688. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ وَهْوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا "".
பாடம் : 51 மக்களால் பின்பற்றப்பட வேண்டுமென்பதற்காகவே இமாம் ஏற்படுத்தப்படுகிறார். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது அமர்ந்தவாறே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இமாம் (குனிவு, சிரவணக்கம் போன்றவற்றி-ருந்து) தலையை உயர்த்துவதற்கு முன் (பின்பற்றித் தொழும்) ஒருவர் (தமது தலையை) உயர்த்திவிட்டால், அவர் திரும்பச் சென்று தாம் (தலையை) உயர்த்திய அளவு நேரம் காத்திருந்துவிட்டுப் பிறகு இமாமைப் பின்தொடர வேண்டும்.26 இமாமுடன் இரண்டு ரக்அத்கள் தொழும் ஒருவர் (நெரிசல் போன்ற காரணங்களால் முதல் ரக்அத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாமற் போய்விடுகிறது. இவரைப் பற்றிக் கூறுகையில் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், “அவர் இரண்டாவது ரக்அத்திற்குரிய இரு சஜ்தாக்களைச் செய்வார். பிறகு முதல் ரக்அத்தையும் அதன் சஜ்தாவையும் (எழுந்து) மீண்டும் நிறைவேற்றுவார்” என்று சொன்னார்கள். “ஒரு சஜ்தா செய்யாமல் மறந்து எழுந்துவிட்டால், அந்த சஜ்தாவை (திரும்ப)ச் செய்ய வேண்டும்” என்றும் கூறினார்கள்.27
688. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றார்கள். அப்போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழுதார்கள். (அவர்களை உடல் நலம் விசாரிக்க வந்திருந்த) மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், ‘உட்காருங்கள்’ என்று சைகை செய்தார்கள்.

தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார். அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார்கள்.28


அத்தியாயம் : 10
689. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ فَرَسًا فَصُرِعَ عَنْهُ، فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَصَلَّى صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهْوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ الْحُمَيْدِيُّ قَوْلُهُ "" إِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا "". هُوَ فِي مَرَضِهِ الْقَدِيمِ، ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَالِسًا وَالنَّاسُ خَلْفَهُ قِيَامًا، لَمْ يَأْمُرْهُمْ بِالْقُعُودِ، وَإِنَّمَا يُؤْخَذُ بِالآخِرِ فَالآخِرِ مِنْ فِعْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 51 மக்களால் பின்பற்றப்பட வேண்டுமென்பதற்காகவே இமாம் ஏற்படுத்தப்படுகிறார். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது அமர்ந்தவாறே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இமாம் (குனிவு, சிரவணக்கம் போன்றவற்றி-ருந்து) தலையை உயர்த்துவதற்கு முன் (பின்பற்றித் தொழும்) ஒருவர் (தமது தலையை) உயர்த்திவிட்டால், அவர் திரும்பச் சென்று தாம் (தலையை) உயர்த்திய அளவு நேரம் காத்திருந்துவிட்டுப் பிறகு இமாமைப் பின்தொடர வேண்டும்.26 இமாமுடன் இரண்டு ரக்அத்கள் தொழும் ஒருவர் (நெரிசல் போன்ற காரணங்களால் முதல் ரக்அத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாமற் போய்விடுகிறது. இவரைப் பற்றிக் கூறுகையில் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், “அவர் இரண்டாவது ரக்அத்திற்குரிய இரு சஜ்தாக்களைச் செய்வார். பிறகு முதல் ரக்அத்தையும் அதன் சஜ்தாவையும் (எழுந்து) மீண்டும் நிறைவேற்றுவார்” என்று சொன்னார்கள். “ஒரு சஜ்தா செய்யாமல் மறந்து எழுந்துவிட்டால், அந்த சஜ்தாவை (திரும்ப)ச் செய்ய வேண்டும்” என்றும் கூறினார்கள்.27
689. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்களது வலப்புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே, (கடமையான) தொழு கைகளில் ஒன்றை அவர்கள் உட்கார்ந்த படியே தொழு(வித்)தார்கள். ஆகவே, நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம்.

தொழுகை முடிந்தபோது, “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால், நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்றே தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல் ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

முன்பொரு முறை நோய்வாய்ப்பட்டி ருந்தபோதே நபி (ஸல்) அவர்கள், “இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட் கார்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார் கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) உட்கார்ந்து தொழுத போது, (அவர்களுக்குப் பின்னா-ருந்த) மக்கள் நின்றே தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை.

(பொதுவாக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களில்) எது இறுதியிலும் இறுதியாக இருக்கிறதோ அதையே எடுத்துக்கொள்ள வேண்டும். (எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால், பின்பற்று பவர்களும் உட்கார்ந்து தொழ வேண்டும் எனும் விதி மாற்றப்பட்டுவிட்டது.)

அத்தியாயம் : 10
690. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ ـ وَهْوَ غَيْرُ كَذُوبٍ ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَقَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا، ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، نَحْوَهُ بِهَذَا.
பாடம் : 52 இமாமுக்குப் பின்னால் தொழுபவர் எப்போது சஜ்தா செய்ய வேண்டும்? “இமாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் செய்யுங்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
690. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னை புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி (ருகூஉவிலிருந்து எழுந்தால் நாங்களும் எழுவோம், பின்னர்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யாத வரை எங்களில் யாரும் தமது முதுகை (சிரவணக்கத்திற்காக) வளைக்கமாட்டார்; அவர்கள் (சிரவணக் கத்திற்குச் சென்ற) பின்புதான் நாங்கள் சிரவணக்கம் செய்வோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
691. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَمَا يَخْشَى أَحَدُكُمْ ـ أَوْ لاَ يَخْشَى أَحَدُكُمْ ـ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ "".
பாடம் : 53 (சஜ்தாவிலோ ருகூஉவிலோ) இமாமுக்கு முன்பே தலையை உயர்த்துவது குற்றமாகும்.
691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தமது தலையை உயர்த்துவதால் அவரது தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் ஆக்கி விடுவதை, அல்லது அவரது உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?29

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
692. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ الْعُصْبَةَ ـ مَوْضِعٌ بِقُبَاءٍ ـ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا.
பாடம் : 54 இன்னாள் அடிமையோ முன் னாள் அடிமையோ தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர் களுடைய அடிமையான தக்வான் (ரஹ்) அவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதி தொழுகை நடத்திவந்தார்கள்.30 தவறான உறவில் பிறந்தவன், கிராம வாசி, பருவமடையாத சிறுவன் ஆகியோ ரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) “அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக (மனனமிட்டு) ஓதக்கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்” என்று (பொதுவாகவே) கூறியுள்ளார்கள். ஓர் அடிமை, தகுந்த காரணமின்றி கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்வதிலிருந்து தடுக்கப்படக் கூடாது.
692. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முதல் கட்டமாக (மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த) முஹாஜிர்கள்-குபா பகுதியில் உள்ள- ‘அல்உஸ்பா’ எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)தபோது, அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த சா-ம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள்.

இது நபி (ஸல்) அவர்கள் புலம்பெயர்ந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சா-ம்) மற்றவர்களைவிடக் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.


அத்தியாயம் : 10
693. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اسْمَعُوا وَأَطِيعُوا، وَإِنِ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ "".
பாடம் : 54 இன்னாள் அடிமையோ முன் னாள் அடிமையோ தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர் களுடைய அடிமையான தக்வான் (ரஹ்) அவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதி தொழுகை நடத்திவந்தார்கள்.30 தவறான உறவில் பிறந்தவன், கிராம வாசி, பருவமடையாத சிறுவன் ஆகியோ ரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) “அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக (மனனமிட்டு) ஓதக்கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்” என்று (பொதுவாகவே) கூறியுள்ளார்கள். ஓர் அடிமை, தகுந்த காரணமின்றி கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்வதிலிருந்து தடுக்கப்படக் கூடாது.
693. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலர்ந்த திராட்சை போன்ற தலை யுடைய அபிசீனிய (கறுப்பு நிற அடிமை யொருவ)ர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் (அவருக்குச்) செவிசாயுங்கள்; கீழ்ப்படியுங்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
694. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الأَشْيَبُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ "".
பாடம் : 55 இமாம் (தொழுகையை) முழு மைப்படுத்தாமல் (குறை செய்து)விட, அவருக்குப் பின் னால் இருப்பவர்கள் (குறை யின்றி) நிறைவு செய்தல்
694. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இமாமாகத் தொழுவிக்கின்ற) அவர்கள் உங்களுக்காகத் தொழுகை நடத்து கிறார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால், உங்களுக்கும் நன்மை உண்டு; அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் தவறு செய்தால், (நீங்கள் சரியாகத் தொழுததற்காக) உங்களுக்கு நன்மை உண்டு; (தவறிழைத்ததற்காக) அவர்களுக்குத் தீமை உண்டு.31

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
695. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ لَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ خِيَارٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ ـ رضى الله عنه ـ وَهْوَ مَحْصُورٌ فَقَالَ إِنَّكَ إِمَامُ عَامَّةٍ، وَنَزَلَ بِكَ مَا تَرَى وَيُصَلِّي لَنَا إِمَامُ فِتْنَةٍ وَنَتَحَرَّجُ. فَقَالَ الصَّلاَةُ أَحْسَنُ مَا يَعْمَلُ النَّاسُ، فَإِذَا أَحْسَنَ النَّاسُ فَأَحْسِنْ مَعَهُمْ، وَإِذَا أَسَاءُوا فَاجْتَنِبْ إِسَاءَتَهُمْ. وَقَالَ الزُّبَيْدِيُّ قَالَ الزُّهْرِيُّ لاَ نَرَى أَنْ يُصَلَّى خَلْفَ الْمُخَنَّثِ إِلاَّ مِنْ ضَرُورَةٍ لاَ بُدَّ مِنْهَا.
பாடம் : 56 குழப்பவாதியும் நூதனக் கொள்கைவாதியும் தொழுவித்தல் “நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனது நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.32
695. உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகை யிடப்பட்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் மக்கள் தலைவர் ஆவீர்கள். நீங்கள் காணும் சோதனை (முற்றுகை) உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (இன்று) எங்களுக்குக் குழப்பவாதத் தலைவர் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமோ என்ற அச்சத்தில்) மன வேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?)” என்று கேட்டேன்.

அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “தொழுகை, மக்கள் செய்கின்ற செயல் களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளி-ருந்து நீங்கள் ஒதுங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தவிர்க்க முடியாத காரணமிருந்தால் தவிர, (ஆணும் பெண்ணும் அல்லாத) அரவானிக்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம்.


அத்தியாயம் : 10
696. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ "" اسْمَعْ وَأَطِعْ، وَلَوْ لِحَبَشِيٍّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ "".
பாடம் : 56 குழப்பவாதியும் நூதனக் கொள்கைவாதியும் தொழுவித்தல் “நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனது நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.32
696. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “(உங்களுக்குத் தலைவராக் கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும், அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 10
697. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعِشَاءَ، ثُمَّ جَاءَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ فَجِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ـ أَوْ قَالَ خَطِيطَهُ ـ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
பாடம் : 57 இரண்டுபேர் (மட்டும் சேர்ந்து) ஜமாஅத்தாகத் தொழும்போது, பின்பற்றித் தொழுபவர் இமாமுக்குச் சமமாக ஒரே நேர்கோட்டில் அவருக்கு வலப் பக்கத்தில் நிற்க வேண்டும்.
697. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா

(ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ல்) இஷா தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துவிட்டு) நின்றார்கள்.

நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹு) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்33

அத்தியாயம் : 10
698. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ ـ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ـ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ، فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرًا فَقَالَ حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ.
பாடம் : 58 ஒரு மனிதர் இமாமுக்கு இடப் பக்கம் (போய்) நிற்க, இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் தமக்கு வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்து வதால் இருவரின் தொழுகையும் பாழாகிவிடாது.
698. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயாரும், நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் வீட்டில் ஓர் இரவு) உறங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் (சிறிது நேரம் உறங்கி எழுந்து) அங்கத் தூய்மை செய்துவிட்டு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் (தொழுகை யில் இருந்தவாறே) என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.

அப்போது அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டை விடும் அளவுக்கு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள்.- பிறகு தொழுகை அறிவிப்பாளர் அவர்களிடம் வந்(து தொழுகை நடத்த அவர்களை அழைத்)தபோது (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று, (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (சுப்ஹு தொழுகையைத்) தொழு(வித்)தார்கள். (அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்குவதில்லை.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (நான்காவது அறிவிப்பாளரான) அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் புகைர் (பின் அப்துல்லாஹ் பின் அல்அஷஜ்-ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “இவ்வாறே (இப்னு அப்பாஸ்

(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) குரைப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
699. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ.
பாடம் : 59 (பிறருக்குத்) தொழுவிக்கும் எண்ணமில்லாமல் (தனியாகத்) தொழுதுகொண்டிருப்பவரை பின்னால் வரும் மக்கள் பின் பற்றித் தொழுதால் (தொழுகை நிறைவேறும்).
699. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா

(ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்துவிட்டுத்) தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களு டன் தொழுதேன்.

அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கம் நிறுத்தினார்கள்.

அத்தியாயம் : 10
700. حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ.
பாடம் : 60 இமாம் தொழுகையை நீட்டித் தொழும்போது, அவசியத் தேவை ஏற்பட்ட ஒருவர் (கூட்டுத் தொழுகையிலிருந்து) வெளியேறி தனியாகத் தொழுவது
700. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குத் தலைமை தாங்கி (அந்தத் தொழுகையையே மீண்டும்) தொழுவிப்பார்கள்.


அத்தியாயம் : 10
701. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى الْعِشَاءَ فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" فَتَّانٌ فَتَّانٌ فَتَّانٌ "" ثَلاَثَ مِرَارٍ أَوْ قَالَ "" فَاتِنًا فَاتِنًا فَاتِنٌ "" وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ الْمُفَصَّلِ. قَالَ عَمْرٌو لاَ أَحْفَظُهُمَا.
பாடம் : 60 இமாம் தொழுகையை நீட்டித் தொழும்போது, அவசியத் தேவை ஏற்பட்ட ஒருவர் (கூட்டுத் தொழுகையிலிருந்து) வெளியேறி தனியாகத் தொழுவது
701. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒரு முறை மக்க ளுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷா தொழுகை தொழுவித்தபோது, (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’வை ஓதினார் கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையி-ருந்து) விலகிச் சென்று விட்டார்.

எனவே, முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை ஏசினார்கள் போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் (ரலி) அவர்களிடம்) “(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்ப வாதியா?” என்று மூன்று முறை கேட்டார் கள். மேலும், நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களி-ருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர் களைப் பணித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென்பது) என் நினைவில் இல்லை.

அத்தியாயம் : 10
702. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ سَمِعْتُ قَيْسًا، قَالَ أَخْبَرَنِي أَبُو مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، قَالَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا. فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ "" إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ "".
பாடம் : 61 இமாம் தொழுகையில் நிற்றலைச் சுருக்கமாகவும் குனிதல் மற்றும் சிரவணக்கத்தை நிறைவாகவும் நிறைவேற்றல்
702. அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்குச் செல்லாமல் நான் தாமதித்து விடுகிறேன் (ஜமாஅத்திற்குச் செல்வதில்லை.)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை.

பிறகு அவர்கள், “(மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும். ஏனெனில், (பின்பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் உள்ளனர்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 10
703. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ "".
பாடம் : 62 தனியாகத் தொழுபவர் விரும் பிய அளவுக்குத் தொழுகையை நீட்டிக்கொள்ளலாம்.
703. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும்போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
704. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ عَنِ الصَّلاَةِ فِي الْفَجْرِ مِمَّا يُطِيلُ بِنَا فُلاَنٌ فِيهَا. فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا رَأَيْتُهُ غَضِبَ فِي مَوْضِعٍ كَانَ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ "" يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَمَنْ أَمَّ النَّاسَ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ خَلْفَهُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ "".
பாடம் : 63 தொழுகையை நீட்டும் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது (தொழுகையை நீட்டித் தொழுவித்த தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், “அருமை மகனே! (இன்று) எங்களுக்குத் தொழுகையை நீட்டிவிட்டாயே!” என்று (கடிந்து) கூறினார்கள்.
704. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் ஃபஜ்ர் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன்” என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்கு கோபப்பட்டதைவிடக் கடுமையாக வேறு எந்த இடத்திலும் கோபப்பட்டதை நான் கண்டதில்லை.

பிறகு அவர்கள், “மக்களே! உங்களில் வெறுப்பூட்டும் சிலரும் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்து கிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக் கட்டும். ஏனெனில், அவருக்குப் பின்னால் பலவீனர்களும் முதியவர்களும் அலுவல் உடையவர்களும் உள்ளனர்” என்று கூறினார்கள்


அத்தியாயம் : 10
705. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ أَقْبَلَ رَجُلٌ بِنَاضِحَيْنِ وَقَدْ جَنَحَ اللَّيْلُ، فَوَافَقَ مُعَاذًا يُصَلِّي، فَتَرَكَ نَاضِحَهُ وَأَقْبَلَ إِلَى مُعَاذٍ، فَقَرَأَ بِسُورَةِ الْبَقَرَةِ أَوِ النِّسَاءِ، فَانْطَلَقَ الرَّجُلُ، وَبَلَغَهُ أَنَّ مُعَاذًا نَالَ مِنْهُ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَشَكَا إِلَيْهِ مُعَاذًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ـ أَوْ فَاتِنٌ ثَلاَثَ مِرَارٍ ـ فَلَوْلاَ صَلَّيْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ، وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَى، فَإِنَّهُ يُصَلِّي وَرَاءَكَ الْكَبِيرُ وَالضَّعِيفُ وَذُو الْحَاجَةِ "". أَحْسِبُ هَذَا فِي الْحَدِيثِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَتَابَعَهُ سَعِيدُ بْنُ مَسْرُوقٍ وَمِسْعَرٌ وَالشَّيْبَانِيُّ. قَالَ عَمْرٌو وَعُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَرَأَ مُعَاذٌ فِي الْعِشَاءِ بِالْبَقَرَةِ. وَتَابَعَهُ الأَعْمَشُ عَنْ مُحَارِبٍ.
பாடம் : 63 தொழுகையை நீட்டும் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது (தொழுகையை நீட்டித் தொழுவித்த தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், “அருமை மகனே! (இன்று) எங்களுக்குத் தொழுகையை நீட்டிவிட்டாயே!” என்று (கடிந்து) கூறினார்கள்.
705. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நீரிறைக்கும் இரண்டு ஒட்டகங்களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்தார். அப்போது முஆத்

(ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷா தொழுகை) தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். உடனே அம்மனிதர் தமது ஒட்டகத்தை விட்டுவிட்டு, முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகையில் சேர்ந்)தார்.

அப்போது முஆத் (ரலி) அவர்கள் (பெரிய அத்தியாயங்களான) ‘அல்பகரா’ அத்தியாயத்தை, அல்லது ‘அந்நிசா’ அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச்) சென்றுவிட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, முஆத் (ரலி) அவர்களைப் பற்றி அவர் முறையிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் (ரலி) அவர்களை வரவழைத்து) “முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்?” என்று (மூன்று முறை) கேட்டார்கள். பின்னர் “சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்சி வ ளுஹாஹா (91), வல்லை- இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா? ஏனெனில், உமக்குப் பின்னால் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் தொழுகின்றனர்” என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(‘ஏனெனில் உமக்குப் பின்னால்...’ எனத் தொடங்கும்) கடைசி வாக்கியமும் நபி (ஸல்) அவர்களின் சொல் என்றே நான் கருதுகிறேன்.

இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், “முஆத் (ரலி) அவர்கள் இஷாவில் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார்கள்” என்று (ஐயப்பாடின்றி)) காணப்படுகிறது.

அத்தியாயம் : 10
706. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُوجِزُ الصَّلاَةَ وَيُكْمِلُهَا.
பாடம் : 64 தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) நிறைவாகவும் தொழுவிப்பது
706. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடா மல்) நிறைவாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 10
707. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنِّي لأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ "". تَابَعَهُ بِشْرُ بْنُ بَكْرٍ وَابْنُ الْمُبَارَكِ وَبَقِيَّةُ عَنِ الأَوْزَاعِيِّ.
பாடம் : 65 (தொழுதுகொண்டிருப்பவரின்) குழந்தை அழும்போது (இமாம்) சுருக்கமாகத் தொழுவிப்பது
707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டி ருக்கும் பெண்களுடைய) குழந்தையின் அழுகையை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு நான் சிரமம் அளித்துவிடக் கூடாது என்பதற்காக எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுவேன்.

இதை அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 10