1005. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي وَحَوَّلَ رِدَاءَهُ.
பாடம் : 1 மழை வேண்டுதலும், மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திட லுக்குப்) புறப்பட்டுச் சென்ற தும்
1005. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திப்பதற்காக (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். (பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்தபோது) தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் இருந்த பகுதியை இடப் பக்கத் தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.

அத்தியாயம் : 15
1006. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ يَقُولُ "" اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ "". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ "". قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ هَذَا كُلُّهُ فِي الصُّبْحِ.
பாடம் : 2 “யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர் களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
1006. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) கடைசி ரக்அத்தின் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும், “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை கடுமையாக்குவாயாக! இறைவா! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று கூறிவந்தார்கள்.

மேலும் ‘ஃகிஃபார்’ குலத்தாருக்கு இறைவன் மன்னிப்பு அளிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தாருக்கு அல்லாஹ் சமாதானத்தை அளிப்பானாக!” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்தப் பிரார்த்தனை முழுவதும் சுப்ஹு தொழுகையிலேயே நடந்தது.2


அத்தியாயம் : 15
1007. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا رَأَى مِنَ النَّاسِ إِدْبَارًا قَالَ "" اللَّهُمَّ سَبْعٌ كَسَبْعِ يُوسُفَ "". فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَىْءٍ حَتَّى أَكَلُوا الْجُلُودَ وَالْمَيْتَةَ وَالْجِيَفَ، وَيَنْظُرَ أَحَدُهُمْ إِلَى السَّمَاءِ فَيَرَى الدُّخَانَ مِنَ الْجُوعِ، فَأَتَاهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّكَ تَأْمُرُ بِطَاعَةِ اللَّهِ وَبِصِلَةِ الرَّحِمِ وَإِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا، فَادْعُ اللَّهَ لَهُمْ قَالَ اللَّهُ تَعَالَى {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} إِلَى قَوْلِهِ {عَائِدُونَ * يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى} فَالْبَطْشَةُ يَوْمَ بَدْرٍ، وَقَدْ مَضَتِ الدُّخَانُ وَالْبَطْشَةُ وَاللِّزَامُ وَآيَةُ الرُّومِ.
பாடம் : 2 “யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர் களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
1007. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிப் பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளை அளித்(து இவர் களைத் திருத்)திடுவாயாக!” என்று பிரார்த் தித்தார்கள்.

அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங் களையும் புசிக்க நேர்ந்தது. பசி பட்டினி யால் (கண் பஞ்சடைந்து பார்வை மங்கி) அவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி னால் (தமக்கும் வானத்திற்குமிடையே) அவர் புகை (போன்ற ஒன்றை)யே காண்பார்.

இந்நிலையில் (குறைஷியரின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் உறவுகளைப் பேண வேண்டும் என்றும் நீர் கட்டளையிடுகிறீர். உம்முடைய சமுதாயத்தார் அழிந்து விட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்திப்பீராக!” என்று கூறினார்.

பிறகு “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீராக!” என்று தொடங்கி, “நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிச் செல்கிறீர்கள்; கடுமையான முறையில் நாம் பிடிக்கும் அந்நாளில்” என்று முடியும் (44:10-16) வசனங்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ (பத்ஷத்) என்பது பத்ர் போரைக் குறிக்கும்.

புகையும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் ‘அர்ரூம்’ அத்தியாயத்திலுள்ள (பாரசீகர் களால் கிழக்கு ரோமர்கள் தோற்கடிக்கப் படுவது பற்றிய) முன்னறிவிப்பும் நடந்து முடிந்துவிட்டன.3

அத்தியாயம் : 15
1008. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَتَمَثَّلُ بِشِعْرِ أَبِي طَالِبٍ وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثِمَالُ الْيَتَامَى عِصْمَةٌ لِلأَرَامِلِ
பாடம் : 3 பஞ்சம் ஏற்படும்போது மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது
1008. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அபூதா-ப் பாடிய (பின்வரும்) கவிதையை இப்னு உமர் (ரலி) அவர்கள் எடுத்தாள்வதை நான் கேட்டிருக்கிறேன்:

வெண்ணிறம் கொண்டவர்;

இவர் முகமதனை முன்வைத்தே

முகில்மழை வேண்டப்படும்.

அநாதைகளின் புக-டம்;

விதவைகளின் காவலர்.4


அத்தியாயம் : 15
1009. وَقَالَ عُمَرُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا سَالِمٌ، عَنْ أَبِيهِ، رُبَّمَا ذَكَرْتُ قَوْلَ الشَّاعِرِ وَأَنَا أَنْظُرُ، إِلَى وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي، فَمَا يَنْزِلُ حَتَّى يَجِيشَ كُلُّ مِيزَابٍ. وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثِمَالَ الْيَتَامَى عِصْمَةً لِلأَرَامِلِ وَهْوَ قَوْلُ أَبِي طَالِبٍ.
பாடம் : 3 பஞ்சம் ஏற்படும்போது மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது
1009. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது, அவர்களின் முகத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் (சொற்பொழிவு மேடையி-ருந்து) இறங்கவில்லை. எல்லா நீர்வழிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நான்,

“வெண்ணிறம் கொண்டவர்;

இவர் முகமதனை முன்வைத்தே

முகில்மழை வேண்டப்படும்.

அநாதைகளின் புக-டம்;

விதவைகளின் காவலர்”

எனும் கவிதையை நினைத்துக் கொள்வேன். அது அபூதா-ப் அவர்களது கவிதையாகும்.


அத்தியாயம் : 15
1010. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ فَيُسْقَوْنَ.
பாடம் : 3 பஞ்சம் ஏற்படும்போது மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது
1010. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில்

முத்த-ப் (ரலி) அவர்களை, மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள்.

(அந்நேரங்களில்) உமர் (ரலி) அவர்கள், “இறைவா! எங்கள் நபியவர்கள் (இருக்கும் வரை அவர்களைப் பிரார்த்திக்கச் சொல்லி, அதன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். நீயும் (அதை ஏற்று) எங்களுக்கு மழை பொழிவித்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ் (ரலி) அவர்களைப் பிரார்த்திக்கச் சொல்லி அதன்) மூலம் உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!” என்று வேண்டுவார்கள். அதன்படி மக்களுக்கு மழையும் பெய்துவந்தது.5

அத்தியாயம் : 15
1011. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا وَهْبٌ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْقَى فَقَلَبَ رِدَاءَهُ.
பாடம் : 4 (இமாம்) மழைவேண்டிப் பிரார்த் திக்கும்போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொள்வது
1011. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோள்மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.6


அத்தியாயம் : 15
1012. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، يُحَدِّثُ أَبَاهُ عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَانَ ابْنُ عُيَيْنَةَ يَقُولُ هُوَ صَاحِبُ الأَذَانِ، وَلَكِنَّهُ وَهْمٌ، لأَنَّ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيُّ، مَازِنُ الأَنْصَارِ.
பாடம் : 4 (இமாம்) மழைவேண்டிப் பிரார்த் திக்கும்போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொள்வது
1012. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது ‘கிப்லா’ திசையை முன்னோக்கி, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர் களே தொழுகை அறிவிப்பு முறையான பாங்கை (கனவில்) கண்டவர் ஆவார் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்.

ஆனால், அது தவறு. ஏனெனில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அன்சாரிகளிலுள்ள ‘மாஸின்’ குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். (பாங்கைக் கனவில் கண்டவர் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.)

அத்தியாயம் : 15
1013. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلاً، دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ باب كَانَ وُجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ فَقَالَ "" اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا "". قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ، قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ "". قَالَ فَانْقَطَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ. قَالَ شَرِيكٌ فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ قَالَ لاَ أَدْرِي.
பாடம் : 5 இறைச்சட்டங்கள் பாழாக்கப்படும்போது வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன் தன் படைப்புகளைப் பஞ்சத்தால் தண்டிப்பது7 பாடம் : 6 ஜுமுஆ தொழுகை நடைபெறும் பள்ளிவாச-ல் மழை வேண்டிப் பிரார்த்தித்தல்8
1013. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மேடைக்கு எதிர்த் திசையி-ருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்தார். அவர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ் வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடை(ச் செல்வங்)கள் அழிந்துவிட்டன; சாலை களில் போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச்செய்வான்” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டத்தையோ தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) வேறு எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) ‘சல்உ’ மலைக்கும் இடையே (மழை மேகத்தைப் பார்க்க முடியாதவாறு தடுக்கக்கூடிய) எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னா-ருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு (அடிவானில்) பரவியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு) நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை.

அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தியபோது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால் நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், கோட்டைகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச்செய்வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம்.

இதன் அறிவிப்பாளரான ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்தவர்தானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 15
1014. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ شَرِيكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ جُمُعَةٍ مِنْ بَابٍ كَانَ نَحْوَ دَارِ الْقَضَاءِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا، اللَّهُمَّ أَغِثْنَا "". قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ، وَلاَ قَزَعَةً، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ. قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، فَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا عَنَّا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ "". قَالَ فَأَقْلَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ. قَالَ شَرِيكٌ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ فَقَالَ مَا أَدْرِي.
பாடம் : 7 ஜுமுஆ உரை நிகழ்த்தும்போது கிப்லாவை நோக்கித் திரும்பாமலேயே மழை வேண்டிப் பிரார்த்தித்தல்
1014. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ‘தாருள் களா’ எனும் இல்லத்தின் திசையி-ருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக் குள் வந்தார்.9

அவர் நின்றுகொண்டே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; சாலை களில் போக்குவரத்து நின்றுவிட்டது. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழியச்செய்வான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்க ளுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக்கூட்டத்தையோ தனி மேகத் தையோ நாங்கள் பார்க்கவில்லை. எங்களுக்கும் ‘சல்உ’ மலைக்கும் இடையே (மழைமேகத்தைப் பார்க்க முடியாதவாறு) எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியே இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின்னா-ருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு (அடிவானில்) பரவியது. பிறகு மழை பொழிந்தது.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு) நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. (அடுத்த) ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது அதே வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ் வின் தூதரே! (பெருமழையால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, எங்களைவிட்டு மழையை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்!” என்றார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள். பிறகு “இறைவா! எங்கள் சுற்றுப்புறங் களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடு வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின்மீது (இம்மழையைப் பொழியச்செய்வாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே மழை (மதீனாவில்) நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம்.

ஷரீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்த மனிதர்தானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 15
1015. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا. فَدَعَا فَمُطِرْنَا، فَمَا كِدْنَا أَنْ نَصِلَ إِلَى مَنَازِلِنَا فَمَا زِلْنَا نُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الْمُقْبِلَةِ. قَالَ فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". قَالَ فَلَقَدْ رَأَيْتُ السَّحَابَ يَتَقَطَّعُ يَمِينًا وَشِمَالاً يُمْطَرُونَ وَلاَ يُمْطَرُ أَهْلُ الْمَدِينَةِ.
பாடம் : 8 சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மழை வேண்டிப் பிரார்த்தித்தல்
1015. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது. ஆகவே, எங்களுக்கு மழை பொழியச்செய்யுமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எங்களுக்கு மழை பெய்தது. (எந்த அளவுக்கென்றால்) எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியவில்லை. அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை நீடித்தது.

(அந்த ஜுமுஆவில்) ‘அந்த மனிதரோ’ அல்லது ‘மற்றொரு மனிதரோ’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த மழை மேகத்)தை எங்களைவிட்டு (வேறு பகுதிக் குத்) திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக)! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று பிரார்த் தித்தார்கள். உடனே அம்மேகம் வலப் புறமும் இடப் புறமுமாகப் பிரிந்து சென்று அங்கிருந்தவர்களுக்குப் பொழிந்தது. மதீனாவாசிகளுக்கு மழை பொழிய வில்லை.

அத்தியாயம் : 15
1016. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكَتِ الْمَوَاشِي وَتَقَطَّعَتِ السُّبُلُ. فَدَعَا، فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ، ثُمَّ جَاءَ فَقَالَ تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْمَوَاشِي فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا. فَقَامَ صلى الله عليه وسلم فَقَالَ "" اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ "". فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ.
பாடம் : 9 மழை வேண்டிப் பிரார்த்திக்க (தனித் தொழுகை நடத்தாமல்) ஜுமுஆ தொழுகையை (அதற்குப்) பயன்படுத்திக்கொள்வது
1016. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது.

(அடுத்த ஜுமுஆவில்) அதே மனிதர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் மழையை நிறுத்துவான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து, “இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியனவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகம் ஆடை விலகுவதைப் போன்று (மதீனாவி-ருந்து) விலகிவிட்டது.

அத்தியாயம் : 15
1017. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ، فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمُطِرُوا مِنْ جُمُعَةٍ إِلَى جُمُعَةٍ، فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْمَوَاشِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ "". فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ.
பாடம் : 10 கனமழையால் பாதைகள் துண் டிக்கப்படும்போது பிரார்த் திப்பது
1017. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத் தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை மக்களுக்கு மழை பொழிந்தது.

(அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கன மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவைவிட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது.

அத்தியாயம் : 15
1018. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا مُعَافَى بْنُ عِمْرَانَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، شَكَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم هَلاَكَ الْمَالِ وَجَهْدَ الْعِيَالِ، فَدَعَا اللَّهَ يَسْتَسْقِي، وَلَمْ يَذْكُرْ أَنَّهُ حَوَّلَ رِدَاءَهُ وَلاَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ.
பாடம் : 11 நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது தமது மேல் துண்டை மாற்றிப் போட வில்லை (எனவே, ஜுமுஆ நாளில் மழை வேண்டும்போது மேல்துண்டை மாற்றிப் போடுவது அவசியமில்லை) எனும் கருத்து
1018. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு வெள்ளிக்கிழமை அன்று) ஒரு மனிதர் (கடும் வறட்சியால் கால்நடைச்) செல்வம் அழிவது பற்றியும் குடும்பங்கள் அல்லலுறுவது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மழை பொழிவிக்குமாறு பிரார்த்தித்தார்கள்.

இதில், நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டை மாற்றிப்போட்டதாகவோ கிப்லாவை முன்னோக்கியதாகவோ அறிவிப்பாளர் கூறவில்லை.

அத்தியாயம் : 15
1019. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْمَوَاشِي، وَتَقَطَّعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ. فَدَعَا اللَّهَ، فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ، فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْمَوَاشِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ عَلَى ظُهُورِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ "". فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ.
பாடம் : 12 மக்கள் இமாமிடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டால் அதை அவர் மறுக்கலாகாது.
1019. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. (மழை வேண்டி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது.

(அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! (கனமழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவை விட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது.

அத்தியாயம் : 15
1020. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ أَتَيْتُ ابْنَ مَسْعُودٍ فَقَالَ إِنَّ قُرَيْشًا أَبْطَئُوا عَنِ الإِسْلاَمِ،، فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَتَّى هَلَكُوا فِيهَا وَأَكَلُوا الْمَيْتَةَ وَالْعِظَامَ، فَجَاءَهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ، جِئْتَ تَأْمُرُ بِصِلَةِ الرَّحِمِ، وَإِنَّ قَوْمَكَ هَلَكُوا، فَادْعُ اللَّهَ. فَقَرَأَ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} ثُمَّ عَادُوا إِلَى كُفْرِهِمْ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى} يَوْمَ بَدْرٍ. قَالَ وَزَادَ أَسْبَاطٌ عَنْ مَنْصُورٍ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَسُقُوا الْغَيْثَ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ سَبْعًا، وَشَكَا النَّاسُ كَثْرَةَ الْمَطَرِ فَقَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". فَانْحَدَرَتِ السَّحَابَةُ عَنْ رَأْسِهِ، فَسُقُوا النَّاسُ حَوْلَهُمْ.
பாடம் : 13 பஞ்சத்தின்போது இணைவைப் பாளர்கள் முஸ்-ம்களிடம் பிரார்த்திக்கும்படி கோரினால்...
1020. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் கூறினார்கள்:

குறைஷி (இணைவைப்பாளர்)கள் இஸ்லாத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தியபோது, (அவர்களைத் திருத்த) அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, (பட்டினியால்) அழிவைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் (பட்டினியால்) செத்தவற்றையும் எலும்புகளையும் புசிக்கலாயினர்.

இந்நிலையில் (குறைஷி இணைவைப் பாளர்களின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உறவுகளைப் பேணுமாறு உத்தரவிட்டபடி நீர் வந்தீர். உமது சமுதாயமோ அழிந்து கொண்டிருக்கின்றது. எனவே, (பஞ்சம் விலக) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீர்” (44:10) எனும் வசனத்தை ஓதிக் காட்டி னார்கள்.

(பஞ்சம் விலகியதும் பழையபடி) குறைஷியர் தம் இறைமறுப்புக்கே திரும் பிச் சென்றுவிட்டனர். இதைத்தான் “(அவர்களை) நாம் பலமாகப் பிடிக்கும் நாளில்” (44:16) எனும் வசனம் குறிப்பிடு கின்றது. (இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ என்பது) பத்ர் போர் தினமாகும்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்களுக்கு மழை பொழிந்தது. ஏழு நாட்கள் அடை மழை பெய்தது. கனமழை குறித்து மக்கள் (நபியவர்களிடம்) முறையிட்டனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே உச்சியிலிருந்த மேகம் விலகியது. சுற்றுப்புற மக்களுக்கு மழை பொழிந்தது.

அத்தியாயம் : 15
1021. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ، فَقَامَ النَّاسُ فَصَاحُوا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ وَاحْمَرَّتِ الشَّجَرُ وَهَلَكَتِ الْبَهَائِمُ، فَادْعُ اللَّهَ يَسْقِينَا. فَقَالَ "" اللَّهُمَّ اسْقِنَا "". مَرَّتَيْنِ، وَايْمُ اللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً مِنْ سَحَابٍ، فَنَشَأَتْ سَحَابَةٌ وَأَمْطَرَتْ، وَنَزَلَ عَنِ الْمِنْبَرِ فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ لَمْ تَزَلْ تُمْطِرُ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا، فَلَمَّا قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ صَاحُوا إِلَيْهِ تَهَدَّمَتِ الْبُيُوتُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يَحْبِسُهَا عَنَّا. فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". فَكُشِطَتِ الْمَدِينَةُ، فَجَعَلَتْ تُمْطِرُ حَوْلَهَا وَلاَ تَمْطُرُ بِالْمَدِينَةِ قَطْرَةً، فَنَظَرْتُ إِلَى الْمَدِينَةِ وَإِنَّهَا لَفِي مِثْلِ الإِكْلِيلِ.
பாடம் : 14 மழை அதிகமாகும்போது “ஹவாலைனா, வ லா அலைனா” என்று பிரார்த்திப்பது
1021. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து உரத்த

குர-ல், “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது; (பச்சை) மரங்கள் (காய்ந்து) சிவந்துவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே, மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்?” என்று கேட்டனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று (இரு முறை) கூறி னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது வானத்தில் ஒரு சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் உருவாகி மழை பொழிந்தது.

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையி-ருந்து இறங்கி (ஜுமுஆ தொழுகை) தொழுவித்தார்கள்; தொழுகையை முடித்தார்கள். அப்போதும் மழை விடாமல் அடுத்த ஜுமுஆவரை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி மக்கள் எழுந்து, “(பெரு மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நம்மைவிட்டு மழையை நிறுத்துவான்” என்று உரத்த குர-ல் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டு) புன்னகை புரிந்தார்கள். பின்னர் “அல்லாஹும்ம! ஹவாலைனா; வ லா அலைனா” (“இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு இதைத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!”) என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே (சூழ்ந்திருந்த மேகம் விலகி) மதீனா தெளிவடைந்தது. அதன் சுற்றுப்புறங்களில் மழை பொழியலாயிற்று. மதீனாவில் ஒரு துளி மழைகூடப் பெய்ய வில்லை. அப்போது நான் மதீனாவை நோக்கினேன். அது கிரீடத்திற்குள் இருப்பதைப் போன்று (அதாவது நகரைச் சுற்றி மேகங்கள் சூழ நடுவில் இருப்பதைப் போன்று) இருந்தது.

அத்தியாயம் : 15
1022. وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ وَخَرَجَ مَعَهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَزَيْدُ بْنُ أَرْقَمَ رضى الله عنهم فَاسْتَسْقَى، فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ فَاسْتَغْفَرَ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يَجْهَرُ بِالْقِرَاءَةِ وَلَمْ يُؤَذِّنْ، وَلَمْ يُقِمْ. قَالَ أَبُو إِسْحَاقَ وَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 15 நின்றுகொண்டே மழை வேண் டிப் பிரார்த்தித்தல்
1022. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி

(ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்த திறந்தவெளிக்குப்) புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகி யோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரி னார்கள்.

பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.10

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துள் ளார்கள்.


அத்தியாயம் : 15
1023. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ بِالنَّاسِ يَسْتَسْقِي لَهُمْ، فَقَامَ فَدَعَا اللَّهَ قَائِمًا، ثُمَّ تَوَجَّهَ قِبَلَ الْقِبْلَةِ، وَحَوَّلَ رِدَاءَهُ فَأُسْقُوا.
பாடம் : 15 நின்றுகொண்டே மழை வேண் டிப் பிரார்த்தித்தல்
1023. நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்காக மழைவேண்டிப் பிரார்த்திக்க மக்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். நின்றவண்ணமே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு ‘கிப்லா’ திசை நோக்கித் திரும்பினார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். மக்களுக்கு மழை பொழிந்தது.

அத்தியாயம் : 15
1024. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي فَتَوَجَّهَ إِلَى الْقِبْلَةِ يَدْعُو، وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ.
பாடம் : 16 மழைவேண்டித் தொழும்போது சப்தமிட்டு குர்ஆன் ஓதுவது
1024. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (திறந்தவெளி நோக்கிப்) புறப்பட்டுச் சென்றார்கள். (அங்கு) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிரார்த்திக்கலானார்கள். தமது மேல் துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள்.

அத்தியாயம் : 15