708. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلاَةً وَلاَ أَتَمَّ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أُمُّهُ.
பாடம் : 65 (தொழுதுகொண்டிருப்பவரின்) குழந்தை அழும்போது (இமாம்) சுருக்கமாகத் தொழுவிப்பது
708. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் (அதே சமயம் எதுவும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிக்கக் கூடிய வேறு எந்த இமாமுக்குப் பின் னாலும் நான் தொழுததில்லை. (பின்னால் தொழும் பெண்களுடைய) குழந்தையின் அழுகையை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாய்க்குச் சஞ்சலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுவார்கள்.


அத்தியாயம் : 10
709. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنِّي لأَدْخُلُ فِي الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ "".
பாடம் : 65 (தொழுதுகொண்டிருப்பவரின்) குழந்தை அழும்போது (இமாம்) சுருக்கமாகத் தொழுவிப்பது
709. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் நான் தொழுகையைத் துவக்கு வேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களுடைய) குழந்தையின் அழு கையை நான் செவியுறுவேன். குழந்தை யின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால், என் தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.


அத்தியாயம் : 10
710. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنِّي لأَدْخُلُ فِي الصَّلاَةِ فَأُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ "". وَقَالَ مُوسَى حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 65 (தொழுதுகொண்டிருப்பவரின்) குழந்தை அழும்போது (இமாம்) சுருக்கமாகத் தொழுவிப்பது
710. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் நான் தொழுகையை ஆரம் பிப்பேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களுடைய) குழந்தையின் அழுகை யைச் செவியுறுவேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமை யாகக் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால், (என் தொழுகையை) சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
711. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ.
பாடம் : 66 (ஏற்கனவே ஒரு தொழுகையைத்) தொழுதவர், பின்னர் (அதே தொழுகையை) மக்களுக்குத் தொழுவிப்பது
711. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் (பின் ஜபல்-ர-) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். பிறகு தம் சமுதாயத்தாரிடம் சென்று (அதே தொழுகையை) அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
712. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ "". قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي فَلاَ يَقْدِرُ عَلَى الْقِرَاءَةِ. قَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ "". فَقُلْتُ مِثْلَهُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ "" إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ "". فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ وَقَعَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ. تَابَعَهُ مُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 67 இமாம் சொல்லும் தக்பீரை (உரத்த குரலில்) ஒருவர் மக்களுக்கு எட்டச்செய்வது
712. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “(என் தந்தை) அபூபக்ர் அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதர்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுதுவிடுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது” என்று கூறினேன். “அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபியவர்கள் (மீண்டும்) சொன்னார்கள்.

நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் நபியவர்கள், “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டபோது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல்) தம் கால்கள் பூமியில் இழுபட வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்தி-ருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் தொழுகை நடத்துங்கள்’ என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும், அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்) தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபிய வர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குர-ல்) கூறிக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
713. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ. فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ "". فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعِ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ. قَالَ "" إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ "". فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ يَخُطَّانِ فِي الأَرْضِ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ، فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ رضى الله عنه.
பாடம் : 68 இமாமைப் பின்பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள் தொழுவது நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் இருந்தவர் களிடம்) “நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும்” என்று சொன்னதாக அறிவிக்கப்படுகிறது.
713. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோய் அதிகமானபோது, அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால், (மனம் நெகிழ்ந்து அழுவதால்) அவர் களால் மக்களுக்குக் கேட்கும் விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று சொன்னேன்.

அப்போது (மீண்டும்) “அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள். நான் (அருகில் இருந்த) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அபூபக்ர் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதரா வார்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால் மக்களுக்குக் கேட்கும் விதமாக அவர்கள் ஓதமாட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று நபியவர்களிடம் சொல்லுங்கள்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பெண் களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறி னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டார்கள். எனவே, இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி, தம்மிரு கால்கள் பூமியில் இழுபட வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் போனார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி (அங்கேயே நில்லுங்கள் என) சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றபடி தொழுதார்கள். அமர்ந்தபடி தொழுதுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழ, மக்கள் அபூபக்ர்

(ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழு தனர்.

அத்தியாயம் : 10
714. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقَصُرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَصَدَقَ ذُو الْيَدَيْنِ "". فَقَالَ النَّاسُ نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ.
பாடம் : 69 இமாமுக்கு (தமது தொழுகை குறித்து) ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மக்களின் சொல்லை அவர் ஏற்கலாமா?
714. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் நான்கு ரக்அத் தொழுகை யொன்றை) இரண்டு ரக்அத்களில் முடித்து விட்டார்கள். அப்போது அவர்களிடம் ‘துல்யதைன்’ (நீண்ட கைகளை உடையவர்) என்பவர், “தொழுகை(யின் ரக்அத்) சுருக் கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “துல்யதைன் சொல்வது உண்மைதானா?” என்று (மக்களிடம்) கேட்க, மக்கள் ‘ஆம்’ என்று பதிலளித்த னர். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று இன்னும் இரண்டு ரக்அத்களைத் தொழு(வித்)துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு ‘தக்பீர்’ கூறி (வழக்கமாக) ‘தாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று’ அல்லது ‘(அதைவிட) நீண்ட நேரம்’ (மறதிக்குரிய) சிரவணக்கம் செய்தார்கள்.


அத்தியாயம் : 10
715. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ رَكْعَتَيْنِ، فَقِيلَ صَلَّيْتَ رَكْعَتَيْنِ. فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ.
பாடம் : 69 இமாமுக்கு (தமது தொழுகை குறித்து) ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மக்களின் சொல்லை அவர் ஏற்கலாமா?
715. அபூஹுûரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அப்போது (அவர்களிடம்), “நீங்கள் இரண்டு ரக்அத்கள்தான் தொழு(வித்)தீர்கள்” என்று சொல்லப்பட்டது.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (இன்னும்) இரண்டு ரக்அத்கள் தொழு (வித்)துவிட்டு பிறகு ‘சலாம்’ கொடுத்தார்கள். பின்னர் (மறதிக்குரிய) இரு சிரவணக் கங்கள் (சஜ்தா) செய்தார்கள்.

அத்தியாயம் : 10
716. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ "" مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ "". قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ. فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ "". قَالَتْ عَائِشَةُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَهْ، إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ "". قَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا.
பாடம் : 70 தொழுகையில் இமாம் அழு தால்... அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையின் கடைசி வரிசையில் நின்றுகொண்டிருந்த நான், “என் சோகத் தையும் கவலையையும் அல்லாஹ்விடம் மட்டுமே நான் முறையிடுகிறேன்” (12:86) எனும் இறைவசனத்தை (தொழுகையில்) ஓதியபடி உமர் (ரலி) அவர்கள் தேம்பியழுவதைச் செவியுற்றேன்.
716. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயி-ருந்தபோது, “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று (மக்களிடம் மீண்டும்) கூறினார்கள். நான் (உமர் (ரலி) அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், “அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களைப் பணியுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(போதும்) நிறுத்துங்கள். (பெண் களாகிய) நீங்கள், யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக் கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், “உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை” என்று கூறினார்.

அத்தியாயம் : 10
717. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ "".
பாடம் : 71 ‘இகாமத்’ கூறும்போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசை களை ஒழுங்குபடுத்துவது
717. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.34

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 10
718. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أَقِيمُوا الصُّفُوفَ فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي "".
பாடம் : 71 ‘இகாமத்’ கூறும்போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசை களை ஒழுங்குபடுத்துவது
718. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில். நான் எனது முதுகுக்குப் பின்புறம் உங்களைக் காண்கிறேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
719. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَجْهِهِ فَقَالَ "" أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي "".
பாடம் : 72 வரிசைகளை ஒழுங்குபடுத்தும் போது இமாம் மக்களை நோக்கித் திரும்புவது
719. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “வரிசைகளை நேராக்குங்கள். (இடைவெளி யின்றி) நெருக்கமாக நில்லுங்கள். ஏனெனில், என் முதுகுக்குப் பின்புறமாக உங்களை நான் காண்கிறேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
720. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الشُّهَدَاءُ الْغَرِقُ وَالْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْهَدْمُ "
பாடம் : 73 முதல் வரிசை(யின் சிறப்பு)
720. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர், வயிற்றுப்போக்கால் இறந்தவர், கொள்ளை நோயால் இறந்தவர், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் ஆகியோர் உயிர்த்தியாகிகள் ஆவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்


அத்தியாயம் : 10
721. . وَقَالَ " وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا {إِلَيْهِ} وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الصَّفِّ الْمُقَدَّمِ لاَسْتَهَمُوا ".
பாடம் : 73 முதல் வரிசை(யின் சிறப்பு)
721. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையை) ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள்

அறிவார்களானால், அதற்காக அவர்கள் விரைந்து வருவார்கள். இஷா தொழுகை யிலும் சுப்ஹு தொழுகையிலும் உள்ள (மகத்துவத்)தை அவர்கள் அறிவார் களானால், தவழ்ந்தேனும் (கூட்டுத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியில் (நிற்பதில்) உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிவார் களானால், அதற்காக(ப் போட்டி போட்டு) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
722. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ. وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ، وَأَقِيمُوا الصَّفَّ فِي الصَّلاَةِ، فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ الصَّلاَةِ "".
பாடம் : 74 வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையின் நிறைவில் அடங் கும்.
722. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவ ருக்கு நீங்கள் முரண்படாதீர்கள். அவர் குனிந்(து ருகூஉ செய்)தால், நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள். அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால், நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால், நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள். தொழுகை வரிசையை ஒழுங்குபடுத்துங்கள். ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதில் அடங்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 10
723. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ "".
பாடம் : 74 வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையின் நிறைவில் அடங் கும்.
723. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (முழு மையாக) நிறைவேற்றுவதில் அடங்கும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
724. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، قَالَ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَدِمَ الْمَدِينَةَ فَقِيلَ لَهُ مَا أَنْكَرْتَ مِنَّا مُنْذُ يَوْمِ عَهِدْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا أَنْكَرْتُ شَيْئًا إِلاَّ أَنَّكُمْ لاَ تُقِيمُونَ الصُّفُوفَ. وَقَالَ عُقْبَةُ بْنُ عُبَيْدٍ عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ قَدِمَ عَلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ الْمَدِينَةَ بِهَذَا.
பாடம் : 75 தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்தாமலிருப்பதன் குற்றம்
724. புஷைர் பின் யசார் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் (பஸ்ராவி-ருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாறாக எதை நீங்கள் எங்களிடம் காண்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “நீங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துவதில்லை என்பதைத் தவிர வேறெதையும் நான் உங்களிடம் வித்தி யாசமாகக் காணவில்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உக்பா பின் உபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு எங்களிடம் வந்தபோது’ என ஹதீஸ் ஆரம்பமாகிறது.

அத்தியாயம் : 10
725. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَقِيمُوا صُفُوفَكُمْ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي "". وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ وَقَدَمَهُ بِقَدَمِهِ.
பாடம் : 76 தொழுகை வரிசையில் தோளுடன் தோளையும் பாதத்துடன் பாதத்தையும் இணைத்து நிற்றல் (தொழுகையில் நிற்கும்போது) எங்களில் ஒருவர் தமது கணுக்காலை தமக்கு அருகி-ருப்பவரின் கணுக்காலுடன் சேர்த்துக்கொள்வதை நான் பார்த்துள்ளேன் என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:
725. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண் கிறேன்” என்று கூறினார்கள்.

(ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோளைத் தமக்கு அருகி-ருப்பவரின் தோளுடனும், தமது பாதத்தைத் தமக்கு அருகி-ருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக்கொண்டு (அந்த அளவுக்கு நெருக்கமாக) நிற்பார்.

அத்தியாயம் : 10
726. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى وَرَقَدَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 77 இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வரின் தொழுகை நிறைவேறவே செய்யும்.
726. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவு (என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில்) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே என் பின்தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தி தொழுதார்கள்; பின்னர் உறங்கினார்கள்.

(ஃபஜ்ர் நேரமானபோது) அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகைக்கு அழைக்க) வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யாமலேயே தொழுதார்கள்.

அத்தியாயம் : 10
727. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
பாடம் : 78 (ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் ஒரு பெண் கூட ஒரு வரிசை என்றே கருதப்படுவார்.
727. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள்.

அத்தியாயம் : 10