அவள் பெற்ற குழந்தையை நோக்கி, “சிறுவனே! உன் தந்தை யார்?” எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை “ஆடு மேய்க்கும் இன்னார்” என விடையளித்தது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

1207. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي مُعَيْقِيبٌ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ قَالَ "" إِنْ كُنْتَ فَاعِلاً فَوَاحِدَةً "".
பாடம் : 8
தொழும்போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்
1207. முஐகீப் பின் அபீஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஜ்தா செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திக்கொண்டிருந்த மனிதரை நோக்கி “நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு தடவை மட்டும் செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.