1064. حَدَّثَنَا مَحْمُودٌ، قَالَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ فِي كُسُوفِ الشَّمْسِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي سَجْدَتَيْنِ، الأَوَّلُ الأَوَّلُ أَطْوَلُ.
பாடம் : 18 கிரகணத் தொழுகையில் முதல் ருகூஉ நீளமாக இருத்தல்
1064. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சூரிய கிரகணத் தொழுகை தொழுவித்த போது, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகள் செய்தார்கள். அதில் முந்திய முந்திய ருகூஉகள் (அடுத்தடுத்த ருகூஉ களைவிட) நீளமானவையாக இருந்தன.

அத்தியாயம் : 16
1065. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ أَخْبَرَنَا ابْنُ نَمِرٍ، سَمِعَ ابْنَ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ جَهَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الْخُسُوفِ بِقِرَاءَتِهِ، فَإِذَا فَرَغَ مِنْ قِرَاءَتِهِ كَبَّرَ فَرَكَعَ، وَإِذَا رَفَعَ مِنَ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. ثُمَّ يُعَاوِدُ الْقِرَاءَةَ فِي صَلاَةِ الْكُسُوفِ، أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ.
பாடம் : 19 கிரகணத் தொழுகையில் சப்த மிட்டு (குர்ஆன்) ஓதுதல்
1065. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழு கையில் (குர்ஆனைச்) சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூஉ செய்தார்கள். ருகூஉவி-ருந்து நிமிர்ந்ததும் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா! வல(க்)கல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான், எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறினார்கள். பிறகு மீண்டும் (குர்ஆன்) ஓதினார்கள். இவ்வாறு அந்தக் கிரகணத் தொழுகையில் இரண்டு ரக்அத் களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.


அத்தியாயம் : 16
1066. وَقَالَ الأَوْزَاعِيُّ وَغَيْرُهُ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ الشَّمْسَ، خَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَبَعَثَ مُنَادِيًا بِالصَّلاَةُ جَامِعَةٌ، فَتَقَدَّمَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ. وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ سَمِعَ ابْنَ شِهَابٍ مِثْلَهُ. قَالَ الزُّهْرِيُّ فَقُلْتُ مَا صَنَعَ أَخُوكَ ذَلِكَ، عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَا صَلَّى إِلاَّ رَكْعَتَيْنِ مِثْلَ الصُّبْحِ إِذْ صَلَّى بِالْمَدِينَةِ. قَالَ أَجَلْ، إِنَّهُ أَخْطَأَ السُّنَّةَ. تَابَعَهُ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ فِي الْجَهْرِ.
பாடம் : 19 கிரகணத் தொழுகையில் சப்த மிட்டு (குர்ஆன்) ஓதுதல்
1066. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ (தொழுகை நடைபெறுகிறது) என்று அறிவிக்க, அறிவிப்பாளர் ஒருவரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். (மக்கள் கூடியதும்) முன்னே சென்று இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்து தொழு(வித்)தார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இதை எனக்கு அறிவித்த உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) “உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மதீனாவில் (கிரகணத் தொழுகை) தொழுவித்தபோது, சுப்ஹு தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள் (அவ்வளவு தான். மற்றபடி நீங்கள் கூறியதைப் போன்று) அவர்கள் செய்யவில்லையே!” என்று சொன்னேன்.

அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “ஆம். அவர் நபிவழியைத் தவறவிட்டார்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 16

1067. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الأَسْوَدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا، وَسَجَدَ مَنْ مَعَهُ، غَيْرَ شَيْخٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا. فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا.
பாடம் : 1 குர்ஆனில் உள்ள சஜ்தா வசனங்களை ஓதியதற்காகச் சிரவணக்கம் செய்வதும் அது ஒரு நபிவழி (சுன்னத்) ஆகும் என்பதும்
1067. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண் ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.2

அத்தியாயம் : 17
1068. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ {الم * تَنْزِيلُ} السَّجْدَةَ وَ{هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
பாடம் : 2 ‘தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும் 32ஆவது) அத்தியாயத்(தில் 15ஆவது வசனத்)தை ஓதும் போது சிரவணக்கம் செய்தல்
1068. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், ‘ஹல் அத்தா அலல் இன்ஸான்’ (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.3

அத்தியாயம் : 17
1069. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ {ص} لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا.
பாடம் : 3 ‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தி யாயத்(தில் 24ஆவது வச னத்)தை ஓதும்போது சிரவணக் கம் செய்தல்
1069. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஸாத்’ அத்தியாயத்தில் உள்ள (24ஆவது) வசனம் கட்டாயமாக (ஓதலுக் கான) சஜ்தா செய்ய வேண்டிய வசனங் களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (ஸாத் அத்தியாயத்தின்) அந்த (வசனம் வரும்) இடத்தில் சஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 17
1070. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ بِهَا، فَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلاَّ سَجَدَ، فَأَخَذَ رَجُلٌ مِنَ الْقَوْمِ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ، فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا، فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا.
பாடம் : 4 ‘அந்நநஜ்ம்’ (எனும் 53ஆவது) அத்தியாயத்(தில் 62ஆவது வசனத்)தை ஓதும்போது சிர வணக்கம் செய்தல் இதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
1070. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தை (53:62) ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். ஒரேயொரு மனிதரைத் தவிர, அங்கிருந்த மக்கள் அனைவரும் (நபியவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தனர். அவர் ஒரு கையளவு பொடிக் கற்களையோ மண்ணையோ எடுத்துத் தனது நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்’ என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 17
1071. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ.
பாடம் : 5 முஸ்லிம்கள் இணைவைப் பாளர்களுடன் சேர்ந்து (ஓதலுக் கான) சிரவணக்கம் செய்தல் இணைவைப்பாளர் அசுத்தமானவர் என்பதால் அவருக்கு அங்கத் தூய்மை என்பது கிடையாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் (தொழு கைக்கு வெளியே) அங்கத் தூய்மை இல்லாமல் (ஓதலுக்கான) சிரவணக்கம் செய்வார்கள்.6
1071. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் ஜின்களும் மனிதர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

அத்தியாயம் : 17
1072. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ، سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ فَزَعَمَ أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم {وَالنَّجْمِ} فَلَمْ يَسْجُدْ فِيهَا.
பாடம் : 6 ‘சஜ்தா’ வசனத்தை ஓதியவர் சஜ்தா செய்யாமல் இருத்தல்
1072. அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் (‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தில் சஜ்தா செய்வது பற்றிக்) கேட்டேன். அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதிக்காட்டி னேன். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய வில்லை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 17
1073. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ قَرَأْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم {وَالنَّجْمِ} فَلَمْ يَسْجُدْ فِيهَا.
பாடம் : 6 ‘சஜ்தா’ வசனத்தை ஓதியவர் சஜ்தா செய்யாமல் இருத்தல்
1073. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அந் நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தா செய்யவில்லை.7

அத்தியாயம் : 17
1074. حَدَّثَنَا مُسْلِمٌ، وَمُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالاَ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَرَأَ {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَسَجَدَ بِهَا فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ، أَلَمْ أَرَكَ تَسْجُدُ قَالَ لَوْ لَمْ أَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ لَمْ أَسْجُدْ.
பாடம் : 7 ‘இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ எனும் (84 ஆவது) அத்தியாயத்(தில் 21ஆவது வசனத்)தை ஓதும்போது சிரவணக்கம் செய்தல்
1074. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ அத்தியாயத்தை ஓதி, அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சிரவணக்கம் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “அபூ ஹுரைரா அவர்களே! நீங்கள் சிர வணக்கம் செய்வதை நான் பார்த்தேனே (ஏன்)?” என்றேன்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், (இந்த அத்தியாயத் தில்) சிரவணக்கம் செய்வதை நான் பார்த்திராவிட்டால், நானும் சிரவணக்கம் செய்திருக்கமாட்டேன்” என்று பதிலளித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 17
1075. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ فِيهَا السَّجْدَةُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ.
பாடம் : 8 ஓதியவர் சஜ்தா செய்யும்போது கேட்டவரும் சஜ்தா செய்தல் சிறுவரான தமீம் பின் ஹத்லம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சஜ்தா வசனத்தை ஓதிக்காட்டினார். அவரிடம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “சஜ்தா செய்வீராக! ஏனெனில், இந்த விஷயத்தில் நீரே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்” என்று கூறினார்கள்.
1075. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டும்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தா செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.8

அத்தியாயம் : 17
1076. حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ السَّجْدَةَ وَنَحْنُ عِنْدَهُ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ فَنَزْدَحِمُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا لِجَبْهَتِهِ مَوْضِعًا يَسْجُدُ عَلَيْهِ.
பாடம் : 9 இமாம் சஜ்தா வசனத்தை ஓதும்போது (சஜ்தா செய்யும்) மக்களிடையே நெரிசல் ஏற் படுவது
1076. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது, அவர்கள் சஜ்தா வசனத்தை ஓதுவார்கள். அப்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சஜ்தா செய்வாம்.

அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு சஜ்தாவில் நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.

அத்தியாயம் : 17
1077. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهُدَيْرِ التَّيْمِيِّ ـ قَالَ أَبُو بَكْرٍ وَكَانَ رَبِيعَةُ مِنْ خِيَارِ النَّاسِ عَمَّا حَضَرَ رَبِيعَةُ مِنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَرَأَ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ، حَتَّى إِذَا كَانَتِ الْجُمُعَةُ الْقَابِلَةُ قَرَأَ بِهَا حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ فَمَنْ سَجَدَ فَقَدْ أَصَابَ، وَمَنْ لَمْ يَسْجُدْ فَلاَ إِثْمَ عَلَيْهِ. وَلَمْ يَسْجُدْ عُمَرُ ـ رضى الله عنه. وَزَادَ نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلاَّ أَنْ نَشَاءَ.
பாடம் : 10 (ஓதலுக்கான) சஜ்தாவை அல்லாஹ் கடமையாக்க வில்லை என்று கருதுவோரின் கூற்று இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், “ஒரு மனிதர் மற்றொருவர் ஓதும் சஜ்தா வசனத்தை அமர்ந்து கேட்காமல் (போகிற போக்கில்) செவியுற்றால்... (அவர் சஜ்தா செய்ய வேண்டுமா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர் உட்கார்ந்து கேட்டால் மட்டும் என்ன? (சஜ்தா கடமையாகிவிடப்போகிறதா?)” என்று திருப்பிக் கேட்டார்கள். இதன் மூலம், அ(மர்ந்து கேட்ப)வர்மீதே சஜ்தா செய்வது கடமையில்லை என்று அவர்கள் கருதுவதைப் போன்றே தெரிகிறது. (சிலர் ஓரிடத்தில் அமர்ந்து சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தா செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் கடந்து சென்ற) சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் (சஜ்தா செய்யவில்லை. அது குறித்து அவர்களிடம் வினவப்பட்டபோது), “இதற்காக நாம் இங்கு வரவில்லை” என்று பதிலளித்தார்கள். “யார் அதை (விரும்பி) செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவர்மீதே சஜ்தா கடமை யாகும்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “தூய்மையுடன் இருந்தால்தான் சஜ்தா செய்ய வேண்டும். நீ உள்ளூரிலிருக் கும்போது சஜ்தா செய்ய நேர்ந்தால் கிப்லாவை முன்னோக்கிக்கொள். நீ பயணத்திலிருக்கும்போது (சஜ்தா வசனத்தை ஓதினால்) உனது முகம் எந்தத் திசையில் இருந்தாலும் குற்றமில்லை” என்று கூறினார்கள். சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள், உரை நிகழ்த்துபவர் (சஜ்தா வசனத்தை ஓதி) சஜ்தா செய்ததற்காகத் தாமும் சஜ்தா செய்யமாட்டார்கள்.9
1077. ரபீஆ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், தாம் உமர் (ரலி) அவர்களின் அவைக்கு வந்தது குறித்துக் கூறியதாவது:

(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று ‘அந்நஹ்ல்’ (எனும் 16ஆவது) அத்தி யாயத்தை ஓதினார்கள். அதில் சஜ்தா வசனம் (16:50) வந்ததும் இறங்கி (ஓதலுக்கான) சஜ்தா செய்தார்கள். மக்களும் சஜ்தா செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை (உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள்.

அப்போது சஜ்தா வசனத்தை அடைந்ததும், “மக்களே! நாம் சஜ்தா வசனத்தை ஓதப்போகிறோம். யார் சஜ்தா செய்கிறாரோ அவர் நல்லதைச் செய்தவ ராவார். யார் சஜ்தா செய்யவில்லையோ அவர்மீது எந்தக் குற்றமுமில்லை” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் சஜ்தா செய்யவில்லை.

இது தொடர்பாக நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகையில், “(ஓதலுக்காக) சஜ்தா செய்வதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை; நாமாக விரும்பிச் செய்தால் தவிர” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 17
1078. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، حَدَّثَنِي بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمَةَ فَقَرَأَ {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَسَجَدَ فَقُلْتُ مَا هَذِهِ قَالَ سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم فَلاَ أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ.
பாடம் : 11 தொழுகையில் சஜ்தா வச னத்தை ஓதியதும் சஜ்தா செய்தல்
1078. அபூராஃபிஉ நுஃபைஉ அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷா தொழுகையைத் தொழுதேன். அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (அதில் சஜ்தா வசனம் (21) வந்த) உடன் சஜ்தா செய்தார்கள். அவர்களிடம் நான், “என்ன இது? (ஏன் தொழுகையிலேயே சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன்.



அதற்கு அவர்கள், “நான் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துள்ளேன். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) அதை நான் ஓதினால் சஜ்தா செய்வேன்” என்று கூறினார்கள்.10

அத்தியாயம் : 17
1079. حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ السُّورَةَ الَّتِي فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ.
பாடம் : 12 கூட்ட நெரிசலால் இமாமுடன் சஜ்தா செய்வதற்கு இடம் கிடைக்காமல்போவது
1079. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசன முள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக்காட்டும்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தா செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.

அத்தியாயம் : 17

1080. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ، وَحُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ، فَنَحْنُ إِذَا سَافَرْنَا تِسْعَةَ عَشَرَ قَصَرْنَا، وَإِنْ زِدْنَا أَتْمَمْنَا.
பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவது பற்றியும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை2
1080. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவில்) தங்கியிருந்தபோது, பத்தொன்பது நாட்கள் சுருக்கித் தொழு தார்கள். ஆகவே, நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பயணம் மேற்கொண்டால், சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவோம். (அதைவிட) அதிகமாகத் தங்கினால், (சுருக்காமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 18
1081. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ. قُلْتُ أَقَمْتُمْ بِمَكَّةَ شَيْئًا قَالَ أَقَمْنَا بِهَا عَشْرًا.
பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவது பற்றியும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை2
1081. யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனா திரும்பும்வரை நபி (ஸல்) அவர்கள் (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று கூறினார்கள்.

உடனே நான், “நீங்கள் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “பத்து நாட்கள் தங்கியிருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.3

அத்தியாயம் : 18
1082. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا.
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்4
1082. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருட னும் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி யின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் ‘மினா’வில் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உஸ்மான் (ரலி) அவர்கள் பின்னர் (சுருக்கித் தொழா மல்) முழுமையாகவே தொழுதார்கள்.


அத்தியாயம் : 18
1083. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم آمَنَ مَا كَانَ بِمِنًى رَكْعَتَيْنِ.
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்4
1083. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு (கடமையான நான்கு ரக்அத் களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அந்நாளில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சமின்றி பாதுகாப்போடுதான் இருந்தார்கள்.


அத்தியாயம் : 18