6554. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ لاَ يَدْرِي أَبُو حَازِمٍ أَيُّهُمَا قَالَ ـ مُتَمَاسِكُونَ، آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا، لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وُجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள்.

-அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை-

அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழுநிலவின் வடிவத்தில் இருக்கும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.132

அத்தியாயம் : 81
6555. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الْغُرَفَ فِي الْجَنَّةِ كَمَا تَتَرَاءَوْنَ الْكَوْكَبَ فِي السَّمَاءِ"".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6555. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6556. قَالَ أَبِي فَحَدَّثْتُ النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، فَقَالَ أَشْهَدُ لَسَمِعْتُ أَبَا سَعِيدٍ يُحَدِّثُ وَيَزِيدُ فِيهِ "" كَمَا تَرَاءَوْنَ الْكَوْكَبَ الْغَارِبَ فِي الأُفُقِ الشَّرْقِيِّ وَالْغَرْبِيِّ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6556. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு அதில் “கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் விண்மீனைப் பார்ப்பதைப் போன்று” எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன்.133

அத்தியாயம் : 81
6557. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَقُولُ اللَّهُ تَعَالَى لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَىْءٍ أَكُنْتَ تَفْتَدِي بِهِ فَيَقُولُ نَعَمْ. فَيَقُولُ أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي شَيْئًا فَأَبَيْتَ إِلاَّ أَنْ تُشْرِكَ بِي "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6557. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படு பவரிடம், “பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன்மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார்.

அப்போது அல்லாஹ், “நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை-எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதை-த்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணைகற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!” என்று கூறுவான்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134

அத்தியாயம் : 81
6558. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ مِنَ النَّارِ بِالشَّفَاعَةِ كَأَنَّهُمُ الثَّعَارِيرُ "". قُلْتُ مَا الثَّعَارِيرُ قَالَ الضَّغَابِيسُ. وَكَانَ قَدْ سَقَطَ فَمُهُ فَقُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ أَبَا مُحَمَّدٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَخْرُجُ بِالشَّفَاعَةِ مِنَ النَّارِ "". قَالَ نَعَمْ.
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6558. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “பரிந்துரையால் (நரகவாசிகளில் சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் ‘ஸஆரீர்’ போன்று இருப்பார்கள்” என்று கூறினார்கள்.135

அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ‘ஸஆரீர்’ என்றால் என்ன? என்று அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அன்னார் ‘வெள்ளரிப் பிஞ்சுகள்’ என்று பதிலளித்தார்கள். அன்னாருக்குப் பல் விழுந்துவிட்டிருந்தது. (இதனால் ‘ஷஆரீர்’ என்பதை ‘ஸஆரீர்’ என்று உச்சரித்தார்கள்.) மேலும், “பரிந்துரையால் (சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் உங்களிடம் கூறினார்களா? என அம்ர் பின் தீனார் அவர்களிடம் வினவினேன். அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.

அத்தியாயம் : 81
6559. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بَعْدَ مَا مَسَّهُمْ مِنْهَا سَفْعٌ، فَيَدْخُلُونَ الْجَنَّةَ، فَيُسَمِّيهِمْ أَهْلُ الْجَنَّةِ الْجَهَنَّمِيِّينَ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6559. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தமது சருமத்தின் நிறம் மாறியபின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களைச் சொர்க்க வாசிகள், ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6560. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ يَقُولُ اللَّهُ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرَجُونَ قَدِ امْتُحِشُوا وَعَادُوا حُمَمًا، فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ـ أَوْ قَالَ ـ حَمِيَّةِ السَّيْلِ "". وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلَمْ تَرَوْا أَنَّهَا تَنْبُتُ صَفْرَاءَ مُلْتَوِيَةً "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6560. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டபின் அல்லாஹ், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெறியேற்றி விடுங்கள்” என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெறியேறு வார்கள். அப்போது அவர்கள் கரிக்கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்.

உடனே அவர்கள் ‘சேற்று வெள்ளத்தில்’ அல்லது ‘வெள்ளத்தின் கறுப்புக் களிமண்ணில்’ விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா?

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136

அத்தியாயம் : 81
6561. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ""إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَةٌ يَغْلِي مِنْهَا دِمَاغُهُ"".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6561. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப் படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரது மூளை கொதிக்கும்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6562. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ عَلَى أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، كَمَا يَغْلِي الْمِرْجَلُ وَالْقُمْقُمُ"".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6562. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப் படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம், (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6563. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَكَرَ النَّارَ فَأَشَاحَ بِوَجْهِهِ فَتَعَوَّذَ مِنْهَا، ثُمَّ ذَكَرَ النَّارَ فَأَشَاحَ بِوَجْهِهِ فَتَعَوَّذَ مِنْهَا، ثُمَّ قَالَ "" اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6563. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு (மீண்டும்) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பின்னர் “பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திó ருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (தப்பித்துக்கொள்ளுங்கள்)” என்று கூறினார்கள்.137

அத்தியாயம் : 81
6564. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَذُكِرَ عِنْدَهُ عَمُّهُ أَبُو طَالِبٍ فَقَالَ "" لَعَلَّهُ تَنْفَعُهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ فَيُجْعَلُ فِي ضَحْضَاحٍ مِنَ النَّارِ، يَبْلُغُ كَعْبَيْهِ، يَغْلِي مِنْهُ أُمُّ دِمَاغِهِ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6564. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர் களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்” என்று சொல்ல நான் கேட்டேன்.138

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 81
6565. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا. فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ الَّذِي خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّنَا. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ وَيَقُولُ ـ ائْتُوا نُوحًا أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ. فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ ـ ائْتُوا إِبْرَاهِيمَ الَّذِي اتَّخَذَهُ اللَّهُ خَلِيلاً. فَيَأْتُونَهُ، فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ ـ ائْتُوا مُوسَى الَّذِي كَلَّمَهُ اللَّهُ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، فَيَذْكُرُ خَطِيئَتَهُ ـ ائْتُوا عِيسَى فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فَقَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ فَيَأْتُونِي فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي، فَإِذَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ، سَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ. فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِي، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، ثُمَّ أُخْرِجُهُمْ مِنَ النَّارِ، وَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَعُودُ فَأَقَعُ سَاجِدًا مِثْلَهُ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ حَتَّى مَا بَقِيَ فِي النَّارِ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ "". وَكَانَ قَتَادَةُ يَقُولُ عِنْدَ هَذَا أَىْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ.
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்றுகூட்டுவான். அப்போது அவர்கள் “(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!” என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் “அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தனர். ஆகவே, (இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள்” என்று கூறுவார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்தவற்றை அவர்கள் நினைவுகூருவார்கள். பிறகு “நீங்கள் (எனக்குப்பின்) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நபி நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறி, (உலகில்) தாம் புரிந்த தவற்றை நினைவுகூர்ந்து, “அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக்கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் செல்லுங்கள்” என்று கூறிவிடுவார்கள்.

உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறியவாறு, தாம் புரிந்த தவற்றை நினைவு கூருவார்கள். பிறகு “அல்லாஹ் உரையாடிய (நபி) மூசாவிடம் செல்லுங்கள்” என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவுகூர்ந்தபடி “(நபி) ஈசாவிடம் செல்லுங்கள்!” என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள்.

அப்போது அவர்கள் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்” என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் என்னிடம் வருவார் கள். அப்போது நான் என் இறைவனிடத் தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரவணக்கத்தில் விழுந்துவிடுவேன். அவன் நாடிய நேரம்வரை (நான் விரும்பியதைக் கோர) என்னை விட்டுவிடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) “உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன்.

அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரவணக்கத்தில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாக குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர’ என்பதற்கு விளக்கமாக, ‘நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர’ என்று கூறுவார்கள்.139

அத்தியாயம் : 81
6566. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْن ٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَيَدْخُلُونَ الْجَنَّةَ، يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6566. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இந்த) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளி யேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப் படுவார்கள்.140

இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6567அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹாரிஸா பின் சுராக்கா அல்அன்சாரி (ரலி) அவர்கள் பத்ர் போரில் யாரோ எறிந்த அம்பு தாக்கி இறந்துபோனார்கள். இந்நிலையில் அவருடைய தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என் இதயத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவர் (இப்போது) சொர்க்கத்தில் இருந்தால் அவருக்காக நான் அழப்போவதில்லை. அவ்வாறில்லையேல், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்.

அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இழப்பால் துடிக்கிறாயா? அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்(களின் படித்தரங்)கள் நிறைய உள்ளன. உன் மகன் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார்” என்று கூறினார்கள்.141

அத்தியாயம் : 81
6568. (وَقَالَ :غَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ أَوْ مَوْضِعُ قَدَمٍ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ، لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا، وَلَمَلأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا، وَلَنَصِيفُهَا ـ يَعْنِي الْخِمَارَ ـ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا).
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6568. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விடச் சிறந்தது ஆகும்.142

உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒருவில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங் களையும்விடச் சிறந்தது ஆகும்.143

சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல் லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங் களையும்விட மேலானதாகும்.

அத்தியாயம் : 81
6569. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلاَّ أُرِيَ مَقْعَدَهُ مِنَ النَّارِ، لَوْ أَسَاءَ، لِيَزْدَادَ شُكْرًا، وَلاَ يَدْخُلُ النَّارَ أَحَدٌ إِلاَّ أُرِيَ مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، لَوْ أَحْسَنَ، لِيَكُونَ عَلَيْهِ حَسْرَةً "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6569. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமைய வேண்டும் என்பதற்காவே (காட்டப்படுகிறது).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6570. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ "" لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. خَالِصًا مِنْ قِبَلِ نَفْسِهِ "".
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6570. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள். “அபூஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகள்மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யாரெனில், உளப்பூர்வமாக தூய்மையான எண்ணத்துடன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னாரே அவர்தான்” என்று கூறினார்கள்.144

அத்தியாயம் : 81
6571. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ كَبْوًا، فَيَقُولُ اللَّهُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ. فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى، فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى، فَيَقُولُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ. فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى. فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى، فَيَقُولُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ، فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا. أَوْ إِنَّ لَكَ مِثْلَ عَشَرَةِ أَمْثَالِ الدُّنْيَا. فَيَقُولُ تَسْخَرُ مِنِّي، أَوْ تَضْحَكُ مِنِّي وَأَنْتَ الْمَلِكُ "". فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، وَكَانَ يُقَالُ ذَلِكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً.
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6571. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ், “நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்பான்.

அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பிவந்து “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்” என்று கூறுவார்.

அதற்கு அவன், “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில், ‘உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்)உனக்கு உண்டு” என்று சொல்வான். அதற்கு அவர் ‘அரசனாகிய நீ என்னை ‘பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது ‘என்னைக் கண்டு நகைக்கின்றாயா?’ என்று கேட்பார்.

(இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடை வாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த தகுதி உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுவந்தது.

அத்தியாயம் : 81
6572. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنِ الْعَبَّاسِ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم هَلْ نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَىْءٍ.
பாடம்: 51 சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6572. அப்பாஸ் (பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?” என்று கேட்டேன்.145

அத்தியாயம் : 81
6573. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدٌ، وَعَطَاءُ بْنُ يَزِيدَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أُنَاسٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ "" هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ، لَيْسَ دُونَهَا سَحَابٌ "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، لَيْسَ دُونَهُ سَحَابٌ "". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِنَّكُمْ تَرَوْنَهُ يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ، يَجْمَعُ اللَّهُ النَّاسَ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ، فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا، فَيَأْتِيهِمُ اللَّهُ فِي غَيْرِ الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ، هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا، فَإِذَا أَتَانَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمُ اللَّهُ فِي الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا، فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ جِسْرُ جَهَنَّمَ "". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَأَكُونُ أَوَّلَ مَنْ يُجِيزُ، وَدُعَاءُ الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ، وَبِهِ كَلاَلِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، أَمَا رَأَيْتُمْ شَوْكَ السَّعْدَانِ "". قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، غَيْرَ أَنَّهَا لاَ يَعْلَمُ قَدْرَ عِظَمِهَا إِلاَّ اللَّهُ، فَتَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، مِنْهُمُ الْمُوبَقُ، بِعَمَلِهِ وَمِنْهُمُ الْمُخَرْدَلُ، ثُمَّ يَنْجُو، حَتَّى إِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ عِبَادِهِ، وَأَرَادَ أَنْ يُخْرِجَ مِنَ النَّارِ مَنْ أَرَادَ أَنْ يُخْرِجَ، مِمَّنْ كَانَ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، أَمَرَ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوهُمْ، فَيَعْرِفُونَهُمْ بِعَلاَمَةِ آثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ مِنِ ابْنِ آدَمَ أَثَرَ السُّجُودِ، فَيُخْرِجُونَهُمْ قَدِ امْتُحِشُوا، فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءٌ يُقَالُ لَهُ مَاءُ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ فِي حَمِيلِ السَّيْلِ، وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ فَيَقُولُ يَا رَبِّ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا، فَاصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ فَلاَ يَزَالُ يَدْعُو اللَّهَ. فَيَقُولُ لَعَلَّكَ إِنْ أَعْطَيْتُكَ أَنْ تَسْأَلَنِي غَيْرَهُ. فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ. فَيَصْرِفُ وَجْهَهُ عَنِ النَّارِ، ثُمَّ يَقُولُ بَعْدَ ذَلِكَ يَا رَبِّ قَرِّبْنِي إِلَى باب الْجَنَّةِ. فَيَقُولُ أَلَيْسَ قَدْ زَعَمْتَ أَنْ لاَ تَسْأَلْنِي غَيْرَهُ، وَيْلَكَ ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ. فَلاَ يَزَالُ يَدْعُو. فَيَقُولُ لَعَلِّي إِنْ أَعْطَيْتُكَ ذَلِكَ تَسْأَلَنِي غَيْرَهُ. فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ. فَيُعْطِي اللَّهَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ أَنْ لاَ يَسْأَلَهُ غَيْرَهُ، فَيُقَرِّبُهُ إِلَى باب الْجَنَّةِ، فَإِذَا رَأَى مَا فِيهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، ثُمَّ يَقُولُ رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ. ثُمَّ يَقُولُ أَوَلَيْسَ قَدْ زَعَمْتَ أَنْ لاَ تَسْأَلَنِي غَيْرَهُ، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ فَيَقُولُ يَا رَبِّ لاَ تَجْعَلْنِي أَشْقَى خَلْقِكَ. فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ، فَإِذَا ضَحِكَ مِنْهُ أَذِنَ لَهُ بِالدُّخُولِ فِيهَا، فَإِذَا دَخَلَ فِيهَا قِيلَ تَمَنَّ مِنْ كَذَا. فَيَتَمَنَّى، ثُمَّ يُقَالُ لَهُ تَمَنَّ مِنْ كَذَا. فَيَتَمَنَّى حَتَّى تَنْقَطِعَ بِهِ الأَمَانِيُّ فَيَقُولُ لَهُ هَذَا لَكَ وَمِثْلُهُ مَعَهُ "". قَالَ أَبُو هُرَيْرَةَ وَذَلِكَ الرَّجُلُ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً.
பாடம்: 52 ‘அஸ்ஸிராத்’ என்பது நரகத்தின் பாலமாகும்.146
6573. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அப்போது நபி அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில்) ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்பான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (அதைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள்.

இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களி டையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன், அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்பர்.

அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்” என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் ‘அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று’ என்பதாகவே இருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முட்களைப் போன்றிருக்கும். “கருவேலமர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறைமறுப்பு உள்ளிட்ட) தம் (தீய) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார்.

(இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக்கொள்பவரும் இருப்பார். இறுதியாக இறைவன், தன் அடியார் களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிகூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான்.

அப்போது அவர்களை வெளியேற்று மாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனங்கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.

அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள்மீது ‘மாஉல் ஹயாத்’ எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார்.

அப்போது அல்லாஹ் “(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அவர் “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.

அதற்குப் பிறகு “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக!” என்பார் அவர். அதற்கு இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்” என்பான்.

அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல் லாத வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.

இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!” என்று கூறுவார். பின்னர் இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!” என்று கேட்பான். அதற்கு “என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!” என்று இறைவன் சிரிக்கும்வரை பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிவிடுவான்.

சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப்பெறும்வரை ஆசைப்பட்டு (தம் விருப்பங்களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்பான்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதர்தான் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.147

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 81