1025. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ خَرَجَ يَسْتَسْقِي قَالَ فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ يَدْعُو، ثُمَّ حَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى لَنَا رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ.
பாடம் : 17
நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது) முதுகை மக்களுக்குக் காட்டும் விதமாகத் திரும்பி நின்றார்களா?
1025. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க புறப்பட்டுச் சென்றபோது அவர்களை நான் பார்த்தேன். (உரையாற்றியபின் பிரார்த்திக்க முற்பட்டபோது) அவர்கள் மக்களை நோக்கி இருக்கும் விதத்தில் தமது முதுகைத் திருப்பி, கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்கலானார்கள்.
தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். பிறகு எங்களுக்கு இரண்டு ரக்அத் கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள்.
அத்தியாயம் : 15

1026. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْقَى فَصَلَّى رَكْعَتَيْنِ، وَقَلَبَ رِدَاءَهُ.
பாடம் : 18
மழைத் தொழுகை இரண்டு ரக்அத்களே
1026. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது, இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண் டார்கள்.

1027. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ فَصَلَّى رَكْعَتَيْنِ، وَقَلَبَ رِدَاءَهُ. قَالَ سُفْيَانُ فَأَخْبَرَنِي الْمَسْعُودِيُّ عَنْ أَبِي بَكْرٍ قَالَ جَعَلَ الْيَمِينَ عَلَى الشِّمَالِ.
பாடம் : 19
தொழுகைத் திடலுக்குச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திப்பது
1027. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க தொழும் திடலுக்குச் சென்றார் கள். கிப்லாவை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “தமது மேல்துண்டின் வலப்புறத்தை இடப் பக்கத் தோளின்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது.

1028. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدٍ، أَنَّ عَبَّادَ بْنَ تَمِيمٍ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الْمُصَلَّى يُصَلِّي، وَأَنَّهُ لَمَّا دَعَا ـ أَوْ أَرَادَ أَنْ يَدْعُوَ ـ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَحَوَّلَ رِدَاءَهُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ابْنُ زَيْدٍ هَذَا مَازِنِيٌّ، وَالأَوَّلُ كُوفِيٌّ هُوَ ابْنُ يَزِيدَ.
பாடம் : 20
மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது கிப்லாவை முன் னோக்குதல்
1028. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகை) தொழுவதற்காகத் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ‘அவர்கள் பிரார்த்தனை புரிந்தபோது’ அல்லது ‘பிரார்த்தனை புரிய முற்பட்ட போது’ கிப்லாவை முன்னோக்கினார்கள். தமது மேல்துண்டை (அதன் வலப் புறத்தை இடப் பக்க தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘மாஸினீ’ குலத்தைச் சேர்ந்தவர்; முன்பு இடம்பெற்ற (1022ஆவது) ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூஃபாவாசி ஆவார்.

1029. قَالَ أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَى رَجُلٌ أَعْرَابِيٌّ مِنْ أَهْلِ الْبَدْوِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَاشِيَةُ هَلَكَ الْعِيَالُ هَلَكَ النَّاسُ. فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ يَدْعُو، وَرَفَعَ النَّاسُ أَيْدِيَهُمْ مَعَهُ يَدْعُونَ، قَالَ فَمَا خَرَجْنَا مِنَ الْمَسْجِدِ حَتَّى مُطِرْنَا، فَمَا زِلْنَا نُمْطَرُ حَتَّى كَانَتِ الْجُمُعَةُ الأُخْرَى، فَأَتَى الرَّجُلُ إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، بَشِقَ الْمُسَافِرُ، وَمُنِعَ الطَّرِيقُ.
பாடம் : 21
மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்து வது
1029. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு வெள்ளிக்கிழமை அன்று கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; குடும்பமும் அழிந்துவிட்டது; மக்களும் அழிந்தனர்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர்.
நாங்கள் பள்ளிவாசலைவிட்டு வெளி யேறவில்லை. அதற்குள் எங்களுக்கு மழை பெய்தது. மறு வெள்ளிக்கிழமை வரும்வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டு விட்டன” என்று கூறினார்.

1030. وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَشَرِيكٍ، سَمِعَا أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ.
பாடம் : 21
மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்து வது
1030. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய அக்குள் களின் வெண்மையை நான் பார்க்குமள வுக்கு (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1031. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ.
பாடம் : 22
மழைவேண்டிப் பிரார்த்திக் கும்போது இமாம் கைகளை உயர்த்துவது
1031. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போதல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின்போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள்; (மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1032. حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ الْمَرْوَزِيُّ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ "" صَيِّبًا نَافِعًا "". تَابَعَهُ الْقَاسِمُ بْنُ يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ. وَرَوَاهُ الأَوْزَاعِيُّ وَعُقَيْلٌ عَنْ نَافِعٍ.
பாடம் : 23
மழை பொழியும்போது கூற வேண்டியவை
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(2:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸய்யிப்’ எனும் சொல்லுக்கு ‘மழை’ என்பது பொருள்.
(‘ஸய்யிப்’ என்பதன் கடந்தகால வினைச் சொற்களான) ஸாப, அஸாப ஆகியவற்றின் எதிர்கால வினைச்சொல் ‘யஸூபு’ என்பதாகும்.
1032. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால், ‘ஸய்யிபன் நாஃபிஅன்’ (பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1033. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَبَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ قَامَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا أَنْ يَسْقِيَنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ، وَمَا فِي السَّمَاءِ قَزَعَةٌ، قَالَ فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ، قَالَ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ، وَفِي الْغَدِ وَمِنْ بَعْدِ الْغَدِ وَالَّذِي يَلِيهِ إِلَى الْجُمُعَةِ الأُخْرَى، فَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ أَوْ رَجُلٌ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ، فَادْعُ اللَّهَ لَنَا. فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". قَالَ فَمَا جَعَلَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّمَاءِ إِلاَّ تَفَرَّجَتْ حَتَّى صَارَتِ الْمَدِينَةُ فِي مِثْلِ الْجَوْبَةِ، حَتَّى سَالَ الْوَادِي ـ وَادِي قَنَاةَ ـ شَهْرًا. قَالَ فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ حَدَّثَ بِالْجَوْدِ.
பாடம் : 24
ஒருவர் தமது தாடியில் தண் ணீர் வடியும் அளவுக்கு மழை யில் நனைவது
1033. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள்.- அப்போது ஒரு சிறு மேகம்கூட வானத்தில் காணப்பட வில்லை.- (நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தனை செய்து முடிப்பதற்குள்) மலை களைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது மேடையி-ருந்து இறங்கியிருக்க வில்லை; அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படியே) மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது.
(மறு ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘மற்றொரு மனிதர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துவிட்டன; செல்வங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே, (மழையை நிறுத்துமாறு) எங்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுங்கள்” என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம! ஹவாலைனா, வ லா அலைனா” (இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு இம்மழையைத் திருப்பிவிடுவாயாக எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே) எனப் பிரார்த்தித்தார்கள்.
வானத்தின் எப்பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அங்கெல்லாம் மேகங்கள் கலைந்துசெல்லாமல் இருக்கவில்லை. (மதீனா நகரைவிட்டு மேகம் விலகி அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டதால்) மதீனா பாதாளம் போன்று மாறிவிட்டது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த பெருமழை பற்றிப் பேசாமல் இருக்கவில்லை.

1034. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا، يَقُولُ كَانَتِ الرِّيحُ الشَّدِيدَةُ إِذَا هَبَّتْ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 25
காற்று பலமாக வீசும்போது...
1034. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடுமையான காற்று வீசும்போது, அ(தன் பாதிப்பான)து நபி (ஸல்) அவர் களது முகத்தில் காணப்படும்.11

1035. حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ "".
பாடம் : 26
“நான் (‘ஸபா’ எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
1035. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (‘ஸபா’ எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ‘ஆத்’ சமூகத்தார் (‘தபூர்’ எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர்.12
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1036. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ "".
பாடம் : 27
நிலநடுக்கங்களும் இறுதி நாளின் அடையாளங்களும்13
1036. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி கைப்பற்றப்படாத வரை,
நில நடுக்கங்கள் அதிகமாகாத வரை,
காலம் சுருங்கிடாத வரை,
குழப்பங்கள் வெளிப்படாத வரை,
‘ஹர்ஜ்’ (கொந்தளிப்பு) மிகுதியாகாத வரை,
-ஹர்ஜ் என்பது கொலையாகும்; கொலையாகும்-
உங்களிடையே செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1037. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا. قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا. قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ.
பாடம் : 27
நிலநடுக்கங்களும் இறுதி நாளின் அடையாளங்களும்13
1037. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைவா! எங்கள் ‘ஷாம்’ (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்கு வாயாக! இறைவா! எங்கள் ‘யமன்’ நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்குவாயாக!” என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்.
மக்கள் (சிலர்), “எங்கள் நஜ்த் (இராக்) நாட்டிலும் (வளம் ஏற்படப் பிரார்த்தியுங் களேன்!)” என்று (இரண்டு முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்.

1038. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ. فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا. فَذَلِكَ كَافِرٌ بِي مُؤْمِنٌ بِالْكَوْكَبِ "".
பாடம் : 28
“உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதாரத்திற்கு நீங்கள் பொய்யாக்குவதையே (நன்றி யாக) ஆக்குகிறீர்களா?” எனும் (56:82ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ‘ரிஸ்கக்கும்’ என்பதை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘ஷுக்ரக்கும்’ (உங்கள் நன்றியாக) என்று ஓதினார்கள்.
1038. ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள்.- அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கித் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர்.
அப்போது, “என் அடியார்களில் என்னை நம்பக்கூடியவர்களும் உள்ளனர்; (நன்றி கொன்று) என்னை மறுக்கக்கூடியவர்களும் உள்ளனர். ‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களே என்னை நம்பி நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். ‘இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது)’ என்று கூறியவர்களோ (நன்றி கொன்று) என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்” என அல்லாஹ் சொன்னான் என்று கூறினார்கள்.

1039. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مِفْتَاحُ الْغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلاَّ اللَّهُ لاَ يَعْلَمُ أَحَدٌ مَا يَكُونُ فِي غَدٍ، وَلاَ يَعْلَمُ أَحَدٌ مَا يَكُونُ فِي الأَرْحَامِ، وَلاَ تَعْلَمُ نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا، وَمَا تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ، وَمَا يَدْرِي أَحَدٌ مَتَى يَجِيءُ الْمَطَرُ "".
பாடம் : 29
மழை எப்போது வரும் என் பதை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார் கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.14
1039. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவுகோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.
நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.
(பெண்களின்) கருப்பைகளில் என்ன உருவாகும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
எந்த உயிரும், தான் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது.
எந்த உயிரும், தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது.
மழை எப்போதுவரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.15
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கிரகணங்கள்
1040. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَانْكَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجُرُّ رِدَاءَهُ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلْنَا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، حَتَّى انْجَلَتِ الشَّمْسُ فَقَالَ صلى الله عليه وسلم "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا، وَادْعُوا، حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ "".
பாடம் : 1
சூரிய கிரகணத்தின்போது தொழுவது2
1040. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்க ளும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும்வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
பிறகு, “யாருடைய இறப்புக்காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால், உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும்வரை நீங்கள் தொழுங்கள்; பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16

1041. حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَقُومُوا فَصَلُّوا "".
பாடம் : 1
சூரிய கிரகணத்தின்போது தொழுவது2
1041. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் யாருடைய இறப்புக்காக வும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. ஆயினும், அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்று களாகும். எனவே, அவற்றை நீங்கள் கண் டால் எழுந்து, (இறையைத்) தொழுங்கள்.
இதை அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர் - ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1042. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَصَلُّوا "".
பாடம் : 1
சூரிய கிரகணத்தின்போது தொழுவது2
1042. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய இறப்புக்காகவும் பிறப்புக் காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. ஆயினும், அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
1042. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய இறப்புக்காகவும் பிறப்புக் காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. ஆயினும், அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
1043. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ كَسَفَتِ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ فَصَلُّوا وَادْعُوا اللَّهَ "".
பாடம் : 1
சூரிய கிரகணத்தின்போது தொழுவது2
1043. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினம் (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாருடைய இறப்புக்காகவும் யாருடைய பிறப்புக்காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவ தில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) தொழுங் கள்; அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள்.

1044. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ خَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالنَّاسِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ مَا فَعَلَ فِي الأُولَى، ثُمَّ انْصَرَفَ وَقَدِ انْجَلَتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا، وَصَلُّوا وَتَصَدَّقُوا "". ثُمَّ قَالَ "" يَا أُمَّةَ مُحَمَّدٍ، وَاللَّهِ مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ تَزْنِيَ أَمَتُهُ، يَا أُمَّةَ مُحَمَّدٍ، وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا "".
பாடம் : 2
கிரகணத்தின்போது தானதர்மம் செய்தல்
1044. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து) எழுந்து நின்றார்கள். அந்த நிலையை நீண்ட நேரம் செய்தார்கள். -இந்த நிலையானது முதல் நிலையை விடச் சிறியதாகவே இருந்தது.- பிறகு (மீண்டும்) ருகூஉ செய்தார்கள். அதை நீண்ட நேரம் செய்தார்கள் -அது முதல் ருகூவைவிடக் குறைவாக இருந்தது- பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள்.
பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள்.
பிறகு அவர்கள் மக்களுக்கு உரை யாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்), “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால், அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங் கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
பிறகு, “முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.
முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அறிவதை யெல்லாம் நீங்களும் அறிந்தால் குறை வாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர் கள்!” என்று கூறினார்கள்.